Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சென்னை விமான நிலையத்தில் 160 பயணிகளுடன் தடுமாறிய மலேசிய விமானம் [ சனிக்கிழமை, 23 சனவரி 2016, 07:42.58 AM GMT ] சென்னையில் இருந்து 160 பயணிகளுடன் இன்று மலேசியாவுக்கு புறப்பட்டுச் சென்ற விமானம் ஓடுபாதையில் இருந்து உயரக்கிளம்ப முடியாமல் திணறியதால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் பயணிகள் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே விமானம் உரக் கிளம்ப முயாமல் திணறியதாக என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தகுறை நிவர்த்தி செய்யப்பட்டதும் அதே விமானம் நாளை சென்னையில் இருந்து புறப்பட்டுச் செல்லும் என மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், மேற்படி விமானத்தில் …

    • 1 reply
    • 300 views
  2. சொமாலியா: கடலோர விடுதிகளில் பயங்கரவாதத் தாக்குதல் சொமாலியத் தலைநகர் மொகதிஷுவில்கடலோரத்து உணவு விடுதிகளில் இஸ்லாமியவாத ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் இருபது பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். மாலைப் பொழுதில் இந்த விடுதிகளை ஒட்டி இரண்டு கார் குண்டுகள் வெடித்ததுடன், உள்ளே சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்கள் மீது ஆயுததாரிகள் ஐந்து பேர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இறந்தவர்களைத் தாண்டி மேலும் பலர் காயமடைந்துள்ளனர். கண்மூடித்தனமாக ஆயுததாரிகள் சுட்டதையும், மாடியில் இருந்து ஜன்னல் வழியாகக் குதித்து மக்கள் தப்பித்ததையும் சம்பவத்தைக் கண்டவர்கள் வர்ணித்துள்ளனர். இத்தாக்குதலை தாங்களே நடத்தியதாக அல்-ஷபாப் அமைப்பு தெரிவித்துள்ளது. ht…

  3. கனடாவில் பள்ளியில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு: 5 பேர் பலி; காயம் 2 கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடியூ. கனடா நாட்டின் சஸ்கட்சேவன் மாகாணத்தில் உள்ள ஒரு உயர்நிலைப்பள்ளிக்குள் புகுந்த மர்மநபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் பலியாகினர். 2 பேர் படுகாயமடைந்தனர். இத்தகவலை அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ருடியூ உறுதிப்படுத்தியுள்ளார். ஸ்விட்சர்லாந்தின் டேவாஸ் நகரிலிருந்து அவர் கூறும்போது, "சஸ்கட்சேவனில் உள்ள லா லோச்சே பகுதியில் ஏழாம் வகுப்பில் இருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பயிலும் உயர்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த மர்மநபர் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் ஐந்து பேர் பலியாகினர்.…

  4. இன்றைய நிகழ்ச்சியில்… - அகதிகள் நெருக்கடி ஐரோப்பாவையே ஆட்டம் காண வைத்துவிடும் என்கிறார் பிபிசிக்கு செவ்வி வழங்கிய பிரஞ்சுப் பிரதமர். - இலங்கை போர்க்குற்ற விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடம் கிடையாது என்கிறார் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. - வெறுப்புணர்வுத் தாக்குதல்களை எதிர்கொள்ள கராத்தே கற்றுக்கொள்ளும் அமெரிக்காவின் முஸ்லிம் யுவதிகள்.

  5. அவசர மருத்துவ சிகிச்சைக்காக லண்டன் புறப்பட்டுச் சென்றார் மாலத்தீவு முன்னாள் அதிபர் நஷீத் முகமது நஷீத் மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் (48) அவசர மருத்துவ சிகிச்சைக்காக நேற்று கொழும்பு நகரிலிருந்து லண்ட னுக்கு புறப்பட்டுச் சென்றார். முன்னாள் அதிபர் மவுமூன் அப்துல் கயூமின் 30 ஆண்டு கால தொடர் ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைத்து, முதன்முறையாக ஜனநாயக முறைப்படி கடந்த 2008-ல் அதிபரானார் நஷீத். 2012-ம் ஆண்டு ஊழல் புகார் காரணமாக தலைமை நீதிபதி கைது செய்யப்பட்டதால், நஷீதுக்கு எதிராக போராட்டம் வெடித்தது. இதையடுத்து அவர் பதவி விலகினார். நீதிபதி கைது செய்யப்பட்டது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் நஷ…

