Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஜிகாதிகளை திருமணம் செய்யும் வலையமைப்பு துனீஷியாவில் தகர்ப்பு வெளிநாடுகளில் இருக்கும் ஜிகாதி போராளிகளை திருமணம் செய்துகொள்ள பெண்களை சேர்த்துக் கொண்டிருந்த வலையமைப்பு ஒன்றை, தாங்கள் முறியடித்துள்ளதாக துனீஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்கள் மீதான எதிர்த்தாக்குதலை துனீஷியப் படையினர் முன்னெடுத்து வருகின்றனர் நாட்டின் வடபிராந்தியமான பிஸ்ரெட்டில் இந்த பயங்கரவாத வலையமைப்பைச் சேர்ந்த நான்கு சந்தேக நபர்களை தாங்கள் கைது செய்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு அங்கு பெரிய அளவில் பல பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்ற பிறகு, சந்தேகத்துக்குரிய நபர்கள் மீதான தமது எதிர் நடவடிக்கையை துனீஷியா தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. துன…

  2. இன்றைய நிகழ்ச்சியில்… - உலக கால்பந்தின் மிகவும் சக்தி மிக்க நபர்களான செப் பிளட்டர் மற்றும் மிஷேல் பிளட்டினி ஆகியோருக்கு எட்டு ஆண்டுகள் தடை. - சீனாவில் முப்பதுக்கும் அதிகமான கட்டிடங்கள் புதையுண்ட நிலச்சரிவில், உயிர் தப்பியவர்களை மீட்க சுமார் ஆயிரம் பணியாளர்கள் முயற்சி. - அத்துடன், ஆப்பிரிக்காவின் அறுசுவை உணவுகளை லண்டனில் அறிமுகப்படுத்த விளையும் சமையல் கலைஞர் பற்றிய தகவல்கள்.

  3. அமெரிக்காவிலேயே எடுபடாமல் போன இஸ்லாமிய துவேஷம்! அவர் ஹிட்லரா... முசோலினியா? -முடிவெடுக்கமுடியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறது அமெரிக்கா. 'இரண்டும் இல்லை; அவர் ஒரு காமெடியன் மட்டுமே' என்கிறார்கள் சிலர். 'அதுவும் இல்லை, அவர் ஒரு உராங்குட்டான்' என்கிறார்கள் வேறு சிலர். டொனால்ட் டிரம்பின் ஆளுமை, அரசியல் பார்வை, சமூகக் கருத்துகள் ஆகியவற்றைப் பார்க்கும்போது இந்த ஒப்பீடு, அடிப்படையிலேயே பிழையானது என்பது தெரிகிறது. உராங்குட்டான் ஓர் அரிய குரங்கினம். அதற்கு வெறுக்கத் தெரியாது. டொனால்ட் டிரம்ப் அரிதானவர் அல்லர். மேலும், அவருக்குப் பேசத் தெரிந்த ஒரே மொழி, வெறுப்பு மட்டுமே. ஒரே ஓர் உதாரணம், அவருடைய இந்தச் சமீபத்திய அறிவிப்பு - ‘முஸ்லிம்களுக்கு இனி அமெரிக்காவ…

  4. சீனா நிலச்சரிவு : 90 க்கும் அதிகமானோரைக் காணவில்லை தெற்கு சீனாவில் நேற்று நிலச்சரிவில் டசின் கணக்கான கட்டிடங்கள் புதைந்துபோன இடத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான மீட்பு பணியாளர்கள் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். சீனா நிலச்சரிவு : 90 க்கும் அதிகமானோரைக் காணவில்லை ஷென்சென் நகரில் உள்ள தொழில்பேட்டையில், மண்ணும் சகதியும் சரிந்து மூழ்கடித்ததை அடுத்து இன்னமும் 91 பேரை காணவில்லை. பல இடங்களில் ஆட்கள் உயிருடன் இருப்பதற்கான சமிக்ஞைகளை தாம் கேட்டதாக அகழும் இயந்திரங்கள் மற்றும் மோப்ப நாய்கள் சகிதம் தேடுதலில் ஈடுபடும் பணியாளர்கள் கூறுகின்றனர். உயரமான இடத்தில் கட்டிட கழிவுப் பொருட்களை புதைத்து வைத்திருக்க, அது சரிந்து, கீழே இருந்த கட்டிடங்களை மூழ்கடித்துள்ளத…

