உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26693 topics in this forum
-
பனிக்கட்டியாக மாறிய சீனாவின் மஞ்சள் ஆறு: கப்பல் போக்குவரத்து பாதிப்பு! பெய்ஜிங்: சீனாவின் மிகப்பெரிய நதியான மஞ்சள் ஆறு பருவநிலை மாற்றத்தால் பனிக் கட்டியாக உறைந்து வருவதால் கப்பல் போக்குவரத்துக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் இரண்டாவது மிகப்பெரிய நதி, மத்திய சீனாவில் உள்ள மஞ்சள் ஆறு. இதன் இன்னொரு பெயர் சீனாவின் துயரம் என்பதாகும். இதற்கு ஏற்றவாறு இந்த நதி இப்போது பருவநிலை மாற்றத்தில் பெரும் சிக்கலில் சிக்கியுள்ளது. மஞ்சள் ஆறு பாயும் பகுதிகளில் கடும் குளிர் பொழிந்து வருவதால், நதியின் மேற்பகுதியில் முழுவதுமாக பனிக் கட்டிகள், பாளம் பாளமாக மிதந்து செல்கின்றன. இதனால் கப்பல் போக்குவரத்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பனிக் கட்டிகள் 4 கிலோ…
-
- 0 replies
- 838 views
-
-
கடாபியின் மகன் ஹன்னிபல் லெபனானில் கடத்தப்பட்டு விடுதலை லெபனானில் ஆயுதக்குழுவொன்றினால் கடத்தப்பட்டிருந்த முன்னாள் லிபியத் தலைவர் முகம்மது கடாபியின் மகன் விடுவிக்கப்பட்டிருந்தார். இவரைக் கடத்திய குழு, லிபியாவில் பத்தாண்டுகளுக்கு முன் காணாமல் போன ஷியா மதகுருவின் தகவல்களைக் கோரியிருந்தது. நேற்று, உள்ளூர் அல்-ஜடீட் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காணொளி ஒன்றில் தோன்றிய ஹன்னிபல் கடாபி, மதகுரு மௌசா அல்-சதார் பற்றிய தகவல்களை வைத்திருப்பவர்களை முன்வருமாறு கோரியிருந்தார். நான் தேவையானவர்கள் என நினைக்கும் மக்கள் கேட்பார்கள் என நம்புவதாகவும் அவர்கள் ஆதாரங்களை வைத்திருப்பதாகவும் அவற்றை தாமதமில்லாமல் உடனடியாக வெளிக்கொணருமாறும் இந்த வேதனை …
-
- 0 replies
- 672 views
-
-
காபூலின் இராஜதந்திர பகுதியில் தலிபான்கள் தாக்குதல் ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலின் இராஜதந்திரிகளின் பிரதேசத்தை குண்டு வெடிப்பு ஒன்று தாக்கியுள்ளது. ஆரம்பக்கட்ட பொலிஸ் தகவல்களின் படி, குறைந்தது மூன்று தாக்குதலாளிகள், தாக்குதலில் பங்கேற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இராஜதந்திரிகளின் அலுவலகங்கள், அரச சார்பற்ற நிறுவன அலுவலகங்கள், அரசாங்க விருந்தினர் வீடுகள் என்பன அமைந்துள்ள, ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஷிர்பூர் பகுதியில் கார்க் குண்டு வெடித்ததாக ஆப்கானிஸ்தான் உள் விவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு அருகிலிலுள்ள வைத்தியசாலையில் ஏழு பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதும், எத்தனை பேர் கொ…
-
- 0 replies
- 507 views
-
-
ஐ.எஸ். இயக்கத்தில் இணைய சென்று, திருப்பி அனுப்பப்பட்ட சென்னை வாலிபர் கைது! ஐ. எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் இணைய சென்று, லிபியாவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட சென்னை வாலிபர் நேற்று டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். சென்னையை சேர்ந்த முகமது நஷீர் பக்கீர் முகமது என்ற வாலிபர் கம்ப்யூட்டர் என்ஜீனியர் ஆவார். கடந்த மே மாதம் இவர் துபாய் சென்றுள்ளார். ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆள் சேர்க்கும் 'மேட் முல்லா' என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அவர் வழியாக முகமது பஷீர், ஐ.எஸ் இயக்கத்தில் இணைவதற்காக சூடான் வழியாக லபியா செல்ல முயற்சித்துள்ளார். இது குறித்து தேசிய புலனாய்வு அமைப்பின் தலைவர் சரத்குமார் கூறுகையில், '' நஷீரின் தந்தை துபாயில் ஒரு கார் நிற…
