உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26698 topics in this forum
-
இன்றைய நிகழ்ச்சியில், * லிபியா நிலைகுலைந்ததற்கு பிரிட்டன் மற்றும் பிரெஞ்சு தலையீடே காரணம் என்று குற்றச்சாட்டு; ஐஎஸ் அமைப்பின் வளர்ச்சிக்கும் அதுவே காரணம் என்கிறது பிரிட்டன் நாடாளுமன்ற நிலைக்குழு. * அண்டவெளியை அளந்து பார்க்கும் அபூர்வ முயற்சி; நூறுகோடிக்கும் அதிகமான நட்சத்திரங்களை கண்டுபிடித்திருக்கும் அறிவியல் சாதனை. * அவசரப்பட்டால் அழிவு அதிகரிக்கும்; நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியன்மார் பகோடாக்களை புனரமைப்பதில் நிதானம் தேவையென நிபுணர்கள் எச்சரிக்கை.
-
- 0 replies
- 575 views
-
-
9/11 தாக்குதல் வைபவத்தில் மயங்கி விழுந்தவர் ஹிலாரி அல்ல ; சமூக வலைத்தளத்தில் பரபரப்பு அமெரிக்க ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஹிலாரி கிளின்டன் கடந்த ஞாயிற்றுக்கிழமை நியூயோர்க் நகரில் இடம்பெற்ற 9/11 தாக்குதல் தின வைபவத்தில் மயங்கி விழுந்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த வைபவத்தில் கலந்து கொண்டவர் ஹிலாரி கிளின்டன் அல்ல எனவும் அவரைப் போன்ற உருவத் தோற்றத்தைக் கொண்ட பிறிதொருவர் என அவரது எதிர்ப்பாளர்கள் விநோதமான உரிமைக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். நுரையீரல் அழற்சியால் பாதிக்கப்பட்ட ஹிலாரி கிளின்டனுக்கு ஓய்வெடுக்க மருத்துவர்கள் சிபாரிசு செய்துள்ள நிலையில் அவர் தன்னைப் போன்ற ஒருவரை தனக்குப் பதிலாக குறிப்பிட்ட ஞாபகார்த்த த…
-
- 0 replies
- 561 views
-
-
அணுகுண்டுகளை வீசும் திறன் கொண்ட அமெரிக்க போர் விமானங்கள் தென்கொரியாவுக்கு அனுப்பப்பட்டன: வடகொரியாவுக்கு எச்சரிக்கை அமெரிக்க விமானப் படையின் பி-1பி ரக போர் விமானம். (கோப்புப் படம்) அணுகுண்டுகளை வீசும் திறன் கொண்ட பி-1பி ரக அமெரிக்க போர் விமானங்கள் நேற்று தென் கொரியாவுக்கு அனுப்பப்பட் டன. இதன்மூலம் வடகொரியா வுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 9-ம் தேதி 5-வது முறையாக வடகொரியா அணுகுண்டு சோதனையை நடத்தியது. இது ஹிரோசிமாவில் வீசப்பட்ட அணுகுண்டை விட சக்தி வாய்ந்ததாகும். அடுத்ததாக 6-வது அணுகுண்டு சோதனையையும் நடத்த வடகொரியா தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அணுஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட ஏவுக…
-
- 0 replies
- 405 views
-
-
அணு ஆயுத சோதனை வெற்றி: வடகொரியா அறிவிப்பு வடகொரியா, தனது ஐந்தாவது, மிகப்பெரிய அணு அயுத சோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது. அணு அயுத சோதனை நடத்திய இடத்தில் 5.3 புள்ளிக் அளவுக்கு நில அதிர்வுகள் உணரப்பட்ட நிலையில், இதற்கு முன்பு நடத்திய சோதனைகளைவிட இது இரண்டு மடங்கு சக்தி வாய்ந்ததாக இருக்கக் கூடும் என தென் கொரிய அதிகாரிகள் கூறுகின்றனர். புதிதாக தயாரிக்கப்பட்ட அணு ஆயுதம் சோதித்துப் பார்க்கப்பட்டதாகவும், இதன் மூலம் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் நடுத்தர ரக ஏவுகணையில் அணு ஆயுதத்தை செலுத்தும் திறனை அடைந்திருப்பதாகவும் வடகொரியா கூறுகிறது. அதே நேரத்தில், வடகொரியா சோதித்தது ஹைட்ரஜன் குண்டா என்பது குறித்து தென்கொரிய அதிகாரிகள்…
