கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
யார்க்கெடுத்துரைப்போம்? யார்க்கெடுத்துரைப்போம் பாதுகாப்பு படையின் பாதகச்செயலை பிஞ்சுடன் பூவுமாய் செடியைப் பிடுக்கின்றார் நான்கே மாதச் சிசு மார்பில் மூட்டிய அனல் ஆறவில்லை அடுத்து அடுத்து அனலை நெஞ்சில்க் கொட்டுகின்றார் யார்க்கெடுத்துரைப்போம் பாதகர் பாவச்செயலை தம்பி உன்னை அடிக்கும் போது அண்ணா என்று கதறினாயா? :cry: அண்ணா உன்னை அடிக்கும் போது தம்பி என்று கதறினாயா? :cry: கண் முன்னே பாலகரை வதைக்கும் போது மகனே என்று கதறினாயா? :cry: உன் மனைவியைச் சூறை ஆடும் போது கண்ணே என்று கதறினாயா? :cry: யார்க்கெடுத்துரைப்போம் பாதகர் பாவச்செயலை எப்படி எப்படி குமுறலுடன் உம் உயிர் போயிருக்கும் நினைத்து பார்க்கையிலே நெஞ்சம் …
-
- 5 replies
- 1.9k views
-
-
விழுந்தவனைத் தான் இங்கு மாடும் ஏறி மிதிக்குது நொந்தவன் புண்ணில் அம்பு வந்து குத்துதூ சுமைதாங்கி மீதுதான் இடியும் வந்து விழுகிது கட்டிய மனக் கோட்டை எல்லாம் சுக்கு நூறாய்போகுது பரதேசி போலத்தான் இந்த உயிரும் சுத்துது கால்கள் போன போக்கிலே இந்த உயிர் போகுது வாழ்க்கை என்பதே அர்த்த்ம்யின்றி வீணாகப்போகுது முடிவு உள்ள வாழ்கையில் முன்னேற மனம் துடிக்குது பரந்து பட்ட உலகத்தில் இறக்கை இன்றி பறக்கத்துடிக்குது கிடைததே போதும் என்று மனமும் தடுக்குது
-
- 4 replies
- 1.7k views
-
-
நறு மணம் வீசும் மலராக இருந்தால் நானும் உனக்கு முள் வேலியாக இருப்பேன் பயன்தரும் விதையாக நீயும் இருந்தால் அதுக்கு பசளையாக நான் இருப்பேன் எழுத்தாக நீயும் இருந்தால் உன்னை கவிதையாக இங்கு நானும் கோர்த்துடுவேன் வெண்ணிலவாக நீயும் இருந்தால் உன்னை கருமுகிலாக வந்து உன்கற்பை காத்துடுவேன் கண்ணாக நீயும் இருந்தால் உன்னை இமையாக வந்து நானும் காத்திடுவேன் மூக்காக போல நீயும் இருந்தால் நானும் உனக்கு சுவாசம் தந்துடுவேன் வாய் போல நீயும் இருந்தால் என் கவித் திறனை உனக்கு தந்திடுவேன் இதயத்த…
-
- 1 reply
- 1.1k views
-
-
சீதனம் வாங்கும் ஆண்களே நில்லுங்கள்!!! உங்களுக்கு என்ன ஊனம் நீங்கள் சொல்லுங்கள்!!! சீதனம் தமிழனுக்கு ஒரு புற்றுநோய்!!! இது ஆண்களுக்கு ஒரு தொற்று நோய்!!! விரும்பி தானாக கொடுத்தால் அது அன்பளிப்பு அதை கேட்டு வாங்கினால் அது சீதனம் நூறு பவுனில தாலிதான் உனக்கு வேலியா பெண்ணே? ஆணும் எங்கு போவான் நீயும் சொல்லு பெண்ணே? உடம்பு முழுக்க உனக்குப்பவுந்தான் வேணுமா பெண்ணே? ஆண்களுக்கு இதனால் மொட்டை வராமல் போகுமா பெண்ணே? பட்டம் உள்ள ஆண்கள்தான் உங்களுக்கு தெரிவார்கள் பெண்ணே!!! நல்ல உள்ளம் கொண்ட ஆண்களை தெரிவது …
