உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26640 topics in this forum
-
அணுக் கதிர்வீச்சு பாய்ந்த உணவை 30 ஆண்டுகளாக உட்கொண்டிருக்கும் மக்கள்: கிரீன்பீஸ் தகவல் டோக்கியோவில் 2011-ம் ஆண்டு செப்.19-ம் தேதி நடந்த அணு உலை எதிர்ப்பு போராட்டம். | படம்: ஏ.பி. செர்னோபில் அணு உலை வெடித்து 30 ஆண்டுகள் ஆகியும் கதிர்வீச்சு பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் இந்த 30 ஆண்டுகளாக கதிர்வீச்சு பாதிக்கப்பட்ட உணவு, குடிநீர் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளும் அவலநிலை நீடிப்பதாக கிரீன் பீஸ் சுற்றுச்சூழல் அமைப்பு தெரிவித்துள்ளது. 30 ஆண்டுகள் அல்ல இன்னும் எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் கதிர்வீச்சின் தாக்கம் போகப்போவதில்லை என்கிறது கிரீன்பீஸ் ஆய்வு. 1986-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் உலகின் கருப்பு தினமாக மாறிப்போன அன்றைய செர்னோபில் விபத்…
-
- 0 replies
- 239 views
-
-
ரஷ்யாவில் தலைநகர் மாஸ்கோ பிராந்தியத்தில் வடக்கே ராமன்ஸ்கீ என்ற கிராமத்தில், மனநல சிகிச்சை மருத்துவமனையொன்றில் ஏற்பட்ட தீயில் குறைந்தது 36 நோயாளிகளும் 2 மருத்துவப் பணியாளர்களும் எரிந்து உயிரிழந்துள்ளனர். 1950கள் காலப்பகுதியைச் சேர்ந்த, மரப் பலகைகளாலான இந்த மருத்துவமனைக் கட்டடத்தில் பரவிய தீயில் மூன்று பேர் மட்டும் தான் உயிருடன் தப்பியுள்ளனர். அதிகாலைப் பொழுதில் இந்த தீ ஏற்பட்டுள்ளது. பலர் தீயிலிருந்து தப்பமுயன்ற போது கொல்லப்பட்டுள்ளனர். மற்றவர்கள் அவர்களின் படுக்கையிலேயே எரிந்துபோயுள்ளனர். யன்னல்களில் போடப்பட்டிருந்த கம்பிகளே எவரையும் காப்பாற்றி வெளியேற்றமுடியாத அளவுக்குத் தடையாக இருந்துள்ளன. மின்கசிவே தீ ஏற்படக் காரணம் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் தீ வைக்…
-
- 0 replies
- 239 views
-
-
ஆள் கடத்தலில் ஈடுபடும் முக்கிய நபர்களை கண்டுபிடிக்க முடியாமல் திணறும் இன்டர்போல் பெரிய சர்வதேச நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஆள் கடத்தல்காரர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களை கண்டுபிடிக்க முடியவில்லை என சர்வதேச போலிஸ் அமைப்பான இன்டர்போல் தெரிவித்துள்ளது. அவர்களை கண்டுபிடிக்க உதவுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான பொதுமக்களை எல்லைகளுக்கு அப்பால் கடத்தி பெரும் லாபம் ஈட்டியதாக சொல்லப்படும் 26 முக்கிய சந்தேக நபர்களை இன்டர்போல் கைது செய்துள்ளது. இதில், பிரான்ஸிலிருந்து பிரிட்டனுக்கு சின்ன படகுகள் மூலம் மக்களை கடத்திய அல்பேனிய கூட்டத்தினரும் அடங்குவார்கள். கடந்தாண்டு பத்து லட…
-
- 0 replies
- 239 views
-
-
லிவர்பூல் வாகனத் தரிப்பிட தீ தீவிபத்து: 1,600ற்கு மேற்பட்ட வாகனங்கள் தீயிற்கு இரையாகின… பிரித்தானியாவின் வடபகுதியின் லிவர்பூல் நகரில் பல மாடிகளைக் கொண்டு அமைந்துள்ள வாகனத் தரிப்பிடமொன்றில் திடீரென தீ பரவியதில், சுமார் ஆயிரத்து 600ற்கு மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளன.இந்த நகரில் அமைந்துள்ள கிங்ஸ் டொக் வாகனத் தரிப்பிடத்திலேயே, நேற்று ஞாயிற்றுக்கிழமை (31.12.17) தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வாகனத் தரிப்பிடத்துக்கு அருகில் அமைந்துள்ள குடியிருப்புத் தொகுதியில் ஒரே புகைமூட்டமாகக் காணப்பட்டதால், அக்குடியிருப்புத் தொகுதியில் வசித்துவந்த குடியிருப்பாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு தற்காலிக இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக, காவற்த…
