உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26698 topics in this forum
-
அணுவாயுதம் இல்லாத உலகம் : சீனாவின் கோரிக்கை உலக நாடுகள் அணுவாயுத உற்பத்திகளை இல்லாது செய்வதற்காக அணிசேர வேண்டும். என சீன ஜனாதிபதி உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். சுவிற்சர்லாந்திற்கு உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் உரையாற்றியுள்ள போதே அணுவாயுத இல்லாத உலகை உருவாக்க சகல நாடுகளும் அணிதிரள வேண்டுமென அழைப்புவிடுத்துள்ளார். தொடர்ந்து அவர் குறிப்பிட்டுள்ளதாவது, அடுத்து வரும் சந்ததியினருக்கு அணு ஆயுதங்கள் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதால், அனைத்து நாடுகளும் அணு ஆயுதங்களை நிராகரிப்பதோடு, உலகத்திலிருந்து அணு ஆயுதங்களை முழுமையாக இல்ல…
-
- 0 replies
- 316 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * போரினால் சீரழிந்த கிழக்கு அலெப்போவுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் திரும்புவதாக ஐ நா கூறும் நிலையில், அங்குள்ள சூழலை ஆராய்கிறது பிபிசி. * தாய்லாந்தில் நாளொன்றுக்கு சாலை விபத்துகளில் குறைந்தது அறுபதுபேர் பலியாகும் நிலையில், அங்கு சாலை பாதுகாப்பு எப்படியுள்ளது? * அமெரிக்க அதிபர் ஒபாமா பதவி விலகிச் செல்லவுள்ள நிலையில், அவரது வெளியுறவு கொள்கைகள் எப்படியிருந்தன என்பது பற்றிய ஒரு பார்வை.
-
- 0 replies
- 413 views
-
-
பராக் ஒபாமா: காலம் கலைத்த கனவு - தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ காலங்கடந்து நிகாலங்கடந்து நிலைத்தல் எளிதல்ல. காலம் தன்னளவில் நிலைக்க வேண்டியவையையும் மறக்க வேண்டியவையையும் தீர்மானிக்கிறது. ஒரு நபரின் காலங்கடந்த இருப்பு அவர் எதைச் செய்தார் என்பதை மட்டும் கருத்திற் கொண்டு முடிவாவதில்லை. மாறாக, எதைச் செய்யாமல் விட்டார் என்பதையும் கருத்திலெடுக்கிறது. காலங்கடந்து நிலைத்தலை விட, மக்கள் மனதில் நிலைத்தல் கடினமானது. காலம் மன்னிக்கத் தயாராகவுள்ள விடயங்கள் பலவற்றை, மக்கள் மன்னிக்கத் தயாராகவில்லை. மக்கள் மனங்களில் நிலைக்கின்றவர்கள் நல்ல மனிதர்கள், அவர்கள் வரலாற்றின் பக்கங்களால் மறைக்கப்பட்ட …
-
- 0 replies
- 596 views
-
-
இத்தாலியில் 3 தொடர்நிலநடுக்கங்களையடுத்து ஏற்பட்ட பனிச்சரிவு ஹோட்டல் ஒன்றை தாக்கியுள்ளது – பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் நேற்று புதன்கிழமை ஒரு மணித்தியாலத்திற்குள் தொடர்ந்து 3 தடவைகள் பாரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் இத்தாலியில் பனிச்சரிவு ஒரு ஹோட்டலை தாக்கியுள்ளதாகவும் இதனால் பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் அஞ்சப்படுகின்றது. நேற்று மாலை கடும் பனிப்பொழிவு நிலவிய நிலையில் மத்திய அப்ரசோவைப் பகுதியில் உள்ள கிரான் மலையில் பரின்டோலா (Farindola )நகரில் உள்ள Rigopiano என்ற மூன்று மாடி ஹோட்டலே இவ்வாறு பனிச்சரிவால் தாக்கப்பட்டுள்ளது. குறித்த இடத்தில் நடந்த மீட்புக்களை மேற்கொண்ட போது பலரது உடல்கள்,…
-
- 0 replies
- 303 views
-
-
பதவி இல்லையென்றாலும் அமெரிக்காவுக்காக குரல் கொடுப்பேன் ; ஒபாமா ( காணொளி இணைப்பு ) பதவிக் காலத்துக்குப் பிறகும் பதவியில்லையென்றாலும் நான் அமெரிக்காவுக்காக குரல் கொடுக்கத் தயங்கப்போவதில்லை என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக நாளைய தினம் டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்கும் நிலையில், தனது பதவிக்காலத்தின் இறுதி ஊடகவியலாளர் சந்திப்பை தற்போதைய ஜனாதிபதி ஒபாமா வெள்ளை மாளிகையில் நேற்று நடத்தினார். இதன் போது உரையாற்றுகையிலேயே ஒபாமா மேற்கண்டவாறு தெரிவித்தார். எனது பதவிக் காலத்துக்குப் பிறகும் பதவியில்லையென்றாலும் நான் அமெரிக்காவுக்காக குரல் கொடுக்கத் தயங்கப்போவ…
