உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26696 topics in this forum
-
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியானார் 'கிழக்கின் ட்ரம்ப்' கிழக்கின் ட்ரம்ப் (Trump of the East) என விமர்சகர்களால் அழைக்கப்படும் சர்ச்சைக்குரிய அரசியல்வாதியான றொட்ரிகோ டிட்டேர்ட்டே, அந்நாட்டின் அடுத்த ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். நேற்று இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில், அதிகமான வாக்குகளைப் பெற்றதையடுத்தே, இந்த வெற்றியை அவர் பெற்றுள்ளார். அந்நாட்டின் அரசியலமைப்பின்படி, ஜனாதிபதியாக 4 ஆண்டுகள் பதவி வகித்த ஒருவர், அப்பதவிக்கு மீளப் போட்டியிட முடியாது என்பததால், தற்போதைய ஜனாதிபதியான பெனிக்னோ அக்கினோ, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டிருக்கவில்லை. இந்நிலையில் தேர்தலில் போட்டியிட்ட 71 வயதான றொட்ரிகோ டிட்டேர்ட்…
-
- 0 replies
- 491 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * பாகிஸ்தான் முன்னாள் பிரதமரின் மகன் கடத்தப்பட்டு மூன்று ஆண்டுகளுக்குப் பின் மீட்கப்பட்டுள்ளார்; * சவுதியின் மதப்போலிசாரால் கடிக்கப்பட்ட பெண்; நன்னடத்தையை கண்காணிக்க அமைக்கப்பட்ட மதப்போலிஸாரின் அதிகாரங்கள் குறைக்கப்படுகின்றன; * உலகில் உள்ள தாவர வகைகள் குறித்த முதல் கணக்கெடுப்பு; நான்கு லட்சம் தாவர இனங்களில் ஐந்தில் ஒன்று அழிந்துவிடும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை செய்திருப்பது குறித்த செய்தி ஆகியவை இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 385 views
-
-
பெயரில்லா கல்லறைகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் மத்தியதரைக்கடலை கடக்க முயற்சித்த போது பலியான குடியேறிகளில் 1250 க்கும் அதிகமானோர் அடையாளம் காணப்படாமல் புதைக்கப்பட்டுள்ளதாக பிபிசியின் விசாரணை ஒன்றில் தெரியவந்துள்ளது. அனேகமான இந்த உடல்கள் கரையொதுங்கிய நிலையில் அல்லது மீனவர்களால் கடலிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. கிரேக்கம் துருக்கி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் முழுவதுமாக குறைந்தது 70 பகுதிகளிலிருந்து பிபிசியின் விசாரணை இதனை கண்டறிந்துள்ளது. மரணமடைந்த குடியேறிகளது உடல்கள் அனைத்தையும் இனங்காண தாம் போராடி வருவதாக ஒப்புக்கொண்டுள்ள அந்த நாடுகளின் உள்ளுர் அதிகரிகள், உள்ளுர் தான்னார்வ பணியாளர்களின் உதவியுடன் இந்தப் பணியை முன்னெடுத்துவருவதுடன், பெரும் எண்ணிக்…
-
- 0 replies
- 688 views
-
-
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரின் மகன் ஆப்கானிலிருந்து மீட்பு பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் யூஸுப் ரஸா ஜிலானியின் மகன் ஆப்கானிஸ்தாலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் யூஸஃப் ரஸா ஜிலானி ஆப்கானிஸ்தானின் கிழக்கு பிராந்தியமான கஜினியிலிருந்து அமெரிக்க மற்றும் ஆப்கான் படைகளின் கூட்டு முயற்சியில் அலி ஹைதர் ஜிலானி விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் முல்தான் நகரில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுப்பட்டிருந்தப்போது ஜிலானி துப்பாக்கிதாரிகளால் கடத்தப்பட்டார. ஒரு மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அவர…
-
- 0 replies
- 268 views
-
-
