உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26703 topics in this forum
-
2015-ன் டாப் 50 வைரல் ஹிட்கள்! ’நான் எப்போ வருவேன், எப்படி வருவேன்னு தெரியாது. ஆனா, வரவேண்டிய நேரத்துல கரெக்ட்டா வருவேன்..!’ என்று ரஜினி சொல்வது சோஷியல் மீடியா வைரல்களுக்கு கச்சிதமாகப் பொருந்தும். யாரும் எதிர்பாரா சமயம் குபீரென கிளம்புகின்றன வைரல்கள். அதை யார் நினைத்தாலும் உருவாக்க முடியாது, பரபரப்பாக இருப்பதை அடக்கவும் முடியாது. அப்படி 2015-ல் தமிழர்கள் அதிகம் எதிர்கொண்ட வைரல்களில் ‘டாப்-50’ மட்டும் இங்கே... 1. சென்னை வெள்ளம் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் என்ற வார்த்தைகளுக்கு புது அர்த்தம் கொடுத்தது சென்னை வெள்ளம். சென்னை, கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது ஆர்வலர்கள், உலகெங்கிலுமிருந்து உதவிக்கரம் நீட்ட ஏதுவாயிருந்த சாதனம் …
-
- 0 replies
- 818 views
-
-
'தலிபான்களின் தளபதி ஒருவர் கொல்லப்பட்டார்' ஆப்கானில் ஹெல்மண்ட் மாகாணத்தில் கடுமையான சண்டை நடக்கும் சங்கீன் நகரில் தலிபான் தளபதி ஒருவரும், அவரது போராளிகள் 50 பேரும் கொல்லப்பட்டதாக ஆப்கான் அதிகாரிகள் கூறியுள்ளனர். 'தலிபான்களின் தளபதி கொல்லப்பட்டார்' அந்த பகுதியை மீளக் கைப்பற்றும் முயற்சியாக ஆப்கான் அரசாங்க படைகளுக்கு ஆதரவாக அமெரிக்க விமானங்கள் இரண்டு தடவை வான் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட தலிபான் தளபதியான முல்லா நஸீர், தலிபான்களின் தலைவரான முல்லா அக்தார் மன்சூரின் நெருங்கிய சகா என்று உள்துறை அமைச்சகத்தின் சார்பிலான பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அவர்களுடைய படைகள் இன்னமும் அந்த மாவட்டத்தை தமது முழுமையான கட்…
-
- 0 replies
- 505 views
-
-
குர்திய பெண் போராளிகள்: வீர மகளிர் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ ஒடுக்கப்படும் சமூகம், தான் ஒடுக்கப்படுவதை உணரும் போது தன்னைச் சூழும் மாயைகளை விலக்கிப் போராடத் தலைப்படுகிறது. அப் போராட்டத்துக்கு ஆண், பெண் வேறுபாடு கிடையாது. ஆண்களை விட மனவுரனுடன் சளையாது போராடும் ஆற்றல் பெண்களுக்கு உண்டெனப் பல போராட்டங்கள் நமக்கு உணர்த்தியுள்ளன. எனினும், உலகை அச்சுறுத்தும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் அஞ்சும் போராளிகளாகக் குர்தியப் பெண் போராளிகள் உள்ளமை கொஞ்சம் வியக்கவைக்கும் உண்மையே. இன்றைய மத்திய கிழக்குச் செய்திகள், சிரியா, அமெரிக்கா, ரஷ்யா, துருக்கி என்பவற்றைச் சுற்றிக் கொண்டிருந்தாலும் அனைத்துக்கு நடுவிலும் பல்வேறு ஒடுக்குமுறையாளர்கட்கும் ஆக்கிரமிப்பாளர்கட்கும்…
-
- 0 replies
- 757 views
-
-
தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது நடந்து சென்ற மோடி தடுத்து நிறுத்திய ரஷ்ய அதிகாரி மாஸ்கோ விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடி | பட உதவி பிஐபி. ரஷ்யாவில் இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது அதை கவனிக்காமல் நடந்து செல்ல முயன்ற பிரதமர் மோடியை ரஷ்ய நாட்டு அதிகாரி ஒருவர் மிகவும் நேர்த்தியாக தடுத்து நிறுத்தினார். வருடாந்திர இருதரப்பு உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். விமானநிலையத்தில் மோடியை வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விமானத்திலிருந்து மோடி இறங்கியது அவருக்கு ரஷ்ய நாட்டு பாதுகாப்புப் படையின் சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அ…
