Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பட மூலாதாரம், Photo by AMIR MAKAR/AFP via Getty Images படக்குறிப்பு, துட்டன்காமனின் தங்க முகமூடி உட்பட அவரது கல்லறையின் 5,000 பொக்கிஷங்கள் முதல் முறையாக ஒன்றாகக் காட்சிப்படுத்தப்படும் கட்டுரை தகவல் கெய்ன் பியரி பிபிசி நியூஸ் 6 நவம்பர் 2025 பண்டைய உலகின் கடைசி எஞ்சியிருக்கும் அதிசயமான பிரமாண்டமான கிசா பிரமிடின் அருகில் கட்டப்பட்ட, உலகமே ஆவலுடன் நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்த கிராண்ட் எகிப்திய அருங்காட்சியகம் இறுதியாக திறக்கப்பட்டது. 120 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தத் தளம் - பிரான்சின் லூவர் அருங்காட்சியகத்தை விட இரண்டு மடங்கு பெரியது. பாய் கிங் (சிறிய வயதில் அரசரானவர்) என்று அழைக்கப்பட்ட துட்டன்காமன் உடன் புதைக்கப்பட்ட இதுவரை உலகத்தின் பார்வைக்கு காட்டப்படாத பொக்கிஷங…

  2. அணு ஆயுதப் பரிசோதனை! ட்ரம்ப் - புட்டின், இரு துருவங்கள் --- ------ ------- *ஜேர்மனிய நாஜி ஆட்சியை போன்று அமெரிக்காவை மாற்ற முற்படுகிறாரா ட்ரம்ப்? *ஆயுதப் பரிசோதனை என்ற ட்ரம்பின் அச்சுறுத்தல் சில மாதங்களில் அல்லது சில வாரங்களில் முடிவுக்கு வரலாம். *அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் உடன்படுவதாக இல்லை. -------- ------------- மூன்றாம் உலகப் போருக்கான ஏற்பாட்டை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொண்டு வருகிறாரா என்ற கேள்விகள் தற்போது சர்வதேச அரங்கில் பேசப்படுகின்றன. அமெரிக்க உலக அதிகாரம் என்பதைவிடவும் ட்ரம்பின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் அமெரிக்க ஏகாதிபத்திய சர்வாதிகாரம் என்ற தொனியில் சில சர்வதேச ஊடகங்கள் சில வமர்சனங்களை முன்வைத்துள்ளன. சீனா - ரசியா என்ற போட்டியில் ட்ரம்ப் …

  3. Published By: Digital Desk 3 09 Nov, 2025 | 03:18 PM வடக்கு ஜப்பானின் கடற்கரையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (09) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. இதனால் இவாட் மாகாணம் முழுவதும் கட்டிடங்கள் குலுங்கியுள்ளன. இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி மாலை 5:03 மணிக்கு (உள்ளூர் நேரம்) 6.7 ரிச்டர் அளவில் ஏற்பட்டதாகவும், அதன் மையப்பகுதி பசிபிக் பெருங்கடலில் சான்ரிகு அருகே சுமார் 10 கிலோ மீற்றர் ஆழத்தில் அமைந்திருந்ததாகவும் ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன், கடலில் அலைகள் ஒரு மீட்டர் (மூன்று அடி) வரை உயர வாய்ப்புள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இவாட் மாகாணத்தின் சில பகுதிகளில் நிலநடுக்கம் 4 ரிச்டர் அளவிலான நில அதிர்வுகளை ஏற்படு…

