உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26696 topics in this forum
-
பிலிப்பைன்ஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட மற்றுமொரு கனேடிய பணயக்கைதி படுகொலை பிலிப்பைன்ஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட மற்றுமொரு கனேடிய பணயக்கைதி படுகொலை தென் பிலிப்பைன்ஸில் அபு சேயப் தீவிரவாதிகளால் பிறிதொரு கனேடிய பணயக்கைதியை தலையைத் துண்டித்து நேற்று திங்கட்கிழமை கொன்றுள்ளதாக பிலிப்பைன்ஸ் இராணுவம் தெரிவித்தது. ரொபேர்ட் ஹோல் என்ற மேற்படி பணயக்கைதியை விடதலை செய்வதற்கு தீவிரவாதிகளால் கோரப்பட்ட கப்பப்பணம் உரிய காலக்கெடுவுக்குள் வழங்கப்படாததையடுத்தே அவர் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அபு சேயப் தீவிரவாத குழுவின் பேச்சாளர்கள் உள்ளூர் ஊடகத்திற்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி கப்பப்பணம் செலுத்த வேண்டிய இறுதிக் காலக்கெடு திங்கட்கிழமை பிற்பகல்…
-
- 0 replies
- 295 views
-
-
துருக்கி ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான வாய்ப்பு இன்னும் சில தசாப்தங்களுக்கு இல்லை: கேமரன் துருக்கி ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான வாய்ப்பு இன்னும் சில தசாப்தங்களுக்கு இல்லை என பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாதத்தில் நடக்கவிருக்கும் வாக்கெடுப்பில், பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலக வேண்டும் என்று பிரச்சாரம் செய்பவர்கள், துருக்கி ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தால் பிரிட்டனுக்கு வரும் குடியேறிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எச்சரித்துள்ளனர். ஆனால் கேமரன் இது குறித்து பிபிசிக்கு அளித்த பேட்டியில், தற்போதைய முன்னேற்ற விகிதப்படி துருக்கி 3000 ஆம் ஆண்டிற்கு முன்னதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினராக …
-
- 3 replies
- 492 views
-
-
அகதிக் குழந்தைகள் படும்பாடு அகதிகளுக்குப் புதுவாழ்வு தருவதில் மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு சுவீடன் முன்மாதிரியாகத் திகழ்கிறது சொந்த நாட்டில் உயிருக்குப் பாதுகாப்பு இல்லாததால் பெற்றோரோ, உறவினர்களோ இல்லாமல் தனியாகவே சுவீடன் நாட்டுக்கு அகதிகளாக வரும் 18 வயது நிரம்பாத குழந்தைகள் படும்பாடு கல்மனதையும் கரைய வைக்கும். இவர்கள் வெவ்வேறு நாடுகளிலிருந்து வருகின்றனர். 9 வயது முதல் 17 வயது வரையிலான 50 குழந்தைகளை ‘மனித உரிமைகள் கண்காணிப்பு’ அமைப்பினர், எந்தவித வற்புறுத்தலும் இன்றி பேட்டி கண்டபோது இந்த விவரங்கள் வெளிவந்தன. கடந்த ஆண்டில் மட்டும் தனியாக வந்த 35,000 குழந்தைகளை சுவீடன் ஏற்றுக்கொண்டு அவர்களை முகாம்களில் தங்க வைக்காமல் க…
-
- 0 replies
- 393 views
-
-
ஒர்லாண்டோ துப்பாக்கிச்சூடு சம்பவம்: உலகம் முழுவதும் அஞ்சலி (புகைப்படத் தொகுப்பு) துப்பாக்கிச்சூடு நடத்தப்பட பல்ஸ் கேளிக்கையகம் என்.ஒய்.பி.டி என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஆடையில் ஒமர் மடீன் கேளிக்கையகத்தை குண்டுகளால் துளைத்தெடுத்த ஒமர் மடீன் அமெரிக்காவில் நடைபெற்ற கால்பந்து போட்டி ஒன்றில் பெரு அணி வீரர்கள் அஞ்சலி டல்லாஸ் பகுதியில் துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களுக்காக கூடியவர்கள் நியூசிலாந்தின் வெலிங்டன் பகுதியில் அஞ்சலிக்காக கூடியவர்கள் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்ற அஞ்சலி கூட்டம் http://w…
-
- 0 replies
- 385 views
-
-