-
- 0 replies
- 678 views
-
-
புகையிரதத்தில் திடீர் தீ ; 700 பயணிகள் பாதுகாப்பாக காப்பாற்றப்பட்டனர் [ Saturday,12 December 2015, 04:12:47 ] லண்டன் மெரில்போனில் புகையிரதத்தில் திடீரென தீ ஏற்பட்டதை தொடர்ந்து அதில் பயணித்த 700 பயணிகள் பாதுகாப்பாக காப்பாற்றப்பட்டுள்ளனர். காற்றுச் சீரமைப்பு அலகில் ஏற்பட்ட கோளாறே இந்த தீ விபத்திற்கான காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. சம்பவத்தில் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்பவில்லை என்று தெரிவித்துள்ள அதிகாரிகள், இது தொடர்பிலான விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர். இந்த சம்பவத்தின்போது குறித்த புகையிரதத்திலிருந்து புகை வெளியேறியதாக தெரிவித்துள்ள சில்டர்ன் புகையிரத நிலைய அதிகாரிகள், அந்த நிலையத்திலிருந்தான அனைத்து பயணங்களையும் தற்கால…
-
- 0 replies
- 521 views
-
-
சவூதியில் முதன்முறையாக தேர்தலில் வாக்களிக்கவுள்ள பெண்கள் [ Saturday,12 December 2015, 03:41:00 ] சவூதி அரேபியாவில் நடைபெறுகினற் வரலாற்று சிறப்புமிக்க தேர்தலில் அந்நாட்டுப் பெண்கள் முதன் முதலாக வாக்களிக்கவுள்ளனர். சவூதியில் இன்று சனிக்கிழமை உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படவுள்ளது. வாகனம் செலுத்துவது உள்ளிட்ட பல விடயங்களில் பெண்களுக்கு முதலிடத்தை வழங்க மறுத்துவருகின்ற சவூதி அரசாங்கம், இம்முறை தேர்தலில் வாக்களிப்பதற்கான மற்றும் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்கமைய இன்று நடைபெறுகின்ற உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் மொத்தம் 978 பெண்கள் போட்டியிடுகின்…
-
- 0 replies
- 559 views
-
-
கோலாலம்பூர்: 'உரிமையாளர் தெரியாத' விமானங்கள், உரிமை கோரும் நிறுவனம் ஸ்விஃப்ட் ஏர் கார்கோ நிறுவனம் இந்த விமானங்கள் வாங்கப்பட்டதற்கான ஆதாரமாக விற்பனை ரசீதை பிபிசியிடம் கொடுத்துள்ளது மலேஷியத் தலைநகர் கோலாலம்பூரின் விமான நிலையத்தில், உரிமை கோரப்படாத நிலையில் இருந்துவந்த மூன்று போயிங்-747 விமானங்களும் தமக்கே சொந்தமானவை என மலேஷிய சரக்கு விமான நிறுவனம் ஒன்று கூறியுள்ளது ஸ்விஃப்ட் ஏர் கார்கோ என்ற அந்த நிறுவனம், அந்த விமானங்களை மலேஷிய விமான நிலையத்திடமிருந்து திரும்பப்பெற முயன்றுவரும் நிலையில், விமானங்கள் பதிவு செய்யப்பட்டதில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளது இந்த விமானங்களின் உரிமையாளர்களை கண்டுபிடிக்க மலேஷிய விமானநிலைய அலுவலகம் பத்திரிகையில் விளம…
-
- 0 replies
- 662 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - பாரிஸ் காலநிலை மாநாட்டில் ஒப்பந்தம் வருமா வராதா உடன்பாட்டுக் காலக்கெடு சனிக்கிழமை வரை நீட்டிப்பு! - பாரிஸ் தாக்குதல்களைத் தொடர்ந்து பிரான்சில் அதிகரிக்கும் அதிரடி சோதனைகள் - கைது நடவடிக்கைகள்! மதத்தின் அடிப்படையில் தாம் இலக்குவைக்கப்படுவதாக முஸ்லிம்கள் அச்சம்! - நீண்ட மகிழ்ச்சியான திருமண வாழ்வின் ரகசியம் என்ன? இல்லற வாழ்வில் 90 ஆண்டுகளை கடந்துள்ள ஜோடியைக் கேட்கலாம்!