  6. கிறீஸூக்கு அருகில் இரு படகுகள் கவிழ்ந்தால் 11 சிறார்கள் உட்பட 42 பேர் பலி 2016-01-22 18:57:28 குடியேற்றவாசிகளுடன் ஐரோப்பாவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த இரு படகுகள் நேற்றிரவு கவிழ்ந்ததால் 11 சிறார்கள் உட்பட 42 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். ஏஜின் கடலில், கிறீஸ் நாட்டின் சிறிய தீவுகளில் ஒன்றான கலோலிம்னஸுக்கு அருகில் படகொன்று கவிழ்ந்ததால் 11 34 பேர் உயிழந்தனர். பார்மகோனிசி தீவுக்கு அருகில் மற்றொரு படகு கவிழ்ந்தால் மேலும் 8 பேர் உயிரழந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த வருடம் ஐரோப்பாவுக்கு சட்ட விரோமாக 10 லட்சம் பேர் சென்றுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஏஜியன் கடல் ஊடாக துருக்கியிலிருந்து கிறீஸுக்கு செல்லும்போத…

  7. குடியேறிகள் நெருக்கடி ஐரோப்பிய சமூகத்தை ஸ்திரமிழக்கச் செய்யும்: பிரஞ்சுப் பிரதமர் அகதிகள் நெருக்கடி தொடர்பில் பிபிசிக்கு பிரஞ்சுப் பிரதமர் பேட்டியளித்துள்ளார். ஐரோப்பாவுக்கு வரும் ஒவ்வொரு அகதியையும் உள்ளே விட்டுக்கொண்டிருந்தால் ஐரோப்பிய சமூகம் மொத்தமாகவே ஆட்டங்காணும் என பிரஞ்சு பிரதமர் மனுவெல் வால்ஸ் எச்சரித்துள்ளார். இந்தக் குடியேறிகள் நெருக்கடி ஐரோப்பிய ஒன்றியத்தின் மொத்த எதிர்காலத்துக்குமே மோசமான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக பிபிசிக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்தார். குடியேறிகளைக் கரம் நீட்டி வரவேற்கும் விதமான ஜெர்மானிய ஆட்சித்தலைவி அங்கேலா மெர்க்கெல்லின் கொள்கை 'தைரியமான ஒரு விஷயம்' என்று அவர் வர்ணித்தார். ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில…

  8. அமெரிக்கப் பனிப்புயல்: கோடிக் கணக்கானவர்கள் பாதிக்கப்படலாம் அமெரிக்காவில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பனிப்பொழிவிலும் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன (கோப்புப் படம்) அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையை மாபெரும் பனிப்புயல் ஒன்று நெருங்குவதால் தலைநகர் வாஷிங்டனில் ஏறக்குறைய-வரலாறு காணாத அளவுக்கு பனிப்பொழிவு இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை பிற்பகலுக்கு மேல் வீசவிருக்கும் இந்தப் பனிப்புயலின் காரணமாக, சில மணி நேரங்களில் இரண்டடி உயரத்திற்கு பனி பெய்யலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. சுமார் 5 கோடிப் பேர் இந்தப் பனிப்புயலின் காரணமாக பாதிக்கப்படுவார்கள். இந்தப் பனிப்புயலின் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்படுவதோடு விமானப் போக்குவரத்தும் தடைப்படக்கூடும்…

  9. 2050-ல் கடலில் பிளாஸ்டிக் குப்பைகள் தான் இருக்கும்: - உலக பொருளாதார பேரவை எச்சரிக்கை! [Friday 2016-01-22 08:00] உலகம் முழுவதும் ஒரு ஆண்டுக்கு குறைந்தது 8 மில்லியன் டன்கள் அளவுக்கு பிளாஸ்டிக் குப்பைகள் கடலில் கொட்டப்பட்டு வருகின்றன. இது ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு லாரி குப்பையை கொட்டுவதற்கு சமமானதாகும். இதற்கு உடனடியாக தீர்வு காணப்படாவிட்டால் 2030-ம் ஆண்டுக்குள் இருமடங்காகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுவே, 2050-ம் ஆண்டுக்குள் 4 மடங்காக அதிகரித்து விடும். இதன் எதிரொலியாக, கடலில் மீன்களை விட பிளாஸ்டிக் குப்பைகளே அதிகம் இருக்கும் அபாயமான நிலை உருவாகும்.தற்போது, கடலில் 150 மில்லியன் டன்களுக்கும் அதிகமாக பிளாஸ்டிக் குப்பைகள் உள்ளன. கடந்த 50 ஆண்டுகளில் பிளாஸ்டிக் பயன்பா…