-
- 0 replies
- 239 views
-
-
கனடா அரசியலில் கலக்கும் குஜராத் வம்சாவளியினர்: 4 பேர் வேட்பாளர்களாக போட்டி! கனடாவின் பாராளுமன்ற தேர்தலில் முன் எப்போதும் இல்லாத வகையில் பஞ்சாபிகளை பின்தள்ளி குஜராத் வம்சாவளியினர் வேட்பாளர்களாக களத்தில் ஆதிக்கம் செலுத்த தொடங்கி உள்ளனர். கனடாவில் 2025ம் ஆண்டு அக்டோபரில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், பிரதமராக பதவியில் இருந்த ஜெஸ்டின் ட்ரூடோவுக்கு ஆளும் லிபரல் கட்சியில் கடும் எதிர்ப்பு எழவே அரசியல் காட்சிகள் மாறின. தனது பதவியை ஜெஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்துவிட பெரும்பான்மை ஆதரவுடன் கட்சியின் தலைவர் மற்றும் பிரதமராக மார்க் கார்னி தெரிவு செய்யப்பட்டார். அதன் பின்னர் பாராளுமன்றத்தை கலைத்த அவர், ஏப்ரல் 28ல் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்தார். பாராளுமன்ற தேர்தலுக்கான ஏற்…
-
- 0 replies
- 239 views
-
-
ஏக்வடோர் சிறைச்சாலையில் கலவரம்: 68 பேர் உயிரிழப்பு தென் அமெரிக்க நாடான ஏக்வடோர் சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் குறைந்தது 68 கைதிகள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த செப்டெம்பர் மாதம் முதல் போதைப்பொருள் கடத்தல் கும்பல் மற்றும் சிறைக் கைதிகளுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள் இறந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். நாட்டின் மிகப் பெரிய சிறைச்சாலையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை கலவரம் தொடங்கிய நிலையில் அதனை கட்டுப்படுத்த நூற்றுக்கணக்கான அதிகாரிகள் மற்றும் இராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டனர். இந்நிலையில் தமது சொந்தங்களை இழந்த குடும்பங்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ள அந்நாட்டு ஜனாதிபதி, மோதலினால் இலாபம் …
-
- 0 replies
- 239 views
-
-
இஸ்ரேலின் 3 கைதிகளுக்காக 183 பலஸ்தீன கைதிகள் விடுதலை! இஸ்ரேலுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஐந்தாவது பகுதியாக, 183 பலஸ்தீன கைதிகளுக்கு ஈடாக, மூன்று இஸ்ரேலிய கைதிகள் காசாவில் விடுவிக்கப்பட உள்ளனர். மனிதாபிமான உதவிகள் மற்றும் பிற முக்கிய பொருட்கள் காசாவிற்குள் கொண்டு செல்வதைத் தடுப்பதன் மூலம் இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக ஹமாஸ் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து கைதிகள் 5 ஆவது தடவையாக விடுவிக்கப்படவுள்ளனர். இடிபாடுகளுக்கு அடியில் 12,000க்கும் மேற்பட்ட சடலங்களில் சில இஸ்ரேலிய கைதிகளின் எச்சங்கள் இருப்பதால், அவற்றை ஒப்படைக்க முடியாமல் போகலாம் என்று ஹமாஸ் கூறியுள்ளது. மேலும் இஸ்ரேல் பளு அதிகமான உபகரணங்கள் என்கிளேவ் பகுதிக்குள் நுழைவதைத் தடுக்கிறது …