-
- 1 reply
- 535 views
-
-
டொனால்ட் ட்ரம்ப்பின் சிலையை அவமானப்படுத்தி எதிர்ப்பு தெரிவித்த பெண் அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் டொனால்ட் ட்ரம்ப் மீதான தமது எதிர்ப்பை பெண்கள் அமைப்பு ஒன்று வித்தியாசமாகக் காட்டியுள்ளது. ஸ்பெயின் தலைநகர் மெட்ரிட்டில் உள்ள நூதனசாலை ஒன்றில் நேற்று ட்ரம்ப்பின் முழு உருவ மெழுகுச் சிலை ஒன்று திறந்து வைக்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட ‘ஃபிமென்’ (FEMEN) என்ற பெண் உரிமைகளுக்கான அமைப்பைச் சார்ந்த பெண்ணொருவர், திடீரென்று பாதுகாப்பு அதிகாரிகளை மீறிக்கொண்டு சிலைக்கருகில் சென்றார். சிலைக்கருகே சென்றதும் அவர் தனது மேலாடையைக் கழற்றியெறிந்ததுடன் ட்ரம்ப்பின் சிலையின் மறைவுப் பகுதியைக் கைகளால் பிடித்துக்கொண்டு கீழ்த்தரமான கோ…
-
- 1 reply
- 386 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * டிரம்ப் பதவியேற்றால் மெக்ஸிகோவில் எப்படியான பாதிப்புக்கள் ஏற்படும் என்பது குறித்த ஒரு பார்வை. * பிரிட்டனில், செயற்கையாக உருவாக்கப்பட்ட மனிதக் கருவை பரிசோதனைக்காக வைத்திருக்கும் காலத்தை இருமடங்காக்க கோரிக்கை. * பிரிட்டனில் உள்ள மசூதிகளில் முஸ்லிம்கள் ஏன் சிறப்பு கமெராக்களை பொருத்துகிறார்கள்? ஆராய்கிறது பிபிசி.
-
- 0 replies
- 457 views
-
-
கைதிகளுக்கு ஒபாமாவின் இறுதிப் பரிசு! தனது அதிகாரத்தை பயன்படுத்தி 209 பேருக்கு தண்டனையை குறைத்தும், 64 பேருக்கு பொதுமன்னிப்பு வழங்கியும் அமெரிக்க ஜனாதிபதியாக தனது இறுதி பரிசை வழங்கியுள்ளார் பராக் ஒபாமா. அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்கவுள்ளார். அதனால் வெள்ளை மாளிகையிலிருந்து ஒபாமா வெளியேறவுள்ள நிலையில் பல்வேறு குற்றங்களில் கைதாகி சிறையில் தண்டனை கைதிகளாக சிறை வைக்கப்பட்டுள்ள 209 கைதிகளின் தண்டனை காலத்தை குறைத்தும், 64 பேருக்கு மன்னிப்பு வழங்கியும் இன்று ஒபாமா உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதியாக இரண்டாவது தடவையாக பதவி ஏற்ற பராக் ஒபாமாவின் ஆட்சிக் காலத்தில் இதுவரை 1385 கைதிகளின் தண்டனை கால…
-
- 0 replies
- 269 views
-
-
அமெரிக்காவின் பிரபல நடிகையும் பாடகியுமான லின்ட்ஸே லொஹான் இஸ்லாத்தை தழுவியுள்ளதை உறுதி செய்ய முடிந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் நேற்று முன்தினம் செய்தி வெளியிட்டுள்ளன.தனது சமூக வலைத்தள கணக்குகள் அனைத்தினதும் கடந்த கால பதிவுகளை அழித்துள்ள அவர், இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் 'அலைக்கும் ஸலாம்' எனப் பதிவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.லின்ட்ஸே லொஹானின் இந்த மாற்றத்தை வரவேற்பதாகவும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என உலகின் பல பாகங்களையும் சேர்ந்த முஸ்லிம்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.2016 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் புனித குர்ஆனை படித்து வந்த இவர் இதன் மூலமாக தன்னில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக ஊடகங்களுக்…
-
- 7 replies