  10. சிரியாவில் 1,000 க்கும் அதிகமானோர் பலி! - ரஷ்ய விமானங்களே பொறுப்பு! [Thursday 2016-01-21 22:00] சிரியாவில் நான்கு மாதங்களுக்கு முன்னர் ரஷ்யா தாக்குதல்களை நடத்துவதற்கு ஆரம்பித்தது முதற்கொண்டு இதுவரை 1,000 க்கும் அதிகமான பொதுமக்கள் உயிழந்துள்ளதாக சிரிய மனித உரிமைகள் அவதான நிலையம் புதன்கிழமை தெரிவித்தது. கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் முதல் ரஷ்யாவால் சிரியாவில் நடத்தப்பட்ட மேற்படி வான் தாக்குதல்களில் 200 சிறுவர்கள் உட்பட 1,015 பேர் பலியாகியுள்ளதாக அந்த நிலையம் கூறுகிறது. அதேசமயம் இந்தத் தாக்குதல்களில் ஐ.எஸ். தீவிரவாத குழுவைச் சேர்ந்த 893 பேரும் எதிர்க் குழுவைச் சேர்ந்த 1,141 பேரும் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிரியாவில் நான்கு மாதங்களுக்கு முன்னர் …

  11. 2016ல் வாழ்வதற்கு சிறந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு 22வது இடம்! சூரிச்: 2016-ம் ஆண்டில் வாழ்வதற்கு சிறந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 22-வது இடத்தில் உள்ளது. ஜெர்மனி முதலிடம் பிடித்துள்ளது. சுவிட்சர்லாந்தை சேர்ந்த உலக பொருளாதார மையம், வாழ்வதற்கு சிறந்த நாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டது. சுமார் 60 நாடுகளில், நிலத்தன்மை, துணிச்சல், கலாச்சார செல்வாக்கு, தொழில் முனைவோர், பாரம்பரியம், வணிகம், வாழ்க்கை தரம் மற்றும் பொருளாதார செல்வாக்கு போன்ற 24 தகுதிகளை கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து 16,200-க்கும் மேற்பட்ட மக்களிடம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அவர்களில் 4,500 பேர் தொழில் நிறுவனங்களில் மூத்த அதிகாரிகளாக உள்ளவர்கள். மற்றவர்கள் சாத…

  12. உலகின் பெரும் பணக்காரர்கள் எங்கே இருக்கிறார்கள்? பணம் எங்கே? உலக பொருளாதாரம் குறித்து விவாதிக்க உலகத் தலைவர்கள் இந்த வாரம் சுவிஸ்ஸிலுள்ள டாவோஸில் கூடுகின்றனர். இந்த மாநாட்டில் பொருளாதார ஏற்றத் தாழ்வு முக்கியமாக விவாதிக்கப்படும் ஒரு விஷயம். உலகளவில் அதிகப்படியான பெரும் கோடீஸ்வரர்கள் அமெரிக்காவிலேயே உள்ளனர் இச்சூழலில் உலகளவில் செல்வம் எங்கு எப்படி பரவியுள்ளது அது எப்படி மாறிவருகிறது என்பது குறித்த ஒரு பார்வை. பொருளாதார ஏற்றத் தாழ்வு அதிகரித்து வரும் ஒரு உலகளாவியப் பிரச்சினை. ஆண்டுதோறும் கிரெடிட் ஸ்விஸ் எனும் ஸ்விஸ் வங்கி, உலகப் பொருளாதாரம் மற்றும் அது எங்கு எப்படி குவிக்கப்பட்டுள்ளது என்பதை நாடு வாரியாக, பிரதேச வாரியாக ஆய்வு செய…

  13. இன்றைய நிகழ்ச்சியில்… - முன்னாள் ரஷ்ய உளவாளி லிட்வினென்கோவின் மரணத்தை ஆராய்ந்த பிரிட்டிஷ் விசாரணை, நஞ்சு கொடுக்கப்படுவதற்கு அதிபர் புடினே ஒப்புதல் அளித்திருக்கலாம் என முடிவு தெரிவித்துள்ளது. - மதநிந்தனை செய்ததாக தவறாக நம்பி, தன் கையை தானே வெட்டிக்கொண்ட பாகிஸ்தானிய பையனை பிபிசி சந்தித்தது. - உலகின் எழில்மிகு சுற்றுலாத் தீவுகளில் ஒன்றான டொங்கோ தீவுமக்கள் எதிர்கொள்ளும் உடற்பருமன் பிரச்சினை குறித்த பிபிசியின் சிறப்புத்தகவல்.

