உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
27052 topics in this forum
-
சுவிட்சர்லாந்து நாட்டில் கோடை விடுமுறையை கழிக்க பிரித்தானிய பிரதமரான தெரசா மே பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.பிரித்தானிய நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள தெரசா மே தனது கோடை விடுமுறையை கழிக்க தனது கணவரான ஃபிலிப்புடன் தற்போது சுவிட்சர்லாந்து நாட்டில் தங்கியுள்ளார்.முன்னாள் பிரித்தானிய பிரதமரான மார்க்கரெட் தாட்சர் சுவிட்சர்லாந்து நாட்டிற்கு பயணம் மேற்கொண்டு 15 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது முதன் முதலாக தெரசா மே பிரதமராக சுவிட்சர்லாந்து நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். முன்னதாக, கோடை விடுமுறைக்கு சுற்றுலா செல்ல சுவிட்சர்லாந்து ஒரு மிகச்சிறந்த நாடு எனவும், அங்குள்ள ஆல்ப்ஸ் மலைகளில் நடந்து செல்வது பிடித்தமான பொழுபோக்கு என தெரசா…
-
- 0 replies
- 411 views
-
-
சில முஸ்லிம் பெண்கள் அணியும் முழு உடல் நீச்சல் உடைக்கு பிரான்சில் உள்ள கேன் நகரில் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இது அவசியமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.கேன்ஸ் நகரின் மேயர் டேவிட் லிஸ்னர்ட் வெளியிட்டுள்ள உத்தரவில், கடற்கரைக்கு செல்பவர்கள், நல்லொழுக்க நெறிமுறைகள் மற்றும் மதச்சார்பின்மையை மதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. பிரான்ஸ் மற்றும் அதன் மதம் சார்ந்த தளங்கள் மீது தீவிரவாத தாக்குதல்கள் நடைபெற்று வரும் வேளையில், மத அடையாளத்தை முன்னிலைப்படுத்தும் நீச்சல் உடையால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.தடையை மீறி அந்த ஆடையை அணிபவர்கள் சுமார் 40 டாலர்கள் வரை அபாரதம் கட்ட நேரிடும். ht…
-
- 0 replies
- 471 views
-
-
பசிபிக் தீவில் நிலநடுக்கம் பசிபிக் தீவில் உள்ள வனுவாட்டு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.5ஆக பதிவாகி உள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/179265/பச-ப-க-த-வ-ல-ந-லநட-க-கம-#sthash.s580ZWzj.dpuf
-
- 0 replies
- 234 views
-
-
விமான விபத்தில் உயிர்தப்பியவருக்கு 6.5 கோடி பரிசு விமான விபத்தில் உயிர்தப்பிய கேரளாவை சேர்ந்த ஊழியருக்கு துபாய் லாட்டரியில் ரூ.6.5 கோடி பரிசாக கிடைத்துள்ளது. திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு கடந்த 3-ந் திகதி துபாய் விமான நிலையத்தில் தரை இறங்கிய எமிரேட்ஸ் விமானம் விபத்தில் சிக்கி தீப்பிடித்தது. இதில் பயணம் செய்த 282 பயணிகள் உள்பட மொத்தம் 300 பேர் உயிர்தப்பினார்கள். இவர்களில் ஒருவர் முகம்மது பஷீர் அப்துல் காதர் (வயது 62). கேரளாவை சேர்ந்த இவர் துபாயில் ஒரு கார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். அவர் ரம்ஜான் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு குடும்பத்தினருடன் சென்றபோது துபாய் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள ´டூட்டி பிரீ´ கடையில் லாட்…
-
- 7 replies
- 674 views
-
-
பாஜக முக்கியத் தலைவர் துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் உத்தரப் பிரதேச மாநில மூத்த பாரதீய ஜனதா கட்சித் தலைவர்களில் ஒருவரான பிரிஜ்பால் திவோடியா, வியாழக்கிழமை இரவு டெல்லியை அடுத்த காஜியாபாத் அருகே மர்மநபர்களால் சரமாரி துப்பாக்கித் தாக்குதலுக்கு உள்ளானார். அவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முராத் நகரில் இருந்து காஜியாபாத்துக்கு தனது காரில், பாதுகாவலர்கள் உள்ளிட்ட ஐந்து பேருடன் சென்று கொண்டிருந்தபோது, இரண்டு பக்கங்களிலும் இருந்து வந்த கார்களில் இருந்த மர்ம நபர்கள், அவரது காரை நோக்கி ஏராளமான சுற்றுக்கள் துப்பாக்கியால் சுட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படுகாயமடைந்த பிரிஜ்பால், அவரது பாதுகாவலர் ஆகியோர் முதலில் காஜியாபாத்தில் உள்ள…
-
- 0 replies
- 284 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * மோதல் தொடரும் சிரியாவின் நகரனா அலெப்போவில், உதவிகள் செல்வதற்காக மூன்று மணிநேரம் மாத்திரம் மோதல் நிறுத்தம். * அகதிகள் போல பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதால், ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை அடுத்து ஜெர்மனியில் இராணுவமும் உள்நாட்டில் ரோந்தில் ஈடுபடவுள்ளது. * வீடியோ விளையாட்டுக்களுக்காக புதிய நகரங்களை நிர்மாணித்தல். மாய உலகை நிர்மாணிப்பதில் பிரிட்டிஷ் நிறுவனத்தின் சாதனை.
