Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஜேர்மனியில் பரபரப்பு: வைத்தியசாலையில் வைத்தியரை சுட்டுக் கொன்ற நோயாளி ஜேர்மனியில் பெர்லினில் உள்ள பெஞ்சமின் பிரான்க்லின் வைத்தியசாலையில் நோயாளி ஒருவர் வைத்தியரை துப்பாக்கியால் சுட்டதில் அவர் பலியானார். ஜேர்மனியின் பெர்லினில் தென்மேற்கு பகுதியில் உள்ள ஸ்டெக்லிட்ஸ் மாவட்டத்தில் உள்ளது பெஞ்சமின் பிரான்க்லின் பல்கலைக்கழக வைத்தியசாலையில் இன்று காலை 11 மணிக்கு நோயாளி ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து வைத்தியரை ஒருவரை சுட்டுள்ளார். இதில் படுகாயம் அடைந்த வைத்தியர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். 2 மணிநேரம் கழித்து அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதற்கிடையே வைத்தியரை சுட்ட அந்த நோயாளி தன்னைத் தானே சுட்டு தற்கொலை …

  2. 16 வருட உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு அரசியலில் நுழைய இரோம் ஷர்மிளா திட்டம் இந்தியாவின் நன்கு அறியப்பட்ட அரசியல் ஆர்வலர்களின் ஒருவரான இரோம் ஷர்மிளா, தான் 16 வருடமாக நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொள்ள முடிவெடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இரோம் ஷர்மிளா மேலும், தான் அரசியலில் நுழைய திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த 2000-ஆம் ஆண்டில், தனது சொந்த மாநிலமான மணிப்பூரில், பாதுகாப்பு படையினரால் 10 பொது மக்கள் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட சம்பவத்துக்கு பிறகு, ஷர்மிளா தனது உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினார். மணிப்பூர் மற்றும் வேறு சில வட கிழக்கு இந்திய மாநிலங்களில் நடைமுறையில் உள்ள சர்ச்சைக்குரிய ப…

  3. மகாத்மா காந்தி படுகொலை தொடர்பாக ராஜ்யசபாவில் விவாதம் நடத்த வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி.,சுப்ரமணியன் சுவாமி விடுத்த கோரிக்கைகயால் சர்ச்சை எழுந்துள்ளது.ராஜ்ய சபாவில் இன்று 'பூஜ்ய நேரத்தின்' பொழுது சுவாமி இது தொடர்பான பிரச்சினையை எழுப்பினார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பிக்களின் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் அவர் பேசியதாவது:சமீபத்தில் அரசு மகாத்மா காந்தி படுகொலை தொடர்பான ஆவணங்களை தேசிய ஆவண காப்பகத்தில் இணைத்துள்ளது. அவற்றை எல்லாம் நான் பார்வையிட சந்தர்ப்பம் வாய்த்தது. பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட சிலர் காந்தி படுகொலை குறித்து நிறைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவர்களை எல்லாம் உச்ச நீதிமன்றம் கட்டுப்படுத்துவதுட…

  4. சோமாலியாவில் இரட்டை குண்டுத் தாக்குதல் : ஐ.நா.வின் 9 பாதுகாவலர்கள் பலி : அல் ஷபாப் பொறுப்பேற்பு சோமாலியா தலைநகர் மொகடிசுவில் உள்ள சர்வதேச விமான நிலையம் அருகே இடம்பெற்று இரட்டை இரண்டு தற்கொலைப்படை தாக்குதலில் ஐக்கிய நாடுகளின் 9 பாதுகாவலர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு அல் ஷபாப் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. மொகடிசுவில் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு மேற்கொள்வதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஒரு தாக்குதல் விமான நிலையத்தின் வாயில் அருகில் உள்ள சோதனைச்சாவடி பகுதியிலும் மற்றுமொரு தாக்குதல் விமான நிலையத்திற்கு சற்று அப்பால் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. …

