உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26679 topics in this forum
-
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில், போலீஸ் சீருடையில் சென்று, சிறைக் காவலர்களுடன் சண்டையிட்டு டிரான்ஸ்பார்மர்களைத் தகர்த்து சிறையில் இருந்த 300 கைதிகளை அதிரடியாக விடுவித்துள்ளனர் தாலிபன் தீவிரவாதிகள். பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் உள்ள தேரா இஸ்மாயில் கான் என்ற பகுதி பாகிஸ்தானின் பழங்குடியினர் வாழும் தெற்கு வரிசிஸ்தான் எல்லையில் உள்ளது. இங்குள்ள சிறைச்சாலை ஒன்றில் சுமார் 5000 கைதிகள் உள்ளனர். அவர்களுள் 250 பேர் கொடூரமான தீவிரவாதிகள். நேற்று மாலை அச்சிறைக்கு போலீஸ் சீருடையில் வந்த 150க்கும் மேற்பட்ட தாலிபன் தீவிரவதிகள் உள்ளே வெடிகுண்டுகளை வீசியுள்ளனர். அவர்களின் அதிரடித் தாக்குதலால் சிறையின் வெளிப்புறத் தடுப்புச் சுவர் சுக்கு நூறானது. தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக…
-
- 0 replies
- 232 views
-
-
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் அ.தி.மு.கவுக்கு துணை நிற்பதாக தி.மு.கவினர் குற்றம் சாட்டியுள்ளனர். சென்னையில் சமத்துவ மக்கள் கட்சி கூட்டமானது காமராஜர் பிறந்த நாள்விழா, கட்சித் தலைவரான சரத்குமார் பிறந்த நாள் விழா, நலத்திட்ட உதவிகள் விழா என முப்பெரும் விழாவை நடத்தியுள்ளது. இவ்விழாவில் கலந்து கொண்டு பேசிய சரத்குமார் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.கவுக்கு ஒரு இடம் கூட கிடைக்கக் கூடாது என்று கூறினால் நான் ஜால்ரா அடிப்பதாக சொல்வார்கள். ஆனால் பதவியில் அமர்ந்துவிட வேண்டும் என்பது நமது எண்ணம் அல்ல. அனைவராலும் நேசிக்கப்படும் போதுதான் ஒருவனால் தலைவனாக முடியும். மாற்றம் என்பது ஒவ்வொருவரின் சிந்தனையிலும் வர வேண்டும். அதற்காக நீங்கள் சிந்திக்க வேண்டும். மே…
-
- 0 replies
- 447 views
-
-
சிறுவயதினர் பாலியல் தொழிலில் ஈடுபடுவதை தடுக்கும்வகையில் அமெரிக்க புலனாய்வுத்துறை சென்ற வார இறுதியில் நாடு முழுவதும் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டது. சமூக ஊடக தளங்களில் இது போன்ற விபச்சாரங்கள் நடைபெறுவதும், நெடுந்தொலைவு பயணங்களில் டிரக்குகள் நிறுத்தப்படும் இடங்களில் நடைபெறும் இத்தகைய காரியங்களும் சோதனையாளர்களால் கண்காணிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த மூன்று தினங்களாக 230 சட்ட அமலாக்கப்பிரிவினர் 76 நகரங்களில் நடத்திய இந்த சோதனைகளில், 150க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 105 இள வயதினர் இவர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் 13 முதல் 17 வயதுக்குட்பட்டவர்கள் ஆவார்கள். குழந்தை விபச்சாரம் அமெரிக்கா முழுவதும் உள்ள ஒரு தொடர் அச்சுறுத்தலாகும். இ…
-
- 0 replies
- 313 views
-
-
