உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26901 topics in this forum
-
தாவூத் இப்ராஹிமுக்கு பாகிஸ்தானில் சிறப்பு கமாண்டோக்கள் பாதுகாப்பு தாவூத். | கோப்புப் படம். இந்தோனேசியாவில் தாவூத் இப்ராஹிமின் முன்னாள் கூட்டாளி சோட்டா ராஜன் கைது செய்யப்பட்டதையடுத்து கராச்சியில் தாவூத் வீட்டுக்கு சிறப்புக் கமாண்டோக்களின் பாதுகாப்பை அளித்துள்ளது பாகிஸ்தான். இதற்கிடையே இன்று பாலியில் சோட்டா ராஜனை விசாரணை செய்த போது, தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் ஐ.எஸ்.ஐ. பாதுகாப்புடன் இருப்பதாக தெரிவித்தார். இதுவரை தாவூத் இப்ராஹிம் தங்கள் நாட்டில் இல்லை என்றே பாகிஸ்தான் கூறிவந்தது. ஆனால் 1993 மும்பை குண்டுவெடிப்பில் தேடப்பட்டு வரும் குற்றவாளியான தாவூத் பாகிஸ்தானில் இருப்பதாகவே இந்தியா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. தாவூத் தனது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டேயிருந்தா…
-
- 0 replies
- 749 views
-
-
முதல் முறையாக உள்நாட்டிலேயே பயணிகள் விமானம் தயாரித்து சீனா சாதனை உள்நாட்டிலேயே முதல் முறையாக தயாரிக்கப்பட்ட சி-919 பயணிகள் விமானம். | படம்: ஏ.எஃப்.பி. போயிங், ஏர்பஸ் ஆகிய மிகப்பெரிய விமான உற்பத்தி நிறுவனங்களின் ஆதிக்கத்துக்கு சவால் விடுக்கும் விதமாக சீனா உள்நாட்டிலேயே பெரிய பயணிகள் விமானத்தை முதல் முறையாக உற்பத்தி செய்துள்ளது. இதன் மூலம் சீனாவின் கனவு நிறைவேறியுள்ளதாக சீன வர்த்தக விமான கார்ப்பரேஷன் தலைவர் ஜின் ஸுவாங்லாங் தெரிவித்தார். “சி-919 என்ற இந்த விமானம் ஒரு குறிப்பிடத்தகுந்த மைல்கல் ஆகும். இது சீனாவின் முதல் உள்நாட்டு தயாரிப்பு பயணிகள் விமானம் ஆகும்” என்றார். 158 பேர் பயணம் செய்யக்கூடிய இந்த விமானம் சுமார் 4,075 கிமீ தூரம் செல்லும். 2016-ம் ஆண்டு இதன் வெள்ள…
-
- 0 replies
- 615 views
-
-
மஹீன் நகரத்தை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர் 8 சிரியாவின் மத்திய ஹோம்ஸ் மாகாணத்தில் உள்ள மஹீன் நகரத்தை அரச படைகளிலிடமிருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன கடந்த சனிக்கிழமை தொடக்கம் இடம்பெற்ற தாக்குதல்களின் மத்தியில் இரண்டு வாகன குண்டுவெடிப்புகளும் இடம்பெற்றுள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தை தலைமையகமாக கொண்டு செயற்படும் சிரிய மனிதவுரிமை கண்காணிப்பு குழு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் சதாட் பகுதியில் தொடர்ச்சியான மோதல்கள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.hirunews.lk/tamil/119511/மஹீன்-நகரத்தை-ஐ-எஸ்-தீவிரவாதிகள்-கைப்பற்றியுள்ளனர்
-
- 0 replies
- 605 views
-
-
இன்று அன்று | 1917 நவம்பர் 2: இஸ்ரேல் - பாலஸ்தீன மோதலுக்கான விதை! ஐரோப்பிய நாடுகளில் சிதறிக்கிடந்த யூதர்கள் தங்களுக்கென ஒரு தனி நாடு அமைய வேண்டும் என்று துடித்துக்கொண்டிருந்த சமயம் அது. யூதர்களின் ஆசைக்கு உறுதுணையாக நின்றது பிரிட்டன். அப்போது முதல் உலகப் போர் நடந்துகொண்டிருந்தது. போரில் யூதர்களின் ஆதரவைப் பெற வேண்டும் என்றால், அவர்களுக்கு தனிநாடு அமைய உதவுவதில் தவறில்லை என்று நினைத்தது பிரிட்டன். அதன்படி, 1917 நவம்பர் 2-ல், பாலஸ்தீனத்தில் யூதர்களின் தாய்நாட்டை உருவாக்குவதற்கான பிரகடனத்தை வெளியிட்டார் பிரிட்டன் வெளியுறவுத் துறைச் செயலர் ஆர்தர் ஜேம்ஸ் பால்போர். 1922-ல் நடந்த ‘லீக் ஆஃப் நேஷன்ஸ்’ மாநாட்டில், பால்போர் பிரகடனத்துக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. முதல் உ…
