உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26698 topics in this forum
-
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உடல்நலக்குறைவு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவைத் தொகுதியான உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசியில் சோனியா காந்தி கடந்த 2ஆம் திகதி பிரசாரம் செய்தார். அப்போது அவருக்கு இடது தோள் பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, வாரணாசி பிரசாரத்தை பாதியிலேயே ரத்து செய்துவிட்டு தில்லிக்கு சோனியா காந்தி திரும்பினார். டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் முதலில் அவர் அனுமதிக்கப்பட்டார். பிறகு அங்கிருந்து சர் கங்கா ராம் மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். அந்த மருத்துவமனையில் சோனியா காந்திக்கு இடது தோளில் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். அதையடுத்து, மருத்துவமனையில் அவர் தொடர்…
-
- 0 replies
- 336 views
-
-
மராட்டிய மாநில கவர்னர் மாளிகையில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பாதாள அறை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மராட்டிய மாநில கவர்னர் மாளிகை மும்பை மலபார் ஹில் பகுதியில் உள்ளது. இங்கு ஆங்கிலேயர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பாதாள அறை இருப்பதாக மூத்த குடிமக்கள் சிலர் கவர்னர் வித்யாசாகர் ராவிடம் தெரிவித்து இருந்தனர். இதனை கண்டு பிடிக்குமாறு அதிகாரிகளுக்கு கவர்னர் உத்தரவிட்டார். இந்தநிலையில் கடந்த 12–ந் தேதி, கவர்னர் மாளிகையின் கிழக்குப்புறம் இருந்த சுவரை பொதுப்பணித்துறை ஊழியர்கள் இடித்து அகற்றினர். அப்போது, அங்கு 20 அடி உயர கதவு இருந்தது. அதை திறந்து உள்ளே சென்றபோது சரிவு பாதை அமைக்கப்பட்டு அது பாதாளத்துக்குள் சென்றது. அதற்குள் இறங்கி பார்த்தபோது, 150 மீட்டர் நீளத்தில்…
-
- 0 replies
- 537 views
-
-
பறக்கும் விமானத்தில் பெண்ணுக்கு பிரசவம் ஆனதால், அந்த விமானம் ஐதராபாத் நோக்கி திருப்பி விடப்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஐதராபாத்: துபாயில் இருந்து பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா நகரம் நோக்கி கடந்த 14-ம் தேதி சிபு பசிபிக் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டு வந்துகொண்டிருந்தது. விமானம் இந்திய வான்பகுதியை நெருங்கியபோது, விமானத்தில் பயணம் செய்த பிலிப்பைன்ஸ் நாட்டின் நிறைமாத கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால், தாயின் உடல்நிலை மோசமாக இருந்ததால் அவருக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டது. உடனடியாக அருகில் உள்ள ஐதராபாத் விமான நிலையத்தில் விமானத்தை அவசரமாக தரையிறக்க விமானி அனுமதி கேட்டுள்ளார். அனுமதி கிடை…
-
- 1 reply
- 375 views
-
-
துருக்கி அரசைக் கைப்பற்ற கடந்த மாதம் ராணுவத்தில் ஒரு பிரிவு முயற்சிசெய்தது. மக்களின் ஆதரவுடன் களத்திலிறங்கி ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியைத் தோற்கடித்தார் அதிபர் எர்டோகன். இதையடுத்து ஆட்சிக் கவிழ்ப்புக்கு துணைபோனவர்கள் தேடித் தேடி கைது செய்யப்பட்டனர். இதனால் துருக்கி சிறைகள் நிரம்பிவழிந்தன. இந்நிலையில் இதனைச் சமாளிக்க நிபந்தனையின்பேரில் 38 ஆயிரம் சிறைக் கைதிகள் துருக்கி சிறைகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். நன்னடத்தையுடையவர்கள், இரண்டு வருட கால சிறைத் தண்டனையுடையுவர்களே பெரும்பாலும் விடுவிக்கப்பட்டுள்ளனர். மாறாக கொலைக் குற்றவாளிகள், பாலியல் குற்றம்புரிந்தோர், ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டோருக்கு இந்த சலுகை அளிக்கப்படவில்லை. துருக்கி நீதித்துறை மந்திரி…