-
- 1 reply
- 540 views
- 1 follower
-
-
பதிவுகள் 2015: கவனிக்கத்தக்க இந்திய - இலங்கை உறவு இலங்கை அதிபர் சிறிசேனாவுடன் இந்தியப் பிரதமர் மோடி இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுடன் மோடி அண்டை நாடுகளுடன் சுமுகமான நட்புறவு பேணப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தனது பதவியேற்பு விழாவிலேயே உறுதியளித்திருந்தார். பதவியேற்பு விழாவுக்கே சர்ச்சைகளை மீறியும் அப்போதைய இலங்கை அதிபர் ராஜபக்சவை அழைத்திருந்தார். இந்நிலையில், 2015-ம் ஆண்டு இந்தியா - இலங்கை உறவு இணக்கமாகவே இருந்ததாகக் கூறப்படுகிறது. 2015 இலங்கை அரசியலில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்திய…
-
- 0 replies
- 558 views
-
-
70 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விற்பனைக்கு வருகிறது ஹிட்லரின் புத்தகம்! 70 ஆண்டுகளுக்கு பிறகு ஹிட்லரின் 'மெயின் கெம்ப்' புத்தகத்தை மீண்டும் விற்பனைக்கு கொண்டுவர ஜெர்மனி முடிவு செய்துள்ளது. இதற்கு யூதர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஜெர்மனியின் சர்வாதிகாரியாக இருந்தவர் அடால்ப் ஹிட்லர். இவர் தனது வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகள், யூதர்கள் பற்றிய எண்ணம் மற்றும் அரசியல் தொடர்பான கருத்துக்களுடன் 'மெயின் கெம்ப்' என்ற பெயரில் தனது சுயசரிதையை எழுதினார். அவரது ஆட்சிக்காலத்தில் அப்புத்தகம் பரவலாக விற்பனையானது. இந்நிலையில் அவரது மரணத்துக்கு பிறகு அப்புத்தகத்தை விற்பதற்கு நேச நாடுகள் தடை விதித்தன. மேலும் புத்தகத்தின் பதிப்புரிமை ஜெர்மனியின்…
-
- 0 replies
- 402 views
-
-
சவூதி மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 25 பேர் பலி (பதற வைக்கும் வீடியோ) ரியாத்: சவூதி அரேபியாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த தீ விபத்தில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். சவூதி அரேபிய தலைநகரான ரியாத்தில், ஜாசன் என்ற பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் இன்று காலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில், மருத்துவமனையில் இருந்த நோயாளிகள், அவர்களது உறவினர்கள், குழந்தைகள் என 25 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 107 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் சவூதி அரேபிய ராணுவத்தின் தலைமை இயக்குநர் தெரிவித்து உள்ளார். மேலும், தீ விபத்திற்கான காரணம் …
-
- 0 replies
- 408 views
-
-
இளம்பெண்ணை பலாத்காரம்: மலேசிய போலீஸ் அதிகாரிக்கு 100 ஆண்டு சிறை இளம் பெண்ணை பலாத்காரம் செய்த குற்றத்துக்காக மலேசியாவைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிக்கு 100 ஆண்டு சிறைத் தண்டனையும் 15 பிரம்படி தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. மலேசியாவில் குற்றச்செயல் தடுப்பு அதிகாரியாக பணியாற்றியவர் துணை கண்காணிப்பாளர் ரொஹைஸத் அப்துல் அனி. இவர் மீது பலாத்கார வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. பதவியில் இருந்தபோது (2012) 13 வயது இளம்பெண்ணை விடுதிக்கு அழைத்துச் சென்று இரண்டு நாட்களாக பலாத்காரம் செய்துள்ளார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு மீதான விசாரணை போர்னியா தீவில் உள்ள சபா மாகாண தலைநகர் கோடா கினபாலு நீதிமன்றத்தில் புதனன்று நடந்தது. அப்போது அரசு துணை வழக்கறிஞர் அ…
