உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26892 topics in this forum
-
நேபாளத்தில் 85 பயணிகளுடன் சென்ற பேருந்து மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்து 300 மீட்டர் பள்ளத்தில் விழுந்த பயங்கர விபத்தில் 31 பேர் பலியாகியுள்ளனர், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. காத்மாண்டூவிலிருந்து கட்டிகே தியுரலி நோக்கிச் சென்று கொண்டிருந்த 85 பயணிகளுடனான நெரிசல்மிக்க பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததால் 300மீ பள்ளத்தில் உருண்டது இதில் 31 பேர் பலியாகியுள்ளனர், மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இதுவரை 31 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன, பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று தேசிய விசாரணை துறையின் மாவட்டத் தலைவர் பகதூர் புதாதோகி என்பவர் தெரிவித்தார். காயமடைந்தவர்களில் 15 பேரை நேபாள ராணுவ ஹெலிகாப்டர் பள்ளத்திலிருந்து மீட்டு காத்மாண்டூ ம…
-
- 0 replies
- 389 views
-
-
புதுடில்லி: ''ஜம்மு - காஷ்மீர் மக்களுக்கு சுதந்திரம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்,'' என, பாகிஸ்தான் துாதரக அதிகாரி, டில்லியில் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப் பின் முக்கிய தலைவன்களில் ஒருவனான பர்ஹான் வானி, சமீபத்தில் பாதுகாப்பு படை யினரால் கொல்லப்பட்டான். இதையடுத்து, ஜம்மு - காஷ்மீர் மாநிலம் முழுவதும் வன் முறை ஏற்பட்டது. பல இடங்களில், இன்னும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. பயங்கரவாதிகளை இந்தியாவுக்கு எதிராக துாண்டி விடும், அண்டை நாடான பாகிஸ்தான், ஜம்மு - காஷ்மீரில் நடக்கும் கலவரங்களுக்கு பின்னணியாக உள்ளது. கனவு நிறைவேறாது: இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், சமீபத்தில் பேசுகையில், 'காஷ்மீர் போராட்…
-
- 1 reply
- 376 views
-
-
ஓராண்டு மூடப்பட்டு தற்போது மீண்டும் திறக்கப்பட்டிருக்கும் எல்லையை கடந்து ஆயிரக்கணக்கான வெனிசுவேலா மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு கொலம்பியா செல்ல ஆரம்பித்துள்ளனர். அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறையால் கடுமையான பொருளாதார நெருக்கடியை வெனிசுவேலா சந்தித்து வருகிறது. பாதுகாப்பு காரணங்கள் என்று அது கூறியவற்றுக்காக வெனிசுவேலா முன்னதாக எல்லையை மூடியிருந்தது. ஜூலை மாத்ததில் சில நாட்கள் எல்லையை கடக்க அனுமதிக்கப்பட்டபோது, சமையல் எண்ணெய், சர்க்கரை, மற்றும் அரிசியை வாங்கி சேமித்து கொள்ள இலட்சக்கணக்கான வெனிசுவேலா மக்கள் எல்லையை கடந்து சென்றனர். கடந்து செல்லும் முக்கிய நிலை ஒன்றில் அதிகாலைக்கு முன்னரே நீண்ட வரிசையில் காத்திருந்த வெனிசுவேலா மக்களை, “இரு நாடுகளும் ச…
-
- 0 replies
- 414 views
-
-
ஆறு வாரங்களுக்கு முன்னால் நடத்தப்பட்ட 20 பிணைக்கைதிகள் கொல்லப்பட்ட உணவகத்தின் மீதான இஸ்லாமியவாத தாக்குதலில் தொடர்புடையதாக, ஹாஸ்நாட் கரிம் என்ற வங்கதேச வம்சாவளி பிரிட்டிஷ் ஆசிரியர் ஒருவரை வங்கதேச அரசு கைது செய்திருக்கிறது. அவருடைய மகளின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக அவர் அந்த உணவகத்தில் இருந்தார் என்று குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். தாக்குதல் நடத்தியோருடன் மிகவும் அமைதியாக அவர் செயல்பட்டிருப்பதாகக் கூறி அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதே உணவகத்தில் இருந்த மாணவர் ஒருவரும் இதே மாதிரியான சூழ்நிலைகளால் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரை பிடித்திருந்தாலும் இன்னும் முறையாக கைது செய்யவில்லை. கரிமுக்கு எட்டு நாட்களும், கானுக்கு ஆறு நாட்களும் காவலில் வைக்க நீதிமன்றம் ஒன்று…
