உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26693 topics in this forum
-
சமயச் சின்னங்களை அணிந்தால் வேலை நீக்கம் செய்யலாம்; ஐரோப்பிய நீதிமன்றம் அதிர்ச்சி உத்தரவு அரசியல், தத்துவ அல்லது சமயங்களைப் பிரதிபலிக்கும் சின்னங்களை அணியும் பணியாளர்களை வேலையில் இருந்து நீக்கும் உரிமை நிர்வாகத்துக்கு உண்டு என ஐரோப்பாவின் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்கீழ், முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தா உட்பட எந்தவித சமயச் சின்னங்களையும் அணிவதைத் தடுக்கும் அதிகாரம் நிர்வாகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. எனினும், இந்த விதியை குறித்த நிறுவனங்கள் தமது பொது விதியாக வகுக்க வேண்டும் என்றும், வாடிக்கையாளரின் விருப்பத்திற்கிணங்க வாய்மூலக் கட்டளையாக இவ்விதிகளை விதிக்க முடியாது என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 505 views
-
-
அமெரிக்காவில் கடும் பனிப்புயல், அவசரநிலை அறிவிப்பு பெரிய அளவில் குளிர்காலப் புயல் மற்றும் அச்சுறுத்தும் விதமான பனிப்புயல் காரணமாக, அமெரிக்காவின் வட- கிழக்கு பகுதியில் உள்ள நியூயார்க் மற்றும் நியூஜெர்சி ஆகிய மாநிலங்களில் அவரசகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் காப்புரிமைAFP பென்சில்வேனியா மற்றும் கனெக்டிகட் மாகாணங்களில் ஒரு சில பகுதிகளில் பனிப்புயல் வீசுவதற்கான அபாயம் உள்ளதாக தேசிய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பள்ளிகள் மூடப்பட்டுள்ளன மற்றும் ஆயிரக்கணக்கான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்று பின்னேரத்தில், சில இடங்களில் 60 சென்டிமீட்டர் அளவு வரை பனி பதிவாகும் என வானிலை மைய அதிகாரிகள் கணித்துள்ளனர்…
-
- 0 replies
- 321 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * ஆப்பிரிக்காவிலும் மத்தியகிழக்கிலும் பஞ்சத்தை எதிர்நோக்கும் இரண்டு கோடி பேர்; சோமாலிய வறட்சியின் பாதிப்பை மோசமாக்கியுள்ளன போரும், ஊழலும். * பாகிஸ்தானில் தானமாக அளிக்கப்படும் சிறுநீரக தட்டுப்பாட்டால் அதிகரிக்கும் சிறுநீரகத்திருட்டு; பாதிக்கப்பட்ட ஏழைகளிடம் பேசியது பிபிசி * சிறுவர்களை அடிக்கலாமா கூடாதா? மக்கள் மத்தியில் விவாதப் பொருளாக மாறியுள்ள ஜிம்பாப்வே நீதிமன்ற தீர்ப்பு.
-
- 0 replies
- 248 views
-
-
இறுதி ஒப்புதலை வாங்கிய நிலையிலும் பிரச்சினையில் சிக்கியுள்ள ஐக்கிய இராச்சியம்..! ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகுவதற்கான நடைமுறைகளை அரசாங்கம் தொடங்குவதற்கு வழி வகுக்கும் முக்கிய சட்டம் ஒன்றிற்கு பிரிட்டன் பாராளுமன்றம் தனது கடைசி ஒப்புதலை வழங்கியுள்ள நிலையில், ஸ்கொட்லாந்து ஐக்கிய இராச்சியத்திலிருந்து விடுதலை வேண்டி புதிய வாக்கெடுப்பை கேட்டுள்ளமை பிரச்சினையை ஏற்படுத்தலாமென தெரிவிக்கப்படுகிறது. மேலும் எதிர்வரும் மாதத்திலிருந்து பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு முறையாக வெளியேறுவதற்கான திட்டமிடல்களை ஏற்படுத்துவதற்கான, அந்நாட்டு பாராளுமன்றின் இறுதி ஒப்புதலை பல்வேறு முரண்பட்ட விவாதத்திற்கு மத்தியில் பெற்றுள்ளது. இந்நிலையில…
-
- 0 replies
- 316 views
-
-
