உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26703 topics in this forum
-
தேசிய பாதுகாப்புக்கும் பொதுமக்கள் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகக் கூறி மாலத்தீவுகள் அரசாங்கம் ஒரு மாதகால அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளது. மாலத்தீவுகளில் அவசரநிலை பிரகடனம் அரசாங்கத்துக்கு எதிரான பெரும் ஊர்வலம் ஒன்றை எதிர்க்கட்சி நடத்த திட்டமிட்டிருந்த தினத்துக்கு இரு நாட்களுக்கு முன்னதாக இந்த அவசரநிலை வந்துள்ளது. சுடுகலன்களும் வெடிபொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், பயங்கர ஆயுதங்களை பயன்படுத்துவதற்கான சதி குறித்தும் தெரியவந்துள்ளதாகவும் சட்டமா அதிபர் கூறியுள்ளார். அதிபர் மாளிகைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த ஒரு குண்டை தாம் திங்களன்று வெற்றிகரமாக செயலிழக்கச் செய்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். அரசியலமைப்பின்படி ஒரு அவசரநிலைப் பிரகடனம், சில அடிப்படை உரிம…
-
- 1 reply
- 432 views
-
-
அமெரிக்காவில் சமீபத்திய கணக்கெடுப்பின்படி, அந்நாட்டில் அதிக எண்ணிக்கையிலான மக்களால் பேசும் இந்திய மொழியாக இந்தி திகழ்கிறது. சுமார் 6.5 லட்சம் பேர் இந்தி பேசுகின்றனர். அங்கு தமிழ் பேசுவோரின் எண்ணிக்கை 1.9 லட்சமாக உள்ளது. அமெரிக்காவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த சமூக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 2009 முதல் 2013-ம் ஆண்டு வரை கிடைத்த தரவுகளின் அடிப்படையில், சுமார் 60 மில்லியன் மக்கள், தங்கள் வீடுகளில் ஆங்கிலம் தவிர்த்து மற்ற மொழிகள் பேசுகின்றனர். வீட்டிலும் ஆங்கிலம் பேசுபவர்களின் எண்ணிக்கை சுமார் 25 மில்லியன்களாக இருக்கிறது. வீடுகளில் ஆங்கிலத்தைத் தவிர்த்துப் பேசும் மற்ற மொழிகளில் ஸ்பானிய மொழி 37.4 மில்லியன் மக்களோடு முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. அடுத்தடுத்த இடங்…
-
- 0 replies
- 579 views
-
-
தென் சூடானின் ஜூபா விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற சரக்கு விமானம் விபத்துக்குள்ளானதில் 40 பேர் உயிரிழந்திருக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஓடுபாதையிலிருந்து 800 மீற்றர் தூரத்திலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://virakesari.lk/articles/2015/11/04/தென்-சூடான்-விமான-விபத்தில்-40-பேர்-பலி
-
- 0 replies
- 323 views
-
-
துபாயில் தமிழ்ப் பெண்ணுக்கு 50 கிராம் தங்கம் பரிசு சாந்தி ராபின் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் விதமாக, துபாய் மெட்ரோ ரயலில் பயணம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த சாந்தி ராபின் என்ற பெண்ணுக்கு 50 கிராம் தங்கம் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. தஞ்சாவூரைச் சேர்ந்தவர் சாந்தி ராபின் (54). கடந்த 22 ஆண்டுகளாக துபாயில் உள்ள அரபு குடும்பத்தில் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வருகிறார். அவர் தனது பணிகளை முடித்த பிறகு, நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள தனது நண்பர் களைச் சந்திக்க துபாய் மெட்ரோ ரயில், பஸ் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத் துவார். இதற்காக, அவருக்கு வழங்கப்பட்ட நம்பர் ஒன் அட்டை யில் பரிசுப்புள்ளிகள் கிடைத்தன. இந்நிலையில், பொதுப் போக்குவரத்து தின வாரத்தை துப…