  5. விமானத்தின் கூரை மீதும் இனி பயணிக்கலாம்: வருகிறது புதிய தொழில்நுட்பம் (பிரமிப்பு வீடியோ) தொழில்நுட்ப வரலாற்றில் ஒரு மைல் கல்லாக, பறந்துகொண்டு இருக்கும் விமானத்தின் கூரை மீது அமர்ந்து பயணம் செய்யும் வகையில் புதிய தொழில்நுட்பம் ஒன்று அறிமுகமாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பேருந்து மீது பயணம், ரயில் மீது பயணம் செய்த காலம் சென்று தற்போது விமானத்தின் மீதும் அமர்ந்து சொகுசாக இயற்கை காட்சிகளை அனுபவித்தவாறு பயணம் செய்யும் ஒரு புதிய தொழில்நுட்பத்தை வின்ட்ஸ்பீடு (Windspeed) என்ற நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஸ்கைடெக் (SkyDeck) என்ற அழைக்கப்படும் அந்த தொழில்நுட்பம், விமானத்தின் கூரை மேல் மையத்தில் அமைக்கப்பட உள்ளது. இந்த கூண்டை சுற்றி பாதுகாப்ப…

  6. மாற்றியளிக்கப்பட்ட மிஸ் யுனிவர்ஸ்! 2 நிமிடம் மட்டும் பிரபஞ்ச அழகியான கொலம்பியா அழகி! 2015-ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி பட்டம் வழங்கும் விழாவில் நிகழ்ச்சி தொகுப்பாளர் செய்த தவறால், கொலம்பியா நாட்டை சேர்ந்த அரியட்னா குடியர்ரெஸ், வெறும் இரண்டு நிமிடம் மட்டுமே பிரபஞ்ச அழகியாக இருந்தார். முதலில் தொகுப்பாளர் ஸ்டீவ் ஹார்வி, கொலம்பிய அழகியை பிரபஞ்ச அழகியாக அறிவித்து விட்டார். அவரும் மகிழ்ச்சியில் திளைக்க, சற்று சுதாரித்த தொகுப்பாளர் மேடையிலேயே மன்னிப்பு கேட்டு, தான் தவறாக அறிவித்து விட்டதாகவும், உண்மையிலேயே பட்டம் வென்றது ஃபிலிபைன்ஸ் சேர்ந்த பியா அலோன்ஜோ உர்ட்ஸ்பட்ச்தான் என அறிவிக்க, உர்ட்ஸ்பட்ச் சற்றுநேரம் செய்வதறியாமல் திகைத்தார். பாவம் அரியட்ன…

  7. சிரியாவில் ரஷ்யா மேற்கொண்ட விமானத் தாக்குதலில் 43 பேர் பலி [ Monday,21 December 2015, 05:41:50 ] சிரியாவின் இட்லிப் நகரில் ரஷ்ய விமானம் மேற்கொண்ட குண்டுத் தாக்குதலில் 43 பொது மக்கள் உயிரிழந்துள்ளனர். பொது மக்கள் அதிகம் வாழும் பகுதியிலேயே இந்த விமானத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சந்தைகள், வீடுகள் அலுவலக கட்டிடங்கள் நிறைந்த பகுதிகளிலேயே விமானத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டமையினால் பல உடல்கள் கட்டிடங்களுக்குள் சிக்குண்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. சிரியா ஜனாதிபதி பஷர் அல் அசாத்திற்கு ஆதரவாகவும் அங்குள்ள ஐ.எஸ் ஆயுத்தாரிகளுக்கு எதிராகவும் கடந்த செப்ரெம்பர் மாதம் முதல் ரஷ்யா விமானத் தாக்குதல்களை…

