உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26894 topics in this forum
-
ஆப்கன் தாலிபன் தலைவர் முல்லா அக்தார் மன்சூர் கொல்லப்பட்டார்? ஆப்கன் தாலிபன் தலைவர் முல்லா அக்தார் மன்சூர் மீது வான்வழித் தாக்குதல் நடத்தி உள்ளதாக அமெரிக்க ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்தத் தாக்குதலின் போது, முல்லா மன்சூர் இறந்திருக்க வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். கொல்லப்பட்டதாக சொல்லப்படும் முல்லா மன்சூர் முல்லா அக்தார் மற்றும் மேலும் ஒருவரை குறிவைத்து நடந்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு அமெரிக்க ராணுவம் பல ஆளில்லா விமானங்களை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகனின் பேச்சாளர் ஒருவர், ''கடந்த ஜூலை மாதம் முதல் தாலிபன் அமைப்பின் தலைவராக முல்லா அக்தார் பொறுப்பெற்று கொண்டார். அமைதிக்கும், பொதுமக்களுக்கும்…
-
- 0 replies
- 469 views
-
-
கடல் மட்டம் அதிகரிப்பால் வரும் 2050-ஆம் ஆண்டு வாக்கில் இந்தியா மிகப்பெரிய ஆபத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று ஐ.நா. சுற்றுச்சூழல் அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பருவநிலை மாறுபாடு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் சூழலில் ஐ.நா.வின் இந்த அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. கென்யா தலைநகர் நைரோபியில் ஐ.நா. சுற்றுச்சூழல் மாநாடு அடுத்த வாரம் நடைபெறவுள்ளதை முன்னிட்டு "சர்வதேச பருவநிலை மாறுபாடு' என்ற தலைப்பிலான ஆய்வறிக்கையை ஐ.நா. வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பருவநிலை மாறுபாட்டால் உலக நாடுகள் அனைத்தும் எதிர்காலத்தில் பேரிடர்களைச் சந்திக்கும் என்றபோதிலும், பசிபிக், தெற்கு மற்றும் தென்கிழக்க…
-
- 0 replies
- 429 views
-
-
அமெரிக்க வெள்ளை மாளிகை அருகே ஆயுதத்துடன் சென்ற ஒருவர் மீது துப்பாக்கிப்பிரயோகம் அமெரிக்க வெள்ளை மாளிகை அருகே ஆயுதத்துடன் சென்ற ஒருவர் மீது மேற்கொள்ளபட்ட துப்பாக்கிப்பிரயோக சம்பவத்தினை தொடர்ந்து வெள்ளை மாளிகை தற்காலிகமாக மூடப்பட்டது. உள்ளூர் நேரப்படி நேற்று மதியம் 2 மணி அளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தின் போது காயம்; அடைந்த நபர் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைப்பெற்று வருவதாக வாஷிங்டன் போலீஸ் தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/132366/language/ta-IN/article.aspx துப்பாக்கி …
-
- 0 replies
- 208 views
-
-
வெப்பநிலையில் புதிய ''சாதனை'': ராஜஸ்தானில் 50 செல்சியசை தாண்டியது ராஜஸ்தானை சேர்ந்த ஒரு நகரத்தில் 51 செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. I ஜூன் மாத மத்தியில் வெப்பம் தணிய வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் வானிலை பதிவு ஆவணப்படுத்தப்படத் தொடங்கிய காலத்தில் இருந்து பதிவாகியிருக்கும் மிக அதிக பட்ச வெப்பநிலை இது தான் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியா முழுவதும் தற்போது வெப்ப அலை நிலவி வருகிறது. இதற்கு மத்தியில், பாலைவன மாநிலமான, ராஜஸ்தானில் உள்ள இந்த பஹலோடி என்னும் நகரில் இந்த அதிக பட்ச வெப்ப நிலை பதிவாகியுள்ளது. இதற்கு முந்தைய அதிக பட்ச வெப்ப நிலையானது 1956ல் பதிவாகிய 50.6 செல்சியஸ் ஆகும். …
-
- 0 replies
- 326 views
-
-
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் ஆப்கான் குண்டு வெடிப்பில் பலி ஆப்கானிஸ்தானில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் சாலையோர குண்டுவெடிப்பு ஒன்றில் கொல்லப்பட்டுள்ளனர். தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை என்றாலும், தாலிபான்களே காரணம் என்கிறார் மாகாண ஆளுநர் கொல்லப்பட்டவர்களில் ஐந்து சிறார்கள் மற்றும் இரண்டு பெண்களும் அடங்குவர். இதில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். தலைநகர் காபூலுக்கு வடக்கேயுள்ள பஹ்லான் மாகாணத்தில் இந்தக் குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது. இத்தாக்குதலுக்கு இதுவரை எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை. ஆனால் அந்தப் பகுதியில் சில தினங்களுக்கு முன்னர், அரசபடைகளுக்கும் தாலிபான்களுக்கும் இடையே மோதல்கள் நடைபெற்ற சூழலி…
-
- 0 replies
- 236 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் - மத்திய தரைக்கடலில் விபத்துக்குள்ளான எகிப்திய விமானத்தின் இடிபாடுகளும் சடலங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. - பாலியல் வன்செயல்களுக்கு எதிராக போராடும் மெக்ஸிகோ நாட்டுப் பெண்கள். - நீரில் மூழ்கிய இரு எகிப்திய நகரங்களின் இடிபாடுகள் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில்.
