உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26891 topics in this forum
-
கர்நாடகத்தில் வலுக்கும் போராட்டங்கள்! - பெங்களூரில் மீண்டும் 144 தடை உத்தரவு பெங்களூரு: தமிழகத்திற்கு வருகின்ற 27-ம் தேதி வரை காவிரியில் தொடர்ந்து தண்ணீர் திறந்துவிடும்படி கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கர்நாடகத்தில் போராட்டங்கள் வலுத்துள்ளன. காவிரிப் பிரச்னையில் தமிழக அரசின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடகத்துக்கு கடந்த 5-ம் தேதி உத்தரவிட்டது. அதன்படி கர்நாடக அரசும் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டது. ஆனால், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கர்நாடகம் முழுவதும் கன்னட அமைப்புகள், விவசாயிகள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. இ…
-
- 0 replies
- 529 views
-
-
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜார்ஜ் புஷ் வாக்கு ஹிலாரிக்கு? அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் எச்.டபிள்யூ. புஷ். | படம் : கார்டியன் அமெரிக்க அதிபர் தேர்தலில் தனது வாக்கு ஹிலாரிக்கே என்று அந்நாட்டின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் எச்.டபிள்யூ. புஷ் தெரிவித்துள்ளதாக ஜான் கென்னடி குடும்ப உறுப்பினர் தெரிவித்துள்ளார். அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் கென்னடியின் மருமகளான காத்லீன் கென்னடி ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர். அவர் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஹிலாரிக்கு ஆதரவாக தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார். அதனை ஒட்டி அமெரிக்க முன்னாள் அதிபரும், குடியரசு கட்சியைச் சேர்ந்தவருமான ஜார்ஜ் புஷ்ஷை அவரது இல்லத்தில் சந்தித்திர…
-
- 0 replies
- 418 views
-
-
இந்தியாவிற்காக சீக்கியர்களை வேவு பார்த்த ஜெர்மனி நாட்டை சேர்ந்த 58 வயதான குடியேற்ற அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். வேவு பார்த்தல் மற்றும் தொழில்முறை இரகசிய காப்பு விதிகளை மீறியது உள்ளிட்ட பிரிவுகளில் சுமார் 45 வழக்குகளில் இவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது. ஜெர்மனியின் மேற்கு ஓஸ்ட்வெஸ்ட்பாலன் நகரில் உள்ள குடியேற்ற அலுவலகத்தில் பணி புரிந்து கொண்டிருந்த அந்த அதிகாரி கடந்த பிப்ரவரி மாதம் 17-ம் திகதி வடக்கு ரைன் -வெஸ்ட்பாலியா நகரில் இவர் பிடிபட்டார். அப்பொழுது முதல் இவர் போலீஸ் விசாரணையில் இருந்து வந்தார். ஜெர்மனி சட்டத்தின் படி வேவு பார்த்தல் குற்றச்சாட்டிற்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. http…
-
- 1 reply
- 405 views
-
-
'புன்னகையில் தொடங்குகிறது அமைதி' : இன்று உலக அமைதி தினம் உலகில் அமைதியை வலியுறுத்தியும், நாடுகளிடையே போர், வன்முறை ஏற்படுவதை தடுக்கும் விதத்திலும் ஐ.நா., சார்பில் ஆண்டுதோறும் செப்டம்பர் 21ஆம் திகதி, உலக அமைதி தினம் கடைபிடிக்கப்படுகிறது. 1981இல், இத்தினம் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்டது. உலகில் வன்முறை அதிகரிப்பதை தவிர்த்து அமைதி நிலவ, ஒவ்வொருவரும் உதவ வேண்டும் என இத்தினம் வலியுறுத்துகிறது. இன்றைய சூழலில், ஒவ்வொரு நாடும் மற்ற நாட்டுடன் அனைத்து துறைகளிலும் போட்டி போடுகின்றன. இந்த போட்டி ஆக்கபூர்வமாக அமைந்தால் பாராட்டுக்குரியது. மாறாக சில நாடுகள், ஏனைய நாடுகளுடன் நட்பு பாராட்டுவதற்கு பதில், பகைமை உணர்வுட…