  4. அமெரிக்க விஞ்ஞானி ஜேம்ஸ் வாட்சன் காலமானார்! 08 Nov, 2025 | 03:33 PM DNA கட்டமைப்பைக் கண்டுபிடித்த அமெரிக்க விஞ்ஞானி ஜேம்ஸ் வாட்சன் தனது 97 ஆவது வயதில் காலமானார். அமெரிக்க விஞ்ஞானி ஜேம்ஸ் வாட்சன் 1953 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் விஞ்ஞானி பிரான்சிஸ் கிரிக் (Francis Crick) உடன் இணைந்து DNAயின் இரட்டைச் சுருள் கட்டமைப்பைக் கண்டுபிடித்தார். இது 20 ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய திருப்புமுனையாக இருந்தது. DNAயின் இரட்டைச் சுருள் கட்டமைப்பைக் கண்டுபிடித்ததற்காக அமெரிக்க விஞ்ஞானி ஜேம்ஸ் வாட்சனுக்கு 1962 ஆம் ஆண்டில் நோபல் பரிசும் கிடைத்தது. அமெரிக்க விஞ்ஞானி ஜேம்ஸ் வாட்சன் 1928 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிகாகோவில் பிறந்தார். ஜேம்ஸ் வாட்சன் தனது 15 வயதில் சிகாகோ பல்கலைக்கழகத்தில் படிக்…

  5. 10 நோயாளிகளை ஊசி போட்டு கொலை செய்த தாதி - ஜேர்மனியில் சம்பவம்! 08 Nov, 2025 | 02:08 PM ஜேர்மனியின் வூர்ஸ்பர்க் (Würzburg) நகரில் உள்ள வைத்தியசாலையில் இரவு நேரக் கடமையின் மன அழுத்தத்தைக் குறைக்கத் தனது பராமரிப்பில் இருந்த 10 நோயாளிகளுக்குத் தூக்க மாத்திரைகளை ஊசி மூலம் செலுத்தி கொலை செய்த ஆண் தாதிக்கு ஜேர்மனி நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது. 2020 ஆம் ஆண்டில் வூர்ஸ்பர்க் நகரில் உள்ள வைத்தியசாலையில் கடமைபுரியும் குறித்த தாதி, தனது பராமரிப்பில் இருந்த வயதான மற்றும் தீவிர நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளைக் இவ்வாறு கொலை செய்துள்ளார். இரவுப் பணியின் போது ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்கவே அவர் இந்தச் செயலைச் செய்ததாகக் கூறப்படுகிறது. நோயாளிகளுக்குத் தேவையற்…

  6. 24 Sep, 2025 | 09:55 AM (இணையத்தள செய்திப் பிரிவு) சீன கடற்படையின் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதலாவது மின்காந்த உந்துகணை தொழில்நுட்பம் கொண்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘புஜியான்’ (CNS Fujian), வெற்றிகரமாக உந்துகணை மூலம் விமானங்களை ஏவி, தரையிறக்கும் திறனைப் பரிசோதனை செய்துள்ளது. இது சீனாவின் விமானம் தாங்கிக் கப்பல்களின் வளர்ச்சியில் ஒரு முக்கிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், சீனாவின் உள்நாட்டு தயாரிப்பான முதல் மின்காந்த உந்துகணை தொழில்நுட்பம் கொண்ட விமானம் தாங்கிக் கப்பலான ‘புஜியான்’ (Fujian), J-15T, J-35 மற்றும் KJ-600 ஆகிய மூன்று வகையான போர் விமானங்களை வெற்றிகரமாக ஏவி, தரையிறக்கும் பயிற்சியை மேற்கொண்டதாக சீன மக்கள் விடுதலை இராணுவக் கடற்படை அறிவித்துள்ளது.…

  7. அமெரிக்க அரசு நிர்வாகம் முடக்கம் எதிரொலி: 40 விமான நிலையங்களில் சேவை குறைப்பு! அமெரிக்காவில் அரசு நிர்வாகம் முடங்கியுள்ளதால் நாட்டின் முக்கிய 40 விமான நிலையங்களில், விமானங்கள் சேவையை 10 சதவீதம் குறைப்பதாக அமரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், முந்தைய ஜனாதிபதி ஜோ பைடன் அரசின் பல்வேறு திட்டங்களையும், கொள்கைகளையும் மாற்றி அமைத்து வருகிறார். இதனால், அமெரிக்க பாராளுமன்றத்தில் டிரம்ப் கொண்டு வரும் மசோதாக்களுக்கு ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், அரசு துறைகளுக்கான நிதியை விடுவிக்க பாராளுமன்றத்தின் ஒப்புதல் பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அமெர…