-
- 0 replies
- 547 views
-
-
ஈஜிப்ட் ஏர் விமானம் தீவிரவாதத் தாக்குதலால் மாயமா? - எகிப்து அமைச்சர் பாரிஸிலிருந்து கெய்ரோ புறப்பட்ட ஈஜிப்ட் ஏர் விமானம் மத்தியதரைக்கடலின் மேற்பரப்பில் வைத்து ராடர் பார்வையிலிருந்து காணாமல் போயிருப்பது தொழில்நுட்ப கோளாறு என்பதை விட தீவிரவாத தாக்குதலால் ஏற்பட்டதாக இருக்கலாம் என்று எகிப்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் செரிஃப் ஃபாத்தி தெரிவித்துள்ளார். ஈஜிப்ட் ஏர் விமானம் தீவிரவாத தாக்குதலால் காணாமல் போயிருக்கலாம் என எகிப்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்திருக்கிறார். எம்எஸ்804 என்ற இந்த விமானத்தில் பயணிகளும், விமான பணியாளர்களுமாக 66 பேர் பயணம் செய்துள்ளனர். ராடார் திரைகளிலிருந்து மறைந்து போவதற்கு முன்னர் திடீரென திசைமாறிச் சென்றதா…
-
- 2 replies
- 562 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் - கிழக்கு மத்திய தரைக்கடலில் எகிப்திய விமானம் அறுபத்தியாறு பேருடன் விபத்து. தீவிர தேடுதல்கள் நடக்கின்றன. - தென் சீனக் கடற்பகுதியில் அமெரிக்காவின் உளவு விமானம் ஒன்றை தாங்கள் மறித்தபோது, பாதுகாப்பற்ற வகையில் தமது இரண்டு விமானங்கள் மேலும் கீழும் பறந்தன என அமெரிக்க பாதுகாப்பு அமைச்சு கூறுவதை சீனா மறுத்துள்ளது. - இஸ்லாமியவாத பயங்கரவாதக் குழுவான போக்கோ ஹராமிடமிருந்து மீட்கப்பட்ட நைஜீரியப் பள்ளி மாணவி ஒருவர் இன்று அதிபர் முகமது புகாரியை சந்திக்கிறார்.
