உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26703 topics in this forum
-
வலதுசாரிகள் எப்படிச் சிரிக்கிறார்கள்? சோவியத் ஒன்றியம் ஒருநாள் உடைந்து சிதறியது. ரஷ்யாவின் வீதிகளில் கிளர்ச்சியாளர்களை ஒடுக்க வந்த, பீரங்கிகளின் வாயில் பூங்கொத்துகளைச் செருகினார்கள் மக்கள். ராணுவத்தினர் சிரித்தவாறே கையசைத்துக் கடந்தார்கள். திடீரெனத் தகர்ந்து நொறுங்கியது பெர்லின் சுவர். ஆளுக்கு ஒரு கோடரியுடன் வந்து ஒரு கல்லையாவது பெயர்த்தெடுத்துச் செல்ல முயன்றார்கள். காரணங்கள் நீண்ட காலமாகக் கனல்கின்றன. வரலாறு நம்ப முடியாத தருணத்தில் நிகழ்ந்துவிடுகிறது. கூடவே, ஒருபோதும் எதிர்பாராத தொடர் விளைவுகளையும் காலத்தின் கையில் திணித்துச் செல்கிறது. உலகின் ஐந்து பெரும் வல்லரசுகளில் ஒன்றும் முதலாளித்துவத்தின் இதயமுமான பிரிட்டன், ஐரோப்…
-
- 1 reply
- 362 views
-
-
எதிர்ப்புப் பிரச்சாரத்துக்கு உயிர்க் காற்றை அளிப்பதுபோல இருந்துள்ளது ஆதரவுப் பிரச்சாரம் ‘பிரெக்ஸிட்’ வாக்கெடுப்புக்கு முன்னால் லண்டன் போனவர்களுக்கு ‘ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டனாவது, விலகுவதாவது’ என்று தோன்றியிருக்கும். ‘சேர்ந்தே இருப்போம்’ என்ற வண்ண சுவரொட்டிகளும் பதாகைகளும் பெரும்பாலான வீட்டு ஜன்னல்களில் காட்சி தந்தன. பிரச்சாரம் தொடங்கியபோது தடுமாறிய பங்குச் சந்தைகள்கூட பின்னர் சுதாரித்தன. ‘சேர்ந்தே இருப்பது’ என்ற முடிவுதான் வெற்றி பெறும் எனப் பந்தயங்கள் கட்டப்பட்டன. சுதந்திரக் கட்சி (யு.கே.ஐ.பி.) தலைவர்கூடத் தோற்றுவிடுவோம் என்றுதான் நம்பியுள்ளார். சண்டர்லேண்ட் முதல் முடிவைத் தந்தது. அதுதான் தேசிய அளவிலான முடிவுக்கு ‘மாதிரி’யாக இருக்கும். ‘வெளியே…
-
- 3 replies
- 431 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவதால் பங்குச்சந்தைகளில் நிலவும் பயத்தைப் போக்க பிரிட்டன் நிதியமைச்சர் முயற்சி; பிரிட்டன் பொருளாதாரம் வலுவாக இருப்பதாக வலியுறுத்தல். * கருத்தறியும் வாக்கெடுப்பு முடிவுக்குப் பின் பிரிட்டனில் வெறுப்புக்குற்றங்கள் நடந்திருப்பதாக புகார்; புலனாய்கிறது பிரிட்டிஷ் காவல்துறை. * ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய ராஜ்ஜியம் விலகுவதைத் தனது அரசாங்கம் தடுக்கப்போவதாக ஸ்காட்லாந்து முதல் அமைச்சர் எச்சரிக்கை; அது சட்டப்படி சாத்தியமா என்பதை ஆராய்கிறது பிபிசி.
