உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
27057 topics in this forum
-
பிரசல்ஸ் தாக்குதலுடன் தொடர்புடைய ஆறு பேர் கைது பிரசல்ஸ் தாக்குதலுடன் தொடர்புடைய ஆறு பேரை பெல்ஜியம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஸ்கயார்பீக் மாவட்டத்தில் இவ்வாறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விமான நிலையம் மற்றும் ரயில் நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 31 பேர் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. காவல்துறையினர் வீடு வீடாக சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். இதேவேளை, பிரான்ஸிலும் நபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/130398/language/ta-IN/artic…
-
- 0 replies
- 377 views
-
-
சிறுவயதிலிருந்தே இந்தியாவை வெறுத்தேன்: ஹெட்லி டேவிட் ஹெட்லி சிறுவயதிலிருந்தே இந்தியாவை தான் வெறுத்ததாக தீவிரவாதி டேவிட் ஹெட்லி கூறியுள்ளார். மும்பை தொடர் குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளியான பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கர் டேவிட் ஹெட்லி (55), தற்போது அமெரிக்க சிறையில் இருக்கிறார். மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் அப்ரூவராக மாறிய ஹெட்லி, சிறையில் இருந்தபடியே வீடியோ கான்பரன்ஸ் மூலம் மும்பை நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார். மூன்றாவது நாளாக இன்று (வெள்ளிக்கிழமை) நீதிபதி சனால் முன்னிலையில் ஹெட்லியிடம் அப்துல் வகாப் குறுக்கு விசாரணை நடத்தினார். அப்போது ஹெட்லி கூறியதாவது: …
-
- 0 replies
- 366 views
-
-
முஸ்லீம் அகதிகளின் காலைக் கழுவிய போப் பிரான்ஸிஸ் ரோம் நகரில் அகதிகள் முகாம் ஒன்றில், கத்தோலிக்க திருச்சபையின் ஈஸ்டர் பண்டிகைக் கொண்டாட்டங்களின் தொடக்கத்தைக் குறிக்கும் பிரார்த்தனை நிகழ்வு ஒன்றின் போது, போப் பிரான்ஸிஸ் முஸ்லீம் மற்றும் பிற குடியேறிகளின் கால்களைக் கழுவினார். கேஸ்டல்நுவோ டி போர்டோ என்ற இடத்தில் உள்ள , தஞ்சம் கோரிகளின் விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் முகாம் ஒன்றுக்கு அவர் விஜயம் செய்த போது இது நடந்தது. பாரிஸ் மற்றும் பிரஸ்ஸல்ஸ் நகரங்களில் நடந்த தாக்குதல்களை அடுத்து எழுந்திருக்கும் கொந்தளிப்பான உணர்வுகள் நிலவும் சூழலில் இந்த விஜயம் வந்திருக்கிறது. பிரார்த்தனை நிகழ்வின் போது அவர் ஆற்றிய உரையில், போப் பிரான்ஸிஸ் ,பிரஸ்ஸல்ஸ் தாக்குதல்…
-
- 4 replies
- 565 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… * பிரஸ்ஸல்ஸில் கைதான பாரிஸ்-தாக்குதல் சந்தேகநபர் சலா அப்தெஸ்லாம், தன்னைப் பற்றி விளக்கமளிப்பதற்காக விரைவில் தன்னை பிரான்ஸிடம் ஒப்படைக்குமாறு கோரியிருப்பதாக அவரது வழக்கறிஞர் கூறுகின்றார். * ஆர்ஜண்டீனாவில் ஆயிரக் கணக்கானவர்கள் சித்திரவதைக்கு உள்ளாக காரணமான இராணுவ சதிப்புரட்சியின் நாற்பதாவது ஆண்டு நிறைவில், அமெரிக்க அதிபரின் விஜயத்துக்கு எதிராக போராட்டம். * லண்டனுக்கு அருகே அமைந்துள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய மிதக்கும் கதிரொளி மின் உற்பத்தி நிலையம் செயற்படத் துவங்கியுள்ளது குறித்த சிறப்புச் செய்தி.