-
- 0 replies
- 493 views
-
-
உலக சிறைக் கைதிகளில் 25வீதம் பேர் அமெரிக்கர்கள்: ஒபாமா கவலை உலக சிறைக்கைதிகளில் 25சதவீதம் பேர் அமெரிக்கர்களாக உள்ளனர் என்று அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூஜெர்ஸி நகரில் நேற்று முன்தினம் நடை பெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, உலக மக்கள் தொகையில் அமெரிக்கர்களின் எண்ணிக்கை 5 சதவீதம் மட்டுமே. ஆனால் உலக சிறைக்கைதிகளில் அமெரிக்க கைதிகளின் எண்ணிக்கை 25 சதவீதமாக உள்ளது. சுமார் 22 லட்சம் அமெரிக்கர்கள் சிறையில் உள்ளனர். சுமார் 7 கோடி பேர் குற்றப் பின்னணி கொண்ட வர்களாக உள்ளனர் எனத் தெரிவித்த அவர் 5 அமெரிக்கர்களில் ஒருவர் குற்றப் பின்னணி உடையவர் எனவும், இந்த புள்ளிவிவரம் கவலையளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண சிறைத் துறை…
-
- 0 replies
- 396 views
-
-
212 பேருடன் பயணித்த விமானம் மாயம் எகிப்தின் ஷரீம் இல் ஷேக் நகரத்திலிருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் ஒன்று கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்துள்ளது. குறித்த விமானத்தில் 212 பேர் பயணித்தாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. http://tamil.adaderana.lk/news.php?nid=73979 Confusion over Russian airliner 'missing in Sinai' http://www.bbc.com/news/world-middle-east-34687139
-
- 17 replies
- 1.5k views
-
-
உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட வெடிக்காத குண்டு ஜெர்மனியில் கண்டுபிடிப்பு! டாஸ்ல்டோர்ப்: ஜெர்மனியில் 2-ம் உலகப்போரின்போது பயன்படுத்தப்பட்ட வெடிக்காத குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு, செயலிழக்கப்பட்டுள்ளது. கடந்த 2009-ல் 500 கிலோ எடை கொண்ட வெடிகுண்டு ஒன்று, ஜெர்மனியின் டாஸ்ல்டோர்ப் (Düsseldorf)பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டது. அதேபோல் கடந்த 2011-ம் ஆண்டும் ஜெர்மனியின் கோப்லென்ஸ் பகுதியில், ஒரு வெடிக்கப்படாத குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அதை பாதிப்பில்லாமல் வெடிக்க செய்ய, கிட்டத்தட்ட 45,000 பேர் அந்த பகுதியை விட்டு அப்புறப்படுத்தப்பட்டனர். இந்த குண்டுகள், ஜெர்மனியில் நடந்த இரண்டாம் உலகப் போரின்போது பயன்படுத்தப்பட்டது என தெரியவந்தது. மேலும், ஜெர்மனியின் பெரும…
-
- 0 replies
- 404 views
-
-
பாலியல் வன்முறைகளைத் தடுப்பதற்காக குடியேற்றவாசிகளுக்கு பாலியல் கல்வி - நோர்வே பாணியில் டென்மார்க்கிலும் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தல் டென்மார்க்குக்கு வரும் அகதிகள் மற்றும் ஏனைய குடியேற்றவாசிகளுக்கு கட்டாய பாலியல் கல்வி புகட்டப்பட வேண்டும் என அந்நாட்டு அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. ஏற்கெனவே நோர்வேயிலுள்ள நிறுவனமொன்று புதிய அகதிகளுக்கு பாலியல் வகுப்புகளை நடத்தி வருகிறது. அகதிகளுக்கான வரவேற்பு நிலையங்களில் உள்ளவர்களால் பாலியல் ரீதியான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டதையடுத்து, இந்த வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. இந்நிலையில், நோர்வேவுக்…