-
- 0 replies
- 448 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகுவது பிரிட்டனுக்கு நன்மை தராது - கேமரன் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறும் தீர்மானம் நாட்டின் நன்மைக்குரியதல்ல. ஆனால் அந்த தீர்மானம் மதிக்கப்பட்டு சிறந்த சாத்தியமான முறையில் நடைமுறை படுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் டேவிட் கேமரன் தெரிவித்திருக்கிறார். நிறைந்திருந்த மக்கள் பிரதிநிதிகளின் மத்தியில் உரையாற்றியபோது அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். அவர் பதவி விலக போவதாக அறிவித்த பிறகு ஆற்றுகின்ற முதல் உரையில், முறையாக விலகல் நடைமுறை குறித்து தனக்கு அடுத்து வரும் பிரதமர் தீர்மானிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். பிரிவு 50 என்று அறியப்படும் பொறிமுறையில் எந்த மாதிரியான புதிய உறவை உருவாக்குவது என்ற…
-
- 0 replies
- 272 views
-
-
Brexit-க்குப் பின்னர் Frexit? ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் விலகும் நடைமுறை, Brexit என அழைக்கப்பட்டது. Britain exit என்ற ஆங்கிலச் சொற்றொடரின் சுருக்கமான வடிவமே, Brexit என அழைக்கப்பட்டது. அந்த வெளியேற்றத்தில் ஐக்கிய இராச்சியம் வெற்றியடைந்துள்ள நிலையில், ஏனைய சில -exitகளும் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெளியேற்றச் சொற்றொடர், உண்மையில் Grexit என்பதிலிருந்தே ஆரம்பித்தது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து கிரேக்கத்தை வெளியேற்ற வேண்டுமென்ற கோரிக்கை எழுந்த நிலையில், அதை Grexit என பொருளாதார நிபுணர்கள் சிலர் அழைத்தனர். ஆனால், அந்த வெளியேற்றம் இடம்பெற்றிருக்கவில்லை. தற்போது வெளியாகியுள்ள ஏனைய -exit கோரிக்கைகள்: Frexit…
-
- 0 replies
- 540 views
-
-
ராணுவ விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்காக அதிபர் எர்துவான் மன்னிப்பு கோரினார்: ரஷியா கடந்த ஆண்டு, சிரியா எல்லையில் பறந்த ரஷிய ராணுவ விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதற்காக துருக்கி அதிபர் எர்துவான் மன்னிப்புக் கோரி உள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது. ரஷியா - துருக்கி இடையேயான உறவுகள் மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என்றும், நடந்த சம்பவம் குறித்து எர்துவான் தன்னுடைய ஆழ்ந்த வருத்தங்களை ரஷிய அதிபர் புடினுக்கு எழுதிய கடிதத்தில் கூறியதாக ரஷியா தெரிவித்துள்ளது. துருக்கி அதிபர் எர்துவான் ரஷியாவின் இந்த அறிக்கை குறித்து துருக்கி இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் ஒரு பெரிய நெருக்கடியை தூண்டியத…
-
- 2 replies
- 590 views
-
-
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தை ஆட்சியில் இருந்து இறக்குவதற்காக இங்கு வாழும் மக்களில் சிலர் ஆயுதப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதிபருக்கு ரஷியாவும்,போராளி குழுக்களுக்கு அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியாவும் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், சிரியா ராணுவத்தை எதிர்கொள்ளும் வகையில் அமெரிக்க உளவுப்படை மற்றும் சவுதி ராணுவ அதிகாரிகள் ஒரு கப்பல் மூலம் ஏராளமான நவீனரக ஆயுதங்களை போராளி குழுக்களுக்கு அனுப்பி வைத்தனர். இந்த ஆயுதங்களை ஜோர்டான் நாட்டு உளவுத்துறையினர் கொள்ளையடித்து அவற்றை கள்ளச் சந்தையில் விற்றுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. ஜோர்டான் தலைநகர் அம்மானில் அமெரிக்க நிதியுதவியுடன் இயங்கும் போலீஸ் பயிற்சி மையத்தின்மீ…
