Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இரு நாட்களுக்கு முன் துருக்கி நாட்டில் வெடிகுண்டு தாக்குதல் ஒன்றில் 28 பேர் உயிரிழந்தனர். இதை கூர்திஸ் இயக்கமே செய்ததாக சூழுரைத்தது துருக்கி. ஒரு நாளிலேயே செய்தவனை இனம் கண்டது அந்த நாடு. அனைத்து கூர்திஸ் இயக்கங்களுமே தாங்கள் செய்யவில்லை என மறுக்க, இவர்கள் தான் செய்தார்கள் என துருக்கி திட்டவட்டமாக அறிவித்தது. இந்த தாக்குதல் நடந்த மறுநாள் புரிசல் நகரில் ஐறோப்பிய நாடுகள் மானாடு நடைபெற்றது. இதில் துருக்கியும் பங்குபற்றுவதாக இருந்தது, இவ் நிகழ்வின் பின் தனது வருகையை நிறுத்தியது. அகதிகள் வருகையை குறைப்பதை பற்றிய முக்கிய தலைப்பு முன்வைக்கப்பட்டிருந்தது. அகதிகள் துருக்கி ஊடாக அதிகம் வருவதினால் அந் நாடே வருகைகளை தடுக்கமுடியம். இதர்க்கு பல விதங்களில் உதவுவதாக ஐறோப்பிய நாடுகள் அறிவி…

    • 0 replies
    • 795 views
  2. ஐ.எஸ். தீவிரவாதிகளால் சிறு­வ­னுக்கு தலையை துண்­டித்து மர­ண­தண்­டனை ஐ.எஸ். தீவி­ர­வா­திகள், மேற்­கத்­தேய இசையை செவி­ம­டுத்துக் கொண்­டி­ருந்த வேளை தம்மால் பிடிக்­கப்­பட்ட 15 வயது சிறுவன் ஒரு­வ­னுக்கு தலையைத் துண்­டித்து மர­ண­தண்­ட­னையை நிறை­வேற்­றி­யுள்­ளனர். அயிதாம் ஹுஸைன் என்ற மேற்­படி சிறுவன் ஈராக்­கிய மொசூல் நகரில் நபி யூனிஸ் சந்­தையில் அமைந்­தி­ருந்த தனது தந்­தையின் பல­ச­ரக்குக் கடையில் காவிச்­செல்லக் கூடிய இறு­வட்டு உப­க­ர­ணத் தில் மேற்­கத்­தேய துள்­ளிசைப் பாடலை செவி­ம­டுத்துக் கொண்­ டி­ருந்த வேளை தீவி­ர­வா­தி­க ளால் பிடிக்­கப்­பட்­டான். இத­னை­ய­டுத்து தீவி­ர­வா­தி­களின் நீதி­மன்­றத்­துக்கு இழுத் துச் செல்­லப்­பட்ட அந்த சிறு­வ­னுக்கு பொது இ…

  3. சிரியாவில் விமானங்கள் பறக்கத் தடை செய்யப்பட்ட பகுதியை உருவாக்க வேண்டும் – ஜேர்மனியின் சான்சலர் ஏஞ்சலா மேர்க்கல் சிரியாவில், பொதுமக்கள் பாதுகாப்புக்காக விமானங்கள் பறக்கத் தடை செய்யப்பட்ட பகுதியை உருவாக்க வேண்டுமென ஜேர்மனிய சான்சலர் ஏஞ்சலா மேர்க்கல் தெரிவித்துள்ளார். சிரியாவில் விமானங்கள் பறக்கத் தடை செய்யப்பட்ட பகுதியை உருவாக்கி பொது மக்களை தங்க வைக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். முன்னதாக, அவர் விடுத்த இந்தக் கோரிக்கைக்கு ரஷ்யா உடனடியாக மறுப்பு தெரிவித்திருந்தது. விமானத் தடை மண்டலங்களை பயங்கரவாதிகள் பதுங்குமிடங்களாகப் பயன்படுத்துவர் என ரஷ்யா கருதுவதாகக் தெரிவிக்கப்படுகிறது. …