-
- 0 replies
- 460 views
-
-
சென்னை: பரபரப்பை ஏற்படுத்திய ரயில் பண கொள்ளை சம்பவத்தில் வடமாநில கொள்ளையர்கள் ஈடுபட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை தீவிரமாகியுள்ளது. கொள்ளையர்கள் ஜார்க்கண்டில் பதுங்கியிருப்பதாக வந்த ரகசிய தகவலையடுத்து தமிழக போலீஸார் அங்கு விரைந்துள்ளனர். சேலத்திலிருந்து சென்னைக்கு கடந்த 8-ம் தேதி இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4.16 மணிக்கு எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்தது சென்னை எக்ஸ்பிரஸ். இந்த ரயிலில் சேலம் பகுதியில் உள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளிலிருந்து அழுக்கான ரூபாய் நோட்டுக்கள் சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு தனி பெட்டி மூலம் அனுப்பப்பட்டிருந்தன. 226 மரப்பெட்டிகளில் 342.75 கோடி ரூபாய் இருந்தது. கோடிக்கணக்கான மதிப்பில் பணம் கொண்டு இருந்ததால் ஆயுதப்படை உதவி…
-
- 0 replies
- 594 views
-
-
புதுடெல்லி, தலைநகர் டெல்லியில் விபத்து ஒன்றில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நபரை அவ்வழியாக சென்ற நபர்கள் யாருமே காப்பாற்ற முன்வராத சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த இரக்கமற்ற செயலால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- மேற்கு டெல்லியின் சுபாஷ் நகர் பகுதியில் இ ரிக்ஷா ஒன்றின் மீது நேற்று அதிகாலை 5.30 மணியளவில் டெம்போ வேன் ஒன்று பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ரிக்ஷா ஓட்டுநர் மதிபூல் (வயது 40) என்பவர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். சுமார் ஒன்றரை மணி நேரமாக அவர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த போதும், அவ்வழியாக நடந…
-
- 1 reply
- 394 views
-
-
குடியுரிமை பெற குடியேறிகள் பொய் சொல்கிறார்கள்: ஆஸ்திரேலிய அமைச்சர் ஆஸ்திரேலியாவின் பசிபிக் தீவில் உள்ள நவ்ரூ தீவில் அமைந்துள்ள தடுப்புக்காவல் மையத்தில் தஞ்சம் கோரி வந்தவர்கள், ஆஸ்திரேலிய குடியுரிமை பெறுவதற்காக பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாவதாக பொய் சொல்வதாக குடியேறிகளுக்கான அமைச்சர் குற்றஞ்சாட்டியுள்ளார். அங்கு தடுப்புக்காவலில் உள்ள இளம் வயதினர் மீது பாலியல் வன்கொடுமை, தாக்குதல்கள் மற்றும் மனநல துன்புறுத்தல்கள் போன்ற கொடுமைகளை சுட்டிகாட்டி இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கசிந்த ஆவணங்கள் வெளியிடப்பட்டன. அதனைத் தொடர்ந்து, அமைச்சர் பீட்டர் டுட்டனின் இந்தக் கருத்து வெளிவந்துள்ளது. கார்டியன் நாளிதழ் வெளியிட்ட நவ்…
-
- 0 replies
- 348 views
-
-
ஜெர்மனியில் புதிய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் தயார் உள்துறை அமைச்சர் தாமஸ் டி மெய்ஸிரி ஜெர்மனியில் சமீபத்தில் நடைபெற்ற இஸ்லாமியவாத தீவிரவாதத் தாக்குதல்களை தொடர்ந்து, உள்துறை அமைச்சர் தாமஸ் டி மெய்ஸிரி புதிய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை அறிவிக்க உள்ளார். குற்றவாளிகளை விரைந்து நாடு கடத்துதல் மற்றும் வீடியோ கண்காணிப்பு முறையை அதிகளவில் பயன்படுத்துதல் போன்ற திட்டங்கள் இதில் அடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரட்டை குடியுரிமைக்கு தடை வழங்கக் கோரியும், தேசியளவில் முஸ்லிம் பெண்கள் அணியும் புர்கா எனப்படும் அங்கி அணிய தடை விதிக்க வேண்டியும் உள்ளூர் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஜெர்மன் மண்ணில் பெரிய தாக்குதல் நடத்துவதற்கான சாத்…