  14. ஐ.எஸ். தீவிரவாதிகளை முந்திய ரஷ்யா: வெளியான அதிர்ச்சி தகவல்! சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளை விட ரஷ்யா நடத்திய தாக்குதலிலேயே அதிக மக்கள் இறந்ததுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சிரியாவில் உள் நாட்டு பேரில் ஈடுபட்டு வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள், அதிபர் பஷார் அல் ஆசாத் படைக்கு எதிராக தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதிபர் ஆசாத்துக்கு உதவும் விதமாக கடந்த ஆண்டின் இறுதியில் ரஷ்யா போரில் களமிறங்கியது. இதையடுத்து வான் வழியாகவும், போர் கப்பல்கள் மூலமாகவும் தங்களது தாக்குதலை நடத்திவருகிறது. அதே வேளையில் ரஷ்யா, ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதலை மேற்கொள்வதை விட அதிபருக்கு எதிரான குழுக்கள் மீதும், அப்பாவி பொதுமக்கள் மீதும் தாக்குதல் நட…

    • 1 reply
    • 584 views
  15. நேதாஜி உடல் எரியூட்டப்பட்டதற்கான சான்றிதழ் வெளியீடு ! இந்திய தேசிய ராணுவத்தின் தலைவராக இருந்த நேதாஜியின் மரணத்தில் பல்வேறு சர்ச்சைகள் நிலவி வந்த நிலையில், அவர் தைவானில் நிகழ்ந்த விமான விபத்தில் இறந்து விட்டதாக போஸ்பைல்ஸ். இன்போ என்ற பிரிட்டனை சேர்ந்த இணையதளம் நம்பத் தகுந்த தகவல்களை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, விபத்துக்குள்ளான விமானத்தில் நேதாஜியுடன் பயணித்த இந்திய தேசிய ராணுவத்தின் கர்னல் முஜிபூர் ரகுமான்கான், கடந்த 1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 24-ம் தேதி அளித்திருந்த அறிக்கையை அண்மையில், இந்த இணையதளம் வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையில், நேதாஜியின் உடலை தானே எரியூட்டியதாகவும் அவர் தெரிவித்திருந்தார். தற்போது அந்த இணையதளம் நேதாஜி எரியூட்டப்பட்டது தொ…

  16. இதுவும் போட்டோ ஷாப் வேலைதானாம்! கடந்த 2014ஆம் ஆண்டு பொது தேர்தலின் போது, பொதுக் கூட்ட மேடை ஒன்றை பிரதமர் மோடி துடைப்பத்தால் பெருக்குவது போன்ற படம் சமூக வலைதளங்களில் உலாவியது. கடந்த 1988-ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ் அமைப்பில் சாதாரண தொண்டராக நரேந்திர மோடி இருந்த போது,இத்தகைய பணியில் அவர் ஈடுபட்டது போல, அந்த படத்தின் கீழ் விளக்கமளிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் இருப்பது மோடியா? அல்லது சித்து வேலையா? எனற அகமதாபாத்தை சேர்ந்த ஒருவர் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்டிருந்தார். இந்த நிலையில், ''அந்தப் படத்தில் இருப்பது மோடி அல்ல. ஃபோட்டோஷாப்பில் சில மாற்றம் செய்யப்பட்டு வேறு ஒரு உடலுடன் மோடியின் முகம் ஒட்டப்பட்டுள்ளதாக தகவல் பெறும் உரிம…

  17. எழுத்துப் பிழையால் சிக்கல்: 10 வயது முஸ்லிம் மாணவரிடம் இங்கிலாந்து போலீஸ் விசாரணை பாடப் புத்தக கேள்வி ஒன்றுக்கு எழுத்துப் பிழையுடன் பதில் எழுதிய 10 வயது முஸ்லிம் மாணவரிடம் இங்கிலாந்து போலீஸ் விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆங்கில பாடப் புத்தகத்தில், 'நீ எங்க வசிக்கிறாய்?' என்ற கேள்விக்கு terraced house (மாடிவீடு) என்பதற்கு பதிலாக terrorist house (தீவிரவாதி வீடு) என்று எழுதியதால் இந்தப் பிரச்சினை உருவானது. இங்கிலாந்தின் வடகிழக்கைச் சேர்ந்த அந்த முஸ்லிம் மாணவர் லான்க் ஷ்யிரில் குடும்பத்தோடு வசிக்கிறார். பாடப் புத்தகத்தில் சிறுவன் எழுதி இருந்த பதிலை கண்ட பள்ளி ஆசிரியை உடனடியாக சிறுவனை விசாரிக்க வேண்டும் என போலீஸில் புகார் அளித்தார். இ…