-
- 0 replies
- 503 views
-
-
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு, கடந்த மார்ச் மாதம் யமுனை நதிக்கரையில், 'உலகக் கலாசாரத் திருவிழா' என்ற 3 நாட்கள் நிகழ்ச்சியை நடத்தியது. "இது யமுனை ஆற்றங்கரையை மாசுபடுத்தும் செயல்" என அப்போதே, எதிர்ப்பு தெரிவித்தது தேசிய பசுமைத் தீர்ப்பாயம். இதை ஆராய மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் செயலாளர் சசி சேகர் தலைமையில், 7 பேர் கொண்ட குழுவையும் அமைத்திருந்தது. தற்போது இந்தக் குழு, நிகழ்ச்சி நடந்த இடத்தை ஆராய்ந்து தந்துள்ள அறிக்கைதான் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் மத்தியில், பெரும் அதிர்ச்சியைக் கிளப்பியிருக்கிறது. "நிகழ்ச்சி நடந்த யமுனையின் மொத்த நதிக்கரையும், முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. சேதம் என்பது சிறிய அளவில் கிடையாது. அந்த இடத்தில் இருந்த தாவரங்களான, மரங்கள், ச…
-
- 0 replies
- 554 views
-
-
மாஸ்கோ, சிரியாவில் முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ள ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பிற்கு அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட சில உலக வல்லரசுகள் தாக்குதல் முன்னெடுத்து வருகின்றன. அந்த வகையில், ஐ.எஸ் அமைப்பினர் மீது தாக்குதல் நடத்துவதற்காக ஈரானில் உள்ள விமான தளத்தில் இருந்து ரஷ்யாவின் 16 Tu-22M3, su-34 உள்ளிட்ட போர் விமானங்களை கிளம்பிச்சென்றது. இந்த விமானமானது, ஐ.எஸ் அமைப்பினர் மற்றும் ஜபத் அல் நுசாரா பயங்கரவாத குழுவினர் உள்ள எலோப்பா மாகாணத்தில் முழு வீச்சில் தாக்குதல் நடத்தியது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவலை ரஷ்யாவின் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. http://www.dailythanthi.com/News/World/20…
-
- 0 replies
- 583 views
-
-
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது, அங்கு மக்கள் வீடுகளை இழந்து பல்வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்துள்ளனர். இதுபோன்ற கனமழை 500 ஆண்டுகளுக்கு ஒருமுறை பெய்யும் என்றும் இதனால் பேரிழப்புகள் ஏற்படும் எனவும் தேசிய வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை விடுத்திருந்தது. கடும் மழையின் காரணமாக வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். இதில் 12,000 பேர் பாதுகாப்பாக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த வெள்ளத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அம்மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார் வெள்ளத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வீட்டில் இருக்கும் கனமான பெட்டிகள் கூட அடித்துசெல்லப்பட்டு சா…
-
- 0 replies
- 331 views
-
-
ஈராக் சிரியாவின் சிலபகுதிகளை கைப்பற்றி இஸ்லாமிய நாடாக அறிவித்துள்ள ஐஎஸ் அமைப்பினர் தங்களிடம் பிடிபடும் கைதிகளை பாராங்கற்களை வைத்து நசுக்கிக் கொன்று வந்தனர். தற்போது கொதிக்கும் தாரில் கைதிகளை தூக்கிப் போட்டுக் கொல்லுவதாக் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் மொசூல் நகரில் கொதித்துக் கொண்டிருக்கும் மிகப்பெரிய தார் டேங்கில் 6 கைதிகளை தூக்கிப் போட்டு கொன்றுள்ளனர். அல் ஷோர்டா என்ற இடத்தில் இந்தக் கொடுமையை ஐஎஸ் அரங்கேற்றி உள்ளது. மக்களின் மனதில் பயத்தை உருவாக்க அவர்கள் கண் முன் இந்தக் கொடுமையை ஐஎஸ் அமைப்பினர் அரங்கேற்றி வருகின்றனர். ஈராக் அரசுக்கு உளவு பார்ப்பதாக சந்தேகிக்கும் நபர்களை இதுபோன்று தண்டனை வழங்குகின்றனர். இதுமட்டுமல்ல, கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆ…