- 1k views
-
-
லேடனைக் காட்டிக்கொடுத்த மருத்துவரை விடுவிக்க மாட்டோம்; பாகிஸ்தான் உறுதி அல்-கைதா தலைவர் ஒஸாமா பின் லேடன் குறித்து அமெரிக்க உளவுத் துறைக்கு தகவல் கொடுத்ததாக நம்பப்படும் பாகிஸ்தானிய மருத்துவரை விடுவிக்கவோ அல்லது அமெரிக்காவிடம் கையளிக்கவோ போவதில்லை என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. குறித்த மருத்துவரின் விடுதலை குறித்து அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் டொனால்ட் ட்ரம்ப் அடிக்கடி ஊடகங்களில் பேசிவருவது குறித்து பாகிஸ்தான் தனது கண்டனத்தையும் தெரிவித்துள்ளது. பின் லேடனின் மரணத்தையடுத்து, பாகிஸ்தானின் மருத்துவரான ஷகீல் அஃப்ரிடி என்பவரை அமெரிக்க இராணுவம் பாராட்டியிருந்தது. அவரது உதவியுடனேயே பின் லேடனைக் கொல்ல முடிந்தது என்று…
-
- 0 replies
- 564 views
-
-
ஏமன் உள்நாட்டு போரில் 10 ஆயிரம் பேர் பலி – ஐ.நா ஏமன் உள்நாட்டு போரில் 10 ஆயிரம் பேர் பலியானதாக ஐ.நா.சபை தெரிவித்துள்ளது.ஏமனில் அரசுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. தலைநகர் கனா மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளையும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி தனி அரசு நடத்தி வருகின்றனர். எனவே அதிபர் மன்சூர் ஹாதி ஏடனை தலைநகராக கொண்டு ஆட்சி நடத்தி வருகிறார். இவருக்கு சவுதி ஆதரவு கூட்டுப்படைகள் ஆதரவு அளித்துள்ளன. இதனால் கிளர்ச்சியாளர்களுக்கும், சவுதி கூட்டுப்படை ஆதரவு பெற்ற ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடக்கிறது. 21 மாதங்களாக நடைபெறும் உள்நாட்டு போரில் இதுவரை 10 ஆயிரம் பேர் பலியாகி உள்…
-
- 0 replies
- 369 views
-
-
எங்கள் நாட்டிற்கு வர வேண்டாம்: அதிபர் ஒபாமாவிற்கு நோபல் பரிசு பெற்ற அர்ஜெண்டினர் கடிதம் 1980 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் அர்ஜெண்டினா நாட்டைச் சேர்ந்த அடோல்ஃபோ பெரீஸ் எஸ்க்யுவெல். இவர் தங்கள் நாட்டிற்கு வர வேண்டாம் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிற்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார். அர்ஜெண்டினா நாட்டில் ஆட்சி கவிழ்ப்பு நடைபெற்ற 1976-களின் தொடக்கத்தில் இருந்து ராணுவ ஆட்சியில் ஏராளமான படுகொலைகள் நடைபெற்றன. சோசலிஷ்டுகள் என்று கருதப்படுபவர்கள் அனைவரும் படுகொலை செய்யப்பட்டனர். இதனையடுத்து 1983 வரை ராணுவ ஆட்சி நடைபெற்று வந்தது. ஆட்சி கவிழ்ப்பு நடைபெற்ற மார்ச் 24-ம் நாள் ஆண்டுதோறும் விடுமுறை தினமாக அர்ஜெண்டினாவில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்…
-
- 0 replies
- 300 views
-
-
விடை காணமுடியா புதிராகவே அதிகாரபூர்வமாக முடிவுற்றது எம்.எச்.370 விமானத் தேடல் பணி கலைஞர் சுதர்சன் பட்நாயக்கின் வேலைப்பாடு. | கோப்புப் படம். மலேசிய விமானம் எம்.எச்.370 நடுவானில் மாயமாகி 3 ஆண்டுகள் முடியப்போகும் நிலையில் பல்வேறு கணிப்புகளுடனேயே பெரிய புதிராக முடிந்து போயுள்ளது விமானத் தேடல் பணி. மார்ச் 8, 2014, உலகை உலுக்கிய இந்தத் தினத்தில்தான் 239 பயணிகளுடன் மலேசிய விமானம் எம்.எச்.370 மாயமானது. தேடுதல் குழுவினருக்கு விமானத்தின் சிறு சுவடு கூட கிடைக்கவில்லை, இதனால் வெறுப்பும் வியர்த்தமுமே எஞ்சிய நிலையில் தேடுதல் பணி அதிகாரபூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது. இந்தியப் பெருங்கடலில் சுமார் 1,20,000 சதுரகிலோம…
-
- 0 replies