ஜேர்மனி ரயில் நிலையத்தில் கத்தி வெட்டு - ஒருவர் பலி ஜேர்மனின் மியூனிக் நகரில் ஒரு நபர் கத்தியால் வெட்டியதில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், மூன்று பேர் காயமடைந்துள்ளார்கள். ஜேர்மனி ரயில் நிலையத்தில் கத்தி வெட்டு - ஒருவர் பலி இந்த தாக்குதலுக்கு ஏதாவது இஸ்லாமியவாத தொடர்பு இருக்கின்றதா என்று போலிஸார் புலன்விசாரணை செய்கிறார்கள். இன்று காலை 5 மணியளவில் கிரஃபிங் ரயில் நிலையத்தில் வைத்து 4 பயணிகளை அந்த 27 வயதான நபர் தாக்கியுள்ளார், காயமடைந்த ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருக்கின்றது. தாக்குதலாளியை போலிஸார் மடக்கிப் பிடித்ததாக தெரியவருகின்றது. அவர் அல்லாஹ் அக்பர் என்று கோஷமிட்டதாக சம்பவ இடத்தில் இருந்த சிலர் தெரிவித்துள்ளனர். ஆனால், தாக்குதலாளிய…
-
- 0 replies
- 408 views
-
-
லண்டன் மேயர் சாதிக் அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதிப்பேன்: டிரம்ப் லண்டன் மேயர் சாதிக் கான் | படம்: ராய்ட்டர்ஸ் லண்டன் நகரின் முதல் முஸ்லிம் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சாதிக் கானுக்கு விலக்கு அளித்து அவர் அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி அளிக்கப்படுவார் என அந்நாட்டின் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர்களுள் ஒருவரான டொனால்ட் டிரம்ப் கூறியிருக்கிறார். நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில், "லண்டன் நகரின் முதல் முஸ்லிம் மேயராக சாதிக் கான் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மிகவும் நல்ல விஷயம். எனக்கு அதில் மகிழ்ச்சி. அவர் தனது பொறுப்புகளை நல்ல முறையில் செய்வார் என எதிர்பார்க்கிறேன். மற்றவர்களுக்கு அவர் ஒரு சிறந்த முன்னதாரணமாக…
-
- 0 replies
- 326 views
-
-
இந்து மதத் தலைவர்களை கொன்றால் தென் ஆபிரிக்காவில் வேலை, பணம் இந்துமதத் தலைவர்களை கொலை செய் தால், கை நிறைய பணம், தென் ஆபிரிக்காவில் தொழில் வாய்ப்பு வழங்க மும்பை தாதா தாவூத் இப்ராஹிம் சதித் திட்டம் தீட்டிய தகவல் அம்பலமாகி உள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 2-ஆம் திகதி குஜராத்தில் இந்து அமைப்பை சேர்ந்த பரூச் ஷிரிஷ் பன்காலி, பிரக்னேஷ் மிஸ்திரி ஆகிய 2 பேரை மும்பை தாதா தாவூத் இப்ராஹிமின் ஆட்கள் சுட்டுக் கொன்றனர். இதில் தொடர்புடைய 10 பேரை கைது செய்து விசாரணை நடத்தியதில், 1993 ஆம் ஆண்டு மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் யாகூப் மேமனை தூக்கிலிட்டதற்கு பழிக்குப் பழியாக 2 பேரை கொலை செய்ததாக கூறியுள்ளனர். எனினும் தேசிய…
-
- 0 replies
- 339 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * எல்லைக்காவலை தீவிரமாக்குகிறது துனிஷியா; இஸ்லாமிய அரசு என்று தன்னை அழைத்துக்கொள்ளும் அமைப்பின் ஆபத்தைத் தடுப்பதில் தீவிரம். * மட்டுப்படுகிறது கேனடாவின் காட்டுத்தீ; குளிர்ச்சியான பருவநிலையால் தீயைக்கட்டுப்படுத்த முடியும் என்று நம்பிக்கை. * பசியாற்றும் பஞ்சாபிகள்; லண்டனில் அதிகரித்துவரும் வீடற்றவர்களின் வயிற்றுப்பசியை போக்கும் சீக்கியர்கள் குறித்த செய்தி ஆகியவை இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 306 views
-
-