  5. இந்தியாவில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவோர் உடல்களை துண்டாக்க வேண்டும் என மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார்.ராஜ் தாக்கரே கூறியதாவது, பாலியல் பலாத்காரம் செய்வோரை கடுமையாக தண்டிக்க வேண்டும்.மேலும் அகமது நகரில் ஒரு சிறுமியை 3 பேர் கொண்ட கும்பல் கடுமையாக பலாத்காரம் செய்தனர், இதில் மாநில அரசு செயலிலந்து கிடக்கிறது.மேலும் கடந்த காங்கிரஸ்,தேசியவாத காங்கிரஸ் அரசுகளின் நடவடிக்கையை விட தற்போதைய பாஜக அரசு சிறப்பாக செயல்படவில்லை மேலும் இஸ்லாமிய நாடுகளில் உள்ளதை போல கடுமையான இஸ்லாமிய சட்டம் இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும். அப்போது தான் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தபடும் பெண்கள் மற்றும் குழந்தைகளை காப்பாற்ற முடியும்,…

  6. வங்கதேசத்தில் தீவிரவாதிகளின் மறைவிடத்தில் தாக்குதல்; 9 பேர் பலி டாக்கா அருகிலுள்ள மறைவிடத்ததை தாக்கி இஸ்லாமியவாத தீவிரவாதிகள் என்று சந்தேகப்படும் ஒன்பது பேரை கொன்றுள்ளதாக வங்கதேசக் காவல்துறை அறிவித்திருக்கிறது வங்கதேசத்தின் தலைநகரான டாக்காவுக்கு அருகில் இருக்கும் ஒரு மறைவிடத்தின் மீது தாக்குதல் நடத்தி இஸ்லாமியவாத தீவிரவாதிகள் என்று சந்தேகப்படும் ஒன்பது பேரை கொன்றுள்ளதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது. இன்னொரு தீவிரவாதி கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் எந்த குழுவை சேர்ந்தவர்கள் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை ஜமாத்துல்-முஜாஹிதீன் இஸ்லாமியவாதக் குழுவை சேர்ந்த உறுப்பினர்கள் என சந்தேகப்படும் பலரை காவல்துறை அண்மையில் கைது செய்திருக்கிறது…

  7. இளையோர் தடுப்புக்காவல் மையத்தில் உரிமை மீறல்: புலனாய்வுக்கு ஆஸ்திரேலிய அரசு உத்தரவு ஆடை உரியப்படுதல், கழுத்தில் பிடித்து தூக்கி சிறைக்குள் வீசப்படுதல், தலை மூடப்பட்டு, கைவிலங்கிடப்பட்டு நாற்காலியில் அமர வைத்திருத்தல் போன்ற காட்சிகள் ஒளிபரப்பானதால், அரசு புலனாய்வுக்கு உத்தரவிட்டுள்ளது ஆஸ்திரேலியாவின் வடக்கு எல்லையில் அமைந்திருக்கும் இளையோர் தடுப்புக் காவல் மையத்தில், சிறை பாதுகாப்புப் பணியாளர்கள், பதின்ம வயது இளைஞர்களை தாக்குவதும், அவர்கள் மீது கண்ணர் புகை வீசுவதும் தொலைக்காட்சி ஆவணப்படத்தில் ஒளிபரப்பப்பட்ட பிறகு, அரசு அது பற்றிய புலனாய்வுக்கு ஆணையிட்டுள்ளது. சிறை கைதி ஒருவர் ஆடை உரியப்படுவது, இன்னொருவர் கழுத்தில் பிடித்து தூக்கி சிறைக்குள் வீசப்…

  8. ஜப்பானில் ஊனமுற்றவருக்கான மருத்துவமனை வளாகத்தில் மர்ம நபர் ஒருவர் கத்தியால் தாக்கியதில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 45 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிரது. ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே அமைந்துள்ள ஊனமுற்றவருக்கான மருத்துவமனை வளாகத்தில் மர்ம நபர் திடீரென்று கத்தியால் தாக்கியதில் 19 பேர் சம்பவயிடத்தில் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்தில் 45 பேர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. தகவலறிந்து விரைந்து வந்த பொலிசார் குறிப்பிட்ட மர்ம நபரை சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். காயமடைந்தவர்களில் 20 பேர் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. கைதான நபர் 26 வயது மதிக்கத்தக்க இளைஞர்…

