உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26703 topics in this forum
-
`பெருங்கோடீஸ்வரர்கள் வாழும் முதல் ஐந்து நகரங்கள்' உலகில், பெரும் எண்ணிக்கையிலான கோடீஸ்வரர்கள் அதிகம் வாழும் நகரம் என்ற பெருமையை, முதல் தடவையாக, சீனத் தலைநகர் பீஜிங்கில் பெற்றுள்ளது. பீஜிங்கில் உள்ள பெருங்கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 100 என ஆய்வு முடிவு ஒன்று கூறுகிறது. கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த நியூயார்க் நகரை பின்னுக்கு தள்ளி, பீஜிங் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. இடண்டாம் இடத்தில் உள்ள நியூயார்க் நகரில், அந்த எண்ணிக்கை 95 ஆக உள்ளது. மூன்றாவது இடத்தில், மாஸ்கோ நகரமும், அதற்கு அடுத்ததாக ஹாங்காங், மற்றும் ஷாங்காய் நகரங்கள் ஆகியன உள்ளன. உலகில் பெருங்கோடீஸ்வரர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்கள் என்ற இந்த ஆண்…
-
- 0 replies
- 688 views
-
-
சுவிட்சர்லாந்தில், சிறிய குற்றச் செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டவர்களை நாடுகடத்த வேண்டுமா என்பதை தீர்மானிக்கும், மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு ஒன்று, இன்று நடைபெற்று முடிந்துள்ளது. இந்தத் திட்டம், அந்நாட்டின் வலதுசாரிக் கட்சியான சுவிஸ் மக்கள் கட்சியால் முன்வைக்கப்பட்டது. சுவிட்சர்லாந்தில் குடியேறுபவர்களின் தொகை அதிகரிப்பதுடன், அதை ஒட்டி சமுகப் பிரச்சினைகளும் கூடிவருவதாக தெரிவித்த சுவிஸ் மக்கள் கட்சி, இதனால் சுவிஸ் மக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களும் அதிகரிப்பதாக தெரிவித்துள்ளது. பத்து ஆண்டுகளில் இரண்டு சிறிய குற்றங்களைப் புரிந்த எந்தவொரு வெளிநாட்டவரும், மேன்முறையீடு செய்யும் உரிமை எதுவும் இல்லாமல், நாட்டை விட்டு வெளியேற்றப்படுவர் என வாக்க…
-
- 4 replies
- 654 views
-
-
மகராஷ்டிரம் மாநிலம் தாணே அருகே சொத்துத் தகராறில் இளைஞர் ஒருவர் தனது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேரை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார். மகராஷ்டிரம் மாநிலம் தாணே அருகே சொத்துத் தகராறில் இளைஞர் ஒருவர் தனது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேரை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார். தாணே மாநகர காவல் எல்கைக்குள்பட்டது கசார்வடாவலி பகுதியைச் சேர்ந்தவர் ஹசினில் வரேக்கர் (35). இவர் சொத்துத் தகராறு காரணமாக தனது குடும்பத்தைச் சேர்ந்த 7 குழந்தைகள், 6 பெண்கள் உள்ளிட்ட 14 பேரை சரமாரியாக நேற்று இரவு குத்திக் கொலை செய்தார். பின்னர் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த போலீஸார் கொலை நடந்த வீட்டுக்குச் சென்று பிர…
-
- 0 replies
- 479 views
-
-
அமெரிக்கா, ரஷ்யா முயற்சியால் போர் நிறுத்தம்: சிரியாவில் குண்டு சத்தம் ஓய்ந்தது குர்து போராட்டக் குழுக்கள் அடங்கிய சிரியா ஜனநாயக படை ஹசாகா பகுதியில் செயல்படுகிறது. அந்த படையைச் சேர்ந்த பெண் வீரர்கள் நேற்று துப்பாக்கிகளை மறந்து டேப்லெட்டில் பொழுதை போக்கினர். | படம்: ராய்ட்டர்ஸ் அமெரிக்கா, ரஷ்யாவின் முயற்சி யால் சிரியாவில் நேற்றுமுதல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. அங்கு தற்காலிகமாக குண்டு சத்தம் ஓய்ந்திருப்பதாக சர்வதேச கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். சிரியாவில் ஷியா, சன்னி முஸ்லிம்களுக்கு இடையே பகைமை நீடிக்கிறது. அந்த நாட்டு சர்வாதிகார அதிபர் ஆசாத், ஷியா முஸ்லிம் பிரிவைச் சேர்ந்தவர். அவருக்கு எதிராக சன்னி பிரிவைச் சேர்ந்த ப…