-
- 3 replies
- 1.5k views
-
-
என்னைப் பாட விடு ----------------- வானம் பாடியைப் போல் என்னைப் பாட விடு மண்ணையும் மக்களையும் முல்லையையும் முகில்களையும் என்னைப் பாட விடு இதயக் கோப்பை நிரம்பித் தழும்புகின்றது பச்சை போர்த்திய வயல்களையும் அதைத் தழுவி இச்சை தீர்க்கும் தென்றலையும் என்னைப் பாட விடு அந்திக் கருக்கலின் செம்மைச் சிவப்பை அழகுப் பெண்ணின் கன்னக் கதுப்பை என்னைப் பாட விடு பரந்து விரியும் கடலை பதுங்கிப் பாயும் நதியை என்னைப் பாட விடு கண்களில் நிரம்பி வழிகின்றது கருணை என்..... பாதையை மறிக்காதே வாழ்வினை பறிக்காதே என்னைப் பாட விடு சர சரக்கும் சப்பாத்துக்கும் சட சடக்கும் துப்பாக்கிக்கும் என்ன வேலை இங்கு என…
-
- 16 replies
- 2.6k views
-
-
காதலை தேடினேன் காத்திருப்பு தந்த வலியினால் காணாமல் போனது கற்பனைகள் மட்டுமல்ல மகிழ்ச்சிகளும் தான்... அன்புள்ளங்களை தேடினேன் அத்தனையும் தந்த வலியினால் அறுபட்டு போனது ஆனந்தம் மட்டுமல்ல அரவணைப்புக்களும் தான் அன்பைத் தேடினேன் பாச உறவுகள் தந்த வலியினால் பறந்தே போனது பந்தங்கள் மட்டுமல்ல பாசங்களும் தான் அகிம்சையை தேடினேன் பொறுமை தந்த வலியினால் வற்றிப்போனது பொதுநலம் மட்டுமல்ல மனத நேயங்களும் தான் கனவுகளை தேடினேன் காலம் தந்த வலியினால் காணாமல் போனது நிஐங்கள் மட்டுமல்ல நிழல்களும் தான் :?
-
- 15 replies
- 3.2k views
-
-
கவிதை வேண்டும்! (கருவுற்றிருக்கும் தமிழ்ப்பெண்ணின் தாகங்கள்,) கவிதை ஒன்று வேண்டும் - தமிழ்க் .......... கவிதை ஒன்று வேண்டும் - நான் செவிமடுத்து மனம் சிலிர்க்கும் வண்ணமொரு .......... சின்ன கவிதை வேண்டும்! சோலை ஒன்று வேண்டும் - அங்கு .......... தூய தென்றல் வேண்டும் - இளங் காலை தோறும் தமிழ்ப் பண் வழங்கி எனைக் .......... கருணை செய்ய வேண்டும்! இசை ஒலிக்க வேண்டும் - தமிழ் .......... எனை மயக்க வேண்டும் - புது விசைபடர்ந்ததென அழகு தமிழ் வரிகள் .......... வெறி கொடுக்க வேண்டும்! பாட்டுச் சொல்ல வேண்டும் - இசை .......... பாய்ந்து செல்ல வேண்டும் - அதைக் கேட்ட படியெனது கருவில் வளர்மழலை .......... கிறக்கம் கொள்ள வேண்டும்! வாத்தியங…
-
- 2 replies
- 1.3k views
-
-