-
- 3 replies
- 664 views
-
-
சுதந்திர நடமாட்டத்துக்கு பிரிட்டன் அனுமதித்தால் மட்டுமே பொது சந்தையில் இடம் -EU திட்டவட்டம்: ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுசந்தையில் தொடர்ந்து நீடிப்பதற்கு பிரிட்டன் ஒன்றியத்தின் குடிமக்கள் கட்டுப்பாடுகள் எதுவுமின்றி சுதந்திரமாக நடமாடுவதற்கு அனுமதிக்க வேணடும் என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் குடிமக்கள் பிரிட்டனில் குடியேறுவதற்கு தடைவிதிக்கப்பட்டால் ஒன்றியத்தின் தனி சந்தையில் பிரிட்டனுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என்று ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் விலகுவது தொடர்பான பேச்சுவார்த்தையை ஒன்றியத்தின் சார்பாக முன்னெடுப்பவரும் , பெல்ஜியத்தின் முன்னாள் பிரதமருமான வெர்கொவ்ஸராட் தெரிவித்துள்ளார். …
-
- 1 reply
- 417 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * அமலுக்கு வந்தது சிரிய போர்நிறுத்தம்; ஆனால் ஏற்கனவே நடந்திருக்கும் அழிவின் அளவென்ன? அதிகபட்ச தாக்குதலுக்குள்ளான அலெப்போ நகரிலிருந்து பிபிசியின் பிரத்யேக செய்திகள். * திபெத் ஆறுகளின் வெள்ள அளவு குறித்து, சீனா ரகசியம் காப்பதாக நேபாளம் புகார்; இந்தியா, வங்கதேசமும் வெள்ளத்தால் பாதிக்கப்படலாமென கூடுதல் கவலைகள். * ஒன்று போல் தோன்றும்—ஆனால் இவை வெவ்வேறானவை; ஒட்டகச் சிவங்கிகள் ஓரினமல்ல—நான்கு வெவ்வேறு இனங்கள் என்கிறது ஆய்வின் முடிவு
-
- 0 replies
- 357 views
-
-
ஐ.எஸ். அமைப்பின் சார்பில் ஜெர்மனியில் தாக்குதல் திட்டம்: 3 சிரியா நாட்டு நபர்கள் சந்தேகத்தின் பேரில் கைது வடக்கு ஜெர்மனியில் பல வீடுகளில் தீவிர சோதனை நடத்திய 200 போலிஸ் அதிகாரிகள், இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் அமைப்பிற்காக தாக்குதல் நடத்த தயாரிப்பு பணிகளை மேற்கொண்டதாக, புலம் பெயர்ந்த மூன்று சிரியா நாட்டு பிரஜைகளை, சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். சமீபமாக, தெற்கு ஜெர்மனியில் தொடர் தாக்குதலில் 10 நபர்கள் இறந்தனர். அந்த சம்பவம் நடந்த இரண்டு மாதங்களுக்குள், இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசாங்க வழக்கறிஞர்கள் , கைதான இளைஞர்கள் கடந்த ஆண்டு ஜெர்மனிக்கு வந்ததாக தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட நபர்கள் ஐரோப்பாவிற்கு பயணம் …
-
- 0 replies
- 333 views
-
-