  4. கௌரவ டாக்டர் பட்டத்தினை பெற பிரதமர் மோடி மறுப்பு! [Friday 2016-02-19 07:00] உத்தரபிரதேசத்தில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் வருகிற 22-ந் தேதி நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இந்த விழாவில் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க, பல்கலைக்கழகம் முடிவு செய்தது. இதுபற்றி மோடிக்கு தகவல் தெரிவித்து, அவரது ஒப்புதலையும் கேட்டது. ஆனால் கவுரவ டாக்டர் பட்டத்தை பெற்றுக் கொள்ள பிரதமர் மோடி மறுத்துவிட்டார். கவுரவ டாக்டர் பட்டம் பெறுவது இல்லை என்பதை தான் ஒரு கொள்கையாக வைத்து இருப்பதாக கூறி அவர் மறுத்துவிட்டதாக டெல்லியில் நேற்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.கடந்த காலங்களிலும் இதேபோல் சில பல்கலைக்கழகங்கள், தனக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங…

  5. இன்றைய நிகழ்ச்சியில்… - துருக்கியில் நடந்த இரு வேறு குண்டுத் தாக்குதல்களில் பெரும்பாலும் படையினர் அடங்கலாக முப்பதுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். குர்து தீவிரவாதிகள் மீது அரசாங்கம் குற்றஞ்சாட்டுகிறது. - போலியோ தடுப்பு மருந்து ஒன்பது தடவை கொடுக்கப்பட்டும் ஒரு குழந்தைக்கு நோய் தாக்கியதை அடுத்து, பாகிஸ்தானின் போலியோ தடுப்பு நடவடிக்கையின் தரம் குறித்து கேள்வி எழுந்துள்ளது. - உலகின் மிகவும் தனிமையான இமயத்தின் ஷன்காருக்கு புதிய சாலை போடப்படுகின்றது. ஆனால், இது மக்களை இணைக்குமா அல்லது பாரம்பரிய வாழ்க்கை முறையை அழித்துவிடுமா என்ற சந்தேகம் எழுப்ப்ப்படுகின்றது.

  6. மெர்க்கல்:'கேமரனின் சீர்திருத்த கோரிக்கைகளில் பெரும்பான்மை நியாயமானவை' எந்த ஒப்பந்தமாயினும் ஈரோ வலய நாடுகளின் இணக்கப்பாட்டிற்கு தடையாக இருக்க கூடாது ஐரோப்பிய ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து, பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் முன்வைத்திருக்கும் கோரிக்கைகளில் பெரும்பான்மையானவை நியாயமானவையே என ஜெர்மன் ஆட்சித் தலைவி ஏங்கெலா மெர்க்கல், ஜெர்மனிய நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அதேசமயம், எந்த ஒப்பந்தமாயினும், அது யூரோ வலய நாடுகளுக்கு இடையிலான இணக்கப்பாட்டுக்குத் தடையாக இருக்கக்கூடாது என்றும், அவர் தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டனின் உறுப்புரிமையை மறுசீரமைக்கும் ஒப்பந்தம் ஒன்றை எட்டுவது குறித்து, ஐரோப்பிய ஒன்…

  7. துருக்கியில் குண்டு வெடிப்பு; 5 பேர் பலி அங்காரா : துருக்கி தலைநகர் அங்காராவில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் 5 பேர் பலியாயினர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். http://www.dinamalar.com/news_detail.asp?id=1459386 படங்கள். ஜேர்மனிய செய்தி ஊடகங்கள் கடைசி செய்திகளின்படி 28 பேர் பலி 60 க்கு மேற்பட்டோர் காயம்

  8. போலாந்து நாட்டு வார இதழின் அட்டைப்படத்தால் சர்ச்சை ஐரோப்பாவில் குடியேறும் அகதிகளால் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் என சித்தரிக்கும் விதமான அட்டைப்படம் ஒன்றை போலாந்து நாட்டு வார இதழ் ஒன்று வௌியிட்டு சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. அந்த அட்டைப்படத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடியை ஆடையாக அணிந்த பெண் ஒருவரை அகதிகள் பாலியல் ரீதியாக துன்புறுத்துவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. அத்துடன் அதில் "ஐரோப்பாவில் இஸ்லாமிய பாலியல் துஷ்பிரயோகம்" என்ற வாசகமும் பொறிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க மற்றும் மேற்காசிய நாடுகளில் ஏற்பட்டு உள்ள உள்நாட்டு போரினால் அங்கு இருந்து இலட்சக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக வருகின்றனர். அவ்வாறு வரும் அகதி…