-
- 0 replies
- 419 views
-
-
ரஷ்யா இனிமேல் வல்லரசு நாடு இல்லை. அந்த நாட்டின் பொருளாதாரம் ஸ்பெயினைவிட பின்தங்கிய நிலையில் உள்ளது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் 1947 ஆம் ஆண்டில் அமெரிக்காவுக் கும் சோவியத் யூனியனுக்குமிடையே பனிப் போர் மூண்டது. இரு நாடுகளும் நேரடியாக மோதிக்கொள்ளாவிட்டாலும், சுமார் 44 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பனிப்போர் நீடித்தது. 1991 இல் சோவியத் யூனியன் உடைந்தபிறகு பனிப் போர் படிப்படியாக மறைந்தது. சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2014 இல் உக்ரைனின் கிரிமியா பகுதியை ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டது. இதனால் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்குமிடையே இரண்டாம் பனிப்போர் தொடங்கி இருப்பதாக அரசியல் ந…
-
- 0 replies
- 453 views
-
-
ஆரோக்கியமான நாடு பட்டியலில் இந்தியாவுக்கு 103-வது இடம் உலகின் ஆரோக்கியமான நாடு தரவரிசைப் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்தியா 103-வது இடத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளது. ஐ.நா. சபை, உலக வங்கி, உலக சுகாதார நிறுவனம் ஆகியவற்றின் புள்ளி விவரங்களை அடிப்படையாக வைத்து ‘புளூம்பர்க் ரேங்கிங்’ அமைப்பு உலகின் சுகாதாரமான நாடுகள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. மக்களின் வாழ்க்கைத் தரம், சத்தான உணவு வகைகள், ஆயுட்காலம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து ஆய்வறிக்கை பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் மொத்தம் 145 நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. அதில் சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது. இத்தாலி, ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து, ஜப்பான், ஸ்பெயின், நெதர்லாந்து, …
-
- 1 reply
- 653 views
-
-
மாலைதீவு ஜனாதிபதி படகு வெடிப்பு குண்டால்தான் என்பதற்கு ஆதாரமில்லை கடந்த மாதம் மாலைதீவு ஜனாதிபதி பயணம் செய்த அதிவேகப் படகில் ஏற்ப்பட்ட வெடிப்பு, குண்டினாலேயே ஏற்ப்பட்டது என்பதற்கான ஆதாராங்கள் எதுவுமில்லை என ஐக்கிய அமெரிக்காவின் எஃப்பிஐ தெரிவித்துள்ளது. விசாரணை செய்யுமாறு வினவப்பட்ட சிதைவுகள், படகினுடைய பகுதிகளே என்று தெரிவித்துள்ள எஃப்பிஐ, மாறாக அவை குண்டொன்றினுடைய எச்சங்கள் அல்ல என எஃப்பிஐ சனிக்கிழமை (31) வெளியிட்ட அறிக்கையொன்றில் கூறியுள்ளது. வெடிப்பு இடம்பெற்ற இடத்திலிருந்து பெறப்பட்ட தடயவியல் பகுப்பாய்வு, அவ்விடத்திலிருந்து மீட்கப்பட்ட பொருட்களின் பகுப்பாய்வு முடிவு, இரசாயனவியல் பகுப்பாய்வு உள்ளடங்கலான எஃப்பிஐ இன் பகுப்பாய்வின் அடிப்படையில், படகில் ஏற்ப…
-
- 0 replies
- 413 views