  18. இராக்கில் ஐஎஸ் வசம் அடிமைகளாக 3,500 பேர் தவிப்பு: ஐ.நா. ஐஎஸ் இயக்கத்தினரால் கடத்தப்பட்ட யாஷிதி இனப் பெண். | கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ். இராக்கில் பெண்கள், குழந்தைகள் என சுமார் 3,500 பேரை ஐஎஸ் இயக்கத்தினர் அடிமைகளாகக் கொண்டு கொடூர செயல்களில் ஈடுபடுவதாக ஐநா அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இவர்கள் அங்கு இனப்படுகொலை மற்றும் போர் குற்றங்கள் என்று குறிப்பிடும் வகையிலான கொடூர செயல்களில் ஈடுபடுவதாக ஐநா-வின் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது. ஐநா மனித உரிமைகள் ஆணையமும் மற்றும் இராக்குக்கான ஐநா உதவி மையமும் இணைந்து இது தொடர்பான கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், "இராக்கில் பல இடங்களை ஆக்கிரமித்துள்ள ஐஎஸ் பயங்கரவாத இயக…

  19. இன்றைய நிகழ்ச்சியில்… - பாகிஸ்தானில் மீண்டும் ஒரு ரத்தக்களரி. பல்கலைக்கழக வளாகம் ஒன்றில் ஆயுதபாணிகள் புகுந்து தாக்கியதில் பத்தொன்பது பேராவது கொல்லப்பட்டனர். - குடியேறிகள் நெருக்கடியை சமாளிக்கும் புதிய திட்டங்களை ஐரோப்பிய ஒன்றியம் பரிசீலிக்க, துருக்கிக்குள் செயலாற்றும் சட்டவிரோத ஆட்கடத்தல் கும்பலின் செயல்பாடுகளை ரகசியமாகப் படம்பிடித்தது பிபிசி. சீரற்ற இதயத் துடிப்புள்ள ஆண்களை விட பெண்களுக்கே உயிராபத்து மிக்க இதய பாதிப்பும் மூளைப் பாதிப்பும் வரும் ஆபத்து இருமடங்கு அதிகம் என்கிறது ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழகம் ஆய்வு.

  20. கடும்போக்குவாதம்: சிங்கப்பூரில் வங்கதேசப் பிரஜைகள் கைது சிங்கப்பூரில் கடும்போக்குவாதச் செயல்களில் பங்கேற்க திட்டமிட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் வங்கதேசப் பிரஜைகள் இருபத்து ஏழு பேரை தடுத்துவைத்துள்ளதாக அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்களில் ஒருவர் மட்டும் வங்கதேசத்துக்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். ஏனையோர் சிங்கப்பூரில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். கட்டுமானத் தொழிலாளர்களாக வேலைபார்த்துவந்த இவர்கள் அனைவரும் அண்மைய வாரங்களில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பான்மையானோர் கடும்போக்கு கருத்துகளையும், ஜிகாதி சித்தாந்தம் தரவுகளையும் பரிமாறிக்கொண்ட ஒரு குழுவைச் சேர்ந்தவர்கள் என சிங்கப்பூர் அதிகாரிகள் கூறுகின்றன…

  21. பின்லேடன் உடலை ரகசியமாக படம் எடுத்தவர் சிக்கினார்- எப்படி? ஒசாமா பின்லேடனின் உடலை புகைப்படம் எடுத்த கடற்படை அதிகாரி ஒருவர் அமெரிக்காவின் விசாரணை வளையத்திற்குள் சிக்கியுள்ளார். உலகையே அச்சுறுத்தி வந்த அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடனை, கடந்த 2011ம் ஆண்டு அமெரிக்கா, பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத்தில் வைத்து சுட்டுக்கொன்றது. பின்னர், அவரது உடலை கடலில் வீசிவிட்டதாக அமெரிக்க அரசு தெரிவித்தது. ஆனால், அது தொடர்பான புகைப்படங்கள் எதையும் தேச பாதுகாப்பு கருதி வெளியிடவில்லை. பின்லேடனை கொல்ல அமெரிக்கா அனுப்பிய அதிரடிப்படை கடற்படையை சேர்ந்த 'சீல் 6' என்ற பிரிவை சேர்ந்தது. இந்நிலையில், இந்த 'சீல்' கடற்படையில் இடம்பெற்றிருந்த அதிகாரி …