-
- 0 replies
- 362 views
-
-
அவுஸ்திரேலியாவில் பள்ளிவாசல் தீக்கிரை அவுஸ்திரேலிய மெல்போர்ன் நகரின் தென்மேற்கே கீலோங் எனும் இடத்திலுள்ள பள்ளிவாசலொன்று நேற்றுப் புதன்கிழமை தீயால் அழிவடைந்துள்ளது. மேற்படி சம்பவத்தை திட்டமிட்ட குற்றச்செயலாக சந்தேகிக்கும் பிராந்திய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். பொஸ்டொக் அவன்யுவிலுள்ள அந்தப் பள்ளிவாசலில் பரவிய தீயை 7 தீயணைப்புப் படைவீரர்கள் நேற்று புதன்கிழமை அதிகாலை 2.15 மணியளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை. கிரேட்டர் கீலோங் பிராந்தியத்தில் வசிக்கும் 8,000 க்கு மேற்பட்ட முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலமாக இந்தப் பள்ளிவாசல் விளங்கி…
-
- 0 replies
- 396 views
-
-
மூன்று மணி நேரம் முதலையோடு போராடி உயிர் தப்பிய 72 வயது மீனவர் வடக்கு ஆஸ்திரேலியாவில், தன் நண்பர் நீரில் மூழ்குவதை கண்ட 72 வயது மீனவர் ஒருவர், தன்னை தாக்க வந்த முதலையிடமிருந்து தற்காத்து கொள்ள ஸ்பானர் மற்றும் ஸ்பார்க் பிளக் ஆகிய கருவிகளுடன் கடுமையாக போராடிய சம்பவத்தை தன்னை மீட்ட மீட்பு பணியாளர்களிடம் விவரித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் மிகுதியாக வாழும் உப்பு நீர் முதலைகள் (கோப்பு படம்) மேற்கூறிய மீனவரும், அவரது நண்பரும் நேற்று காலை டார்வினிலுள்ள லீடர்ஸ் கிரீக் மீன்பிடி தளத்தில், தங்களின் 3 மீட்டர் (10 அடி) நீளமுள்ள படகில், மணல் நண்டுகளை பிடித்து கொண்டிருந்து போது , பெரிய முதலையொன்று அவர்களின் படகை கவிழ்த்துள்ளது. தனது படகுக்கு திரும்ப எத்தனிக்கும…
-
- 0 replies
- 389 views
-
-
கென்டக்கி மாகாண பிரைமரி: ஹிலாரி கிளிண்டன் வெற்றி அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான உட்கட்சி வேட்பாளர் தேர்வு நடைமுறைகளில், கென்டக்கி மாகாணத்துக்கு நடந்த பிரைமரி சுற்றில், ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஹிலாரி கிளிண்டன்: வெற்றி முகம் பெரும்பாலான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், ஹிலாரி வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரபூர்வமற்ற அறிவிப்பு ஒன்றை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். இதுதொடர்பாக ட்விட்டரில் கருத்து வெளியிட்டுள்ள ஹிலாரி கிளிண்டன், ''கென்டக்கியில் வெற்றி பெற்றுவிட்டோம். ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி. ஒன்றுபட்ட அணியாக நாம் என்றும் பலமாக இருப்போம் ‘’ என்று தெரிவித்துள்ளார். இன்னொரு பிர…
-
- 0 replies
- 262 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் - இலங்கையில் தொடரும் கடுமையான மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் முப்பத்தி ஏழு பேராவது கொல்லப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். - ஐரோப்பிய கனவில் பெருத்த ஏமாற்றத்துடன் போர் முடியாவிட்டாலும் நாடு திரும்பும் இராக்கியர். - இந்தோனேஷியாவில் தொடரும் பெண்ணுறுப்பை சிதைக்கும் பழக்கம் குறித்து பிபிசியின் பிரத்யேக செய்திக் குறிப்பு
-
- 0 replies
- 429 views
-
-
அமெரிக்காவில் மரணத்துக்குப் பின் குழந்தையை ஈன்ற அன்னை: - உருக்கத்தை ஏற்படுத்திய சம்பவம் [Wednesday 2016-05-18 08:00] அமெரிக்காவில் சாலை விபத்தில் மரணமடைந்த பின்பும் கர்ப்பிணித் தாய்க்கு ஆரோக்கிமான குழந்தை பிறந்தது அந்த நாட்டு மக்களிடையே உருக்கத்தை ஏற்படுத்தியது.இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:மிஸரி மாகாணம், கேப் ஜிரார்டோ நகரில் மேட் ரைடர், சாரா ஐலர் தம்பதி வசித்து வந்தனர்.நிறைமாத கர்ப்பிணியான சாரா ஐலருக்கு கடந்த புதன்கிழமை இடுப்பு வலி ஏற்பட்டது.அதையடுத்து, சுமார் 96 கி.மீ. தொலைவிலுள்ள மருத்துவமனைக்கு சாரா ஐலரை மேட் ரைடர் காரில் அழைத்துச் சென்றார். அமெரிக்காவில் சாலை விபத்தில் மரணமடைந்த பின்பும் கர்ப்பிணித் தாய்க்கு ஆரோக்கிமான குழந்தை பிறந்தது அந்த நாட்…
-
- 0 replies
- 648 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் - உலக மற்றும் மத்தியகிழக்கு நாடுகள் சிரியா குறித்து விவாதித்துக் கொண்டிருக்க, போரினால் நிர்மூலமான அலெப்போ நகரில் இருந்து வெளியேற மறுத்த ஒருவரை பிபிசி சந்தித்தது. - பெண்களின் உடல் தோற்றத்தை நிந்திப்பது பாகிஸ்தானில் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அதற்கு தீர்வுகாண முயற்சிக்கிறார் ஒரு பெண் வழக்கறிஞர். - இலங்கையில் கடும் மழை காரணமாக குறைந்தது பதினொரு பேர் உயிரிழந்துள்ளனர்.