-
-
பெர்லின் சுவர் தகர்க்கப்படுவதற்கு 'தற்செயலாக' காரணமானவர் காலமானார் EPA குண்டார் ஸ்சாபோவ்ஸ்கி ஜெர்மனியில் பெர்லின் சுவர் தகர்க்கப்படுவதை தூண்டிய தகவலை தற்செயலாக வெளியிட்டிருந்த அப்போதைய கிழக்கு ஜெர்மனி அரசாங்கத்தின் பேச்சாளர் காலமானார். ஜெர்மனியில் பெர்லின் சுவர் தகர்க்கப்படுவதை தூண்டிய தகவலை தற்செயலாக வெளியிட்டிருந்த அப்போதைய கிழக்கு ஜெர்மனி அரசாங்கத்தின் பேச்சாளர் காலமானார். 1989-ம் ஆண்டில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஊடக சந்திப்பொன்றில் இவர் வெளிப்படுத்திய தகவலே பெர்லின் சுவர் தகர்க்கப்பட காரணமானது. பெர்லினில் உள்ள மருத்துவமனை ஒன்றில் உயிரிழந்த குண்டார் ஸ்சாபோவ்ஸ்கி-க்கு 86 வயது. கிழக்கு ஜெர்மனியில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி தோல்வியடைந்து கொண்டிருந்த காலத்த…
-
- 1 reply
- 762 views
-
-
இந்த ஆண்டில் அண்டை நாடுகளால் 650 இந்திய மீனவர்கள் சிறைபிடிப்பு: எல்லையை தாண்ட வேண்டாம் என எச்சரிக்கை கோப்புப் படம் இந்த ஆண்டில் இதுவரை 650 இந்திய மீனவர்கள் நமது அண்டை நாடுகளின் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிகம் பேரை கைது செய்து இலங்கை முதலிடத்தில் உள்ளது. இதற்கிடையே எல்லையை தாண்ட வேண்டாம் என இந்திய கடலோர காவல் படை மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பான மத்திய அரசின் புள்ளிவிவரப்படி, கடந்த ஜனவரி முதல் அக்டோபர் மாதம் வரை இலங்கை கடற்படையினர் சுமார் 350 மீனவர்களை கைது செய்ததுடன் 52 மீன்பிடி படகுகளை பறிமுதல் செய்துள்ளனர். இதுபோல பாகிஸ்தான் கடல் பாதுகாப்பு அமைப்பு (எம்எஸ்ஏ) 239 மீனவர்களை கைது செய்து, 35 படகுகளை பறிமுதல் செய்துள்ளது. வங்கதே…
-
- 0 replies
- 356 views
-
-
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ள ஹிலாரி கிளின்டனின் மின்னஞ்சலில் இருந்து மேலும் 7 ஆயிரம் பக்கங்கள் வெளியீடு அமெரிக்காவில் ஆளும் ஜனநாய கக் கட்சி சார்பில் அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ள ஹிலாரி கிளின்டனின் மின்னஞ்சலிலிருந்து மேலும் 7 ஆயிரம் பக்கங்களை அந்நாட்டு வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ளது. இந்த மின்னஞ்சல்கள் கடந்த 2009 முதல் 2012 வரை வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த போது, ஹிலாரி கிளின்டன் பயன் படுத்திய தனியார் சர்வரி லிருந்து அலுவல் ரீதியாக பரிமாறிக் கொள்ளப்பட்டவை ஆகும். ஹிலாரியின் மின்னஞ்சல்களை வரும் ஜனவரி 2016 வரை மாதந் தோறும் வெளியிட வேண்டும் என்ற நீதிபதி ருடால்ப் கான்ட்ரெராஸ் உத்தரவின் பேரிலேயே இவை வெளியிடப்பட்டுள்ளன. மொத்தம் 30 ஆயிரம் மின்னஞ்ச…
-
- 0 replies
- 505 views
-
-