-
- 0 replies
- 608 views
-
-
துருக்கி நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் கட்சி அமோக வெற்றி துருக்கி நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் நீதி, மேம்பாட்டு கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. அந்தக் கட்சியின் தலைவர் எர்டோகன் மீண்டும் அதிபராக பதவியேற்கிறார். மொத்தம் 550 உறுப்பினர்கள் கொண்ட துருக்கி நாடாளுமன்றத்து க்கு கடந்த ஜூனில் தேர்தல் நடைபெற்றது. இதில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதிபர் எர்டோகன் கூட்டணி அரசை அமைக்க முயற்சி செய்தார். ஆனால் அவரது முயற்சி பலன் அளிக்கவில்லை. இந்நிலையில் 5 மாத இடைவெளியில் அங்கு நேற்று மீண்டும் தேர்தல் நடைபெற்றது. இதில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகின. இந்நிலையில் அனைவரையும் வியப்பில் ஆ…
-
- 0 replies
- 534 views
-
-
பெருமை .. சிறுமை .. பொலிவியா பொலிவியாவில் காலணிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள சிறுவன் தென் அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் கிட்டத் தட்ட நடுவாக உள்ள நாடு பொலிவியா. அதன் கிழக்குப் பகுதியில் பிரேசில், தெற்குப் பகுதி யில் பராகுவே மற்றும் அர்ஜென் டினா, தென்மேற்குப் பகுதியில் சிலி, வடமேற்குப் பகுதியில் பெரு ஆகிய நாடுகள் உள்ளன. “முதன்முதலாக’’ என்பதே பொதுவாக கொஞ்சம் பெருமைக் குரியதுதான். சரித்திரத்தில் இடம் பெறக்கூடியதுதான். ஆனால் பொலிவியாவின் இப் படிப்பட்ட ஒரு விஷயம் பெருமைக் குரியது என்று தோன்றவில்லை. பொலிவியாவில் பத்து லட்சம் குழந்தைகள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். கேக் விற்பதிலிருந்து கடுமையான உடல் உழைப்புவரை. குடும்பத்தின் ஏழ்மை அவர்களை இப்படிச் செய்…
-
- 12 replies
- 3.5k views
-
-
பனிமூட்டம் காரணமாக ஐரோப்பாவில் விமான சேவைகள் பாதிப்பு PA பனிமூட்டத்தில் லண்டன் ஹீத்ரோ விமான நிலையம் ஐரோப்பாவின் பல பகுதிகளில் நிலவும் அடர்த்தியான பனிமூட்டம் காரணமாக இரண்டாவது நாளாக பபல விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஐரோப்பாவின் பல பகுதிகளில் நிலவும் அடர்த்தியான பனிமூட்டம் காரணமாக இரண்டாவது நாளாக பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தப் பனிமூட்டம் காரணமாக, லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து புறப்படும் விமானங்களில் பத்து சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளன. இதேபோல பாரிஸ், டூசல்டார்ஃப், ஆம்ஸ்டர்டாம் மற்றும் பிரசல்ஸ் விமான நிலையங்களிலும் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டடுள்ளன. பல விமான நிலையங்களில் விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகையும் கடுமையாக தாமதமடைந்துள்ள…