-
- 0 replies
- 491 views
-
-
தாய்லாந்தின் கோ தாசாய் தீவை மூட தீர்மானம் அதிகப்படியான சுற்றுலா பயணிகளின் வருகை, இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழலை எதிர்மறையாக பாதிப்பதாக கூறி தாய்லாந்திலுள்ள கோ தாசாய் தீவினை மூட அந்நாட்டு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். சிமிலான் தேசிய பூங்காவின் ஒரு பகுதியான கோ தாசாய் தீவு, புங் நகா மாகாணத்தை சேர்ந்ததாகும். தாய்லாந்திலுள்ள அனைத்து கடல்சார் தேசிய பூங்காக்களும் பருவ காலத்திற்காக மே மாதம் முதல் முதல் ஒக்டோபர் நடுப்பகுதி வரை மூடப்பட்டிருந்தாலும், தாசாய் மட்டும் திறக்கப்படாது என தெரிவிக்கப்படுகிறது. கோ தாசாய் பகுதியில் நீச்சல் சேவை வசதிகள் இருப்பதால், இப்பூங்கா சுற்றுலாப் பயணிகள் மற்ற…
-
- 0 replies
- 383 views
-
-
கனடாவில் மீண்டும் பரவுகிறது காட்டுத் தீ கனடாவின் ஆல்பர்டா மாகாணத்தில் மீண்டும் பரவிவரும் காட்டுத் தீயால் மறுபடியும் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் காரணமாக, எண்ணெய் வயலில் வேலை செய்யும் சுமார் 600 பேரை அங்கிருந்து வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். கனடாவில் இதுவரை இல்லாத வகையில் இந்தக் காட்டுத் தீ பரவி வருகிறது அவ்வகையில் ஃபோர்ட் மெக்மர்ரிக்கு அருகில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த மக்கள் வடக்கேயுள்ள எண்ணெய் மையங்களுக்கு அனுப்பப்படுவதாக மாகாண முதல்வர் ரேச்சல் நோட்லி தெர்வித்துள்ளார். ஏற்கனவே ஃபோர்ட் மெக்மர்ரிக்கு வடக்கே எண்ணெய் நிலையங்களில் பணியாற்றும் ஆயிரக்கணக்கானவர்கள் தேவைப்பட்டால் வெளியேற்றப்படும் தயார் நிலையில் உள்ளனர். இதனிடைய…
-
- 0 replies
- 351 views
-
-
காணாமல் போகும் 11,000 பிபிசி சமையல் குறிப்புகள் பிபிசியின் இணைய சமையல் குறிப்புகள் காணாமல் போகின்றன பிபிசியின் இணைய நிதியில் சுமார் 15 மில்லியன் பிரிட்டிஷ் ஸ்டெர்லிங்க் பவுண்ட்களை சேமிக்கும் நோக்கத்தில் பிபிசியின் உணவுக்கான பிரத்யேக இணையதளம் மூடப்படவிருப்பதாக பிபிசியைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த இணையதளத்தில் சுமார் 11,000 சமையல் குறிப்புகள் இருக்கின்றன. இந்த சமையல் குறிப்புகள் அனைத்தும் ஆவணப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றில் சிலவற்றை பிபிசியின் வர்த்தக இணையதளமான பிபிசி குட் ஃபுட் இணையதளத்துக்கு மாற்றலாமா என்றும் பரிசீலிக்கப்படுகிறது. ஆனால் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. பிபிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சமை…
-
- 0 replies
- 435 views
-
-