  9. தற்கொலை செய்தாரா MH370 விமானி? காணாமல் போனதாக மலேஷியன் எயார்லைன்ஸ் விமானமான MH370இன் விமானி, அந்த விமானத்தை வேண்டுமென்றே வீழ்த்தினார் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளதாகத் தெரிவித்த, அமெரிக்காவின் புலனாய்வுத் துறையின் (எப்.பி.ஐ) இரகசிய அறிக்கையொன்று வெளியாகியுள்ள நிலையில், அது குறித்த முக்கியத்துவத்தை வழங்குவதற்கு, அவுஸ்திரேலியா மறுத்துள்ளது. எப்.பி.ஐ வெளியிட்ட அறிக்கையின்படி, அந்த விமானத்தின் விமானியான ஸகாரி அஹ்மட் ஷா என்பவர், தனது வீட்டில் தயாரித்த விமான மாதிரியொன்றை வைத்து, MH370 விமானம் சென்றதாக எண்ணப்படும் பாதையில், பாதையொன்றை வடிவமைத்துள்ளார். MH370 விமானம் காணாமல் போவதற்குச் சில வாரங்கள் முன்னதாக, இவ்வாறு அவர் செயற்பட்டுள்ளார். …

  10. ஜெர்மனியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தின் பின்னணியில் சிரிய பிரஜை ஜெர்மனியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தின் பின்னணியில் சிரிய நாட்டுப் பிரஜையொருவர் செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புகலிடம் மறுக்கப்பட்ட சிரிய பிரஜை ஒருவரே இவ்வாறு தாக்குதல் நடத்தி தமது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்தில் மேலும் 12 பேர் காயமடைந்துள்ளனர். ஜெர்மனிய நகர் Ansbach இல் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஜெர்மனிய தென் பகுதி நகரில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டதனைத் தொடர்ந்து குறித்த சிரிய பிரஜை, பயில் வைத்திருந்த குண்டு ஒன்றை வெடிக்கச் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறத…

  11. இன்றைய நிகழ்ச்சியில் * ஜெர்மனியில் உடலில் இருந்த குண்டை வெடிக்கச் செய்த சிரிய நாட்டு ஆண் பலி; பதினைந்து பேர் காயம்; பல்கேரியாவுக்கு திருப்பியனுப்பப்பட இருந்தவர் அவர் என்று ஜெர்மனி அறிவிப்பு. * ஒற்றுமையை வலியுறுத்தி பல்லாயிரக்கணக்கானவர்கள் இஸ்தான்புல் தெருக்களில் பேரணி; ஆனால் தொடரும் கைதுகளின் அடுத்த கட்டமாக நாற்பத்தி இரண்டு பத்திரிக்கையாளர்களுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. * தன் தாயார் இளவரசி டயானா மரணம் குறித்து முன்பே பேசியிருக்க வேண்டும் என்று நினைப்பதாக இளவரசர் ஹாரி உருக்கம்; உளவியல் நலனில் கூடுதல் கவனம் தேவையென்று வலியுறுத்தல்.

  12. பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர் ஐ.எஸ். தீவி­ர­வா­தி­க­ளுக்கு எதி­ராக போரா­டு­வ­தற்­காக குர்திஷ் படை­யி­ன­ருடன் இணைந்­துள்ளார். டொம் லொக்ஸ் எனும் இவர் எவ்வித இரா­ணுவப் பயிற்சி அனு­ப­வமும் இல்லாத நிலையில் ஐ.எஸ். தீவி­ர­வா­தி­க­ளுக்கு எதி­ரான போராட்­டத்தில் இணைந்­துள்ளார். பிரிட்­டனில் கட்­டட நிர்­மாணத்­துறை வர்த்­த­கத்தில் ஈடு­பட்டு வந்­தவர் இவர். ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களின் அட்­டூ­ழி­யங்­களை தொலைக்­காட்­சியில் பார்­வை­யிட்ட பின்னர் அவர்­க­ளுக்கு எதி­ராக தான் போராட வேண்டும் என டொம் லொக்ஸ் தீர்­மா­னித்­தாராம். இதற்­காக தனது வர்த்­தக நட­வ­டிக்­கை­களை கைவிட்ட அவர், தனது சொந்த வீட்­டையும் விற்­பனை செய்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. ஐ.எஸ். தீவி­ர­வா­தி­…

  13. ஐரிஷ் குடியரசு மற்றும் பிரிட்டன் இடையே எல்லை இருக்கும்: தெரீசா மே ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறும் போது, அயர்லாந்து மற்றும் வட அயர்லாந்து இடையே கடந்த காலத்தில் இருந்த எல்லை கட்டுப்பாடுகள் மீண்டும் திரும்புவதற்கு தான் விரும்பவில்லை என பிரிட்டன் பிரதமர் தெரீசா மே தெரிவித்துள்ளார். பிரிட்டன் பிரதமராக அவர் பதவியேற்று, வட அயர்லாந்துக்கு மேற்கொண்ட முதல் பயணத்தின் போது இவ்வாறு பேசியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற்றம் என்பதன் மூலம் ஐரிஷ் குடியரசு மற்றும் பிரிட்டிஷ் மாகாணம் இடையே எல்லை இருக்கும் என தெரீசா மே தெளிவாக கூறியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் ஐரிஷ் குடியரசு இன்னும் உறுப்பினராக அங்கம் வகிப்பது குறிப்பி…