''ஒமர் போன்ற நபர்களை பற்றி முஸ்லிம் சமூகம் தகவல் சொல்வது கிடையாது'': ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை ஓர்லாண்டோவில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் குறித்து தகவல் தெரிவிக்க தவறியதற்காக அமெரிக்காவில் வாழும் முஸ்லிம் சமூகத்தினரை, அமெரிக்க குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளரான டெனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார். ஒமர் மடீன் என்ற அந்த துப்பாக்கிதாரி வன்முறைகளுக்கு பெயர் போன ஒருவர் என்று தெரிந்திருந்ததாக தான் கருதுவதாக சி.என்.என் செய்தி நிறுவனத்திடம் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சில காரணங்களுக்காக ஒமர் மடீன் போன்ற நபர்களை பற்றி முஸ்லிம் சமூகம் தகவல் சொல்வது கிடையாது என்றார் ட்ரம்ப். முன்னர், ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய ட்ரம்ப், இதே போன்ற தாக்குதல்களை ந…
-
- 0 replies
- 372 views
-
-
தவறான நேரத்தில் தவறான முயற்சி: உணவு விடுதியில் ஆயுத முனையில் கொள்ளையடிக்கும் நடவடிக்கை அங்கு உணவு உட்கொண்டிருந்த 11 அதிரடிப் படையினரால் முறியடிப்பு பிரான்ஸிலுள்ள உணவு விடுதியொன்றில் ஆயுத முனையில் கொள்ளையடிப்பதற்கு இரு நபர்கள் மேற்கொண்ட முயற்சி அங்கு உணவு உட்கொண்டிருந்த சிப்பாய்களால் முறியடிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸின் போச்னகோன் நகரிலுள்ள, மெக்டொனால்ட்ஸ் உணவு விடுதியொன்றுக்குள் அண்மையில் திடீரென இருவர் ஷொட்கன் ரக துப்பாக்கிகளுடன் புகுந்தனர். அவ் விடுதியின் பணப்பெட்டியை திறக்குமாறு ஊழியர்களுக்கு உத்தரவிட்ட அந் நபர்கள், அச்சுறுத்தும் வ…
-
- 0 replies
- 292 views
-
-
ஒரு பாலுறவுக்காரர்கள் இரவு கேளிக்கையகத்தில் துப்பாக்கி சூடு இரவு கேளிக்கையகம் ஒன்றில் பலர் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் ஓர்லாண்டோ நகரிலுள்ள காவல்துறை தெரிவித்துள்ளது. ஒரு பாலுறவுகாரர்கள் கேளிக்கையகத்தில் பலர் சுட்டப்பட்டுள்ளனர். குறைந்தது இருபது பேர் காயமடைந்துள்ளதாகவும், துப்பாக்கிதாரி பணய கைதிகளை வைத்திருப்பதாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். குறைந்தது 20 பேர் காயம் அடைந்துள்ளதாகவும், பணய கைதிகள் சிக்கியிருப்பதாகவும் தெரிகிறது ஓர்லாண்டோ பிரிமியர் ஒரு பாலுறவுக்காரர்கள் இரவு கேளிக்கையகம் என்று விளம்பரப்படுத்தி கொள்ளும் கேளிக்கையகத்திற்கு வெளியே காயமடைந்தோருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதை ட…
-
- 13 replies
- 885 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் ஒர்லாண்டோ துப்பாக்கிச்சூட்டுக்குப் பின் ஒன்றினைந்தது உலகம்; பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்கா நெடுகவும் உலக அளவிலும் மலரஞ்சலிகளும் மவுன பிரார்த்தனைகளும் தொடர்கின்றன. அமெரிக்க இரவு விடுதிக்கு சென்ற துப்பாக்கிதாரி ஒமர் மடீன் அங்கே 49 பேரை சுட்டுக்கொன்றது ஏன்? தொடரும் காவல்துறையின் தீவிர புலனாய்வு. பாகிஸ்தானில் தனது அண்டை வீட்டுக் கிறிஸ்தவருக்காக தேவாலயம் கட்டும் முஸ்லிம்; சமாதானத்தை முன்னெடுக்கும் வித்தியாசமான முயற்சி தொடர்பான செய்திகள் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 293 views
-
-