-
- 0 replies
- 525 views
-
-
கீதா.... பாகிஸ்தானில் இருந்து அழைத்து வரப்பட்ட வாய் பேச முடியாத, காது கேளாத இந்த இளம் இந்தியப் பெண் இப்போது மீடியாக்களால் மறக்கப்பட்டு, இந்தூரில் ஒரு காப்பகத்தில் வைக்கப்பட்டிருக்கிறார். அவரது உண்மையான குடும்பம் எது என்பதை டிஎன்ஏ பரிசோதனை மூலம் கண்டுபிடித்து அவர்களிடம் கீதாவை ஒப்படைக்கும் வேலையில் உள்ளது வெளியுறவு அமைச்சகம். 14 ஆண்டுகளுக்கு முன் ரயில் ஏறி லாகூரில் போய் இறங்கிய இந்த சிறுமியை ஆவணங்கள் ஏதும் இல்லாததால் கராச்சியில் உள்ள ஈதி பவுண்டேசன் அமைப்பிடம் ஒப்படைத்தனர் பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்புப் படையினரான ரேஞ்சர்கள். அதுமுதல் அந்தக் குழந்தையை பத்திரமாக வைத்திருந்து பராமரித்தவர்கள் ஈதி பவுண்டசேனின் தலைவர் அப்துல் சத்தார் ஈதியும் அவரது மனைவி பில்கிஸ் ஈதியும் தான்.…
-
- 0 replies
- 752 views
-
-
தாவூத் இப்ராஹிமுக்கு பாகிஸ்தானில் சிறப்பு கமாண்டோக்கள் பாதுகாப்பு தாவூத். | கோப்புப் படம். இந்தோனேசியாவில் தாவூத் இப்ராஹிமின் முன்னாள் கூட்டாளி சோட்டா ராஜன் கைது செய்யப்பட்டதையடுத்து கராச்சியில் தாவூத் வீட்டுக்கு சிறப்புக் கமாண்டோக்களின் பாதுகாப்பை அளித்துள்ளது பாகிஸ்தான். இதற்கிடையே இன்று பாலியில் சோட்டா ராஜனை விசாரணை செய்த போது, தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் ஐ.எஸ்.ஐ. பாதுகாப்புடன் இருப்பதாக தெரிவித்தார். இதுவரை தாவூத் இப்ராஹிம் தங்கள் நாட்டில் இல்லை என்றே பாகிஸ்தான் கூறிவந்தது. ஆனால் 1993 மும்பை குண்டுவெடிப்பில் தேடப்பட்டு வரும் குற்றவாளியான தாவூத் பாகிஸ்தானில் இருப்பதாகவே இந்தியா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. தாவூத் தனது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டேயிருந்தா…
-
- 0 replies
- 746 views
-
-
முதல் முறையாக உள்நாட்டிலேயே பயணிகள் விமானம் தயாரித்து சீனா சாதனை உள்நாட்டிலேயே முதல் முறையாக தயாரிக்கப்பட்ட சி-919 பயணிகள் விமானம். | படம்: ஏ.எஃப்.பி. போயிங், ஏர்பஸ் ஆகிய மிகப்பெரிய விமான உற்பத்தி நிறுவனங்களின் ஆதிக்கத்துக்கு சவால் விடுக்கும் விதமாக சீனா உள்நாட்டிலேயே பெரிய பயணிகள் விமானத்தை முதல் முறையாக உற்பத்தி செய்துள்ளது. இதன் மூலம் சீனாவின் கனவு நிறைவேறியுள்ளதாக சீன வர்த்தக விமான கார்ப்பரேஷன் தலைவர் ஜின் ஸுவாங்லாங் தெரிவித்தார். “சி-919 என்ற இந்த விமானம் ஒரு குறிப்பிடத்தகுந்த மைல்கல் ஆகும். இது சீனாவின் முதல் உள்நாட்டு தயாரிப்பு பயணிகள் விமானம் ஆகும்” என்றார். 158 பேர் பயணம் செய்யக்கூடிய இந்த விமானம் சுமார் 4,075 கிமீ தூரம் செல்லும். 2016-ம் ஆண்டு இதன் வெள்ள…
-
- 0 replies
- 611 views
-
-
மஹீன் நகரத்தை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர் 8 சிரியாவின் மத்திய ஹோம்ஸ் மாகாணத்தில் உள்ள மஹீன் நகரத்தை அரச படைகளிலிடமிருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன கடந்த சனிக்கிழமை தொடக்கம் இடம்பெற்ற தாக்குதல்களின் மத்தியில் இரண்டு வாகன குண்டுவெடிப்புகளும் இடம்பெற்றுள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தை தலைமையகமாக கொண்டு செயற்படும் சிரிய மனிதவுரிமை கண்காணிப்பு குழு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் சதாட் பகுதியில் தொடர்ச்சியான மோதல்கள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.hirunews.lk/tamil/119511/மஹீன்-நகரத்தை-ஐ-எஸ்-தீவிரவாதிகள்-கைப்பற்றியுள்ளனர்