  8. உலகிலேயே ஒரு ட்ரில்லியன் டொலருக்கு சொந்தக்காரராகும் முதல் நபராக எலான் மஸ்க்! 07 Nov, 2025 | 12:38 PM டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் உலகின் மிகப் பெரிய பணக்காரருமான எலான் மஸ்க், உலகிலேயே ஒரு ட்ரில்லியன் டொலர் சொத்துடைய முதல் நபர் என்ற பெருமைக்குரியவராகியிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எலான் மஸ்க், டெஸ்லா நிறுவனத்திடம் தனக்கு ஒரு ட்ரில்லியன் டொலர் ஊதியம் வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்திருந்துள்ளார். இந்நிலையில், அவருக்கு ஒரு ட்ரில்லியன் டொலர் ஊதியத்தினை வழங்க, டெஸ்லா நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். மொத்தமாக உள்ள நிறுவனத்தின் பங்குதாரர்களில் 75 வீதமானோர் இந்த சம்பள உயர்வுக்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், எலான் மஸ்க் இந்நிறு…

  9. இப்போது எப்படி இருக்கிறது காஸா? - போரின் பேரழிவை நேரில் கண்ட பிபிசி கட்டுரை தகவல் லூசி வில்லியம்சன் மத்திய கிழக்கு செய்தியாளர், காஸா 3 மணி நேரங்களுக்கு முன்னர் காஸா நகரை நோக்கி இருக்கும் கரையிலிருந்து காணுகையில் போரின் விளைவுகளை மறைக்க முடியாது. வரைபடங்கள் மற்றும் நினைவுகளிலிருந்து காஸா நகரம் அழிந்துவிட்டது. ஒருபுறம் பெயிட் ஹனூன் முதல் மறுபுறம் காஸா சிட்டி வரை தரை மட்டமாக ஒரே நிறத்தில் காட்சியளிக்கும் இடிபாடுகளே நினைவில் உள்ளன. இன்னும் தொலைதூரத்தில் நின்றுகொண்டிருக்கும் கட்டடங்களை தவிர, காஸா நகரில் நீங்கள் பயணிப்பதற்கோ அல்லது பல பத்தாயிர மக்களின் இருப்பிடங்கள் அமைந்திருந்ததற்கான அடையாளங்களை காண்பதற்கோ உங்களுக்கு எதுவும் இல்லை. போரின் ஆரம்ப வாரங்களில் இஸ்ரேலிய தரைப்படையின…

  10. ட்ரம்பின் உலகளாவிய வரிகளின் சட்டபூர்வமான தன்மை குறித்து அமெரிக்க உயர் நீதிமன்றம் சந்தேகம்! உலகப் பொருளாதாரத்திற்கு தாக்கங்களை ஏற்படுத்தும் ஒரு வழக்கில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கடுமையான வரி விதிப்புகளின் சட்டபூர்வமான தன்மை குறித்து அமெரிக்க உயர் நீதிமன்ற நீதிபதிகள் புதன்கிழமை (05) சந்தேகங்களை எழுப்பினர். இது ஜனாதிபதி ட்ரம்பின் அதிகாரங்களுக்கான பெரிய சோதனையாக அமைந்துள்ளது. அமெரிக்காவின் உற்பத்தித் தளத்தை மீட்டெடுக்கவும் அதன் வர்த்தக ஏற்றத்தாழ்வை சரிசெய்யவும் அவசியம் என்று ஜனாதிபதி கூறிய இறக்குமதி வரிகளை வெள்ளை மாளிகை நியாயப்படுத்துவது குறித்து பல பழமைவாதிகள் உட்பட பெரும்பான்மையான நீதிபதிகள் சந்தேகங்களை இதன்போது வெளிப்படுத்தினர். ட்ர்பின் வரி விதிப்பானது பல சிறு வணிகங…