ஷாங்காயில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் குண்டு வெடிப்பு: 3 பேர் காயம் சீனாவின் ஷாங்காயில் உள்ள புடோங் சர்வதேச விமான நிலையத்தில் வெடிவிபத்து ஒன்று நிகழ்ந்துள்ளதாகவும், அதில் 3 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமான நிலையத்தின் இரண்டாம் முனையத்தில் இருந்த சோதனை சாளரம் அருகே நாட்டு வெடிகுண்டு போல் தோன்றும் ஒன்று வெடித்ததாக, சீனாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான சின்குவா தெரிவித்துள்ளது. இந்த வெடிகுண்டு ஏன் வெடித்தது, யாரால் வெடிக்க வைக்கப்பட்டது போன்ற விபரங்கள் எதுவும் தெரிவியல்லை. 2013ல், பெய்ஜிங் விமான நிலையத்தில், சக்கர நாற்காலியில் இருந்த நபர் ஒருவர், தனது தனிப்பட்ட குறைகளை முன்னிலைப…
-
- 1 reply
- 423 views
-
-
பிரிட்டனின் பவுண்ட் வீழ்ச்சி அடைகிறது; ஐரோப்பிய ஒன்றிய வாக்கெடுப்பு குறித்த சஞ்சலங்கள் ------------------------------------------------------------------------------- இந்த மாதத்தின் இறுதியில் நடைபெறவுள்ள மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறலாம் என்ற நிஜ சாத்தியக்கூறுகளை நிதி சந்தைகள் கருத்தில் கொண்டுள்ளதால், பிரிட்டனின் நாணயமான பவுண்ட், அமெரிக்க டாலர் மற்றும் ஜப்பானிய யென்னுக்கு எதிராக வீழ்ச்சி அடைந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரிட்டன் இணைந்திருக்க வேண்டும் என்ற கருத்தை கொண்ட மக்களின் சதவீதம் கடந்த வாரத்தில் மட்டும் 80 லிருந்து 69 ஆக குறைந்திருப்பதாக பெட்ஃபேர் என்ற புக்மேக்கர் நிறுவனம் தெரிவித்துள்ளது. பல மு…
-
- 0 replies
- 325 views
-
-
கலிபோர்னியாவில் சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் கன ரக ஆயுதங்களுடன் கைது லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவிருக்கும் ஒரு பாலுறவுக்காரர்களின் பேரணியில் பங்கு கொள்ள திட்டமிட்டிருந்ததாகத் தெரிவித்த, கன ரக ஆயுதங்களை வைத்திருந்த நபரை கலிபோர்னியப் போலிஸார் கைது செய்துள்ளனர். அந்த பேரணியில் தீங்கு விளைவிக்கப்போகும் தனது நோக்கை அந்நபர் வெளிப்படுத்தியதாக முன்னதாக வெளிவந்த கருத்துக்களை போலிஸார் உறுதிப்படுத்தவில்லை. ஆனால் இந்தியானாவை சேர்ந்த ஜேம்ஸ் ஹொவெல் என்னும் அந்நபர் வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார் என போலிஸார் தெரிவித்துள்ளனர். அவனிடம் மூன்று தாக்குதல் துப்பாக்கிகள், ரசாயனங்கள் மற்றும் நச்சுப்புகை முகம…
-
- 0 replies
- 522 views
-
-
பிரித்தானிய அரசியின் பிறந்த தின அணிவகுப்பில் மயங்கி வீழ்ந்த படை வீரர் பிரித்தானிய அரசி 2 ஆம் எலிஸ பெத்தின் பிறந்த தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை லண்டனில் நடைபெற்ற படையினரின் அணிவகுப்பின்போது சிப்பாய் ஒருவர் மயங்கி வீழ்ந்தார். பிரித்தானிய அரண்மனைகளை பாதுகாப்பதற்காக “குயின்ஸ்கார்ட்” எனும் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். சிவப்பு ஆடையும் பாரிய கறுப்புத் தொப்பியும் அணிந்த இப்படையினர் உல்லாசப் பயணிகளையும் வெகுவாக கவர்ந்தவர்கள். இந்நிலையில், 2 ஆம் எலிஸபெத் அரசியின் பிறந்த தினத்தை முன்னிட்டு லண்டனி…
-
- 0 replies
- 287 views
-
-
துருக்கி வம்சாவளி ஜெர்மானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு துருக்கிய வம்சாவளியை சேர்ந்த 11 ஜெர்மானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் காவல்துறையினரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளனர். ஜெர்மனி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய ஆர்மேனியர்கள் இனப்படுகொலை பற்றிய தீர்மானத்திற்கு ஆதரவு அளித்தால் துருக்கிய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் முதல் உலகப் போரின்போது பல்லாயிரக்கணக்கான ஆர்மேனியர்கள் கொல்லப்பட்டதை இனப்படுகொலை என பிரகடனப்படுத்தும் தீர்மானத்திற்கு ஆதரவு அளித்ததற்காக இவர்கள் அச்சுறுத்தல்களை பெற்ற பின்னர் இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. “எங்கிருந்தாலும் உன்னை கண்டறிவோம்” அல்லது “உன்னுடைய ஜெர்மானிய நண்பர்கள் …