-
- 0 replies
- 262 views
-
-
சர்ச்சைக்குரிய தென்சீன கடற்பகுதியில் வியட்நாம் தனது ராணுவத்தை நிறுத்தியிருப்பதற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீனாவின் அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் வெளியிட்டுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளவை பின்வருமாறு:- தற்போது வியட்நாம் தென் சீன கடற்பகுதியில் நிறுவியுள்ள புதிய மொபைல் ராக்கெட் லாஞ்சர்கள் சீனாவின் விமான ஓடுபாதைகளையும், ராணுவ நிலைகளையும் தாக்கும் வல்லமை கொண்டவை. சீனாவை குறி வைப்பதற்காகவே சமீபகாலமாக வியட்நாம் தனது ராணுவ நிலையை இப்பகுதியில் அதிகரித்து வருகிறது என தெரியவந்தால் அதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு வியட்நாம் ஆளாக நேரிடும். வியட்நாம் செய்த மிகப்பெரிய தவறுகளில் ஒன்றான இது மாறிவிடும். கடந்த காலங்களில் நடந்த போரில் வியட்நாம் தோல்வியுற்றதை மறந்திருக…
-
- 0 replies
- 301 views
-
-
சுதந்திர தினம் வருகின்ற 15-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக தேசியச் சின்னங்கள் முன் செல்ஃபி எடுக்க, ஒரு வார காலத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.வருகின்ற 15-ம் தேதி, நாடு முழுவதும் சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக விமான நிலையம் உள்பட முக்கியமான பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும்படி மத்திய உள்துறை அமைச்சகம், மாநில அரசுகளுக்கு ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில், தேசியச் சின்னங்கள் முன் செல்ஃபி எடுக்க, ஒரு வார காலத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநில சுற்றுலாத் துறைக்கும், மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் சுற்றறிக…
-
- 0 replies
- 328 views
-
-
ஐ.எஸ். நிறுவனர் ஒபாமா; துணை நிறுவனர் ஹிலாரி: விமர்சனத் தாக்குதலைத் தொடரும் டிரம்ப் அமெரிக்க அதிபர் ஒபாமா ஐ.எஸ். அமைப்பின் நிறுவனர் என விமர்சித்துள்ளார் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளாரான டொனால்டு டிரம்ப். அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரச்சாரங்கள் நாளுக்கு நாள் சூடு பிடித்து வருகிறது. அதற்கு முக்கிய காரணமாக இருப்பவர் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப். டிரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தில் எதிரணியினர் குறித்து கூறும் குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்று அமெரிக்க அரசியல் வரலாற்றில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது என்றால் அது மிகையாகாது. அந்தவகையில் மற்றுமொரு அதிர்வலை…
-
- 0 replies
- 264 views
-
-