-
- 3 replies
- 1.7k views
-
-
மனித முடியை விட மெல்லியது: நுண்ணிய தேசிய கொடி உருவாக்கி கனடா விஞ்ஞானிகள் கின்னஸ் சாதனை கின்னஸ் சாதனை படைத்த கனடா தேசியக் கொடி. மனித முடியை விட நூறில் ஒரு பங்கு அளவு கொண்ட உலகின் மிக நுண்ணிய தேசியக் கொடியை வடிவமைத்து கனடா விஞ்ஞானிகள் கின்னஸ் உலகச் சாதனை படைத்துள்ளனர். கனடாவில் உள்ள வாட்டர்லூ பல்கலைக்கழகத்தின் குவான்டம் கம்யூடிங் பிரிவைச் சேர்ந்த நாதன் நெல்சன் பிட்ஸ்பேட்ரிக் மற்றும் பொறியியல் மாணவர் நடாலியே பிரிஸ்லிங்கர் பின்சின் இருவரும் இணைந்து கனடாவின் 150-வது ஆண்டு விழாவை முன்னிட்டு இந்தத் தேசியக் கொடியை வடிவமைத்துள்ளனர். சிலிக்கான் உறையில் எலக்ட்ரான் பீம் லித்தோகிராபி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த தேசியக் …
-
- 0 replies
- 434 views
-
-
நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவது கஷ்டம்... முதல்வர் சித்தராமையா! பெங்களூரு: காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை அமல்படுத்துவது கஷ்டம் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்து உள்ளார். கர்நாடக முதல்வர் சித்தராமையா, பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ''கர்நாடக மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கைக் காப்பாற்ற பொதுமக்களும், விவசாயிகளும் ஒத்துழைக்க வேண்டும். காவிரிபடுகையில் உள்ள விவசாயிகள் அமைதி காக்க வேண்டும். அமைதியான முறையில் அவர்கள் தங்களது போராட்டத்தை நடத்த வேண்டும். விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும் காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பான விசாரணையில் உச்ச நீதிமன்றம் புதன்கிழமை (…
-
- 1 reply
- 1.2k views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * அலெப்போவுக்கு சென்ற ஐநா உதவிவாகனங்கள் மீதான வான்தாக்குதலுக்கு எதிராக சர்வதேச கண்டனம் வலுக்கிறது; தாங்கள் தாக்கவில்லையென சிரிய இராணுவம் மறுக்கிறது. * அகதிகளை அரவணைக்க சிறந்த வழி எது? அகதிகளுக்கான ஐநா மாநாடு நடக்கும் சூழலில் கேனடாவின் உள்ளூர்குழுக்களின் முயற்சி குறித்த பிபிசியின் நேரடித்தகவல்கள். * முதுமையால் வேலை கிடைக்காமல் சிரமப்படுபவர்களுக்கு புதியதொரு தீர்வு; முதிய கலைஞர்களுக்கான நடனக்குழுவை துவங்கி வழிகாட்டுகிறார் பிரிட்டன் கலைஞர்.
-
- 0 replies
- 343 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையில் தனது கடைசி உரையில் ஒபாமா கூறியது இது தான் ! ஐக்கிய நாடுகள் சபையில் 71 அமர்வில் அமெரிக்க ஜனாதிபதியாக பராக் ஒபாமா நிகழ்த்திய இறுதி உரையில், உலக நாடுகளுக்கு இடையில் கூடுதலான அளவில் வெளிப்படைத் தன்மை மற்றும் ஒத்துழைப்பு வேண்டும் என தெரிவித்துள்ளார். நியூயோர்க்கில், உலக தலைவர்கள் முன் பேசிய ஒபாமா, உலகமயமாக்கலின் நலன்களை சமமாக பகிர்ந்து அமைக்கும் வரை , அடிப்படைவாதம் மற்றும் வெறுப்பு வளர இடம் இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. உலக நாடுகள், வர்த்தகத்தில் தங்கள் நலன்களைப் பாதுகாத்துக் கொள்வது, தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்வது போன்ற நடவடிக்க…
-
- 0 replies
- 316 views
-
-