(டார்ஜிலிங் மலையகத்தில் வேலைநிறுத்தப் போராட்டத்தால் சுற்றுலாவும் தேயிலை உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்படும்) இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் கூர்க்கா சமூக மக்கள் மூன்று நாள் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதால் தேயிலை உற்பத்திக்குப் பேர்போன டார்ஜிலிங் மலையகத்தில் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது. நேபாளி மொழிபேசும் கூர்க்கா இன மக்களுக்காக தனியான மாநிலம் கோரி மீண்டும் பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ள கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா (ஜிஜேஎம்) கட்சியினரே இந்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதனையடுத்து, டார்ஜிலிங் மலையக பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்காக பெருமளவிலான இராணுவ துணைப்படையினரும் போலிசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த வேலைநிறுத்த…
-
- 3 replies
- 550 views
-
-
வட கொரியா அரசு தனது மக்களை கடுமையான கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றது. அந்த வகையில் தற்போது அந்நாட்டு மக்கள் எவ்வாறான சிகை அலங்காரங்களைச் செய்யவேண்டும் என்பதையும் படங்களாக வெளியிட்டுள்ளது. இப்படி ஒரு கட்டுப்பாட்டை விதித்தது வடகொரியாவின் தற்போதைய இளம் அதிபர் கிம் ஜோங் உன் தான். ‘நம் நாட்டு மக்கள் இப்படித் தான் முடி வெட்டிக்கொள்ள வேண்டும்’ என்று 28 விதமான சிகையலங்காரப் பட்டியலை வெளியிட்டுள்ளார். இதில் ஆண்களுக்கு 10 வகையும், பெண்களுக்கு 18 வகையும் அடங்கியுள்ளன. ஆண்கள் கண்டிப்பாக 15 நாட்களுக்கு ஒருமுறை முடி வெட்டி ஆக வேண்டும். சாதாரண ஆண்களுக்கு அதிக பட்ச முடி நீளம் 5 சென்றி மீற்றர் எனவும், இராணுவத்தினருக்கு 7 செ.மீ எனவும் வரையறை உண்டு. இந்த 28 சிகையலங்கார வகைகளைத் …
-
- 3 replies
- 548 views
-
-
ஹைதராபாத்: தேர்தல்கள் நெருங்குவதால் ஆந்திர மாநிலத்தை இரண்டாகப் பிரிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. காங்கிரஸின் இந்த முடிவால் அக்கட்சிக்கு லாபமா? நட்டமா? என்ற அரசியல் கணக்கும் ஆந்திராவில் ரெக்கை கட்டி பறக்கிறது. லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு நம்பிக்கை தரக் கூடிய மாநிலங்களில் ஆந்திராவும் ஒன்று. ஆந்திராவின் தெலுங்கானாவில் 117 சட்டசபை தொகுதிகளும் 17 லோக்சபா தொகுதிகளும் உள்ளன. கடலோர ஆந்திராவில் 123 சட்டசபை தொகுதிகளும் 17 லோக்சபா தொகுதிகளும் உள்ளன. ராயலசீமாவில் 52 சட்டசபை தொகுதிகளும் 8 லோக்சபா தொகுதிகளும் உள்ளன. அண்மைய தேர்தல் கருத்துக் கணிப்புகளில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி 36% வாக்குகளையும் தெலுங்குதேசம் 21% வாக்குகளையும் காங்கிரஸ் 15%, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 8%, ப…
-
- 4 replies
- 475 views
-
-
பாரசீக வளைகுடாவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட இராட்சத கடல் வாழ் உயிரினம் எது என்பது தொடர்பில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஈரானிய கடற்படையினரே இதனை முதன் முதலாக கண்டுபிடித்துள்ளனர். பின்னர் குறித்த உயிரினத்தின் படங்கள் ஈரானிய இணையத்தளமொன்றில் வெளியாகியது. அதன்பின்னரே இது என்ன உயிரினமாக இருக்குமென விவாதம் தொடங்கியது. பலர் இது ஒரு வகை திமிங்கிலமே எனத் தெரிவித்துள்ளனர். ஆராய்ச்சியாளர்களும் இதனையே தெரிவிக்கின்றனர். ஆனால் திமிங்கிலத்தின் எப்பிரிவைச் சார்ந்தது என்பதை உறுதியாகக் கூற முடியாமல் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். கடலில் இத்தகைய மர்ம விலங்குகள் கண்டுபிடிக்கப்படுவதும், கரையொது…