  8. சிரியாவில் இருந்த லெபனியக் குழுவின் தலைவர் இஸ்ரேலால் கொல்லப்பட்டதாக புகார் ஹிஸ்பொல்லாவின் முன்னணித்தலைவர் சமிர் குவண்டார் லெபனியக் குழுவான ஹிஸ்பொல்லாவின் முன்னணித்தலைவர் சமிர் குவண்டார் சிரியத்தலைநகர் டமாஸ்கஸ் நகரில் கொல்லப்பட்டார். ராக்கெட் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக அறிவித்திருக்கும் ஹிஸ்புல்லா அமைப்பு, இஸ்ரேல் இந்த தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளது. இதற்கு யார் பொறுப்பு என்பது குறித்து தாம் விசாரித்துவருவதாக சிரியா தெரிவித்துள்ளது. டமாஸ்கஸ் நகரின் ஜரமன மாவட்டத்தில் இருக்கும் குடியிருப்பு கட்டிடம் ஒன்றின்மீது ராக்கெட்டுகள் தாக்கியதில் சமிர் குவண்டார் கொல்லப்பட்டார். நான்குபேர் கொல்லப்பட காரணமாக இருந்த தாக்குதலில் இவருக்குஇரு…

  9. அகதிகளின் உடைமைகளைக் கைப்பற்றும் டென்மார்க் சட்டத்திற்கு எதிர்ப்பு டென்மார்க்குக்கு வரும் சுமார் 2000 அகதிகளுக்கான முகாம்கள் தயார் டென்மார்க்கை ஆளும் மையவாத வலதுசாரிக் கட்சியான வென்ஸ்ட்ரே கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் அந்த கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். அகதிகளுக்கு எதிராக டென்மார்க் அரசு கொண்டுவரும் கடுமையான விதிகளை எதிர்த்தே அவர் கட்சியில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார். ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருக்கும் ஜென்ஸ் ரோத், டேனிஷ் சோஷியல் லிபரல் கட்சியில் இணையப்போவதாகவும் தெரிவித்துள்ளார். டென்மார்க்கை ஆளும் சிறுபான்மை அரசாங்கம் குடியேறிகள் தொடர்பான கடும்போக்கு நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் மக்கள் கட்சியின் ஆத…

  10. நிர்பயா வழக்கு இளம் குற்றவாளி விடுவிக்கப்பட்டார்! புதுடெல்லி: டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கின் இளம் குற்றவாளி விடுவிக்கப்பட்டார். டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மருத்துவ மாணவி நிர்பயா, தனது ஆண் நண்பருடன் பேருந்து ஒன்றில் சென்றபோது, ஆறு பேர் கொண்ட கும்பலால் தாக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவருடன் வந்த ஆண் நண்பரையும் சரமாரியாகத் தாக்கிய அந்தக் கும்பல் இருவரையும் பின்னர் சாலையோரத்தில் வீசிச் சென்றது. இதில் படுகாயமடைந்த அந்தப் பெண் இரண்டு வாரங்கள் சிகிச்சைக்குப்பின் சிங்கப்பூர் மருத்துவமனையில் டிசம்பர் 16-ம் தேதி உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட டிரைவர் …

