Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஐடோமெனி முகாமில் தஞ்சமடைந்த மக்களை வெளியேற்றும் நடவடிக்கை: கிரீஸ் துவக்கம் மாசிடோனியாவுடனான தனது வடக்கு எல்லையில் அமைந்துள்ள தற்காலிக ஐடோமெனி முகாமில் தஞ்சம் அடைந்துள்ள ஆயிரக்கணக்கான மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை கிரீஸ் துவங்கியுள்ளது. ஐடோமெனி முகாமில் கூடாரங்களில் தங்கியிருந்த மக்கள் அதிகாலை பொழுதில் ஆரம்பித்த இந்த நடவடிக்கையைக் கண்ட சாட்சிகள், முகாமில் குடியமர்ந்தவர்களை வேறு சிறந்த வசதியிடங்களுக்கு மாற்றிட போலீஸ் வாகனங்கள் மற்றும் பேருந்துகள் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்ததாக தெரிவித்தனர். கலகத்தை கட்டுப்படுத்தும் போலீசார் பணியில் அமர்த்தப்பட்டாலும், பலம் பிரயோகிக்கப்படாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மாசிடோன…

  2. முன்னாள் ஜனாதிபதி இங்கிலாந்தில் அகதியாக தஞ்சம்! மாலைத்தீவு முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத் (49), கடந்த 2008-ம் ஆண்டு அந்நாட்டில் நடந்த பொதுத் தேர்தல் மூலம் ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஜனாதிபதியாவார். 2012-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் தோல்வி அடைந்த நஷீத், ஆட்சியை அப்துல்லா யாமீன் என்பவரிடம் பறிகொடுத்தார். அப்துல்லா யாமீன் தலைமையிலான அரசு முஹம்மது நஷீத் மீது பல்வேறு வழக்குகளை போட்டது. தனது அதிகாரத்தை பயன்படுத்தி நீதிபதியை கைது செய்ததாக தீவிரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் தொடரப்பட்ட வழக்கில் இவருக்கு 13 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டு, தண்டனை அனுபவித்து வந்தார். சிறைவாசத்தின்ப…

  3. ஜெர்மனி: அரசியல் மற்றும் வெறுப்புக் கொலைகள் அதிகரிப்பு ஐரோப்பாவிலேயே ஜெர்மனிக்கே அதிக அளவில் அகதிகள் வந்தனர் அரசியல் நோக்கத்துக்காகவும் வெறுப்புணர்வு காரணமாகவும் செய்யப்படும் கொலைகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்திருப்பதாக ஜெர்மன் அரசு தெரிவித்துள்ளது. 2015 ஆம் ஆண்டு சுமார் 11 லட்சம் பேர் ஜெர்மனியில் தஞ்சம் அடைந்தனர். மற்ற ஐரோப்பிய நாடுகளைக் காட்டிலும் அதிகமானவர்கள் ஜெர்மனியில் தஞ்சமடைந்த காலகட்டமான 2015 ஆம் ஆண்டிற்கான புள்ளிவிவரங்கள் இத்தகைய கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக காட்டுகிறது. ஜெர்மனிக்கு வரும் அகதிகளுக்கு பரவலான வரவேற்பு இருந்தாலும் எதிர்ப்பும் அங்கே அதிகரித்துவருகிறது குறிப்பாக வெறுப்ப…

  4. இன்றைய நிகழ்ச்சியில் - பனிப்போர்கால அடிச்சுவடுகளில் இருந்து விலகும் ஒரு முயற்சியாக, முன்னாள் எதிரியான வியட்நாமுக்கு ஆயுதங்களை விற்பதற்கான தடையை அதிபர் ஒபாமா நீக்கினார். - மாற்றகாலத்துக்கான நீதியாக துனிஸியாவில் கடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய்வதற்கான ஆணைக்குழு. - சீனாவில் நிர்மாணிக்கப்படும் உலகின் மிகப்பெரும் ரேடியோ தொலைநோக்கி. விண் ஆய்வாளர்களுக்கு பெரும் வரப்பிரசாதம்.