-
- 0 replies
- 528 views
-
-
சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள 100 ஆளில்லா விமானம் வாங்க இந்தியா திட்டம் அமெரிக்காவின் பிரிடேட்டர் வகை ஆளில்லா போர் விமானம். அமெரிக்காவிடம் இருந்து 100 ஆளில்லா போர் விமானங்களை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. அமெரிக்க ராணுவத்தில் வீரர்கள் உயிரிழப்பைத் தடுக்க ஆளில்லா போர் விமானங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக ஆப்கானிஸ்தான், இராக், சிரியாவில் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல், உளவுப் பணிகளில் ஆளில்லா விமானங்கள் ஈடுபடுத்தப்படுகின்றன. சீன ராணுவ அச்சுறுத்தல் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்கா, ஜப்பான், இந்தியா ஆகியவை மறைமுக கூட்டணி அமைத்துள்ளன. 3 நாடு களும் இணைந்து அடிக்…
-
- 0 replies
- 573 views
-
-
தென்சீன கடலில் மலேசியா அருகேயுள்ள குட்டித் தீவு நாடு புருனே. பணக்கார நாடான இது கடந்த 1984–ம் ஆண்டு இங்கிலாந்திடம் இருந்து சுதந்திரம் பெற்றது. இங்கு 4 லட்சத்து 15 ஆயிரம் பேர் மட்டுமே வசிக்கின்றனர். தற்போது அங்கு மன்னர் ஆட்சி நடக்கிறது. ஹசன்னால் போல்கியா மன்னராக உள்ளார். முஸ்லிம் நாடான இங்கு கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு முதல் அந்நாட்டு அரசு அதற்கான தடையை கொண்டு வந்தது. அரசின் உத்தரவை மீறி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடினால் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.14 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். முஸ்லிம்கள் மத வழியில் இருந்து விலகி செல்வதை தடுக்கவே அரசு இந்த நடவடிக்கை மேற் கொண்டுள்ளதாக தெரிகிறது. அதே நேரத்தில…
-
- 0 replies
- 726 views
-
-
துருக்கி தலைநகரான இஸ்தான்புல்லில் உள்ள சர்வதேச விமான நிலையம் அருகே இன்று தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் ஒருவர் பலியானார். துருக்கியில் குர்திஸ்தான் தொழிலாளர்கள் கட்சி, இஸ்லாமிய தீவிரவாதிகள் மற்றும் இடதுசாரிகள் அவ்வப்போது வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இஸ்தான்புல் நகரில் உள்ள சபிஹா கோக்கென் சர்வதேச விமான நிலையத்தில் இன்று அதிகாலை நிகழ்ந்த குண்டு வெடிப்பில் விமானங்களை சுத்தம் செய்யும் பெண் பணியாளர் பலியானதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. http://www.seithy.com/breifNews.php?newsID=147647&category=WorldNews&language=tamil
-
- 0 replies
- 442 views
-
-
ரஷ்ய விமானத் தாக்குதல்களில் 200 பொது மக்கள் பலி [ Wednesday,23 December 2015, 05:47:20 ] சிரியாவின் ரஷ்ய விமானங்கள் மேற்கொண்ட குண்டுத் தாக்குதல்களில் இதுவரை 200 பொது மக்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய கடந்த செப்ரெம்பர் மாதம் 30 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 29 ஆம் திகதி வரை 25 ற்கும் மேற்பட்ட விமானத் தாக்குதல்களை ரஷ்யா சிரியாவில் மேற்கொண்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களை மதிக்க ரஷ்யா தவறியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சிரியா ஜனாதிபதி பஷர் அல் அசாத்தின் க…