  11. ஆண்ட்ராய்டுகளுக்கு இந்திய உணவுப்பொருள்களின் பெயர்: சுந்தர் பிச்சை தகவல்! கூகுளின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை கடந்த புதன்கிழமை இந்தியாவிற்கு வந்தார். கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்ற பின்பு, சுந்தர் பிச்சையின் முதல் இந்தியப்பயணம் இது. கூகுளின் வருங்காலத்திட்டங்கள், இந்திய அரசுடன் இணைந்து செயல்படுதல், இளைஞர் சக்தியை பயன்படுத்துதல் என கூகுளின் பல்வேறு எண்ணங்களை, கோணங்களை வெளிப்படுத்தி விட்டு சென்றுள்ளார். அவரது இந்திய பயணத்தின், சில முக்கிய மணித்துளிகள் இங்கே.. 1. இந்தியாவில் அடுத்த ஆண்டு இறுதிக்குள் 100 ரயில் நிலையங்களில் இலவச அதிவேக வை-பை வசதி ஏற்படுத்தப்படும். வரும் ஜனவரியில் மும்பை ரயில் நிலையத்தில் இந்த திட்ட…

  12. துருக்கியின் இரு தென்கிழக்கு பிரதேசங்களில் உள்ள குர்தீஷ் போராளிகள் மீது துருக்கி படையினர் மேற்கொண்ட தாக்குதல்களின் போது, 69 குர்தீஷ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக துருக்கி அரசு தெரிவித்துள்ளது. கடந்த 4 நாட்களாக நடைபெற்று வரும் இந்த தாக்குதல்களினால் துருக்கியில் உள்ள சிஸ்ரே மற்றும் சிலோபி ஆகிய நகரங்களில் முகாமிட்டிருந்த குர்தீஷ் திவிரவாதிகள் மீது நடந்த தாக்குதல்களால், நகரில் தொடர்ச்சியாக வெடிகுண்டு சத்தங்கள் கேட்டபடியே இருந்தது. இந்நிலையில், இந்த தாக்குதல் குறித்து நேற்று செய்தி வெளியிட்டுள்ள துருக்கி ராணுவ அதிகாரி ஒருவர், கடந்த 4 நாட்களாக நடந்த தாக்குதலில் மொத்தம் 69 குர்தீஷ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும் ராணுவத்தின் தரப்பில் 2 பேர…

  13. ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க கூட்டுப்படைகள் வான்தாக்குதல்கள் நடத்தி வருகின்றன.ஈராக் பாதுகாப்பு படைகளின் தகவலின் பேரில், அமெரிக்க கூட்டுப்படைகள் அங்கு பலுஜா நகர் அருகே ஐ.எஸ். தீவிரவாதிகளை குறிவைத்து வான்தாக்குதல்கள் நடத்தின.ஆனால் இந்த வான்தாக்குதல் ஒன்றில் ஈராக் படை வீரர்கள் சிக்கி பலியாகி விட்டதாக தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “ஈராக்கில் நடத்தப்பட்ட வான் தாக்குதல்களில் படை வீரர்கள் சிக்கி பலியானதாக வெளியாகி உள்ள தகவல்கள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும். உண்மை கண்டறியப்படும். இதற்கு முன்பு கூட்டுப்படைகள் தாக்குதலில் இப்படி ஈராக் படை வீரர்கள் சிக்கி பலியா…

  14. சவுதி அரேபியாயில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 தமிழர்கள் பலி! ராமநாதபுரம்: சவுதி அரேபியாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 தமிழர்கள் பலியாகியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடியைச் சேர்ந்தவர் முகம்மது கில்மி (48), சவுதி அரேபியாவின் எல்லை பகுதியான நஸீரான் என்ற இடத்தில் உள்ள உணவகம் ஒன்றில் கடந்த 10 ஆண்டுகளாக சமையல்காரராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பரக்கத்நிஷா, மகன் வாசிம் அக்ரம், மகள் அம்ஷத்நிஷா ஆகியோர் ஏர்வாடியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சவுதி அரேபியாவின் எல்லை பகுதியான நஸீரான் பகுதியில் ஏமன் நாட்டை சேர்ந்த தீவிரவாத குழுக்கள் நேற்று குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் முகம்மது கில்மி பலியாகியுள்ளார்.…