-
- 0 replies
- 602 views
-
-
இன்று அன்று | 1917 நவம்பர் 2: இஸ்ரேல் - பாலஸ்தீன மோதலுக்கான விதை! ஐரோப்பிய நாடுகளில் சிதறிக்கிடந்த யூதர்கள் தங்களுக்கென ஒரு தனி நாடு அமைய வேண்டும் என்று துடித்துக்கொண்டிருந்த சமயம் அது. யூதர்களின் ஆசைக்கு உறுதுணையாக நின்றது பிரிட்டன். அப்போது முதல் உலகப் போர் நடந்துகொண்டிருந்தது. போரில் யூதர்களின் ஆதரவைப் பெற வேண்டும் என்றால், அவர்களுக்கு தனிநாடு அமைய உதவுவதில் தவறில்லை என்று நினைத்தது பிரிட்டன். அதன்படி, 1917 நவம்பர் 2-ல், பாலஸ்தீனத்தில் யூதர்களின் தாய்நாட்டை உருவாக்குவதற்கான பிரகடனத்தை வெளியிட்டார் பிரிட்டன் வெளியுறவுத் துறைச் செயலர் ஆர்தர் ஜேம்ஸ் பால்போர். 1922-ல் நடந்த ‘லீக் ஆஃப் நேஷன்ஸ்’ மாநாட்டில், பால்போர் பிரகடனத்துக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. முதல் உ…
-
- 0 replies
- 417 views
-
-
ரஷ்யா இனிமேல் வல்லரசு நாடு இல்லை. அந்த நாட்டின் பொருளாதாரம் ஸ்பெயினைவிட பின்தங்கிய நிலையில் உள்ளது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் 1947 ஆம் ஆண்டில் அமெரிக்காவுக் கும் சோவியத் யூனியனுக்குமிடையே பனிப் போர் மூண்டது. இரு நாடுகளும் நேரடியாக மோதிக்கொள்ளாவிட்டாலும், சுமார் 44 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பனிப்போர் நீடித்தது. 1991 இல் சோவியத் யூனியன் உடைந்தபிறகு பனிப் போர் படிப்படியாக மறைந்தது. சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2014 இல் உக்ரைனின் கிரிமியா பகுதியை ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டது. இதனால் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்குமிடையே இரண்டாம் பனிப்போர் தொடங்கி இருப்பதாக அரசியல் ந…
-
- 0 replies
- 445 views
-
-
ஆரோக்கியமான நாடு பட்டியலில் இந்தியாவுக்கு 103-வது இடம் உலகின் ஆரோக்கியமான நாடு தரவரிசைப் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்தியா 103-வது இடத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளது. ஐ.நா. சபை, உலக வங்கி, உலக சுகாதார நிறுவனம் ஆகியவற்றின் புள்ளி விவரங்களை அடிப்படையாக வைத்து ‘புளூம்பர்க் ரேங்கிங்’ அமைப்பு உலகின் சுகாதாரமான நாடுகள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. மக்களின் வாழ்க்கைத் தரம், சத்தான உணவு வகைகள், ஆயுட்காலம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து ஆய்வறிக்கை பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் மொத்தம் 145 நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. அதில் சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது. இத்தாலி, ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து, ஜப்பான், ஸ்பெயின், நெதர்லாந்து, …