ட்ரம்புக்குப் பாடம் சொல்லும் டோனி! பிரிட்டனையும் அமெரிக்காவையும் அதிக வலியில்லாமல் வளப்படுத்தும் ஒரு பொருளாதார தேசியத்துக்காக… ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச வர்த்தக முறை, நேட்டோ, ஐநா சபை போன்ற பெரிய அமைப்புகள் அனைத்தையும் கைவிட வேண்டும் என்பது பிரெக்ஸிட், ட்ரம்பிஸத்தின் மிக மிக ஆபத்தான வாதம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் ட்ரம்ப் உரையாற்றுவதற்கு 11 நாட்கள் முன்பு, பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் ஆற்றிய உரை முக்கியமானது. “ட்ரம்பிஸத்தின் பிரிட்டன் மாதிரியை நிராகரிக்க வேண்டும்” என்று அந்த உரையில் உணர்வுபூர்வமாக வேண்டுகோள் விடுத்தார் டோனி பிளேர். “ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வில…
-
- 0 replies
- 409 views
-
-
டொனால்டு டிரம்ப் - ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் இடையேயான சந்திப்பு ஒத்திவைப்பு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் - ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் இடையேயான சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது. வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் - ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் இடையேயான சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டொனால்டு டிரம்ப் - ஏஞ்சலா மெர்கல் இடையே நாளை பேச்சுவார்த்தை நடத்தப்பட இருந்தது. அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதியை பெரும் பனி புயல் நெருங்கி வருவதால் இருவருக்கிடையேயான சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக…
-
- 0 replies
- 272 views
-
-
வங்கதேசத்தில் சுஃபி அமைப்பின் தலைவர் மற்றும் அவரது மகள் சுட்டுக்கொலை -அ+ வங்கதேசத்தில் சுஃபி அமைப்பின் தலைவர் மற்றும் அவரது மகள் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். டாக்கா: வங்கதேசத்தில் 55 வயதான சுஃபி என்னும் பக்தி அமைப்பின் தலைவர் மற்றும் அவரது மகள் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். சுஃபி என்னும் பக்தி அமைப்பின் தலைவரான பர்கத் ஹீச…
-
- 0 replies
- 264 views
-
-
ஸ்காட்லாந்து விடுதலைக்கு மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்த விரும்பும் ஸ்டர்ஜன் ஐக்கிய ராஜ்ஜியத்தில் இருந்து சுதந்திரம் பெற்று தனி நாடாகும் நோக்கில் புதியதொரு மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்துவதற்கு அதிகாரம் பெற விரும்புவதாக ஸ்காட்லாந்து முதன்மை அமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன் அறிவித்திருக்கிறார். Image captionபிரிட்டிஷ் மக்களின் விருப்பத்திற்கு மாறாக நாடாளுமன்றம் முடிவு செய்வது ஏற்க முடியாததாக அமையும் - டேவிட் டேவிஸ் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து ஜக்கிய ராஜ்ஜியம் வெளியேறுவதற்கு முறையான நடவடிக்கைகளை தொடங்குகின்ற வரைவு மீது வாக்கெடுப்பு நடத்த பிரிட்டிஷ் நாடாளுமன்றம் தயார் செய்து வருகையில் ஸ்டர்ஜன் இவ்வாறு அறிவ…
-
- 1 reply
- 301 views
-
-
பாரிஸ் நகருக்கு சிம்மசொப்பனமாக மாறிய 'எலிப்படை' பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அதிகரித்துவரும் எலி இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தவும், நகரின் தெருக்களில் உள்ள சிகரெட் துண்டுகளை சுத்தப்படுத்தவும் புதிய திட்டங்களை பாரிஸ் மேயர் ஆனி ஹிடால்கோ அறிவித்துள்ளார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionநகரின் தெருக்களில் உள்ள சிகரெட் துண்டுகளை சுத்தப்படுத்தவும் புதிய திட்டங்களை பாரிஸ் மேயர் ஆனி ஹிடால்கோ அறிவிப்பு எலிகளை பிடிக்க பயன்படுத்தப்படும் புதிய பொறிகளை வாங்க நகர நிர்வாகம் 1.6 மில்லியன் டாலர்கள் ; செலவிடும் என்றும், பொது இடங்களில் ஆஷ்ட்ரேக்கள் வைக்கப்படும் என்றும் ஹிடால்கோ தெரிவித்துள்ளார். பாரிஸ்நகர வாசிகள் ஒவ்வொருவருக்கும் தலா…