- 290 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்தை ஒற்றை சந்தையாக பிரிட்டன் அணுகாது - தெரீசா மே ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் விலகுகின்றபோது ஒற்றை ஐரோப்பிய சந்தையில் உறுப்பினராகத் தொடர்வதை பிரிட்டன் பிரதமர் தெரீசா மே நிராகரித்திருக்கிறார். லண்டனில் லன்காஸ்டர் இல்லத்தில் நடைபெற்ற மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அவருடைய உரையில், ஒற்றை சந்தையில் தொடர்ந்து நீடிப்பது, ஐரோப்பிய ஒன்றிய விதிகளை வகுப்பதில் இடம்பெறாமல், அவற்றை ஏற்றுகொள்வதற்கு சமமானதாகும் என்று அவர் தெரிவித்தார், சுங்க வரி விதிப்பு ஒன்றாக இருக்கும் ஒரு நிலை குறித்து பேசிய அவர், இதில் முழு உறுப்பினர் என்ற நிலை, பிரிட்டன் அதனுடைய வர்த்தக ஒப்பந்தங்களை பேச்சுவார்த்தைகளில் உருவாக்கி கொள்வதை தடுக…
-
- 0 replies
- 521 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * புதுவருட தினத்தன்று இரவு விடுதியில் தாக்குதல் நடத்தியவரை துருக்கிய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். * டொனால்ட் டிரம்புக்கும் சீனாவுக்கும் இடையில் முறுகல் அதிகரிப்பு! தாய்வான் குறித்து தொடர்ந்து எரிச்சலூட்டினால், பதிலடி தருவோம் என்கிறது சீன அரச ஊடகம். * எத்தியோப்பிய மக்களுக்கு சீனாவில் செய்த கார்கள் மீது விருப்பமில்லை. பெருநிறுவனங்களின் பெறுமதியான கார்கள்தான் வேண்டுமாம்! அதற்கான வழிதான் இது.
-
- 0 replies
- 515 views
-
-
சந்திரனில் இறுதியாக காலடி எடுத்த வைத்தவர் மரணமானார் சந்திரனில் இறுதியாக காலடி எடுத்துவைத்த விண்வெளி வீரரான எயூஜின் கெர்னான், அமெரிக்காவில் காலமானார். அமெரிக்க விண்வெளி வீரரான எயூஜின் கெர்னான் கடந்த 1972ஆம் ஆண்டு அப்பல்லோ 17 விண்கலத்தில் சந்திரனுக்கு சென்று, அங்கு தங்கி சில ஆய்வுகளை மேற்கொண்டார். இதுவரை சந்திரனுக்கு சென்ற விண்வெளி வீரர்களில் இறுதியாக அங்கு ஆய்வுகளை செய்தவர் என்னும் பெருமைக்குரியவரான எயூஜின் கெர்னான், உடல் நலக்குறைவால் தனது 82ஆவது வயதில் டெக்சாஸ் மாநிலத்தின் ஹொஸ்டன் நகரில் உள்ள வைத்தியசாலையில் இன்று மரணமடைந்தார். யூஜினின் மரணத்திற்கு அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான ’நாசா’ தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.…
-
- 2 replies
- 636 views
-
-
பஹ்ரேனில் பொலிஸாரைத் தாக்கிய மூவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் பொலிஸாரைக் கடுமையாகத் தாக்கிய குற்றத்தின் பேரில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட மூன்று ஷைதி இளைஞர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றியிருக்கிறது பஹ்ரேன் அரசு! குறித்த இளைஞர்கள் மூவரும் பஹ்ரேன் அரசுக்கு எதிரான போராட்டங்களில் பங்கெடுத்தவர்கள். இவர்கள் மூவர் மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு பொய்யானது என்றும், இவர்களுக்கு எதிராக சாட்சி சொன்னவர்கள் சித்திரவதையின் பேரிலேயே சாட்சியமளித்தனர் என்றும் மனித உரிமை இயக்கங்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தன. எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்களை அலட்சியம் செய்த அரசு, கடந்த ஞாயிறன்று இந்த மூன்ற இளைஞர்களையும் துப்பாக்கியால் சுட்டு…
-
- 0 replies
- 316 views
-
-