-
- 0 replies
- 269 views
-
-
பிரிவு 50-ஐ பிரிட்டன் பிரயோகிக்கும் வரை வெளியேறுவதற்கு பேச்சுவார்த்தை நடைபெறாது - ஜெர்மனி பிரிவு 50 என்று அறியப்படும் முறையான வழிமுறையை லண்டன் தொடங்குவது வரை, பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் நிபந்தனைகள் பற்றிய பேச்சுவார்த்தைகள் நடைபெறாது என்று ஜெர்மானிய சான்சலர் ஏங்கெலா மெர்கலின் பேச்சாளர் தெரிவித்திருக்கிறார். பிரிட்டன் பிரிவு 50-யை தொடங்கினால் தான் வெளியேறுவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கும் - ஜெர்மனி ஒரு தேக்கநிலையை யாரும் விரும்பவில்லை என்று ஸ்டெஃபென் செய்பர்ட் கூறியிருக்கிறார். பிரிட்டிஷ் அரசின் நிலைக்கும், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகப் பரப்புரை கொண்ட முக்கிய நபர்களின் நிலைக்கும் முரண்பாடாக இந்த நிலைபாடு உள…
-
- 0 replies
- 445 views
-
-
'பிறிக்ஸிட்' விவகாரம் ; உலகின் மிகப் பெரிய 400 செல்வந்தர்கள் 100 பில்லியன் ஸ்ரேலிங் பவுண் இழப்பு பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு எடுத்த தீர்மானத்தால் உலகின் மிகப் பெரிய 400 செல்வந்தர்கள் சுமார் மொத்தம் 100 பில்லியன் ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான பணத்தை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை 'பிறிக்ஸிட்' என்ற மேற்படி வாக்கெடுப்பின் பெறுபேறுகள் வெளியானதையடுத்து பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியே இந்த நிலைமைக்கு காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதன் பிரகாரம் உலகின் மிகப் பெரிய செல்வந்தர்களான மைக்ரோ சொப்ட் ஸ்தாபகர் பில்கேட்ஸ், அமேஸன் ஸ்தாபகர் ஜெப் பெஸொஸ், பிரித்தானியாவின் மிகப் பெரிய செல்வந்தரான ஜெரால்ட் குர…
-
- 2 replies
- 503 views
-
-
அயர்லாந்து கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் பிரித்தானியர் களின் எண்ணிக்கை அதிகரிப்பு; விண்ணப்பப்படிவங்கள் முடிந்துவிட்டதாக சில தபாலகங்களில் அறிவிப்பு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் பிரிவதற்கு ஆதரவாக பிரித்தானிய மக்கள் வாக்களித்த நிலை யில், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடனான தமது தொடர்புகளைப் பேண விரும்பும் பிரித்தானிய மக்கள் சிலர் அயர்லாந்து கடவுச் சீட்டை பெறுவதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் பிரித்தானிய தபால் நிலையங்களில் அயர்லாந்து கடவுச்சீட்டு விண்ணப்பங் களுக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரிட்டன் தற்போதுவரை ஐரோப…
-
- 0 replies
- 202 views
-
-