தப்புக் கணக்கு': சங்கடத்துக்குள்ளான பேராசிரியர் விமானம் ஒன்றில் கணித சமன்பாடு ஒன்றை ஆராய்ந்துகொண்டிருந்த பேராசரியரை தீவிரவாதி எனக் கருதி சூசகத் தகவல் ஒன்றை வெளியிட்ட சக பயணியால் அந்தப் பேராசிரியர் பெரும் தர்மசங்கடத்துக்கு உள்ளான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பயணியின் கணித சமன்பாட்டால் எழுந்த சந்தேகத்தால் விமானம் தாமதமானது விமானப் பயணத்தின் போது கணித சமன்பாடு ஒன்றை தீர்த்துக் கொண்டிருந்த இத்தாலியப் பொருளியல் பேராசிரியரை தீவிரவாதி எனக் கருதி, அவருக்கு அருகில் அமர்ந்திருந்த பயணி ஒருவர் இரகசியமாக வெளியிட்ட தகவலை அடுத்து அவர் விசாரிக்கப்பட்டுள்ளார். எனினும் அந்தப் பெண்ணின் குற்றச்சாட்டை அடுத்து விமானத்துக்குள்ளேயே விசாரிக்க…
-
- 2 replies
- 622 views
-
-
ட்ரம்ப்பை வெறுப்பதால் 'குடியரசுக் கட்சியினர் என்னை அணுகுகின்றனர்' அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கான ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகத் தெரிவாகுவார் எனக் கருதப்படும் ஹிலாரி கிளின்டன், தனது எதிரணியினரான குடியரசுக் கட்சியினரால் அணுகப்படுவதாக தெரிவித்துள்ளார். குடியரசுக் கட்சியின் உத்தேச வேட்பாளராக டொனால்ட் ட்ரம்ப் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், அவரது கட்சிக்குள் அவருக்குக் காணப்படும் எதிர்ப்புக் காரணமாக, அக்கட்சியின் முக்கிய உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் எனப் பலர், அவருக்கு ஆதரவு வழங்க முடியாது எனத் தெரிவித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக, ஜனநாயகக் கட்சியினதும் குடியரசுக் கட்சியினதும் ஆதரவாளர்களைத் தேடி வருவதாகத் தெரிவித்துள்ள ஹில…
-
- 0 replies
- 321 views
-
-
பாகிஸ்தான் பஸ் சாரதியின் மகன் லண்டன் மாநகரின் மேயராக தெரிவு இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டன் நகர மேயராக பாகிஸ்தானை சேர்ந்த பஸ் சாரதி ஒருவரின் மகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்து நாட்டில் உள்ள மாகாணங்களுக்கான பிரதிநிதிகள் தேர்தல் மற்றும் சில நகரங்களுக்கான மேயர் பதவிகளுக்கான தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில் லண்டன் நகர மேயர் பதவிக்கான தேர்தலில் பிரபல கோடீஸ்வரரும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான இம்ரான் கானின் முன்னாள் மனைவி ஜெசிமாவின் சகோதரருமான ஸக் கோல்ட் ஸ்மித் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பாகிஸ்தானை சேர்ந்த பஸ் சாரதி ஒருவரின் மகனான சாதிக் பாஷா(45) என்பவர் தொழிலாளர் கட்சி வேட்பாளராக போட்டியிட்டார். இந்த த…
-
- 24 replies
- 1.3k views
- 1 follower
-
-
கனடாவில் காட்டுத் தீயினால் மீட்பு பணிகள் பாதிப்பு : 80 ஆயிரம் மக்கள் வெளியேற்றம் (வீடியோ இணைப்பு) கனடாவில் அதிகரித்து வரும் காட்டுத் தீயால் மீட்பு பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் அல்பெர்டா மாகாணத்தில் உள்ள காடுகளில் கடந்த செவ்வாய் கிழமை முதல் தீ பற்றி எரிந்து வருகிறது. இந்த காட்டுத் தீ அல்பெர்டா மாகாணத்தின் சில நகரங்களை முற்றிலுமாக அழித்து விட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். காட்டுத் தீயால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள ஃபோர்ட் மெக்மர்ரி நகரிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள், விமானம் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். அங்கிர…
-
- 1 reply
- 519 views
-
-