மக்கள் தொகை பெருக்கம்: பிரான்ஸ்,ஜெர்மனியை முந்தும் இங்கிலாந்து. [Sunday 2015-11-01 10:00] இன்னும் 25 ஆண்டுகளில் மக்கள் தொகை பெருக்கத்தில் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியை இங்கிலாந்து முந்தும், அளவுக்கு அந்நாட்டு மக்கள் தொகை அதிகரிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தின் தேசிய புள்ளியியல் துறை எதிர் காலத்தில் இங்கிலாந்தின் மக்கள் தொகை வளர்ச்சி குறித்து சமீபத்தில் ஆய்வு நடத்தியது.அதில், இன்னும் 25 ஆண்டுகளில் அதாவது 2039–ம் ஆண்டில் இங்கிலாந்தின் மக்கள் தொகைவிட மேலும் 1 கோடி உயரும். அதாவது 2014–ம் ஆண்டில் இங்கிலாந்தின் மக்கள் தொகை 6 கோடியே 46 லட்சமாக இருந்தது.அது 2039–ம் ஆண்டில் 7 கோடியே 43 லட்சமாக உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது. அதே வேளையில் இன்னும் 10 ஆண்டுகளில் (2024…
-
- 1 reply
- 788 views
-
-
புக்காரஸ்ட் இரவு விடுதி தீ விபத்தில் 27 பேர் பலி புக்காரஸ்ட் இரவு விடுதி தீ விபத்தில் 27 பேர் பலி ரோமானிய தலைநகர் புக்காரஸ்டில் இரவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 27 பேர் கொல்லப்பட்டனர். ரோமானிய தலைநகர் புக்காரஸ்டில் இரவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் கொல்லப்பட்டனர். மேலும் காயமடைந்த பலரைக் காப்பாற்றுவதற்காக மருத்துவர்கள் கடுமையாக போராடிக்கொண்டிருக்கிறார். 140க்கும் அதிகமானவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள். மேலும் பலர் காயங்களால் உயிரிழக்கலாம் என்று அவசர உதவி பணியாளர் ஒருவர் கூறியுள்ளார். வாண வேடிக்கை ஒன்றின் காரணமாகவே நிலக்கீழ் தளத்தில் உள்ள இந்த விடுதியில் இசை கச்சேரி ஒன்று நடந்துகொண்டிருந்தபோது தீப்பிடித்ததாக கூறப்படுகின்றது. விட…
-
- 0 replies
- 573 views
-
-
அமெரிக்கா மீதான வெறுப்பு வளர்வதை ஊக்குவிக்கிறது ரஷ்ய அரசு ஆகஸ்ட் மாதத்தின் வெதுவெதுப்பான மாலை நேரத்தில், மாஸ்கோவின் ‘பெவெர்லி ஹில்ஸ் டைனர்’ உணவகத்தில், மூன்று இளம் ரஷ்யர்களுடன் அமர்ந்திருந்தேன். ‘போர்க்கி தி பிக்’ மற்றும் மர்லின் மன்றோவின் ஆளுயர உருவங்கள் போன்ற அற்புதமான அலங்காரப் பொருட்கள் நிறைந்த உணவகம் அது. “அமெரிக்கா எங்களை வளைக்கப் பார்க்கிறது” என்றார் 29 வயதான கிறிஸ்டினா டோனெட்ஸ், டெஸ்ஸெர்ட் வேஃபில் துண்டு ஒன்றில் வாழைப்பழ கலவையைப் பரப்பியபடி. “பல பிரச்சினைகளைத் தாண்டி நாங்கள் எழுந்து நிற்கிறோம். உங்களுக்கு (அமெரிக்காவுக்கு) அது பிடிக்கவில்லை” என்றார் அப்பெண். பத்தாண்டுகளுக்கும் அதிகமான இடைவெளிக்குப் பிறகு, ரஷ்யாவில் செய்தி சேகரிப்பது என்பது பழைய நண்பரை மீண்டும் …
-
- 0 replies
- 642 views
-
-
ரஷ்ய பயணிகள் விமானம் ஒன்று 224 பேருடன் எகிப்தில் விபத்துக்குள்ளானது. அதில் எவரும் உயிர் தப்பவில்லை என்று அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. 224 பேருடன் ரஷ்ய விமானம் விபத்து 224 பேருடன் ரஷ்ய விமானம் விபத்து சினாய் வளைகுடா பகுதியில் மீட்புக் குழுக்கள் விமான சிதிலங்களை கண்டுள்ளன. பல ஆம்புலன்ஸுகள் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்துள்ளன. செங்கடல் கடற்கரை சுற்றுலா நகரான ஷரம் எல் ஷெய்க்கில் இருந்து அந்த விமானம் செயிண்ட் பீற்றர்ஸ்பேர்க்குக்கு பயணித்துக்கொண்டிருந்த போதே இந்த விபத்து நடந்துள்ளது. பயணிகளில் பெரும்பாலானவர்கள் ரஷ்ய சுற்றுலா பயணிகள் ஆவர். ரஷ்ய விமான நிறுவனமான கொகலிமாவியா நிறுவனத்துக்கு சொந்தமானதே இந்த ஏ 321 ரக விமானம். பயணிகளின் உறவினர்களுக்கு உதவுவதற்காக செயிண்ட்…
-
- 0 replies
- 454 views
-
-