பிரெக்ஸிட்டுக்கு பிறகு பிரிட்டனில் தலைதூக்கும் நிறவெறி படம்: ஏ.எஃப்.பி. ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேற பொதுவாக்கெடுப்பில் மக்கள் தீர்ப்பளிக்க, அங்கு தற்போது அயல்நாட்டவர்கள் மீதான வெறுப்புப் பேச்சு, சுவரொட்டிகள், தாக்குதல் போன்ற 100 சம்பவங்கள் புகார் அளிக்கப்பட்டுள்ளன. ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளது. பள்ளி ஒன்றின் வாசல் சுவரொட்டி “போலந்து புழு பூச்சிகளுக்கு இனி இடமில்லை” என்ற வாசகத்தை தாங்கியிருந்தது கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் போலந்து சமூக மற்றும் பண்பாட்டு கூட்டமைப்பு கட்டடத்துக்கு வெளியேயும் இதே வாசகம் கொண்ட சுவரொட்டிகள், அட்டைகள் காணப்பட்டதால் ஸ்காட்லாந்து யார்டு விசாரணைக்கு அழைக்…
-
- 5 replies
- 430 views
-
-
தீ பிடிக்க பிடிக்க தரையிறங்கிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்! (வீடியோ) சிங்கப்பூர் விமான நிலையத்தில் விமானம் ஒன்று தீ பிடிக்க பிடிக்க தரையிறங்கியது. அதிருஷ்டவசமாக பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர். சிங்கப்பூரில் இருந்து அதிகாலை 2 மணிக்கு சிங்கப்பூர் ஏர்லைன்சுக்கு சொந்தமான விமானம் ஒன்று இத்தாலியின் மிலன் நகருக்கு புறப்பட்டது. விமானத்தில் 222 பயணிகளும் 19 ஊழியர்களும் இருந்தனர். வானத்தில் பறக்கத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே இன்ஜினில் கோளாறு இருப்பதை விமானி அறிந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து விமான நிலையக்கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு அவசரமாக தரையிறக்க அனுமதி கோரினார். தொடர்ந்து விமானம் மீண்டும் சாங்கி விமான நிலையத்துக்கு திரும்பியது.…
-
- 0 replies
- 669 views
-
-
இது பிரிட்டனோடு முடியும் விவகாரம் அல்ல! ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு ஆதரவாக (பிரெக்ஸிட்) பிரிட்டிஷ் வாக்காளர்களில் பெருவாரியானவர்கள் அளித்துள்ள ஆதரவு மிகப் பெரிய அரசியல், பொருளாதார நிலநடுக்கம் போன்றது. இனி, பிரிட்டன் எந்தத் திசையில் பயணிக்கப்போகிறது என்று பார்க்க வேண்டும். ஐரோப்பியப் பொதுச் சந்தைக்கேற்ப பிரிட்டன் இனி செயல்பட வேண்டியிருக்காது. தனக்கெனச் சொந்தமாக நிதிக் கொள்கையையும், குடியேற்றங்களை அனுமதிக்கும் சட்டங்களையும் அது வகுத்துக்கொள்ளலாம். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் நாட்டுக்கு இரண்டாண்டுகள் அவகாசத்தை விதிகள் அளிக்கின்றன. ஆனாலும் ‘விரைவில் விலகிவிடுமாறு’ ஐரோப்பிய ஒன்றியம் பிரிட்டனைக் கோரியுள்ளது. உலகின் ஐந்தாவது பொருளா…
-
- 0 replies
- 479 views
-
-
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதை தொடர்ந்து தற்போதைய பிரதமர் டேவிட் கேமரூன் அக்டோபரில் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அவர் தேர்தலுக்கு முன்பே அறிவித்த வாக்குறுதிப்படி நடந்து கொள்ள சம்மதித்துள்ளார். இதையடுத்து டேவிட் கேமரூனின் கன்சர்வேட்டிவ் கட்சியிலிருந்து மற்றொரு தகுதியான நபர் பிரதமர் வேட்பாளராக முன்னிருத்தப்பட உள்ளார். அந்த போட்டியில் முதலிடம் பெறுபவர் போரிஸ் ஜான்சன். லண்டன் மாநகராட்சியின் முன்னாள் மேயர் இவர். மொத்தம் இரு வேட்பாளர்களை கன்சர்வேட்டிவ் கட்சி தேர்ந்தெடுத்து தங்களுக்குள் ஆலோசித்து கட்சி தலைவராகவும், நாட்டின் பிரதமராகவும் அறிவிக்க உள்ளது. ஜான்சனுக்கு போட்டியாளர் யார் என்பது இன்னமும் தெரியவில்லை. …