-
- 5 replies
- 477 views
-
-
அமெரிக்க ஜனாதிபதியுடன் சவுதி இளவரசர் விசேட சந்திப்பு..! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை, சவுதி அரேபிய இளவரசர் முஹம்மது பின் சல்மான் சந்தித்து விசேட பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தவுள்ளார். சவுதியில் எழுந்துள்ள பொருளாதார மந்த நிலையை தடுப்பதற்கு, அமெரிக்க முதலீடுகளை அதிகரிக்கச் செய்தல், இருநாட்டு உறவுகளை மேம்பட செய்தல், உள்ளிட்ட விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு, சவுதி இளவரசர் அமெரிக்கா சென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன. மேலும் சர்வதேச சந்தையில் பெற்றோலின் ஏற்றுமதி விலை தொடர்ந்து சரிவடைந்து வருவதால், எண்ணெய் வளத்தை மட்டுமே நம்பியுள்ள மத்திய கிழக்கு நாடுகள் பொருளாதார மந்த நிலையை எதிர் கொண்டுள்ளதாக அறிவ…
-
- 0 replies
- 425 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், மொசூலில் இருந்தால் அழிவீர்கள் என்று இஸ்லாமிய அரசு என்று அழைத்துக்கொள்ளும் அமைப்புக்கு எச்சரிக்கை. நகரின் மேற்கு பகுதியை இராக்கிய இராணுவம் நெருங்குகின்றது. சீன அரச எதிர்ப்பாளர்கள் பலரை சிறையிலடைத்தது சென்ற ஆண்டின் சாதனைகளில் ஒன்று என்கிறார் சீன உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி. சீன நாடாளுமன்ற உரையில் பெருமிதம். இந்தோனேஷிய நச்சுப்புகைக்கு காரணமான காட்டுத்தீயை கட்டுப்படுத்த போராடும் செயற்பாட்டாளரின் முன்னெடுப்பு.
-
- 0 replies
- 238 views
-
-
உத்தர பிரதேச சட்டசபை தேர்தல்! மூன்று அணிகளும் கடும் போட்டி .. உ.பி., தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் ஓட்டு சதவீத மாற்றம் வெற்றியை பாதிக்குமா? லக்னோ:ஓட்டு சதவீதத்தில் ஏற்படும் சிறு மாற்றங்களும், கட்சிகளின் தேர்தல் வெற்றியை பெரிய அளவில் பாதிக்கும் நிலையில், உ.பி., தேர்தல் களம் அமைந்துள்ளது. சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தலைமை யிலான ஆட்சி நடக்கும், உ.பி.,யில், 403 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் நடந்து வருகிறது. ஏழு கட்டங்களாக நடக்க வுள்ள தேர்தலில், இரண்டு கட்டம் முடிந்துள்ளது. உ.பி., சட்டசபைக்கு, கடந்த இரு முறை நடந்த, தேர்தல் புள்ளி விபரங்களை ஆய்வு செய்யும் போது, ஓட்டு சதவீதத்தில் ஏற்படும் சிறிய மாற்றமும், கட்சிகளின் வெற்றி வாய்ப்பில், மிகப…
-
- 2 replies
- 819 views
-
-
2030-ம் ஆண்டில் சீனாவின் மக்கள் தொகை 145 கோடியாக அதிகரிக்கும் உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவில் வரும் 2030-ம் ஆண்டில் 145 கோடியாக மக்கள் தொகை உயர்ந்திருக்கும் என அரசு தெரிவித்துள்ளது. பெய்ஜிங்: உலகின் மக்கள் தொகையில் முதலிடத்தை தற்போது சீனா வகித்து வருகின்றது. 135 கோடி மக்கள் அங்கு வாழ்ந்து வருகின்றனர். ஒரு தம்பதியினர் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக் கொள்ளும் சட்டம் சீனாவில் நடைமுறையில் இருந்துவந்தது. இச்சட்டத்தால் வரும் காலத்தில் இளைஞர்கள் பலம் குறையும் எனக் கருதிய அரசு சில ஆண்டுகளுக்கு முன்னர் அச்சட்டத்தை நீக்கியது. இந்நிலையில், 2016-ம் ஆண்டில் 1.84 லட்சம் க…