-
- 0 replies
- 239 views
-
-
தீக்குளிக்கத் தூண்டியதாக திபெத் புத்த துறவிக்கு சீனாவில் மரணதண்டனை! [Friday, 2013-02-01 08:11:33] சீனாவில் திபெத்தைச் சேர்ந்த புத்த மதத் துறவிக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அவரது உறவினருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவுக்கு எதிராகப் போராட்டம் நடந்து வரும் திபெத்தில் இளைஞர்களை தீக்குளிக்க தூண்டியதான குற்றச்சாட்டில் இவர்களுக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு சிச்சுவான் மாகாண நீதிமன்றம் இத்தீர்ப்பை அளித்துள்ளது. அதில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மொத்தம் 8 பேரை தீக்குளிக்கத் தூண்டியுள்ளனர். அதில் 3 பேர் இறந்துவிட்டனர். 5 பேர் காப்பாற்றப்பட்டனர். எனவே முக்கியக் குற்றவாளியான புத்தத் துறவி லோராங்க் கோன்சோக்குக்கு …
-
- 0 replies
- 239 views
-
-
அமெரிக்காவை அடையக்கூடிய அணுசக்தி ஏவுகணையை பாகிஸ்தான் உருவாக்குவதாக தகவல்! அமெரிக்காவை அடையக்கூடிய அணுசக்தி முனை கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை (ICBM) பாகிஸ்தான் இராணுவம் ரகசியமாக உருவாக்கி வருவதாக வொஷிங்டனில் உள்ள உளவுத்துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூருக்குப் பின்னர் சீனாவின் ஆதரவுடன் பாகிஸ்தான் தனது அணு ஆயுதங்களை மேம்படுத்த விரும்புவதாக வெளியான தகவல்களுக்கு மத்தியில் இந்த அறிக்கை வந்துள்ளது. அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டிய அந்த அறிக்கை, பாகிஸ்தான் அத்தகைய ஏவுகணையை வாங்கத் தொடர்ந்தால், வொஷிங்டன் அந்த நாட்டை அணுசக்தி எதிரியாக அறிவிக்கும் என்றும் கூறியது. அணு ஆயுதங்களை வைத்திருக்கும் எந்தவொரு நாடும் அமெரிக்காவிற்கு அச்சுறுத்தல…
-
- 1 reply
- 239 views
-
-
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்தும்வரை பாகிஸ்தானுடன் தொடர் இல்லை! : இந்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அதிரடி! பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்தும்வரை பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் இருதரப்பு கிரிக்கெட் தொடரை முன்னெடுக்கப் போவதில்லையென இந்திய மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல் தெரிவித்துள்ளார். இரு அணிகளுக்கும் இடையில் தொடரொன்ரை நடத்துவது தொடர்பில் இந்திய கிரிக்கெட் சபை மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அதிகாரிகள் இன்று டுபாயில் பேச்சுவார்த்தை நடத்துவதை தொடர்ந்தே அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். இதுகுறித்து இந்திய மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல் கருத்து தெரிவிக்கையில் "பாகிஸ்…
-
- 0 replies
- 239 views
-
-