-
- 0 replies
- 656 views
-
-
முஸ்லிம்களை வரவேற்கும் பெருவாரியான அமெரிக்கர்கள்: ஊடக ஆய்வில் தகவல் ட்ரம்ப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக போராட்டத்தில் ஈடுபட்ட ஜனநாயகக் கட்சி ஆதரவாளர்கள். |படம்:ஏஎப்பி. குடியரசுக் கட்சி வேட்பாளர் டிரம்ப்பின் முஸ்லிம் எதிர்ப்பு பேச்சை நிராகரிக்கும் வகையில் சுமார் 57 சதவீத அமெரிக்கர்கள் தங்களது நாட்டினுள் முஸ்லிம் குடியேறிகளை அனுமதிக்க விரும்புவதாக கருத்துக்கணிப்பு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது. என்பிசி மற்றும் தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நடத்திய கருத்துக்கணிப்பின் முடிவில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்கர்களில் 25 சதவீதத்தினர் முஸ்லிம் குடியேறிகளை அனுமதிக்க தடை விதிக்கலாம் என்றும் 18 சதவீதத்தினர் இத…
-
- 0 replies
- 478 views
-
-
ஐ.எஸ்.ஐ.எஸ்.-க்கு எதிரான ஆன்லைன் யுத்தம்! உலகையே அச்சுறுத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்திற்கு எதிரான ஆன்லைன் யுத்தத்திற்கு தேதி குறித்திருக்கிறது பிரபல ஹேக்கிங் இணையதளமான ‘அனானிமஸ்’ (Anonymous). ஏற்கனவே ஐ.எஸ். அமைப்பின் பல்வேறு உறுப்பினர்களுடைய ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் பிற இணையதள பக்கங்களை உலகிற்கு வெளிச்சமிட்டு காட்டியதோடு மட்டும் இல்லாமல் அவற்றை ஹேக் செய்திருக்கும் இந்த ‘அனானிமஸ்’ இப்பொழுது அறிவித்திருப்பது ஐ.எஸ். அமைப்பினருக்கு எதிரான “உலகின் உச்சக்கட்ட கோப வெளிப்பாட்டு நாள்” (#OpDayofRage). இதற்காக வரும் டிசம்பர் 11-ம் தேதியைக் (இன்று) குறித்து வைத்திருக்கும் இவர்கள், அந்த நாளில் உலக நெட்டிசன்கள் அனைவரும், ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர…
-
- 0 replies
- 708 views
-
-
'ஹைட்ரஜன் குண்டு வெடிக்க தயாராக உள்ளது' - வட கொரிய அதிபர் பேச்சால் அதிர்ச்சி கிம் ஜோங் உன் தங்களது நாட்டின் இறையாண்மையை தக்கவைத்துக்கொள்ள அணுகுண்டுகளும் ஹைட்ரஜன் குண்டுகளும் வெடிக்க தயார் நிலையில் உள்ளதாக வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் கூறினார். அணுகுண்டுகளை அவ்வப்போது சோதித்து வரும் வட கொரியாவின் முக்கிய வரலாற்று சிறப்பு மிக்க ராணுவத் தளத்தை அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் ரகசியமாக பார்வையிட்டார். அப்போது அங்கு ராணுவத்தினர் இடையே பேசிய கிம் ஜாங் உன், "வடகொரியா ஏற்கெனவே வலிமை வாய்ந்த அணு ஆயுத நாடு. வடகொரியா தனது இறையாண்மையை மேலும் காத்துக்கொள்ள அணுகுண்டுகளும் ஹைட்ரஜன் குண்டுகளும் வெடிக்க வைக்க தயார் நிலையில் உள்ளது…
-
- 1 reply
- 635 views
-
-