  9. டோனால்டு டிரம்ப் அதிபராக வாய்ப்பில்லை: ஒபாமா கருத்து தனக்குப் பிறகு அதிபராகும் வாய்ப்பு டோனால்டு டிரம்ப்புக்கு இல்லை என்று கூறிய அதிபர் ஒபாமா, அமெரிக்க மக்கள் அவ்வளவு எளிதானவர்கள் அல்ல என்று தெரிவித்துள்ளார். “டோனால்டு டிரம்ப் அடுத்த அமெரிக்க அதிபராக வாய்ப்பில்லை என்று தொடர்ந்து நான் நம்புகிறேன். அமெரிக்க மக்கள் மீது எனக்கு அத்தகைய நம்பிக்கை இருப்பதே இதற்குக் காரணம். அமெரிக்க அதிபராக இருப்பது என்பது மிகவும் சீரியசான பணி என்பதை மக்கள் நன்கு அறிந்துள்ளனர் என்றே நான் கருதுகிறேன். அதிபராவது ஏதோ, ரியால்டி ஷோ அல்லது டாக் ஷோ நடத்துவது போன்ற விவகாரம் அல்ல அதிபர் பதவி என்பது. இது ஏதோ பதவி உயர்வும் அல்ல. மார்க்கெட்டிங்கும் அல்ல” என்…

  10. அகதிகளின் பிரவேசத்தை தடுக்க புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தும் ஒஸ்திரியா [ Thursday,18 February 2016, 04:36:52 ] ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஒஸ்திரியா சட்டவிரோதமான முறையில் மேற்கொள்ளப்படும் புகலிடக் கோரிக்கையாளர்களின் பிரவேசங்களை தடுப்பதற்கு புதிய திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கமைய ஒரு நாளைக்கு 80 பேரது புகலிட விண்ணப்பங்களை பரிசீலனைக்காக ஏற்றுக்கொள்ள அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்தப் புதிய திட்டத்தை நாளை வெள்ளிக்கிழமை முதல் அமுல்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக ஒஸ்திரியாவின் உள்விவகார அமைச்சர் ஜோஹன்னா மிக்குள் லைட்னர் (Johanna Mikl-Leitner) தெரிவித்துள்ளார். சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களை தடுப்பதற்குரிய…

  11. ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்கின்றது பொம்பார்டியர் நிறுவனம் [ Thursday,18 February 2016, 06:00:32 ] பொம்பார்டியர் விமான சேவைகள் நிறுவனம் வடகிழக்கு அயர்லாந்துக்கான பிரிவிலுள்ள ஊழியர்கள் பலரை பணிநீக்கம் செய்வதற்கு தீர்மானித்துள்ளது. இதற்கமைய முதற்கட்டமாக ஆயிரம் ஊழியர்களை பணியிலிருந்து நீக்கம் செய்வதற்கு அந்த நிறுவனம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆயிரம் ஊழியர்களில் 500 பேரை இந்த வருடத்திலும், மேலும் 500 பேரை அடுத்த வருடத்திலும் கட்டம் கட்டமாக பணியிலிருந்து விலக்குவதற்கு பொம்பார்டியர் விமான சேவைகள் நிறுவனம் எதிர்பார்த்துள்ளது. இதேவேளை ஐரோப்பிய ஊழியப் படையை மட்டுமன்றி சர்வதேச அளவிலுள்ள தமது நிறுவனத்தின் 7 …

  12. லெஸ்பியன், போதைப் பொருள் பயன்படுத்தல்... ஹிலாரி மீது கிளிண்டன் முன்னாள் காதலி பரபரப்பு புகார்! வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் மீது,அவரின் கணவர் கிளிண்டனின் முன்னாள் காதலி ஒருவர்,ஹிலாரிக்கு லெஸ்பியன்,போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கம் இருந்தது என்று கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் அதிபராக பதவி வகித்துவரும் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் விரைவில் முடிய உள்ளதால் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், வரும் நவம்பர் மாதம் 8 ம் தேதி நடத்தப்படவுள்ளது. இதனையடுத்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ள வேட்பாளர்கள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்காளர்கள் மத்தியில் பரப…

  13. இன்றைய நிகழ்ச்சியில்… - தென் சீனக்கடலின் சர்ச்சைக்குரிய தீவில் சீனா ஏவுகணைகளை நிறுத்தியதாக தாய்வானும் அமெரிக்காவும் குற்றஞ்சாட்டியதை அடுத்து அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது. - அகதிகளுக்கான பதிவு நிலையங்களை அதிகாரிகள் அமைக்க முயல கிரேக்கத்தின் கொஸ் தீவின்வாசிகள் கோபத்துடன் போராட்டம் நட்த்தியுள்ளனர். தமது வாழ்க்கையும், சுற்றுலா வருமானமும் பாதிக்கப்படும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். - மனநோயை புரிந்து கொள்ள மூளையை ஆராயும் விஞ்ஞானிகள் பற்றிய சில தகவல்கள்.

