உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26696 topics in this forum
-
தோல்வியை ஒப்புக்கொண்ட அல்-பக்தாதி; எஞ்சியுள்ள ஐ.எஸ். உறுப்பினர்களை தற்கொலைதாரிகளாக மாறவும் வேண்டுகோள் ஈராக்கில் தாம் படுதோல்வியடைந்துவிட்டதை ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் அல்-பக்தாதி ஒப்புக்கொண்டுள்ளார். ஈராக்கை விட்டு வெளியேறியுள்ள அவர், அதற்குச் சற்று முன்னதாக இந்தத் தகவலை விடுத்துள்ளார். மேலும், அரேபியர்கள் அல்லாத மற்ற ஐ.எஸ். உறுப்பினர்களைத் தத்தமது நாடுகளுக்குத் திரும்பும்படியும் அல்லது தற்கொலை குண்டுதாரிகளாக மாறி தாக்குதலில் ஈடுபடும்படியும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். ஈராக்கில் ஐ.எஸ். வசமிருந்த நிலப்பரப்புக்களை மீட்டெடுத்த ஈராக்கிய இராணுவம், ஐ.எஸ். வசமிருந்த மொசூலின் கடைசிப் பகுதியையும் நேற்று கைப்பற்றியது. இதையடுத்து…
-
- 0 replies
- 249 views
-
-
உலகின் ஒவ்வொரு தனிமனிதரையும் பாதுகாப்போம் : ஐ.நா அமர்வில் அமெரிக்கா இலங்கையின் போர்க்குற்ற செயற்பாடுகளை மேம்படுத்தி, இயல்பு நிலையை உருவாக்க அமெரிக்காவால் தொழிநுட்பரீதியான உதவிகள் வழங்கப்பட்டுள்ளதோடு, உலகின் ஒவ்வொரு தனிமனிதரது உரிமையை பாதுகாக்கவும் சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் அமெரிக்கா ஒன்றித்த செயற்பாட்டை வெளிப்படுத்துமென தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்பின் நிர்வாகம், இலங்கை போர்க்குற்றம் தொடர்பான தனது நிலைப்பாட்டை, இன்று ஐநாவின் சர்வதேச மனித உரிமை ஆணைக்குழுவின் 34 ஆவது கூட்டத்தொடரில் வெளிப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஐநாவிற்கான உதவி இராஜாங்க செயலாளர் எரின் பார்…
-
- 5 replies
- 588 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * அமெரிக்கப் பெருமையை மீட்கப்போவதாக டிரம்ப் சூளுரை; அமெரிக்க நாடாளுமன்றத்தில் தனது முதல் உரையில் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புக்களுக்கு உறுதியளித்தார். * வடகொரியத் தலைவரின் சகோதரர் கொலையின் சந்தேக நபரான இந்தோனேஷிய பெண்ணின் குடும்பத்தை சந்தித்தது பிபிசி; அவர் பாதிக்கப்பட்டவரே தவிர குற்றவாளியல்ல என்கிறார்கள் குடியேறி உரிமை செயற்பாட்டாளர்கள். * ஸ்காட்லாந்தில் வாழும் தெற்காசிய சமூகங்களில் நீடிக்கும் குடும்ப வன்முறைகளை வெளிப்படையாகப் பேசும் நாடக அரங்கேற்றம்; உண்மைச் சம்பவங்களை உரக்க பேசச்செய்வதே நோக்கம் என்கிறார் இதை உருவாக்கியவர்.