-
- 2 replies
- 315 views
-
-
அமெரிக்க குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக கருதப்படும் டொனால்ட் டிரம்ப் பிட்ஸ்பெர்க்கில் நடைப்பெற்று பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றினார். அப்போது அவர், “தவறு செய்வதில் சீனா மிகப்பெரிய மற்றும் சிறந்த நாடு. மெக்சிகோ சீனாவின் சிறிய வடிவம். சீனா அதன் பொருட்களை அமெரிக்காவில் கொட்டி குவிக்கிறது. அறிவுசார் சொத்து திருட்டில் ஈடுபடுகிறது. அமெரிக்க நிறுவனங்கள் மீது மிகப்பெரிய வரிகளை திணிக்கிறது. சீனா திருந்தாவிட்டால் அவர்கள் மீது வரிகள் விதிக்கப்படும். அவர்கள் நம் மீது கடுமையாக வரி விதிக்கிறார்கள். நாம் ஒன்றும் செய்வது இல்லை. நவம்பர் மாதத்தில் நீங்கள் ஆதரவளித்தால் (வாக்களித்தால்) நாம் நிறைய வேடிக்கைகளை அனுபவிக்கலாம். சீனாவுக்கு ஒபாமா மீது மர…
-
- 1 reply
- 437 views
-
-
யூரோ 2016 கால்பந்து போட்டி ஆட்டத்தின் முன்னரும் பின்னரும் வன்முறைகள் பிரான்சின் மார்செய் நகரில் நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் ரஷியாவுக்கு இடையிலான யூரோ 2016 கால்பந்து போட்டி ஆட்டத்தின் முன்னரும் பின்னரும் வன்முறைகள் நடைபெற்றுள்ளன. பிரான்ஸ் காவல்துறை கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தன்னீரை பீச்சியடித்தும் சண்டையிட்டோரை கலைத்தனர் ஐரோப்பிய கால்பந்து விளையாட்டின் நிர்வாக அமைப்பான யுஇஃபா, கடுமையாக காயமடைந்த இருவர் உட்பட குறைந்தது முப்பது பேரை காயமடைய செய்துள்ள, இந்த வன்முறைகள் தொடர்பாக புலனாய்வு ஒன்றை தொடங்கியுள்ளது. 30 பேரை காயமடைய செய்த இந்த வன்முறை தொடர்பாக யுஇஃபா புலனாய்வு ஒன்றை தொடங்கியுள்ளது கால்பந்து போட்டி ஆட்டம் தொடங்குவ…
-
- 2 replies
- 644 views
-
-
துபாயில் மணிக்கு 300கி.மீ வேகத்தில் பறந்த கார்களை பறிமுதல் செய்த போலிஸார் துபாயில், ஒரு மணி நேரத்திற்கு முந்நூறு கிலோ மீட்டர் வேகத்தில் பொறுப்பற்ற முறையில் பயணம் மேற்கொண்ட எண்பதிற்கும் மேலான கார்களை துபாய் போலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். போலிஸ் தலைமை அதிகாரி கமிஸ் அல் முசைநா, சில வாகன ஓட்டிகள் அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக தங்கள் வாகனங்களின் எண் பட்டைகளை வேண்டுமென்றெ நீக்கியுள்ளனர் என தெரிவித்துள்ளார். துபாய் போலிஸ் அதிகாரிகளின் வாகனங்களில் ஆடம்பர விளையாட்டு கார்களான லம்போகினி, போர்ஷே, மற்றும் ஆஸ்டன் மார்டின் ஆகியவையும் அடங்கும். இவைகளைப் பயன்படுத்தி போலிசார் சட்ட விரோதமாக பந்தயத்தில் ஈடுபட்டவர்களின் கார்களை துரத்திப் பிடித்தனர். …
-
- 0 replies
- 350 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகினால் பிரிட்டனின் பொருளாதாரம் சுருங்கும் - கேமரன் இந்த மாதத்தின் கடைசியில் நடைபெறும் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகிவிட வாக்களித்தால் பிரிட்டனின் பொருளாதாரம் சுருங்கிவிடும் என்று பிரதமர் டேவிட் கேமரன் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறினால் பிரிட்டனின் பொருளாதாரம் சுருங்கும் - டேவிட் கேமரன் சுகாதாரம், ஓய்வூதியம் போன்வற்றில் செலவிடும் தொகை இதனால் பாதிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த எச்சரிக்கை தற்போதைய நிலையை சரியென காட்டுகின்ற, ஓய்வூதியம் பெறுவோரை பயமுறுத்தும், திகிலூட்டும் கடைசி முயற்சி என்று பிரிட்டன் ஐ…