-
- 2 replies
- 468 views
-
-
ஈராக் தலைநகர் பாக்தாதிலும் அதைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளிலும் இன்று 17 கார் குண்டுகள் வெடித்ததில் 55 பேர் கொல்லப்பட்டனர். 168 பேர் காயமடைந்தனர். பாக்தாதிலும், ஷியா பிரிவு மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் அதன் புறநகர்ப்பகுதிகளிலும் இன்று 17 கார் குண்டுகள் வெடித்ததாக போலீஸார் தெரிவித்தனர். ஒரு மணிநேரத்துக்குள் இந்த குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இவற்றில் மிகவும் சக்திவாய்ந்த 2 குண்டுகள் பாக்தாதின் கிழக்குப்பகுதி புறநகரான சதர் நகரில் வெடித்தன. இத்தாக்குதலில் 9 அப்பாவிப் பொதுமக்கள் உயிரிழந்ததாகவும் 33 பேர் காயமடைந்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர். இதனிடையே, ஹரியா புறநகர்ப் பகுதியில் 2 தனித்தனி கார் குண்டுகள் வெடித்ததில் 6 பேர் இறந்தனர். 23 பேர் காயமடைந்தனர்.…
-
- 0 replies
- 202 views
-
-
தற்போதைய சூழலில் லோக்சபா தேர்தல் நடைபெற்றால் காங்கிரஸ் தலைமையிலான ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியைவிட பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கூடுதல் இடங்களைப் பெறும் என்று தி ஹிண்டு- சி.என்.என். ஐபிஎன் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தற்போதைய சூழலில் தேர்தல் நடைபெற்றால் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியானது 172 முதல் 180 இடங்கள் வரை கைப்பற்றும். அக் கூட்டணி 29% வாக்குகளைப் பெறும். இக்கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சியானது 156-164 இடங்களைக் கைப்பற்றலாம். அதாவது 27% வாக்குகள் கிடைக்கும். கடந்த தேர்தலில் 18.8% வாக்குகள் கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் கூட்டணிக் கட்சிகள் 13-19 எம்.பிக்கள் (2%) …
-
- 0 replies
- 327 views
-
-
ஒரு சிறு கத்தியை வைத்துக் கொண்டு street car ஒன்றினுள் நின்று கொண்டு இருக்கின்றான். அவனிடம் வேறு ஆயுதங்கள் இருப்பதாகவும் தெரியவில்லை. Street car இல் வேறு எந்த பயணிகளும் இல்லை. அதன் சாரதி கூட வெளியேறி விட்டார். அவன் மற்றவர்களை தாக்கப் போகின்றேன் என்று கூட சொல்லவில்லை. வெறுமனே யாருமற்ற Steer car ஒன்றினுள் நின்று கொண்டு இருக்கின்றான். பொலிசார் அவனது கத்தியை கீழே போடச் சொல்லி மிகச் சில தடவைகள் மாத்திரம் உத்தரவிடுகின்றனர். அவ்வாறு கத்தியை கீழ போடச் சொல்லி உத்தரவிட்ட ஒரு சில வினாடிக்குள் பொலிசாரின் 9 துப்பாக்கி குண்டுகள் அவனை நோக்கி விரைகின்றன. அந்த 18 வயது ஆன, கனவுகள் பல சுமந்த, இளைஞன் கொல்லப்படுகின்றான்...... இது நடந்தது ஆபிரிக்காவிலோ அல்லது சி…
-
- 3 replies
- 542 views
-
-