-
- 0 replies
- 238 views
-
-
தீவிரவாதிகளுடன் தொடர்புபட்ட நான்கு இளம்பெண்கள் கைது :பிரான்ஸில் சம்பவம்..! சிரியாவிலுள்ள தீவிரவாத அமைப்பினருக்கு தகவல்களை தொலைபேசி குறுஞ்செய்தியூடாக அனுப்பிய குற்றத்திற்காக, நான்கு இளம்பெண்களை பிரான்ஸ் பொலிஸார் கைது செய்துள்ளனர். பிரான்ஸின் தலைநகரான பாரிஸில், கடந்தாண்டு இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடையவராக தேடப்பட்டுவரும், ராச்சித் காஸிம் என்பவருக்கு தொலைபேசியூடான குறுஞ்செய்திகள் மூலம் தகவல்களை அனுப்பிய குற்றத்திற்காக ஒரு பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் சிரியாவிலுள்ள தீவிரவாத அமைப்பினருக்கு தகவல்களை அனுப்பி வந்த குற்றத்திற்காக, மேலும் மூன்று பெண்களை பிரான்ஸ் தேசிய புலனாய்வு பிரிவினர் க…
-
- 0 replies
- 312 views
-
-
நாடாளுமன்றத்தில் ட்ரம்ப் முதல் உரையின் 10 அம்சங்கள் கோப்புப் படம்: டொனால்டு ட்ரம்ப் கன்சாஸ் துப்பாக்கிச் சூடு, யூதவெறுப்பு தாக்குதல்களுக்கு ட்ரம்ப் கண்டனம் * அமெரிக்க நாடாளுமன்ற கூட்டக் கூட்டத்தில் உரையாற்றிய அந்நாட்டு அதிபர் ட்ரம்ப், கன்சாஸ் மாகாணத்தில் இந்தியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கும், யூத மதத்தவர் மீது நடத்தப்படும் இனவெறுப்பு தாக்குதல்களுக்கும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதிபராக பதவியேற்ற பிறகு நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ட்ரம்ப் பேசும் முதல் உரை இதுவாகும். ட்ரம்ப் உரையின் முக்கிய அம்சங்கள் * கன்சாஸ் நகரில் இந்தியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டி…
-
- 1 reply
- 495 views
-
-
யூதர்களின் கல்லறைகளை செப்பனிட்ட முஸ்லிம்கள்; அமெரிக்காவில் நெகிழ்ச்சி சம்பவம்! தகர்க்கப்பட்ட யூதர்களின் கல்லறைகளை முஸ்லிம்கள் ஒன்றுகூடி புனர் நிர்மாணம் செய்த நெகிழ்ச்சியான சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் யூதர்களுக்குச் சொந்தமான மயானம் ஒன்று உள்ளது. கடந்த ஞாயிறன்று அதற்குள் புகுந்த மர்ம நபர்கள் சிலர், அங்கு ஸ்தாபிக்கப்பட்டிருந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட நினைவுத் தூபிகளை சாய்த்தும் தகர்த்தும் சென்றனர். இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட தாரிக்-எல்-மெஸ்ஸிதி என்ற இஸ்லாமிய செயற்பாட்டாளர் ஒருவர், உடனடியாக தனது முகநூல் கணக்கின் மூலம், முஸ்லிம்களுக்கு அழைப்பு ஒன்றை விடுத்தார். அதில், ‘நமது யூத சகோத…
-
- 0 replies
- 441 views
-
-
வெடித்து சிதறும் எட்னா..! (காணொளி இணைப்பு) இத்தாலியின் கிழக்கு சிசிலி தீவிலுள்ள எட்னா எரிமலையானது, கடந்த சில தினங்களாக வெடித்து சிதறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எட்னா எரிமலையின் முகப்பில் இருந்து லாவா நெருப்பு குழம்பு சுமார் தருமினா நகரிலிருந்து சுமார் 30 கிலோமீற்றர் தூரத்தில் பயந்து வழிவதாக அந்நாட்டு புவியியல் மற்றும் எரிமலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறித்த எரிமலை வெடிப்பின் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்தோடு எரிமலை சாம்பல் உயர் நோக்கி பறப்பதனால், அப்பகுதியில் விமானப் போக்குவரத்து பாதிப்படையும் நிலை உள்ளதாக அறிவிக்கப்பட்டாலும், கடானியா நகர விமான …
-
- 0 replies
- 395 views
-
-
இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு குடிபெயர்ந்த இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது குறித்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கைத் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் அந்தக் கோரிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுமுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள இலங்கையர்கள் பல இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர் எனவும் அதனால் அவர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது தொடர்பில் அவதானம் செலுத்துவது காலத்தின் கட்டாயம் எனவும் தமிழக முதலமைச்சர் பழனிச் தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/archives/19452
-
- 0 replies
- 347 views
-
-
இலங்கை விவகாரம் குறித்து பிரித்தானிய பாராளுமன்றில் விவாதம் இலங்கை விவகாரம் குறித்து பிரித்தானிய பாராளுமன்றில் விவாதம் நடத்தப்பட்டுள்ளது. இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தீர்மானம் உள்ளிட்ட விடயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. விவாதத்தை ஆரம்பித்த தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்து கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவர் ஜேம்ஸ் பெரி, பொறுப்புக்கூறல், மனித உரிமை பாதுகாப்பு மற்றும் மீளமைப்பு விடயங்களில் அரசாங்கம் உரியவகையில் செயற்படவில்லை எனவும் சிறிய அளவான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள போதும், அவை போதுமானதாக இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கு பதில் வழங்கிய பாரா…
-
- 1 reply
- 326 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக்கூட்டத்தில் தனது முதல் உரையை நிகழ்த்துகிறார் அதிபர் டொனால்ட் டிரம்ப்; தன் ஆட்சியின் முதல் ஆண்டுக்கான செயற் திட்டங்களை அறிவிப்பார். * அமெரிக்காவில் கொல்லப்பட்ட இந்தியருக்காக அவர் வாழ்ந்த பகுதி மக்கள் அஞ்சலி; இது ஒரு வெறுப்புணர்வுக் கொலையா என்பதை ஆராய்கிறது எஃபிஐ. * பார்வை இழந்தவர்களுக்கு உதவும் கைபேசிச் செயலி; உதவி தேவைப்படும் பார்வையற்றவர்களுக்கு 24 மணி நேரமும் உதவக் கூடிய ஆர்வலர்களை உலக அளவில் உடனடியாக இணைத்து சாதனை.
-
- 0 replies
- 268 views
-
-
அமெரிக்காவில் நுழைய முஸ்லிம் பயணிகளுக்கு தடை விதிக்கும் புதிய உத்தரவில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் நாளை கையெழுத்திடுகிறார். சிரியா, ஈரான், இராக், லிபியா, ஏமன், சோமாலியா, சூடான் ஆகிய 7 முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த அகதிகள், பயணிகள் அமெரிக்காவில் நுழைய தடை விதித்து கடந்த ஜனவரியில் அதிபர் ட்ரம்ப் உத்தரவு பிறப்பித்தார். இந்த தடையை சியாட்டிலில் உள்ள மாவட்ட நீதிமன்றம் நீக்கியுள்ளது. இதை எதிர்த்து அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் 7 நாடுகளின் முஸ்லிம் அகதிகள், பயணிகளுக்கு தடை விதிக்க வகை செய்யும் புதிய உத்தரவை அதிபர் ட்ரம்ப் நாளை பிறப்பிக்க உள்ளார். இதுகுறித்து அமெரிக்க அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் சீன் ஸ்பைசர் நிருபர்களிடம் கூறியபோது, புதிய…
-
- 0 replies
- 405 views
-
-
ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிக்க பென்டகன் புதிய திட்டம்..! அமெரிக்க பாதுகாப்பு மையமான பென்டகன், ஐஎஸ் தீவிரவாதிகளை மொத்தமாக அழிப்பதற்கான புதிய திட்ட வரைபை, அந்நாட்டு ஜனாதிபதி வசஸ்தலமான வெள்ளைமாளிகைக்கு அனுப்பிவைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிப்பதற்கு, பென்டகன் புதிய பொறிமுறைகளை செயற்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. சிரியா மற்றும் ஈராக் போன்ற நாடுகளில், பல பகுதிகளை ஆக்கிரமித்துள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள், அந்நாடுகளின் அரசிற்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பல கொடூரமான தாக்குதல்களையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தீவிரவாதத்தை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளு…
-
- 0 replies
- 364 views
-
-
இனவெறிக்கு எதிராக டிரம்ப் நடவடிக்கை எடுக்க வேண்டும் அமெரிக்காவில் தொடந்து நடந்து வரும் இனவெறி குற்றச் செயல்களுக்கு எதிராக ஜனாதிபதி டிரம்ப் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் கான்சஸ் மாகாணத்தில் உள்ள இரவு விடுதி ஒன்றில் இனவெறி காரணமாக நடந்த துப்பாக்கி சூட்டில் ஐதராபாத்தை சேர்ந்த ஸ்ரீநிவாஸ் குச்சிபோத்லா என்ற இன்ஜினியர் ஒருவர் பலியானார். இந்தச் சம்பவம் அமெரிக்கா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் கருத்து தெரித்துள்ளார். அவர் இதுபற்றி கூறுகையில் ‛‛ அமெரிக்காவில் தொடர்ந்து நடந்து வரும் இனவெறி தொடர்பான குற்றங்கள் முற்றிலும் வெறுக்க தக…
-
- 0 replies
- 388 views
-
-
அமெரிக்க பாதுகாப்புக்காக 54 பில்லியன் டாலர்களை ஒதுக்கிய டிரம்ப் அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு நடந்த முதல் பாராளுமன்றக் கூட்டத்தில் அமெரிக்க பாதுகாப்புக்காக 54 பில்லியன் டாலர்களை ஒதுக்கி டிரம்ப் உத்தரவு. வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்டு டிரம்ப், பொறுப்பேற்றவுடன் முதல் நடவடிக்கையாக விசா நடவடிக்கைகளில் கடும் கட்டுப்பாடுகளை கொண்டுவந்தார். இதனால் வெளிநாட்டு பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில் டிரம்ப் பொறுப்பேற்ற முதல் பாராளுமன்றக்…
-
- 0 replies
- 358 views
-
-
அமெரிக்காவின் பெருமையை ஆஸ்கரில் பறக்கவிட்ட அதிபர் ட்ரம்ப்! #Oscars2017 திரைப்படத் துறையில் மிக உயரிய விருதுகளில் குறிப்பிடத்தக்கது ஆஸ்கர் விருது. இந்த விருது ஒருவருக்குக் கிடைத்து, அதனை அவர் வாங்க வராமல் இருந்தால் எப்படி இருக்கும்? 'அடப்பாவமே, இப்படி ஒரு சான்ஸ் கிடைத்தும் அதனை வாங்க வராம ஏன் இருக்கணும்னு' நாம யோசிப்போம்ல. ஆனால், சிரியா நாட்டைச்சேர்ந்த ஒளிப்பதிவாளர் காலித் கதீப்தான் அந்த துர்பாக்கியசாலி. விழாவில் கலந்து கொள்ளாமல் இருக்க அவர் காரணம் அல்ல. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்தான் காரணம். 'என்னது, டிரம்ப்பா?' என நீங்கள் கேட்டால் உங்கள் கேள்விக்கு 'ஆம்' என்பதே பதிலாக இருக்கும். சிரியா உள்பட ஏழு முஸ்லிம் நாடுகளில் இருந்து மக்கள் அமெரிக்காவுக…
-
- 1 reply
- 418 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * பிரிட்டன் அரசு நியமித்த சிறார்மீதான துஷ்பிரயோகங்கள் குறித்த சுயாதீன விசாரணை ஆரம்பம்; இரண்டாம் உலகப்போரின்போது வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்ட ஆயிரக்கணக்கான பிரிட்டிஷ் குழந்தைகள் சந்தித்த கொடுமைகள் குறித்து முதற்கட்ட விசாரணை. * போரால் இடம்பெயர்ந்து பஞ்சாத்தால் அடிபட்ட மக்கள்; பல்லாயிரக்கணக்கான தெற்கு சூடான் மக்களுக்கு உணவு உதவி செல்லத்துவங்கியது. * கடைசி ஜார் மன்னனின் காதல் கதை பற்றிய திரைப்படத்தை தடை செய்யக்கோரும் பழமைவாத கிறிஸ்தவர்கள்; புனிதரின் கடந்தகால காதலைப்பேசும் திரைப்படம் மத உணர்வுகளை புண்படுத்துவதாக புகார்.