-
- 0 replies
- 404 views
-
-
நேபாளத்தில் 85 பயணிகளுடன் சென்ற பேருந்து மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்து 300 மீட்டர் பள்ளத்தில் விழுந்த பயங்கர விபத்தில் 31 பேர் பலியாகியுள்ளனர், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. காத்மாண்டூவிலிருந்து கட்டிகே தியுரலி நோக்கிச் சென்று கொண்டிருந்த 85 பயணிகளுடனான நெரிசல்மிக்க பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததால் 300மீ பள்ளத்தில் உருண்டது இதில் 31 பேர் பலியாகியுள்ளனர், மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இதுவரை 31 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன, பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று தேசிய விசாரணை துறையின் மாவட்டத் தலைவர் பகதூர் புதாதோகி என்பவர் தெரிவித்தார். காயமடைந்தவர்களில் 15 பேரை நேபாள ராணுவ ஹெலிகாப்டர் பள்ளத்திலிருந்து மீட்டு காத்மாண்டூ ம…
-
- 0 replies
- 386 views
-
-
கனடாவில், கார் விபத்து ஒன்றில் சிக்கி உயிருக்கு போராடிய 27 வயதான நிறைமாத கர்ப்பிணி பெண், குழந்தை பிறந்த பின் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரிய உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.கனடா நாட்டில் குயூபெக் நகரில் உள்ள லவுரியர் சாலையில் காலை 10.15 மணியளவில் குயூபெக் சிட்டி மருத்துவமனைக்கு அருகில் 27 வயதான கர்ப்பிணி பெண் ஒருவர் சாலையில் நடந்து சென்றுள்ளார்.அப்போது, அசுர வேகத்தில் வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கர்ப்பிணி மீது பயங்கரமாக மோதியுள்ளது. கார் மோதிய வேகத்தில் அவர் சில அடி தூக்கி வீசப்பட்டுள்ளார். விபத்தை நேரில் கண்டு அதிர்ச்சி அடைந்த மக்கள் உடனடியாக விரைந்து வந்து கர்ப்பிணி பெண்ணை காப்பாற்ற முயன்றுள்ளனர். விபத்துச் செய்தியை கேட்டு கியூபெக்…
-
- 6 replies
- 482 views
-
-
புதுடில்லி: ''ஜம்மு - காஷ்மீர் மக்களுக்கு சுதந்திரம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்,'' என, பாகிஸ்தான் துாதரக அதிகாரி, டில்லியில் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப் பின் முக்கிய தலைவன்களில் ஒருவனான பர்ஹான் வானி, சமீபத்தில் பாதுகாப்பு படை யினரால் கொல்லப்பட்டான். இதையடுத்து, ஜம்மு - காஷ்மீர் மாநிலம் முழுவதும் வன் முறை ஏற்பட்டது. பல இடங்களில், இன்னும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. பயங்கரவாதிகளை இந்தியாவுக்கு எதிராக துாண்டி விடும், அண்டை நாடான பாகிஸ்தான், ஜம்மு - காஷ்மீரில் நடக்கும் கலவரங்களுக்கு பின்னணியாக உள்ளது. கனவு நிறைவேறாது: இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், சமீபத்தில் பேசுகையில், 'காஷ்மீர் போராட்…
-
- 1 reply
- 371 views
-
-
சீனாவில் ஷுவாங்தியன் கிராமத்தில் திடீரென்று நூற்றுக்கணக்கான பாம்புகள் புகுந்ததால் அங்குள்ள பொதுமக்கள் பாம்பு வேட்டையில் இறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஷுவாங்தியான் கிராமத்தில்தான் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக கைத்தடிகளுடன் பாம்பு வேட்டையில் இறங்கியுள்ளது.இந்த கிராமத்தில் திடீரென்று நூற்றுக்கணக்கான பாம்புகள் புகுந்து பொதுமக்களை தொல்லைக்கு ஆளாக்கியதால், அவைகளில் இருந்து தங்களையும் தங்கள் மனைவி குழந்தைகளையும் காப்பாற்றும் பொருட்டு இரவு பகல் பாராமல் வேட்டையில் குதித்துள்ளனர். கடந்த மாதம் இரண்டு வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இப்பகுதியில் கொத்தாக பாம்புகளை அவிழ்த்து விட்டு விட்டு தப்பியதாக முதற்கட்ட த…