-
- 1 reply
- 423 views
-
-
ஜெர்மனியில் 135,000 அகதிகள் மாயம் ஜெர்மனியில் அகதித் தஞ்சம் கோரி தம்மை பதிவு செய்தவர்களில் சுமார் 135,00 பேர் காணாமல் போயுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு காணாமல் போனவர்கள் இதர ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. 2015ஆம் ஆண்டு, ஜெர்மனியில் சுமார் பதினொரு இலட்சம் பேர் தங்களை அகதிகளாக பதிவு செய்துள்ள நிலையில், அவர்களில் 13 % தற்போது எங்கிருக்கிறார்கள் என்பது தெரியாதுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அகதிகள் விவகாரம் தொடர்பில் ஜெர்மனிய நாடாளுமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்ட பரிந்துரைகள், அவர்களை கண்டுபிடிக்க உதவலாம் என அந்நாட்டு உள்துறை அமைச்சின் பேச்சாளரை மேற்கோள்காட்டி செய…
-
- 1 reply
- 552 views
-
-
சு.சுவாமி வாகனம் மீது முட்டை, தக்காளி, மை, குப்பை வீச்சு சுப்பிரமணியன் சுவாமி. | கோப்புப் படம்: ஆர்.வி.மூர்த்தி. பாஜக மூத்த தலைவர்களுள் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி வாகனத்தின் மீது முட்டை, தக்காளி, மை மற்றும் குப்பை வீசப்பட்டது. உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கல்லூரியில் சர்வதேச பயங்கரவாதம் குறித்த கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தார் சுப்பிரமணியன் சுவாமி. இன்று (சனிக்கிழமை) காலை 11 மணியளவில் சர்கியூட் ஹவுஸில் இருந்து கல்லூரிக்கு புறப்பட்டார். அப்போது அவரது பாதுகாப்பு வாகனத்தை மறித்த காங்கிரஸ் கட்சியினர் வாகனத்தின் மீது முட்டை, தக்காளி, மை மற்றும் குப்பையை வீசினர். இதனையடுத்து அங்கு குழுமியி…
-
- 1 reply
- 586 views
-
-
கிராமத்தில் உள்ள அனைத்து ஆண்களுக்கும் தூக்குத் தண்டனை ஈரான் நாட்டில் அமைந்துள்ள சிஸ்டான் கிராமத்தில் உள்ள ஆண்கள் அனைவரும் போதை பொருள் கடத்தியதாக தூக்கு தண்டனை விதிக்கபட்டு உள்ளது. இந்த சம்பவத்திற்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் மனித உரிமைகள் குழுவுனர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வளர்ச்சி திட்டங்கள் எதையுமே முன்னெடுக்காத அரசால் பொதுமக்களின் வாழ்வாதார பிரச்சினைகளை சீர்செய்ய முடியவில்லை் இதனால் வாழ்வாதாரம் தேடிய மக்கள் அதிக வருவாய் ஈட்டும் நோக்கில் போதை மருந்து கடத்தலில் ஈடுபடுகின்றனர் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர். மரண தண்டனை வழங்குவதால் போதை மருந்து கடத்தல் ஒருபோதும் குறைந்துவிடவில்லை. ஆனாலும் அரசு இதுபோன்ற குற்றங்களுக்…
-
- 1 reply
- 484 views
-
-
