கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
'காதலுக்குப் போராடுகிறேன்' "தாலி கட்டி பொட்டு இட்டு தாரம் என்று ஊருக்கு கூறி தானும் தன் சுகத்திற்கு மட்டும் தாகம் தீரத் உடல் தீண்டுகிறான்!" "காதல் இல்லை கனிவும் இல்லை காத்தரமான ஒரு வாழ்வும் இல்லை காலம் முழுதும் நான் பணிசெய்து காமம் தணிக்கும் உடல் மட்டுமே!" "அன்பு வேண்டி உள்ளம் போராடுகிறது அணைப்புத் தேடி உடல் போராடுகிறது அயர்ந்து தூங்க கண் போராடுகிறது அலுப்புத் தட்டி உயிர் போராடுகிறது!" "குடும்ப கண்ணியத்தை மனதில் நிறுத்தி குழந்தை குட்டிகளை கவனத்தில் எடுத்து குதூகலம் மறந்து மௌனமாய் சஞ்சரித்து குற்றுயிராய் இன்று …
-
- 0 replies
- 635 views
-
-
"அன்புக்கோர் இலக்கணம் ஆனவள் அன்னை" "அன்புக்கோர் இலக்கணம் ஆனவள் அன்னை அகிலத்தில் அவளைப்போல் வேறெவரும் இல்லை? துன்பங்கள் தாங்குமவள் தியாகமோ பெருவியப்பு தூயபெரும் இறைவனுக்கோ உலகிலிவள் மறுபதிப்பு!" "சுமையென நமையொரு கணமும் நினையாதாள்; சூழும் இடர்கள்நோவு துயரங்கள் பொறுப்பாள்; குமையாள்; கொதியாள்; குலுங்காமலே நடப்பாள்; குழவி, மடி தவழ்கையிலோ கொண்டதுன்பம் மறப்பாள்!" "நடைதவறி வீழ்கையிலே நாடிவந்தே அணைப்பாள்; நமதவறுகள் மறந்தே மன்னித்தன்பால் பிணைப்பாள்; கடையனென்று பிறர்சொலினும் கைதடுத்துக் காத்திடுவாள்; கருமத்தில் வெல்ல மெல்ல நெஞ்சில் துணிவேற்றிடுவாள்!" "வானும் கடல்மலையும் கானகமும் விந்த…
-
- 0 replies
- 422 views
-
-
"ஒரு தந்தையின் புலம்பல்" "முதுமையின் வாசலில் காத்து நிற்கிறேன் முதலடி வைத்து உள்ளே போக முறுக்கு மீசை கொஞ்சம் தளருது முழங்கால் மூட்டு வலிக்கத் தொடங்குது!" "தள்ளாட்டம் என்னில் வெள்ளோட்டம் பார்க்குது தனிமை என்னைத் தேடி வருகுது தத்துவம் போதிக்கும் பக்குவம் வருகுது …
-
- 0 replies
- 505 views
-
-
"ஆண்டாள் மாலையில் வண்டுகள் மேயுது" "பூக்களின் அழகை வண்டுகள் அறியும் பூங்கா முழுவதும் மயங்கி திரியும் பூவையரின் அழகை ஆண்கள் அறிவர் பூரிப்பு கொண்டு மயங்கித் திரிவர்!" "பூமி முழுவது கூட்டி திரிந்து பூசி மெழுகி காதல் பேசி பூசை செய்து மயக்குவதை பார்த்து பூதங்கள் ஐந்தும் தம்முள் சிரிக்கும்!" "ஆண்டாள் மாலை மகளுக்கு சூடி ஆண்டவன் அருளுக்கு தாய் வேண்ட ஆடவன் நடிப்பை காதலாய்ச் சூடி ஆகாய கோட்டையில் கனவு காண்கிறாள்!" "தையல் திருமணம் வேண்டி நோன்பிருந்து தையில் முன்பனி நீராடி தவமிருந்தவள் தைரியம் இழந்து ஆண்டுகள் போக தைவரல் இன்ப…
-
- 0 replies
- 237 views
-
-
"என்றும் உன் நினைவில் வாழும்" "என்றும் உன் நினைவில் வாழும் ஒன்றும் அறியா குழந்தை இவன் இன்றும் உன் அணைப்பைத் தேடி நின்று கண்ணீர் சொட்டும் மகனிவன்!" "கன்றுகள் நாலா பக்கமும் பிரிந்தாலும் குன்றுகளில் பள்ளங்களில் பயணம் செய்தாலும் வென்று தோற்று வாழ்வைக் கடந்தாலும் ஈன்று எடுத்தவளை என்றும் மறந்ததில்லை!" "ஊன்று கோலாய் அவள் கட்டளைகள் சான்று பகிரும் அவள் வாழ்க்கைகள் மென்று தின்ற அவள் கொள்கைகள் இன்றும் என்றும் எம் இதயத்திலேயே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 724 views