தாவூத்தை நெருங்கும் போலீஸ்? மும்பையில் "கூட்டாளி" ரியாஸ் பாத்தி சுற்றி வளைத்து கைது! மும்பை: மும்பை சர்வதேச விமான நிலையத்தில் தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளி ரியாஸ் பாத்தி 2 போலி பாஸ்போர்ட்டுகளுடன் கைது செய்யப்பட்டார். நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளி ரியாஸ் பாத்தி. இவர் மீது நில அபகரிப்பு உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் மும்பையில் இந்தியன் ஸ்போர்ட்ஸ் அகாடமி என்ற பெயரில் பயிற்சி மையம் நடத்தி வருகிறார். இந்தநிலையில் ரியாஸ் பாத்தி மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு வர உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து விமானநிலையத்துக்கு விரைந்து சென்ற புலனாய்வு அதிகாரிகள், ஜோகனஸ்பர்க் செல்வதற்காக விமான நிலையம் வந்த…
-
- 0 replies
- 520 views
-
-
ஓடு பாதையில் தீப்பிடித்து எரிந்தது விமானம்: பயணிகள் அதிச்சி! (வீடியோ) ப்ளோரிடா: அமெரிக்காவின் ப்ளோரிடா மாநிலத்தில் இருந்து 101 பயணிகளுடன் வெனிசுலாவுக்கு புறப்பட்ட டைனமிக் இன்டர்நேஷனல் ஏர்வேஸ் விமானம் ரன்வேயில் ஓடியபோது திடீரென தீப்பிடித்து எரிந்தால் உள்ளே இருந்த பயணிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். அமெரிக்காவின் ப்ளோரிடா மாநிலத்தில் உள்ள போர்ட் லவ்டர்டேல் விமான நிலையத்தில் இருந்து (உள்ளூர் நேரப்படி) நேற்று மதியம் 12.30 மணியளவில் 101 பயணிகள், உட்பட விமானக்குழுவினருடன் வெனிசுலாவின் தலைநகரமான காரகாஸ் நோக்கி டைனமிக் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 767-200ER ரக விமானம் புறப்பட்டது. இந்த விமானம், ஓடு பாதையில் சுற்றி வட்டமடித்து வேகம் எடுத்தது. அப்போது, விமானத்தின…
-
- 0 replies
- 494 views
-
-
தென் சீனக் கடலில் அத்துமீறினால் அமெரிக்கா மீது போர் தொடுப்போம்: சீனா எச்சரிக்கை சீன கடற்படைத் தளபதி அட்மிரல் வூ செங்கி. தென் சீனக் கடலில் அமெரிக்க போர்க்கப்பல்கள் அத்துமீறினால் கடல், வான் வழியாக போர் தொடுப் போம் என்று சீன கடற்படை தளபதி அட்மிரல் வூ செங்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். தென்சீனக் கடலில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதன் கரணமாக பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஜப்பான், மலேசியா, தைவான் புருணே உள்ளிட்ட நாடுகளுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. பிலிப்பைன்ஸ், ஜப்பா னுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. தென் சீனக் கடலில் பல்வேறு பகுதிகளில் மணல், கற்களை கொட்டி செயற்கை தீவுகளை சீனா அமைத்து வருகிறது. அங்கு விமானப் படை தளம், கலங்கரை விளக்கம்…
-
- 0 replies
- 407 views
-
-
212 பேருடன் பயணித்த விமானம் மாயம் எகிப்தின் ஷரீம் இல் ஷேக் நகரத்திலிருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் ஒன்று கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்துள்ளது. குறித்த விமானத்தில் 212 பேர் பயணித்தாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. http://tamil.adaderana.lk/news.php?nid=73979 Confusion over Russian airliner 'missing in Sinai' http://www.bbc.com/news/world-middle-east-34687139