-
- 0 replies
- 420 views
-
-
தன்னுடைய 90வது பிறந்த நாளில் வாழ்த்துத் தெரிவித்த ஆதரவாளர்களுக்கு கியூபாவின் புரட்சிகரத் தலைவர் பிடல் காஸ்ரோ நன்றி தெரிவித்திருக்கிறார். ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் செய்தித்தாளுக்கு எழுதியுள்ள ஒரு கடிதத்தில் சீனாவையும், ரஷியாவையம் புகழ்வதற்கு முன்னால் அவருடைய இளமை காலத்தை பற்றிய நினைவுகளை அதிகமாக எழுதி, அதிபர் ஒபாமாவை விமர்சித்திருக்கிறார். தன்னுடைய சகோதரர் ராவுலிடம் அதிகாரத்தை ஒப்படைக்கும் முன்பு, பிடல் காஸ்ட்ரோ 50 ஆண்டுகள் கியூபாவை ஆட்சி செய்தார். அதிபர் ராவுல் பொருளாதார கட்டுபாடுகளை தளர்த்தி அமெரிக்காவுடன் ராஜீய உறவுகளை மீட்டுள்ளார். பிடல் காஸ்ட்ரோ பல மாதங்களாக பொது நிகழ்வுகளில் தோன்றவில்லை. http://www.bbc.com/tamil/global/2016/08/160813_cuba_fidel
-
- 0 replies
- 451 views
-
-
சீனாவில் ஷுவாங்தியன் கிராமத்தில் திடீரென்று நூற்றுக்கணக்கான பாம்புகள் புகுந்ததால் அங்குள்ள பொதுமக்கள் பாம்பு வேட்டையில் இறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஷுவாங்தியான் கிராமத்தில்தான் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக கைத்தடிகளுடன் பாம்பு வேட்டையில் இறங்கியுள்ளது.இந்த கிராமத்தில் திடீரென்று நூற்றுக்கணக்கான பாம்புகள் புகுந்து பொதுமக்களை தொல்லைக்கு ஆளாக்கியதால், அவைகளில் இருந்து தங்களையும் தங்கள் மனைவி குழந்தைகளையும் காப்பாற்றும் பொருட்டு இரவு பகல் பாராமல் வேட்டையில் குதித்துள்ளனர். கடந்த மாதம் இரண்டு வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இப்பகுதியில் கொத்தாக பாம்புகளை அவிழ்த்து விட்டு விட்டு தப்பியதாக முதற்கட்ட த…
-
- 6 replies
- 873 views
- 1 follower
-
-
கனடாவில், கார் விபத்து ஒன்றில் சிக்கி உயிருக்கு போராடிய 27 வயதான நிறைமாத கர்ப்பிணி பெண், குழந்தை பிறந்த பின் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரிய உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.கனடா நாட்டில் குயூபெக் நகரில் உள்ள லவுரியர் சாலையில் காலை 10.15 மணியளவில் குயூபெக் சிட்டி மருத்துவமனைக்கு அருகில் 27 வயதான கர்ப்பிணி பெண் ஒருவர் சாலையில் நடந்து சென்றுள்ளார்.அப்போது, அசுர வேகத்தில் வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கர்ப்பிணி மீது பயங்கரமாக மோதியுள்ளது. கார் மோதிய வேகத்தில் அவர் சில அடி தூக்கி வீசப்பட்டுள்ளார். விபத்தை நேரில் கண்டு அதிர்ச்சி அடைந்த மக்கள் உடனடியாக விரைந்து வந்து கர்ப்பிணி பெண்ணை காப்பாற்ற முயன்றுள்ளனர். விபத்துச் செய்தியை கேட்டு கியூபெக்…
-
- 6 replies
- 484 views
-
-
ஐஎஸ் தீவிரவாதிகள் தங்களது பாதுகாப்பு கருதி 2000 பொதுமக்களை கடத்தியுள்ளதாக அமெரிக்க கூட்டுப்படை மற்றும் கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.சிரியா, ஈராக் ஆகிய நாடுகளில் ஆதிக்கம் கொண்டுள்ள ஐஎஸ் தீவிரவாதிகளை அழிப்பதற்காக சிரிய படையினர், அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படையுடன் இணைந்து ஐஎஸ் தீவிரவாதிளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், சிரியாவின் மன்பிஜ் நகரில் வலுவான நிலையில் இருந்த ஐஎஸ் தீவிரவாதிகளை கடந்த 10 ஆம் திகதி அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படையினர் விரட்டியடித்தனர். பெரும்பாலான ஐஎஸ் தீவிரவாதிகள் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், குறைந்த அளவு ஐஎஸ் தீவிரவாதிகளே அங்கு உள்ளனர். இதனால் அவர்கள் தங்கள் பாதுகாப்பிற்காக வடக்கு சிரியாவில் …