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், செப்.27 வரை 6000 கன அடி நீர் திறக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு உச்ச நீதிமன்றம் | கோப்புப் படம். காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரத்துக்குள் அமைக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், செப். 21-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை 6000 கன அடி நீரை கர்நாடக அரசு தமிழகத்துக்கு திறந்துவிட உத்தரவிட்டுள்ளது. காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் இடைக்கால மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று டெல்லியில் விசாரணை நடத்தியது. காவிரி மேற்பார்வைக் குழு உத்தரவிட்ட 3,000 கன அடி நீர் போதாது. 50 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையிட்டது. …
-
- 0 replies
- 327 views
-
-
முறையற்ற பதவி நீக்கம் இலங்கை செய்தியாளருக்கு 50000 பவுண்ட்ஸ் செலுத்தவுள்ள பிபிசி பிரித்தானிய இளவரசர் ஜோர்ஜின் பிறப்புச் செய்தியை புறம்தள்ளி இலங்கைச் செய்தியொன்றுக்கு முக்கியத்துவம் கொடுத்த காரணத்திற்காக ஆகஸ்ட் 2014இல் பதவி நீக்கம் செய்யப்பட்டஇலங்கையைச் சேர்ந்த பிபிசி செய்தியாளருக்கு 50000 பவுண்ட்ஸ் தொகை நட்டஈடாக வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 57 வயதான சந்தன கீர்த்தி பண்டார என்பவருக்கே இந்த நட்டஈட்டுக்கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற ஜீலை கலவரம் தொடர்பான செய்தியே தனக்கு அந்தநேரம் முக்கியமாக தென்பட்டதாகவும் எனவே தன்னை அநியாயமாக இனபேதம் காண்பித்து பதவிநீக்கம் செய்துவிட்டதா…
-
- 1 reply
- 651 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * நியூ யார்க் குண்டு வெடிப்பு தொடர்பில் 28 வயது இளைஞரைத் தேடும் அமெரிக்க காவல்துறை; ஆப்கானிஸ்தானில் இருந்து வந்து அமெரிக்க பிரஜா உரிமை பெற்றவர் என்றும் அறிவிப்பு. * ரஷ்யத் தேர்தலில் அதிபருக்கு அமோக வெற்றி; விளாடிமிர் புடினின் கட்சி தேர்தலில் வென்றாலும் பதிவான வாக்கு சதவீதத்தில் மிகப்பெரிய வீழ்ச்சி. * வேட்டையாடுவதற்காகவே வளர்க்கப்படும் ஆயிரக்கணக்கான சிங்கங்கள்; தென் ஆப்ரிக்க அரசு இதை தடுக்கவேண்டும் என்று உலக வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பு கோரிக்கை.
-
- 0 replies
- 422 views
-
-
காவிரி நீரை மீண்டும் 10 நாட்களுக்கு திறந்துவிட உத்தரவு காவிரி நதியை எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 10 நாட்களுக்கு 3 ஆயிரம் கன அடி திறந்துவிடுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரி நதி நீர் தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கை செப்டம்பர் 5 ஆம் திகதி விசாரித்த உச்ச நீதிமன்றம், காவிரி நதியில் இருந்து தமிழகத்துக்கு 10 நாள்களுக்கு தினமும் விநாடிக்கு 15,000 கன அடி தண்ணீர் திறந்துவிடுமாறு உத்தரவிட்டது. இதனால் கர்நாடகாவை போராட்டக் களத்துக்கு இட்டுச் சென்றது. இதனிடையே, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி கடந்த 7-ஆம் திகதி அதிகாலை 12 மணி முதல் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே உச்ச நீதிமன்றம…
-
- 0 replies
- 483 views
-
-
கிங்பிஷர் பறவை போலவே பறந்துவிட்டார் மல்லையா: மும்பை உயர் நீதிமன்றம் ருசிகரம் விஜய் மல்லையா. | கோப்புப் படம்: பிடிஐ. கிங்பிஷர் என்று தன் நிறுவனத்திற்கு பறவையின் பெயரைச் சூட்டிய மல்லையா, அந்தப் பறவை போலவே எல்லைகள் பற்றிய கவலையின்றி பறந்து விட்டார் என்று மும்பை நீதிமன்றம் தெரிவித்துள்ளது சேவை வரித்துறை செய்திருந்த மேல்முறையீட்டு மனு மற்றும் மல்லையாவின் சொந்த விமானத்தை ஏலம் விடுவதை நிறுத்துமாறும் கோரியிருந்த மனு ஆகியவற்றின் மீதான விசாரணை இன்று மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தர்மாதிகாரி மற்றும் பீ.பி.கொலாபாவாலா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் நடைபெற்றது. “அவர் (மல்லையா) ஏன் கிங்பிஷர் என்ற பெயர் வைத்தார் என்று யாருகாவது தெரியுமா…