  5. சிரியாவில் குண்டுவெடிப்பு: 101 பேர் உயிரிழப்பு சிரியாவின் ஜப்லே நகரில் குண்டு வெடிப்பு நடந்த பிறகு அப்பகுதியை பார்வையிடும் ஒருவர். | படம்: ஏ.ஏஃப்.பி. படம்: ஏஎஃப்.பி சிரியாவில் குண்டுவெடிப்பில் சிக்கி 101 பேர் உயிரிழந்தனர். தலைநகர் டமஸ்கஸ் மண்டலத்துக்கு உட்பட்ட ஜப்லே மற்றும் டார்டஸ் நகரங்களில் குண்டு வெடிப்புச் சம்பவம் நடந்துள்ளது. இன்று (திங்கள்கிழமை) காலை 7 மணியில் இந்த இரு நகரங்களிலும் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. மொத்தம் 7 சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தன. ஜப்லே நகரில் 53 பேரும், டார்டஸ் ந…

  6. வெயிலுக்கு உருகிய தார்சாலை..! நொந்து நூடுல்ஸான மக்கள் (வீடியோ) கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், குஜராத் மாநிலம் வால்சட் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை வெயில் மக்களை வாட்டி வதைத்தது. 100 டிகிரிக்கு மேல் கொளுத்திய வெயிலால் அங்குள்ள தார் சாலைகள் உருகின. இதனால் சாலைகளை கடக்க முடியாமல் மக்கள் கடும் அல்லப்பட்டனர். வீடியோவை காண... http://www.vikatan.com/news/india/64473-road-melts-in-gujarat-makes-it-difficult-to-walk.art

  7. தாய்லாந்தில் இடம்பெற்ற தீ விபத்தில் 17 பாடசாலை மாணவிகள் பலி தாய்லாந்தில் இடம்பெற்ற தீ விபத்தில் 17 பாடசாலை மாணவிகள் உயிரிழந்துள்ளனர். பாடசாலை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் இவ்வாறு 5 முதல் 13 வயது வரையிலான பாடசாலை மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். Pithakkiart Witthayaபாடசாலையின் விடுதியில் 38 மாணவிகள் தங்கியிருந்தனர் என தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் மேலும் ஐந்து மாணவிகள் காயமடைந்துள்ளதுடன் இருவரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. உறங்கிக் கொண்டிருந்த மாணவிகளே சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/132408/la…

  8. பங்காளதேசத்தில் ரோனு புயலின் கோரத் தாண்டவத்துக்கு 24 பேர் பலி : 5 இலட்சம் மக்கள் வெளியேற்றம் பங்காளதேசத்தில் மணிக்கு 88 கிலோமீட்டர் வேகத்தில் தாக்கிய ’ரோனு’ புயலினால் ஏற்பட்ட மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 24 பேர் பலியாகியுள்ளனர். வங்கக்கடலில் உருவான ரோனு புயல் இலங்கையில் கடலோர பகுதிகளில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. கனமழை மற்றும் நிலச்சரிவால் ஏராளமானோர் பலியாகி உள்ளனர். இதன் தாக்கத்தால் தமிழகம், ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. சிட்டகாங் துறைமுகத்திற்கு தென்மேற்கில் 140 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள இந்த புயல் இன்று பிற்பகல் பரிசால்-சிட்டகாங் இடையே கரையை கடக்கலாம் என வானிலை மையம் கூறி…

  9. ஆப்கன் தாலிபன் தலைவர் முல்லா அக்தார் மன்சூர் கொல்லப்பட்டார்? ஆப்கன் தாலிபன் தலைவர் முல்லா அக்தார் மன்சூர் மீது வான்வழித் தாக்குதல் நடத்தி உள்ளதாக அமெரிக்க ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்தத் தாக்குதலின் போது, முல்லா மன்சூர் இறந்திருக்க வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். கொல்லப்பட்டதாக சொல்லப்படும் முல்லா மன்சூர் முல்லா அக்தார் மற்றும் மேலும் ஒருவரை குறிவைத்து நடந்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு அமெரிக்க ராணுவம் பல ஆளில்லா விமானங்களை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகனின் பேச்சாளர் ஒருவர், ''கடந்த ஜூலை மாதம் முதல் தாலிபன் அமைப்பின் தலைவராக முல்லா அக்தார் பொறுப்பெற்று கொண்டார். அமைதிக்கும், பொதுமக்களுக்கும்…