மரியுபோலில்.... இரசாயனத் தாக்குதல் நடத்தப்பட்டதா? பிரித்தானியா விசாரணை! உக்ரைனில் முற்றுகையிடப்பட்ட மரியுபோல் நகரத்தில், ரஷ்ய இரசாயனத் தாக்குதல் நடத்தப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத அறிக்கைகளைத் தொடர்ந்து, விபரங்களைச் சரிபார்க்க பிரித்தானியா அவசரமாகச் செயற்பட்டு வருகிறது என்று வெளியுறவுச் செயலாளர் லிஸ் டிரஸ் கூறியுள்ளார். மரியுபோலில் எந்த உறுதிப்படுத்தப்பட்ட இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவது போரின் கடுமையான விரிவாக்கம் என்று லிஸ் டிரஸ் கூறினார். உக்ரைனின் ஜனாதிபதியான வோலோடிமிர் ஸெலென்ஸ்கி, தனது இரவு நேர காணொளி உரையைப் பயன்படுத்தி ரஷ்யா அத்தகைய சட்டவிரோத ஆயுதங்களை நிலைநிறுத்தலாம் என்று எச்சரித்தார். ஆனால் அவர்கள் ஏற்கனவே அவ்வாறு செய்ததாக அவர் கூறவில்…
-
- 0 replies
- 239 views
-
-
பெருநகர ரொறென்ரோவில்... கொவிட் தடுப்பூசி செலுத்தும், மருந்தகங்கள் தற்காலிகமாக மூடல்! பெருநகர ரொறென்ரோவில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் மருந்தகங்கள் தற்காலிகமாக மூடப்படுகின்றன. ஒன்றாரியோவில் தடுப்பூசி வழங்கல் பற்றாக்குறையால் நோர்த் யோர்க், ஸ்கார்பாரோ, ரொறென்ரோ மற்றும் யோர்க்கில் உள்ள மருந்தகங்கள் பொதுத் தடுப்பூசித் தளங்களை மூடுகின்றன. பதிவை இரத்து செய்கின்றன அல்லது நியமனங்களை ஒத்திவைக்கின்றன. ஸ்கார்பாரோவில் சுமார் 10,000 நியமனங்கள் இரத்து செய்யப்படும். ஏப்ரல் 14ஆம் திகதி இரண்டு மருத்துவமனை மருந்தகங்கள் வழங்கல் சிக்கல்களால் மூடப்படுகின்றன. அவை எப்போது திறக்கப்படும் என்பதற்கான காலக்கெடு தெரியவில்லை.. இதே காரணத்திற்காக நோர்த் யோர்க் பொது மருத்துவமனை ஏப்ரல் 1…
-
- 0 replies
- 239 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * வடகொரிய தலைவரின் தந்தையின் மறுதார மகனான கிம் ஜாங் நாமின் மரணம் தொடர்பில் ஒரு பெண்ணை மலேசிய காவல்துறையினர் கைது செய்துள்ளனர். * அட்லாண்டிக் நாடுகளுக்கான ஒப்பந்தத்துக்கு அமெரிக்கா ஒப்புதல்; நேட்டோ நாடுகளின் இராணுவ செலவை அனைத்து உறுப்பு நாடுகளும் ஏற்க வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தல். * லார்ஸ் மைதானத்தின் மெரில்போர்ன் கிரிக்கெட் கழகம் தனது மின்சாரத்தேவைக்கு நூறு சதவீதம் புதிப்பிக்கப்படக் கூடிய எரிசக்தியை பயன்படுத்தவுள்ளது.
-
- 0 replies
- 239 views
-
-
கூகுள் நிறுவனத்தில் சாதிப் பாகுபாடு: அமெரிக்காவில் தலித் செயற்பாட்டாளர் தேன்மொழி சௌந்தரராஜன் உரை ரத்து - நடந்தது என்ன? 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தேன்மொழி செளந்தரராஜன் அமெரிக்காவில் கூகுள் நிறுவனத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சாதிப் பாகுபாடு குறித்த ஓர் உரையை, சாதி ஆதரவாளர்களின் பலத்த எதிர்ப்புக்கிடையே அந்த நிறுவனம் ரத்து செய்துள்ளது. அமெரிக்காவில் தலித் உரிமைகளுக்காகப் பாடுபடும் தலித் ஆய்வகம் (ஈக்வாலிடி லேப்ஸ்) என்ற குடிமை உரிமை அமைப்பைச் சேர்ந்த செயற்பாட்டாளர் தேன்மொழி சௌந்தரராஜன் இந்த உரையை நிகழ்த்துவதாக திட்டமிடப்பட்டிருந்தது. தலித் வரலாற்று மாதத…
-
- 0 replies
- 239 views
- 1 follower
-
-