-
- 1 reply
- 507 views
-
-
அமெரிக்காவுக்கு செல்லும் பிரிட்டிஷ் முஸ்லிம்கள் தடுக்கப்படுகிறார்களா? பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டெல்லா கிரேஸி அமெரிக்க அரசின் நடத்தை குறித்து கவலை வெளியிட்டுள்ளார் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் குடும்பம், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு செல்லும் விமானத்தில் ஏறும் சமயத்தில் அவர்கள் தமது பயணத்தை தொடர்வதற்குத் திடீரென தடை விதிக்கப்பட்டது ஏன் என்று அமெரிக்காவிடம் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் விளக்கம் கோர வேண்டும் என்று பிரிட்டனின் நாடளுமன்ற உறுப்பினர் ஸ்டெல்லா க்ரீசி கோரியுள்ளார். இந்த குறிப்பிட்ட குடும்பம் அவரது தொகுதியைச்சேர்ந்தவர்கள் என்பதால் அவர் இந்த பிரச்சனையை எழுப்பியுள்ளார். வால்தாம்ஸ்டோ தொகுதியில் …
-
- 0 replies
- 615 views
-
-
- சிரியாவில் ரஷ்யா நடத்திவரும் விமானத் தாக்குதல்களில் நூற்றுக் கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக கூறுகிறது அம்னெஷ்டி இண்டர்நேஷனல். ஆனால் ஆயுதகுழுக்களையே இலக்கு வைப்பதாக ரஷ்யா கூறுகிறது - ஒரு மாதத்துக்கு முன்னதாக பயங்கரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்ட பாரிஸ் நகரம் இன்னமும் கிறிஸ்மஸ் கால உற்சாகத்துக்கு திரும்பாத்து குறித்த ஒரு குறிப்பு. - முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் தடை செய்யப்பட்ட இசையை பாதுகாக்க எக்ஸ்ரே படங்களை பயன்படுத்தியது குறித்த தகவல்.
-
- 0 replies
- 572 views
-
-
ஏழை, பணக்காரர்களை பிரிக்கும் சுவர்: பெரு நாட்டில் உள்ள ”அவமானத்தின் சுவர்” (வீடியோ இணைப்பு) [ புதன்கிழமை, 23 டிசெம்பர் 2015, 12:04.11 மு.ப GMT ] ஏழை மற்றும் பணக்காரர்களை பிரிக்கும் விதமாக பெரு நாட்டில் கட்டப்பட்டுள்ள சுவர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. லத்தின் அமெரிக்க நாடுகளில் ஒன்று பெரு. இதன் தலைநகர் லைமாவில் உள்ள சான் ஜுவான் டி மிராஃபொலோரீஸ் (san juan de miraflores) மற்றும் சுர்க்கோ(surko) பகுதிகளை பிரிக்கும் விதமாக 10 அடி உயர சுவர் ஒன்று எழுப்பப்பட்டுள்ளது. பெருவின் பெர்லின் சுவர் என்று அழைக்கப்படும் இந்த சுவர் பணக்காரர்களையும் ஏழைகளையும் பிரிக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவத…
-
- 0 replies
- 481 views
-
-
மதத்தை கடந்த மனித நேயம்... சிலிர்க்க வைக்கும் வீடியோ! கென்யாவில் பேருந்தை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்த முயன்ற தீவிரவாதிகளிடம் இருந்து கிறிஸ்தவர்களை காப்பாற்றிய இஸ்லாமியர்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு ஆப்பிரிக்காவில் செயல்பட்டு வரும் அல் ஷபாப்( Al Shabaab) என்ற அமைப்பு சோமாலியா, கென்யா உள்ளிட்ட நாடுகளில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. மேலும் அப்பகுதிகளில் வசிக்கும் கிறிஸ்தவர்களை குறிவைத்து கொலை செய்து வருகிறது. இந்நிலையில் கென்யாவின் வடக்கு பகுதியில் உள்ள மண்டேரா அருகில், பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த தீவிரவாதிகள் பேருந்தை மறித்துள்ளனர். உடனடியாக பேருந்தில் இருந்த இஸ்லாமியர்கள் த…