-
- 0 replies
- 503 views
-
-
ஐரோப்பியர்கள் பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பில் கவனம் செலுத்த வேண்டும் - ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் ஐரோப்பியர்கள் தங்கள் புவி அரசியல் விளையாட்டுகளை ஓரம் கட்டிவிட்டு, பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பில் கவனம் செலுத்த வேண்டுமென ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் ஷெர்ஜெய் லவ்ரோவ் தெரிவித்துள்ளார். ஐரோப்பியக் கண்டத்தில் பயங்கரவாதிகள் தங்கள் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்கக்கூடாது என்றும் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் லவ்ரோவ் கூறியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் ரஷ்யாவுக்கும் இடையில் ஏற்கனவே பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான விவகாரத்தில் ஒத்துழைப்பு இர…
-
- 1 reply
- 399 views
-
-
"ரடொவான் கரடிச் குற்றவாளி"- ஐநா தீர்ப்பாயம் முன்னாள் போஸ்னிய-செர்ப் இனத் தலைவர் ரடொவான் கரடிச்சை மானுட குலத்துக்கு எதிரான குற்றங்களைப் புரிந்தார் என்று ஐநா மன்றத் தீர்ப்பாயம் ஒன்று தீர்ப்பளித்திருக்கிறது. தீர்ப்பை எதிர்நோக்கும் ரடோவான் கரடிச் 1990களில் சரயோவா முற்றுகையின் போது, பொதுமக்கள் இலக்குவைத்துக் கொல்லப்பட்டதில் அவர் வகித்த பங்குக்காக, அவருக்கு எதிரான இந்தத் தீர்ப்பு வந்திருக்கிறது. தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்த கரடிச், போஸ்னியப் போரின் போது இனப்படுகொலை செய்தார் என்ற குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார். ஆனால், 8,000 முஸ்லீம்களும் சிறுவர்களும் கொல்லப்பட்ட ஸ்ரபரனிட்ஸா படுகொலை தொடர்பாக நீதிமன்றம் இன்னும் தீர்ப…
-
- 0 replies
- 389 views
-
-
"ஆப்ரிக்கக் கரையோரம் கிடைத்தது மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் துகள்கள் " இரண்டாண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் உடைந்த துகளாக இருக்கும் என்று கருதப்படும் , கிழக்கு ஆப்ரிக்கக் கடற்கரைக்கு அப்பால் கண்டுபிடிக்கப்பட்ட துண்டு ஒன்றை ஆராய்ந்த ஆஸ்திரேலிய அதிகாரிகள் இது அந்த விமானத்தின் உடைந்த பகுதியாக இருப்பது அதிக அளவில் சாத்தியமானதே என்று கூறுகின்றனர். கிழக்கு ஆப்ரிக்கா கடற்கரையருகே கிடைத்த உடைந்த விமான பாகம் - இரண்டாண்டு ஆகியும் மர்மம் தீரவில்லை கிடைத்த இரண்டு துண்டுகளை தொழில் நுட்பரீதியில் ஆராய்ந்ததில், இவை ஏறக்குறைய நிச்சயமாக , காணாமல் போன எம்.எச்.370 விமானத்தின் பகுதிகளாக இருக்கலாம் என்று முடிவுக்கு வந்ததாக ஆஸ…
-
- 0 replies
- 464 views
-
-
'எச்சரிக்கையை உதாசீனம் செய்தது பெல்ஜியம்' பெல்ஜியத் தலைநகர் ப்ரஸல்ஸில் இடம்பெற்ற தாக்குதல்களில், விமான நிலையத்தில் தாக்குதல்களை மேற்கொண்டதாகச் சந்தேகிக்கப்படும் சகோதரர்களில் ஒருவர் தொடர்பாக, தங்களால் விடுக்கப்பட்ட எச்சரிக்கையை, பெல்ஜியம் உதாசீனம் செய்ததாக, துருக்கி அறிவித்துள்ளது. குறித்த சந்தேகநபரைத் தடுத்து வைத்து, அவரை நாட்டிலிருந்து வெளியேற்றியதாகத் தெரிவித்துள்ள துருக்கி, அவர் ஒரு 'வெளிநாட்டுப் பயங்கரவாதப் போராளி" என்ற எச்சரிக்கையையே விடுத்ததாகத் தெரிவித்துள்ளது. ப்ரஸல்ஸில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் முதலாவது தாக்குதல், விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டது. அங்கு தற்கொலைத் தாக்குதலே மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதை ம…
-
- 0 replies
- 524 views
-
-