வட சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிராக போராடிவரும் குர்டிஷ் இன போராளிகளின் தகவலின்படி ஐ.எஸ்.ஐ.எஸ் உறுப்பினர்களுக்கு பெண்கள் மிகவும் பயமாம்.வட சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை ஓட ஓட விரட்டிவரும் குர்டிஷ் மக்கள் பாதுகாப்பு படையின் பெண்கள் பிரிவில் சுமார் 10,000 தொண்டர் போராளிகள் இருக்கின்றனர். வட சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் பிடியில் இருந்து பல இடங்களையும் விடுவிப்பதில் இவர்களின் பங்கு கணிசமாக இருந்துள்ளது.இந்த படைப்பிரிவில் உள்ள 21 வயது டேல்ஹேல்தேன் என்ற பெண் போராளி சி. என். என் ஊடகத்துக்கு வழங்கிய தகவலின் படி ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் தாங்கள் இஸ்லாத்தின் பெயரில் சண்டையிடுவதாக நம்புகின்றனர். ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் எவராவது குர்டிஷ் இன பெண்களால் கொல்லப்பட்டால் சொர்க்கத்த…
-
- 0 replies
- 578 views
-
-
2050-ம் ஆண்டிற்குள் உலக அளவில் அதிக முஸ்லீம்கள் கொண்ட நாடாக இந்தியா மாறும் என்று ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பியு ஆராய்ச்சி மையம் இந்த கருத்தினை தெரிவித்துள்ளது. அதேபோல், 2050-ம் ஆண்டிற்குள் ஐரோப்பிய மக்கள் தொகையில் முஸ்லீம்கள் 10 சதவீதம் இருப்பார்கள் என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. தற்போதையை நிலவரப்படி உலக அளவில் அதிக முஸ்லீம்கள் வாழும் நாடாக இந்தோனேசியா உள்ளது. அதற்கு அடுத்தபடியாக முஸ்லீம்கள் அதிகம் வாழும் இரண்டாவது நாடாக இந்தியா உள்ளது. தற்போது 62 சதவீதம் முஸ்லீம்கள் ஆசிய-பசுபிக் பகுதிகளில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஈரான், துருக்கி உள்ளிட்ட நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.இதில் பாகிஸ்தானைவிட இந்தியாவில் தான் …
-
- 0 replies
- 658 views
-
-
தமிழகத்தில் இருந்து சில தினங்களுக்கு முன்பு கடத்தப்பட்ட ருவாண்டை சேர்ந்த 21 வயது இளம் பெண்ணை, டெல்லி போலீசார் கொல்கத்தாவில் மீட்டுள்ளனர்.தமிழகத்தில் இருந்து ருவாண்டாவை சேர்ந்த மேரி கிரேஸ் என்ற பெண் ஒருவர் 3 நாட்களுக்கு முன்பு கடத்தப்பட்டார். கடத்தப்பட்ட அந்த பெண் விடுதலை செய்யப்பட வேண்டுமென்றால் 3 ஆயிரம் டாலர் பிணைத் தொகை வேண்டும் என்று கடத்தலில் ஈடுபட்டதாக கூறப்படும் நைஜீரிய நாட்டை சேர்ந்த 3 பேர் தெரிவித்துள்ளனர். இது குறித்து அந்த ருவாண்டா பெண் அமெரிக்காவில் வசிக்கும் தன்னுடைய வருங்கால கணவரிடம் உதவியை நாடியுள்ளார். பெண்ணின் வருங்கால கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் ருவாண்டா போலீசார் வழக்குப் பதிவு செய்து அது டெல்லி போலீசாருக்கும் அது குறித்த தகவல் அளிக்கப்பட்டது. …
-
- 0 replies
- 562 views
-
-