-
- 0 replies
- 324 views
-
-
நாடு முழுக்க நடந்து வரும் சிறுபான்மையினர் மற்றும் மதச்சார்பற்ற குடிமக்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல்களை முடிவுக்கு கொண்டுவர தனது அரசு எந்த விதமான நடவடிக்கைளையும் எடுக்கத் தயாராக இருப்பதாக வங்கதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசினா தெரிவித்துள்ளார். வங்கதேச போலீசார் இஸ்லாமிய தீவிரவாதிகளை எதிர்த்து நடத்திய ஒருங்கிணைந்த தேடுதல் வேட்டையின் தொடர்ச்சியாக பிரதமரிடம் இருந்து இந்தக் கருத்து வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த வியாழன் நள்ளிரவின் போது தொடங்கப்பட்ட இந்த அதிரடி சோதனையில், சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், இதன் சமீபத்திய எண்ணிக்கையில் சாதாரண குற்றவாளிகளும் இடம் பெற்றிருப்பதாகப் புள்ளி விவரங்கள் தெர…
-
- 0 replies
- 204 views
-
-
பங்களாதேஷில் இந்து ஆசிரமமொன்றைச் சேர்ந்த பணியாளர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை கத்தியால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட அந்நாட்டில் சிறுபான்மை மதத்தவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பிந்திய தாக்குதல் இதுவெனத் தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீ ஸ்ரீ தாகுர் அனுகுல்சந்திர ஆசிரமத்தைச் சேர்ந்த நிரஞ்சன் பண்டே (62 வயது) என்ற மேற்படி பணியாளர் காலை நேர நடைப் பயிற்சிக்குச் சென்ற போது தாக்குதல்தாரிகளால் இலக்குவைக்கப்பட்டுள்ளார். அவர் தனக்கு ஏற்பட்டுள்ள நீரிழிவு நோயின் பொருட்டு மருத்துவர்களின் ஆலோசனைப் பிரகாரம் தினசரி நடைப் பயிற்சியை மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் அவரை சூழ்ந்து கொண்ட தாக்குதல்தாரிகள் குழுவொன்…
-
- 0 replies
- 363 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதற்கு பிரிட்டன் வாக்களித்தால், ஐரோப்பா ஒன்றியம் உடைய வாய்ப்பாக அமைந்துவிடும் என சுவீடனின் வெளியுறவு அமைச்சர் ஆலோசனை கூறியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையராக கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த மார்கட் வால்ஸ்ட்ராம், பிரிட்டன் வெளியேறினால் இது மற்ற நாடுகளிலும் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்த தூண்டுதலாக அமையும் என கூறியுள்ளார். பிபிசி பேட்டியில் ஒன்றில் பேசிய வால்ஸ்ட்ராம், மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பின் முடிவுகள் எப்படி வந்தாலும் அதன் விளைவுகள் மோசமானதாகவே இருக்கும் என்றார். பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலேயே இருப்பதற்கு ஆதரவாக வாக்களித்தால், ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள மற்ற நாடுகள் தங்கள் உறுப்பின…
-
- 3 replies
- 456 views
-
-
இந்திய கடற்படையின் மிகப்பெரிய போர் கப்பல்களில் ஒன்றான ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா கப்பலை பழுது பார்க்கும் பணி கர்நாடக மாநிலம் கார்வார் பகுதியில் நடைப்பெற்று வந்தது. இதற்கான பணியில் கடற்படை வீரர்களும், வெளியில் இருந்து அழைத்து வரப்பட்ட பணியாளர்களும் ஈடுபட்டு வந்தனர். கப்பலின் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை இருந்து வாயு கசிவு தொடர்பான பணியில் ஈடுப்பட்டு இருந்த ஊழியர்கள் ராகேஸ் குமார், மாலுமி மோகன்தாஸ் கோலம்ப்கர் ஆகியோர் விஷ வாயு தாக்கி பலியானதாக இந்திய கப்பல் படையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இருவர் கடற்படை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விஷவாயு தாக்கி இருவர் உயிரிழந்த சமபவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடற்படை …