  10. ஈஜிப்ட் ஏர் விமானம் தீவிரவாதத் தாக்குதலால் மாயமா? - எகிப்து அமைச்சர் பாரிஸிலிருந்து கெய்ரோ புறப்பட்ட ஈஜிப்ட் ஏர் விமானம் மத்தியதரைக்கடலின் மேற்பரப்பில் வைத்து ராடர் பார்வையிலிருந்து காணாமல் போயிருப்பது தொழில்நுட்ப கோளாறு என்பதை விட தீவிரவாத தாக்குதலால் ஏற்பட்டதாக இருக்கலாம் என்று எகிப்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் செரிஃப் ஃபாத்தி தெரிவித்துள்ளார். ஈஜிப்ட் ஏர் விமானம் தீவிரவாத தாக்குதலால் காணாமல் போயிருக்கலாம் என எகிப்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்திருக்கிறார். எம்எஸ்804 என்ற இந்த விமானத்தில் பயணிகளும், விமான பணியாளர்களுமாக 66 பேர் பயணம் செய்துள்ளனர். ராடார் திரைகளிலிருந்து மறைந்து போவதற்கு முன்னர் திடீரென திசைமாறிச் சென்றதா…

  11. கடல் மட்டம் அதிகரிப்பால் வரும் 2050-ஆம் ஆண்டு வாக்கில் இந்தியா மிகப்பெரிய ஆபத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று ஐ.நா. சுற்றுச்சூழல் அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பருவநிலை மாறுபாடு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் சூழலில் ஐ.நா.வின் இந்த அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. கென்யா தலைநகர் நைரோபியில் ஐ.நா. சுற்றுச்சூழல் மாநாடு அடுத்த வாரம் நடைபெறவுள்ளதை முன்னிட்டு "சர்வதேச பருவநிலை மாறுபாடு' என்ற தலைப்பிலான ஆய்வறிக்கையை ஐ.நா. வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பருவநிலை மாறுபாட்டால் உலக நாடுகள் அனைத்தும் எதிர்காலத்தில் பேரிடர்களைச் சந்திக்கும் என்றபோதிலும், பசிபிக், தெற்கு மற்றும் தென்கிழக்க…

  12. அமெரிக்க வெள்ளை மாளிகை அருகே ஆயுதத்துடன் சென்ற ஒருவர் மீது துப்பாக்கிப்பிரயோகம் அமெரிக்க வெள்ளை மாளிகை அருகே ஆயுதத்துடன் சென்ற ஒருவர் மீது மேற்கொள்ளபட்ட துப்பாக்கிப்பிரயோக சம்பவத்தினை தொடர்ந்து வெள்ளை மாளிகை தற்காலிகமாக மூடப்பட்டது. உள்ளூர் நேரப்படி நேற்று மதியம் 2 மணி அளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தின் போது காயம்; அடைந்த நபர் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைப்பெற்று வருவதாக வாஷிங்டன் போலீஸ் தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/132366/language/ta-IN/article.aspx துப்பாக்கி …

  13. வெப்பநிலையில் புதிய ''சாதனை'': ராஜஸ்தானில் 50 செல்சியசை தாண்டியது ராஜஸ்தானை சேர்ந்த ஒரு நகரத்தில் 51 செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. I ஜூன் மாத மத்தியில் வெப்பம் தணிய வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் வானிலை பதிவு ஆவணப்படுத்தப்படத் தொடங்கிய காலத்தில் இருந்து பதிவாகியிருக்கும் மிக அதிக பட்ச வெப்பநிலை இது தான் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியா முழுவதும் தற்போது வெப்ப அலை நிலவி வருகிறது. இதற்கு மத்தியில், பாலைவன மாநிலமான, ராஜஸ்தானில் உள்ள இந்த பஹலோடி என்னும் நகரில் இந்த அதிக பட்ச வெப்ப நிலை பதிவாகியுள்ளது. இதற்கு முந்தைய அதிக பட்ச வெப்ப நிலையானது 1956ல் பதிவாகிய 50.6 செல்சியஸ் ஆகும். …

