உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26698 topics in this forum
-
தாவூத்தின் 15 ஆயிரம் கோடி சொத்துக்களை பறிமுதல் செய்தது யு.ஏ.இ., அரசு புதுடில்லி : நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிமின் 15 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு பறிமுதல் செய்துள்ளது. நிழலுலக தாதா: மும்பையில், 1993ல் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களில், 257 பேர் கொல்லப்பட்டனர்; 1,000த்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தாவூத் இப்ராஹிம், சவுதி அரேபியாவில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து, பின்னர் பாகிஸ்தான் அரசிடம் தஞ்சம் அடைந்தான். கராச்சி நக…
-
- 0 replies
- 434 views
-
-
விற்பனையில் சாதனை புரிந்த சர்வாதிகாரி ஹிட்லரின் சுயசரிதை புத்தகம் சர்வாதிகாரி ஹிட்லரின் சுயசரிதையை விளக்கும் மெயின் காம்ப் புத்தகம் ஜெர்மன் நாட்டில் அதிக அளவில் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. பெர்லின்: உலகப்புகழ் பெற்ற ஜெர்மனி சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர். முதல் உலகப் போரில் போரிட்ட இவர் 1918,ல் போர் முடிந்த பிறகு, ஜெர்மன் தொழிலாளர் கட்சியில் சேர்ந்தார். படிப்படியாக வளர்ந்து தலைமை இடத்தை பிடித்தவர், அரசை எதிர்த்து 1923,ல் திடீர் புரட்சியில் ஈடுபட்டார். புரட்சி தோல்வியில் முடிந்ததால் கைது செய்யப்பட்டார். சிறையில் இரு…
-
- 0 replies
- 472 views
-
-
இன்றைய (03-01-2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * இஸ்தான்புல் தாக்குதலாளி அடையாளம் கிடைத்தது என்கின்றன துருக்கி ஊடகங்கள்; அவரைத்தேடும் பணியில் துருக்கி படையினர் தீவிரம்; * வங்கதேசத்தில் விவாகரத்துகள் அதிகரிக்க என்ன காரணம்? விவாகரத்து பெற்ற பெண்கள் சமூகத்தில் சந்திக்கும் சவால்கள் குறித்து பிபிசிக்கு அளித்த பிரத்யேக பேட்டிகள்; * ஆப்ரிக்காவின் மிகப்பெரிய நன்னீர் ஏரியில் மீன் இருப்பு குறைவது ஏன்? பாதிக்கப்படும் கென்ய மீனவர்களுக்கு மாற்று வழி என்ன என்பதை ஆராயும் பிபிசியின் பிரத்யேக செய்தி உள்ளிட்ட பல செய்திகள் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 840 views
-
-
கிறிஸ்துமஸ் சந்தை தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்பு சேவையை சீர்திருத்த பரிந்துரை பெர்லின் கிறிஸ்துமஸ் சந்தை ஒன்றில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து, பாதுகாப்பு சேவைகளை சீர்திருத்தி அமைக்க ஜெர்மனி உள்துறை அமைச்சர் தாமஸ் டு மஸ்யார் பரிந்துரைத்திருக்கிறார். தற்போது ஜெர்மனியின் 16 பிராந்திய மாநில அரசுகளால் பகிர்ந்து கொள்ளப்படுகின்ற உள்நாட்டு உளவு தகவல்களில், பெர்லின் மத்திய அரசு அதிக கட்டுப்பாட்டை கொண்டிருக்க வேண்டும் என்று ஜெர்மனி செய்தித்தாள் ஒன்றுக்கு எழுதிய கட்டுரையில் டு மஸ்யார் தெரிவித்திருக்கிறார். மத்திய காவல் துறை ஆற்றும் பணியை விரிவாக்கவும், தஞ்சக் கோரிக்கையில் தோல்வியடைந்தோருக்கு, நடுவண் அரசால் நடத்தப்படுகின்ற புறப்பாடு …
-
- 0 replies
- 169 views
-
-