-
- 17 replies
- 1.5k views
-
-
பாலத்தீனப் போராட்டக்காரர்கள் இஸ்ரேலியர்களுக்கும் பாலத்தீனர்களுக்கும் இடையே நடக்கும் மோதல் மீண்டும் செய்திகளில் அடிபட ஆரம்பித்திருக்கிறது. இஸ்ரேலியப் பிரஜைகள் மீது நடந்த பல தாக்குதல்களை அடுத்து, இஸ்ரேல் தனது ராணுவத்தை இந்த வாரம் ஜெருசலேத்தின் வீதிகளில் நிறுத்தி , நகரின் சில பகுதிகளுக்குள் நுழையத் தடை விதித்தது. இஸ்ரேலியப் பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகள் பாலத்தீனர்கள் சிலரின் உயிர்களையும் பலிவாங்கிவிட்டன. இந்த வன்முறை மீண்டும் வெடித்திருப்பதை, பலர் ஒரு புதிய "இண்டிஃபாடா" ( எழுச்சி என்பதற்கான அரபு வார்த்தை) உருவாவகக் கூடும் என்று அஞ்சுகிறார்கள். இந்த சமீபத்திய பதற்ற நிலை, ஜெருசலேத்தின் எதிர்காலம் குறித்த கேள்வியைச் சுற்றி எழுந்துள்ளது. இந்த நகரை இஸ்ரேலியர்கள் மற்றும்…
-
- 0 replies
- 721 views
-
-
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் 2-வது திருமணம் முறிவு இம்ரான் கான் - ரேஹம் கான். | கோப்புப் படம்: பிடிஐ. பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீர்ரும், தற்போதைய அரசியல்வாதியுமான இம்ரான் கானின் 2-வது திருமணம் முறிவடைந்தது. ரேஹம் கான் மற்றும் இம்ரான் ஆகியோர் பரஸ்பர புரிதல் அடிப்படையில் விவாகரத்து செய்து கொண்டனர். முதலில் பிரிட்டனைச் சேர்ந்த ஜெமீமா கோல்ட்ஸ்மித் என்பவரை இம்ரான் திருமணம் செய்து கொண்டார். 9 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு 2004-ம் ஆண்டு விவாகரத்து ஏற்பட்டது. இவர்களுக்கு 2 மகன்கள் பிறந்தனர். தற்போது டிவி நிருபர் ரேஹம் கானுடனான திருமண உறவு 10 மாதகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு பரஸ்பர புரிதல் அடிப்படையில் முடிவுக்கு வந்தது. இம்ரான் கானின் …
-
- 3 replies
- 1k views
-
-
தொடரும் அகதிகள் துயரம்: 13 குழந்தைகள் உட்பட 22 பேர் கடலில் மூழ்கி பலி துருக்கியிலிருந்து கீரீஸுக்கு வந்த அகதிகள் படகு மூழ்கியது, நீரில் தத்தளிப்பவர்களை காப்பாற்றும் மீட்புப் பணியினர். | படம்: ஏ.எஃப்.பி. ஐரோப்பாவுக்குள் எப்படியாவது நுழையும் முயற்சியில் கிரீஸ் நாட்டு காலிம்னோஸ் மற்றும் ரோட்ஸ் தீவு நோக்கி வந்த அகதிகள் படகு கடலில் மூழ்கி 22 பேர் பலியாகியுள்ளனர். இதில் 13 பேர் குழந்தைகள். ஆனால், 144 பேர் காப்பாற்றப் பட்டதாக கிரீஸ் நாட்டு துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனர். வெள்ளிக்கிழமையான இன்று காலை காலிம்னோஸ் தீவில் 19 சடலங்கள் கரையொதுங்கின. இதில் 6 பெண்கள், 10 குழந்தைகள் அடங்கும். துருக்கியிலிருந்து படகில் காலிம்னோஸ் தீவுக்கு இந்த அகதிகள் வந்துள்ளனர். இதே போல் ரோட்ஸ் அர…
-
- 1 reply
- 667 views
-
-