  14. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் ஆப்கான் குண்டு வெடிப்பில் பலி ஆப்கானிஸ்தானில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் சாலையோர குண்டுவெடிப்பு ஒன்றில் கொல்லப்பட்டுள்ளனர். தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை என்றாலும், தாலிபான்களே காரணம் என்கிறார் மாகாண ஆளுநர் கொல்லப்பட்டவர்களில் ஐந்து சிறார்கள் மற்றும் இரண்டு பெண்களும் அடங்குவர். இதில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். தலைநகர் காபூலுக்கு வடக்கேயுள்ள பஹ்லான் மாகாணத்தில் இந்தக் குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது. இத்தாக்குதலுக்கு இதுவரை எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை. ஆனால் அந்தப் பகுதியில் சில தினங்களுக்கு முன்னர், அரசபடைகளுக்கும் தாலிபான்களுக்கும் இடையே மோதல்கள் நடைபெற்ற சூழலி…

  15. இன்றைய நிகழ்ச்சியில் - மத்திய தரைக்கடலில் விபத்துக்குள்ளான எகிப்திய விமானத்தின் இடிபாடுகளும் சடலங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. - பாலியல் வன்செயல்களுக்கு எதிராக போராடும் மெக்ஸிகோ நாட்டுப் பெண்கள். - நீரில் மூழ்கிய இரு எகிப்திய நகரங்களின் இடிபாடுகள் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில்.

  16. இன்றைய நிகழ்ச்சியில் - கிழக்கு மத்திய தரைக்கடலில் எகிப்திய விமானம் அறுபத்தியாறு பேருடன் விபத்து. தீவிர தேடுதல்கள் நடக்கின்றன. - தென் சீனக் கடற்பகுதியில் அமெரிக்காவின் உளவு விமானம் ஒன்றை தாங்கள் மறித்தபோது, பாதுகாப்பற்ற வகையில் தமது இரண்டு விமானங்கள் மேலும் கீழும் பறந்தன என அமெரிக்க பாதுகாப்பு அமைச்சு கூறுவதை சீனா மறுத்துள்ளது. - இஸ்லாமியவாத பயங்கரவாதக் குழுவான போக்கோ ஹராமிடமிருந்து மீட்கப்பட்ட நைஜீரியப் பள்ளி மாணவி ஒருவர் இன்று அதிபர் முகமது புகாரியை சந்திக்கிறார்.

  17. அவுஸ்­தி­ரே­லி­யாவில் பள்­ளி­வாசல் தீக்­கிரை அவுஸ்­தி­ரே­லிய மெல்போர்ன் நகரின் தென்­மேற்கே கீலோங் எனும் இடத்­தி­லுள்ள பள்­ளி­வா­ச­லொன்று நேற்றுப் புதன்கிழமை தீயால் அழி­வ­டைந்­துள்­ளது. மேற்­படி சம்­ப­வத்தை திட்­ட­மிட்ட குற்­றச்­செ­ய­லாக சந்­தே­கிக்கும் பிராந்­திய பொலிஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டுள்­ளனர். பொஸ்டொக் அவன்­யு­வி­லுள்ள அந்தப் பள்­ளி­வா­சலில் பர­விய தீயை 7 தீய­ணைப்புப் படை­வீரர்கள் நேற்று புதன்­கி­ழமை அதி­காலை 2.15 மணி­ய­ளவில் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டுவந்தனர். இந்த சம்­ப­வத்தில் எவரும் காய­ம­டை­ய­வில்லை. கிரேட்டர் கீலோங் பிராந்­தி­யத்தில் வசிக்கும் 8,000 க்கு மேற்­பட்ட முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலமாக இந்தப் பள்ளிவாசல் விளங்கி…