டெல்லி: டெல்லி சட்டசபைத் தேர்தலில் பாஜக தனிப் பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்று ஏபிபி நியூஸ் நீல்சன் மூட் ஆப் தி நேஷன் சர்வே தெரிவித்துள்ளது. பாஜகவுக்கு மொத்தம் உள்ள 70 இடங்களில் 32 இடங்கள் கிடைக்கும் என்றும், ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு 27 இடங்கள் கிடைக்கலாம் என்றும் இது கணித்துள்ளது. ஆகஸ்ட்14 முதல் 20 வரை இந்த சர்வே எடுக்கப்பட்டது. மொத்தம் 7084 பேரிடம் கருத்து கேட்டு பெற்றனர். 1998 முதல் டெல்லியை காங்கிரஸ் ஆண்டு வரும் நிலையில் கருத்துக்கணிப்பு மூலம் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்துள்ளன.டெல்லி சட்டசபைக்கு இந்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளது. அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி, பாஜக மற்றும் காங்கிரஸ் இரண்டையும் பாதிக்கும் என்றும் கணிப்பு கூறுகிறது. இந்தக் கட்சிக்கு…
-
- 0 replies
- 239 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பூமியின் மேலோட்டத்தின் பெரும்பகுதி பசால்ட் பாறைகளால் ஆனது, மேலும் இது பூமியின் ஆழமாக பகுதியில் அமைந்துள்ள மர்மமான மலைகளுக்குப் பின்னால் உள்ள பொருளாகவும் இருக்கலாம். கட்டுரை தகவல் எழுதியவர், ஜாரியா கோர்வெட் பதவி, பிபிசி ஃபியூச்சர் 11 ஜூலை 2023 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கண்கள் கூசும் அளவுக்கு பளிச்சென்று வெளிச்சம் பரவியிருந்த கோடைக் காலத்தில் ஒரு நாள். பூமியின் மேலும், கீழும் வெள்ளைச் சுவர் எழுப்பப்பட்டதை போன்று எங்கும் பனிப் படர்ந்திருந்த அண்டார்டிகா நிலப்பரப்பில் நின்ற…
-
- 0 replies
- 239 views
- 1 follower
-
-
அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக மெரிக் கார்லண்ட் நியமனம் - அதிபர் ஒபாமா அறிவிப்பு ! வாஷிங்டன்: அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி பொறுப்புக்கு தமிழர் ஸ்ரீநிவாசன் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மெரிக் கார்லண்ட் என்பவரை அதிபர் ஒபாமா பரிந்துரைத்துள்ளார். அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய அந்தோணின் ஸ்காலியா கடந்த பிப்ரவரி 13ம் தேதி மரணமடைந்தார். அவரது பணியிடத்தை நிரப்ப, நீதிபதிகள் தேர்வு குழு ஆயத்தங்கள் செய்து வந்தன. கீழ்மை நீதிமன்றத்தில் பணியாற்றும் நீதிபதிகள், சீனிவாசன், மெரிக் கார்லண்ட் மற்றும் பவுல் வாட்ஃபோர்ட் ஆகிய மூவர் நடுவே இப்பதவிக்கான போட்டி நிலவி வந்தன. அதிபர் பராக் ஒபாமாவின் சாய்ஸ் 49 வயதாகும் சீனிவாசன் அல்லது 63…
-
- 0 replies
- 239 views
-
-
உலகப் பார்வை: ''கேட்டலோனியா ஸ்பெயினிடம் இருந்து சுதந்திரத்தை விட, சுயாட்சியை பெறலாம்'' இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். "சுவிஸ் பாணியிலான கூட்டாட்சி சுயாட்சியை பெறலாம்" படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஸ்பெயினிடம் இருந்து முழு சுதந்திரத்தை பெறுவதை விட, சுவிஸ் பாணியி…
-
- 0 replies
- 239 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் - பெற்றோர் இன்றி தனியாக ஐரோப்பா வந்த அகதி சிறார்களை பிரிட்டன் ஏற்கும் என்கிறார் பிரிட்டிஷ் பிரதமர். அப்படியான சிறார்கள் பலர் வாழும் கலே முகாமில் இருந்து பிபிசியின் சிறப்பு தகவல். - வங்கதேசத்தில் வலைப்பதிவர்கள், கல்விமான்கள் மற்றும் ஒருபாலுறவு செயற்பாட்டாளர்கள் படுகொலை செய்யப்படுவது குறித்து சர்வதேச கவலைகள் அதிகரிக்கின்றன. - நீர் நாய்களால் ஏற்பட்டுள்ள பிரச்சனை. மீன் தின்னும் இந்த இனத்தால் இங்கிலாந்தில் தீரா தலைவலி.