தமிழில் நாலு வார்த்தை சேர்ந்தாற் போல பேசத் தெரியாத, சுப்ரமணிய சுவாமிக்கு, தமிழ் ரத்னா விருது! நியூயார்க்: தமிழில் ஒரு வரியைக் கூட சேர்ந்தாற் போல பேசத் தெரியாத பாஜக முக்கியத் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி அமெரிக்க தமிழ்ச் சங்கம் தமிழ் ரத்னா விருது வழங்கியுள்ளது. பாஜகவின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி அமெரிக்காவில் சுற்றுப்பயணத்தில் உள்ளார். நியூயார்க் நகரில், அமெரிக்க தமிழ்ச் சங்கம் சார்பில் நடத்திய விழா ஒன்றில் சுப்பிரமணியன் சுவாமிக்கு தமிழ் ரத்னா விருது வழங்கப்பட்டது. ஊழலுக்கு எதிராக செயல்பட்டு வருவதற்கும், இந்திய ஆட்சி முறையில் ஒளிவு மறைவற்ற வெளிப்படைத்தன்மை தேவை என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருவதற்கும் சுப்பிரமணியன் சுவாமிக்கு தமிழ் ரத்னா விருது வழ…
-
- 2 replies
- 675 views
-
-
தற்போது நான் சிறப்பாக உணர்கிறேன்: ஹிலரி கிளிண்டன் முக்கியத்துவம் வாய்ந்த செப்டம்பர் 11 தாக்குதல் நினைவு நிகழ்ச்சியின் போது, சுகவீனம் அடைந்த அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளரான ஹிலரி கிளிண்டன், தற்போது தனது உடல் நலன் மேம்பாடு அடைந்துள்ளது என்று உணர்வதாக தொலைபேசியின் வாயிலாக அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். கோப்பு படம் தனக்கு நிமோனியா இருப்பதாக கண்டறியப்பட்ட தகவலை, முதலில் வெளியிடாததற்கு காரணம் அதனை தான் ஒரு தீவிர பிரச்சனையாக கருதாதது தான் என்று அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ள ஜனநாயக கட்சியின் வேட்பாளரான ஹிலரி கிளிண்டன் கூறியுள்ளார். நிமோனியா என்ற நுரையீரல் தொற்று இருப்பதாக, கடந்த வெள்ளிக்கிழமையன்று …
-
- 0 replies
- 375 views
-
-
மலேஷிய தாக்குதல் விவகாரம்: புதிய தகவல்கள் கசிந்துள்ளன மலேஷியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் சகீப் அன்சாரி மற்றும் அந்நாட்டிலுள்ள பௌத்த விகாரையின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களுடனோ, அல்லது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, அந்நாட்டில் தெரிவிக்கப்பட்ட எதிர்ப்பு சம்பவத்துடனோ, இலங்கையர்கள் எவரும் தொடர்புப்படவில்லை என்று, தகவல்கள் வெளியாகியுள்ளன. மலேஷியப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்துள்ள தகவல்களின் பிரகாரம், அவர்கள் அனைவரும், தென்னிந்தியாவிலிருந்து மலேஷியாவுக்குச் சென்றவர்கள் என்பது உறுதியாகியுள்ளது. மேற்படி குழுவினர், இன்னமும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான நம்பிக்கையில் இருப்பவர்கள் என்றும் மலேஷியாவின் பீனேக…
-
- 0 replies
- 447 views
-
-
ஃபுளோரிடாவில் மசூதி தீ வைக்கப்பட்டதா? ஓர்லாண்டோ இரவு கேளிக்கையகத்தில் தாக்குதல் நடத்திய துப்பாக்கிதாரி சென்று வந்த மசூதி மீது, தீ வைத்து தாக்குதல் நடத்தப்பட்டிருக்கும் சாத்தியக்கூறு பற்றி அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தின் ஆட்சியாளர்கள் புலனாய்வு மேற்கொண்டு வருகின்றனர். திங்கள் கிழமை அதிகாலையில் தீ விபத்து ஏற்படுவதற்கு முன்னால் ஃபோர்ட் பியர்ஸில் இருக்கும் இந்த இஸ்லாமிய மையத்தை யாரோ நெருங்கி வருவதை கண்காணிப்பு காணொளி பதிவு காட்டுவதாக உள்ளூர் புனித லூசி வட்டத்தின் ஷெரீப் அலுவலகம் கூறியுள்ளது. ஜூன் 12 ஆம் நாள் பல்ஸ் இரவு கேளிக்கையகத்தில் ஒமர் மாத்தீன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 49 பேர் இறந்தனர். 50-க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். http://www.bbc.com/…