வாழையை மட்டுமில்ல....... கன்றையும் சேர்த்து ....... கழுத்து அறுவிட்டு ........... தமிழன் என்பதால்.. குருதி....... தன் தலையில் தெளித்து ....... கொண்டாடி மகிழுது சிங்களம்! அந்தி வானம் சூரியனை காவு கொள்ள...... இருட்டு பூமியை - எல்லாம் எனதென்று கொள்ளையடிக்க- அம்மா பயமாய் இருக்கு என்றிருப்பாய் ..... ஐயோ ஏன்டா........ நானிருக்கன் எல்லோ ....... அவளும் சொல்லியிருப்பாள்! பிஞ்சு விரல்கள் குளிருமென்று ....... ஊர் விசேசத்து உடுத்த .......... புடவை கொண்டு - உன் பஞ்சு கால்கள்... நடுங்காது - பாதம் வரை மூடி இருப்பாள்! அண்ணா உதைக்கிறான் ...... என்றே சிணுங்கி இருப்பாய்...... தள்ளி படுடா என்று சொல்லிட்டு...... உன் தகப்பனும் உறங்கியிருப…
-
- 9 replies
- 1.9k views
-
-
சுமக்கும் சிலுவையுடன் -------------------- அந்திப் பொழுதும் வெட்கும் வேளையில் அவளுக்காக காத்திருக்கின்றேன் கரைகளை நக்கும் நுரை கால்களையும் கழுவிப் போகின்றது கடலிலும் பேதமில்லை கரையிலும் பேதமில்லை- அது சுமக்கும் மனிதரில் பேதமில்லை மனங்களில் பேதம் முதுகில் சுமப்பவன் முக்காடு போடுபவன் முக்குறி இடுபவன் அதற்கும் மேலால் மண்ணில் உழைப்பவன் மரத்தில் ஏறுபவன் நித்திலம் கொழிப்பவன் நின் மலசலம் எடுப்பவன் எத்தனை பேதமை இருட்டிப் போன பின்னும் அவள் வரவில்லை... சேதி வந்தது 'அவள் வர மாட்டாள்' மண்ணின் மேலால் நீர் இருக்கலாம் கடல் மண்னின் கீழால் நீர் இருக்கலாம் கிணறு மண்ணும் நீரும் ஒட்ட முடி…
-
- 7 replies
- 1.6k views
-
-
-
நீ வரும் பாதையில் உனக்காக காத்து இருந்தேன் புள்ளிமான் போல துள்ளி வருவாய் என்று எழுதிய காகிதத்தை உனக்குத் தரகாத்து இருந்தேன் நீயும் மண மாலையுடன் வந்தாயே பக்கத்துவீட்டு பாலனுடன் எழுதிவைத்த காகிதமும் என்னை பார்த்து சிரிக்கிறது இதை எப்படித்தான் தாங்குவேனோ கண்ணே பெண்ணே
-
- 2 replies
- 1.1k views
-
-
சின்ன சின்ன கவி சொல்ல வந்தேன் வெண்ணிலாவே உன் வெண்னையினால் என் உயிர் சிதைந்தது வெண்ணிலாவே நட்ச்சத்திரங்கள் உன்னைப்பார்த்து கண்சிமிட்டுது வெண்ணிலாவே அந்த கண்சிமிட்டை எப்படித்தான் தாங்குறாயோ வெண்ணிலாவே பொறாமை கொண்ட கருமுகில்கள் உன்னை மறைக்கிறது வெண்ணிலாவே கருமுகில்கள் மறைக்கும்போதுதான் உன் உடையை மாத்துகிறாயா சொல்லு வெண்ணிலாவே வாணில் உள்ள வால் வெள்ளிகள்தான் வெண்ணிலாவே உனக்கு காதல் தூது செய்கின்றதா சொல்லு வெண்ணிலாவே உயிரோடு உயிர் சேர்ந்தால்த்தான் காதல் வெண்ணிலாவே காதலிலே தோல்வியுற்றால் மரணம் தானா பதில் சொல்லு வெண்ணிலாவே
-
- 4 replies
- 1.4k views
-
-