-
- 0 replies
- 238 views
-
-
வெள்ளை மாளிகையில் 8 நாட்கள் மட்டுமே பணிபுரிந்த இஸ்லாமியப்பெண்..! அமெரிக்க ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகையில் பணிபுரிந்த, தேசிய பாதுகாப்பு சபை பணியாளரான ருமானா அகமது என்ற இஸ்லாமியப்பெண் டிரம்பின் பயணத்தடை அறிவித்த 8 நாட்களில் பணியிலிருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்றவுடன், தனது நிர்வாகத்தில் அவர் பல்வேறு மாற்றங்ககளை செய்தார். அத்தோடு தேசிய பாதுகாப்பு சபைக்கு புதிய தலைவர் மற்றும் பணியாளர்கள் பரிந்துரைக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பங்களாதேஷ் வம்சாவளியை சேர்ந்த ருமானா, கடந்த 2011ஆம் ஆண்டு முதல் ஒபாமா அரசாங்கத்தின் கீழ் பணிபுரிந்து வந்துள்ளார்.…
-
- 0 replies
- 390 views
-
-
ஜெர்மனியில் அகதிகள் மீது தாக்குதல்: 3500 குற்றச்சாட்டுகள் பதிவு ஜெர்மனியில் தங்கி இருக்கும் அகதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக சுமார் 3 ஆயிரத்து 500 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெர்லின்: சிரியா, ஈராக் உள்ளிட்ட நாடுகளில் உள்நாட்டு போர் காரணமாக நிலவி வரும் ஸ்திரமற்ற தன்மையால் அந்நாடுகளில் இருந்து மக்கள் மேற்குகுலக நாடுகளை நோக்கி அகதிகளாக படையெடுத்து வருகின்றனர். பிரான்ஸ் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு மேற்கு நாட…
-
- 0 replies
- 245 views
-
-
வெள்ளை மாளிகை விருந்துபசாரத்தை புறக்கணிக்கும் டிரம்ப்..! வெள்ளை மாளிகையின், நிருபர்கள் ஆணையத்தின் வருடாந்த விருந்துபசாரத்தில் கலந்து கொள்ளவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு வருடமும் இடம்பெற்று வரும் வெள்ளை மாளிகை நிருபர்கள் ஆணையத்தின் விருந்துபசாரத்தில், தான் கலந்து கொள்ள மாட்டேன் என தனது சமூக வலைத்தளம் மூலம் கருத்தொன்றை டிரம்ப் பதிவு செய்துள்ளார்.அத்தோடு குறித்த விருந்துபசாரத்தின் போது, அனைவருக்கும் இனிய மாலை வணக்கத்தை தெரிவிக்கும்படியும் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் 1920ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் குறித்த விருந்துபசாரத்தில், அமெரிக்க ஜனாதிபதி மற்றும் ஹொலிவுட் நட…
-
- 0 replies
- 401 views
-
-
டுரோன்களை அழிக்கும் உயிர்கொல்லி கழுகுகள்..! டுரோன் கெமராக்களை அழிப்பதற்கு உயிர்கொல்லி கழுகுகளுக்கு விசேட பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் விமானப்படை அறிவித்துள்ளது. ஆளில்லா விமானங்கள் மூலம் படங்களை எடுத்து தக்குதல்கள் நடத்துதல் மற்றும் தீவிரவாத தாக்குதலுக்கு தேவையான தகவல்களை சேகரித்தல், போன்ற சட்டவிரோத செயற்பாடுகளுக்கு பயப்படுத்தப்படும் டுரோன் கெமராக்களை இனங்கண்டு அழிப்பதற்காக, பிரான்ஸ் விமானப்படை கழுகுகளுக்கு விசேட பயிற்சிகளை வழங்கியுள்ளது. கடந்த ஐந்து வருடங்களாக டுரோன் கெமராவின் பாவனைகள் அதிகரித்துள்ள நிலையில், குறித்த கெமராக்களை கொண்டு ஏற்படுத்தப்பட்ட தாக்குதல் அழிவுகளும் அதிகமாக பதிவாகியுள்ளது. அதனால் சட்டவிரோத …
-
- 0 replies
- 481 views
-
-
வெள்ளை மாளிகை செய்தியாளர் சந்திப்பு: சில ஊடகங்களுக்குத் தடை அமெரிக்க அதிபரின் அதிகாரபூர்வ அலுவலகமான வெள்ளை மாளிகையில் நடக்கும் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கலந்துகொள்வதில் இருந்து பல முக்கிய செய்தி நிறுவனங்கள் விலகப்பட்டுள்ளன. படத்தின் காப்புரிமைGETTY IMAGES விலக்கப்பட்டுள்ள செய்தி நிறுவனங்களில், நியூயார்க் டைம்ஸ், சி என் என், பிபிசி மற்றும் லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ் ஆகியவை அடங்கும். அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் செய்தித் தொடர்பாளர் , சீன் ஸ்பைசருடனான, கேமராக்களில் பதிவு செய்யப்படாமல், தனிப்பட்ட முறையில் நடக்கும் செய்தியாளர் சந்திப்பு ஒன்றுக்கு இந்த நிறுவனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது . இந்த முடிவுக்கு செய்தியாளர்கள் …