  18. மூன்று மணி நேரம் முதலையோடு போராடி உயிர் தப்பிய 72 வயது மீனவர் வடக்கு ஆஸ்திரேலியாவில், தன் நண்பர் நீரில் மூழ்குவதை கண்ட 72 வயது மீனவர் ஒருவர், தன்னை தாக்க வந்த முதலையிடமிருந்து தற்காத்து கொள்ள ஸ்பானர் மற்றும் ஸ்பார்க் பிளக் ஆகிய கருவிகளுடன் கடுமையாக போராடிய சம்பவத்தை தன்னை மீட்ட மீட்பு பணியாளர்களிடம் விவரித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் மிகுதியாக வாழும் உப்பு நீர் முதலைகள் (கோப்பு படம்) மேற்கூறிய மீனவரும், அவரது நண்பரும் நேற்று காலை டார்வினிலுள்ள லீடர்ஸ் கிரீக் மீன்பிடி தளத்தில், தங்களின் 3 மீட்டர் (10 அடி) நீளமுள்ள படகில், மணல் நண்டுகளை பிடித்து கொண்டிருந்து போது , பெரிய முதலையொன்று அவர்களின் படகை கவிழ்த்துள்ளது. தனது படகுக்கு திரும்ப எத்தனிக்கும…

  19. கென்டக்கி மாகாண பிரைமரி: ஹிலாரி கிளிண்டன் வெற்றி அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான உட்கட்சி வேட்பாளர் தேர்வு நடைமுறைகளில், கென்டக்கி மாகாணத்துக்கு நடந்த பிரைமரி சுற்றில், ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஹிலாரி கிளிண்டன்: வெற்றி முகம் பெரும்பாலான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், ஹிலாரி வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரபூர்வமற்ற அறிவிப்பு ஒன்றை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். இதுதொடர்பாக ட்விட்டரில் கருத்து வெளியிட்டுள்ள ஹிலாரி கிளிண்டன், ''கென்டக்கியில் வெற்றி பெற்றுவிட்டோம். ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி. ஒன்றுபட்ட அணியாக நாம் என்றும் பலமாக இருப்போம் ‘’ என்று தெரிவித்துள்ளார். இன்னொரு பிர…

  20. இன்றைய நிகழ்ச்சியில் - இலங்கையில் தொடரும் கடுமையான மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் முப்பத்தி ஏழு பேராவது கொல்லப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். - ஐரோப்பிய கனவில் பெருத்த ஏமாற்றத்துடன் போர் முடியாவிட்டாலும் நாடு திரும்பும் இராக்கியர். - இந்தோனேஷியாவில் தொடரும் பெண்ணுறுப்பை சிதைக்கும் பழக்கம் குறித்து பிபிசியின் பிரத்யேக செய்திக் குறிப்பு

  21. அமெரிக்காவில் மரணத்துக்குப் பின் குழந்தையை ஈன்ற அன்னை: - உருக்கத்தை ஏற்படுத்திய சம்பவம் [Wednesday 2016-05-18 08:00] அமெரிக்காவில் சாலை விபத்தில் மரணமடைந்த பின்பும் கர்ப்பிணித் தாய்க்கு ஆரோக்கிமான குழந்தை பிறந்தது அந்த நாட்டு மக்களிடையே உருக்கத்தை ஏற்படுத்தியது.இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:மிஸரி மாகாணம், கேப் ஜிரார்டோ நகரில் மேட் ரைடர், சாரா ஐலர் தம்பதி வசித்து வந்தனர்.நிறைமாத கர்ப்பிணியான சாரா ஐலருக்கு கடந்த புதன்கிழமை இடுப்பு வலி ஏற்பட்டது.அதையடுத்து, சுமார் 96 கி.மீ. தொலைவிலுள்ள மருத்துவமனைக்கு சாரா ஐலரை மேட் ரைடர் காரில் அழைத்துச் சென்றார். அமெரிக்காவில் சாலை விபத்தில் மரணமடைந்த பின்பும் கர்ப்பிணித் தாய்க்கு ஆரோக்கிமான குழந்தை பிறந்தது அந்த நாட்…