சீனாவின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரைக் 'காணவில்லை' குவோ குவாங்சாங் சீனாவின் 'வாரன் பஃபட்' என்று அறியப்பட்டவர் சீனாவின் பெரும் செல்வந்தர்களில் ஒருவர் காணாமல்போயுள்ளதாக கூறப்படுகின்றது. அவர் காவல்துறையினரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக ஊகங்களும் பரவிவருகின்றன. முதலீட்டுத் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டவரான குவோ குவாங்சாங் சீனாவின் 'வாரன் பஃபட்' என்று அறியப்பட்டவர். நேற்று வியாழக்கிழமை மாலையிலிருந்து அவரைத் தொடர்புகொள்ள முடியாமல் இருப்பதாக அவரது ஃபோஸுன் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் பணியாளர்கள் சீன சஞ்சிகை ஒன்றுக்கு தெரிவித்துள்ளனர். தங்கள் நிறுவனத்தின் பங்குகளின் விற்பனையை இடைநிறுத்தி வைத்திருக்குமாறு ஹாங் காங் பங்குபரிவர…
-
- 1 reply
- 531 views
-
-
யேமன் பள்ளிக்கூடங்களை தெரிந்தே தாக்குகிறது சௌதி: அம்னெஸ்டி குற்றச்சாட்டு சௌதி அரேபியாவும் அதன் கூட்டணியும் யேமனில் வேண்டுமென்றே பள்ளிக்கூடங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச மனித உரிமை பிரச்சார அமைப்பான அம்னெஸ்டி இண்டர்நேஷனல் குற்றஞ்சாட்டியுள்ளது. சௌதி தலைமையிலான கூட்டணி யேமனில் கடந்த மார்ச்சில் விமானத் தாக்குதல்களை ஆரம்பித்தது முதல் அந்நாட்டில் ஆயிரத்துக்கும் அதிகமான பள்ளிகூடங்கள் இயங்கவில்லை என்றும், அவற்றில் கால்வாசி அளவானவை முற்றிலுமாக அழிந்துபோயுள்ளன என்றும் அவ்வமைப்பு கூறுகிறது. சௌதி அரேபியா யேமனில் சர்வதேச விதி மீறல்களைச் செய்யப்பயன்படுத்துவதால், அந்நாட்டுக்கு ஆயுதங்கள் விற்பதை அமெரிக்காவும் பிரிட்டனும் நிறுத்த வேண்டும் என அம்னெஸ…
-
- 0 replies
- 490 views
-
-
பாகிஸ்தான்: மும்பையை இலக்கு வைக்கும் அணுஆயுத ஏவுகணை சோதனை வெற்றி! சுமார் 2 ஆயிரத்து 750 கிலோ மீட்டர் தொலைவுக்கு அணுஆயுதங்களை தாங்கி சென்று தாக்கும் ஷாகீன்-3 ரக ஏவுகணையை பாகிஸ்தான் இன்று வெற்றிகரமாக பரிசோதித்து பார்த்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டால் மும்பை வரை தாக்கப்படும் அபாயமிருக்கிறது. ஆனால் இந்த ஏவுகணை எந்த இடத்தில் பரிசோதித்து பார்க்கப்பட்டது என்ற விபரங்களை பாகிஸ்தான் ராணுவம் அறிவிக்கவில்லை. தரையில் இருந்து ஏவப்படும் ஷாகீன் 3 ரக ஏவுகணை இதுவாகும். ஷாகீன் 3 ரக ஏவுகணை திட்டத்தின் இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் மசார் ஜமில் இது குறித்து கூறுகையில், '' பாகிஸ்தான் ராணுவத்தின் பலத்தை உலகுக்கு பறைசாற்றும் விதத்தில், இந்த ஏவுகண…
-
- 1 reply
- 661 views
-
-
பாரீஸ் தீவிரவாத தாக்குதல் எதிரொலி: ஐரோப்பாவில் பரிதவிக்கும் அகதிகள் ஹங்கேரியின் பிஸ்கி நகர் ரயில் நிலையத்தில் ஜெர்மனி செல்ல ரயிலுக்காக காத்திருந்த குடும்பத்தினரை விரட்டிப் பிடித்த போலீஸார். படம்: ராய்ட்டர்ஸ் பாரீஸ் தீவிரவாத தாக்குதல் சம்பவத்தின் எதிரொலியாக அகதிகள் விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் கடுமையான போக்கை கடைப்பிடிக்கின்றன. இதனால் ஆயிரக்கணக்கான அகதிகள் குளிர், மழையில் பரிதவித்து வருகின்றனர். கடந்த நவம்பர் 13-ம் தேதி பாரீஸில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தி 132 பேரை கொலை செய்தனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அகதிகள் போர்வையில் பாரீஸுக் குள் ஊடுருவி இருப்பது தெரிய வந்தது. இதனால் அகதிகள் விவகாரத்தில் ஐ…