-
-
"ஒத்தையடிப் பாதையிலே அத்தமக போகையிலே" "ஒத்தையடிப் பாதையிலே அத்தமக போகையிலே செத்த பிணங்களும் எழும்பி பார்க்குது சொத்தை மனமும் பூரிப்பு கொள்ளுது பித்தம் ஏறி என்காலும் தொடருது!" "ஒத்தையடிப் பாதையிலே அத்தமக போகையிலே ஒளிரும் அவள் பல் அழகில் ஒடிந்து நானும் காதல் கொள்ள ஒப்புதல் கேட்டு மனம் கெஞ்சிநிற்குது!" "வித்தை பல உடலால் காட்டி கத்தை கத்தையாக காதல் எறிந்து முத்தம் பல இதழால் தந்து ஒத்தையடிப் பாதையில் அத்தமக போகிறாள்!" "ஒழிந்து ஓடி ஆடிப் பாடி ஒற்றை காலில் சலங்கை கட்டி ஒய்யாரமாய் வரம்பில் விழாமல் நடந்து ஒத்தையடிப் பா…
-
- 0 replies
- 301 views
-
-
"இருபது இருபத்திநாலு ஒரு பெண்ணாகி" "இருபது இருபத்திநாலு ஒரு பெண்ணாகி தனக்கு தானே நிகரென கூக்குரலிட்டு இருபது இருபத்திமூன்றை எட்டி உதைத்து தன்னை அழகியென எமக்கு காட்டுகிறாள் !" "அருகே வந்து எம்மை ஆரத்தழுவி தன் இதழால் முத்தம் பகிர்ந்து கருத்த வானில் புத்தாண்டு தொடக்கத்தில் தலை காட்டும் விண்மீண் தானாம் !" "சற்றும் சலிப்புத்தரா அழகிய கண்ணுடனும் பெருத்த மார்புடனும் நீண்ட கழுத்துடனும் அற்புத ஒளிவீசும் தளிர் மேனியுடனும் . பெட்டி பாம்பாக்கி கண்டவரையும் மயக்குகிறாள் !" "ஏற்றம் கொண்ட அழகிய பிட்டத்துடனும் பெரிய பட்ட…
-
- 0 replies
- 155 views
-
-
"சிலுவையை மீண்டும் சுமப்போம்!" "உன்னைக் காட்டி கொடுத்தான் ஒருவன் சிலுவையில் நீ நின்றாய்! அன்னை பூமியில் ஒன்றாய் உண்டவன் சிலகாசுக்கு விலை போனான்!" "அன்று முளைத்த இந்த வஞ்சகன் சிறிதாய் பெரிதாய் வளர்ந்து இன்று எம் மத்தியிலும் வாழ்கிறான் சிரித்து கழுத்தையும் அறுக்கிறான்!" "உன்னைக் நேசித்த உன் தொண்டர்கள் சிலுவையை தோலில் சுமந்தனர்! அன்னை பூமி முழுவதும் உன் சிந்தனையில் வழி காட்டினர்!" "அன்று கண்ட மனித நேயம் சிறிதாய் பெரிதாய் வளர்ந்து இன்று நாம் உரிமையாய் வாழ சிலுவையில் எம்மை அறைகிறோம்!" "உன்னைக் கண்டதால…
-
-
- 2 replies
- 250 views
-
-
"காவோலை" "காவோலை விழ குருத்தோலை சிரிக்க காதில் மெல்ல காவோலை கூறிற்று 'காலம் மாறும் கோலம் போகும் காயாத நீயும் கருகி வாடுவாய்' குருத்தோலை சிரித்தது குலுங்கி ஆடியது குறும்பு பார்வையில் கும்மாளம் அடித்தது குருட்டு நம்பிக்கை வெயிலில் காய குருத்தோலை விழுகுது பாவம் காவோலையாக !!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 205 views
-
-