சர்ச்சைக்குரிய பொதுஜன வாக்கெடுப்பில் ஞாயிறன்று வாக்களிக்கிறது சுவிஸ் குற்றங்களை மேற்கொண்டதாக உறுதிப்படுத்தும் வெளிநாட்டுப் பிரஜைகளை, சுவிற்ஸர்லாந்திலிருந்து வெளியேற்றும் சர்ச்சைக்குரிய பொதுஜன வாக்கெடுப்பில், சுவிற்ஸர்லாந்துப் பிரஜைகள், ஞாயிற்றுக்கிழமையன்று (28) வாக்களிக்கவுள்ளனர். சுவிஸின் பெரும்பான்மைக் கட்சியான வலதுசாரிக் கொள்கைகளைக் கொண்ட சுவிஸ் மக்கள் கட்சி, சர்ச்சைக்குரிய இந்த வாக்கெடுப்புக்கான நடவடிக்கைகளை முழுமூச்சாக மேற்கொண்டிருந்தது. இந்தச் சட்டத்துக்கு ஆதரவு கிடைத்து, அது நிறைவேற்றப்படுமாயின், சிறிய குற்றங்களைக் கூட மேற்கொள்வோர், சுவிஸிலிருந்து வெளியேற்றப்படும் ஆபத்துக் காணப்படுகிறது. அத்தோடு, வெளிநாட்டுப் பிரஜை…
-
- 0 replies
- 255 views
-
-
நியூயார்க் நகரைக் கலங்கடித்த முதியவர்-சிறுமி திருமணம்(வீடியோ) நியூயார்க்: குழந்தைத் திருமணத்தைத் தடுக்கவும் அது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் கொண்டுவரவும் நியூயார்க் நகரில் 65 வயது முதியவருக்கும் 12 வயது சிறுமிக்கும் நடத்தப்பட்ட நாடகத் திருமண வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருக்கிறது. பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான வன்முறைகள்,பாலியல் முறைகேடுகள் உலக நாடுகளில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள சூழலில் அது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது அவசியமாகியுள்ளது. எனவே மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோபை பெர்சன் என்பவர் உருவாக்கியுள்ளார். அதன் மையமாக, 65 வயது முதியவரும் 12 வயதே ஆன சிறுமியும் திருமண உட…
-
- 2 replies
- 519 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - இரானிய தேர்தலில் அதிக எண்ணிக்கையிலானோர் வாக்களித்துள்ளனர். - மத அகதிகளாக சொந்த நாட்டில் இருந்து தப்பிச் சென்ற பாகிஸ்தானின் கிறிஸ்தவர்களின் துயரம், தாய்லாந்திலும் தொடர்கிறது. - அத்துடன், அகதிகளின் இடப்பெயர்வில் தனது உரிமையாளரை இழந்த இராக்கிய பூனை, மீண்டும் அவர்களை சென்று சேர்ந்த கதை.
-
- 0 replies
- 283 views
-
-
தாய்லாந்தில் அல்லலுறும் 11000 பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள் பாகிஸ்தானில் அதிகரிக்கும் தீவிரவாத வன்முறைகளுக்கு பயந்து அங்கிருந்து வெளியேறும் ஆயிரக்கணக்கான கிறித்தவர்கள் தாய்லாந்த் செல்கிறார்கள். தாய்லாந்த் அகதிகளை ஏற்பதில்லை என்பதால் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்படுகிறார்கள். விரோதியாக பார்க்கும் அண்டை அயலாரை விட்டு தாய்லாந்தில் தஞ்சமடைந்துள்ளவர்களின் அவலம் தாய்லாந்திலும் தொடர்கிறது. பாங்காக்குக்கு வந்திருக்கும் பாகிஸ்தானிய குடும்பங்கள் தொண்டு நிறுவனங்கள் தரும் உணவை நம்பியே வாழ்கிறார்கள். தஞ்சக்கோரிக்கையாரிக்கையாளர்களை கையாள்வதற்கான ஐநா சர்வதேச ஒப்பந்தத்தில் தாய்லாந்து கையெழுத்த…
-
- 2 replies
- 425 views
-
-
கடந்த வாரம் சீனா தான் தென்சீனக் கடலில் அமைத்த தீவிற்கு விமான எதிர்ப்புப் பீரங்கிகளை நகர்த்தியதோடு, ராடர் கண்காணிப்புக் கருவியையும் பொருத்தியது. இந்த வாரம் அமெரிக்காவிற்கு அழைக்கப்பட்ட சீனா வெளிவிவகார அமைச்சர் இராஜதந்திர ரீதியில் மிரட்டப்பட, அமெரிக்கா இராணுவ அதிகாரிகள் இராணுவ ரீதியாக வெளிப்படையாக மிரட்டியிருக்கின்றார்கள். இந்த நிலையில் டொணால்ட் றம்ப் அமெரிக்காவின் அதிபராக வந்தால் அவர் உலக அளவில் மேற்கொள்ளப்போகும் அதிகார நடவடிக்கைகள் அமெரிக்காவை தோல்வியடைய வைக்குமென இன்றைய நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் அதன் ஆய்வாளர் திரு.சுரேஸ் தர்மா தெரிவித்தார். http://www.tamilwin.com/show-RUmuyCRaSWeq4A.html