-
- 0 replies
- 400 views
-
-
பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டேவிட் கமறூன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் துறக்கிறார். பிரித்தானியாவின் முன்னாள் பிரதமரான பழமைவாத கட்சியின் டேவிட் கமறூன் ஒக்ஸ்போர்ட்ஷயர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் துறக்கப் போவதாக அறிவித்துள்ளார் ஐரோப்பிய ஒன்றியத்தில் ஐக்கிய இராச்சியம் நீடிப்பதா அல்லது விலகுவதா என்ற கருத்துக்கணிப்பை கடந்த ஜூன் மாதம் நடத்திய டேவிட் கமறூன் நீடிக்க வேண்டும் என்ற முடிவை எட்டமுடியாத நிலையில் தனது பிரதமர் பதவியை துறந்திருந்தார். அதனையடுத்து புதிய பிரதமராக தற்போது பதவி ஏற்றிருக்கும் திரேசா மேயின் அரசியல் நடவடிக்கைளுக்கு இடையூறாக இருக்க விரும்பாத காரணத்தாலேயே நாடாளுமன்ற உறுப்பினர் பதவிய…
-
- 0 replies
- 370 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * தனது கலிபோர்னிய பிரச்சாரத்தை ரத்து செய்தார் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஹிலரி கிளிண்டன்; நிமோனியா பாதித்திருப்பதாக மருத்துவர் அறிவிப்பு. * கண் அறுவை சிகிச்சைக்கு ரோபோட்டை பயன்படுத்திய ஆக்ஸ்போர்ட் ஆய்வாளர்கள்; கண் அறுவை சிகிச்சையில் உலகின் முதலாவது ரோபோட் தொழில்நுட்ப புரட்சியை நேரில் படம் பிடித்தது பிபிசி. * மட்டக்களப்பில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப்போட்டிகள்; போரால் பாதிக்கப்பட்டவர்களின் புனர்வாழ்வுக்கு புதிய தொடக்கமா?
-
- 0 replies
- 510 views
-
-
பரிஸ் தாக்குதலை திட்டமிட்ட 15 வயதுச் சிறுவன் கைது உடனடியான வன்முறை நடவடிக்கையை திட்டமிட்டதாக சந்தேகிக்கப்பட்ட 15 வயதுச் சிறுவன், பிரான்ஸ் தலைநகர் பரிஸில் கைது செய்யப்பட்டதாக நீதி தகவல் மூலங்கள் இரண்டு தெரிவித்துள்ளன. இது, கடந்த ஒரு வாரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக் குழுவுடன் தொடர்புடைய இரண்டாவது தாக்குதல் திட்டமாகும். எரிவாயு உருளைகள் மற்றும் டீசல் கொள்கலன்களுடன் நோற்றே டாமே கதிட்றல் பகுதியில், ஞாயிற்றுக்கிழமை (04) கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக் குழுவின் வழிகாட்டலில் பரிஸ் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்படவிருந்த தாக்குதல் திட்டம் கண்டுபிடிக்கப்பட்டிருந்ததுடன், பெண்கள் நா…
-
- 0 replies
- 419 views
-
-