ஆப்கான்: இரண்டு பேருந்துகள்- டேங்கர் மோதி விபத்து, 50 பேர் பலி ஆப்கானிஸ்தானில் இரண்டு பேருந்துகளும் எரிபொருள் டேங்கர் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 50 பேர் பலியாகியுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். தலைநகரான காபூலையும் தெற்கே காந்தஹாரையும் இணைக்கும் பிரதான நெடுஞ்சாலையில் நடந்துள்ள இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர். மூன்று வாகனங்களும் தீப்பற்றி எரிந்துள்ளன. ஆப்கானிஸ்தானில் மோசமான வீதிகளின் நிலைமையாலும் போக்குவரத்து விதிகள் சரிவர கடைப்பிடிக்கப்படாமையாலும் சாலை விபத்துக்கள் அதிகளவில் நடப்பது வழமை என்பது குறிப்பிடத்தக்கது. http://www.bbc.com/tamil/global/2016/05/160508_afghan_accident
-
- 0 replies
- 323 views
-
-
ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் கலைப்பு, ஜூலை 2 தேர்தல் ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு எதிர்வரும் ஜுலை மாதம் இரண்டாம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலவும் சூழலில், பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது இதற்கான அறிவிப்பை பிரதமர் மால்கம் டர்ண்புல் வெளியிட்டார். எட்டுமாதங்கள் மட்டுமே பிரதமராக இருந்த அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார். உட்கட்சி முரண்பாடு மற்றும் சதி காரணமாக, இவருக்கு முன்னர் பிரதமராக இருந்த டோனி அபாட் பதவி விலகும் நிலை ஏற்பட்டது. ஆஸ்திரேலியாவின் முக்கிய ஏற்றுமதியான இரும்பு மற்றும் நிலக்கரியில் ஏற்பட்ட விலைச்சரிவின் காரணமாக, நாட…
-
- 0 replies
- 305 views
-
-
சவுதி அரேபியாவின் எண்ணெய்வள அமைச்சர் பதவி நீக்கம் சவுதியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக எண்ணெய் வள அமைச்சராக இருந்த அலி அல்-நய்மி அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். எண்ணெய் வள அமைச்சரை பதவி நீக்கியது சவுதி அரசாங்கம் பரந்துபட்ட அளவில் மன்னாரால் மேற்கொள்ளப்பட்ட அரசாங்க சீர்திருத்ததின் ஒரு பகுதியாக அவரது பதவி நீக்கமும் இடம்பெற்றுள்ளது. அவருக்கு பதிலாக சுகாதார அமைச்சராக இருந்த காலிதி அல்-ஃபாலி அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். எரிசக்தி மற்றும் தொழில்த்துறை என்ற புதிய அமைச்சுக்கு அவர் தலைமை வகிப்பார். முன்னர் மன்னர் சல்மானின் உத்தரவிற்கு அமைய மேலும் பல அமைச்சர்களும் மாற்றப்பட்டுள்ளனர். சவுதியின் பொருளாதாரம் எண்ணெய் ஏற்றுமதிய…
-
- 0 replies
- 377 views
-
-
ஹெலிகாப்டர் ஊழல்: மன்மோகன்சிங், சோனியா மீது வழக்கு பதிய கோரி மனு- சிபிஐக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் டெல்லி: ஹெலிகாப்டர் ஊழல் விவகாரத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்க சி.பி.ஐக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மன்மோகன்சிங் ஆட்சிக் காலத்தில், விவிஐபிக்கள் பயணம் செய்வதற்காக 12 ஹெலிகாப்டர்களை சப்ளை செய்ய, அகஸ்டாவெஸ்ட்லேண்ட் என்ற வெளிநாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதற்காக அந்நிறுவனம் இந்தியாவைச் சேர்ந்த சில அரசியல் தலைவர்களுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் விமானப் படை முன்னாள…
-
- 0 replies
- 379 views
-
-
போர்க்குற்ற வழக்கில் ஜமாத் தலைவருக்கு மரண தண்டனை: வங்கதேச உச்ச நீதிமன்றம் உறுதி மரண தண்டனை விதிக்கப்பட்ட வங்கதேச ஜமாத் இ இஸ்லாமி கட்சியின் மூத்த தலைவர் மொடியூர் ரஹ்மான் நிஜாமி | கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ். 1971-ம் ஆண்டு போர்க்குற்றங்கள் தொடர்பாக, வங்கதேச பழமைவாத ஜமாத் இ இஸ்லாமி கட்சியின் மூத்த தலைவர் மொடியூர் ரஹ்மான் நிஜாமிக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. வங்கதேசத்தில் 1971-ம் ஆண்டு சுதந்திரப் போராட்டத்தின்போது, பாகிஸ்தான் படைகளுடன் சேர்ந்துகொண்டு போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் பாலியல் பலாத்கார…