-
- 1 reply
- 494 views
-
-
2015- ல் ஒபாமாவை மிகவும் கவர்ந்த பாடல் அமெரிக்க அதிபர் ஒபாமா, 2015-ம் ஆண்டில் தனக்கு மிகவும் பிடித்த பாடல், நூல், திரைப்படம் பற்றி தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் வெளிவந்த பீப்பிள் இதழில் ஒபாமாவின் பேட்டி வெளியாகியுள்ளது. இதில், ராப் பாடகர் கென்ட்ரிக் லாமர் பாடிய ‘ஹவ் மச் எ டாலர் காஸ்ட்’ என்ற பாடலை இந்த ஆண்டில் தனக்கு மிகவும் பிடித்த பாடலாக ஒபாமா கூறியுள்ளார். திருமணம் பற்றி லாரன் கிராஃப் எழுதிய ‘Fates and Furies’ நாவலை தனக்கு மிகவும் பிடித்த நாவலாகவும் மேட் டேமன் நடித்த ‘தி மார்ஷியன்’ திரைப்படத்தை தனக்கு மிகவும் பிடித்த படமாகவும் ஒபாமா கூறியுள்ளார். இதுபோல் மிஷேல் ஒபாமாவும் தனது விருப…
-
- 0 replies
- 776 views
-
-
டைம் இதழின் 2015 ஆம் ஆண்டின் சிறந்த மனிதராக ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் தேர்வு ! நியூயார்க்: அமெரிக்காவில் இருந்து வெளியாகும் டைம் இதழின் 2015 ஆம் ஆண்டின் சிறந்த மனிதராக ஜெர்மனியின் அதிபர் ஏஞ்சலா மெர்கல் தேர்வு செய்யப்பட்டுள்ளார் அமெரிக்காவிலிருந்து வெளியாகும் டைம் இதழ் ஆண்டுதோறும் உலகில் சிறந்த மனிதரை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டின் சிறந்த மனிதராக ஜெர்மனியின் அதிபர் ஏஞ்சலா மெர்கலை டைம் இதழின் ஆசிரியர் குழு தேர்வு செய்துள்ளது. ஐரோப்பிய கண்டத்தில் நிலவி வரும் பொருளாதார வீழ்ச்சி மற்றும் சிரியாவில் இருந்து வெளியேறும் அகதிகளை தங்கள் நாட்டுக்குள் அனுமதித்தல் உள்ளிட்ட பிரச்சினையில் சிறப்பாக செயல்பட்ட மெர்கலின் த…
-
- 3 replies
- 1.1k views
-
-
ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் முக்கிய தூண்களில் ஒருவர் பலி ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் முக்கிய நபர்களில் ஒருவரான அபு சாலே, கூட்டுப்படைகளின் வான்படைத்தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவ்வியக்கத்தின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவராக கருதப்படும் அவர் நிதிப்பிரிவின் தலைவர் என தெரிவிக்கப்படுகின்றது. வெள்ளை மாளிகை அதிகாரியொருவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். அவர் மற்றுமின்றி மேலும் இரண்டு முக்கியஸ்தர்களும் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் இன் நிதிக்கட்டமைப்பை அழிக்கும் நோக்குடன் தற்போது தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது…
-
- 0 replies
- 627 views
-
-