  11. "பாகிஸ்தான் அணு ஆயுத சோதனையில் ஈடுபடுகிறது" - டிரம்ப் குற்றச்சாட்டு : பாகிஸ்தான், சீனா மறுப்பு 04 Nov, 2025 | 10:43 AM ரஷ்யா மற்றும் சீனா மட்டுமின்றி, வடகொரியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றன என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். அண்மையில் ஆசியப் பயணத்தை முடித்துவிட்டு அமெரிக்கா திரும்பிய டிரம்ப், அங்கு அணு ஆயுதச் சோதனை நடத்தப் பாதுகாப்புத் துறைக்கு உத்தரவிட்ட நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் இந்தக் கருத்தைத் தெரிவித்தார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில், "ரஷ்யாவும், சீனாவும் அணு ஆயுத சோதனைகளில் ஈடுபடுகின்றன. ஆனால் இது குறித்து அவர்கள் வெளிப்படையாகப் பேச…

  12. 04 Nov, 2025 | 10:28 AM ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கம்சாட்கா தீபகற்பத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. திங்கட்கிழமை (03) மதியம் 12.40 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 52.41 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 159.93 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை. இதனையடுத்து, நேற்று மதியம் 2.14 மணியளவில் அப்பக்குதியில் ரிக்டர் 6.1 அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்…

  13. பட மூலாதாரம், Fenamad கட்டுரை தகவல் ஸ்டெஃபானி ஹெகார்ட்டி உலக மக்கள் தொகை செய்தியாளர் 3 நவம்பர் 2025, 03:18 GMT புதுப்பிக்கப்பட்டது 3 நவம்பர் 2025, 05:26 GMT பெருவின் அமேசான் பகுதியில் உள்ள ஒரு சிறிய திறந்த வெளியில் தாமஸ் அனெஸ் டோஸ் சான்டோஸ் வேலை செய்து கொண்டிருந்தபோது, காட்டில் காலடிச் சத்தம் நெருங்குவதைக் கேட்டார். அவர் தான் சூழப்பட்டுவிட்டதை அறிந்து உறைந்து போனார். "ஒருவர் நின்று, அம்புடன் குறிவைத்துக் கொண்டிருந்தார்," என்று அவர் கூறுகிறார். "எப்படியோ நான் இங்கு இருப்பதை அவர் கவனித்துவிட்டார், நான் ஓடத் தொடங்கினேன்." அவர் மாஷ்கோ பைரோ (Mashco Piro) பழங்குடியினரை நேருக்கு நேர் எதிகொண்டார். பல தசாப்தங்களாக, நுவேவா ஓசியானியா (Nueva Oceania) என்ற சிறிய கிராமத்தில் வசிக்கும் …

  14. Nov 2, 2025 - 08:18 AM இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்ஷயர் பகுதியில் ரயில் ஒன்றில் பயணித்த பயணிகள் மீது நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில் 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸ் தெரிவித்துள்ளது. தாக்குதல் நடந்த போது, பயணிகள் டொன்காஸ்டரில் இருந்து லண்டனில் உள்ள கிங்ஸ் கிராஸ் நோக்கிப் பயணித்துள்ளனர். கத்திக் குத்துக்கு உள்ளானவர்களில் 9 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவத்தை அடுத்து, அந்த ரயிலின் போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், நகரத்தின் பல வீதி…