-
- 2 replies
- 527 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற பிரிட்டன் எடுத்திருக்கும் முடிவானது, உலகப் பொருளாதாரத்தில் நீண்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சீனா தெரிவித்துள்ளது.பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றித்தை விட்டு விலகுவதால் ஏற்படும் விளைவுகளை கணிப்பது கடினமானது. ஆனால், இன்னும் பத்தாண்டுகள் அவை உணரப்படும் என்று சீன நிதி அமைச்சர் லோவ் ஜிவெய் தெரிவித்திருக்கிறார். இருந்தபோதிலும், பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகும் வாக்கெடுப்பை தொடர்ந்து சந்தைகள் மிகைப்படுத்தியே எதிரெலித்திருக்கின்றன என்றும் அவர் கூறியிருக்கிறார். இந்த விளைவுகளை பற்றிய புறநிலை பார்வையை உலகம் பெறுவதற்கு முன்னால் அவற்றை அமைதிப்படுத்திவிட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். http:/…
-
- 0 replies
- 256 views
-
-
285 இந்தியர்கள் பெயர்களுடன் புதிய கொலைப் பட்டியலை வெளியிட்டுள்ளது ஐ.எஸ்.ஐ.எஸ் ஐ.எஸ்.ஐ பயங்கரவாத அமைப்பு புதிய கொலைப் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் 285 இந்தியர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள 4000 பேர் இடம்பெறுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலின் படி கொலைப்பட்டியலில் இடம்பெற்றுள்ள பெயர்களில் பாதி பேர் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் கனடா நாட்டைச் சேர்ந்தவர்களாவர். மேலும் இந்த பட்டியலில் இடம் பெற்ற…
-
- 0 replies
- 328 views
-
-
பிரிட்டன் வெளியேறுவதை ஸ்காட்லாந்தால் தடுக்க முடியும்: நிக்கோலா ஸ்டர்ஜன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதை ஸ்காட்லாந்து நாடாளுமன்றம் தடுக்க முடியும் என ஸ்காட்லாந்தின் முதன்மை அமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன் தெரிவித்துள்ளார். பிரிட்டன், தனது ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர் பதவியை முடிப்பதை அனுமதிக்க ஸ்காட்லாந்து நாடாளுமன்றம் ஒப்புதல் தரவேண்டும் என அவர் நம்புவதாகவும், ஆனால் அதை மறுப்பதற்கு ஸ்காட்லாந்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களை வலியுறுத்தப்போவதாகவும் பிபிசியிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அவரது கருத்து தொடர்பாக சிலர் சந்தேகம் வெளியிடுகிறார்கள். மாறுபட்ட சூழ்நிலைகளில், ஸ்காட்லாந்து தொடர்பான விவகாரங்களில் சட்டம் இயற்றும் அதிக…
-
- 0 replies
- 259 views
-
-
பிரிட்டன் தொழிற் கட்சி தலைவர் ஜெரிமி கோர்பினுக்கு வலுக்கும் எதிர்ப்பு தொழிற்கட்சியின் தலைவர் ஜெரிமி கோர்பின் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற பிரிட்டன் வாக்களித்ததை தொடர்ந்து ஏற்பட்ட கொந்தளிப்பு, பெரிய எதிர்க்கட்சியான தொழிற் கட்சியிலும் சூழ்ந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற கூடாது என்ற பிரச்சாரத்தை தொழிற்கட்சியின் தலைவர் ஜெரிமி கோர்பின் கையாண்ட விதத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தொழிற்கட்சியின் நிழல் அமைச்சரவையை சேர்ந்த பாதி உறுப்பினர்கள் இன்றைய தினம் தங்களுடைய பதவிகளை ராஜிநாமா செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், முதலாவதாக நிழல் சுகாதார செயலர் ஹெய்தி அலெக்ஸாண்டர் தனது பதவியை ராஜ…