-
- 0 replies
- 455 views
-
-
பிரிட்டன் தலைநகர் லண்டன், பெத்னல் கிரீன் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி கதீஜா சுல்தானா (16). அவரும் அவரது தோழிகள் ஷமீமா பேகம் (15), அமீரா அபாஸ் (15) ஆகியோரும் கடந்த ஆண்டு பிப்ரவரியில் லண்டனில் இருந்து சிரியாவுக்கு சென்று ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் இணைந்தனர். சிரியாவில் ஐ.எஸ். வசமுள்ள ரக்கா நகரில் கடந்த மே மாதம் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் கதீஜா சுல்தானா உயிரிழந்தார். இதுகுறித்து லண்டனில் உள்ள கதீஜா குடும்ப வழக்கறிஞர் தஸ்னிம் அகுன்ஜீ கூறியபோது, “கதீஜா இறந்ததாக அவரது குடும்பத்துக்கு தகவல் வந்துள்ளது” என்றார். ஐ டி.வி.க்கு கதீஜாவின் குடும்பத்தினர் கூறும்போது, “கதீஜா வீடு திரும்ப விரும்பினாள். அவளுக்கு இந்த நிலை ஏற்படலாம் என அச்சப்பட்டோம். அவ்வாறே நடந்துவிட்ட…
-
- 0 replies
- 326 views
-
-
இரண்டாவது உலகப் போரின்போது, கொரியப் பெண்கள் பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்தப்பட்டது தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண எட்டப்பட்ட உடன்பாட்டை, அமல்படுத்துவது தொடர்பாக ஜப்பான் மற்றும் தென் கொரியா நாடுகள் முன்னேற்றம் கண்டுள்ளன. ஜப்பான் விபசார விடுதிகளில் பாலியல் தொழிலாளர்களாக பணியாற்ற கட்டாயப்படுத்தப்பட்ட கொரியப் பெண்களுக்கு உதவும் நடவடிக்கைகளுக்கு ஜப்பான் நிதியுதவி அளிப்பது தொடர்பாக இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் தொலைபேசி மூலம் விவாதித்தனர். இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட உடன்பாட்டின்படி, தென் கொரியாவால் ஏற்படுத்தப்பட்ட நல்லிணக்கம் மற்றும் குணப்படுத்தல் என்ற அமைப்புக்கு ஜப்பான் 9 மில்லியன் டாலர்களை வழங்கும். ஆனால், அந்தத் தொகை இழப்பீடாகக் கருதப்படக்கூடாது என்பதை உ…
-
- 0 replies
- 339 views
-
-
போர்ப்ஸ் பத்திரிகையின் ஐ.டி. துறை கோடீஸ்வரர்கள் பட்டியலில் ஷிவ் நாடார் என்ற தமிழரும் இடம்பிடித்துள்ளார். அமெரிக்க வணிக பத்திரிகை போர்ப்ஸ், சர்வதேச அளவில் ஐ.டி. துறையைச் சேர்ந்த 100 கோடீஸ்வரர்கள் அடங்கிய பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் 7,800 கோடி டாலர் சொத்துடன் முதலிடத்தில் உள்ளார். அமேசான் நிறுவனத் தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான ஜெப் பிசோஸ் 6,620 கோடி டாலர் சொத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். சமூக வலைதளமான பேஸ்புக்கின் தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான மார்க் ஜூகர்பெர்க் 3ஆவது இடத்தில் உள்ளார். ஆரக்கிள் நிறுவனத் தலைவர் லாரீ எல்லிசன் நான்காவது இடத்தில் உள்ளார். சீன அலிபாபாவின் தலைவர் ஜேக் மா 2,580 கோடி டாலர் சொத்துட…
-
- 0 replies
- 557 views
-
-
வழக்கறிஞரான திருமதி தங்கேஸ்வரி அவர்கள் உலகில் முதன் முறையாக மலேசியாவில் சபாநாயகராக தெரிவு இன்று கூடிய பேரா சட்டமன்றக் கூட்டத்தில் தேசிய முன்னணி சார்பில் முன்மொழியப்பட்ட முன்னாள் பேரா மாநில ம.இ.கா மகளிர் பிரிவுத் தலைவியும் வழக்கறிஞருமான திருமதி தங்கேஸ்வரி சட்டமன்ற சபாநாயக்கராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தின்போது, பேரா மாநில சட்டமன்ற சபாநாயகராகத் திகழ்ந்த டத்தோ ஸ்ரீ எஸ்.கே தேவமணி துணையமைச்சராக நியமிக்கப்பட்டதையடுத்து, அப்பதவி திரும்பவும் ம.இ.கா உறுப்பினர் ஒருவருக்கே அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்கது. இந்த நியமனம் குறித்து ம.இ.கா. துணைத்தலைவர் டத்தோ ஸ்ரீ எஸ்.கே. தேவமணியும், தேசிய மகளிர் பிரிவு தலைவி மோகனா முனியாண்டியும் திருமதி தங்க…