  15. வடக்கு ஆப்கானிஸ்தானின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான பால்க் மாகாணத்தின் தலைநகரான மசார்-இ-ஷெரிஃப் நகருக்கும், வடக்கு ஆப்கானிஸ்தானின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் ஒன்றான குல்ம் நகருக்கும் அருகில் 28 கிலோமீட்டர் (17.4 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்ளூர் நேரப்படி திங்கள்கிழமை அதிகாலை இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பால்க் ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் ஹாஜி ஜைத் கூறுகையில், இதுவரை குறைந்தது நான்கு பேர் இறந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. "நாங்கள் நிதி மற்றும் மனித இழப்புகளைச் சந்தித்துள்ளோம், பலர் காயமடைந்துள்ளோம், இதுவரை கிடைத்த தகவல்கள் நான்கு பேர் இறந்ததை உறுதிப்படுத்துகின்றன," என்று அவர் கூறினார். https://www.cnn.com/2025/11/02/…

  16. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோப்புப்படம் கட்டுரை தகவல் லானா லாம் பிபிசி செய்தியாளர் 42 நிமிடங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவிற்கு சென்ற ஒரு கொகுசு கப்பல், அதில் பயணித்த மூதாட்டி ஒருவரை அங்கேயே விட்டுவிட்டு கிளம்பிவிட்டது. அதன் பிறகு அந்த மூதாட்டி தீவில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டார். லிசார்ட் தீவிற்கு பயணிகளை அழைத்துச் சென்ற 'கோரல் அட்வென்ச்சர்' என்ற கப்பலில் 80 வயதான சுசான் ரீஸ் பயணித்துள்ளார். இது குறித்துப் பேசியுள்ள சுசான் ரீஸின் மகள், "கப்பல் நிர்வாகத்தின் கவனக்குறைவு மற்றும் அவர்களுக்கு அடிப்படை அறிவு இல்லாததே'' தனது தாயின் மரணத்திற்குக் காரணம் என குற்றம் சாட்டியுள்ளார். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து 'கோரல் அட்வென்ச்சர்' கப்பலின் '60 நாள…

  17. தன்சானிய தேர்தல் வன்முறை : 3 நாட்களில் 700 பேர் பலி ! 01 Nov, 2025 | 01:49 PM தன்சானியாவில் கடந்த புதன்கிழமை (ஒக்டோபர் 29) நடந்த பொதுத் தேர்தலைத் தொடர்ந்து வெடித்த போராட்டங்களில் மூன்று நாட்களில் சுமார் 700 பேர் கொல்லப்பட்டதாக பிரதான எதிர்க்கட்சித் தரப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. முக்கிய வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாமல் தடை செய்யப்பட்டதால், எதிர்க்கட்சியை நசுக்கும் வகையில் இந்தத் தேர்தல் நடத்தப்பட்டதாகக் கூறி ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. பிரதான எதிர்க்கட்சியான சடேமா (Chadema) கட்சியின் செய்தித் தொடர்பாளர், பாதுகாப்புப் படையினருடனான மோதல்களில் நூற்றுக்கணக்கானோர் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறியுள்ளார். தலைநகர் டார் எஸ் சலாமில் சுமார் 350 …

  18. இளவரசர் ஆண்ட்ரூவின் பட்டங்கள், குடியிருப்பு உரிமைகளை பறித்த மன்னர் சார்லஸ்! ஐக்கிய இராஜ்ஜியத்தின் மன்னர் மூன்றாம் சார்லஸ், தனது சகோரரர் ஆண்ட்ரூவின் இளவரசர் பட்டத்தை பறித்து, அவரை விண்ட்சர் மாளிகையான ரோயல் லோட்ஜை விட்டு வெளியேற வெளியேற உத்தரவிட்டுள்ளார். பக்கிங்ஹாம் அரண்மனை இந்த நடவடிக்கையை உறுதிப்படுத்தியது. மறைந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான ஆண்ட்ரூவின் உறவுகள் குறித்து நடவடிக்கை எடுக்க பல வாரங்களாக எழுந்த அழுத்தங்களின் பின்னணியில் இந்ந நடவடிக்கை வந்துள்ளது. ஜெஃப்ரி எப்ஸ்டீன் வழக்கு தொடர்பான குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள அவமானப்படுத்தப்பட்ட இளவரசரைச் சுற்றியுள்ள ஊழலில் இருந்து அரச குடும்பத்தை விலக்குவதற்கான ஒரு முக்கியமான நடவடிக்கையாக இதனை பலர் கருதுகின…