  15. மலேசியாவில் முஸ்லிம் பயணிகளுக்காக விமான சேவை தொடங்கிய தமிழர்! மலேசியாவின் முஸ்லிம் பயணிகளுக்காகவே தனியாக தமிழர் ஒருவர் விமான நிறுவனத்தை தொடங்கியுள்ளார். ரயானி ஏர் விமான சேவை, ஹிஜாப் அணிந்த பணிப் பெண்களுடன் இன்று கோலாம்பூரில் இருந்து முதல் பயணத்தை தொடங்கியது. மலேசியாவை சேர்ந்த ரவி அழகேந்திரன்,அவரது மனைவி கார்த்தியானி கோவிந்தன் ஆகியோர் இந்த விமான நிறுவனத்தை தோற்றுவித்துள்ளனர். இந்த நிறுவனத்தின் முதல் விமான சேவை இன்று தொடங்கப்பட்டது. கோலாலம்பூரில் இருந்து இன்று காலை 10 மணியளவில் 150 பயணிகளுடன் லங்காவி நகருக் முதல் விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் பணிப் பெண்கள் ஹிஜாப் அணிந்து பணியாற்றுவார்கள். முக்கியமாக ஹலால் வகை உணவுதான் பரிமாறப்படும். மத…

  16. சிரியாவில் ஐஎஸ் தோற்றால் அந்த இடத்தை நிரப்ப வேறு 15 குழுக்கள் தயார்' 'ஆயுதக்குழுக்களை மிதவாதிகள் என்றும் தீவிரவாதிகள் என்றும் வகைப்படுத்துவது தோல்விகரமான முயற்சி' சிரியாவில் இஸ்லாமிய அரசு ஆயுதக்குழுவினர் அமெரிக்கா தலைமையிலான கூட்டுநாடுகளால் தோற்கடிக்கப்பட்டால், அந்தத் தீவிரவாதக்குழுவின் வெற்றிடத்தை நிரப்ப குறைந்தது 15 கிளர்ச்சிக்குழுக்கள் தயாராக உள்ளதாக புதிய ஆய்வொன்று கூறுகின்றது. பிரிட்டனின் முன்னாள் டோனி பிளேயருடன் தொடர்புபடுத்தப்படுகின்ற நிறுவனமான மத மற்றும் புவிசார் அரசியல்கள் தொடர்பான நிலையத்தின் ஆய்வறிக்கையிலேயே இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. சிரியாவில் உள்ள ஆயுதக்குழுக்களை மிதவாதிகள் என்றும் தீவிரவாதிகள் என்றும் வகைப்படுத்துவது தோல்விகரமான …

  17. அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்படுவதாக வாடிகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அன்னை தெரசா, மேற்கு வங்காளத்தை சேர்ந்த மோனிகா பெஸ்ரா என்ற பெண்ணின் வயிற்று புற்றுநோயை 2002–ம் ஆண்டு குணப்படுத்தி அற்புதம் செய்தார். இதற்காக அவருக்கு 2003–ம் ஆண்டு, போப் ஆண்டவர் இரண்டாம் ஜான் பால் முக்திப்பேறு வழங்கினார். முக்திப்பேறுக்கு அடுத்த நிலை, புனிதர் பட்டம். புனிதர் பட்டம் பெற வேண்டுமானால் இரண்டாவது அற்புதம் நிகழ வேண்டும். இந்த நிலையில், பிரேசிலை சேர்ந்த ஒரு ஆண் மூளை கட்டிகளால் அவதியுற்றபோது, அவரது உறவினர்கள் அன்னை தெரசாவை பிரார்த்தித்தனர். அதில் அவர் அற்புதமாக குணம் அடைந்தார். இதை போப் ஆண்டவர் பிரான்சிஸ…