பிரஸ்ஸல்ஸ் தாக்குதல்: உயிர் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அச்சம் செவ்வாயன்று நடந்த தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர் பிரஸ்ஸல்ஸில் செவ்வாயன்று நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்த டஜன் கணக்கானோர் இன்னமும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று பெல்ஜிய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். பிரஸ்ஸல்ஸ் விமான நிலையம் மற்றும் ரயில் நிலையத்தில் நடந்த தாக்குதல்களில் முப்பத்தியோரு பேர் கொல்லப்பட்டும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தும் உள்ளனர். பெல்ஜியத் தலைநகரில் ஒரு அவசரக் கூட்டம் ஒன்றை ஐரோப்பிய ஒன்றிய உள்துறை மற்றும் நீதித்துறை அமைச்சர்களும் நடத்தவுள்ளனர். இதனிடையே தனது குண்டு செயலிழந்துப்…
-
- 0 replies
- 302 views
-
-
தற்போதைய தேசியக் கொடியையே வைத்திருக்க நியுசிலாந்து மக்கள் முடிவு வெள்ளிநிற, ஃபேர்ன் என்ற ஒரு வகைத் தாவரத்தின் இலையுடன் கூடிய கறுப்புநிறக் கொடியை புதிய கொடியாக கொண்டுவர வேண்டும் என்ற யோசனையை பிரதமர் ஜான் கீ கடுமையாக ஆதரித்துவந்தார் பிரிட்டிஷ் யூனியன் கொடியை உள்ளடக்கிய தேசியக் கொடியையே நியுசிலாந்து தொடர்ந்தும் வைத்திருக்க வேண்டும் என்று அந்நாட்டு மக்கள் வாக்களித்துள்ளனர். இதுவரை எண்ணப்பட்டுள்ள 20 லட்சம் வரையான வாக்குகளின் முதற்கட்ட முடிவுகளின்படி, 57 வீதமான மக்கள் வேறு கொடியொன்றை அறிமுகப்படுத்தும் யோசனையை நிராகரித்துள்ளனர். ஃபேர்ன் என்ற ஒரு வகைத் தாவரத்தின் இலையுடன் கூடிய கறுப்புநிறக் கொடியை புதிய கொடியாக கொண்டுவர வேண்டும் என்ற யோசனையை பிரதமர் ஜான்…
-
- 0 replies
- 255 views
-
-
பிரஸ்சல்ஸ் தாக்குதல்: தீவிரவாதி விட்டுச்சென்ற உயில் மீட்பு பிரசல்ஸ், பெல்ஜியம் நாட்டில் பிரசல்ஸ் நகரில் விமான நிலையம், சுரங்க ரயில் நிலையம் ஆகியவற்றில் தொடர் குண்டுவெடிப்புகளை நடத்திய தற்கொலைப்படை தீவிரவாதிகள் உயில் போன்ற ஒன்றை எழுதி வைத்துள்ளனர். இருவரில் பிராஹிம் விமான நிலையத்திலும், காலித் சுரங்க ரயில் நிலையத்திலும் மனித வெடிகுண்டுகளாக மாறி தாக்குதல் நடத்தி உள்ளனர். இவர்களில் பிராஹிம் தனது கணனியில் உயில் போன்ற ஒன்றை எழுதி வைத்துள்ளான். அதில் அவன், ‘‘நான் இனி என்ன செய்வது என்று தெரியவில்லை. எல்லா பக்கமும் என்னை வேட்டையாடுகின்றனர். இனி பாதுகாப்பு இல்லை. சிறையில் அவருக்கு அடுத்த அறையில் அடைபட விருப்பம் இல்லை’’ என கூறி உள்ளார். ‘அவர்’ எ…
-
- 0 replies
- 476 views
-
-
பொஸ்டன், பாரிஸ், பிரஸல்ஸ் ஆகிய 3 தாக்குதல்களிலும் உயிர்த்தப்பிய இளைஞர் 2016-03-24 12:47:38 பெல்ஜியத்தின் தலைநகர் பிரஸல்ஸில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களில் காயடைந்த இளைஞர் ஒருவர், ஏற்கெனவே அமெரிக்காவின் பொஸ்டன் குண்டுத்தாக்குதல் மற்றும் பாரிஸ் தாக்குதல்களிலும் நூலிழையில் உயிர் தப்பியவர் என்பது தெரியவந்துள்ளது. 19 வயதான மாசன் வேல்ஸ் எனும் இந்த இளைஞருக்கு பிரஸல்ஸ் விமான நிலையத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பின்போது, முகத்திலும் கைகளிலும் காயங்கள் ஏற்பட்டன. இதனால் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது மாசன் வேல்ஸ் எதிர்கொண்ட 3 ஆவது பயங்கரவாத…
-
- 0 replies
- 405 views
-
-