சிறுவர்களை வைத்து ஆபாச படங்களை தயாரித்த கும்பல் சிக்கியது : 29 சிறுவர்கள் இனம்காணல் தமது வலையமைப்பின் மூலம் உலகத்தின் பல நாடுகளுக்கு மில்லியன் கணக்கான சிறுவர்களின் பாலியல் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை விநியோகித்து வந்த குற்றச்சாட்டில் இலங்கையர்கள் உட்பட 7 பேரை ஸ்பானிய சிவில் பாதுகாப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். குறித்த வலையமைப்பினர் சுமார் 80 சிறுவர்களை பயன்படுத்தி இவ்வாறான பாலியல் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்துள்ளதாகவும் இதில் 29 சிறுவர்கள் இனம் காணப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு சிவில் பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். குறித்த வலையமைப்பின் தலைவரும் கைது செய்யப்பட்டுள்ளதோடு குறித்த நபர் 13 வயதுக்கு குறைவான சிறுவர்க…
-
- 0 replies
- 311 views
-
-
பயங்கரவாத தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டதாக கனேடிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தனி நபர் ஒருவர் பயங்கரவாத தாக்குதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள முயற்சித்திருந்தார் எனவும், இந்த தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். ஒன்டாரியொவின் ளுவசயவாசழல ல் இந்த தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும் விரைந்து செயற்பட்ட காவல்துறையினர் தாக்குதல் முயற்சியை முறிடியத்துள்ளனர். தாக்குதல் முயற்சி மேற்கொண்ட நபர் கொலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும் இந்த தகவல் இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. எவ்வாறான தாக்குதல் எவ்வாறு முறியடிக்கப்பட்டது என்பது பற்றிய விபரங்களை காவல்துறையினர் வெளியிடவில்லை. ht…
-
- 0 replies
- 192 views
-
-
ரியோ ஒலிம்பிக்கும், ஆப்ரிக்க பிரேஸிலிய பூர்வகுடிகளின் கண்ணீரும்...! கடந்த ஜூன் 30- ம் தேதி. அன்று ஆர்வமாக நெட்டிசன்கள் உலக சமூக ஊடக தினத்தை கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். சமூக ஊடகத்திற்கும் தங்களுக்குமான பந்தத்தை உருக்கமாக, கிண்டலாக, நெகிழ்ச்சியாக என்று விதவிதமான நடைகளில் எழுதி, சமூக ஊடகத்தில் பகிர்ந்து கொண்டிருந்த, அதே நன்னாளில்தான், பிரேசிலின் ரியோ விமான நிலைய வாசலில், ஏறத்தாழ 30 காவலர்களும், தீயணைப்பு வீரர்களும் அவர்கள் நாட்டிற்கு வந்தவர்களை மிகவும் வித்தியாசமான வாசகங்கள் கொண்ட பதாகைகளை தாங்கி, வரவேற்றுக் கொண்டிருந்தார்கள். ஆம். சந்தேகம் வேண்டாம், 'வித்தியாசமான வாசகங்கள்' கொண்ட பதாகைதான். அதில் இவ்வாறாகதான் எழுதி இருந்தது, “நரகத்திற்கு உங்களை அன்புட…
-
- 0 replies
- 407 views
-
-
இலங்கையிலிருந்து வந்த இஸ்ரேல் பெண்ணிடம் இருக்கும் குழந்தை யாருடையது? கோப்புப்படம் இலங்கையிலிருந்து ஒரு வயதுக் குழந்தையுடன் நாடு திரும்பியுள்ள இஸ்ரேல் பெண்ணொருவரிடம் இருந்த குழந்தை யாருடையது பற்றிய கேள்வி எழுந்துள்ளதால், அவர் டெல் அவிவ் விமான நிலையத்தில் சனிக்கிழமை முதல் தங்க வைக்கப்பட்டுள்ளார். 49 வயதான கெலிட் நாகாஷ் வைத்திருக்கும் குழந்தை அவருடைய பௌதீக ரீதியான குழந்தை தானா என்பதை அறிய டிஎன்எ சோதனை நடத்தப்படும். சோதனை எதிராக அமையுமானால், அந்த குழந்தை இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் என்று ஆட்சியாளர்கள் கூறியிருக்கின்றனர். இலங்கையை விட்டு வருவதற்கு இன்னொரு குழந்தையின் கடவுச்சீட்டை பயன்படுத்தி இருப்பதை விமான நிலைய அதிகாரிகள் கண்டறிந்தபோது நாக…
-
- 5 replies
- 750 views
-