கவிதயாலே கவிதை இங்கு புனையாப் பார்க்கிறேன் கவிதை என்னும் பாற்கடலை நக்கி குடிக்கப் பார்க்கிறேன் அந்த பாற் கடலில் பள்ளி கொள்ள ஆசை கொள்கிறேன் பாற்கடலை நானும் கடைந்து பருகப் பார்க்கிறேன் தேவர்கள் அசுர்கள் போல நானும் முயன்று பார்க்கிறேன் விடம் உண்ட கன்டன் போல கவிதையில் சிக்கிதவிக்கிறேன் மொத்தத்தில் நானும் யாழ் இணையம் கவிமழையில் முழ்கிப்போகிறேன்
-
- 2 replies
- 1.1k views
-
-
அன்புக்கு இலக்கணமும் நீ தான் தமிழ் பண்புக்கு புததகமும் நீ தான் கற்புக்கு கண்ணகியும் நீ தான் பொறுமைக்கு பூமியும் நீ தான் கண்டிப்பதில் கிட்லறும் நீ தான் அன்புக்கு அன்னை திரேசாவும் நீ தான் படி என்று சொல்லவதற்கு ஆசானும் நீ தான் வீட்டில் இரட்சியத்துக்கு அரசியும் நீ தான் அன்போடு பேசும் தோழியும் நீ தான் பூமியில் வாழும் உயிர் உள்ள தெய்வமும் நீ தான்
-
- 2 replies
- 1.1k views
-
-
தமிழினமே தமிழினமே எங்கே போகின்றாய் அகதியாக வந்து நீயும் உன் மானதை விடுகின்றாய் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என்றால் என்ன என்கின்றாய் தமிழ் மொழியை நீயும் ஏளனம் செய்கின்றாய் காதலனை நாளுக்கு நாள் மாத்துகின்றாய் கற்பு என்றால் என்ன என்று கேட்கின்றாய் ஊரை உறவை விட்டு வந்தும் உணராமல் இருக்கின்றாய் பண்பாடு மறந்து நீயும் உன் அடையாளம் மறக்கின்றாய் வெளி நாடு தான்உன் அப்பன் நாடு என்கின்றாய் நாசி அடித்தால் நீ எங்கே போகப் போகின்றாய்???
-
- 1 reply
- 889 views
-
-
மொழியில் தமிழ் அழகு தமிழுக்கு கவி அழகு குரலுக்கு குயில் அழகு குயிலுக்கு குஞ்சு அழகு நடைக்கு அன்னம் அழகு அன்னத்துக்கு வெண்மை அழகு நடனத்துக்கு மயில் அழகு மயிலுக்கு தோகை அழகு இசைக்கு யாழ் அழகு யாழ் மண்ணுக்கு பேச்சு அழகு கிளிக்கு சொண்டு அழகு சொண்டுக்கு கொவ்வை அழகு கொம்புக்கு மான் அழகு மானுக்கு புள்ளி அழகு கூந்தலுக்கு பெண் அழகு பெண்ணுக்கு தாய்மை அழகு உழைப்புக்கு ஆண் அழகு ஆணுக்கு தோள் அழகு எனக்கு நீ அழகு உனக்கு நான் அழகு
-
- 3 replies
- 1.3k views
-
-
மொழிக்கு உயிர் எழுத்துப்போல என் உடலின் உயிர் நீ தான் பெண்ணே? நீ கண்களால் பேசும் அந்த மொழிக்கு இவ்வுலகில் வரிவடிவம் உண்டா பெண்ணே? உன்னுடய சிரிப்புக்கு நிகரான சொல் எந்த மொழியில் உண்டு பெண்ணே? நீ பேசுகின்ற குரலின் இனிமை எந்த இசைக்கருவியில் தோன்றும் பெண்ணே ? கருமுகில் போன்ற உன் கூந்தல் நறுமணம் எந்த மலரில் உண்டு பெண்ணே? உன் இதயதின் துடிப்பு என் பெயர்தான் சொல்கிறதா பெண்ணே? உன் சுவாசத்தின் பிரணவாயு நான் தானா பெண்ணே?