-
- 1 reply
- 649 views
-
-
மக்கள் தொகை பெருக்கம்: பிரான்ஸ்,ஜெர்மனியை முந்தும் இங்கிலாந்து. [Sunday 2015-11-01 10:00] இன்னும் 25 ஆண்டுகளில் மக்கள் தொகை பெருக்கத்தில் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியை இங்கிலாந்து முந்தும், அளவுக்கு அந்நாட்டு மக்கள் தொகை அதிகரிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தின் தேசிய புள்ளியியல் துறை எதிர் காலத்தில் இங்கிலாந்தின் மக்கள் தொகை வளர்ச்சி குறித்து சமீபத்தில் ஆய்வு நடத்தியது.அதில், இன்னும் 25 ஆண்டுகளில் அதாவது 2039–ம் ஆண்டில் இங்கிலாந்தின் மக்கள் தொகைவிட மேலும் 1 கோடி உயரும். அதாவது 2014–ம் ஆண்டில் இங்கிலாந்தின் மக்கள் தொகை 6 கோடியே 46 லட்சமாக இருந்தது.அது 2039–ம் ஆண்டில் 7 கோடியே 43 லட்சமாக உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது. அதே வேளையில் இன்னும் 10 ஆண்டுகளில் (2024…
-
- 1 reply
- 785 views
-
-
பெர்லின் சுவர் தகர்க்கப்படுவதற்கு 'தற்செயலாக' காரணமானவர் காலமானார் EPA குண்டார் ஸ்சாபோவ்ஸ்கி ஜெர்மனியில் பெர்லின் சுவர் தகர்க்கப்படுவதை தூண்டிய தகவலை தற்செயலாக வெளியிட்டிருந்த அப்போதைய கிழக்கு ஜெர்மனி அரசாங்கத்தின் பேச்சாளர் காலமானார். ஜெர்மனியில் பெர்லின் சுவர் தகர்க்கப்படுவதை தூண்டிய தகவலை தற்செயலாக வெளியிட்டிருந்த அப்போதைய கிழக்கு ஜெர்மனி அரசாங்கத்தின் பேச்சாளர் காலமானார். 1989-ம் ஆண்டில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஊடக சந்திப்பொன்றில் இவர் வெளிப்படுத்திய தகவலே பெர்லின் சுவர் தகர்க்கப்பட காரணமானது. பெர்லினில் உள்ள மருத்துவமனை ஒன்றில் உயிரிழந்த குண்டார் ஸ்சாபோவ்ஸ்கி-க்கு 86 வயது. கிழக்கு ஜெர்மனியில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி தோல்வியடைந்து கொண்டிருந்த காலத்த…
-
- 1 reply
- 760 views
-
-
மாலைதீவு ஜனாதிபதி படகு வெடிப்பு குண்டால்தான் என்பதற்கு ஆதாரமில்லை கடந்த மாதம் மாலைதீவு ஜனாதிபதி பயணம் செய்த அதிவேகப் படகில் ஏற்ப்பட்ட வெடிப்பு, குண்டினாலேயே ஏற்ப்பட்டது என்பதற்கான ஆதாராங்கள் எதுவுமில்லை என ஐக்கிய அமெரிக்காவின் எஃப்பிஐ தெரிவித்துள்ளது. விசாரணை செய்யுமாறு வினவப்பட்ட சிதைவுகள், படகினுடைய பகுதிகளே என்று தெரிவித்துள்ள எஃப்பிஐ, மாறாக அவை குண்டொன்றினுடைய எச்சங்கள் அல்ல என எஃப்பிஐ சனிக்கிழமை (31) வெளியிட்ட அறிக்கையொன்றில் கூறியுள்ளது. வெடிப்பு இடம்பெற்ற இடத்திலிருந்து பெறப்பட்ட தடயவியல் பகுப்பாய்வு, அவ்விடத்திலிருந்து மீட்கப்பட்ட பொருட்களின் பகுப்பாய்வு முடிவு, இரசாயனவியல் பகுப்பாய்வு உள்ளடங்கலான எஃப்பிஐ இன் பகுப்பாய்வின் அடிப்படையில், படகில் ஏற்ப…
-
- 0 replies
- 410 views
-
-
இந்த ஆண்டில் அண்டை நாடுகளால் 650 இந்திய மீனவர்கள் சிறைபிடிப்பு: எல்லையை தாண்ட வேண்டாம் என எச்சரிக்கை கோப்புப் படம் இந்த ஆண்டில் இதுவரை 650 இந்திய மீனவர்கள் நமது அண்டை நாடுகளின் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிகம் பேரை கைது செய்து இலங்கை முதலிடத்தில் உள்ளது. இதற்கிடையே எல்லையை தாண்ட வேண்டாம் என இந்திய கடலோர காவல் படை மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பான மத்திய அரசின் புள்ளிவிவரப்படி, கடந்த ஜனவரி முதல் அக்டோபர் மாதம் வரை இலங்கை கடற்படையினர் சுமார் 350 மீனவர்களை கைது செய்ததுடன் 52 மீன்பிடி படகுகளை பறிமுதல் செய்துள்ளனர். இதுபோல பாகிஸ்தான் கடல் பாதுகாப்பு அமைப்பு (எம்எஸ்ஏ) 239 மீனவர்களை கைது செய்து, 35 படகுகளை பறிமுதல் செய்துள்ளது. வங்கதே…