-
- 0 replies
- 311 views
-
-
ஜப்பானில் மக்கள் தொகை குறைவால் கவலைகள் ஜப்பானில் மக்கள் தொகை கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் பத்து லட்சம் குறைந்துள்ளது என புதிய மக்கள்தொகை கணக்கெடுப்புகள் காட்டுகின்றன. ஜப்பானில் முதியோர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது கடந்த 1920ஆம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக மக்கள் தொகை குறைந்துள்ளது இப்போதுதான் பதிவாகியுள்ளது. எனினும் மக்கள்தொகையியல் வல்லுநர்கள் நீண்டகாலமாகவே இந்தப் போக்கு இருக்குமென எதிர்பார்த்திருந்தனர். ஜப்பானில் குறைந்துவரும் பிறப்பு வீதம் மற்றும் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து செல்வது ஆகியவை குறைந்ததே இதற்கு முக்கியமான காரணங்களாகப் பார்க்கப்படுகின்றன. இந்தப் பிரச்சினை மேலும் தீவிரமடையும்…
-
- 0 replies
- 348 views
-
-
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: 4 பேர் பலி, 20 பேர் காயம் கோப்புப் படம் அமெரிக்காவின் கன்சாஸ் நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர், 20 பேர் காயமடைந்தனர். துப்பாக்கி சூடு நடத்தியவரும் சுட்டுக் கொல்லப்பட்டார். சம்பவம் குறித்து கன்சாஸ் நகர ஷெரீஃப் டி.வால்டன் கூறும்போது, "கன்சாஸில் உள்ள எக்ஸெல் இண்டஸ்ட்ரீஸ் என்ற தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவந்தார் செட்ரிக் ஃபோர்டு (38). இவர் தனது தொழிற்சாலையில் பணிபுரிந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினார். இச்சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர். முன்னதாக, தொழிற்சாலைக்கு வரும் வழியில் நியூட்டன், ஹெஸ்டன் ஆகிய நகரங்களிலும் இரண்டு பேர…
-
- 0 replies
- 450 views
-
-
லிபியாவில் 12 இராணுவ வீரர்களின் தலையை துண்டித்து கொலை செய்த ஐஎஸ் தீவிரவாதிகள் லிபியா நாட்டில் 12 இராணுவ அதிகாரிகளின் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்ட இராணுவ அதிகாரிகளின் பிணம் சாலையில் வீசப்பட்டு கிடந்தது. லிபியா நாட்டில் நீண்ட கால அதிபராக இருந்த முகமது கடாபி 2011ம் ஆண்டு புரட்சி படையினரால் கொல்லப்பட்டார். அதைத்தொடர்ந்து அங்கு உள்நாட்டு குழப்பம் நிலவி வருகிறது. இதை பயன்படுத்தி சில பகுதிகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து உள்ளனர். லிபியாவின் மேற்கு பகுதியில் உள்ள சபரதா நகரை ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தனர். அவர்கள் இர…
-
- 1 reply
- 491 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - குடியேறிகள் பிரச்சினை குறித்து ஆராய ஐரோப்பிய அமைச்சர்கள் பிரஸல்ஸில் சந்திக்கும் அதேநேரம் அகதிகளுக்கான கோட்டா குறித்து மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை ஹங்கேரி நடத்துகின்றது. - லண்டன் கடைகளில் சட்டவிரோதமாக விற்கப்படும் தோலை வெண்மையாக்கும் கிறீம்கள். - அத்துடன், முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் உலக கோப்பையை வென்றும் சொந்த நாட்டில் ஏமாந்துபோன நைஜீரியாவின் கால்பந்தாட்ட வீரர்கள்.