-
அவுஸ்திரேலிய குடிசன மதிப்பீடு இணையத்தளம் முடக்கம் அவுஸ்திரேலியாவின் குடிசன மதிப்பீட்டுத் திணைக்களத்தின் இணையத்தளம் மீது மேற்கொள்ளப்பட்ட இணையத் தாக்குதலைத் தொடர்ந்து, அவ்விணையத்தளத்தை முடக்குவதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் எடுத்த முடிவைத் தொடர்ந்து, அவுஸ்திரேலிய மக்களிடத்தில் ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிப்பதற்கு, அந்நாட்டு அரசாங்கம் முயல்கிறது. இந்த இணையத் தாக்குதலின் காரணமாக, மக்களின் தனிப்பட்ட தகவல்கள் எவையும் திருடுபோகவில்லை என நேற்றுப் புதன்கிழமை தெரிவித்த அவுஸ்திரேலிய அரசாங்கம், முன்னெச்சரிக்கையாகவே இவ்விணையத்தளத்தை முடக்கும் முடிவை எடுத்ததாகத் தெரிவித்தது. செவ்வாய்க்கிழமை மாலை நேரத்தில் ஆரம்பித்த இந்த இணையத் தாக்குதல்கள…
-
- 0 replies
- 252 views
-
-
16 ஆண்டுகள் உண்ணாமல் உயிர் வாழ்ந்தது எப்படி? வெளியாகியது உண்மை மணிப்பூர் மாநிலத்தில் சிறப்பு ஆயுதப்படை சட்டத்தால் அப்பாவி மணிப்பூர் இளைஞர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள். எனவே அந்த சட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என ஐரோம் ஷர்மிளா கடந்த 16 ஆண்டுகளாக உண்ணாவிரதப்போராட்டம் நடத்தியும் அரசு தந்து கோரிக்கையை ஏற்காததால், தானே முதல்வராகும் எண்ணத்தில் 16 ஆண்டுகால போராட்டத்தை தேன் அருந்தி முடித்து கொண்டார். இவ்வளவு ஆண்டுகள் போராட்டம் நடத்தியும் ஷர்மிளாவின் உடல்நலத்தில் பெரிதாக பாதிப்பு ஏற்படவில்லை. இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்த இரகசியத்தை ஷர்மிளாவின் சகோதரர் ஐரோம் சிங்கஜித் வெளியிட்டார். அவர் கூறுகையில்…
-
- 0 replies
- 254 views
-
-
ஜேர்மனி நாட்டில் பாதுகாப்பு இல்லை என்ற காரணத்தால் அந்நாட்டை சேர்ந்த குடும்பத்தினர் புகலிடம் கோரி ரஷ்ய நாட்டிற்கு சென்றுள்ளனர்.ஜேர்மனியில் வசித்து வந்த Andre drove, Carola Griesbach தம்பதியினர் மற்றும் இவர்களது இரண்டு மகள்கள், பேரப்பிள்ளைகள் ஆகியோர், கடந்த 2015 ஆம் ஆண்டு ரஷ்ய தலைநகரான மாஸ்கோவிற்கு பயணித்துள்ளனர். அந்நாட்டிற்கு சென்ற இவர்கள், எங்கள் தாய்நாடான ஜேர்மனியில் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை, மேலும் எங்கள் குழந்தைகள் வளர்வதற்கான பாதுகாப்பான சூழல் அங்கு இல்லை என்று கூறியுள்ளனர். இதற்கு அவர்கள் முன்வைக்கும் காரணம் என்னவென்றால், ஜேர்மன் நாட்டில் அளவுக்கதிமான குடியேறிகள் வந்துள்ளனர். இதனால் அந்நாட்டில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதால், …
-
- 4 replies
- 596 views
-
-
நவ்ரு தடுப்பு நிலையத்தில் 2,000க்கு மேற்பட்ட துன்புறுத்தல்கள் நவ்ருவிலுள்ள அகதிகளுக்கான அவுஸ்திரேலிய தடுப்பு நிலையத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளில், பாலியல் துன்புறுத்தல், தாக்குதல் மற்றும் முயற்சிக்கப்பட்ட தானாக தாக்கிக் கொள்ளுதல் உட்பட 2,000க்கு மேற்பட்ட சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பத்திரிகையொன்று நேற்றுப் புதன்கிழமை (10) தெரிவித்துள்ளது. மேற்கூறப்பட்ட சம்பவங்களில், அரைவாசிக்கும் மேலானவை, சிறுவர்களுடன் தொடர்புடையவை எனக் கூறப்பட்டுள்ளது. கார்டியன் அவுஸ்திரேலியாவால் பிரசுரிக்கப்பட்டுள்ள கசிந்த ஆவணங்களின் மூலம், அவுஸ்திரேலியாவினால், அயலிலுள்ள தென் பசுபிக் தீவுகளில் நடாத்தப்படும் இரண்டு அகதிகள் தடுப்பு நிலையங்களில் ஒன்றான நவ்ருவில் மேற்கொள்ளப்…