உலக முழுவதும் போக்குவரத்து துறையில் ரயில்களின் பங்கு மிக இன்றியமையாததாக இருக்கிறது. பெருகி வரும் போக்குவரத்து தேவைகளை நிறைவு செய்வதில் ரயில்கள் போக்குவரத்து துறையின் முதுகெலும்பாக மாறியுள்ளன. மக்களின் தேவை மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் தாக்கம் காரணமாக கனவிலும் நினைத்துபார்த்திராத அளவுக்கு தற்போது ரயில் போக்குவரத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக, புல்லட் ரயில்கள் என்றழைக்கப்படும் அதிவேக ரயில்கள் பல்வேறு வெளிநாடுகளில் போக்குவரத்து துறையில் புரட்சியை ஏற்படுத்தி வருகின்றன. இந்தியாவிலும் விரைவில் புல்லட் ரயில்களை இயக்குவதற்கான முயற்சிகள் தீவிரமைடந்து வரும் இந்த வேளையில் உலகின் டாப்-10 புல்லட் ரயில்களின் விபரங்களை ஸ்லைடரில் காணலாம். ஜப்பான் புல்லட் ரயில் …
-
- 5 replies
- 1.2k views
-
-
காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி சென்ற ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் அமேத்தியில் மத்திய ரிசர்வ் படை போலீசார் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி நேற்று அங்கு சென்றார். அவருடன் அவரது சகோதரி பிரியங்காவும் சென்றிருந்தார். விழாவை முடித்துக் கொண்டு ராகுல், மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டே, பிரியங்கா ஆகியோர் ஹெலிகாப்டர் மூலம் அமேத்தியில் இருந்து டெல்லி கிளம்பினர். அப்போது மோசமான வானிலை காரணமாக அவர் சென்ற ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. நல்ல வேளையாக பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. http://www.seithy.com/breifNews.php?newsID=88489&category=IndianNews&language=tamil
-
- 5 replies
- 570 views
-
-
ஐரோப்பிய நாடுகளில் இன்று கடும் வெப்பம் நிலவியது. இத்தாலியில் பெரும்பாலான பகுதிகளில் 40பாகைக்கு மேல் வெப்பம் காணப்பட்டது. சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, லண்டன் போன்ற இடங்களில் சராசரியாக 30பாகைக்கு மேல் வெப்ப நிலை காணப்பட்டது. இதனால் பெரும்பாலான மக்கள் ஆற்றங்கரை மற்றும் கடற்கரை ஓரங்களிலேயே பகல் பொழுதை கழித்து வருகின்றனர். இதேவேளை ஐரோப்பாவில் சிறந்த கடற்கரையாக விளங்கும் இத்தாலி ரிமினி கடற்கரை பகுதிக்கு தினசரி ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட உள்ளுர் மற்றும் வெளிநாட்டு உல்லாச பிரயாணிகள் சென்று வருகின்றனர். நீச்சல் அடிப்பதற்கு மிகவும் பாதுகாப்பான கடற்கரையாக இத்தாலி ரிமினி கடற்கரை கருதப்படுகிறது. - See more at: http://www.thinakkathir.com/?p=51458#sthash.EWIcVeoz.dpuf
-
- 0 replies
- 404 views
-
-
பறக்கும் தட்டில் 'பாயா'...!! பிரித்தானியாவிலுள்ள லண்டன் மாநகரில் "யோ சுசி (Yo Sushi)" என்ற ஜப்பானிய உணவகம், தனது வாடிக்கையாளர்களுக்கு தொலை தூரத்திலிருந்து 'ரிமோட் கன்ட்ரோல்' மூலம் இயங்கும் பறக்கும் தட்டில் (இத்தட்டிற்குப் பெயர் "ஐ ட்ரே" ) சுவையான பர்கர் மற்றும் பாயா உணவு வகைகளை பரிமாறுகின்றனர். இத்தட்டு மணிக்கு 25 கி.மீ வேகத்தில் சுற்றிப்பறந்து 50 மீட்டர் எல்லைவரையுள்ளவர்களை கவர்கிறது. http://youtu.be/y9RKXO1rr7g உணவு பரிமாறும் வேலையாட்கள், ஐபாட் எனப்படும் மொபைல் கருவி மூலம் பறக்கும் தட்டின் அசைவுகளை கண்காணித்து ஒழுங்குபடுத்துகின்றனர். சமையல் அறையியுள்ள சமையற்காரர்கள், பறக்கும் தட்டில் பொருத்தப்பட்டுள்ள புகைப்படக் கருவியின் மூலம் உ…