-
- 0 replies
- 382 views
-
-
ஜப்பானில் சௌதி மன்னர்: நட்சத்திர விடுதியில் ஆயிரக்கணக்கான அறைகள் பதிவு சுமார் 50 ஆண்டுகளில் சௌதி மன்னரால் மேற்கொள்ளப்படும் முதலாவது ஜப்பான் பயணமாக அரசர் சல்மான் தலைநகர் டோக்கியோவை சென்றடைந்துள்ளார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES மன்னருடன் வந்துள்ள அதிகாரிகள், பிரதிநிதிகள் உள்ளிட்டோரைத் தங்க வைப்பதற்காக நட்சத்திர ஹோட்டல்களில் ஆயிரக்கணக்கான அறைகளுக்கு மேலாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், நூற்றுக்கணக்கான சொகுசு கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டள்ளதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன. சௌதி அரேபியாவுடனான உறவை விரிவாக்கிக் கொள்வதற்கு இந்தப் பயணம் பயன்படும் என்றும், பெட்ரோலியத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தை அதிக அளவில் நம்பியிருப…
-
- 0 replies
- 610 views
-
-
டிரம்பின் முக்கிய கொள்கையை மீறிய மகள் இவாங்கா டிரம்ப் அமெரிக்க தயாரிப்பு பொருட்களையே வாங்குவோம் என்பதை தனது முக்கிய கொள்கையாக முழங்கிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மகள் இவங்கா டிரம்ப், சீனாவில் இருந்து 53 டன் அளவிலான சீனத் தயாரிப்பு பொருட்களை இறக்குமதி செய்துள்ளார். பெய்ஜிங்: அமெரிக்க அதிபராக சமீபத்தில் பொறுப்பேற்ற டொனால்டு டிரம்ப், தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது அமெரிக்கத் தயாரிப்பு பொருட்களையே அமெரிக்கர்கள் வாங்க வேண்டும் என முழங்கினார். அவரது வெற்றிக்கு இந்த முழக்கமும் ஒரு காரணமாக இர…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஜேர்மன் கடைத் தொகுதிக் கட்டடம் ஒன்றுக்கு தற்கொலைத் தாக்குதல் அச்சுறுத்தல்; பொலிஸார் குவிப்பு ஒன்றுக்கு மேற்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ஜேர்மனியின் கடைத் தொகுதிக் கட்டடம் ஒன்று மூடப்பட்டுள்ளது. ஜேர்மனியின் எஸ்ஸன் நகரில் உள்ள ‘லிம்பெக்கர் ப்ளெட்ஸ்’ என்ற கட்டிடமே இவ்வாறு மூடப்பட்டது. பொலிஸாருக்குக் கிடைத்த உறுதியான தகவலையடுத்தே மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது, கட்டிடத்தின் வாகனத் தரிப்பிடத்தில் இருந்து கட்டிடத்தின் கட்டுப்பாட்டை பொலிஸார் பொறுப்பேற்றுள்ளனர். இதனால், அங்கு பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் உள்ள நிலத்தடி ரயில் நிலையமும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.…
-
- 1 reply
- 349 views
-
-
எட்வர்ட் ஸ்னோடென் விவகாரம்: கனடாவில் அகதி அந்தஸ்து கோரும் சுப்புன் கெல்லபத்த Published by Kumaran on 2017-03-11 13:11:47 ஹொங்கொங்கில் அகதி அந்தஸ்து கோரிக்கை நிராகரிக்கப்படலாம் என்ற அச்சத்தில், இலங்கையர் ஒருவரது குடும்பம் கனடாவில் புகலிடக் கோரிக்கைக்கு விண்ணப்பித்துள்ளது. அமெரிக்க இராணுவ இரகசியங்களை வெளியிட்ட எட்வர்ட் ஸ்னோடென் தற்போது ரஷ்யாவில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இவருக்கான வாழிட அனுமதியை எதிர்வரும் 2020ஆம் ஆண்டு வரை ரஷ்ய அரசாங்கம் நீட்டித்துள்ளது. இவரது தலைமறைவு வாழ்க்கையின்போது ஹொங்கொங்கில் புகலிடம் கொடுத்ததாக, இலங்கையரான சுப்புன் கெல்லபத்த மற்றும் அவரது மனைவி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சுப்புன் குடும்பத்தி…