-
- 0 replies
- 492 views
-
-
பெங்களூரு காவிரி போராட்டத்தின்போது பிரியாணிக்காக பஸ்களுக்கு தீ வைக்க உதவினேன்: கர்நாடக போலீஸாரிடம் இளம்பெண் திடுக்கிடும் தகவல் தீக்கிரையான தமிழகத்தைச் சேர்ந்த 42 கேபிஎன் பேருந்துகள் பெங்களூரு போராட்டத்தின் போது, ஒரு பிரியாணி பாக்கெட்டுக் காக கேபிஎன் பஸ்களை தீயிட்டு கொளுத்தும் போராட்டத்தில் பங் கேற்றதாக கைது செய்யப்பட் டுள்ள இளம்பெண் ஒப்புக் கொண்டுள்ளார். தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைக் கண்டித்து, பெங்களூருவில் கடந்த 12-ம் தேதி வன்முறை வெடித்தது. 200-க்கும் மேற்பட்ட தமிழக பதிவெண் கொண்ட வாகனங்களை கன்னட அமைப்பினர் தீயிட்டு கொளுத்தினர். தமிழ…
-
- 0 replies
- 346 views
-
-
நியூயோர்க் வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேர் கைது நியூயோர்க் வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நியூயோர்க்கின் மென்ஹட்டன் செல்சியா பகுதியில் இடம்பெற்றிருந்த இந்த தாக்குதலில் 29 பேர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் எப்.பி.ஐ உளவுப் பிரிவினர் குறித்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். இந்த குண்டு வீட்டில் தயாரிக்கப்பட்ட ஒன்று என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. வெடிக்காத மற்றுமொரு குண்டை அதிகாரிகள் மீட்டு பாதுகாப்பாக வெடிக்கச் செய்திருந்தனர். இந்த தாக்குதலுக்கு இதுவரையில் எந்தவொரு தரப்பினரும் உரிமை கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. …
-
- 3 replies
- 474 views
-
-
பெர்லின் தேர்தல்: ஏங்கெலா மெர்கலின் கட்சி மீண்டெழுமா? ஜெர்மனியின் தலைநகர் பெர்லினின் புதிய சட்டமன்றத்துக்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க, இன்று பெர்லின் நகர மக்கள் வாக்களிக்க உள்ளனர். ஏங்கெலா மெர்கல் (கோப்புப் படம்) அண்மைய தேர்தலில், குடியேறிகளுக்கு எதிரான வலதுசாரி கட்சியுடன் நடந்த போட்டியில் மக்களின் ஆதரவினை ஏங்கெலா மெர்கலின் கிறிஸ்துவ ஜனநாயக கட்சி இழந்துள்ளதால், அக்கட்சியின் தற்போதைய தேர்தல் செயல் பாடு குறித்து ஆய்வாளர்கள் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். நாட்டில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான குடியேறிகளை அனுமதிப்பது என்ற முடிவினை கடந்த வருடம் எடுத்ததிலிருந்து ஏங்கெலா மெர்கலின் புகழ் ஜெர்மனியில் குறைந்து வருவது …
-
- 3 replies
- 701 views
-
-
சிரியா விமானத் தாக்குதல்: அமெரிக்கா, ரஷியா இடையே கடும் வார்த்தைப்போர் அமெரிக்க ஆதரவோடு சிரியாவில் நடத்தப்பட்ட விமானத் தாக்குதல் தொடர்பாக கடும் வார்த்தைப்போரில்அமெரிக்காவும், ரஷியாவும் இறங்கியுள்ளன சிரியா படைப்பிரிவுகளுக்கு எதிராக போராடும் தீர் அல்-ஸோவுரிலுள்ள இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் இதில் டஜன்கணக்கான சிரியா படையினர் கொல்லப்பட்டும், காயப்பட்டும் இருப்பதாக ரஷியா கூறுகிறது. பலவீனமான போர்நிறுத்த ஒப்பந்தத்தை இந்த விமானத் தாக்குதல் ஆபத்திற்குள்ளாக்கி இருப்பதாக கூறியிருக்கும் ரஷியாவின் ஐநா தூதர் விட்டாலி சூர்க்கின், ஐநா, பாதுகாப்பு அவையின் அவசரக் கூட்டத்திற்கு உடனடியாக அழைப்பு விடுக்க வேண்டுமென தெரிவித்திருக்கிறார். …