"உனக்கு தலை குனியும் !" நேற்று: "சிந்து சம வெளியில் இயற்கை ஒன்றி இவன் இருந்தான் குந்து வைத்து பல மாடி கட்டி நன்று இவன் வாழ்ந்தான் வந்து ஏறு குடிகள் ஆரியராம் வென்று இவன் தாழ்ந்தான் தந்து மயக்கி மனு தர்மத்தால் நேற்று இவன் சூத்திரனானான்!" இன்று: "புராணங்கள் - பொய் புரட்டுகள் இன்று இவன் பழகிவிட்டான் காரணங்கள்- சான்று உண்மைகள் இன்று இவன் விலக்கிவிட்டான் தோரணங்கள்- ஆலாத்தி அபிசேகங்கள் இன்று இவன் வாழ்க்கையாயிற்று சரணங்கள்[முருகா!] - ஸ்கந்தனை கொன்று என்று இவனைக் காப்பற்றுவாய்!" நாளை: …
-
- 0 replies
- 217 views
-
-
"அன்பு நெஞ்சே அரவணைத்த கையே" "அன்பு நெஞ்சே அரவணைத்த கையே அயராத கண்ணே அலைந்த காலே ஆத்திரம் ஏனோ ஆவேசம் ஏனோ ஆரிடமும் சொல்லாமல் போனது ஏனோ?" "இருப்பாய் என்று இறுமாப்பு கொண்டோம் இருளில் இன்று மருண்டு துடிக்கிறோம் ஈன்ற கன்றுகள் இளைத்து வாடுகின்றன ஈழ மண்ணின் இளைய மகளே? " "உருவம் சுவரில் தீபத்துடன் தொங்குது உயிர்கள் இருந்தும் பிணமாய் நடக்கிறோம் ஊர்கள் மாறி வாரிசு வாழ்கின்றன ஊமையாய் ஊனமாய் எதோ வாழ்கிறோம்? " "எண்ணம் செயல் எல்லாம் நீயே எங்கள் வீட்டு ஆண்டவனும் நீயே ஏக்கம் தவிப்பு சுடுகுது எம்மை ஏமாற்றம் தந்து பிரிந்தது ஏனோ…
-
- 0 replies
- 147 views
-
-
“ஏழடி நடந்தாய் ஏழாயிரம் கனவு கண்டாய்" "ஏழடி நடந்தாய் ஏழாயிரம் கனவு கண்டாய், தாளடி தொழுதாய் பல்லாண்டு வாழ்க வென ஓரடி ஈரடி மூவடி என வாழ்வில் அடிவைத்து சீரடி பாவில் அம்மாவென சிறப்படி வைத்தாய்" "ஆறடி சேலையில் அழகாய் தொட்டில் கட்டி, காலடியில் வைத்து முத்துகளை வளர்த்து எடுத்தாய் ஈரடி திருக்குறளை இதயத்தில் ஏற்றி வைத்து, வாழையடி மரபை பெருமையாக பேணி காத்தாய்" "வேரடி கேட்டோர் விழியடி விரித்து நிற்க சொல்லடி கொடுத்து தலை நிமிர வழிசமைத்தாய் ஏனடி போனாய் ஏகாந்தமாய் எம்மை விட்டு, யாரடி எம்மை அன்பாய் இனி பார்ப்பார்?" (கந்தையா தில்லைவிநாயகலிங்கம் …
-
- 0 replies
- 124 views
-
-
"என்னருகில் நீயிருந்தால்" "என்னருகில் நீயிருந்தால் எரிமலையும் குளிராகும் கன்னங்கள் இரண்டும் சிவத்து ஒளிரும்! அன்ன நடையும் வஞ்சிக்கொடி இடையும் அன்பு உள்ளத்தின் கொஞ்சல் மொழியும் ஆன்மிகம் தராத சொர்க்கமே எனக்கு!" "உன்னருகில் நான் இருக்க வேண்டும் உயிருடன் நீயும் கலக்க வேண்டும்! உரிமை கொண்ட நண்பியாக நீயும் உச்சி முகர்ந்து காதல் பொழிந்து உமிழ்நீரால் என்னை நீராட்ட வேண்டும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 143 views
-
-
"வேதனையும் மகிமையும், வாழ்வின் கதை" / "Pain and glory are Every one's Story" "ஒவ் ஒருவர் வாழ்விலும் ஒவ் ஒரு கதை, உயரும் பொழுதும் கதை, வீழும் பொழுதும் கதை, அன்பே!" "அங்கே இன்பம் பொங்குகிறது, இங்கே துன்பம் ஓடுகிறது, அங்கே நிம்மதி கிடைக்கிறது, இங்கே வேதனை வலிக்கிறது, அன்பே!" "யார் யாரோ, ஒவ் ஒருவருக்கும், ஒரு கதை சில வலியை கூறும், சில சிறப்பை கூறும், அன்பே!" "எவரடி பூமியில் இன்று, பயம் கொள்ளா மனிதன்? சிலர் அழுவார், சிலர் அழுதுகொண்டே சிரிப்பார் அன்பே!" "வெவ் வேறு கட்டத்தில், எம்மை திட்டி சா…
-
- 0 replies
- 229 views
-
-