  14. மெக்சிகோவில் கீழே தள்ளப்பட்ட போப்: பரபரப்பு வீடியோ! மோரேலியா: மெக்சிகோவில் போப் ஆண்டவரைக் கீழே தள்ளியதால் பரபரப்பு நிலவியது.இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. மெக்சிகோவில் சுற்றுப்பயணம் செய்து வருகிற போப் ஆண்டவர் பிரான்சிஸ் அங்குள்ள மோரேலியா நகரில் பொதுமக்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் ஆசி பெற ஏராளமானோர் அங்கு குவிந்திருந்தனர்.கூட்டத்தில் இருந்த குழந்தைகளைப் பார்த்து ஆசி வழங்குவதற்காக போப் அவர்களை நோக்கி நடந்து வந்தார். அப்போது அவரைப் பார்க்கும் ஆவலில் கூட்டத்தினர் ஒருவருக்கொருவர் முண்டியடித்தனர். இதனால் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் ஒருவர் போப் ஆண்டவரை பிடித்து கீழே தள்ளி விட்டார். அதனால் நிலை தடுமாறிய போப் சக்கர நாற்க…

  15. ஐ.நா.வின் முன்னாள் பொதுச் செயலாளர் பூத்ரோஸ் பூத்ரோஸ் காலி காலமானார் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் பூத்ரோஸ் பூத்ரோஸ் காலி, தனது 93ஆவது வயதில் காலமானார். பூத்ரோஸ் பூத்ரோஸ் காலி எகிப்தியரான இவர், ஐக்கிய நாடுகள் சபையில் உயர் பதவி வகித்த முதலாவது அரேபியராவார். 1992ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரக அவர் பதவியேற்றப்போது, உலக நாடுகள் முதலாவது வளைகுடா போரை சந்திந்திருந்தன. யூகோஸ்லாவியா மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளின் உள்நாட்டு போர் மற்றும் வளைகுடாவில் தொடர்ந்த அமைதியின்மையையும் ஆகிவற்றை உடனடி பிரச்சினையாக அவர் எதிர்கொண்டார். ருவாண்டா இனப்படுகொலையை தடுக்க ஐ.நா. தவறியமையை, பூத்ரோஸ் பூத்ரோஸ் காலி விமர்சித்த…

  16. குடியேற்றம் : ஆஸ்திரேலிய மக்கள் தொகை 24 மில்லியனைத் தாண்டியது ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை 24 மிலியனைத் தாண்டி விட்டது. அசாதாரண அளவு குடியேற்றமே இதற்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. குடியேற்றங்களால் ஜனத்தொகை பெருகும் ஆஸ்திரேலியா - தஞ்சம் கோரிகள் விஷயத்தில் கடுமை காட்டுகிறது. நாட்டின் மக்கள் தொகை 2013ம் ஆண்டிலிருந்து ஒரு மிலியன் என்ற அளவில் அதிகரித்து வந்துள்ளது. இது வளர்ந்த நாடுகளில் காணப்படும் மிக அதிக மக்கள் தொகை வளர்ச்சி விகிதங்களில் ஒன்றாகும். ஆஸ்திரேலியா திறன் படைத்த குடியேறிகளை வரவேற்கிறது ஆனால் தஞ்சம் கோருவது குறித்து மிகவும் சர்ச்சைக்கிடமான மற்றும் மிகக் கடுமையான கொள்கையை வைத்திருக்கிறது என்று பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறுகிறார…