-
- 0 replies
- 416 views
-
-
சிரியாவில் அமெரிக்கா - ரஷ்யா கூட்டணி: நட்பா, நாடகமா? சிரியாவில் மிக முக்கிய தீவிரவாதக் குழுக்களை ஒழித்துக் கட்ட, அமெரிக்கா - ரஷ்யா ஏற்படுத்தியுள்ள கூட்டணியால் யாருக்கு என்ன பலன் ஏற்படும், என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அறிந்துகொள்ள முற்படுவதுதான் இந்த சிறிய, எளிய ஆய்வின் நோக்கம். ஆராய்கிறார் பிபிசி அரேபிய சேவையின் ரமி ருஹாயெம். சிரிய அலங்கோலத்தின் சின்னம் - ஒம்ரான் தக்னீஷ் 1.உடன்பாடு என்ன? சிரியா தொடர்பான அமெரிக்க - ரஷ்யா உடன்படிக்கையில், இரண்டு அம்சங்கள் உள்ளன. முதலில், சிரியா ஆட்சியாளர்களுக்கும் கிளர்ச்சிக் குழுக்களுக்கும் இடையே அலெப்போ போன்ற நகரங்களில் போர் நிறுத்தம். இரண்டாவது, அமெரிக்கா - ரஷ்யா இடையே, …
-
- 0 replies
- 444 views
-
-
ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவ தளத்தின் மீது தாக்குதல்: 17 படையினர் பலி இந்திய கட்டுப்பாட்டு பகுதியின் ஜம்மு காஷ்மீரிலுள்ள ஊரி பகுதியில் அமைந்திருக்கும் இந்திய ராணுவ தளத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளர்.அதில் 17 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். காஷ்மீரில் சமீப ஆண்டுகளில் நடைபெற்ற மிகவும் பயங்கரமான தாக்குதலாக இது கருதப்படுகிறது, கோப்புப்படம் எல்லையில் கட்டுப்பாடு கோட்டிற்கு அருகிலுள்ள ஊரி பகுதியில் இருக்கும் படைத்தளத்தில் ஊடுருவிய நான்கு தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார். இன்று அதிகாலை 5.30 மணிக்கு படை முகாம்களில் நுழைந்த தீவிரவாதிகள் இந்த தாக்குதலை தொடங்கினர். …
-
- 3 replies
- 613 views
-
-
A device at a second location in Chelsea appears to be a pressure cooker with dark colored wiring coming out of the top center of the device. The device, mentioned earlier by police, is connected by silver duct tape to a small dark colored device attached to the outside of the pressure cooker, according to multiple local and federal law enforcement officials. None of the officials would say at this point what was inside the pressure cooker. CNN has viewed an image of the device verifying the description. http://www.cnn.com/2016/09/17/us/new-york-explosion/index.html This story was reported by Maria Alvarez, John Asbury, Anthony M. DeStefano, Nicole Full…
-
- 4 replies
- 632 views
-
-
அட்லாண்டிக் வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெர்மனியில் மக்கள் ஆர்ப்பாட்டம் ஐரோப்பா ஒன்றியம் மற்றும் அமெரிக்கா நாடுகளுடன் முன்மொழியப்பட்ட அட்லாண்டிக் வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்த்து ஜெர்மனியில் உள்ள நகரங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஒப்பந்தமானது உணவு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மீதான ஐரோப்பிய தரத்தை குறைத்துவிடும் என்று உலகமயமாக்கல் எதிர்ப்பு குழுக்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த ஒப்பந்தம் காரணமாக, அவுட் சோர்ஸ் எனப்படும் பணிகளை வெளிநாடுகளுக்கு வழங்குவது அதிகரித்து, உள்ளூரில் பலர் வேலை இழப்பார்கள் என அஞ்சப்படுகிறது. தலைநகர் பெர்லின் உட்பட ஏழு நகரங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிற…