-
- 0 replies
- 344 views
-
-
பிரிட்டிஷ் தேர்தல்கள்: ஸ்காட்லாந்தில் தொழிற்கட்சி பெரும் பின்னடைவு லண்டன் மேயருக்கான போட்டியில், தொழிற்கட்சியின் சாதிக் கான் முன்னணியில் உள்ளார். பிரிட்டனில் நடந்துமுடிந்துள்ள தேர்தல்களில் பிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சி பெரிய அளவில் சோபிக்கத் தவறியுள்ளது. கட்சியின் புதிய தலைவராக ஜெரமி கார்பின் கடந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், அந்தக் கட்சி சந்தித்துள்ள முதலாவது அரசியல் சோதனையாக இந்தத் தேர்தல்கள் பார்க்கப்பட்டன. ஸ்காட்லாந்து நாடாளுமன்றத் தேர்தலில் மிகப் பெரிய பின்னடைவாக தொழிற்கட்சி மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்தில் ஒருகாலத்தில் செல்வாக்கு பெற்ற கட்சியாக தொழிற்கட்சி இருந்துள்ளது. வேல்ஸ் சட்டசபைக்கான தேர்தலில் தொழ…
-
- 5 replies
- 451 views
-
-
புதுடெல்லி: ஜந்தர்மந்தரில் ஜனநாயகத்தைக் காப்போம் பேரணியில் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவர்கள். | படம்: பிடிஐ. உத்தராகண்ட் அரசு கலைக்கப்பட்டதை கண்டித்து நாடாளுமன்றத்தை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்த முயன்ற காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் கைதாகி விடுதலை செய்யப்பட்டனர். டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் இருந்து நாடாளுமன்றத்தை நோக்கி ‘ஜனநாயகத்தை காப்போம்’ என்ற பெயரில் காங்கிரஸ் கட்சியின் முற்றுகை பேரணி நடந்தது. கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடந்த இந்த பேரணியில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், மக்களவை தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், முன்னாள் பி…
-
- 0 replies
- 345 views
-
-
செக் குடியரசுக்கு புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது inShare மத்திய ஆப்பிரிக்க நாடான செக் குடியரசுக்கு நிர்வாக வசதிக்காக “செக்கியா” என்று புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது. இனி அதிகாரப்பூர்வ “செக் குடியரசு” என்ற பெயருடன், “செக்கியா’ என்ற பெயரிலும் அந்த நாடு அழைக்கப்படும். பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளின் அதிகாரப்பூர்வ பெயர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களைக் கொண்டிருந்தாலும் அவற்றை எளிதாகக் குறிப்பிடுவதற்கேற்ப ஒற்றைச் சொல் பெயர்கள் உள்ளன. எனினும், கடந்த 1993 ஆம் ஆண்டு ஸ்லோவேகியாவிடமிருந்து பிரிந்த செக் குடியரசுக்கு …
-
- 10 replies
- 1.2k views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் - சுமார் நாற்பது வருடத்தில் முதல் தடவையாக நடக்கும் வடகொரியாவின் ஆளும் தொழிலாளர் கட்சியின் மாநாடு ஆரம்பித்துள்ளது. - சிரியாவில் அகதிகள் முகாம் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதலில் டசின் கணக்கானோர் பலி. புதிதாக ஆரம்பித்துள்ள மோதல்களுக்கு மத்தியில் இதனை ஒரு போர்க்குற்றமாக கருதமுடியும். - விண்ணுக்குச் செல்லவிருக்கும் வல்கைரி ரோபோட். மண்ணிலும் கூட மனிதர்கள் செய்ய முடியாத ஆபத்தான பணிகளை செய்ய வல்லது இது.