இரவு கேளிக்கையகத்தில் 39 பேரை கொன்றவர் தொடர்ந்து தலைமறைவு புத்தாண்டு இரவில் இஸ்தான்புல் இரவு கேளிக்கையகத்தில் 39 பேரை கொலை செய்த துப்பாக்கிதாரி தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். இஸ்தான்புல் தாக்குதலில் பலியானோருக்கு அஞ்சலி இஸ்தான்புல் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட இரண்டு வெளிநாட்டவர் உள்பட, பலரை இது தொடர்பாக காவல் துறையினர் காவலில் வைத்துள்ளனர். கிர்கிஸ்தானை சேர்ந்த 28 வயதான யாக்ஹி மஷராபோவை சந்தேக நபராக முன்னதாக சில துருக்கி ஊடகங்கள் இனம் கண்டிருந்தன. அவருடைய பாஸ்போர்ட் வடிவ புகைப்படமும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. ஆனால், அதிகாரிகள் இதனை உறுதி செய்யவில்லை. மஷராபோவிடம் சுருக்கமான விசாரணை மேற்…
-
- 1 reply
- 507 views
-
-
சவுதியில் ஊதியம் கேட்டு போராடிய தொழிலாளர்களுக்கு கிடைத்தது சிறையும் கசையடியும் கடந்த ஆண்டு தங்களுடைய ஊதியம் வழங்கப்படாதபோது, போராட்டங்கள் நடத்திய வெளிநாட்டு தொழிலாளர்கள் பலருக்கு சிறை தண்டனையும், கசையடிகளும் வழங்கப்பட்டிருப்பதாக சவுதி அரேபியாவிலிருந்து வருகின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. கசையடி தண்டனை (கோப்புப்படம்) 45 நாட்கள் முதல் 4 மாதங்கள் வரையிலான சிறை தண்டனையை மெக்காவிலுள்ள நீதிமன்றம் ஒன்று சுமார் 50 தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ளதாக சவுதிதி செய்தித்தாள்கள் வெளியிட்டுள்ளன. சிலருக்கு 300 கசையடிகள் தண்டனையாக வழங்கப்பட்டுள்ளன. கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால் சவுதி பொருளாதாரம் பாதிக்கப்பட்டபோது, பல மாதங்க…
-
- 0 replies
- 245 views
-
-
பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாவது ஏன்? அமைச்சரின் கருத்தால் ஆர்வலர்கள் ஆத்திரம் பெங்களூரு நகரில், புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பல பெண்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் தொல்லை குறித்த விசாரணையில், கண்காணிப்பு காணொளி பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். பெங்களூரு பெண் காவலரிடம் அழுது கொண்டு உதவி கோரும் இளம்பெண் கட்டுக்கடங்காத ஆண்களின் கூட்டத்தால், இருட்டில் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதை அழுது கொண்டும், பெண் காவல்துறையினரின் அரவணைப்பிலும் புகார் அளிக்கின்ற பெண்களின் புகைப்படங்களை நகர செய்தித்தாள் ஒன்று வெளியிட்டிருந்தது. சமூக ஊடகங்களின் அறிக்கைகளை தவிர வேறு எந்த புகார்களையும் இது தொடர்பாக காவல்துறை பெறவில்லை என…
-
- 2 replies
- 511 views
-
-
என்ன நினைக்கிறது உலகம்?- புத்தாண்டு என்ன தரும் பாலஸ்தீனத்துக்கு? கத்தார் ஊடகம் - அல்ஜசீராவில் வெளியான தலையங்கம் பாலஸ்தீனப் பிரச்சினை இந்த ஆண்டும் பரவலாகப் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2017 இறுதியில்கூட பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு முடியப்போவதில்லை. இவ்விஷயத்தில் தீர்வு காண்பதற்காக உலக நாடுகள் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கப்போகின்றன. அதேசமயம், இந்த முறை வெளியுறவு தொடர்பான விஷயங் களை விட, பாலஸ்தீனத்தின் உள்விவ காரங்களே பிரதானமாகப் பேசப்பட விருக்கின்றன. பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் (பி.எல்.ஓ.) தலைவரும், பாலஸ்தீன அதிபருமான மஹ்மூத் அப்பாஸ் சுட்டிக் காட்டியி…