-
- 0 replies
- 383 views
-
-
கண்ணீர் புகை குண்டுகளை வீசி கால்பந்து ஆதரவாளர்களை தடுத்த பிரான்ஸ் போலீசார் தெற்கு பிரான்ஸ் நகரமான மார்செயில் நூற்றுக்கணக்கான மேற்பட்ட இங்கிலாந்து கால்பந்து ஆதரவாளர்களை கலவர தடுப்பு போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தி பின்னுக்கு தள்ளினர். தொடர்ந்து மூன்றாவது நாளாக பழைய துறைமுகத்தைச் சுற்றிலும் உள்ள உணவகங்கள் மற்றும் மதுக்கடைகளைச் சுற்றிலும் நடந்த வன்முறையின் போது காலி பீயர் பாட்டில்கள் போலீசார் மீது வீசப்பட்டன. ரஷ்யா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடக்கவுள்ள 'யூரோப்பியன் சாம்பியன்ஷிப்' போட்டிகளின் முதல் போட்டி நடக்கவுள்ள நிலையில் இரண்டு நாடுகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் நகரத்திற்குள் வந்து குவியும் நிலையில்,…
-
- 0 replies
- 226 views
-
-
பறக்கும் வெடிகுண்டுகள் மூலம் யூரோ கால்பந்து தொடரில் தாக்குதல் நடத்த ஐஎஸ் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஐரோப்பிய கால்பந்து தொடர் நாளை தொடங்கு ஜூலை 10 வரை நடக்கிறது. உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களின் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள இந்த தொடரின்போது ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று அமெரிக்கா உள்ளிட்ட பலநாடுகளின் உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருந்தன. இந்தநிலையில், யூரோ கால்பந்து தொடரின்போது பறக்கும் சிறிய விமானங்களான ட்ரோன்கள் மூலம் வெடிகுண்டுகள் மற்றும் கீழேவிழுந்தவுடன் வெடிக்கும் ரசாயன பொருட்கள் மூலமும் ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள்…
-
- 1 reply
- 231 views
-
-
ப்ளோரிடாவில் அமெரிக்க பாடகி கிரிஸ்டினா கிரிம்மி சுட்டுக் கொலை ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள ஒர்லாண்டோ நகரில் அமெரிக்க பாடகியான கிரிஸ்டினா கிரிம்மி சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். கிரிஸ்டினா கிரிம்மி, தி வாய்ஸ் என்ற திறமைகளை வெளிப்படுத்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போட்டியாளர் ஆவார். நிகழ்ச்சி ஒன்றை நடத்தி முடித்துவிட்டு தன்னுடைய ரசிகார்களுக்கு ஆட்டோகிராப் போட்டு கொண்டிருந்த போது தாக்கப்பட்டார். இதனால் ஏற்பட்ட காயங்களால் மருத்துவமனையில் கிரிம்மி உயிரிழந்தார். துப்பாக்கியால் சுட்டவரை கிரிம்மியின் சகோதரர் தடுத்த போது, அந்த நபர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். http://www.bbc.com/tam…
-
- 0 replies
- 351 views
-
-
முகமது அலியின் இறுதி பயணத்தின் புகைப்பட தொகுப்பு முகமது அலியின் உடலுக்கு கென்டக்கியில் இஸ்லாமிய இஸ்லாமிய முறைப்படி பிரார்த்தனைகள் நடைபெற்றன அந்த பிரார்த்தனை கூட்டத்தில் கலந்துக் கொண்ட முகமது அலியின் மனைவி லூனி அலி முகமது அலியை கொளரவிக்கும் விதமாக, தற்காலிகமாக உருவாக்கப்பட்ட முகமது அலி பாதை முகமது அலிக்கு அஞ்சலி செலுத்த வீட்டிற்கு வெளியே காத்திருக்கும் பொதுமக்கள் முகமது அலியின் உடல் சிறு வயதில் அவர் வாழ்ந்த வீட்டில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது அந்த ஊர்வலத்தில், முகமது அலி குடும்பத்தாருடன் கலந்துக் கொண்ட வில் ஸ்ம…
-
- 0 replies
- 475 views
-