-
- 0 replies
- 238 views
-
-
வாக்காளர் அட்டை இருந்தால் மட்டுமே மருத்துவ சேவை - ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். வாக்காளர் அட்டை இருந்தால் மட்டுமே மருத்துவ சேவை வாக்காளர் அட்டை இல்லாதவர்களுக்கு மருத்துவ சேவை மறுக்கப்படுவதாக ஆஃபிரிக்காவில் உள்ள புருண்டி நாட்டு மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். இந்த குற்றச்சாட்டுகளை அந்நாட்டு அரசாங்கம் தொடர்ந்து மறுத்து வருகிறது. அமெரிக்க தேர்தல் விவகாரம்- பேனனிடம் விசாரணை 2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியா தலையிட்டதாக கூறப்படுவது குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக, அமெரிக்க வெள்ளை மாளிகையின் முன்னாள் உதவ…
-
- 0 replies
- 238 views
-
-
உய்குர் முஸ்லீம்கள் துன்புறுத்தப்படவில்லை: உறுதிப்படுத்த சீனா வருமாறு பொம்பியோவுக்கு அழைப்பு! உய்குர் முஸ்லீம்கள் துன்புறுத்தப்படவில்லை என்பதை அறிந்துக் கொள்வதற்கு, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோவை நாட்டுக்கு வருமாறு சீனா அழைப்பு விடுத்துள்ளது. சீனாவில் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிரான மனித உரிமை மீறல்களுக்கு காரணமானவர்களுக்கு, அமெரிக்க அரசு அண்மையில் சில தடையுத்தரவுகளை அறிவித்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்காவின் முக்கிய அரசியல் தலைவர்களுக்கு நாட்டுக்குள் நுழைய சீன அரசு தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே கொரோனா வைரஸ் (கொவிட்-19) விவகாரத்தில் நீடித்துவரும் மோதலுக்கு இடையில், இந்த விடயமும…
-
- 0 replies
- 238 views
-
-
அமெரிக்காவின் ஹியூஸ்டனில் பெருவெள்ளம் மோசமான சேதத்தை ஏற்படுத்தியுள்ளதில் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர் ; சரக்கு ரயில்களில் கீழே மறைந்து வரும் குடியேறிகளை தடுக்க, அவர்களை தேடிக் கைது செய்யும் நடவடிக்கையை ஆஸ்திரியா அதிகரித்துள்ளது மற்றும் எகிப்தில் பெண்ணாக பிறந்து ஸ்காட்லாந்தில் ஆணாக மாறியவரின் கதை ஆகியவை ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 238 views
-
-
ஈரானில் பதவியேற்பு விழாவில் ஆளுநர் மீது தாக்குதல் ஈரானில் பதவியேற்பு விழாவில் மேடையில் பேசிக்கொண்டிருந்த ஆளுநரை மர்மநபர் ஒருவர் தாக்கிய காணொளி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. ஈரான், கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தின் புதிய ஆளுநராக அபிதின் கோரம் நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான பதவியேற்பு விழாவில் அபிதின் கோரம் மேடையில் பேசிக் கொண்டிருந்த வேளையில், திடீரென அவ்விடத்துக்கு வந்த மர்மநபர் ஆளுநரின் பின்னந்தலைக்கு தாக்கியுள்ளார். அதன் பின்னர் பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்கள் அந்த நபரை தடுத்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இந்தத் தாக்குதல் சம்பவம் தனிப்பட்ட வெறுப்புக் காரணமாக நடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். அத்துடன்,இந்தத் தாக…
-
- 0 replies
- 238 views
-
-
ராணுவத்தில் திருநங்கைகளுக்கு இடமில்லை': ட்ரம்ப்பின் முடிவுக்கு வலுக்கும் கண்டனங்கள்! 'அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளுக்கு இடம் இல்லை' என்று அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். அமெரிக்க அதிபராகப் பதவியேற்றது முதல் பல்வேறு அதிர்ச்சி அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுவருகிறார், ட்ரம்ப். ஏழு இஸ்லாமிய நாடுகள் மீதான தடை, ஒபாமாவின் சுகாதாரத் திட்டம் ரத்து, ஹெச் 1 பி விசாவில் கட்டுப்பாடு என அடுத்தடுத்து அறிவிப்புகளை வெளியிட்டுவந்தார். இந்நிலையில், தற்போது அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளுக்கு இடம் இல்லை என்று அறிவித்துள்ளார் ட்ரம்ப். அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளைச் சேர்க்கும் திட்டத்தை, முன்னாள் அதிபர் ஒபாமா கொண்டுவந்தார். ட்ரம்ப்…
-
- 0 replies
- 238 views
-
-
பாரீஸ் பருவ நிலை ஒப்பந்தத்தால் அமெரிக்க பொருளாதார வளர்ச்சி முடங்கும்: வெள்ளை மாளிகை பாரீஸ் பருவ நிலை ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியேறுவதை உலக நாடுகளின் தலைவர்கள் தடுப்பது போன்று சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் முகமூடிகள் அணிந்து நடித்து காட்டும் காட்சி | படம்: ஏபி பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தினால் அமெரிக்காவின் பெருளாதார வளர்ச்சி முடங்கும் நிலை ஏற்படும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போதே ட்ரம்ப், பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார், பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம் குறித்து அவர் கடுமையாக விமர்சித்தும் …
-
- 0 replies
- 238 views
-