அமெரிக்காவுக்குள் அத்துமீறி நுழைந்த 6 பேர் ; வாகன விபத்தில் காயம் அமெரிக்காவுக்குள் அத்துமீறி நுழைந்த 6 பேர், பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்கையில் ஏற்பட்ட வாகன விபத்தில் காயமடைந்தனர். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: டெக்ஸாஸ் மாகாணம், கிங்ஸ்வில் நகரில் அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான விமான நிலையத்தின் நுழைவுத் தடுப்பை உடைத்துக்கொண்டு கடந்த சனிக்கிழமை நுழைந்த வாகனமொன்று, இறுதியாக இருந்த தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், அந்த வாகனத்தில் பயணித்த 15 பேரில் 6 பேர் காயமடைந்தனர். அந்த 15 பேரும் அமெரிக்காவுக்குள் அத்துமீறி நுழைந்ததாகவும், எல்லைக் காவல் பொலிஸார் அவர்களது வாகனத்தைப் பின்தொடர்ந்து வந்தபோது இந்த…
-
- 0 replies
- 371 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்.. - அகதிகளை துரத்திவிடுவது பலன் தராது என்கிறது ஐநா அகதிகள் அமைப்பு. பெண் குடியேறிகள் நிலவரம் குறித்தும் கவலை. - பத்து ஆண்டுகள் கொடூரத்துக்கு வழி செய்த சீன கலாச்சார புரட்சியின் ஐம்பதாவது ஆண்டு நிறைவு. ஆனால், சீன ஊடகங்கள் பெருத்த மௌனம். - ருவண்டாவின் கொரில்லாக்களுக்கு பெரும் மவுசு. வடபகுதி மலைக் கொரில்லாக்களை பார்க்க வருவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
-
- 0 replies
- 570 views
-
-
உலகின் மிகப் பெரிய விமானம் அவுஸ்திரேலியாவில் தரையிறங்கியது உலகின் மிகப் பெரிய விமானமான யுக்ரைனின் “ஏ.என்- 225” (Antonov 225 Mriya ) விமானம் அவுஸ்திரேலியாவின் மேற்குப் பிராந்திய நகரான பேர்த்தில் நேற்று தரையிறங்கியது. இவ் விமானத்தை பார்ப்பதற்கு பல்லாயிரக் கணக்கானோர் திரண்டமையால் பேர்த் விமான நிலையத்துக்கு அருகே பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது. 1988 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தினால் விண் ஓடத்தை ஏற்றிச்செல்வதற் காக தயாரிக்கப்பட்ட இவ் விமானம் 84 மீற்றர் (275 அடி, 7 அங்குலம்) நீளமானது. இவ் விமானத்தின், இறக்கைகளின் இரு முனைகளுக்கு இடையி…
-
- 4 replies
- 971 views
-
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் ட்ரம்ப் – புடின் முத்தம்: சர்ச்சையைக் கிளப்பிய லிதுவேனிய ஓவியம்! Sanjith May 16, 2016 Canada ஐரோப்பிய நாடான லிதுவேனியாவின் தலைநகர் வில்னியசில் ‘சுமோக்கிங் பிக்’ என்ற ஹொட்டலில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை, அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் உதட்டுடன் உதடு முத்தமிடுவது போன்று சுவர் ஓவியம் வரையப்பட்டுள்ளது. இது 6 அடி உயரத்தில் மிகவும் பிரமாண்டமாக உள்ளது. இந்த ஓவியம் உலக நாடுகளில் வாழும் மக்களின் கவனத்தை ஈர்த்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து ‘சுமோக்கிங் பிக்’ ஹொட்டல் உரிமையாளர் டொமினிகல் சிகாஸ்கஸ் கூறும்போது, இந்த 2 ஓவியங்களும் எதிர்பாராமல் உருவானது. புடினும், டிரம்ப்பும் சந்தித்ததால் நடைபெறு…
-
- 0 replies
- 395 views
-
-