-
- 0 replies
- 255 views
-
-
சீனாவில் இருந்து லண்டனுக்கு நேரடி ரயில் சேவை : 12 ஆயிரம் கிலோ மீற்றரை 18 நாட்களில் கடக்கும் ஐரோப்பாவுடனான தனது வர்த்தக உறவுகளை மேலும் பலப்படுத்திக்கொள்வதற்காக, ரயில் சேவை மூலம் நேரடியாக லண்டனுக்கே பொருட்களை அனுப்பத் தொடங்கியுள்ளது சீனா. இதன்படி, பொருள் வர்த்தகத்தில் முன்னணியில் விளங்கும் சீனாவின் யிவு நகரில் இருந்து முதன்முறையாக ரயில் ஒன்று பொருட்களுடன் லண்டன் நோக்கிப் புறப்பட்டுள்ளது. சுமார் 12 ஆயிரம் கிலோமீற்றர் தொலைவை பதினெட்டே நாட்களில் இந்தத் ரயில் கடந்து விடும் என்று சீனா தெரிவித்துள்ளது. இந்தப் பயணத்தின்போது குறித்த ரயிலானது கஸகஸ்தான், ரஷ்யா, பெலாரஸ், போலந்து, ஜேர்மனி, பெல்ஜியம் மற்றும் ஃப்ரான்ஸ் வழியாக லண்…
-
- 11 replies
- 756 views
-
-
போதையில் விமானத்தை ஒட்ட வந்த விமானி கைது!!!!
-
- 4 replies
- 703 views
-
-
பிரேசிலில் சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட மோதலில் 60 பேர் உயிரிழந்துள்ளனர் பிரேசிலில் அமேசான் மாகாணத்தில் உள்ள மனாஸ் நகரில் சிறைச்சாலைக்குள் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட ஏற்பட்டுள்ள மோல்களில் 60 பேர்; கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர் எனதகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த சிறைச்சாலையில் போதை பொருள் விற்பனையாளர்கள் கைது செய்து அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இன்று திடீரென சிறைக் கைதிகளிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதல், பெரும் கலவரமாக மாறியதனையடுத்து கலவரத்தை கட்டுப்படுத்த சிறப்பு பாதுகாப்பு படையினர், கைதிகள்மீது தடியடி நடத்தியும், கண்ணீர்புகை குண்டுகளை வீசியும் நடவடிக்கை மேற்கொண்டனர். எனினும் ; இருதரப்பினரும் சரமாரியாக தாக்க…
-
- 2 replies
- 474 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், துருக்கியில் புத்தாண்டு கொண்டாடியவர்கள் மீதான தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றிருப்பது குறித்த செய்தி; அமெரிக்க அதிபராக பதவியேற்கும் ட்ரம்ப்பின் ஆட்சிக்காலம் எப்படி இருக்கும்? அமெரிக்க வாக்காளர்களின் கருத்துக்கள்; கியூபாவில் அதிகரிக்கும் ஆங்கில மோகத்தின் தாக்கம் உள்ளிட்ட பல செய்திகள் இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 299 views
-
-