-
- 0 replies
- 399 views
-
-
சுவிட்சர்லாந்து நாட்டில் கோடை விடுமுறையை கழிக்க பிரித்தானிய பிரதமரான தெரசா மே பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.பிரித்தானிய நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள தெரசா மே தனது கோடை விடுமுறையை கழிக்க தனது கணவரான ஃபிலிப்புடன் தற்போது சுவிட்சர்லாந்து நாட்டில் தங்கியுள்ளார்.முன்னாள் பிரித்தானிய பிரதமரான மார்க்கரெட் தாட்சர் சுவிட்சர்லாந்து நாட்டிற்கு பயணம் மேற்கொண்டு 15 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது முதன் முதலாக தெரசா மே பிரதமராக சுவிட்சர்லாந்து நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். முன்னதாக, கோடை விடுமுறைக்கு சுற்றுலா செல்ல சுவிட்சர்லாந்து ஒரு மிகச்சிறந்த நாடு எனவும், அங்குள்ள ஆல்ப்ஸ் மலைகளில் நடந்து செல்வது பிடித்தமான பொழுபோக்கு என தெரசா…
-
- 0 replies
- 410 views
-
-
சில முஸ்லிம் பெண்கள் அணியும் முழு உடல் நீச்சல் உடைக்கு பிரான்சில் உள்ள கேன் நகரில் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இது அவசியமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.கேன்ஸ் நகரின் மேயர் டேவிட் லிஸ்னர்ட் வெளியிட்டுள்ள உத்தரவில், கடற்கரைக்கு செல்பவர்கள், நல்லொழுக்க நெறிமுறைகள் மற்றும் மதச்சார்பின்மையை மதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. பிரான்ஸ் மற்றும் அதன் மதம் சார்ந்த தளங்கள் மீது தீவிரவாத தாக்குதல்கள் நடைபெற்று வரும் வேளையில், மத அடையாளத்தை முன்னிலைப்படுத்தும் நீச்சல் உடையால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.தடையை மீறி அந்த ஆடையை அணிபவர்கள் சுமார் 40 டாலர்கள் வரை அபாரதம் கட்ட நேரிடும். ht…
-
- 0 replies
- 464 views
-
-
தாய்லாந்தில் தொடர் குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.தாய்லாந்தின் சுற்றுலா நகரங்களில் இவ்வாறு தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்த தாக்குதல் சம்பவங்களில் குறைந்தபட்சம் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர்.தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.தாய்லாந்து மக்கள் நீண்ட விடுமுறை கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்த போது இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/134869/language/ta-IN/article.aspx
-
- 1 reply
- 370 views
-
-
பசிபிக் தீவில் நிலநடுக்கம் பசிபிக் தீவில் உள்ள வனுவாட்டு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.5ஆக பதிவாகி உள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/179265/பச-ப-க-த-வ-ல-ந-லநட-க-கம-#sthash.s580ZWzj.dpuf
-
- 0 replies
- 234 views
-
-
பாஜக முக்கியத் தலைவர் துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் உத்தரப் பிரதேச மாநில மூத்த பாரதீய ஜனதா கட்சித் தலைவர்களில் ஒருவரான பிரிஜ்பால் திவோடியா, வியாழக்கிழமை இரவு டெல்லியை அடுத்த காஜியாபாத் அருகே மர்மநபர்களால் சரமாரி துப்பாக்கித் தாக்குதலுக்கு உள்ளானார். அவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முராத் நகரில் இருந்து காஜியாபாத்துக்கு தனது காரில், பாதுகாவலர்கள் உள்ளிட்ட ஐந்து பேருடன் சென்று கொண்டிருந்தபோது, இரண்டு பக்கங்களிலும் இருந்து வந்த கார்களில் இருந்த மர்ம நபர்கள், அவரது காரை நோக்கி ஏராளமான சுற்றுக்கள் துப்பாக்கியால் சுட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படுகாயமடைந்த பிரிஜ்பால், அவரது பாதுகாவலர் ஆகியோர் முதலில் காஜியாபாத்தில் உள்ள…