-
- 5 replies
- 932 views
-
-
எனது தலைமையிலான மேற்கு வங்காள மாநில அரசை கலைக்க மத்திய அரசு சதி செய்து வருகிறது என மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். மாநில பட்ஜெட்டை நிறைவேற்ற நேற்று மேற்கு வங்காள மாநில சட்டசபையின் சிறப்புக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது சட்டசபையில் மம்தா பானர்ஜி பேசியதாவது:- எனது தலைமையில் ஆட்சி அமைந்த பின்னர் டார்ஜீலிங் மலைப் பகுதியிலும், மாவோயிஸ்ட்களின் ஆதிக்கம் நிறைந்த ஜங்கிள்மகால் பகுதியிலும் அமைதி நிலவி வருகிறது. இந்த அமைதியை சீர்குலைக்கவும் மாநில அரசின் நடவடிக்கைகளில் தடையை ஏற்படுத்தவும் மத்திய அரசு தனது ஏஜென்சிகளின் மூலம் முயற்சித்து வருகிறது. கடந்த கால ஆட்சியின்போது 2003ல் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் கலவரங்களில் 40 பேர் பலியாகினர். 2008 உள்ளாட்சி தேர்தலில் 35 பேர் பல…
-
- 0 replies
- 259 views
-
-
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா – ஆஸி கூட்டு நடவடிக்கை!? இலங்கையின் பாதுகாப்பு அதிகாரிகளின் தொலைபேசிகள் அவுஸ்திரேலியாவின் பையின் கெப் என்ற இடத்தில் இருந்தே ரகசியமான முறையில் ஒட்டு கேட்கப்படுவதாகவும் அந்த இடம் அமெரிக்காவின் ரகசியமான ஒரு மையம் எனவும் தெரியவந்துள்ளது. ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் உள்ள அமெரிக்க புலனாய்வு பிரிவின் முன்னாள் அதிகாரி எட்வர்ட் ஸ்னோடன், இந்த ரகசியம் மையம் தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். எக்ஸ் கியாதோர் என்ற ரகசிய நடவடிக்கையின் கீழ், உலகில் உள்ள முக்கியஸ்தர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் தொலைபேசி உரையாடல்கள் மேற்படி ரகசிய மையத்தில் இருந்து டெப் செய்யப்படுகிறது என ஸ்னோடன் கூறியுள்ளார். அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகவர் அமைப்பினால் இந்த ரகசிய ம…
-
- 2 replies
- 674 views
-
-
நாட்டின் பிரதமர் பதவிக்கு மோடி வருவதை எப்படியும் தடுப்பேன் என்றும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் பதவிக்கு மிகவும் பொருத்தமானவர் என்றும் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார். நாட்டின் பிரதமர் பதவிக்கு ராகுல் காந்தியும் நரேந்திர மோடியும் தகுதியானவர்கள் அல்ல என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே விமர்சித்திருந்தார். இந்நிலையில் பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய லாலு பிரசாத் யாதவ், ராகுல் காந்திக்கு பிரதமர் வாய்ப்பை இந்திய மக்கள் கொடுக்க வேண்டும். ராகுல் காந்திக்கு எதிராக எந்த கருத்தும் இல்லை. ராகுலுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் அவர் சிறந்த பிரதமர் என்பதை நிருபித்து காட்டுவார். பிரதமர் பதவிக்கு ராகுல் காந்தி மிகவும் பொருத…
-
- 1 reply
- 438 views
-
-
அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த மாணவிகளுக்கு உடை அணிய விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. லக்னௌவில் உள்ள அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவியர் விடுதியில் ஜீன்ஸ், டிசர்ட் அணியவும், இன்டர்நெட் பார்க்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. கவர்ச்சியான உடை அணிந்தால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும், என்று எச்சரிக்கப்பட்டிருந்தது. அங்குள்ள 6 விடுதிகளிலும் இந்த விதிமுறை கட்டாயம் பின்பற்றப்பட்டு வந்தது. மேலும் இந்த விடுதி மாணவிகள் சினிமாவிற்கும், ரெஸ்டாரென்டிற்கும் போகக்கூடாது. இன்டர்நெட் பார்க்கவும் தடை இருந்தது. தங்களுடைய விடுதி டைனிங்ஹாலில் மட்டுமே பெண் மாணவியர்கள் உணவு உட்கொள்ள வேண்டும்.தனியாக செல்போன் வைத்து பேசவும், தடை இருந்தது. இந்த நில…
-
- 0 replies
- 438 views
-
-
அமெரிக்காவில் இருந்து தப்பிய ஸ்நோடனை ஒப்படைத்தால் அவருக்கு தூக்கு தண்டனை கொடுக்க மாட்டோம் என்று ரஷ்யாவிடம் அமெரிக்காவின் அட்டர்னி ஜெனரல் எரிக் ஹோல்டர் தெரிவித்துள்ளார். உலக நாடுகளை அமெரிக்கா எப்படியெல்லாம் உளவு பார்த்தது என்பதை அம்பலப்படுத்தியவர் ஸ்னோடென். இதனால் அதிர்ச்சி அடைந்த அமெரிக்கா அவர் மீது தேசத் துரோக வழக்கைப் பதிவு செய்தது. இதைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறிய ஸ்னோடென் ஹாங்காங்கில் தஞ்சமடைந்தார். பின்னர் ரஷியாவின் விமான நிலையத்தில் கடந்த ஒரு மாத காலமாக தங்கியிருக்கும் அவர் ரஷியாவிடம் அடைக்கலம் கோரினார். ஆனால் அந்நாடோ, இனியும் அமெரிக்கா பற்றிய ரகசியங்களை வெளியிடக் கூடாது என்று நிபந்தனை விதித்தது. இருப்பினும் ஸ்னோடெனை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அமெரிக்…
-
- 0 replies
- 419 views
-
-
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடப் போவதாக நடிகர் சாய்குமார் தெரிவித்துள்ளார். தமிழில் அந்தப்புரம் படம் மூலம் அறிமுகமானவர் சாய்குமார். வேட்டிய மடிச்சுக்கட்டு, திருவண்ணாமலை, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்துள்ள இவர் பாரதீய ஜனதா கட்சியில் உள்ளார். இவர் வருகிற பாராளுமன்ற தேர்தலில் அக்கட்சி சார்பில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பெங்களூரில் நிருபர்களிடம் கூறுகையில், "இன்றைக்கு அரசியல் என்பது வயதானவர்களும், பணக்காரர்களும் இருக்கும் இடமாகிவிட்டது. இந்த நிலை மாற வேண்டும். படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும். நான் வருகிற பாராளுமன்ற தேர்தலில் கர்நாடக மாநிலம் சிக்மல்லா…
-
- 0 replies
- 324 views
-
-
இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் நடைபெறவிருந்த அமைச்சரவைக் கூட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், http://tamilworldtoday.com/?p=24553
-
- 30 replies
- 1.2k views
-
-