பெல்ஜியம் தாக்குதலில் மாயமான சென்னை இன்போசிஸ் ஊழியர்- தாயார் கண்ணீர் பேட்டி பெல்ஜியத்தில் ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதலைத் தொடர்ந்து, அங்கு பணியாற்றி வரும் சென்னையை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் காணாமல் போய் உள்ளார். குண்டுவெடிப்பு நடத்த வழியில்தான் மகன் தினமும் அலுவலகத்துக்கு செல்வான், அவனை கண்டுபிடித்து கொடுங்கள் என்று கணேசனின் தாயார் கண்ணீர் மல்க வேண்டுகோள் வைத்துள்ளார். பெல்ஜியம் தலைநகர் பிரசெல்ஸ் நகரில் விமான நிலையம், மெட்ரோ ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் 35 பேர் பலியானார்கள். 2 இந்தியர்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்நிலையில், பிரசெல்சில் பணியாற்றி வரும் சென்…
-
- 0 replies
- 352 views
-
-
பெல்ஜியம் தலைநகர் பிரஸெல்ஸ் நகரில் நடந்த தாக்குதல் தொடர்பாக சந்தேகிக்கப்படும் பிரதான நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வெளியிட்ட செய்திகளை திரும்பப் பெறுவதாக பெல்ஜிய ஊடகங்கள் அறிவித்துள்ளன. பிரஸெல்ஸ் ஜாவுண்டம் விமான நிலைய தாக்குதலுக்கு முன்பாக பதிவான சிசிடிவி பதிவுகளில் காணப்பட்ட நஜீம் லாஷ்ராவி என்ற நபர் ஆந்தர்லெக்ட் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் என முன்னதாக செய்திகள் வெளியாகியிருந்தன. எனினும் அந்தச் செய்தியினை தாம் திரும்ப பெறுவதாக அந்நாட்டு ஊடகங்கள் மீண்டும் தெரிவித்துள்ளன. முதலாம் இணைப்பு பெல்ஜியம் தலைநகர் பிரஸெல்ஸ் விமான நிலைய தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் பிரதான நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக நீ…
-
- 2 replies
- 429 views
-
-
பிரஸ்ஸல்ஸ் தாக்குதல்களை நடத்தியவர்களின் பின்னணி என்ன? ------------------------------------------------------------------------------------------------------------------- பிரஸ்ஸல்ஸில் நேற்று (22-03-2016) நடந்த தாக்குதல்களில் பலியானவர்களின் நினைவாக அஞ்சலி பிரார்த்தனைகள் நடந்துள்ளன. நாடெங்கிலும் தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கின்றன. குண்டுத் தாக்குதல் நடந்த மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து சில நூறு மீட்டர் தூரத்தில் உள்ள ஐரோப்பிய ஆணையத்தில் ஒருநிமிட மௌன அஞ்சலி கடைபிடிக்கப்பட்டது. சந்தேக நபர்களுக்கு வலைவீசித் தேடும் பணிகள் தொடர்கின்றன. நாடு முழுவதும் பாதுகாப்புப்படைகள் உச்சகட்ட உஷார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலதிகத் தாக்…
-
- 0 replies
- 427 views
-
-
பிரஸ்ஸல்ஸ் பயங்கரவாதத் தாக்குதல்களின் சந்தேகநபர்களுக்கு வலைவீசி, தேடுதல் வேட்டை தொடர்கிறது ஸீக்கா வைரஸ் பரவிவரும் பிரெஸிலில் மேலும் பல குழந்தைகள் வளர்ச்சிக் குறைபாட்டுடன் பிறந்துள்ளதாக உறுதிப்படுத்தும் அதிகாரிகள். முதியவர் பராமரிப்பு அரசுக்கும் சமூகத்துக்கும் சுமையல்ல என்று காட்டுகிறது ஜப்பானின் புதிய முயற்சி ஒன்று
-
- 0 replies
- 238 views
-
-
பிரஸ்ஸல்ஸ் தாக்குதல் சந்தேக நபர் ஒருவர் கைது பிரஸ்ஸல்ஸ் நகரில் நேற்று செவ்வாய்க் கிழமையன்று நடந்த தாக்குதல் தொடர்பாக சந்தேகிக்கப்படும் பிரதான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பெல்ஜிய ஊடகங்கள் கூறுகின்றன. விமான நிலைய தாக்குதலுக்கு முன்பாக பதிவான சிசிடிவி பதிவுகளில் காணப்பட்ட நஜீம் லாஷ்ராவி என்ற நபர் ஆந்தர்லெக்ட் பகுதியில் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். நேற்று செவ்வாய்க்கிழமை பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸின் செவென்டம் (Zaventem) விமான நிலையம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையத்திலும் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. விமான நிலையத்திலும் மெட்ரோ நிலையத்திலும் நடந்த இந்த தாக்குதலில் 34 பேர் உயிரிழந்தனர். 250 பேர் காயமடைந்தனர். இந்த தொடர் குண்டு தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்க…