-
- 6 replies
- 865 views
- 1 follower
-
-
ஓராண்டு மூடப்பட்டு தற்போது மீண்டும் திறக்கப்பட்டிருக்கும் எல்லையை கடந்து ஆயிரக்கணக்கான வெனிசுவேலா மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு கொலம்பியா செல்ல ஆரம்பித்துள்ளனர். அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறையால் கடுமையான பொருளாதார நெருக்கடியை வெனிசுவேலா சந்தித்து வருகிறது. பாதுகாப்பு காரணங்கள் என்று அது கூறியவற்றுக்காக வெனிசுவேலா முன்னதாக எல்லையை மூடியிருந்தது. ஜூலை மாத்ததில் சில நாட்கள் எல்லையை கடக்க அனுமதிக்கப்பட்டபோது, சமையல் எண்ணெய், சர்க்கரை, மற்றும் அரிசியை வாங்கி சேமித்து கொள்ள இலட்சக்கணக்கான வெனிசுவேலா மக்கள் எல்லையை கடந்து சென்றனர். கடந்து செல்லும் முக்கிய நிலை ஒன்றில் அதிகாலைக்கு முன்னரே நீண்ட வரிசையில் காத்திருந்த வெனிசுவேலா மக்களை, “இரு நாடுகளும் ச…
-
- 0 replies
- 412 views
-
-
ஆறு வாரங்களுக்கு முன்னால் நடத்தப்பட்ட 20 பிணைக்கைதிகள் கொல்லப்பட்ட உணவகத்தின் மீதான இஸ்லாமியவாத தாக்குதலில் தொடர்புடையதாக, ஹாஸ்நாட் கரிம் என்ற வங்கதேச வம்சாவளி பிரிட்டிஷ் ஆசிரியர் ஒருவரை வங்கதேச அரசு கைது செய்திருக்கிறது. அவருடைய மகளின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக அவர் அந்த உணவகத்தில் இருந்தார் என்று குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். தாக்குதல் நடத்தியோருடன் மிகவும் அமைதியாக அவர் செயல்பட்டிருப்பதாகக் கூறி அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதே உணவகத்தில் இருந்த மாணவர் ஒருவரும் இதே மாதிரியான சூழ்நிலைகளால் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரை பிடித்திருந்தாலும் இன்னும் முறையாக கைது செய்யவில்லை. கரிமுக்கு எட்டு நாட்களும், கானுக்கு ஆறு நாட்களும் காவலில் வைக்க நீதிமன்றம் ஒன்று…
-
- 0 replies
- 416 views
-
-
தன்னுடைய 90வது பிறந்த நாளில் வாழ்த்துத் தெரிவித்த ஆதரவாளர்களுக்கு கியூபாவின் புரட்சிகரத் தலைவர் பிடல் காஸ்ரோ நன்றி தெரிவித்திருக்கிறார். ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் செய்தித்தாளுக்கு எழுதியுள்ள ஒரு கடிதத்தில் சீனாவையும், ரஷியாவையம் புகழ்வதற்கு முன்னால் அவருடைய இளமை காலத்தை பற்றிய நினைவுகளை அதிகமாக எழுதி, அதிபர் ஒபாமாவை விமர்சித்திருக்கிறார். தன்னுடைய சகோதரர் ராவுலிடம் அதிகாரத்தை ஒப்படைக்கும் முன்பு, பிடல் காஸ்ட்ரோ 50 ஆண்டுகள் கியூபாவை ஆட்சி செய்தார். அதிபர் ராவுல் பொருளாதார கட்டுபாடுகளை தளர்த்தி அமெரிக்காவுடன் ராஜீய உறவுகளை மீட்டுள்ளார். பிடல் காஸ்ட்ரோ பல மாதங்களாக பொது நிகழ்வுகளில் தோன்றவில்லை. http://www.bbc.com/tamil/global/2016/08/160813_cuba_fidel
-
- 0 replies
- 446 views
-
-
ஐஎஸ் தீவிரவாதிகள் தங்களது பாதுகாப்பு கருதி 2000 பொதுமக்களை கடத்தியுள்ளதாக அமெரிக்க கூட்டுப்படை மற்றும் கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.சிரியா, ஈராக் ஆகிய நாடுகளில் ஆதிக்கம் கொண்டுள்ள ஐஎஸ் தீவிரவாதிகளை அழிப்பதற்காக சிரிய படையினர், அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படையுடன் இணைந்து ஐஎஸ் தீவிரவாதிளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், சிரியாவின் மன்பிஜ் நகரில் வலுவான நிலையில் இருந்த ஐஎஸ் தீவிரவாதிகளை கடந்த 10 ஆம் திகதி அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படையினர் விரட்டியடித்தனர். பெரும்பாலான ஐஎஸ் தீவிரவாதிகள் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், குறைந்த அளவு ஐஎஸ் தீவிரவாதிகளே அங்கு உள்ளனர். இதனால் அவர்கள் தங்கள் பாதுகாப்பிற்காக வடக்கு சிரியாவில் …