சிரியாவில் வான் தாக்குதல்கள் மூலம் ரஷ்யா இனத்துடைப்பு நடவடிக்கையில் ஈடுபடுகிறது ரஷ்யாவானது வட சிரியாவில் தனது வான் தாக்குதல்கள் மூலம் இனத்துடைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக துருக்கிய பிரதமர் அஹ்மெட் டவுடோக்லு குற்றஞ்சாட்டியுள்ளார். லதாகியா பிராந்தியத்தைச் சூழ்ந்துள்ள பிரதேசங்களில் வசிக்கும் துருக்கிய இனத்தவர்களையும் சன்னி சமூகத்தினரையும் இலக்கு வைத்தே ரஷ்யா தாக்குதல்களை நடத்துவதாக அவர் கூறினார். ரஷ்யாவானது சிரியாவிலான தனது தாக்குதல்கள் ஐ.எஸ். தீவிரவாதிகளை இலக்காகக் கொண்டுள்ளன என வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் டவுடோக்லு விபரிக்கையில், சிரியாவில் ரஷ…
-
- 0 replies
- 481 views
-
-
கொல்கத்தா பாலியல் வல்லுறவு சம்பவத்தில் மூவர் குற்றவாளிகள்: நீதிமன்றம் தீர்ப்பு பலரால் பாலியல் வல்லுறவுக்குள்ளாகிய ஒரு கல்கத்தா பெண், தனது பெயர் மற்றும் விவரங்களை வெளியிட அனுமதித்த ஒரு முன்னோடி வழக்கில், மூன்று பேர் குற்றவாளிகள் என்று கொல்கத்தா நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. பாலியல் வல்லுறவுக்காளான சூஸெத் ஜோர்டன் இது போன்ற பாலியல் வல்லுறவு சம்பவங்களில் பாதிக்கப்பட்ட பெண்கள் வெளியே வந்து பேசவேண்டும் என்று ஊக்கமளிக்கும் வகையில் தனது பெயரை வெளியிட , இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண், சூஸெத் ஜோர்டான் அனுமதித்ததை அடுத்து இந்த வழக்கு விவரங்கள் வெளிவந்தன. 2012ம் ஆண்டில், சூஸெத் ஜோர்டான் என்ற இந்த, இரு பெண்குழந்தைகளின் தாய், ஒரு இரவு விடுதியில் இ…
-
- 0 replies
- 582 views
-
-
சீனாவில் கடைப்பிடிக்கப்படும் சித்ரவதைகளுக்கு ஐநா குழு கண்டனம் சீன சிறைகளில் கடைப்பிடிக்கப்பட்டுவரும் சித்திரவதை முறைகள் கைவிடப்பட வேண்டும் என்று ஐநாவின் சித்திரவதை கண்காணிப்புக் குழு வலியுறுத்தியுள்ளது சீனாவின் சிறைகளில் பரவலாகக் கடைப்பிடிக்கப்பட்டுவரும் சித்ரவதை முறைகளும், வழக்கறிஞர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கு எதிரான பரந்துபட்ட நடவடிக்கைகளும் கைவிடப்பட வேண்டும் என்று ஐநாவின் சித்ரவதை கண்காணிப்புக் குழு வலியுறுத்தியுள்ளது. சீனா தனது ரகசிய சிறைகளை மூட வேண்டும் என்றும் அந்தக் குழு கோரியுள்ளது. காவலில் வைக்கப்பட்டவர்களின் இறப்புகள் தொடர்பிலும் இந்த குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒரு பெரிய சீனப் பிரதிநிதிகள் குழு ஒன்றிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள…
-
- 0 replies
- 553 views
-
-
ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் | படம்: ஏஎப்பி மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் முஸ்லிம் குடியேற்றத்துக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும் என்று குடியரசு கட்சியின் மூத்த தலைவரும் அதிபர் தேர்தல் வேட்பாளருமான டோனால்டு டிரம்ப் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் ஃபேஸ்புக் நிறுவனர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறும்போது, "முஸ்லிம்களுக்கு ஆதரவான எனது நிலைப…
-
- 0 replies
- 632 views
-