நோர்வேயில் ( Rygge airport ) இருந்து இங்கிலாந்து மான்செஸ்டர் நகரை நோக்கிப் புறப்பட்ட ரயன் எயார் விமானத்தில்.. குண்டு அதுஇது என்று பேசி கூச்சல் போட்டு சண்டையிட்ட இருவரால்.. விமானப் பயணம் ரத்துச் செய்யப்பட்டு பயணிகள் அனைவரும்.. பாதுகாப்பின் நிமித்தம்..விமானத்தில் இருந்து அப்புறப்படத்தப்பட்டதாக நோர்வே காவல் துறையினர் அறிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்துக்கிடமாக நடந்து கொண்ட பயணிகள் இருவர் கைதாகி உள்ளனர். அதில் ஒருவர் சிறீலங்கா பிரஜை என்றும் மற்றவர் பிரித்தானியப் பிரஜை என்றும் பிபிசி செய்தி கூறுகிறது. News reports quoting a police official say one of the arrested men was British and the other was from Sri Lanka. http://www.bbc.co.uk/news/world-euro…
-
- 0 replies
- 526 views
-
-
இங்கிலாந்து கால்பந்து மைதானத்தில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு;விபத்து தவிர்ப்பு மான்செஸ்டர் : இங்கிலாந்து மான்செஸ்டர் மாகாணத்தில் உள்ள ஓல்ட் டிராப்போர்ட் மைதானத்தில் இன்று மென்'ஸ் யூனைட்டட் , போர்ன்மவுத் அணிகளுக்கு இடையே கால்பந்து போட்டி நடக்க இருந்தது. இப்போட்டிக்கு முன் நடந்த சோதனையி்ன் போது மைதானத்தில் மர்மான முறையில் இருந்த பார்சல் கண்டு பிடிக்கப்பட்டது. இதில் சந்தேகப்பட்டு சோதனை நடத்திய வெடிகுண்டு நிபுணர்கள் இந்த பையில் வெடிகுண்டு இருந்ததை உறுதி செய்தனர். இதையடுத்து போட்டிக்கு தடை விதிக்கபபட்டது. மேலும் மைதானத்தில் கூடியிருந்த பொதுமக்களும் வெளியேற்றப்பட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட…
-
- 0 replies
- 296 views
-
-
ஐஎஸ் அமைப்பில் சேர முயன்றதாக 5 ஆஸ்திரேலியர் மீது தீவிரவாத வழக்கு ஐஎஸ் அமைப்பில் சேர முயன்றவர்கள் பயணித்த படகு என்று காவல்துறை வெளியிட்டுள்ள படம் இஸ்லாமிய அரசு என்று தன்னை அழைத்துக்கொள்ளும் அமைப்பில் சேரமுயன்றதற்காக ஐந்து ஆஸ்திரேலிய ஆண்கள் மீது பயங்கரவாத குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய காவல்துறை அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவிலிருந்து சிறு மீன்பிடி படகு மூலம் இந்தோனேஷியா சென்று அங்கிருந்து சிரியாவில் இருக்கும் இஸ்லாமிய தீவிரவாதக் குழுவில் சேர இவர்கள் முயன்றதாக காவல்துறை குற்றம் சுமத்தியுள்ளது. இந்த ஐவரும் சென்ற வாரம் செவ்வாய்க்கிழமையன்று கைது செய்யப்பட்டனர். மெல்போர்னிலிருந்து ஏழுமீட்டர் நீளமுள்ள இந்த படகைச் செலுத்தியபடி சுமர…
-
- 0 replies
- 345 views
-
-
அரசியலில் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக பிரெஞ்சு பெண் அமைச்சர்கள் போர்க்கொடி பிரெஞ்சு அரசியலில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் நீடிப்பதாக முன்னாள் பெண் அமைச்சர்கள் கூட்டாக குற்றச்சாட்டு பிரெஞ்சு அரசியலில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்களை இனியும் தாங்கள் மவுனமாக சகித்துக்கொள்ள மாட்டோம் என்று பிரான்ஸின் முன்னாள் அமைச்சர்கள் பதினேழுபேர் கூட்டு பிரகடனம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். பல்வேறு கட்சிகளைச் சார்ந்த இந்த பதினேழு முன்னாள் அமைச்சர்களும் பெண்கள். ஆண்களின் ஏகபோக கோட்டையாக இருந்துவந்த அரசியலில் தாங்கள் அனைவரும் பாலியல்ரீதியிலான ஒதுக்கல், புறக்கணிப்புகள், சீண்டல்கள் உள்ளிட்ட பல்வேறுவகையான பாலியல் துன்புறுத்தல…
-
- 1 reply
- 367 views
-