  22. இன்றைய நிகழ்ச்சியில் - உலக மற்றும் மத்தியகிழக்கு நாடுகள் சிரியா குறித்து விவாதித்துக் கொண்டிருக்க, போரினால் நிர்மூலமான அலெப்போ நகரில் இருந்து வெளியேற மறுத்த ஒருவரை பிபிசி சந்தித்தது. - பெண்களின் உடல் தோற்றத்தை நிந்திப்பது பாகிஸ்தானில் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அதற்கு தீர்வுகாண முயற்சிக்கிறார் ஒரு பெண் வழக்கறிஞர். - இலங்கையில் கடும் மழை காரணமாக குறைந்தது பதினொரு பேர் உயிரிழந்துள்ளனர்.

  23. தாய்­லாந்தின் கோ தாசாய் தீவை மூட தீர்மானம் அதிகப்படியான சுற்றுலா பயணிகளின் வருகை, இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழலை எதிர்மறையாக பாதிப்பதாக கூறி தாய்லாந்திலுள்ள கோ தாசாய் தீவினை மூட அந்­நாட்டு அதி­கா­ரிகள் முடிவு செய்­துள்­ளனர். சிமிலான் தேசிய பூங்காவின் ஒரு பகுதியான கோ தாசாய் தீவு, புங் நகா மாகாணத்தை சேர்ந்ததாகும். தாய்லாந்திலுள்ள அனைத்து கடல்சார் தேசிய பூங்காக்களும் பருவ காலத்திற்காக மே மாதம் முதல் முதல் ஒக்டோபர் நடுப்­ப­கு­தி வரை மூடப்பட்டிருந்தாலும், தாசாய் மட்டும் திறக்கப்படாது என தெரி­விக்­கப்­ப­டு­கி­ற­து. கோ தாசாய் பகுதியில் நீச்சல் சேவை வசதிகள் இருப்பதால், இப்பூங்கா சுற்றுலாப் பயணிகள் மற்ற…

  24. கனடாவில் மீண்டும் பரவுகிறது காட்டுத் தீ கனடாவின் ஆல்பர்டா மாகாணத்தில் மீண்டும் பரவிவரும் காட்டுத் தீயால் மறுபடியும் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் காரணமாக, எண்ணெய் வயலில் வேலை செய்யும் சுமார் 600 பேரை அங்கிருந்து வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். கனடாவில் இதுவரை இல்லாத வகையில் இந்தக் காட்டுத் தீ பரவி வருகிறது அவ்வகையில் ஃபோர்ட் மெக்மர்ரிக்கு அருகில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த மக்கள் வடக்கேயுள்ள எண்ணெய் மையங்களுக்கு அனுப்பப்படுவதாக மாகாண முதல்வர் ரேச்சல் நோட்லி தெர்வித்துள்ளார். ஏற்கனவே ஃபோர்ட் மெக்மர்ரிக்கு வடக்கே எண்ணெய் நிலையங்களில் பணியாற்றும் ஆயிரக்கணக்கானவர்கள் தேவைப்பட்டால் வெளியேற்றப்படும் தயார் நிலையில் உள்ளனர். இதனிடைய…

  25. காணாமல் போகும் 11,000 பிபிசி சமையல் குறிப்புகள் பிபிசியின் இணைய சமையல் குறிப்புகள் காணாமல் போகின்றன பிபிசியின் இணைய நிதியில் சுமார் 15 மில்லியன் பிரிட்டிஷ் ஸ்டெர்லிங்க் பவுண்ட்களை சேமிக்கும் நோக்கத்தில் பிபிசியின் உணவுக்கான பிரத்யேக இணையதளம் மூடப்படவிருப்பதாக பிபிசியைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த இணையதளத்தில் சுமார் 11,000 சமையல் குறிப்புகள் இருக்கின்றன. இந்த சமையல் குறிப்புகள் அனைத்தும் ஆவணப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றில் சிலவற்றை பிபிசியின் வர்த்தக இணையதளமான பிபிசி குட் ஃபுட் இணையதளத்துக்கு மாற்றலாமா என்றும் பரிசீலிக்கப்படுகிறது. ஆனால் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. பிபிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சமை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.