-
- 2 replies
- 1.2k views
-
-
எங்கே போகிறாய்? வெளிநாட்டில் தமிழனுடனும் தமிழில்பேச வெட்க்கப்படுகிறாய் எங்கே போகிறாய் தமிழா எங்கேபோகிறாய்......... வேற்று மொழிபேசி நீயும் உன் தாய்மொழி மறந்து நீ எங்கே போகிறாய் தமிழா எங்கேபோகிறாய்......... காதில தோடுபோட்டு எடுப்பாக நடந்து நீயும் எங்கே போகிறாய் தமிழா எங்கேபோகிறாய்.......... தலைமுடிக்கு சாயம்பூசி குதிரைகால் செருப்புபோட்டு எங்கே போகிறாய் தமிழா எங்கேபோகிறாய்.......... வெளிநாட்டில் வந்து உன் பண்பாடு மறந்து நீயும் எங்கே போகிறாய் தமிழா எங்கேபோகிறாய்.......... தமிழின் சமயம் விட்டு தாவிக்குதித்து நீயும் எங்கே போகிறாய் தமிழா எங்கேபோகிறாய்..…
-
- 2 replies
- 1.3k views
-
-
அநியாய மங்கரியே ஆனந்த மானஎம் தமிழரின் வாழ்வினை அழித்திடக் கங்கணம் கட்டியே நிக்கிற அநியாய சங்கலார் உன்னையே கேட்கிறேன் அடுக்குமோ உன்செயல் அவனியில் சொல்லுவாய் தந்தையின் வியர்வையில் தோன்றிய கட்சியில் மந்தியைச் சேர்த்தவன் யாரெனக் கேட்கிறேன் பந்தியில் சேர்த்திட வொண்ணாப் பாதகன் நொந்துமே மூடுவன் கண்களைச் சீக்கிரம் சுந்தரப் பெண்களைச் சுவைத்திடத் துடித்தவன் சுதந்திரம் பற்றியும் பேசுதல் நீதியோ தமிழரின் உரிமைகள் பற்றியே பேசிட தறுதலை உந்தனுக் கேதுமே தகமையாம் ஈழமண் காத்திட உயிர்தரும் பலரிடை இழியனாய் இருந்துநீ இழிசெயல் செய்கிறாய் தரித்திரம் பிடித்தவுன் முகத்தினைத் துரோகியாய் சரித்திரம் அழுத்தமாய்ப் பதிவினில் வைத்திடும் அன்றொரு நாளுனை அழு…
-
- 3 replies
- 1.5k views
-
-
இனிக்கும் நினைவலைகள் நெடிதுயர்ந்த நிழல்மரங்கள் கீழ் நிழலில் நீட்டிக்கால் வைத்துநான் நீண்டு படுத்திருந்திருந்தேன் விடிகாலை எழில்கூடி வெளிவந்த ஆதவனும் நடுவானில் நின்றிருந்து சுடுகதிரை வீசிநின்றான் துடிகூட அசையாத தளிர்ச்சோலை மலர்க்கூட்டம் தம்மழகால் எனைமயக்கி தாள்வாரம் நின்றுவிட இடையிடையே தொலைவினிலே இறக்கையினம் இசைபாட இன்னிசைபோல் தென்றலிலே மிதந்து வந்ததுவே முடிசார்ந்த மன்னவரின் முன்சரிதை மலர்எடுத்து இடையின்றி ஒவ்வொன்றாய் இனித்துச் சுவைத்திருந்தேன் துடியிடையும் பிடிநடையும் துவளும் தமிழ்ப்பாவையர்கள் வடிவழகின் வர்ணனையை மனக்கண்ணால் ரசித்திருந்தேன் அடியாளும் அடிசிலொடு இரசமுடன் இருகறிகள் மடைபோட்டு முடித்துவிட்டு மன்னவ…
-
- 10 replies
- 3.6k views
-
-