-
- 0 replies
- 284 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * மோதல் தொடரும் சிரியாவின் நகரனா அலெப்போவில், உதவிகள் செல்வதற்காக மூன்று மணிநேரம் மாத்திரம் மோதல் நிறுத்தம். * அகதிகள் போல பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதால், ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை அடுத்து ஜெர்மனியில் இராணுவமும் உள்நாட்டில் ரோந்தில் ஈடுபடவுள்ளது. * வீடியோ விளையாட்டுக்களுக்காக புதிய நகரங்களை நிர்மாணித்தல். மாய உலகை நிர்மாணிப்பதில் பிரிட்டிஷ் நிறுவனத்தின் சாதனை.
-
- 0 replies
- 460 views
-
-
சென்னை: பரபரப்பை ஏற்படுத்திய ரயில் பண கொள்ளை சம்பவத்தில் வடமாநில கொள்ளையர்கள் ஈடுபட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை தீவிரமாகியுள்ளது. கொள்ளையர்கள் ஜார்க்கண்டில் பதுங்கியிருப்பதாக வந்த ரகசிய தகவலையடுத்து தமிழக போலீஸார் அங்கு விரைந்துள்ளனர். சேலத்திலிருந்து சென்னைக்கு கடந்த 8-ம் தேதி இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4.16 மணிக்கு எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்தது சென்னை எக்ஸ்பிரஸ். இந்த ரயிலில் சேலம் பகுதியில் உள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளிலிருந்து அழுக்கான ரூபாய் நோட்டுக்கள் சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு தனி பெட்டி மூலம் அனுப்பப்பட்டிருந்தன. 226 மரப்பெட்டிகளில் 342.75 கோடி ரூபாய் இருந்தது. கோடிக்கணக்கான மதிப்பில் பணம் கொண்டு இருந்ததால் ஆயுதப்படை உதவி…
-
- 0 replies
- 593 views
-
-
குடியுரிமை பெற குடியேறிகள் பொய் சொல்கிறார்கள்: ஆஸ்திரேலிய அமைச்சர் ஆஸ்திரேலியாவின் பசிபிக் தீவில் உள்ள நவ்ரூ தீவில் அமைந்துள்ள தடுப்புக்காவல் மையத்தில் தஞ்சம் கோரி வந்தவர்கள், ஆஸ்திரேலிய குடியுரிமை பெறுவதற்காக பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாவதாக பொய் சொல்வதாக குடியேறிகளுக்கான அமைச்சர் குற்றஞ்சாட்டியுள்ளார். அங்கு தடுப்புக்காவலில் உள்ள இளம் வயதினர் மீது பாலியல் வன்கொடுமை, தாக்குதல்கள் மற்றும் மனநல துன்புறுத்தல்கள் போன்ற கொடுமைகளை சுட்டிகாட்டி இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கசிந்த ஆவணங்கள் வெளியிடப்பட்டன. அதனைத் தொடர்ந்து, அமைச்சர் பீட்டர் டுட்டனின் இந்தக் கருத்து வெளிவந்துள்ளது. கார்டியன் நாளிதழ் வெளியிட்ட நவ்…
-
- 0 replies
- 348 views
-
-
ஜெர்மனியில் புதிய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் தயார் உள்துறை அமைச்சர் தாமஸ் டி மெய்ஸிரி ஜெர்மனியில் சமீபத்தில் நடைபெற்ற இஸ்லாமியவாத தீவிரவாதத் தாக்குதல்களை தொடர்ந்து, உள்துறை அமைச்சர் தாமஸ் டி மெய்ஸிரி புதிய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை அறிவிக்க உள்ளார். குற்றவாளிகளை விரைந்து நாடு கடத்துதல் மற்றும் வீடியோ கண்காணிப்பு முறையை அதிகளவில் பயன்படுத்துதல் போன்ற திட்டங்கள் இதில் அடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரட்டை குடியுரிமைக்கு தடை வழங்கக் கோரியும், தேசியளவில் முஸ்லிம் பெண்கள் அணியும் புர்கா எனப்படும் அங்கி அணிய தடை விதிக்க வேண்டியும் உள்ளூர் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஜெர்மன் மண்ணில் பெரிய தாக்குதல் நடத்துவதற்கான சாத்…