“தேசிய கீதம் ஒருவருக்குள் உத்திரவாதமான தேசபக்த உணர்வையும் தேசிய உணர்வையும் புகட்டும். எனவே தேசிய கீதம் ஒலிக்கும் போது அதற்கு மரியாதையும் கவுரவத்தையும் கட்டாயம் வழங்க வேண்டும்” என்றது உச்சநீதிமன்றம். திரையரங்குகளில் கட்டாயமாக தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என உத்தரவிடக் கோரி போபாலைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பொறியாளர் ஒருவர் தொடுத்த பொதுநல வழக்கின் தீர்ப்பில் இவ்வாறு கூறியது உச்சநீதிமன்றம். திரையரங்குகளில் படம் துவங்குவதற்கு முன் தேசிய கீதம் ஒலிக்கச் செய்ய வேண்டுமென்றும், அது சமயம் திரையில் தேசியக் கொடி காட்டப்பட வேண்டுமென்றும், பார்வையாளர்கள் எழுந்து நின்று மரியாதை செய்ய வேண்டுமென்றும், வெளியிலிருப்பவர்கள் உள்ளே நுழைந்தோ அரங்கினுள் இருப்பவர்கள் வெளியேறியோ தேசபக்திக்கு இட…
-
- 2 replies
- 489 views
-
-
பிரான்ஸ் ஜனாதிபதி விஜயம் ; ஈராக்கில் கார் குண்டு வெடிப்பில் 32 பேர் மரணம் பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்ஸ்கான் ஹொலண்ட் உத்தியோக பூர்வ விஜயமாக ஈராக் தலைநகர் பாக்தாத் சென்றுள்ள நிலையில் அவ் நகருக்கருகே இன்று நிகழ்ந்த கார் குண்டு தாக்குதலில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். ஈராக் தலைநகர் பாக்தாத் அருகேயுள்ள சட்ர் நகரில் இன்றுகாலை கூலி வேலை செய்யும் சிலர் வேலைக்காக சாலையோரம் காத்திருந்தனர். அப்போது, அங்கு வெடிகுண்டுகளுடன் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார் வெடித்து சிதறியதில் 32 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். முன்னதாக, கடந்த சனிக்கிழமை பாக்தாத் நகரில் பிரபல சந்தை பகுதியில் நடத்தப்பட்ட இரட்டை குண்டுவெடிப்பில் 27 பேர் பலியானது குறிப்ப…
-
- 0 replies
- 303 views
-
-
புதுடில்லி: வெளிநாடு சென்ற இந்தியர்களுக்கும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற ரிசர்வ் வங்கி கால அவகாசம் அளித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கை: கடந்த நவம்பர் 9 முதல் டிசம்பர் 30 வரை வெளிநாடு சென்றிருந்த இந்தியர்கள், தங்களது பழைய ரூபாய் நோட்டுகளை 2017 மார்ச் 31ம் தேதி வரை மாற்றிக்கொள்ளலாம். இதே காலகட்டத்தில் வெளிநாட்டில் இருந்த வெளிநாடு வாழ் இந்தியர்கள், தங்களிடமுள்ள பழைய ரூபாய் நோட்டுகளை ஜூன் 30 வரை மாற்றிக்கொள்ளலாம். இந்த சலுகை பெமா விதிமுறைப்படி வழங்கப்படுகிறது. என தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.dinamalar.com/news_detail.asp?id=1681450
-
- 0 replies
- 462 views
-
-
ஜகார்தா அருகே கடல் பகுதியில் பயணிகள் கப்பல் தீப்பிடித்ததில், 20 பேர் உடல் கருகி இறந்தனர். 17-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்தோனேசியா தலைநகர் ஜகார்தாவில் மாரா ஆங்கி துறைமுகத்தில் இருந்து திடங் தீவுக்கு ஸரோ எக்ஸ்பிரஸ் பயணிகள் கப்பல் புறப்பட்டுச் சென்றது. புறப்பட்ட சற்று நேரத்தில் கப்பலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஃபைபர் பொருட்களால் வடிவமைக்கப்பட்ட கப்பிலின் பல்வேறு பகுதிகளுக்கு தீ பரவியது. எனினும், கப்பலின் இயக்கத்தில் எந்த பாதிப்பும் இல்லை. இதனால், கப்பல் மீண்டும் ஜகார்தாவுக்கு திருப்பப்பட்டது. பேரிடர் மேலாண்மைக் குழுவினர் விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு, பெரும்பாலான பயணிகளை உயிருடன் மீட்டனர். எனினும் கப்பலில் பயணம் செய்த 20 பேர் தீயில் …
-
- 0 replies
- 423 views
-
-
சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ராம்கோபால் யாதவ் அக்கட்சியிலிருந்து மீண்டும் நீக்கப்பட்டுள்ளார். ராம்கோபால் யாதவை கட்சியில் இருந்து ஆறு ஆண்டுகளுக்கு நீக்கும் அறிவிப்பை வெளியிட்ட சமாஜ்வாதி கட்சியின் தேசிய தலைவர் முலாயம் சிங் யாதவ், இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த சமாஜ்வாதி கட்சியின் தேசிய மாநாடு அரசியலமைப்பிற்கு விரோதமானது என்றும் தெரிவித்துள்ளார். இன்று நடந்த மாநாடு கட்சியின் கொள்கைகளுக்கு எதிரானது என்று தெரிவித்த முலாயம் சிங் யாதவ், இக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், சமாஜ்வாதி கட்சியின் தேசிய மாநாடு வரும் 5-ஆம் தேதியன்று (வியாழக்கிழமை) நடைபெற…
-
- 0 replies
- 304 views
-
-
ஐ.நா.வின் புதிய பொதுச் செயலாளராக அந்தோனியோ குத்தேரஸ் இன்று பொறுப் பேற்கிறார். தற்போதைய பொதுச் செயலாளர் பான் கி-மூன் நேற்று விடைபெற்றார். கடந்த 2007 ஜனவரி 1-ம் தேதி ஐ.நா. பொதுச்செயலாளராக பான் கி-மூன் பொறுப்பேற்றார். 10 ஆண்டுகள் ஐ.நா. சபையை வழிநடத்திய அவரின் பதவிக் காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதையொட்டி நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமை அலுவலகத்தில் நேற்று பிரிவு உபசார விழா நடைபெற்றது. இதில் பேசிய பான் கி-மூன், டிசம்பர் 31-ம் தேதி இரவுடன் எனது பொறுப்பு நிறைவடைகிறது. இதுவரை எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. புதிய பொதுச்செயலாளருடன் இணைந்து மக்கள் நலனுக்காக ஐ.நா. ஊழியர்கள் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஐ.நா.வின் புதிய பொதுச்செயலாளராக போர்ச்ச…
-
- 0 replies
- 441 views
-
-
அணுகுண்டு ஏவுகணையில் மேம்பாடு ; வட கொரிய அதிபரின் சர்ச்சை புத்தாண்டு உரை அணுகுண்டுகளை தாங்கிச்செல்லும் திறன் படைத்த தொலைதூர ஏவுகணைகளை சோதிக்கும் திறனை வட கொரியா நெருங்கிவிட்டதாக அந்நாட்டு அதிபர் கிம் ஜோங்-உன் தெரிவித்துள்ளார். வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் நாட்டு மக்கள்முன் தொலைக்காட்சியில் ஆற்றிய புத்தாண்டு உரை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளின் மேம்பாடு இறுதி கட்டத்தில் இருப்பதாக தனது புத்தாண்டு உரையின் போது கிம் குறிப்பிட்டார். கடந்தாண்டு வட கொரியா மேற்கொண்ட ஒரு மிகப்பெரிய அணு ஆயுத பரிசோதனை உள்பட மொத்தம் இரு பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளது. அணு ஆயுதங்களில் குறிப்பிடத்தக்க மேம்பாடுகளை வட கொரியா அடைந்துவிட்டதால் அத…
-
- 0 replies
- 261 views
-
-
122 ஊடகவியலாளர்களை பலியெடுத்த 2016 விடைபெற்றுச் சென்றது:- உலகம் முழுவதும் 2016ம் ஆண்டு 122 ஊடகவியலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் 93 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். மற்றவர்கள் விபத்துகள், இயற்கைச் சீற்றங்களில் சிக்கி உயிரிழந்தவர்கள் ஆவர். இவர்களில் இந்தியாவில் மட்டும் 5 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டனர். உலக தர வரிசையில் ஈராக்கிலேயு, அதிக அளவிலான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். உலக அளவில் 23 நாடுகளில் ஊடகவியலாளர்கள் கொலை, குண்டு வீச்சுத் தாக்குதல், போரின் போது நடந்த தாக்குதல் என குறி வைக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளதாக சர்வதேச பத்திரிகையாளர்கள் சம்மேளணம் தனது ஆண்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது. குறிப…