பின்லேடன் கொலையின் பின்னணியில் இருந்தவர்கள் பற்றி அம்பலமானது பின்லேடன் கொலையில் ஒபாமாவுக்கு சட்ட வழிமுறைகள் வகுத்து தந்தது 4 வக்கீல்கள்தான் என்பது உள்ளிட்ட இரகசிய தகவல்கள் அம்பலத்துக்கு வந்துள்ளன. அமெரிக்காவில் வாஷிங்டன் பென்டகன் இராணுவ தலைமையகம் மீதும், நியூயோர்க் உலக வர்த்தக மையம் மீதும் 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் திகதி விமானங்களை மோதி அல்கொய்தா தீவிரவாதிகள் கொடூர தாக்குதல்கள் நடத்தி 3,000 பேரை கொன்று குவிக்க பின்னணியில் இருந்து இயக்கியவர், அந்த இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடன். அந்த தாக்குதல் நடந்து 10 ஆண்டுகள் கழித்து, பின்லேடன் பாகிஸ்தானில் அப்போதாபாத்தில் பதுங்கி இருந்தபோது, 2011-ம் ஆண்டு மே மாதம் 2-ம் திகதி அமெரிக்காவின் அதிரடி தாக்குதலில் கொல்லப்பட்…
-
- 0 replies
- 577 views
-
-
வரதாபாய், ஹாஜி மஸ்தான்... மும்பையை ஆண்ட தமிழ் தாதாக்கள்! வேலுநாயக்கராக வந்த கமல்ஹாசனை எல்லோருக்கும் தெரியும். 'நாயகன்' கதைக்கு கருவாக இருந்தவர்தான் மும்பையின் பிரபல டான் வரதாபாய் என்ற வரதராஜ முனுசாமி முதலியார். இப்போதைய மும்பை நிழலுக தாதாக்கள் தாவூத் இப்ராஹிம், சோட்டா ராஜன், சோட்டா சகீல் போன்றவர்களுக்கெல்லாம் இவரும், ஹாஜி மஸ்தான் என்ற மற்றொரு தமிழரும்தான் முன்னோடிகள். நடிகர் திலீப்குமார், அவரது மனைவி சாயீரா பானுவுடன் மஸ்தான் மஸ்தான் ராமநாதபுரம் மாவட்டம் பனைகுளத்தை சேர்ந்தவர். ஆனால் இவர்களது 'தாதா வாழ்க்கை' தாங்கள் சார்ந்த தமிழ் சமுதாயத்தை காக்கவே பெரும்பாலும் உதவியதாக சொல்லப்படுவதுண்டு. தென் தமிழகத்தில் தூத்துக்குடியில் பிறந்த வரதராஜ முதலியார்,…
-
- 0 replies
- 1k views
-
-
சீனாவின் ஒரு குடும்பம் ஒரு குழந்தை கொள்கை முடிவுக்கு வருகிறது சீனா பல தசாப்தங்களாக அமலில் வைத்திருந்த ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்ற கொள்கையை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டதாக ஷின்ஹுவா செய்தி நிறுவனம் கூறுகிறது. இனி எல்லா தம்பதியரும் இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை ஒன்றை மேற்கோள் காட்டி , அரச செய்தி நிறுவனமான ஷின்ஹுவா கூறுகிறது. சீனாவில் குழந்தைப்பேறு விகிதத்தைக்குறைக்கவும், மக்கள் தொகை அதிகரிப்பு விகிதத்தை மந்தப்படுத்தவும் இந்த சர்ச்சைக்குரிய கொள்கை தேசிய அளவில் 1979ல் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் சீனாவின் முதியார் பிரச்சனை பற்றிய கவலைகள் காரணமாக இந்தக் கொள்கை மாற்றப்படவேண்டும் என்ற அழுத்தங்கள் தோன்றின. இந்…
-
- 1 reply
- 560 views
-
-
உலகை உலுக்கிய வியட்நாம் போரில் காயமடைந்த சிறுமிக்கு இப்போது சிகிச்சை! (வீடியோ) 1972-ம் ஆண்டு வியட்நாமில் உள்நாட்டுப் போர் நடந்தபொழுது தெற்கு வியட்நாம் வீசிய பெட்ரோலிய குண்டு (நாப்பம்) வெடித்து, கிம் ப்ஹுக் என்ற சிறுமியின் உடையில் நெருப்பு பற்றிக் கொள்ள, தனது உடைகளை எல்லாம் கழற்றி விட்டு நிர்வாணமாக சில சிறுவர்களுடன், ராணுவ வீரர்கள் மற்றும் குண்டுபுகையின் பின்னணியோடு அலறியபடி ஓடிவந்த எட்டு வயதே நிரம்பிய அந்த சிறுமியை புகைப்படமெடுத்தார் நிக்வுட். அவர் எடுத்த அந்த புகைப்படம், 19 வருடங்களாக நடைபெற்ற உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வந்தது. இந்தப் புகைப்படத்தை எடுத்த நிக்வுட்க்கு புகைப்படத்துறையின் உயரிய விருதான புலிட்சர் விருதும் கிடைத்தது. ஆனால், கடந்த 40 ஆண்டு காலமாக …
-
- 0 replies
- 1.1k views
-