  19. மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட விரும்புகிறேன் - டொனால்ட் ட்ரம்ப் 28 Oct, 2025 | 10:27 AM அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எதிர்வரும் 2028 ஆம் ஆண்டு மூன்றாவது முறையாக ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையின் முன்னாள் மூலோபாயவாதி ஸ்டீவ் பானனின் அரசியலமைப்பிற்கு முரணாக மூன்றாவது முறையாக போட்டியிட வேண்டும் என்ற சமீபத்திய பரிந்துரை தொடர்பில் ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “அதைச் செய்ய நான் மிகவும் விரும்புகிறேன். என்னுடைய ஆதரவாளர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு சிறப்பாக உள்ளன” என தெரிவித்தார். எனின…

  20. அவுஸ்திரேயாவில் இலங்கையை சேர்ந்த பௌத்த துறவி ஒருவர் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார். இலங்கையை சேர்ந்த கீஸ்பரோவில் உள்ள தம்ம சரண கோவிலின் தலைமை துறவியான 70 வயதான நாவோதுன்னே விஜிதா என்பவரே குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்கிறார். மெல்போர்ன் வசித்து வரும் அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. பாலியல் குற்றங்களில் தேரர் குற்றவாளி மெல்போர்ன் விகாரையில் ஆறு சிறுமிகளுக்கு எதிரான வரலாற்று பாலியல் குற்றங்களில் தேரர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார். 1994 மற்றும் 2002 க்கு இடையிலான காலப்பகுதுியில் இந்தக் குற்றங்களைச் செய்ததாக இன்றையதினம் கவுண்டி நீதிமன்ற நடுவர் மன்றம் தீர்ப்பளித்…

  21. சூடானில் மருத்துவமனை மீது தாக்குதல் – 460 பேர் உயிரிழப்பு… October 31, 2025 சூடானில் மகப்பேற்று மருத்துவமனை ஒன்றில் சுமார் 460 பேரை அந்நாட்டு துணை இராணுவப் படை கொன்று குவித்ததாக உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸஸ் தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 2023 முதல் சூடான் இராணுவத்திற்கும் துணை இராணுவ படையினருக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்துவருகிறது. இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை, தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு டார்பர் பகுதியில் எல்-பாஷர் நகர மகப்பேற்று மருத்துவமனைக்குள் இருந்த நோயாளிகள் அவர்களின் உறவினர்கள் உட்பட அனைவரையும் துணை இராணுவப் படையினர் கொடுரமாகக் கொன்றனர் என உள்ளுர் மக்கள் தெரிவித்தனர். நூற்றுக்கணக்கானோர் கொடூரமாகக் கொல்லப்பட்டகா…

  22. அமெரிக்க அணு ஆயுதங்களை ‘உடனடியாக’ சோதனை செய்ய டிரம்ப் உத்தரவு October 31, 2025 அமெரிக்க அணு ஆயுதங்களை உடனடியாக சோதனை செய்து பார்க்குமாறு அமெரிக்க போர் துறைக்கு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். சீன அதிபர் ஷி ஜின்பிங் உடனான சந்திப்புக்கு முன்பாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த உத்தரவை தனது சமூக ஊடகமான ட்ரூத் சோஷியல் பதிவில் தெரிவித்துள்ளார். “பிற நாடுகளின் சோதனை திட்டங்களால் நான் அமெரிக்காவின் அணு ஆயுதங்களை அதே அளவில் சோதனை செய்ய உத்தரவிட்டுள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார். உலகில் எந்த நாட்டை விடவும் அமெரிக்காவில் அதிக அணு ஆயுதங்கள் இருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். ரஷ்யா இரண்டாவது இடத்திலும், அதை விட மிக குறைவாக ஆயுதங்களை கொண்டு சீனா மூன்றாவது இடத்திலும் உள்ளது. ஆனால், “ஐந்த…