அரவிந்தர் ஆசிரமத்தில் சட்டவிரோத செயல்கள் நடப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து அதை கையகப்படுத்தி நிர்வகிக்க புதுவை அரசு ஆலோசித்து வருகிறது. புதுச்சேரி சட்டசபையில் அரவிந்தர் ஆசிரமத்தில் சட்டவிரோத செயல்கள் நடப்பதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் புகார் கூறினர். மேலும் அரசே அரவிந்தர் ஆசிரமத்தை நிர்வகிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் ரங்கசாமி, அரவிந்தர் ஆசிரமத்தை நிர்வாகிக்க அரசு அதிகாரிகளை நியமிப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி சட்டத் துறையிடம் ஆலோசனை கேட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார். http://tamil.oneindia.in/news/2013/07/26/tamilnadu-puducherry-govt-will-take-over-aurobindo-ashram-179920.html
-
- 0 replies
- 394 views
-
-
டெல்லி: கிழக்கு லடாக் பகுதியில் சீன ராணுவம் மீண்டும் ஊடுருவியதாக தகவல் கிடைத்துள்ளது. சீன ராணுவ வீரர்கள் 50 பேர் குதிரைகளில் கடந்த 16ம் தேதி கிழக்கு லடாக் பகுதியில் உள்ள சுமார் பகுதிக்குள் ஊடுருவியுள்ளனர். மேலும் அங்கு அவர்கள் கடந்த 17ம் தேதி காலை வரை தங்கியுள்ளனர் என்று தகவல் கிடைத்துள்ளது. சீன ராணுவ வீரர்கள் இந்திய எல்லைக்குள் வந்ததைப் பார்த்த நம் வீரர்கள் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் சீன வீரர்களோ இது எங்கள் பகுதி நீங்கள் ஆக்கிரமித்த எங்கள் பகுதியில் இருந்து வெளியேறுங்கள் என்று இந்திய வீரர்களிடம் தெரிவிக்கும் வகையில் பேனர்கள் வைத்துள்ளனர். ஒரு வழியாக 2 நாட்கள் சண்டைக்குப் பிறகு கடந்த 18ம் தேதி அவர்கள் இந்திய எல்லையில் இருந்து வெளியேறியுள்ளனர். இந்த சண்…
-
- 7 replies
- 654 views
-
-
டெல்லி: 1 ரூபாய் செலவிலேயே ஒருவரால் வயிறார சாப்பிட முடியும் என்று மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் மத்திய அமைச்சர் ஃபரூக் அப்துல்லா கூறியுள்ளார். அமைச்சரின் பேச்சு மக்களின் கோப தீயினை தூண்டிவிட்டுள்ளது. கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது என கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அறிவித்த மத்திய திட்டக்குழு, கிராமங்களில் ஒரு நாளைக்கு ரூ.27.20க்கு மேலும், நகரங்களில் ரூ.33.33க்கு மேலும் வருமானம் ஈட்டுபவர்கள் ஏழைகளாகக் கருதப்பட மாட்டார்கள் எனக் கூறியது. மத்திய திட்டக்குழுவின் இந்த அறிவிப்புக்கு பா.ஜனதா உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்தன. இந்த நிலையில், திட்டக்குழுவ…
-
- 0 replies
- 575 views
-
-
வத்திக்கான் தூதரை வெளியேற்ற ஆர்ப்பாட்டம் மலேசியாவிற்கான வத்திக்கானின் முதல் தூதராக நியமிக்கப்பட்டுள்ளவரை விலக்கிக்கொள்ளுமாறு கோரி பல முஸ்லீம் ஆர்வலர்கள் மலேசியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருக்கின்றனர். மலேசியாவிற்கான முதல் வத்திக்கான் தூதரான பேராயர் ஜோசப் மரினோ, 'அல்லா' என்ற வார்த்தையை முஸ்லீமல்லாதவர்களும் பயன்படுத்தலாம் என்ற வாதத்துக்கு ஆதரவு தந்ததற்காக நாட்டிலிருந்து வெளியேற்றப்படவேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர். மலாய் மொழியில் மொழியாக்கம் செய்யப்படும் பைபிள்களிலும் மற்ற இலக்கியப் படைப்புகளிலும் , 'கடவுள்' என்ற பதத்தை , 'அல்லா' என்று மொழி பெயர்க்க உள்ள உரிமை குறித்து ஒரு சட்டரீதியான போராட்டம் நடந்துவருகிறது. அது குறித்து ஆறு மாதங்களுக்கு முன்னர் இந்த முஸ்லி…
-
- 0 replies
- 359 views
-