  17. எண்ணெய் உற்பத்தியை ஜனவரி அளவில் நிறுத்த நான்கு நாடுகள் ஒப்புதல் உலகில் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் நான்கு பிரதான நாடுகள் எண்ணெய் உற்பத்தியை தற்போதைய மட்டத்திலேயே நிறுத்திவைக்க ஒப்புக்கொண்டுள்ளன. அதிக உற்பத்தியால் ஏற்பட்டுள்ள எண்ணெய் விலை வீழ்ச்சியைச் சமாளிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ரஷ்யா, சௌதி அரேபியே , கத்தார் மற்றும் வெனிசுவேலா ஆகிய நான்கு நாடுகள் இந்த உடன்படிக்கையை எட்டியுள்ளன. ஜனவரி மாதத்தில் செய்த எண்ணெய் உற்பத்தி அளவிலேயே தாங்கள் தங்கள் உற்பத்தியை வைத்திருக்கப்போவதாக அவை அறிவித்துள்ளன. ஆனால் மற்ற எண்ணெய் உற்பத்தியாளர்களும் இதே நிலையில் வைத்திருக்கும் பட்சத்தில்தான் இது அமல்படுத்தப்படும். ஆனால் இரான் கடந்த மாதம…

  18. இன்றைய நிகழ்ச்சியில்… - சிரியாவில் போர் நிறுத்தம் அமல் செய்யப்படுவதற்கான நம்பிக்கை குறைந்து வரும் நிலையில், நிலைமையை சீராக்க டமாஸ்கஸுக்கு ஐநாவின் சிறப்பு தூதர் சென்றுள்ளார். - தென்கிழக்காசிய நாடுகளின் தலைவர்கள் தமது பிராந்திய மாநாட்டுக்காக முதல் தடவையாக கலிபோர்னியாவில் கூடுகின்றனர். ''தென் சீனக் கடல் முரண்பாடுகள்'' அங்கு முக்கிய விவாதப் பொருளாகலாம். - நேற்று இரவு நடந்த கிராமி விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட மலாவி நாட்டின் சிறைக் கைதிகளின் இசைக்குழு உலக கவனத்தை ஈர்த்துள்ளது.

  19. அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி ஸ்கேலியா காலமானார்- அடுத்த நீதிபதி தமிழரா? நீண்டகாலமாகப் பதவியிலிருந்த அமெரிக்க உச்சநீதிமன்ற பழமைவாத நீதிபதி, ஆண்டொனின் ஸ்கேலியா, மரணமடைந்ததை அடுத்து அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கும், எதிர்வரும் அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பாகப் போட்டியிட கட்சித் தேர்தலில் போட்டியிடும் ஆறு வேட்பாளர்களுக்கும் இடையே ஒரு மோதல் வெடித்திருக்கிறது. காலமான பழமைவாத நீதிபதி ஸ்கேலியா நீதிபதி ஸ்கேலியா மேற்கு டெக்ஸாஸில் வேட்டையாடச் சென்றிருந்தபோது, சனிக்கிழமை காலை உறக்கத்திலேயே இறந்தார். 79 வயதான ஸ்கேலியா முன்னாள் அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரேகன் ஆட்சியில் 1986ல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ( அமெரிக்க உச்சநீதிமன்ற ந…

  20. தென்னாபிரிக்கா சென்ற விமானத்தில் கோடிக்கணக்கில் பணம் மற்றும் சடலம் மீட்பு தென்னாப்பிரிக்கா நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு விமானம் ஒன்றில் இருந்து கோடிக் கணக்கான தென்னாப்பிரிக்க பணமும் சடலம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன. குறித்த விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக ஸிம்பபபேவின் ஹராரே சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட போது இவை மீட்கப்பட்டுள்ளன. எரிபொருள் நிரப்புவதற்காக விமானம் நிறுத்தப்பட்டிருந்த போது அந்த விமானத்தில் இருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து விமானத்தில் இருந்து அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கைப்பற்றப்பட்ட நிலையில் விமானம் தடுத்து வைக்கப்பட்டு சோதனைக்குட்படுத்திய போது கோடிக்கணக்கில் தென்…

  21. தலைமை நீதிபதியின் ஆணைக்கு தடை விதித்த நீதிபதி கர்ணனின் உத்தரவால் சர்ச்சை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணனை இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர், இடமாற்றம் செய்து அனுப்பிய கடிதத்துக்கு, நீதிபதி கர்ணன் தடை விதித்து, அது தொடர்பான விளக்கத்தை அவர் தம்மிடம் அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படும் சம்பவம் நீதித்துறை வட்டாரங்களில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. இந்திய உச்சநீதிமன்றம் நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் கொலிஜியமின் கூட்டத்தில், இந்தியாவில் உள்ள பல்வேறு உயர்நீதிமன்ற நீதிபதிகளை இடமாற்றம் செய்வது தொடர்பான பரிந்துரை பட்டியல் வெளியிடப்பட்டது. அந்த பட்டியலில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணனுக்க…