  23. இந்தச் சிங்கங்கள் கடற்கரையில் காத்திருப்பது ஏன்? பட மூலாதாரம், Griet Van Malderen கட்டுரை தகவல் இசபெல் கெர்ரெட்சன் 5 மணி நேரங்களுக்கு முன்னர் நமீபியாவில், ஒரு பாலைவனச் சிங்கக் குழு தங்கள் பாரம்பரிய வேட்டையாடும் இடங்களை விட்டு வெளியேறி, அட்லாண்டிக் கடற்கரைக்குச் சென்று, உலகின் ஒரே 'கடல்சார் சிங்கங்களாக' மாறியுள்ளன. இந்த வியத்தகு நடத்தையை ஒரு புகைப்படக் கலைஞர் படம் பிடித்துள்ளார். அது உண்மையிலேயே பிரமிக்க வைக்கும் புகைப்படம்: நமீபியாவின் கூழாங்கற்கள் நிறைந்த கடற்கரையில் ஒரு பெண் சிங்கம் தூரத்தில் பார்வை பதிந்திருக்க, பின்னணியில் சீற்றமான அலைகள் கரையில் வந்து மோதிச் சிதறுகின்றன. நமீபியாவின் ஸ்கெலிட்டன் கடற்கரையின் கடினமான சூழலில் உயிர்வாழ கடல்நாய்களை வேட்டையாடக் கற்றுக் கொண…

  24. சீனாவுக்கான இறக்குமதி வரியை 10 வீதத்தால் குறைத்த அமெரிக்கா October 31, 2025 11:09 am தென் கொரியாவின் புசான் நகரில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்க்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை 57 சதவீதத்தில் இருந்து 47 சதவீதமாக வொஷிங்டன் குறைத்துள்ளது. ஆசிய – பசுபிக் பொருளாதார உச்சி மாநாடு புசான் நகரில் நடைபெற்றது. இம்மாநாட்டின் இடையில், டொனால்ட் ட்ரம்ப்பும் சீ ஜின்பிங்கும் சந்தித்து இருதரப்பு பேச்சவார்த்தை நடத்தினர். சுமார் ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் நீடித்த இச்சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய ட்ரம்ப், எங்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை மிகப் பெரிய வெற்றியாக அமைந்தது என்றத…

  25. வர்த்தகப் போருக்கு மத்தியில் தென் கொரியாவில் ட்ரம்ப் – ஜி வரலாற்று சந்திப்பு! உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளுக்கு இடையே வர்த்தகப் போர் நிறுத்தம் ஏற்படும் என்ற நம்பிக்கையுடன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வியாழக்கிழமை (30) தென் கொரிய விமானப்படை தளத்தில் சீனத் தலைவர் ஜி ஜின்பிங்குடனான சந்திப்பைத் தொடங்கினார். தெற்கு துறைமுக நகரமான பூசானில் நடைபெறும் பேச்சுவார்த்தைகள், 2019 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அவர்களின் முதல் நேரடி சந்திப்பாகும். அத்துடன், இது தென் கொரியா, ஜப்பான் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் பல வர்த்தக முன்னேற்றங்களைப் பற்றிய ட்ரம்ப்பின் ஆசியா முழுவதும் மேற்கொள்ளும் விசேட பயணத்தின் இறுதிக்கட்டத்தையும் குறிக்கிறது. சந்திப்பின் போது ஜியுடன் கைகுலுக்கிய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.