அனைவருக்கும் ஒரு சிறு காதல் பாடல் போட்டி. காதலர் தினம் நெருங்கிவிட்டது. இரசிக்கவும், மகிழ்ச்சியாக இருக்கவும் இங்கே "காதல்" என்ற சொல்லில் அல்லது காதலிக்க, காதலுடன் இப்படியான சொற்களில் ஆரம்பிக்கும் சினிமாப்பாடல்களை எழுதுங்கள். ஒருவர் ஒரு பாடலின் வரிகளில் குறைந்தது முதல் வரியையாவது உருப்படியாக எழுதவேண்டும். முழுவதும் எழுதமுடிந்தால் எழுதுங்கள். ஒருவர் ஒருநேரத்தில் ஒரு பாடலை மட்டும்தான் எழுதவேண்டும். அடுத்தவர் வந்து ஒரு பாடலை எழுதியபின்னர் முன்னர் வந்தவர்கள் திரும்பவும் வந்து இன்னொரு பாடலை எழுதலாம். சரி, எங்கே பார்ப்போம்..... நானே ஆரம்பித்துவைக்கிறேன். குறிப்பு:-ஆரம்பத்தை மட்டும் படித்துவிட்டு என்ன ஆசிரியரே! இது உங்கள் சொந்த அனுபவமா? என்று கேட்கவேண்டாம். …
-
- 50 replies
- 7.5k views
-
-
-
- 12 replies
- 2.4k views
-
-
என்றும் --நீ சுவாசித்த ழூச்சில் இன்றும் என்னிடம் வரவில்லை உன் பாசத்துக்கு கட்டுபட்டு வழர்ந்த என்னை சந்தேகப் பட்டு ஒரு நொடியில் தூக்கி எறிந்தாயே -------- :cry:
-
- 3 replies
- 1.3k views
-
-
காதலுக்கு இரண்டு கண்கள் ------------------------- நம் காதலுக்கு இரண்டு கண்கள் ஆசை, பயம் ஆசை பார்க்கின்றது பயம் மூடிக்கொள்கின்றது சூரியன் இல்லாமலேயே வெப்பம் மூட்டுகின்றது ஒன்று சந்திரன் இல்லாமலே குளிரைத் தூவுகின்றது மற்றொன்று பொங்கித் தணியும் கடலைப் போல ஒன்றை யொன்று இழுக்கின்றது உச்சத்தில் நிற்கும்போது உயிரைக் கீழிழுக்கின்றது ஒன்று உயிரே போனதாய் உணரும் போது உயர்த்தி விடுகின்றது மற்றொன்று காதல் கத்தியைப் போல காயப் படுத்தி விடும் காதலிப்பவரை காதல் மட்டும் காயமில்லாமல் தப்பி விடும் கத்தியைப் போல அதனால் தான் இன்னும் காதலும் காதலுக்காக கட்டப்படும் சமாதிகளும்....
-
- 5 replies
- 1.5k views
-
-
அழகான கவிதை வாழ்க்கை ----------------------- மூங்கில் நுனிப் பனியை புகழ்கின்றோம் மூக்கின் நுனிப்பனியைத் துடைக்கின்றோம் இரண்டிலும் பனி பார்வையில் பிணி பச்சை மரக்காட்டிடையும் மரங் கொத்தி தேடுவதென்னவோ பட்ட மரம் நீர் மேல் நிலவு நிமிடத்தில் உடையும் நிமிடத்தில் சேரும் நிலவுக்குக் கவலையில்லை வடி கட்டிப் போகும் அமுதத்தைப் பாரார் வடியில் மிஞ்சும் மிச்சத்தைப் பார்ப்பார் காலையும் மாலையும் அழித்து அழித்துப் போடுகின்றது அழகழகான சித்திரம் வானமும் பகலிலும் இரவிலும் பொட்டு வைத்துப் பார்க்கின்றது பச்சைச் சேலையில் பள பளக்கும் நீர்க்கரை கட்டி பூமியும் அழகுதான் இயற்கை சிரிக்கின்றது மனிதன் அழுகின்றான…
-
- 7 replies
- 2.3k views
-