-
- 0 replies
- 772 views
-
-
ஐஎஸ் தீவிரவாதிகளின் தாயகமாக இந்தோனேஷியா? ஐஎஸ் தீவிரவாதிகளின் தாயகமாக இந்தோனேஷியாவை மாற்ற முயற்சிகள் நடப்பதாக ஆஸ்திரேலியா எச்சரிக்கை விடுத்துள்ளது. சிரியா மற்றும் ஈராக்கின் பகுதிகளை கைப்பற்றி தங்களுக்கென்று தனி தேசத்தை உருவாக்கியுள்ள ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பல்வேறு அட்டூழியங்களை அரங்கேற்றி வருகிறது. இந்நிலையில் மற்றொரு தாயகமாக இந்தோனேஷியாவை மாற்ற ஐஎஸ் முயற்சிப்பதாக ஆஸ்திரேலியா எச்சரித்துள்ளது. ஆஸ்திரேலியா- இந்தோனேஷியா அமைச்சர்கள், காவல்துறை உயரதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்திலேயே ஆஸ்திரேலிய அட்டர்னி ஜெனரல் ஜியார்ஜ் பிராண்டிஸ் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், ஐஎஸ் அமைப்பு தனது கைக்கூலிகளை இந்தோனேஷியாவில் உருவாக்கி அதன் மூலமாக தாக்க…
-
- 0 replies
- 465 views
-
-
பயங்கரவாத தாக்குதல் செய்திகளை வெளியிட சீன ஊடகங்களுக்கு தடை [ Wednesday,23 December 2015, 05:45:31 ] சீனாவில் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான செய்திகள் மற்றும் புகைப்படங்கள், காணொளிகள் என்பவற்றை வெளியிடுவதற்கு தடை விதிக்கப்படவுள்ளது. தனிநாடு கேட்டு போராடி வரும் உய்குர் இனத்தவர் அங்கங்கே தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் புதிய சட்டமூலம் ஒன்று கொண்டுவரப்படவுள்ளது. இந்த சட்டமூலத்தில் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட காணொளிக் காட்சிகளை ஊடகங்கள் வெளியிடுவதற்கு கடுமையான கட்டுப்பாடுகளும், தடைகளும் விதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு…
-
- 0 replies
- 623 views
-
-
சிறார் குற்றவாளிகள் வயது வரம்பைக் குறைக்கும் சட்டத்திருத்தம் நிறைவேறியது இந்திய நாடாளுமன்ற வளாகம் இந்தியாவில் கொலை, மற்றும் பாலியல் வல்லுறவு போன்ற மோசமான குற்றங்களில் ஈடுபடும் சிறார்களை தண்டிக்கும்போது 18 வயதுவரை அவர்களை சிறார் குற்றவியல் தண்டனைச்சட்டத்தின்கீழ் தண்டிக்க வேண்டும் என்று தற்போதைய இந்திய அரசியல் சட்டத்தில் கூறப்பட்டிருக்கிறது. இதைத் திருத்தி 16 ஆண்டுகளைக் கடந்தவர் அனைவருமே வயதுக்கு வந்தவர்களாக கருதப்பட்டு மற்றவர்களைப் போல பொதுவான குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் கீழ் தண்டிக்க வகை செய்யும் சிறார் குற்றவியல் தண்டனைச் சட்டத்திருத்த மசோதா இந்திய நாடாளுமன்ற மேலவையில் செவாய்க்கிழமை நிறைவேறியது. இந்திய அளவில் நன்கு அறியப்பட்ட, டில்லி மருத்துவ…
-
- 0 replies
- 450 views
-
-
தலிபான்களிடம் வீழ்ந்துகொண்டிருக்கும் ஹெல்மண்ட் தெற்கு ஆப்கானிஸ்தானில் கடுமையான சண்டை நடக்கிறது. அங்கு கேந்திர முக்கியத்துவம் மிக்கசங்கின் மாவட்டத்தில், தலிபான்களிடம் இருந்து பாதுகாப்பு படைகள் பெரும் தாக்குதலை எதிர்கொள்கின்றன. யாருடைய கை அங்கு ஓங்கியுள்ளது என்பது குறித்து மாறுபட்ட தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. தலிபான்கள் மீண்டும் பெரும் நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கும் நிலையில், ஹெல்மண்ட் மாகாணத்தை தக்க வைத்துக்கொள்ள ஆப்கான் படைகள் தடுமாறுகின்றன. http://www.bbc.com/tamil/global/2015/12/151222_helmandvt
-