    • 1 reply
    • 688 views
  18. உலக அழகி 2015 போட்டியில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த மிரியா உலக அழகியாக தெரிவு சீனாவில் நடைபெற்ற உலக அழகி 2015 போட்டியில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த மிரியா லாலகுனா ரொயா என்பவர் உலக அழகியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். சீனாவில் சான்யா நகரில் உள்ள பியூட்டி ஓப் கிராவுன் அரங்கத்தில் 65வது உலக அழகி போட்டி நடைபெற்றது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 114 அழகிகள் இந்த விழாவில் கலந்துகொண்டனர். இதனால் நகரம் முழுவதுமே விழா கோலம் பூண்டது. இந்நிலையில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த மிரியா லாலகுனா ரொயா( Mireia Lalaguna Rozo) என்பவர் 2015 ஆம் ஆண்டின் உலக அழகியாக தெரிவு செய்யப்பட்டார். அவருக்கு …

  19. படகு மூழ்கி 18 அகதிகள் பலி துருக்கி கடல் பகுதியில் அகதிகள் பயணம் செய்த படகு மூழ்கியதில் 18 பேர் உயிரிழந்தனர். 14 பேர் உயிருடன் காப்பாற்றப்பட்டனர். உள்நாட்டுப் போர் தீவிர மடைந்துள்ள சிரியா, இராக், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடு களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் தேடி செல் கின்றனர். ஆபத்தான கடல் பயணம் மூலம் துருக்கி மற்றும் கீரிஸ் நாடுகளின் தீவுப் பகுதி களில் அவர்கள் கரையேறி வருகின்றனர். சிரியா, இராக்கை சேர்ந்த அகதிகள் கிரீஸ் நாட்டுக்கு மரப்படகில் பயணம் செய்தனர். அவர்கள் சென்ற படகு நேற்றுமுன்தினம் துருக்கி கடல் பகுதிக்கு வந்த போது தண்ணீரில் மூழ்கியது. துருக்கி கடலோர காவல் படையினர் 14 பேரை காப்பாற்றினர். 18 பேர் …

  20. சிரியாவிற்கான ஐநாவின் திட்டம் ஒரு மைல்கல்' பொதுமக்கள் மீதான தாக்குதல்களை நிறுத்திக் கொள்ளுமாறு ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரியாவில் மோதலை முடிவிற்கு கொண்டுவரும் முயற்சிகளில், சிரியாவிற்கான ஐநாவின் திட்டம் `ஒரு மைல்கல்' என, அமெரிக்காவின் வெளியுறவுச் செயலர் ஜோன் கெர்ரி தெரிவித்துள்ளார். இந்தத் திட்டம், யுத்தம் மற்றும் சமாதானம் ஆகியவற்றுக்கிடையே ஒரு உண்மையான தெரிவை சிரியர்களுக்கு கொடுத்துள்ளதாக, அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஆறு மாதங்களுள், முறையான பேச்சுக்களை நடத்துவது மற்றும் ஒற்றுமை அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்துவது ஆகியவற்றுக்கு ஒரு நேர அட்டவணையை முன்மொழிந்த குறித்த திட்டத்தை, ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.…

  21. சுவிட்ஸர்லாந்து முஸ்லிம் தலைவர் மீதான வழக்கு ஆரம்பம் சுவிட்ஸர்லாந்தின் முக்கிய முஸ்லிம் தலைவர் மீதான வழக்கு நடவடிக்கைகளை சுவிஸ் அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர் சுவிட்ஸர்லாந்து இஸ்லாமிய மத்திய கவுன்சிலின் முன்னணி உறுப்பினர் ஒருவருக்கு எதிராக பயங்கரவாதத்தில் ஈடுப்பட்டதான குற்றச்சாட்டுகள் தொடர்பிலான வழக்கு நடவடிக்கைகளை சுவிஸ் அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். அல்கைதா மற்றும் இஸ்லாமிய அரசு போன்ற தீவிரவாத குழுக்களை தடைச்செய்யும் சுவிஸ் சட்டத்தை இந்த ஜெர்மனிய பிரஜை மீறியதாக சந்தேக்கிக்கப்படுகிறது. சிரியாவின் சண்டை பிரதேசங்களுக்கு தான் மேற்கொண்ட பயணத்தின் காணொளிகளை தனது பிரச்சாரத்திற்கு இவர் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. ஒரு பயங்கரவாத தாக்குதலுக்கான ஏற்பாடு…