அமெரிக்காவில் அமைதிப் பேரணியில் துப்பாக்கிச்சூடு: 6 பேர் காயம் அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தின் பர்மிங்காம் நகரில் பொது வீட்டுரிமை சமூகம் நடத்திய அமைதி பேரணியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் காயமடைந்தனர். அவர்களில் ஒருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து பர்மிங்காம் மாகாண போலீஸ் செய்தி தொடர்பாளர் ப்ரையின் ஷில்டன் கூறும்போது "இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு 8.25 மணியளவில் நிகழ்ந்துள்ளது. சுடப்பட்ட ஆறு பேரும் பேரணியை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த அப்பாவி பொது மக்கள். இந்த துப்பாக்கிச் சூட்டை நிகழ்த்தியது யார் என்று இன்னும் அறியப்படவில்லை. விசாரணை தீவிரமாக நடைபெற்று …
-
- 0 replies
- 375 views
-
-
அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஹிலரி கிளிண்டன் நுரையீரல் வீக்கத்தால் அவதிப்படுவதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். பொது நிகழ்ச்சி ஒன்றில் உடல்நலமின்றி அவதிப்பட்டதை அடுத்து, ஹிலரியின் நோய் கண்டறியப்பட்டுள்ளது என்றும், அவர் ஓய்வெடுக்க அறிவுறுத்தப் பட்டிருப்பதாகவும் அவருடைய மருத்துவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதனால், தேர்தல் பரப்புரைக்காக கலி.போர்னியா செல்வதை அவர் ரத்து செய்திருக்கிறார். ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 11 தாக்குதல் நினைவு நிகழ்ச்சியிலிருந்து சுகவீனம் காரணமாக அவர் முன்னதாகவே செல்ல வேண்டியதாயிற்று. கால் மூட்டு பிரச்சனையால், ஹிலரி காருக்குள் ஏறுவதற்கு உதவி செய்யப்படும் காணொளி பதிவு இணையத்தில் பிரசுரமானது. பின்னர், பொது மக்களிடைய ம…
-
- 0 replies
- 358 views
-
-
சீனாவில் 20,000 கி.மீ. புல்லட் ரயில் பாதை: உலகிலேயே மிகவும் நீளமானது சீனாவில் பயன்பாட்டில் உள்ள புல்லட் ரயில்கள் | கோப்பு படம்: ராய்ட்டர்ஸ் உலகிலேயே நீளமான அதிவேக ரயில் (புல்லட்) பாதைகளைக் கொண்ட நாடாக சீனா உருவெடுத் துள்ளது. அந்நாட்டில் உள்ள புல்லட் ரயில் பாதையின் நீளம் 20 ஆயிரம் கிலோ மீட்டரைத் தாண்டியது நாட்டின் மத்திய பகுதியில் உள்ள ஹெனான் மாகாணத்தின் ஜெங்சூ நகரையும் கிழக்கு பகுதி யில் உள்ள ஜியாங்சு மாகாணத்தின் சுசூ நகரையும் இணைக்கும் வகையில் புதிய பாதை அமைக்கப்பட்டது. இது நேற்று பயன்பாட்டுக்கு வந்தது. 360 கி.மீ. நீளம் கொண்ட இந்த பாதை, மிக முக்கியமான வடக்கு-தெற்கு பாதைகளை இணைக் கிறது. இதன்மூலம் கிழக்கு மற…
-
- 1 reply
- 655 views
-
-
மலேஷியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார் மீது தாக்குதல் 2016-09-04 20:39:41 மலேஷியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார் மீது கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று மாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத் தாக்குதல் காரணமாக தலையில் பலத்த காயமடைந்த அவர் உடனடியாக கோலாலம்பூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இத் தாக்குதலில் மலேஷியாவிலுள்ள இலங்கை தூதரகத்தின் மற்றொரு சிரேஷ்ட அதிகாரியும் காயமடைந்துள்ளார். இலங்கை வெளிவிவகார அமைச்சு இத்தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ளதுடன் உடனடியாக விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவு…