  22. கழுத்தை அறுத்து கொல்லும் கொடூரன் “ஜிகாதி ஜான்” மரணம் - உறுதி செய்தது ஐ.எஸ்.ஐ.எஸ் பெய்ரூட்: ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் அப்பாவிகள் பலரை கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்யும் வீடியோவில் முகமூடி அணிந்து தோன்றிய ஜிகாதி ஜான் ரக்கா நகர் தாக்குதலில் கொல்லப்பட்டதை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கமும் உறுதி செய்துள்ளது. சிரியா, ஈராக்கில் பல்வேறு பகுதிகளை தங்கள்வசம் கொண்டுவந்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் உலகிற்கே பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர். அவர்களுக்கு எதிராக அமெரிக்கா தலைமையில் சர்வதேச நாடுகளின் படை தாக்குதல் நடத்திவருகிறது. இதற்கிடையே தீவிரவாதிகள் பிணைக் கைதிகளை தலையை வெட்டியும், பெட்ரோல் ஊற்றி எரித்தும் வெறியினைத் தணித்துக் கொள்கின்றனர். பிணைய கைதிகள் கொடூர…

  23. தோற்றத்தால் விமானிக்கு 'உறுத்தல்': யு.எஸ். விமானத்தில் ஒரு சீக்கியர், 3 முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதால் சர்ச்சை அமெரிக்கன் ஏர்லைன்ஸ். | கோப்புப் படம். அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்திலிருந்து சீக்கிய இளைஞரும் அவரது இஸ்லாமிய நண்பர்களும் இறக்கிவிடப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் தோற்றத்தைக் கண்டு அந்த விமானத்தின் விமானிக்கு உறுத்தலாக இருந்ததால், அவர்கள் வெளியேற்றப்பட்டதாக வெளியான தகவல் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இந்தியாவை பூர்விமாகக் கொண்ட சீக்கிய இளைஞர் ஷான் ஆனந்த்தும், 3 முஸ்லிம் இளைஞர்களும் கடந்த மாதம் டொரண்டோவிலிருந்து நியூயார்க்குக்கு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்றுகொண்டிருந்தனர். …

  24. பாகிஸ்தான் பல்கலை.யில் தீவிரவாதிகள் சரமாரி தாக்குதல்: மாணவர்களை மீட்கும் முயற்சி தீவிரம் பாகிஸ்தான் பல்கலைக்கழகத்தில் நுழைந்த தீவிரவாதிகள் மீது பதிலடி தாக்குதல் நடத்தி மாணவர்களை மீட்கும் முயற்சியில் பாதுகாப்புப் படையினர். | படம்: ஏ.எஃப்.பி. பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியான கைபர் பக்துவானில் சார்சடா என்ற இடத்தில் அமைந்துள்ள பச்சா கான் பல்கலைக்கழகத்தில் தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2014-ல் பெஷாவரில் உள்ள ராணுவ பள்ளியை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பள்ளி மாணவர்கள் உட்பட 140 பேர் கொல்லப்பட்டனர். பெஷாவர் தாக்குதலுக்கு தெஹ்ரிக் இ தாலிபான் அமைப்பு பொறுப்பேற்றது. அதே பாணியில் தீவிர…

  25. தீவிரவாத தாக்குதல்களால் ஈராக்கில் 22 மாதங்களில் 18,800 பேர் பலி 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வரையான காலப்பகுதியில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் ஈராக்கில் 18 ஆயிரத்து 800 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இதேவேளை குறித்த காலப்பகுதியில் 36 ஆயிரம் பொதுமக்கள் காயமடைந்துள்ளதாகவும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. ஈராக்கின் தலைநகர் பக்தாத்தில் கடந்த வருடம் மே மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரையான காலப்பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 4 ஆயிரம் பேர் பலியானதுடன் 7 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான பேச்சாளர் ரவினா ஷம்தாசனி தெரி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.