  14. எங்களுக்கு தேவை தகவல்கள் மட்டுமே...! - அகதிகளின் குரல்கள் அவர்களுக்கு என்ன வேண்டும்...? பெரும் பணமா, வைர நகைகளா, விலை மதிப்புமிக்க ஆடைகளா... என்ன வேண்டும் அவர்களுக்கு...? நிச்சயம், இது எதுவும் வேண்டாம். அவர்களுக்கு தேவை தகவல்கள். உண்மையான தகவல்கள். தாங்கள் தங்குவதற்கு எங்கு ஒரு துண்டு நிலம் கிடைக்கும், பாதுகாப்பான ஆறு மணி நேர உறக்கம் எங்கு கிடைக்கும், தம் பச்சிளங்குழந்தைகளுக்கு யார் உணவு தருவார்கள், இருள் அப்பிய தங்கள் எதிர்காலத்தில் யார் சிறு வெளிச்சம் பாய்ச்சுவார் என்ற தகவல்கள். ஆம். அவர்களுக்கு தகவலன்றி வேறொன்றும் தேவையில்லை. யார் அவர்கள்...? : அவர்களுக்கு என்ன வேண்டுமானாலும் பெயர் இருக்கலாம். ஆனால், இப்போது அவர்க…

  15. துருக்கியில் 40க்கும் மேற்பட்ட செய்தியாளர்களை கைது செய்ய உத்தரவு துருக்கியில் 40க்கும் மேற்பட்ட செய்தியாளர்களைக் கைது செய்ய அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளதாக துருக்கி ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த கைது பட்டியலில், துருக்கியின் முன்னணி வர்ணனையாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நஸ்லி லிகக் பெயரும் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாத தொடக்கத்தில், துருக்கியில் தோல்வியடைந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு பிறகு ஆயிரக்கணக்கான கைது நடந்தன. கடந்த ஞாயிறன்று, ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்தான்புல்லில் உள்ள டக்ஸிம் சதுக்கத்தில் அனைத்து கட்சியை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் பேரணி நடத்தினர். துருக்கியில…

  16. அமெரிக்க புளோரிடா மாநில இரவு விடுதியில் துப்பாக்கிச் சூடு: இருவர் பலி; பலர் காயம் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள இரவு விடுதியொன்றில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் சுமார் 14 பேர் காயமடைந் துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். போர்ட் மையர்ஸ் எனும் நகரிலுள்ள மேற்படி இரவு விடுதியில் பதின்மர் பருவத்தினருக்கான வைபவமொன்றின்போது இத் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. - See more at: http://www.metronews.lk/article.php?category=world&news=18155#sthash.45QN9tX4.dpuf

  17. ஜெர்மனி: ம்யூனிக் நகரத் தாக்குதல்தாரியின் நண்பர் கைது ம்யூனிக் நகரத் தாக்குதல்தாரி. இவரது திட்டங்களை அறிந்திருக்கலாம் என்ற அடிப்படையில் 16 வயதான நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார். வெள்ளிக்கிழமை ம்யூனிக் நகரில் ஒன்பது பேர் கொல்லப்பட்ட துப்பாக்கி தாக்குதல் தொடர்பாக 16 வயதான ஒருவரை கைது செய்துள்ளதாக ஜெர்மனி காவல்துறை தெரிவித்திருக்கிறது. கைது செய்யப்பட்டிருக்கு பதின்ம வயது நபர் தாக்குதல்தாரியின் திட்டங்களை அறிந்திருந்திருக்கலாம் என்று சந்தேகப்படும் அவருடைய நண்பர் என்று காவல்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது. முன்னதாக, ம்யூனிக் துப்பாக்கிதாரி டேவிட் அலி சன்போலி, ஓராண்டு காலமாக இந்த தாக்குதலுக்கு திட்டமிட்டு வந்துள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். …