-
- 0 replies
- 276 views
-
-
அக்டோபர்ஃபெஸ்ட் பீர் விழா இடத்தை முதல்முறையாக சுற்றி வளைத்து பாதுகாப்பு இன்று மியூனிக் நகரில் தொடங்குகின்ற உலகிலேயே மிக பெரிய பீர் மது விழாவான அக்டோபர்ஃபெஸ்டை முன்னிட்டு, ஜெர்மனி காவல் துறையினர் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். ஆண்டுதோறும் நடைபெறும் அக்டோபர்ஃபெஸ்ட் பீர் திருவிழாவில் உலக அளவில் இருந்து சுமார் 60 லட்சம் பார்வையாளர்கள் கலந்து கொள்கின்றனர் கோடைக்காலத்தில் நடைபெற்ற மோசமான தாக்குதல்களை அடுத்து, இந்த நிகழ்வு தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்காகலாம் என்று ஆட்சியாளர்கள் அஞ்சுகின்றனர். அதனால், அக்டோபர்ஃபெஸ்ட் நடைபெறும் இடம் முழுவதும் முதல்முறையாக சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. முதுகில் பைகளை போட்டு செல்வது தடை ச…
-
- 0 replies
- 445 views
-
-
முழு அளவிலான ராணுவத் தாக்குதலை பிரிட்டன் தாக்குப் பிடிக்க முடியாது: மூத்த தளபதி எச்சரிக்கை பிரிட்டன் மீது ஒரு முழு அளவிலான ராணுவ தாக்குதல் நடத்தப்பட்டால் அந்நாட்டில் உள்ள ஆயுதம் ஏந்திய படையினரால் பிரிட்டனை காப்பாற்ற முடியாது என மூத்த பிரிட்டிஷ் ராணுவ தளபதி ஒருவர் அரசாங்கத்தை எச்சரித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம், கூட்டுப்படைகளின் தலைமை பொறுப்பிலிருந்து ஓய்வு பெறுவதற்குமுன் சர் ரிச்சர்ட் பரோன்ஸ், பிரிட்டிஷ் ஆயுத படையினர் குறித்த கடும் மதிப்பீடுகளை குறிப்பாணை மூலம் கூறியிருந்தார். பணத்தை மிச்சப்படுத்தும் நோக்கில் முக்கிய திறன்கள் ராணுவத்தில் இருந்து பறிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பிரிட்டிஷ் படைகளுக்கான நிதி ஒதுக்கீடு தற்போது …
-
- 0 replies
- 449 views
-
-
பெங்களூருவில் தமிழர்களுக்கு எதிராக நடந்த வன்முறையின்போது கேபிஎன் பேருந்துகளை எரித்த வழக்கில் 7 பேர் கைது: பெண் உட்பட 10 பேருக்கு வலைவீச்சு பெங்களூருவில் தீ வைத்து கொளுத்தப்பட்ட கேபிஎன் பேருந்துகள். (கோப்புப் படம்) பெங்களூருவில் தமிழகத்தின் கேபிஎன் நிறுவன பேருந்துகள் எரிக்கப்பட்ட வழக்கில் 7 பேரை கர்நாடக போலீஸார் கைது செய்துள்ளனர். ஒரு பெண் உட்பட 10 பேரை தேடி வருகின்றனர். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழ கத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்கப் பட்டதை எதிர்த்து, கர்நாடகாவில் கன்னட அமைப்பினர் கடந்த 12-ம் தேதி வன்முறையில் ஈடுபட் டனர். பெங்களூருவில் மைசூரு சாலையில் உள்ள டிசவுசா நகரில், கேபிஎன் நிறுவனத்துக்கு சொந்தம…
-
- 1 reply
- 403 views
-
-
ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் சிரேஸ்ட உறுப்பினர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவிப்பு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் தகவல் அமைச்சரான Wa'il Adil Hasan Salman al-Fayad இவ்வாறு கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிரிகளை கொன்று அதனை வீடியோ காட்சிகளாக வடிவமைத்து பிரச்சாரம் செய்யும் பணிகளுக்கு பொறுப்பாக இந்த அமைச்சர் கடமையாற்றிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது. சிரியாவின் ரக்கா என்னும் இடத்திற்கு அருகாமையில் கடந்த 7ம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலில் Wa'il Adil Hasan Salman al-Fayad கொல்லப்பட்டதாக பென்டகன் அறிவித்துள்ளது. http://…
-
- 0 replies
- 330 views
-