-
- 1 reply
- 403 views
-
-
ஐ.எஸ் சந்தேகநபர்களின் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன பெல்ஜியத் தலைநகர் ப்ரஸல்ஸில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தாக்குதல்களை நடத்துவதற்கு வருகைதந்ததாகக் கூறப்படும் ஐ.ஸ்.ஐ.எஸ் அமைப்பைச்சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படும் மூவரின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. விமான நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி கமெராவில் பதிவான புகைப்படங்களை அடிப்படையாக வைத்தே, இந்த மூவரின் புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன. இந்த மூவரில் இருவர், தற்கொலைக்குண்டுத்தாக்குதலை நடத்தியதாகவும் மற்றையவர் ஏனைய குண்டுத்தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச்சென்றுவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பெல்ஜியத் தலைநகர் ப்ரஸல்ஸில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தாக்குத…
-
- 2 replies
- 482 views
-
-
புரூசெல்ஸ் தாக்குதல் - பின்னணி பாடகர் மனைவி, மகன் தப்பினர்! புரூசெல்ஸ் தாக்குதலில் இந்தியர்கள் யாரும் பலியானதாக தகவல் இல்லை. இதுபற்றி மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் விகாஸ் சுவரூப் கூறுகையில், “நாங்கள் புரூசெல்ஸ் தூதருடன் பேசினோம். இந்தியர்கள் யாரும் பலியானதாக தகவல் இல்லை” என கூறினார். அதே நேரத்தில் இந்தியாவின் ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் 2 ஊழியர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களில் ஒருவர் பெண் ஆவார். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு தேவையான உதவிகளை அங்குள்ள இந்திய தூதரகம் செய்யும் என மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் கூறினார். விமான நிலைய தாக்குதலில் பிரபல இந்திப்பட பின்னணி பாடகர் அபிஜித் பட்ட…
-
- 0 replies
- 476 views
-
-
பிரித்தானிய செய்தி பொதுமக்களின் உடல் எடையை தடுக்க பிரித்தானிய அரசு அதிரடி திட்டம்: வருகிறது புதிய சட்டம் [ திங்கட்கிழமை, 21 மார்ச் 2016, 06:20.13 மு.ப GMT ] பிரித்தானியாவில் அதிகரிக்கும் உடல் பருமனை தடுத்து பொதுமக்களின் நலனை பாதுகாக்க அந்நாட்டு அரசு ஒரு புதிய சட்டத்தை கொண்டு வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பிரித்தானியாவில் ‘சர்க்கரை அதிகம் கலந்த குளிர்பானங்களை பொதுமக்கள் அதிகளவில் எடுத்துக்கொள்வதே உடல் எடை அதிகரிக்க முக்கிய காரணியாக’ பார்க்கப்படுகிறது. குறிப்பாக, பிரித்தானியாவில் பொதுமக்கள் கடந்த ஆண்டு மட்டும் சுமார் 14.8 பில்லியன் லிற்றர…
-
- 0 replies
- 583 views
- 1 follower
-
-
பெல்ஜியம் குண்டுவெடிப்பு எதிரொலி: சென்னை விமான நிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு ! சென்னை: பெல்ஜியம் தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டள்ளது. பார்வையாளர்கள் வருகைக்கு வரும் 24 ஆம் தேதி வரை தடைவிதிக்கப்பட்டுள்ளது. பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் விமான நிலையத்தில் அடுத்தடுத்து நடந்த இரண்டு குண்டுவெடிப்புச் சம்பவங்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலைய குண்டு வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 55 பேர் படுகாயமடைந்தனர்.14 பேர் விமான நிலையத் தாக்குதலிலும் 20 பேர் மெட்ரோ ரயில் நிலைய தாக்குதலிலும் பலியாகியுள்ளதாக பிரஸ்ஸல்ஸ் தீயணைப்புத் துறை செய்தித் தொடர்பாளர் பியர் மெய்ஸ் தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 528 views