-
- 0 replies
- 451 views
-
-
பிரிட்டன் தலைநகர் லண்டன், பெத்னல் கிரீன் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி கதீஜா சுல்தானா (16). அவரும் அவரது தோழிகள் ஷமீமா பேகம் (15), அமீரா அபாஸ் (15) ஆகியோரும் கடந்த ஆண்டு பிப்ரவரியில் லண்டனில் இருந்து சிரியாவுக்கு சென்று ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் இணைந்தனர். சிரியாவில் ஐ.எஸ். வசமுள்ள ரக்கா நகரில் கடந்த மே மாதம் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் கதீஜா சுல்தானா உயிரிழந்தார். இதுகுறித்து லண்டனில் உள்ள கதீஜா குடும்ப வழக்கறிஞர் தஸ்னிம் அகுன்ஜீ கூறியபோது, “கதீஜா இறந்ததாக அவரது குடும்பத்துக்கு தகவல் வந்துள்ளது” என்றார். ஐ டி.வி.க்கு கதீஜாவின் குடும்பத்தினர் கூறும்போது, “கதீஜா வீடு திரும்ப விரும்பினாள். அவளுக்கு இந்த நிலை ஏற்படலாம் என அச்சப்பட்டோம். அவ்வாறே நடந்துவிட்ட…
-
- 0 replies
- 323 views
-
-
இரண்டாவது உலகப் போரின்போது, கொரியப் பெண்கள் பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்தப்பட்டது தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண எட்டப்பட்ட உடன்பாட்டை, அமல்படுத்துவது தொடர்பாக ஜப்பான் மற்றும் தென் கொரியா நாடுகள் முன்னேற்றம் கண்டுள்ளன. ஜப்பான் விபசார விடுதிகளில் பாலியல் தொழிலாளர்களாக பணியாற்ற கட்டாயப்படுத்தப்பட்ட கொரியப் பெண்களுக்கு உதவும் நடவடிக்கைகளுக்கு ஜப்பான் நிதியுதவி அளிப்பது தொடர்பாக இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் தொலைபேசி மூலம் விவாதித்தனர். இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட உடன்பாட்டின்படி, தென் கொரியாவால் ஏற்படுத்தப்பட்ட நல்லிணக்கம் மற்றும் குணப்படுத்தல் என்ற அமைப்புக்கு ஜப்பான் 9 மில்லியன் டாலர்களை வழங்கும். ஆனால், அந்தத் தொகை இழப்பீடாகக் கருதப்படக்கூடாது என்பதை உ…
-
- 0 replies
- 337 views
-
-
தாய்லாந்தில் தொடர் குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.தாய்லாந்தின் சுற்றுலா நகரங்களில் இவ்வாறு தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்த தாக்குதல் சம்பவங்களில் குறைந்தபட்சம் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர்.தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.தாய்லாந்து மக்கள் நீண்ட விடுமுறை கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்த போது இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/134869/language/ta-IN/article.aspx
-
- 1 reply
- 368 views
-
-
போர்ப்ஸ் பத்திரிகையின் ஐ.டி. துறை கோடீஸ்வரர்கள் பட்டியலில் ஷிவ் நாடார் என்ற தமிழரும் இடம்பிடித்துள்ளார். அமெரிக்க வணிக பத்திரிகை போர்ப்ஸ், சர்வதேச அளவில் ஐ.டி. துறையைச் சேர்ந்த 100 கோடீஸ்வரர்கள் அடங்கிய பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் 7,800 கோடி டாலர் சொத்துடன் முதலிடத்தில் உள்ளார். அமேசான் நிறுவனத் தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான ஜெப் பிசோஸ் 6,620 கோடி டாலர் சொத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். சமூக வலைதளமான பேஸ்புக்கின் தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான மார்க் ஜூகர்பெர்க் 3ஆவது இடத்தில் உள்ளார். ஆரக்கிள் நிறுவனத் தலைவர் லாரீ எல்லிசன் நான்காவது இடத்தில் உள்ளார். சீன அலிபாபாவின் தலைவர் ஜேக் மா 2,580 கோடி டாலர் சொத்துட…
-
- 0 replies
- 555 views
-
-