-
- 0 replies
- 406 views
-
-
பிரிட்டிஷ் வங்கிகளால் சுதந்திரமாக செயல்பட முடியாது: ஃபிரான்ஸ் வங்கி ஆளுநர் பிரிட்டன் வெளியேற்றத்திற்கு பிறகு, ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டிஷ் வங்கிகளால் சுதந்திரமாக செயல்பட முடியாது என பேங்க ஆஃப் பிரான்ஸ் வங்கியின் ஆளுநர் ஃபிரான்சிஸ் வில்லேராய் டி கல்ஓ தெரிவித்துள்ளார். எல்லை கடந்த சேவைகளில் வங்கி பாஸ்போர்ட் அமைப்புகளை அணுக, ஒருங்கிணைந்த சந்தையில் அனைத்து விதிகளையும் பின்பற்றி பிரிட்டன் உறுப்பினராக இருப்பதை சார்ந்தே இருக்கும் என வில்லேராய் தெரிவித்துள்ளார். பேங்க ஆஃப் பிரான்ஸ் வங்கியின் ஆளுநர் ஃபிராங்கொய்ஸ் வில்லேராய் டி கலெயு பிரிட்டனின் இந்த வெளியேற்றம் ஐரோப்பிய ஒன்றிய பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்பட…
-
- 0 replies
- 341 views
-
-
கிரேட் பிரிட்டனுக்கும் இங்கிலாந்துக்கும் உள்ள வேறுபாடு என்ன? (வீடியோ) அண்மையில் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகியது. பெரும்பாலான மக்களுக்கு பிரிட்டன் என்றால் இங்கிலாந்துதான் நினைவுக்கு வரும். ஆனால் பிரிட்டன் என்பது இங்கிலாந்து மட்டுமல்ல, மேலும் 3 நாடுகளை உள்ளடக்கியது. வேல்ஸ், ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகள் இணைந்துதான் கிரேட் பிரிட்டன். இதன் முழு பெயர் 'யுனைடெட் கிங்டம் ஆப் கிரேட் பிரிட்டன் அண்டு நார்தர்ன் அயர்லாந்து' என்பது. பிரிட்டனையும் அதன் முழுமையான புவியியல் அமைப்பையும் புரிந்து கொள்ள இந்த வீடியோ உதவும். ஐரோப்பிய யூனியன் என்றால் என்ன? கூகுளில் தேடிய இங்கிலாந்துவாசிகள்! …
-
- 0 replies
- 395 views
-
-
அமெரிக்காவில் வெள்ளத்தில் 24 பேர் பலி: விர்ஜீனியா பேரழிவு பகுதி ஆக பிரகடனம் அமெரிக்காவில் வெள்ளத்துக்கு 24 பேர் பலியான விர்ஜீனியாவை பேரழிவு பகுதியாக அதிபர் ஒபாமா பிரகடனம் செய்துள்ளார். அமெரிக்காவின் தென் பகுதியில் உள்ள மேற்கு விர்ஜீனியா மாகாணத்தில் கடந்த சில நாட்களாக புயல் மழை பெய்தது. இதனால் அங்குள்ள ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பேய் மழை பெய்ததால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடு ஆக காட்சி அளிக்கிறது. மழை வெள்ளத்தில் சிக்கியும், வீடுகள் இடிந்து விழுந்தும் 24 பேர் பலியாகி உள்ளனர். ஏராளமானவர்கள் வீடுகளை இழந்துள்ளனர். அவர்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு…
-
- 0 replies
- 316 views
-
-