-
-
ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு நிதி உதவி வழங்கிய இருவர் ஆஸ்திரேலியாவில் கைது இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் தீவிரவாதிகளுக்கு நிதி உதவி வழங்கினார்கள் என்ற சந்தேகத்தில் 16 வயது பள்ளி மாணவி ஒருவரையும், 20 வயது ஆண் ஒருவரையும் ஆஸ்திரேலிய காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் கண்காணிக்கப்பட்டு வந்ததன் பின்னரே, இவர்கள் மீது இந்தக் குற்றச்சாட்டு வைக்கப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த இவருவருக்குமான பிணை நிராகரிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 16 வயது பள்ளி மாணவியிடம், காவல்துறையினர் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். வெளிநாடுகளிலுள்ள ஐ.எஸ். குழுவினருக்கு எவ்வளவு பணம் அனுப்பப்பட்டது என்பதைத் தெரிவ…
-
- 3 replies
- 440 views
-
-
பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதில், ஜெட் ஏர்வேஸ் விமான ஊழியர்களும் காயம் அடைந்தனர். அடுத்த சில மணி நேரங்களில், டெல்லியில் உள்ள ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் அழைப்பு மையத்துக்கு ஒரு மர்ம டெலிபோன் அழைப்பு வந்தது. அதில் பேசிய ஆசாமி, டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படும் 5 ஜெட் ஏர்வேஸ் விமானங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக கூறிவிட்டு, இணைப்பைத் துண்டித்தான். அவன் குறிப்பிட்ட விமானங்களில் 3 விமானங்கள் ஏற்கனவே புறப்பட்டுச் சென்று விட்டன. அந்த விமானங்கள் கோரக்பூர், சண்டிகார், டேராடூன் ஆகிய நகரங்களுக்கு திட்டமிட்டபடி சென்றன. நான்காவது விமானம், சென்னைக்கு வருவதாக இருந்தது.…
-
- 0 replies
- 528 views
-
-
நிர்பயா சம்பவத்திற்கு பிறகு இந்தியாவில் தங்களின் பாதுகாப்பு குறித்து ஏற்பட்ட அச்சத்தால் சுற்றுலா வரும் வெளிநாட்டு பெண்களின் எண்ணிக்கை சரிந்துவிட்டதாக மத்திய சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் ஜோதி சிங் என்ற கல்லூரி மாணவி (நிர்பயா) ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது சர்வதேச நாடுகள் வரை அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பிறகு வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணிகளுக்கு தங்கள் பாதுகாப்பு குறித்து அச்சம் ஏற்பட்டது. இது இந்திய சுற்றுலாத் துறையையும் கடுமையாக பாதித்துள்ளது. மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகத்தின் புள்ளி விபரப்படி 2013-ம் ஆண்டு 11.6 சதவீதமாக இருந்த வெளிநாட்டு சு…
-
- 0 replies
- 237 views
-
-
பெல்ஜியம் விமானநிலையத்தில் குண்டுவெடிப்பு.. BREAKING: Explosion at the Explosion at Zaventem airport in #Brussels, airport Being evacuated now. Reason unknown BREAKING: Explosion at the Explosion at Zaventem airport in #Brussels, airport Being evacuated now. Reason unknown At Brussels Airport in Zaventem, it should have come to two explosions. The airport has already been cleared. The explosions are said occurred on American Airlines switch shortly before eight o'clock haben.- Several people were injured. Meanwhile, the train service is interrupted to the airport.
-
- 10 replies
- 1.8k views
-