ஓய்வுக்குத் தயாராகும் ஒபாமா; 43 மில். டொலர் குத்தகை வீட்டுக்கு வந்து இறங்கும் பொருட்கள் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக எதிர்வரும் 20ஆம் திகதி ட்ரம்ப் பொறுப்பேற்கவுள்ள நிலையில், வெள்ளை மாளிகையில் உள்ள தமது பிரத்தியேகப் பொருட்களை வொஷிங்டனில் தாம் வாங்கியுள்ள புதிய வீட்டிற்கு மாற்றி வருகிறார் ஒபாமா. வொஷிங்டனில் சுமார் 43 இலட்சம் டொலர் குத்தகையில் ஒபாமா வாங்கியுள்ள வீட்டிற்கு, பொருட்களை ஏற்றி இறக்கும் வாகனங்கள் வந்து போகத் தொடங்கியுள்ளன. பதவி விலகியதும் தனது சொந்த ஊரான சிக்காகோவுக்குச் செல்ல ஒபாமா விரும்பியபோதும், தனது இளைய மகள் ஷாஷாவின் படிப்பு நிறைவடைய வேண்டும் என்பதற்காகவே அடுத்த இரண்டு வருடங்கள் வொஷிங்டனில் தங்க முடிவு செய்த…
-
- 0 replies
- 365 views
-
-
புதுவருட பிறப்பன்று இஸ்தான்புல்லில் தாக்குதல் நடத்திய பிரதான சந்தேக நபர் கைது புதுவருட பிறப்பு தினத்தன்று துருக்கி இஸ்தான்புல்லில் நடத்தப்பட்ட தாக்குதலின் பிரதான சூத்திரதாரி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தாக்குதலில் 39 பேர் கொல்லப்பட்டிருந்தனர். தாக்குதலின் சூத்திரதாரி இஸ்தான்புல்லில் உள்ள தொடர்மனை குடியிருப்பு ஒன்றில் தமது நான்கு வயதான மகனுடன் மறைந்திருந்த போது கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் ஏற்கனவே உரிமை கோரி இருந்தனர். துருக்கியில் நடத்தப்பட்ட தாக்குதல் ஒன்றை வெளிப்படையாக ஐ.எஸ். தீவிரவாதிகள் உரிமை கோரிய முதல் சந்தர்ப்பம் இதுவாகும். http://globaltamilnews…
-
- 0 replies
- 214 views
-
-
டுவிட்டர் கணக்கை மூட மாட்டேன், டொனால்டு டிரம்ப் திட்டவட்டம் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பின்னர் தனது டுவிட்டர் கணக்கை மூட மாட்டேன் என டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக உள்ள பராக் ஒபாமாவின் பதவிக்காலம் வரும் 20-ம் தேதியுடன் முடிவடைகிறது. அவரையடுத்து 44-வது அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்க உள்ளார். அமெரிக்க அதிபருக்கென பிரத்யேக டுவிட்டர் கணக்கு தற்போது உள்ளது. மேலும், அமெரிக்க அதிபராக உள்ளவர்களின் தனிப்பட்ட தகவல்களை அந்நாட்டு அரசு கவனத்துடன் பாதுகாப்பாக பர…
-
- 1 reply
- 362 views
-
-
ஐரோப்பிய நாடுகளின் ஒற்றுமையே சிறந்த பாதுகாப்பு : டிரம்புக்கு ஏங்கெலா மெர்கல் பதிலடி டொனால்ட் டிரம்ப் கூறிய கருத்துக்களுக்கு எதிரான சிறந்த தற்காப்பு என்பது ஐரோப்பிய ஒற்றுமைதான் என்று ஜெர்மனி சான்சலர் ஏங்கெலா மெர்கல் கூறியுள்ளார். ஐரோப்பிய நாடுகளின் ஒற்றுமையே சிறந்த பாதுகாப்பு : ஏங்கெலா மெர்கல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறியது குறித்து புகழ்ந்து பேசிய அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், ஐரோப்பிய ஒன்றியம் வீழ்ச்சியின் விளிம்பில் இருப்பதாக கருத்து தெரிவித்திருந்தார். ஐரோப்பா தனது சுய அடையாளத்திற்காகவும், 21 ஆம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ளத் தேவையான கொள்கைகளுக்கா…
-
- 0 replies
- 330 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * வணிகம், பிரெக்ஸிட் மற்றும் குடியேறிகள் குறித்தெல்லாம் டொனால்ட் டிரம்ப் பேசுகிறார். இன உறவுகள் குறித்து ஒபாமா என்ன பேசினார்? அது குறித்த ஒரு பார்வை. * கிர்கிஸ்தானின் இன் தலைநகருக்கு அருகே கிராமம் ஒன்றின் மீது சரக்கு விமானம் ஒன்று வீழ்ந்ததில் பலர் கொல்லப்பட்டனர். * ஒரு காலத்தில் உலகின் சிறந்த சர்க்கஸாக பெயர் பெற்ற அமெரிக்காவின் பெரிய சர்க்கஸ் நூற்று ஐம்பது வருடங்களின் பின்னர் மூடப்படுகின்றது.