-
- 0 replies
- 346 views
-
-
சஞ்சய் தத் இன்று விடுதலையானார்; பொதுநல அமைப்புக்கள் எதிர்ப்பு (வீடியோ) மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஹிந்தி நடிகர் சஞ்சய் தத், நன்னடத்தை காரணமாக சிறையில் இருந்து இன்று காலை வியாழக்கிழமை (25) விடுதலையானார். இந்நிலையில், சஞ்சய் தத் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிறைக்கு வெளியே சிலர் போராட்டம் நடத்தினர். சிறையில் பலர் உள்ள நிலையில் சஞ்சய் தத் மட்டும் விடுதலை செய்யப்பட்டது ஏன் என்று அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இதுதவிர அவரது விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டுள்…
-
- 1 reply
- 534 views
-
-
ஓரினச்சேர்க்கையாளர் பேரணியில் கலந்து கொள்ளும் கனேடிய பிரதமர் 2016-02-25 11:46:00 கனடாவில் இடம்பெறவுள்ள ஓரினச்சேர்க்கையாளர் பேரணியில் கனேடிய பிரதமர் கலந்து கொள்ளவுள்ளார். கனடாவில் எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள மூன்றாம் பாலினத்தவர் மற்றும் ஓரினச்சேர்க்கையாளர்களின் பேரணியில் கலந்து கொள்ள கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சம்மதம் தெரிவித்துள்ளார். 36ஆவது ஆண்டாக இந்தப் பேரணி இந்த வருடம் ஜூலை 3ஆம் திகதி நடைபெற இருக்கிறது. இந்த பேரணியில் அந்நாட்டு பிரதமர் பங்கேற்க உள்ளதால் இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்…
-
- 0 replies
- 551 views
-
-
ஜெர்மனியில் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட 125 பேர் காபூல் திரும்பினர் ஜெர்மனில் தஞ்சம் கோரியவர்களில் இரண்டாவது பெரும்பான்மையானவர்கள் ஆப்கானியர்கள் ஜெர்மனியில் அகதித் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 125 ஆப்கான் குடியேறிகள், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை வந்தடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறுகின்றனர். தமது சொந்த விருப்பின் பேரிலேயே இவர்கள் நாடு திரும்பி வந்துள்ளதாக ஆஃப்கான் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குடியேறிகள் நாடு திரும்புவது, ஆப்கானிஸ்தானின் மீள்கட்டுமானத்திற்கு அவசியமானது என்று ஜெர்மனியின் உள்துறை அமைச்சர் தோமஸ் டு மேர்ஸியா முன்னர் தெரிவித்திருந்தார். கடந்த ஆண்டில் 10 லட்சத்துக்கும் அதிகமான அகதித் தஞ்சக் கோரிக்கையாளர்கள…
-
- 1 reply
- 466 views
-
-
குடியேறிகள் நெருக்கடி : ஆஸ்திரியாவில் பால்கன் நாடுகளின் அரசாங்க அமைச்சர்களின் கூட்டம் ஆஸ்திரிய எல்லையை கடக்க குறிப்பிட்ட அளவிலான குடியேறிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்ற விதி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. குடியேறிகள் நெருக்கடியை சமாளிப்பது தொடர்பில் பால்கன் நாடுகளின் அமைச்சர்களின் சந்திப்பு ஒன்றை ஆஸ்திரியா நடத்துகின்றது. பெரும்பாலான குடியேறிகள் முதலில் வந்திறங்கும் நாடான கிரேக்கத்துக்கு இந்தக் கூட்டத்தில் கலந்துக்கொள்ள அழைப்பு விடுக்கப்படவில்லை என்று அந்த நாடு ஒரு முறையான புகாரை தாக்கல் செய்துள்ளது. ஆஸ்திரிய எல்லையை கடக்க குறிப்பிட்ட அளவிலான குடியேறிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்ற விதி கடந்த வாரம் அமல்படுத்தப்பட்ட பிறகு பால்கன் பி…
-
- 0 replies
- 412 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - ஐரோப்பாவுக்கு கடல் கடந்து வரும் குடியேறிகளை தடுக்க தான் தவறிவிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை கிரேக்கம் கோபத்துடன் நிராகரித்துள்ளது. - பிரேஸிலின் ஸீகா பரவலை உலகுக்கு காட்டிய ஒரு புகைப்படத்தால் பிரபலமான தாய் மற்றும் அவரது பாதிக்கப்பட்ட குழந்தை ஆகியோரின் சோகக்கதை. - ஆஸ்திரேலியா தனது தளர்ந்துவரும் பொருளாதாரத்தை காப்பாற்ற ஆசியாவுக்கு விவசாய உற்பத்திகளை ஏற்றுமதி செய்ய முனைகிறது. அது சாத்தியமா என்று ஆராயும் காணொளி.