-
- 0 replies
- 410 views
-
-
வெள்ளை மாளிகைக்கு விஜயம் செய்யுமாறு பலஸ்தீனிய ஜனாதிபதிக்கு ட்ரம்ப் வேண்டுகோள் வெள்ளை மாளிகைக்கு வருகை தருமாறு பலஸ்தீனிய ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸுக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். பதவியேற்ற பின் முதன்முறையாக மஹ்மூதுடன் நேற்று (10) தொலைபேசியில் தொடர்புகொண்ட ட்ரம்ப் இவ்வழைப்பை விடுத்துள்ளார். இதுபற்றித் தெரிவித்த அப்பாஸின் பேச்சாளர் நாபில் அபு தைனா, கூடிய விரைவில் அப்பாஸ் வெள்ளை மாளிகைக்கு வருகை தரவேண்டும் என ட்ரம்ப் அழைப்பு விடுத்ததாகவும், இதன்மூலம், இராஜதந்திர உறவுகளை மேம்படுத்த முடிவதுடன், இஸ்ரேலுடனான பிரச்சினையைத் தீர்த்து, அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முஸ்தீபுகளை எடுக்க முடியும் என்று குறிப்பிட்டதாகவும் தெரிவித்துள்ள…
-
- 1 reply
- 268 views
-
-
10 நாட்கள் இடைவெளியில் 8 பேருக்கு மரண தண்டனை; அமெரிக்க மாநிலம் அதிரடி! அமெரிக்காவின் ஆர்கென்ஸா மானிலத்தில் பத்து நாட்களுக்குள் மரண தண்டனைக் கைதிகள் எண்மருக்கு தண்டனைகள் நிறைவேற்றப்படவுள்ளன. ஆர்கென்ஸாவில் மொத்தமாக 34 மரண தண்டனைக் கைதிகள் சிறைவைக்கப்பட்டுள்ளனர். அதில், நான்கு கறுப்பினத்தவரும் நான்கு வெள்ளையர்களுமே பத்து நாட்கள் இடைவெளியில் தண்டனை நிறைவேற்றப்படவுள்ளனர். இவர்கள் எண்மரும் 1989 முதல் 1999ஆம் ஆண்டு காலப் பகுதியில் தண்டனை பெற்றவர்களாவர். இவர்களின் தண்டனை சுமார் இரண்டு தசாப்தங்களாக நிலுவையிலேயே நீண்டு வந்த நிலையில், 2015ஆம் ஆண்டு ஆர்கென்ஸா ஆளுனராகப் பதவியேற்ற ஆஸா ஹட்சின்சன் உடனடியாக தண்டனைகளை நிறைவேற்ற முடிவெடுத்துள்ளார்.…
-
- 0 replies
- 294 views
-
-
'கிஸ் ஆஃப் லவ்' போராட்டம் சொல்ல வருவது என்ன? உலக மகளிர் தினத்தில் அனைவரும் பெண் உரிமை பற்றி பேசும் அதேநேரத்தில்தான் கேரள மாநிலத்தில் சிவசேனா கட்சியினர், கடற்கரையில் இருந்த காதலர்களை அடித்து விரட்டி உள்ளனர். இதுபோன்ற செயல், சிவசேனா அமைப்பினருக்கு புதிதல்ல. 'காதலர் தினம்', 'பெண்கள் தினம்' எல்லாம் இவர்கள் பெண்களுக்கு எதிரான வன்முறையைக் கையில் எடுக்கும் நாட்கள் என்பது அனைவரும் அறிந்ததே. என்றாலும், இதுபோன்ற சம்பவங்களை எதிர்த்து, சமீபகாலமாக இளைஞர்களே போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கி விட்டனர். இங்கும் அப்படித்தான். சிவசேனா அமைப்பினரின் இந்த அநாகரிகச் செயலை எதிர்த்து 'கிஸ் ஆஃப் லவ்' என்ற இயக்கத்தினர் முத்தம் கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடற்கரையில் ஊர்வலம…
-
- 0 replies
- 462 views
-
-
தொடர்பை இழந்ததால் பரபரப்பு: லண்டனில் தரையிறங்கியது ஏர் இந்தியா விமானம் அகமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா விமானம் இன்று ஹங்கேரி வான் பகுதியில் பறந்து கொண்டிருந்த போது தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துடன் தனது தொடர்புகளை இழந்த நிலையில், தற்போது விமானம் பத்திரமாக லண்டனில் தரையிறங்கியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. படத்தின் காப்புரிமைGOOGLE அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டன் ஹீத்ரூ சர்வதேச விமான நிலையத்திற்கு 231 பயணிகள், 18 விமான ஊழியர்கள் என ஏர் இந்தியாவின் ஜெட் விமானம் ஒன்று சர்வதேச நேரப்படி காலை 06.54க்கு புறப்பட்டு சென்றது. ஹங்கேரி வான் பகுதியில…