-
- 0 replies
- 262 views
-
-
சர்ச்சைக்குரிய தென்சீன கடற்பகுதியில் வியட்நாம் தனது ராணுவத்தை நிறுத்தியிருப்பதற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீனாவின் அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் வெளியிட்டுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளவை பின்வருமாறு:- தற்போது வியட்நாம் தென் சீன கடற்பகுதியில் நிறுவியுள்ள புதிய மொபைல் ராக்கெட் லாஞ்சர்கள் சீனாவின் விமான ஓடுபாதைகளையும், ராணுவ நிலைகளையும் தாக்கும் வல்லமை கொண்டவை. சீனாவை குறி வைப்பதற்காகவே சமீபகாலமாக வியட்நாம் தனது ராணுவ நிலையை இப்பகுதியில் அதிகரித்து வருகிறது என தெரியவந்தால் அதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு வியட்நாம் ஆளாக நேரிடும். வியட்நாம் செய்த மிகப்பெரிய தவறுகளில் ஒன்றான இது மாறிவிடும். கடந்த காலங்களில் நடந்த போரில் வியட்நாம் தோல்வியுற்றதை மறந்திருக…
-
- 0 replies
- 300 views
-
-
புதுடெல்லி, தலைநகர் டெல்லியில் விபத்து ஒன்றில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நபரை அவ்வழியாக சென்ற நபர்கள் யாருமே காப்பாற்ற முன்வராத சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த இரக்கமற்ற செயலால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- மேற்கு டெல்லியின் சுபாஷ் நகர் பகுதியில் இ ரிக்ஷா ஒன்றின் மீது நேற்று அதிகாலை 5.30 மணியளவில் டெம்போ வேன் ஒன்று பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ரிக்ஷா ஓட்டுநர் மதிபூல் (வயது 40) என்பவர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். சுமார் ஒன்றரை மணி நேரமாக அவர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த போதும், அவ்வழியாக நடந…
-
- 1 reply
- 392 views
-
-
சுதந்திர தினம் வருகின்ற 15-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக தேசியச் சின்னங்கள் முன் செல்ஃபி எடுக்க, ஒரு வார காலத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.வருகின்ற 15-ம் தேதி, நாடு முழுவதும் சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக விமான நிலையம் உள்பட முக்கியமான பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும்படி மத்திய உள்துறை அமைச்சகம், மாநில அரசுகளுக்கு ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில், தேசியச் சின்னங்கள் முன் செல்ஃபி எடுக்க, ஒரு வார காலத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநில சுற்றுலாத் துறைக்கும், மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் சுற்றறிக…
-
- 0 replies
- 327 views
-
-
ஐ.எஸ். நிறுவனர் ஒபாமா; துணை நிறுவனர் ஹிலாரி: விமர்சனத் தாக்குதலைத் தொடரும் டிரம்ப் அமெரிக்க அதிபர் ஒபாமா ஐ.எஸ். அமைப்பின் நிறுவனர் என விமர்சித்துள்ளார் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளாரான டொனால்டு டிரம்ப். அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரச்சாரங்கள் நாளுக்கு நாள் சூடு பிடித்து வருகிறது. அதற்கு முக்கிய காரணமாக இருப்பவர் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப். டிரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தில் எதிரணியினர் குறித்து கூறும் குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்று அமெரிக்க அரசியல் வரலாற்றில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது என்றால் அது மிகையாகாது. அந்தவகையில் மற்றுமொரு அதிர்வலை…
-
- 0 replies
- 264 views
-