-
- 0 replies
- 341 views
-
-
கனடா: ஃபோர்ட் மெக்மர்ரி மக்கள் ஆகாய வழியாக வெளியேற்றம் எண்ணெய் வளம் நிறைந்த பகுதியில் பரவியுள்ள தீயினால், கனடாவின் எண்ணெய் உற்பத்தி தடைப்பட்டுள்ளது கனடாவில் ஃபோர்ட் மெக்மர்ரி நகரிலிருந்து வெளியேறிய ஆயிரக்கணக்கான மக்கள், தொடர்ந்தும் பரவிவரும் காட்டுத் தீக்குள் அகப்பட்டுக் கொள்ளாமல் தவிர்ப்பதற்காக பாதுகாப்பான இடங்களுக்கு ஆகாய வழியாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். நகரின் வடக்கே, சிக்கியுள்ள சுமார் 25-ஆயிரம் பேரை பாதுகாப்பாக வெளியேற்றும் பணி நடந்துவருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். அவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் ஆகாய மார்க்கமாக வெளியேற்றப்படுகின்றனர். மற்றவர்கள் வாகனம் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இடம்பெயர்ந்தவர்கள் ச…
-
- 0 replies
- 428 views
-
-
மெக்காவுக்கு அருகே தீவிரவாத வலையமைப்பு தகர்க்கப்பட்டது மெக்கா நகருக்கு அருகே தளமமைத்து செயல்பட்டுவந்த தீவிரவாத அமைப்பு ஒன்றை தமது பாதுகாப்புப் படையினர் தகர்த்துள்ளதாக சவுதி அரேபியா கூறியுள்ளது. nஐ எஸ் அமைப்புக்கு எதிராக சவுதி கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் அந்தத் தீவிரவாத வலையமைப்பின் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவிக்கிறது. இஸ்லாமிய அரசு என தம்மைக் கூறிக்கொள்ளும் அமைப்பின் அந்த உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் பலமணி நேரங்கள் மோதல்கள் நடைபெற்றன என்று சவுதி ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. …
-
- 0 replies
- 369 views
-
-
சிரிய அகதி முகாம் மீது தாக்குதல் 28 பேர் பலி சிரிய அகதி முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 28 பேர் கொல்லப்பட்டுள்ளனர். வட சிரியாவில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. விமானத் தாக்குதல் ஒன்றில் இவ்வாறு 28 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிரியாவின் இடிலிப் மாகாணம் சர்மாடா என்னும் இடத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சிரிய அல்லது ரஸ்ய விமானங்களினால் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. எனினும், இதுவரையில் யார் தாக்குதல் நடத்தினார்கள் என்பது பற்றி உறுதி செய்யப்படவில்லை. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid…
-
- 3 replies
- 577 views
-
-
ட்ரம்ப் மீதான உச்சக்கட்டத் தாக்குதலை ஆரம்பித்தார் ஹிலாரி ஜனநாயகக் கட்சியின் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட்டுவரும் முன்னாள் இராஜாங்கச் செயலாளரான ஹிலாரி கிளின்டன், குடியரசுக் கட்சியின் உத்தேச ஜனாதிபதி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப் மீது, தனது உச்சக்கட்டத் தாக்குதலை ஆரம்பித்துள்ளார். தனது கட்சியின் சார்பில் வேட்பாளராக, இன்னமும் உத்தியோகபூர்வமாக ஹிலாரி அறிவிக்கப்படாவிட்டாலும், வேட்பாளராகத் தெரிவாகுவது, ஓரளவுக்கு உறுதியாகியுள்ளது. இந்நிலையிலேயே, இதுவரை காலமும் மிதமான முறையில் விமர்சனங்களை முன்வைத்துவந்த அவர், தற்போது உச்சக்கட்டமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ஊகிக்க முடியாத அல்லது கட்டுப்படுத்த முடியாத…
-
- 0 replies
- 400 views
-