-
- 0 replies
- 309 views
-
-
விமானத்தில் மேலதிக பயணிகள் நின்று கொண்டே பயணம் செய்தது எப்படி? விமான நிறுவனத்திற்கு எதிராக விசாரணை பாகிஸ்தானிலிருந்து சவுதிஅரேபியாவிற்கு 7 பயணிகள் நின்று கொண்டே பயணம் செய்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானிலிருந்து, சவுதிஅரேபியாவிற்கு பயணித்த, பாகிஸ்தான் சர்வதேச விமானசேவை (பிஐஏ) நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில், எவ்வாறு 7 பயணிகள் நின்று கொண்டு பயணிக்க அனுமதிக்கப்பட்டார்கள் என விசாரணைகளை நடத்தி வருவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. கராச்சி நகரிலிருந்து மதீனா வரையான பயணத்தில், குறித்த விமானத்தில் உள்ள அனைத்து இருக்கைகளும் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், ஏழு பயணிகள் விமானத்தில் நின்று கொண்டு பயணம்…
-
- 0 replies
- 402 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * வடகொரிய தலைவரின் சகோதரரின் உடலில் வி எக்ஸ் என்னும் நரம்பு மண்டலத்தை தாக்கும் நச்சு வேதிப்பொருளை மலேசிய போலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். விமாநிலையத்திலும் வி எக்ஸ்-இற்கான தடயங்கள் தேடப்பட்டன. * தனது முன்னைய நடவடிக்கைகளுக்காக தான் குற்ற உணர்வில் வாடுவதாக கெமர் ரூஜ் அமைப்பின் முன்னாள் விசாரணையாளர் கூறுகிறார். தான் தண்டிக்கப்படவும் வேண்டுமாம். * பரபரப்பான நகரத்துக்கு கீழே சுரங்கத்தில் ஒரு பெரும் விவசாயப் பண்ணை. அங்கு என்னென்ன செடிகள் மற்றும் மூலிகைகள் வளர்க்கப்படுகின்றன என்று பார்க்கலாமா?
-
- 0 replies
- 324 views
-
-
கனடா பிரதமரின் நெகிழ வைக்கும் செயற்பாடு கனேடிய பிரதமர் ஜஸ்டின் டுரூடே, விசேட தேவையுடைய குடியேற்றவாசி ஒருவருக்கு பொதுவெளியில் செய்த உதவியானது அனைவரிடத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அகதிகள் வரவிற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தடைவிதித்துள்ள நிலையில், பிரதமர் ஜஸ்டின் அகதிகளை கனடாவுக்கு வரவேற்று வருகிறார். இந்நிலையில் கனடாவின் மாண்ட்ரீல் மெட்ரோ ரயில் நிலையத்தில், நகரும் மின்சார படிக்கட்டுகள் உபயோகப்படுத்த முடியாத நிலையில் இருக்கவே, விசேடதேவையுடையோர் பயணிக்கும் இருசக்கர நாற்காலியில் கனடா வந்த ஒருவர் படிகளை கடக்க முடியாமல் சிரமப்பட்டுள்ளார். இந்நிலையில் குறித்த சம்பவத்தை பார்த்த ஜஸ்டின் டுரூடே, வேறொருவருடன் சேர்ந்து க…
-
- 1 reply
- 476 views
-
-
112 அடி உயரமுள்ள ஆதியோகி சிவன் சிலையை திறந்து வைத்தார் மோடி 112 அடி உயரமுள்ள ஆதியோகி சிவன் சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். மகாசிவராத்திரி விழாவை முன்னிட்டு கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார். கோவை விமான நிலையம் சென்ற பிரதமர் மோடியை ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வரவேற்றனர். பின்னர், கோவை விமான நிலையத்திலிருந்து ஒரே ஹெலிகொப்டரில் பிரதமர், ஆளுநர், முதல்வர் மூவரும் விழாவிற்கு சென்றனர். ஈஷா யோகா மையத்தில் பிரதமர் மோடி பிராத்தனை செய்தார். பின்னர் அங்குள்ள தியான லிங்கத்திற்கு பிரதமர் மோடி சிறப்…
-
- 13 replies
- 2k views
-