  22. இன்றைய நிகழ்ச்சியில்… - போப் இரண்டாவது ஜான் பால் இன் வெளிச்சத்திற்கு வராத மறுபக்கம் குறித்த சில செய்திகள். திருமணமான ஒரு பெண்ணுடன் அவருக்கு இருந்த நெருக்கமான உறவுக்கான ஆதாரங்களை பிபிசி கண்டறிந்தது. - தீவிரவாதப் போக்கை நீக்கும் சவுதியின் ஜிகாதிகளுக்கு மறுவாழ்வு வழங்கும் மையங்கள் பற்றிய பிபிசியின் சிறப்புச் செய்தி. - தாய்லாந்தில் பொம்மைகள் உண்மையான குழந்தைகளாக நடத்தப்படும் ஒரு வினோதமான கதை.

  23. நியூஸிலாந்தில் 5.9 ரிச்டர் அளவில் பூமி அதிர்ச்சி : வானளாவ பாரிய தூசு மண்டலம் நியூஸிலாந்தின் கிறைஸ்ட் சேர்ச் பிராந்தியத்தை 5.9 ரிச்டர் அளவான பூமியதிர்ச்சி இன்று தாக்கியுள்ளது. நகரின் கிழக்கே 15 கிலோமீற்றர் தொலைவில் 31 கிலோமீற்றர் ஆழத்தில் தாக்கிய இந்த பூமியதிர்ச்சியாநியூஸிலாந்ல் கட்டங்களிலுள்ள பொருட்கள் சிதறி விழுந்ததுடன் வானளாவ பாரிய தூசு மண்டலம் ஏற்பட்டுள்ளது. மக்கள் பீதி காரணமாக கட்டடங்களை விட்டு வெளியேறி திறந்த வெ ளிகளை தஞ்சமடைந்துள்ளனர். இந்த பூமியதிர்ச்சியின் போது அந்நகரில் அபாய எச்சரிக்கை செய்யும் வகையில் ஒலி எழுப்பப்பட்டுள்ளது. எனினும் மேற்படி பூமியதிர்ச்சியால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து இதுவரை அறிக்கையிடப்பட…

  24. பாகிஸ்தானில் தீவிரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சண்டை: - 10 தீவிரவாதிகள் பலி [Monday 2016-02-15 07:00] பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தில் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அங்கு சிபி மாவட்டம், சங்கான் பகுதியில் பலுசிஸ்தான் விடுதலை படையினர் என்ற பெயரில் சட்டவிரோதமாக இயங்கி வருகிற தீவிரவாதிகள் பதுங்கி உள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து பாதுகாப்பு படையினர் நேற்று அங்கு விரைந்து தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கூறப்பட்ட பகுதிகளை சுற்றி வளைத்தனர். அங்கு பதுங்கி இருந்த தீவிரவாதிகளை சரண் அடையுமாறு பாதுகாப்பு படையினர் கூறினர்.ஆனால் அவர்கள் அதற்கு செவி சாய்க்காமல், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியா…

  25. ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த கிறிஸ்தவ திருச்சபை தலைவர்கள் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பிளவுபட்டிருந்த, கிறிஸ்த மதத்தின் மேலைத்தேய மற்றும் கீழைத்தேய கிளைகளின் தலைவர்களின் சரித்திர முக்கியத்தும் வாய்ந்த சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த கிறிஸ்தவ திருச்சபை தலைவர்கள் றோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிராஸிஸ், மற்றும் ரஷ்யாவின் மிகப்பழைய ஆர்த்தாடக்ஸ் (பழமைவாத கிறிஸ்தவ பிரிவு) திருச்சபையின் தலைவரான பாட்ரியார்க் கிரில் ஆகியோருக்கிடையே, முக்கியத்துவம் வாய்ந்தது எனக் கூறப்படும் இந்த சந்திப்பு கியுபாவில் இடம்பெற்றது. ஹவானா விமான நிலையத்தில், இவர்களிடையோன சந்திப்பு இரண்டு மணி நேரம் நீடித்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.