-
- 19 replies
- 1.4k views
-
-
வெற்றி நாள் கொண்டாட்ட முத்தப் புகைப்பட பெண் மரணம் இரண்டாம் உலகப் போரின் முடிவை குறிக்கின்ற ஓர் அடையாள முக்கியத்துவம் வாய்ந்த புகைப்படத்தில் மாலுமி ஒருவரால் முத்தமிடப்பட்ட பெண் தன்னுடைய 92-வது வயதில் இறந்துள்ளார். நுரையீரல் வீக்கத்தால் துன்புற்ற கிரிட்டா சிம்மர் ஃபிரைடுமேன் வெர்ஜீனியாவின் ரிச்மண்டிலுள்ள ஒரு மருத்துவமனையில் இறந்துவிட்டதாக அவருடைய மகன் ஜோசுவா ஃபிரைடுமேன் கூறியிருக்கிறார். ஃபிரைடுமேன் 21 வயதில் பல் மருத்துவ உதவியாளராக பணிபுரிந்தபோது, 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் நாள் நியூயார்க்கிலுள்ள டைம்ஸ் சதுக்கத்தில் வைத்து ஜார்ஜ் மென்டோசா என்பவர் அவரை அள்ளி அணைத்து முத்தம் கொடுத்தார். அமெரிக்காவில் நடைபெற்ற ஜப்பான் மீதான வெற்றியை அ…
-
- 0 replies
- 655 views
-
-
கொரிய தீபகற்பத்தில் பதட்டம்: வட கொரிய தலைநகரை அழித்துவிட திட்டமா? மேற்கொள்ளப்பட இருக்கும் அணு குண்டு தாக்குதலை குறிப்புணர்த்தி வட கொரியாவின் தலைநகரை முழுமையாக அழித்து விடுகின்ற திட்டம் ஒன்றை தென் கொரிய அதிகாரிகள் வெளிப்படுத்தியிருக்கும் கொரிய தீபகற்பத்தில் விவாதங்கள் அதிகரித்துள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த திட்டத்தின் விவரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தென் கொரிய அரசடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள யான் ஹப் செய்தி நிறுவனம் கூறியிருக்கிறது. கண்டம் விட்டு கண்டம் பாயும் வழக்கமான ஏவுகணைகள் மூலமும், கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும் ஷெல் குண்டுகள் மூலமும் பியாங்யாங்கிலுள்ள அனைத்து மாவட்டங்களும் அழிக்கப்படுவதை இந்த திட்டம் விவரிக்கிறது. வ…
-
- 0 replies
- 661 views
-
-
சிட்னியில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தியதாக ஒருவர் கைது சிட்னியின் தென் மேற்கு பகுதியில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தியதாகவும், கொலை செய்ய முயற்சித்ததாவும் 22 வயதான ஒருவர் மீது ஆஸ்திரேலிய காவல் துறையினர் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்த நபர் இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழுவினரால் தூண்டப்பட்டவர் என்று அவர்கள் கூறுகின்றனர். புறநகர் பூங்கா ஒன்றில் வைத்து 59 வயதான ஒருவரை இந்த நபர் பல முறை கத்தியால் குத்தியதாகவும், கைது செய்ய சென்ற காவல் துறையினரை தாக்க முயற்சித்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நீதிமன்றத்தில் நிறுத்தப்பட இருக்கும் இந்த குற்றம் சாட்டப்படுபவரிடம் இருந்து பெரியதொரு கத்தியை …
-
- 0 replies