-
- 0 replies
- 314 views
-
-
மெக்சிகோவில் தயாரிக்கப்படும் பி.எம்.டபிள்யூ. கார்களுக்கு 35 சதவீத எல்லை வரி: டிரம்ப் எச்சரிக்கை ஜெர்மனி நாட்டை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் பி.எம்.டபிள்யூ. நிறுவனம் பல்வேறு வடிவங்களில் விலையுயர்ந்த சொகுசு கார்களை தயாரித்து வருகிறது. தற்போது BMW 3 Series ரக கார்களை தயாரிப்பதில் துரித கவனம் செலுத்திவரும் இந்நிறுவனத்துக்கு சொந்தமான கார் தயாரிப்பு தொழிற்சாலையின் கிளை சீனாவில் இயங்கி வருகிறது. இதேவேளை அமெரிக்காவை அண்மித்துள்ள மெக்சிகோவில் புதிய தொழிற்சாலை திறப்பதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன. அங்குள்ள சான் லூயிஸ் போட்டோசி நகரில் உருவாகிவரும் இந்த தொழிற்சாலையில் எதிர்வரும் 2019-ம் ஆண்டுக்குள் கார் தயாரிப்பு ஆரம்பிக்க…
-
- 1 reply
- 422 views
-
-
ஐரோப்பிய ஒன்றிய சந்தையை பிரிட்டன் இழந்தால் மாற்று நடவடிக்கை EPA பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறும்போது, ஐரோப்பிய ஒன்றிய சந்தைகளை அணுகும் உரிமையை இழக்குமானால், அதற்கு பதிலான மாற்று நடவடிக்கைகளை பிரிட்டன் எடுக்கும் என்று வெளியுறவு அமைச்சர் பிலிப் ஹாம்மண்ட் தெரிவித்திருக்கிறார். பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறும்போது, ஐரோப்பிய ஒன்றிய சந்தைகளை அணுகும் உரிமையை இழக்குமானால், அதற்கு பதிலான மாற்று நடவடிக்கைகளை பிரிட்டன் எடுக்கும் என்று வெளியுறவு அமைச்சர் பிலிப் ஹாம்மண்ட் தெரிவித்திருக்கிறார். ஐரோப்பிய ஒன்றியத்தின் மற்ற நாடுகளிலிருந்து பிரிட்டனுக்குள் மக்கள் சுதந்திரமாக குடியேறுவதைக்…
-
- 0 replies
- 339 views
-
-
துருக்கி விமானம் விபத்திற்குள்ளானதில் 32 பேர் பலி ( காணொளி இணைப்பு ) துருக்கி விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்று விபத்திற்குள்ளானதில் விமானி உட்பட 32 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. துருக்கி விமான சேவைக்கு சொந்தமான போயிங் 747 என்ற சரக்கு விமானமொன்று இவ் விபத்தில் சிக்கியுள்ளது. இதில் பயணித்த விமானி உட்பட விமான சிப்பந்திகள் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, குறித்த விமானம் குடியிருப்பு பகுதிக்குள் வீழந்துள்ளதால் 15 ற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் 6 குழந்தைகள் உட்பட பல குடியிருப்பாளர்கள் உயிரிழந்துள்ளதாகவும் அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. …
-
- 2 replies
- 410 views
-