  18. ஒரு வருடமாக தயாராகி வந்த ம்யூனிக் தாக்குதல்தாரி ம்யூனிக்கில் கடந்த வெள்ளியன்று 9 பேரை சுட்டுக் கொன்ற 18 வயது துப்பாக்கிதாரி, அந்த தாக்குதலுக்கு ஒரு வருடமாக தயாராகி வந்ததாக ஜெர்மன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்குதல்தாரியான டேவிட் அலி சன்பாலி முன்னர் துப்பாக்கிச் சூடு நடந்தப்பட்ட விநெண்டன் பள்ளிக்கூடத்திற்கு விஜயம் செய்து புகைப்படங்களை எடுத்த்தாக பவாரியன் அரசு குற்றவியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும் தாக்குதல்தாரி, சிறப்பு மென்பொருளை மட்டுமே பயன்படுத்தி வாங்கக் கூடிய டார்க் வெப் என்ற வளைதலத்தில் தான் க்ளாக் வகை துப்பாக்கியை வாங்கியதாக பவாரியன் அரசு குற்றவியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. தாக்குதல்தாரி குறிப்பிட்டு யாரையும் குறிவைத்ததாக …

  19. இன்னொரு இரும்புப் பெண்மணி? கார்க்கிபவா மார்கரேட் தாட்சருக்குப் பிறகு இங்கிலாந்தின் பிரதமராகி இருக்கும் இரண்டாவது பெண் தெரேசா மே. இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியனில் தொடர வேண்டும் என கேமரூன் அதிரடிப் பிரசாரம் மேற்கொண்டபோது அமைதியாக இருந்தார் தெரேசா. இங்கிலாந்து பிரிந்துவருவதில் அவருக்கும் விருப்பம் இல்லை. ஒருவேளை மக்கள் வாக்குகள் இங்கிலாந்து பிரிய வேண்டும் என இருந்தால்... தெரேசா பொறுமை காத்தார். அதற்குக் கிடைத்த பலன்தான் தேடிவந்திருக்கும் பிரதமர் பதவி. 59 வயது ஆகும் தெரேசா மே, இயல்பாகவே தலைமைப் பண்புக்கான குணாதிசயங்கள் கொண்டவர். உலகப் பெண் தலைவர்களில் இவரையும் ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெலையும்தான் ஐரோப்பியப் பத்திரிகைகள் ஒப்பிடுகின்றன. ஆனால்…

  20. ஜேர்மனி ஸ்டட்கார்டு பகுதியில் இடம்பெற்ற வெட்டுக்கத்தி தாக்குதலில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இந்த தாக்குதல் சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஸ்டட்கார்டு நகரில் உள்ள ரீட்லின்ஜென் பகுதியில் இளைஞர் ஒருவருக்கும் யுவதி ஒருவருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தினை அடுத்து இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் உயிரிழந்த அதேவேளை மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், தாக்குதலில் ஈடுபட்டவர் சிரியாவை சேர்ந்தவர் என கூறியுள்ள அந்நாட்டு பொலிஸார், சந்தேகநபரை கைது செய்துள்ளதாகவும் கூறியுள்ளனர். இதேவேளை…

    • 2 replies
    • 431 views
  21. தமிழ்நாடு தமிழ்நாடு இந்தியாவின் 28 மாநிலங்களில் ஒன்று. இது இந்தியத் துணைக்கண்டத்தின் தென்முனையில் உள்ளது. இதன் ஆட்சிப்பகுதி எல்லைகளாக மேற்கிலும் வடக்கிலும் கேரளா, கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்கள் உள்ளன. மத்திய அரசுப்பிரதேசமான புதுச்சேரி பகுதிகளைச் சுற்றிலும் தமிழ்நாடு தன் எல்லைகளைக் கொண்டுள்ளது. எல்லைகள் தமிழ்நாட்டின் புவியியல் எல்லைகளாக வடக்கே கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரும், மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் நீலமலை, ஆனை மலை , பாலக்காடு கணவாயும் கிழக்கில் வங்காள விரிகுடாக் கடலும், தென்கிழக்கில் மன்னார் வளைகுடாவும், தெற்கில் இந்தியப் பெருங்கடலும் உள்ளன. மதராஸ் மாகாணம் தமிழகம் முன்பு ஆங்கிலத்தில் மெட்ராஸ் ஸ்டேட் என்றும் தமிழில் மதராஸ் மாகாணம் என்றும…