-
- 1 reply
- 265 views
-
-
ஐரோப்பிய ஒன்றியம் மீது துருக்கி அமைச்சர் புகார் கடந்த மாதம் துருக்கியில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி குறித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் பதில், துருக்கி ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினராவதை தடுக்கும் வண்ணம் உள்ளது என துருக்கியின் வெளியுறவுத் துறை அமைச்சர் மெவ்லுட் சவுசோக்லு தெரிவித்துள்ளார். துருக்கியில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியைத் தொடர்ந்து அதிகாரிகளின் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் பார்வை மிகவும் தவறாக உள்ளதாகவும் மேலும் மேற்கத்திய நாடுகள் துருக்கியுடனான நட்பை துண்டித்தால் அது அவர்களின் தவறே ஒழிய அங்காரா, ரஷியா, சீனா மற்றும் இஸ்லாமிய நாடுகளுடன் கொண்ட உறவு காரணம் அல்ல என அமைச்சர் தெரிவித்துள்ளார். சு…
-
- 0 replies
- 226 views
-
-
தாய்லாந்திற்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு சிறப்பு சிம்கார்டு வழங்க பரிசீலனை தாய்லாந்திற்கு வரும் வெளிநாட்டு பயணிகள், ஒரு சிறப்பு சிம் கார்டை பயன்படுத்தும் திட்டத்தை கொண்டு வர அரசு பரிசீலனை செய்து வருகிறது. இதன் மூலம் அதிகாரிகள் வெளிநாட்டு பயணிகளின் அலைபேசி, இயக்கத்தில் இல்லாத நேரத்திலும் அதை கண்காணிக்க முடியும். கோப்புப்படம் தாய்லாந்தின் தொலைத்தொடர்பு ஒழுங்காற்றுத் துறை, இந்த நடவடிக்கையை கொள்கையளவில் அங்கீகரித்துள்ளது. இது தனிநபர்களின் உரிமையில் தலையிடுவதாக இருக்கும் என்ற கூற்றை அது மறுத்துள்ளது. தேசிய ஒளிபரப்பு மற்றும் தொலைத்தொடர்பு ஆணையம் இந்த திட்டம் குற்ற நடவடிக்கையை தடுக்கும் நோக்கத்தோடு முன்வைக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது. தாய்…
-
- 0 replies
- 214 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * ஹிலாரி கிண்டனை தடுக்க ‘’துப்பாக்கி ஆதரவாளர்கள்’’ அதனை பயன்படுத்தும் தமது உரிமையை பயன்படுத்த வேண்டும் என்று பேசியதற்காக டொனால்ட் ட்ரம்ப் விமர்சிக்கப்படுகிறார். * நைஜீரியாவில் காணிகளுக்கான பிரச்சினை. விவசாயிகளுக்கும், மாடு மேய்ப்போருக்குமான மோதல்களில் நூற்றுக்கணக்கானோர் பலி. * பிரிட்டனின் உயரமான மலைகளின் உயிரினங்களை தேடி ஒரு பயணம். அவை கடலில் மூழ்கிக்கிடக்கும் மலைகள்.
-
- 0 replies
- 434 views
-
-
மணிக்கு 1200 கி.மீ., வேக போக்குவரத்து: தயாராகிறது துபாய் துபாய்: மணிக்கு 1200 கி.மீ., வேகத்தில் பயணம் செய்யக் கூடிய போக்குவரத்து அமைப்பை ஏற்படுத்தும் முயற்சியில் துபாய் மும்முரமாய் ஈடுபட்டுள்ளது. ஒரு டியூப் வடிவ அமைப்பை ஒரு இடத்திற்கும் இன்னொரு இடத்திற்கும் இடையே ஏற்படுத்தி அதன் வழியே, 'கேப்ஸ்யூல்' போன்ற சாதனத்தில் அமர்ந்து பயணிகள் செல்லக் கூடிய வகையில் இப்போக்குவரத்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அமைப்பு இன்னமும் டிசைன் செய்யப்படவில்லை. எனவே, அடுத்த மாதம் உலகம் முழுவதும் உள்ள சிறந்த 100 பொறியாளர்களை அழைத்து, அவர்களுக்கிடையே 48 மணி நேரத்திற்கு ஒரு போட்டியை நடத்தி…
-
- 9 replies
- 668 views
-