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறியதன் காரணமாக சர்வதேச சந்தைகளில் 2 லட்சம் கோடி டாலர் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. தவிர பவுண்ட் நாணய மதிப்பு 31 வருடங்களில் இல்லாத அளவுக்கு சரிந்திருக்கிறது. 1985-ம் ஆண்டுக்கு பிறகு அதிக சரிவை இப்போது பவுண்ட் சந்தித்திருக்கிறது. ஐரோப்பிய சந்தைகளில் கடும் சரிவு இருந்தது. பிரான்ஸ் பங்குச் சந்தை 8 சதவீதமும், ஜெர்மனி சந்தை 7 சதவீதமும், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளின் சந்தையும் கடும் சரிவை சந்தித்தன. லண்டன் எப்டிஎஸ்இ சந்தை 3.2 சதவீதம் சரிந்தது. அமெரிக்க சந்தையான டவ் ஜோன்ஸ் வெள்ளிக்கிழமை 3 சதவீதம் அளவுக்கு சரிந்தது. தேவையான சமயத்தில் நிதி உதவி செய்ய தயாராக இருப்பதாக பேங்க் ஆப் இங்கிலாந்து, ஐரோப்பிய மத்திய வங்கி, …
-
- 0 replies
- 288 views
-
-
பிரிட்டன் வெளியேறும் காலகெடு பற்றி தொடரும் கலந்தாய்வுகள் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் காலகெடு பற்றிய கலந்தாய்வுகள் தொடர்கின்றன. பிரிட்டன் வெளியேறும் காலகெடு தொடர்பாக கலந்தாய்வுகள் நடைபெறுகின்றன எந்தவொரு பேச்சுவார்த்தையையும் தொடங்குவதற்கு முன்னால் முறையான அறிவிப்பு அவசியம் என்று ஐரோப்பிய கவுன்சில் தெளிவுப்படுத்தியுள்ளது. விலகுவதற்கான வழிமுறைகளை தொடங்குவதற்கு முன்னால் கொஞ்சம் நேரம் எடுத்துகொள்ள விரும்புவதாக பிரிட்டிஷ் அரசியல்வாதிகள் கூறுகின்றனர். புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் வரை காத்திருக்க அவர்கள் விரும்புகின்றனர். நீண்ட, தாமதமான முயற்சிகள் தங்களுடைய அடுத்த வேலைகளை தொடங்குவதற்கு இடைஞ்சல் கொடுக்…
-
- 0 replies
- 272 views
-
-
இரண்டாவது பெரிய அரசியல் தலையை பலிவாங்கியுள்ள பிரிட்டன் வாக்கெடுப்பு ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினர் நிலை பற்றிய பிரிட்டன் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பின் முடிவால் ஏற்பட்டுள்ள அரசியில் விளைவுகள் நாட்டின் இரண்டாவது பெரிய அரசியல் தலையை பலிவாங்கியுள்ளது. எதிர்கட்சியின் நிழல் அமைச்சரவையின் சக உறுப்பினர்களை பதவி விலக ஹிலாரி பென் ஊக்கமூட்டினார் என கூறப்படுகிறது எதிர்கட்சியான தொழிற்கட்சியின் தலைவர் ஜெரிமி கார்பைன், வெளிவிவகார பேச்சாளர் ஹிலாரி பென்னை பதவிலிருந்து நீக்கியுள்ளார். திங்கள்கிழமை விவாதிக்கப்பட இருக்கும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கோர்பையின் புறக்கணித்தால், பதவி விலகுவதற்கு எதிர்கட்சியின் நிழல் அமைச்சரவையின் சக உ…
-
- 0 replies
- 356 views
-
-
அணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரிக்க இந்திய அரசியல்வாதிகளிடம் ஹிலாரி பணம் வாங்கினார்: டிரம்ப் குற்றச்சாட்டு அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் ஹிலாரி கிளின்டனும் குடியரசுக்கட்சி சார்பில் பெரும் தொழிலதிபரான டொனால்ட் டிரம்பும் போட்டியிடுகின்றனர். இரு தலைவர்களும் போட்டிபோட்டு தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்திய அரசியல் தலைவர்கள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் ஹிலாரி கிளின்டன் பணம் பெற்றதாக டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். டிரம்பின் தேர்தல் பிரச்சார பேச்சுக்கள் அடங்கிய 35 பக்கங்கொண்ட கையேடு ஒன்று வெளியாகியுள்ளது. அதில் மேற்கண்ட தகவல் அடங்கியுள்ளது. இந்தியா-அமெரிக்கா சிவில் அணுசக்தி ஒப்பந்தத்து…
-
- 0 replies
- 218 views
-