  22. வளர்ந்து வரும் நிதிச்சந்தைகளின் அடிப்படையில் விரைவில் அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ் நாடுகளை போல சர்வதேச நிதியத்தின் டாப்-10 உறுப்பினர்களில் ஒன்றாக இந்தியா இடம் பிடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, டாப்-10 பட்டியலில் 4 முக்கிய வளர்ந்து வரும் பொருளாதார நாடாக பிரேசில், சீனா, இந்தியா மற்றும் ரஷியா நாடுகளும், அதுதவிர அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளும், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து என பெரிய ஐரோப்பிய நாடுகளும் இடம் பெறுகின்றன. http://www.dailythanthi.com/News/World/2015/12/19002742/India-to-join-US-Japan-as-top-largest-10-members-of.vpf

  23. அம்பலப்படுத்திய போட்டோகிராபர் : உலகின் இன்னொரு ஈழமாக மாறி வரும் சிரியா! ஒருவழியாக ஓட்டம் பிடித்து, சிரியாவை விட்டு சீசர் வெளியேறியபோது 2013- ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஓடிக் கொண்டிருந்தது . மற்ற அகதிகளெல்லாம் தாங்கள் சந்தித்த அவலங்களை வேதனைகளுடன் பகிர்ந்து கொண்டிருந்தபோது, சீசர் மட்டும் தனது அனுபவங்களை புகைப்படங்களாக எடுத்து வந்திருந்தார். ஒன்றல்ல, இரண்டல்ல, சரியாகச் சொன்னால் 53 ஆயிரத்து 275 போட்டோக்கள் சீசருடன் இருந்தது. கடந்த 2011-ம் ஆண்டில் ஏற்பட்ட உள்நாட்டுக் கலவரத்தின்போது சிரிய அரசாங்கத்திற்கு, தடவியல் போட்டோகிராபராக பணியாற்றி வந்தவர்தான் இந்த சீசர். போர்க்காலங்களில் ஏற்பட்ட சேதங்களையும், உயிரிழப்புகளையும் படமெடுத்து ஆவணப்படுத்துவதுதான் இவரது முக்க…

  24. நேஷனல் ஹெரால்டு வழக்கு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மத்திய அரசை தாக்கிப் பேசி வரும் காங்கிரஸ் கட்சி, சுப்ரமணிய சுவாமி, பிரதமர் மோடியின் முகமூடி என்று கருத்துத் தெரிவித்துள்ளது.நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜுன கார்கே, ஆனந்த் ஷர்மா உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், மத்திய அரசு பழிவாங்கும் அரசியலை நடத்துகிறது. நேஷனல் ஹெரால்டு வழக்கைத் தொடர்ந்த சுப்ரமணியன் சுவாமி, மோடியின் முகமூடியாகச் செயல்படுகிறார் என்று கூறியிருந்தனர். மோடியின் இதுபோன்ற நடவடிக்கைகளால் காங்க…

  25. நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுலுக்கு நீதிமன்றம் ஜாமீன்! புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் சோனியா காந்தி மற்றும் அவரது மகன் ராகுல் காந்தி ஆகியோர் சற்று முன் ஆஜராகினர். இருவருக்கும் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி டெல்லி நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், ''நேஷனல் ஹெரால்டு நிறுவனத்துக்கு ரூ.90 கோடி கடன் இருந்தது. இந்த தொகையை காங்கிரஸ் கட்சியின் பணத்தில் இருந்து வட்டியின்றி கொடுத்து, விதிமுறைகளை மீறி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணைத் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் அடைத்தனர். அதற்கு பதிலாக நேஷனல் ஹெரால்டு நிறுவனத்துக்கு சொந்தம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.