-
- 0 replies
- 341 views
-
-
Many wounded' in Istanbul nightclub attack Many people have been wounded in an attack on a nightclub in Istanbul, Turkey's NTV reports. Footage appears to show a number of ambulances and police vehicles outside the Reina nightclub, in the Besiktas area of the city. NTV says two attackers were involved, with CNN Turk reported they were dressed in Santa costumes. Istanbul had been on high alert for any terror attacks, with some 17,000 police officers on duty in the city. There were reportedly several hundred people in the nightclub at the time. http://www.bbc.com/news/world-europe-38481521
-
- 8 replies
- 822 views
-
-
பாகிஸ்தானின் 7 நிறுவனங்கள் மீது பொருளாதார தடை: அமெரிக்கா அதிரடி பாகிஸ்தானின் ஏவுகணை திட்டத்தில் தொடர்புள்ள 7 நிறுவனங்கள் மீது அமெரிக்கா அதிரடியாக பொருளாதார தடை விதித்துள்ளது. வாஷிங்டன்: பாகிஸ்தான் ஏவுகணை திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இருப்பினும் அந்த நாடு, அணு ஆயுத திட்டங்களிலும் சரி, ஏவுகணை திட்டங்களிலும் சரி, தவறாக எதுவும் செய்யவில்லை என கூறி வருகிறது. இந்த நிலையில் சற்றும் எதிர்பாராத வகையில் அந்த நாட்டின் ஏவுகணை திட்டங்களில் தொடர்பு கொண்டிருப்பதாக கூறி, 7 நிறுவனங்கள் மீது அமெரிக்காவில் ஆட்சி அதிகாரத்தில் உள்ள ஒபாமா அரசு அதிரடிய…
-
- 1 reply
- 388 views
-
-
பாரிஸில் மொசாட் பெண் உளவாளிகள் | பாகம்-1
-
- 7 replies
- 908 views
-
-
கண்கவர் வாணவேடிக்கையுடன் 2017 புத்தாண்டை வரவேற்ற ஆஸ்திரேலியா உலக நாடுகளில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து முதன்முதலில் புத்தாண்டை வரவேற்பது வழக்கம். அதன்படி 2017 புத்தாண்டை கண்கவர் வாணவேடிக்கையுடன் வரவேற்றுள்ளனர். 2016-ம் ஆண்டு இன்றுடன் முடிவடைகிறது. இதனால் உலக மக்கள் அனைவரும் 2017-ஐ மகிழ்ச்சியுடன் வரவேற்க தயாராக இருக்கிறார்கள். அந்தந்த நாட்டு மக்கள் அவர்களின் தலைநகரில் கண்கவர் வாணவேடிக்கையுடன் புத்தாண்டை வரவேற்பது வழக்கம். இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணியாகும்போது ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் சரியாக நள்ளிரவு …
-
- 0 replies
- 279 views
-
-
மூடப்பட்டது சார்ஜா விமான நிலையம் ஐக்கிய அரபு இராச்சியத்தின் சார்ஜா விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. சார்ஜாவில் நிலவிவரும் அதிக பனிமூட்டத்தின் காராணமாக விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் இலங்கையிலிருந்து சார்ஜா நோக்கி செல்லவுள்ள பயணிகள் கடும் அசௌகரியத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/14946
-
- 0 replies
- 334 views
-