- 3 replies
- 391 views
-
-
-
- 0 replies
- 321 views
-
-
திருடர்களை ரத்தத்தோடு தெருவில் ஓடவிட்ட பெண்மணி [ செவ்வாய்க்கிழமை, 22 டிசெம்பர் 2015, 08:34.43 மு.ப GMT ] ஜேர்மனியில் பெண்மணி ஒருவர் தன்னிடம் கொள்ளையடிக்க வந்த திருடர்களை துணிகரமாக விரட்டியடித்துள்ளார். ஜேர்மனியை சேர்ந்த 34 வயது பெண்மணி ஒருவர்,காலை 3.45 மணியளவில் Ludigerplatz நகரில் உள்ள ரயில் நிலையத்திலிருந்து நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்த இரண்டு ஆண்கள், அவரிடம் இருந்த பணத்தினை தருமாறு அவரை மிரட்டியுள்ளனர், இதற்கு அப்பெண் மறுக்கவே ஒரு நபர் அப்பெண்ணின் முகத்தில் ஒரு குத்துவிடுகிறார். இதனால் நிலைகுலைந்த கீழே விழுந்த பெண்மணி, துணிச்சலுடன் எழுந்து அந்த நபரின் மூக்கில் பதிலுக்கு ஒரு குத்…
-
- 0 replies
- 621 views
-
-
ஆயிரக்கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்: காரணம் என்ன? [ திங்கட்கிழமை, 21 டிசெம்பர் 2015, 12:21.25 மு.ப GMT ] இந்தோனேசிய நாட்டில் உள்ள ஏரி ஒன்றில் ஏராளமான மீன்கள் செத்து மிதந்துகிடந்த சம்பவம் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகர் அருகில் சித்ரா என்ற ஏரியுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயரத் தொடங்கியது. இந்நிலையில் திடீரென ஏரியில் உள்ள மீன்கள் அனைத்தும் செத்து மிதக்க தொடங்கின. சுற்றுச்சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாகவும் ஆக்ஸிஜன் இல்லாததன் காரணமாகவுமே மீன்கள் செத்து மிதப்பதாக தகவல் பரவி வருகின்றன. இ…
-
- 0 replies
- 537 views
-
-
நடைபாதையிலிருந்தவர்கள் மீது வேண்டுமென்றே காரை மோதிய பெண்; அழகுராணி போட்டி நடைபெற்ற ஹோட்டலுக்கு வெளியே சம்பவம்: ஒருவர் பலி,37 பேர் காயம் 2015-12-22 12:04:40 அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபாதையிலிருந்த மக்கள் மீது பெண்ணொருவர் காரை மோதியதால் ஒருவர் பலியானதுடன் சுமார் 37 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அமெரிக்க நேரப்படி, ஞாயிறு இரவு மிஸ் யூனிவர்ஸ் அழகுராணி போட்டிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த ஹோட்டலுக்கு வெளியே இச்சம்வபவம் இடம்பெற்றுள்ளது. லாஸ் வேகாஸ் பொலிஸ் அதிகாரியான பிரெட் ஸிம்மர்மன் கருத்துத் தெரிவிக்கையில். இச்சம்பவம் ஒரு பயங்கரவாத நடவடிக்கை எனக் கருதப்படவில்லை எனக…
-
- 0 replies
- 441 views
-
-
பிரேசில்: பழங்கால ரயில் நிலையம் தீயில் எரிந்து நாசம் பிரேசில் தீ விபத்தில் 19ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு ரயில் நிலையம் சேதமடைந்துள்ளது. பிரேசிலின் சா பாலோ நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் 19ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு ரயில் நிலையத்தின் சில பகுதிகள் எரிந்து நாசமாயின. அந்த ரயில் நிலையத்தில் போர்ச்சுக்கீசிய மொழியின் வரலாற்றை ஆவணப்படுத்தியிருந்த மிகப் பிரபலமான ஒரு அருங்காட்சியகமும் செயல்பட்டுவந்தது. இந்த விபத்தில் அந்த அருங்காட்சியகமும் பெருமளவில் சேதமடைந்தது. ஸ்டேஷன் ஆஃப் லைட் எனப் பெயரிடப்பட்டிருந்த இந்த ரயில் நிலையத்தை பிரிட்டிஷ்காரர்கள் கட்டினர். இந்தத் தீ விபத்தில் இதன் கூரை முழுவதுமாக எரிந்து போனது. புகழ்பெற்ற பிரிட்டிஷ் ரயில் நிலைய வ…
-
- 0 replies
- 559 views
-