வழக்கறிஞரான திருமதி தங்கேஸ்வரி அவர்கள் உலகில் முதன் முறையாக மலேசியாவில் சபாநாயகராக தெரிவு இன்று கூடிய பேரா சட்டமன்றக் கூட்டத்தில் தேசிய முன்னணி சார்பில் முன்மொழியப்பட்ட முன்னாள் பேரா மாநில ம.இ.கா மகளிர் பிரிவுத் தலைவியும் வழக்கறிஞருமான திருமதி தங்கேஸ்வரி சட்டமன்ற சபாநாயக்கராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தின்போது, பேரா மாநில சட்டமன்ற சபாநாயகராகத் திகழ்ந்த டத்தோ ஸ்ரீ எஸ்.கே தேவமணி துணையமைச்சராக நியமிக்கப்பட்டதையடுத்து, அப்பதவி திரும்பவும் ம.இ.கா உறுப்பினர் ஒருவருக்கே அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்கது. இந்த நியமனம் குறித்து ம.இ.கா. துணைத்தலைவர் டத்தோ ஸ்ரீ எஸ்.கே. தேவமணியும், தேசிய மகளிர் பிரிவு தலைவி மோகனா முனியாண்டியும் திருமதி தங்க…
-
- 0 replies
- 395 views
-
-
சுவிட்சர்லாந்து நாட்டில் கோடை விடுமுறையை கழிக்க பிரித்தானிய பிரதமரான தெரசா மே பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.பிரித்தானிய நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள தெரசா மே தனது கோடை விடுமுறையை கழிக்க தனது கணவரான ஃபிலிப்புடன் தற்போது சுவிட்சர்லாந்து நாட்டில் தங்கியுள்ளார்.முன்னாள் பிரித்தானிய பிரதமரான மார்க்கரெட் தாட்சர் சுவிட்சர்லாந்து நாட்டிற்கு பயணம் மேற்கொண்டு 15 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது முதன் முதலாக தெரசா மே பிரதமராக சுவிட்சர்லாந்து நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். முன்னதாக, கோடை விடுமுறைக்கு சுற்றுலா செல்ல சுவிட்சர்லாந்து ஒரு மிகச்சிறந்த நாடு எனவும், அங்குள்ள ஆல்ப்ஸ் மலைகளில் நடந்து செல்வது பிடித்தமான பொழுபோக்கு என தெரசா…
-
- 0 replies
- 408 views
-
-
சில முஸ்லிம் பெண்கள் அணியும் முழு உடல் நீச்சல் உடைக்கு பிரான்சில் உள்ள கேன் நகரில் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இது அவசியமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.கேன்ஸ் நகரின் மேயர் டேவிட் லிஸ்னர்ட் வெளியிட்டுள்ள உத்தரவில், கடற்கரைக்கு செல்பவர்கள், நல்லொழுக்க நெறிமுறைகள் மற்றும் மதச்சார்பின்மையை மதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. பிரான்ஸ் மற்றும் அதன் மதம் சார்ந்த தளங்கள் மீது தீவிரவாத தாக்குதல்கள் நடைபெற்று வரும் வேளையில், மத அடையாளத்தை முன்னிலைப்படுத்தும் நீச்சல் உடையால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.தடையை மீறி அந்த ஆடையை அணிபவர்கள் சுமார் 40 டாலர்கள் வரை அபாரதம் கட்ட நேரிடும். ht…
-
- 0 replies
- 457 views
-
-
பசிபிக் தீவில் நிலநடுக்கம் பசிபிக் தீவில் உள்ள வனுவாட்டு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.5ஆக பதிவாகி உள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/179265/பச-ப-க-த-வ-ல-ந-லநட-க-கம-#sthash.s580ZWzj.dpuf
-
- 0 replies
- 231 views
-
-
விமான விபத்தில் உயிர்தப்பியவருக்கு 6.5 கோடி பரிசு விமான விபத்தில் உயிர்தப்பிய கேரளாவை சேர்ந்த ஊழியருக்கு துபாய் லாட்டரியில் ரூ.6.5 கோடி பரிசாக கிடைத்துள்ளது. திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு கடந்த 3-ந் திகதி துபாய் விமான நிலையத்தில் தரை இறங்கிய எமிரேட்ஸ் விமானம் விபத்தில் சிக்கி தீப்பிடித்தது. இதில் பயணம் செய்த 282 பயணிகள் உள்பட மொத்தம் 300 பேர் உயிர்தப்பினார்கள். இவர்களில் ஒருவர் முகம்மது பஷீர் அப்துல் காதர் (வயது 62). கேரளாவை சேர்ந்த இவர் துபாயில் ஒரு கார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். அவர் ரம்ஜான் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு குடும்பத்தினருடன் சென்றபோது துபாய் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள ´டூட்டி பிரீ´ கடையில் லாட்…
-
- 7 replies
- 659 views
-