-
- 0 replies
- 287 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * பர்மிய இராணுவம் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் செய்ததாக ஐநா அதிகாரி குற்றச்சாட்டு; ரோஹிஞ்சா முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் குறித்து பிபிசிக்கு அளித்த பிரத்யேக பேட்டி * ஊழல்புகாரில் தென்கொரிய அதிபர் பார்க் குய்ன் ஹை நீதிமன்றத்தால் பதவி நீக்கப்பட்டார்; நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மை குறித்து பெரும் கவலை. * லண்டனின் புகழ்பெற்ற டாக்ஸிகளை புகையை வெளியிடா வாகனங்களாக்கும் முயற்சி மும்முரம்; காற்றின் மாசை கட்டுப்படுத்த இன்னும் ஒரு தொழில்நுட்ப முன்னெடுப்பு.
-
- 0 replies
- 223 views
-
-
German train station sealed off amid axe attack reports Image copyright AP Image caption There is a heavy police presence in the railway station Police in Germany sealed off Duesseldorf's main railway station late on Thursday evening following reports of an axe attack. Local media said several people had been attacked at the station. Witnesses reported seeing injured people lying on the ground, and at least one man armed with an axe. Other reports said the attacker used a machete. Police have yet to confirm details, and there are no reports of fatalities. A reporter for German newspaper Der Speigel at the scene said he had seen two inju…
-
- 2 replies
- 351 views
-
-
பெர்லின் விமான நிலைய பணியாளர்கள் வேலை நிறுத்தம்: விமானச் சேவைகள் ஸ்தம்பித்தன ஜெர்மனி நாட்டின் தலைநகரான பெர்லின் நகர விமான நிலைய பணியாளர்கள் சம்பள உயர்வு கேட்டு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் இங்கிருந்து புறப்பட்டு செல்லும் அனைத்து விமான சேவைகளும் முடங்கிப்போய் ஸ்தம்பித்துள்ளது. பெர்லின்: பெர்லின் மற்றும் நாட்டில் உள்ள முக்கிய விமான நிலைய பணியாளர்களுக்கு ஒருமணி நேர சம்பளமாக 11 யூரோக்கள் அளிக்கப்படுகிறது. இந்த சம்பளத்தை 12 யூரோக்களாக (ஒரு யூரோ என்பது இந்திய மதிப்புக்கு சுமார் 70 ரூபாய்) உயர்த்தி அளிக்க வேண்டும் என பணியாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை மு…
-
- 0 replies
- 259 views
-
-
சுவிட்சர்லாந்தில் உணவு விடுதியில் துப்பாக்கிச் சூடு: 2 பேர் பலி சுவிட்சர்லாந்தின் பேசல் நகரத்திலுள்ள உணவு விடுதியில் நடத்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 2 பேர் பலியாகினர். ஒருவர் பலத்த காயம் அடைந்தார். இதுகுறித்து போலீஸார் தரப்பில், "பேசல் நகரிலுள்ள உணவு விடுதியில் இரு நபர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8.15 மணிக்கு வந்து துப்பாக்கியால் பலமுறை சுட ஆரம்பித்தனர். இதில் உணவு விடுதியிலிருந்த வாடிக்கையாளர்கள் இருவர் உயிரிழந்தனர். ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட பிறகு, அந்த நபர்கள் ரயில்வே நிலையத்தை நோக்கிச் சென்றுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர்களின் உள் நோக்கம் இதுவரை தெரியவில்லை இது தொடர்பா…
-
- 0 replies
- 384 views
-