-
- 0 replies
- 352 views
-
-
பாலிவுட் நடிகை கீதா பாஸ்ராவை இன்று மணக்கிறார் ஹர்பஜன்சிங்: ஜலந்தரில் கோலாகல ஏற்பாடுகள் இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் - நடிகை கீதா பாஸ்ரா திருமணம் இன்று ஜலந்தரில் நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்று நடைபெற்ற சங்கீத் நிகழ்ச்சியில் இருவரும் உற்சாகமாக பங்கேற்றனர். படங்கள்: பிடிஐ இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் - பாலிவுட் நடிகை கீதா பாஸ்ராவின் திருமணம் இன்று ஜலந்தரில் நடைபெற உள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் (35) கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட் நடிகை கீதா பாஸ்ராவை (31) காதலித்து வந்தார். இதையடுத்து இருவருக் கும் திருமணம் செய்து வைக்க அவர்களது பெற்றோர் முடிவு செய்தனர். இதன்…
-
- 4 replies
- 1.9k views
-
-
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ள ஹிலாரி கிளின்டனின் மின்னஞ்சலில் இருந்து மேலும் 7 ஆயிரம் பக்கங்கள் வெளியீடு அமெரிக்காவில் ஆளும் ஜனநாய கக் கட்சி சார்பில் அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ள ஹிலாரி கிளின்டனின் மின்னஞ்சலிலிருந்து மேலும் 7 ஆயிரம் பக்கங்களை அந்நாட்டு வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ளது. இந்த மின்னஞ்சல்கள் கடந்த 2009 முதல் 2012 வரை வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த போது, ஹிலாரி கிளின்டன் பயன் படுத்திய தனியார் சர்வரி லிருந்து அலுவல் ரீதியாக பரிமாறிக் கொள்ளப்பட்டவை ஆகும். ஹிலாரியின் மின்னஞ்சல்களை வரும் ஜனவரி 2016 வரை மாதந் தோறும் வெளியிட வேண்டும் என்ற நீதிபதி ருடால்ப் கான்ட்ரெராஸ் உத்தரவின் பேரிலேயே இவை வெளியிடப்பட்டுள்ளன. மொத்தம் 30 ஆயிரம் மின்னஞ்ச…
-
- 0 replies
- 503 views
-
-
புக்காரஸ்ட் இரவு விடுதி தீ விபத்தில் 27 பேர் பலி புக்காரஸ்ட் இரவு விடுதி தீ விபத்தில் 27 பேர் பலி ரோமானிய தலைநகர் புக்காரஸ்டில் இரவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 27 பேர் கொல்லப்பட்டனர். ரோமானிய தலைநகர் புக்காரஸ்டில் இரவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் கொல்லப்பட்டனர். மேலும் காயமடைந்த பலரைக் காப்பாற்றுவதற்காக மருத்துவர்கள் கடுமையாக போராடிக்கொண்டிருக்கிறார். 140க்கும் அதிகமானவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள். மேலும் பலர் காயங்களால் உயிரிழக்கலாம் என்று அவசர உதவி பணியாளர் ஒருவர் கூறியுள்ளார். வாண வேடிக்கை ஒன்றின் காரணமாகவே நிலக்கீழ் தளத்தில் உள்ள இந்த விடுதியில் இசை கச்சேரி ஒன்று நடந்துகொண்டிருந்தபோது தீப்பிடித்ததாக கூறப்படுகின்றது. விட…
-
- 0 replies
- 571 views
-