-
- 0 replies
- 212 views
-
-
வாழத் தகுதியான நகரங்கள் : ஆஸ்திரியத் தலைநகர் வியன்னா முதலிடம்; சென்னைக்கு 150வது இடம்! உலகிலேயே வாழ தகுதியான நகரங்கள் பட்டியலில் ஆஸ்திரியத் தலைநகர் வியன்னா முதலிடத்தை பெற்றுள்ளது. சென்னைக்கு 150-வது இடம் கிடைத்துள்ளது. பிரபல மெர்சர் நிறுவனம் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. மொத்தம் 230 நகரங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 18 லட்சம் மக்கள் தொகை கொண்ட வியன்னா நகரம் முதலிடத்தை பிடித்தது. சுவிட்சர்லாந்தின் சூரிச், நியூசிலாந்தின் ஆக்லாந்து ஜெர்மனியின் மியூனிச் கனடாவின் வான்கூவர் நகரங்கள் அடுத்தடுத்த இடத்தை பிடிக்கின்றன. உலகின் மிகவும் பாப்புலரான நகரங்களான நியூயார்க், லண்டன், பாரீஸ் போன்றவை முதல் 30 இடங்களுக்குள் கூட இடம் பெறமுடியவி…
-
- 15 replies
- 997 views
-
-
அமெரிக்க வேலைவாய்ப்புகளை இந்தியா வேட்டையாடுகிறது: டோனால்டு டிரம்ப் அதிரடி லாஸ் வேகாஸில் பேசும் டோனால்டு டிரம்ப் (நடு), இருபுறங்களிலும் டிரம்ப்பின் வாரிசுகள். | படம்: ஏ.எஃப்.பி. அமெரிக்கர்களிடமிருந்து வேலைவாய்ப்புகளை ‘வேட்டையாடி’ கொண்டு செல்கின்றனர் இந்தியர்கள், தான் அதிபரானால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று டோனால்டு டிரம்ப் அதிரடியாகக் கூறியுள்ளார். சர்ச்சை புகழ் டோனால்டு டிரம்ப் தொடர்ந்து முஸ்லிம்கள், அகதிகள், குடியேற்றங்கள் குறித்து எதிர்மறையாகப் பேசி வருவது குறித்து ஒபாமா கடும் விமர்சனம் செய்தாலும் அவரது இவ்வகை பேச்சுகளுக்கு பரவலாக அமெரிக்கர்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளதாகவே அங்குள்ள நிலவரங்கள் தெரிவிக்கின…
-
- 0 replies
- 383 views
-
-
நேபாளத்தில் 21 பேருடன் சென்ற சிறிய விமானம் மாயம் நேபாளத்தில் பயணிகள் உட்பட 21 பேருடன் சென்ற சிறிய ரக விமானம் மாயமானது. மாயமான அந்த விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இது குறித்து பொக்காரா விமான நிலைய அதிகாரி யோகேந்திர குவார் கூறும்போது, "பொக்காரா விமான நிலையத்தில் இருந்து பயணிகள் உட்பட 21 பேருடன் தாரா ஏர்லைன்ஸுக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று இன்று (புதன்கிழமை) காலை புறப்பட்டது. அங்கிருந்து 18 நிமிட தொலைவில் உள்ள ஜோம்சோம் விமான நிலையத்தை நோக்கி விமானம் பயணித்தது. ஆனால், விமானம் புறப்பட்ட சில விநாடிகளிலேயே கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்தது. மாயமான அந்த விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது…
-
- 1 reply
- 429 views
-
-
எதிர்வரும் வெள்ளி நள்ளிரவு முதல் சிரியாவில் போர் நிறுத்தம்! [Tuesday 2016-02-23 22:00] சிரியாவில் பாதியளவு போர் நிறுத்தத்தை கொண்டுவரக்கூடிய ஒரு உடன்பாட்டை அமெரிக்காவும் ரஷ்யாவும் அறிவித்துள்ளதை சிரியாவுக்கான ஐ.நா. தூதுவர் வரவேற்றிருக்கிறார். ஆனால், அந்த ஒப்பந்தத்தை களத்தில் அமல்படுத்துவது ஒரு பெரும் சவாலாக இருக்கும் என்றும் தூதுவர் ஸ்டாஃபன் டெ மிஸ்துரா கூறியுள்ளார். இதற்கு சாதகமான பதிலை சிரியாவின் அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சி குழுக்களிடம் இருந்து பெறுவதே அடுத்த முக்கிய விசயம் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார். வரும் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வரவுள்ள இந்த மோதல் நிறுத்தத்தை அந்த இரு தரப்பும் அதற்கு முன்னதாக ஏற்றாக வேண்டும். ஆனால், இந்த …
-
- 0 replies
- 311 views
-