- 452 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்தின் குடியேற்ற சட்ட விதிகளை திருத்த திட்டம். 1 ஐரோப்பிய ஒன்றியத்தில் அதிகரிக்கும் குடியேறிகளின் நெருக்கடியை கட்டுப்படுத்துவதற்கு அடைக்கலக் கோரிக்கை தொடர்பான சட்ட விதிகளில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு பிரதான தெற்கு ஐரோப்பிய நாடுகள் இணக்கம் தெரிவித்துள்ளன. ஐரோப்பிய நாடுகளுக்கடையேயான அடைக்கலம் கோருவது தொடர்பான சட்ட விதிகளை மாற்றியமைப்பது ஒன்றியத்தின் முன்னரங்க நாடுகள் குடியேற்றங்களை தடுத்து நிறுத்துவதற்கு அவசியமான நிபுணத்துவ ஆலோசனையை பெறுதல் தந்திரோபாய நடவடிக்கைகளுக்கான முதலீட்டை இரட்டிப்பாக்குதல் ஆகிய அம்சங்களில் இணங்குவதாக பிரான்ஸ் இத்தாலி ஸ்பெயின் கிறீஸ் போத்துக்கல் மோல்ற்றா மற்றும் சைப்பிரஸ் ஆகிய நாடுகள் …
-
- 0 replies
- 410 views
-
-
இட்லிப், அலெப்போ நகரங்களில் விமானத் தாக்குதல்கள், 100-க்கு அதிகமானோர் பலி சிரியாவில் திட்டமிடப்பட்டுள்ள போர்நிறுத்தத்திற்கு முன்னதாக, போரிடும் பல தரப்பினரும் தங்களுடைய நிலைகளை பலப்படுத்தி கொள்வதற்காக, சிரியாவின் இட்லிப் மற்றும் அலெப்போ நகரங்களில் நடத்தப்பட்ட விமானத் தாக்குதல்களில் 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தரைமட்டமாகியுள்ள கட்டிடங்களில் இருந்து எழுகின்ற புகை மேகங்களையும், இடிபாடுகள் நிறைந்திருக்கும் தெருக்களில் காயமுற்றோரை மக்கள் தூக்கி செல்வதையும் இட்லிப் நகரில் எடுக்கப்பட்ட காணொளி பதிவுகள் காட்டுகின்றன. ரஷியாவும் அமெரிக்காவும் உடன்பட்டுள்ள போர்நிறுத்தம் திங்கள்கிழமை முதல் அமலாகும். ஜெனிவாவி…
-
- 0 replies
- 317 views
-
-
தான்சானியாவில் பூமியதிர்ச்சி ; 13 பேர் பலி ; 200 பேர் காயம் தான்சானியாவில் ஏற்பட்ட பூமியதிர்ச்சியில் 13 பேர் உயிரிழந்தனர் என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வடமேற்கு தான்சானியாவில் ஏற்பட்ட குறித்த பூமியதிர்ச்சி 5.7 ரிச்டராக பதிவாகியுள்ளது. குறித்த பூமியதிர்ச்சியினால் 200 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. காயம் அடைந்த 200 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. குறித்த பூமியதிர்ச்சியனது ருவாண்டா, உகாண்டா மற்றும் கெ…
-
- 0 replies
- 457 views
-
-
அமெரிக்க அரசின் இணையதளங்களில் ஊடுருவியதில் ரஷியாவுக்கு தொடர்பு: ஸ்நோடன் எட்வர்ட் ஸ்நோடன் நாடு கடந்து ரஷியாவில் வாழ்ந்து வரும் அமெரிக்காவின் முக்கிய ரகசியங்களை பொதுவெளியில் வெளியிட்டவரான எட்வர்ட் ஸ்நோடன், ரஷியாவின் மனித உரிமைகள் பதிவுகள் மீது அரிய தாக்குதல் ஒன்றை தொடுத்துள்ளார். மேலும், சமீபத்திய கணிணி ஹேக்கிங் மோசடியில் ரஷியா ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஃபைனான்ஷியல் டைம்ஸ் நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், முற்றிலும் தேவையற்ற, அதிக செலவு பிடிக்ககூடிய மற்றும் சேதங்களை உண்டாக்கும் விவகாரங்களில் தனிநபர் மற்றும் கூட்டு உரிமைகளில் வரம்பு மீறி ரஷியா செயல்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அமெரிக்கா அரசாங்கத்தின் இரு பெரிய இணையதளங்கள் ச…
-
- 0 replies
- 326 views
-