    • 23 replies
    • 30.9k views
  22. பிரித்தானியாவிற்கும் பிரான்சிற்கும் இடையிலான எல்லைப்பகுதியில் அமைந்துள்ள Dover துறைமுகத்தில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து பாதிப்பால் பிரித்தானிய பயணிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார், 250,00 வாகனங்கள் சுமார் 15 மணிநேரமாக நின்றுகொண்டிருக்கின்றன, காரில் உள்ளவர்கள் படுத்து தூங்கிவிட்டாலும், இரண்டு சாக்கர வாகன ஓட்டிகள் பெரும் இடையூறுகளுக்கு ஆளாகியுள்ளார்கள், மேலும், ஆயிரிக்கணக்கான சுற்றுலாவாசிகளும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதால் Kent பொலிசார் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு வந்த போதிலும், போக்குவரத்து சரிசெய்தபாடில்லை. அதுமட்டுமின்றி, வாகன நெரிசலில் சிக்கியுள்ளவர்களுக்கு, ஹெலிகொப்டர் உதவியுடன் 11,000 தண்ணீர் பாட்டில்கள் கொடுக்கப்பட்…

  23. சீனாவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் 150 பேர் பலி சீனாவின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் குறைந்தது 150 பேர் இறந்தனர். பலர் காணாமல் போயுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். ஹெபெய் மற்றும் ஹூனான் மாகாணங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. குறைந்தது 114 பேர் ஹெபெயில் பலியாகியுள்ளனர். 111 பேரை காணவில்லை. 53 ஆயிரம் வீடுகள் அழிந்துள்ளன என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 15 பேர் பலியாகியுள்ள ஹெனான் மாகாணத்திலும் 72 ஆயிரம் பேர் வெளியேறியுள்ளனர். சிங்தாய் நகரத்தில் மட்டும் 25 பேர் பலியாகியிருப்பது வெள்ளப்பெருக்கிற்கு முன்னரே அரசு எச்சரிக்கவில்லை என்…

  24. பெய்ஜிங்கில் உள்ள வன உயிரின பூங்கா ஒன்றில் இருந்த புலிகள் பெண் சுற்றுலா பயணி ஒருவரை கொன்றும், மற்றொரு பயணியை காயப்படுத்தியும் உள்ளது. வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து, இருவரும் தங்கள் வாகனங்களை விட்டு வெளியேறிய போது இந்த தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். பெய்ஜிங்கில் உள்ள படாலிங் உயிரின பூங்காவில், சுற்றுலா பயணிகள் பூங்காவை சுற்றி பார்க்கும் போது, தங்கள் வாகனங்களில் இருந்து வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. வாகனத்தைவிட்டு வெளியேறிய பெண்களில் ஒருவர் மீது புலி வேகமாக பாய்ந்து அவரை காயப்படுத்தி இழுத்து சென்றது. அப்பெண்ணிற்கு துணையாக வந்த மற்றொருவர் அப் பெண்ணைக் காப்பாற்ற முயன்றார். ஆனால், அவர் இரண்டாவது புலியால் தாக்கப்பட்டார். இந்த ஆண்டின் தொடக்கத்தி…

  25. நீஸ் தாக்குதல்: பாதுகாப்பு அறிக்கை குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மறுப்பு நீஸ் நகரில் எண்பதுக்கும் மேலானவர்களை கொன்ற டிரக் தாக்குதல் நடந்த இரவன்று இருந்த பாதுகாப்பு குறித்த அறிக்கையை மாற்றுமாறு தன்னை துன்புறுத்தியதாக மூத்த பெண் போலிஸ் அதிகாரி ஒருவர் கூறிய குற்றச் சாட்டை மறுத்துள்ளார் உள்துறை அமைச்சர் பெர்நார் கஸ்நொவ். நகரின் வீடியோ கண்கானிப்பு பொறுப்பாளரான சாண்ட்ரா பெர்டின் என்ற அந்த போலிஸ் அதிகாரி, போலிஸ் இல்லாத பகுதிகளிலும் போலிஸ் இருந்ததாக அறிக்கை தர அதிகாரிகள் கோரியதாகவும், ஆனால் அவர்கள் சொன்ன இடங்களில் போலிசார் இருக்கவில்லை என்றும் சான்ட்ரா பெர்டின் பிரான்ஸ் நாட்டு செய்தித்தாள் ஒன்றிக்கு பேட்டியளித்துள்ளார். ஆனால் உள்துறை அமைச்சர் பெர்நார் கஸ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.