"வாழ்வை,கலை தொடும் பொழுது" / "When Life touches by Art" "கலையும் வாழ்வும் பல பல கோணங்கள், மகளே கூர்ந்து பார்த்தால், பல பல வர்ணங்கள் பளபளக்கும்! வாழ்வு எம் இதயத்தை தொடும் பொழுது, மகளே வாழ்வை,கலை பிரதி பலிப்பதை உணர்வாய்!" "வாழ்வை கலை தொடும் பொழுது,நீ ஆறுதலடைவாய், மகளே வேதனைக்கு அது விடியல்,இன்பத்திற்கு அது ஊற்று! இயந்திர வாழ்வு மனிதனை சூழும் பொழுது,மகளே 'இயல் இசை நடனம்',ஒரு புது தெம்பு கொடுக்கிறது!" "சூதும் வஞ்சகமும் வாழ்வை கவ்வும் பொழுது,மகளே கலை எமக்கு துணை நின்று, எம்மை விடுவிக்கும் ! வாழ்வு நேர்கோடும் அல்ல கணிக்கக்கூடியதும் அல்ல, மகளே வாழ்வு எட்ட…
-
- 0 replies
- 137 views
-
-
"கில்கமெஷ் பாடல் / Love Songs In Sumerian Literature" "ஆடை நெகிழ உடல் மிளிர சாடை காட்டி நளினமாய் அமர்ந்தாள் காலை அகட்டி காமம் தெளித்து தலை அசைத்து சிலையாய் இருந்தாள்!" "பெண்மை வனப்பு சுண்டி இழுக்க ஆண்மை ஆசை அவளில் போக்க கருத்த என்கிடு மிரண்டு வந்தான் பருத்த உடலை காட்டி வந்தான்!" "அருகில் வந்து முகர்ந்து ரசித்தான் உருண்டை கண்களால் கூர்ந்து பார்த்தான் எடுத்த எடுப்பில் அவளை தழுவினான் அடுத்து தன் உடையை நழுவினான்!" "ஈடுஇல்லா அவன் ஆண்மை கண்டாள் நடுங்கும் அவன் தொடையை பற்றினாள் மலை சாரலில் மந்தை மேய மாலை மயக்க…
-
- 0 replies
- 402 views
-
-
'இன்றைய ஆசிரியர் நிலை' "கல்வி புகட்டுபவன் ஆசிரியர் என்றாலும் கடமையை புனிதமாக மதித்து அவன் கருவறையில் ஒருவன் உயிர்பெறுவது போல கரும் பலகையில் கற்பிப்பவனே ஆசான்!" "மக்களின் அறியாமை நீக்கி அறிவுவேற்றும் மகத்தான இப்பணியே ஆசிரியர் அறப்பணி மகிழ்வுடன் வரவேற்று அறிவினை பகிர்ந்து மனசோர்பு அற்று அர்ப்பணிப்பவன் ஆசிரியர்!" "கவிதையை கவிஞனைப் போல் வாசித்து கணித சிக்கலை இலகுவாக போதித்து கருத்துக்களை சிறிதாக சிறப்பாக பதித்து கலக்கம் போக்கி மனிதனாக்குபவன் ஆசிரியர்!" "ஆசான் இன்று ஒருவருமான தொழிலாகி ஆயிரமாண்டுகளாக சேவை செய்ததை மறந்து ஆச…
-
- 0 replies
- 356 views
-
-
"வாழ்வின் விளிம்பில் ஞானம் பிறக்குது!" "நாற்பது வயது தொப்பை விழுகுது கருத்த முடி நரை விழுகுது ஐம்பது வயது ஆட்டிப் படைக்குது குடைச்சலும் வலியும் எட்டிப் பார்க்குது சோர்வான உடல் எதோ கேட்குது ஐம்பதில் ஏறியதில் மகிழ்ச்சி அடையுது!" "ஆடிப் பாடுது துள்ளிக் குதிக்குது அறுபதை தாண்டி அலைக்கழிப்பு தருகுது வேடிக்கை வாழ்வை நினைவு ஊட்டுது மருத்துவம் படிக்க புத்தகம் தருகுது தலைமுதல் கால் விரல்கள் வரை படிக்காத பாடங்களை தேடச் சொல்லுது!" "கேட்காத வியாதிகளை அவிழ்த்து விடுகுது பச்சைக் காய்கறி பழக் கலவையை [சாலட்] பகலும் இரவும் சாப்பிட வைக்குது விரலை குத்தி சீனி பார்க்குது நடையும் பயிற்சியும் வாழ்வாய் போகுது கொஞ்சம் தவறினால்…
-
- 0 replies
- 101 views
-
-
"பாரிஸ் பையா பாரிஸ் பையா" [திருமண நிகழ்வை மையமாக வைத்த துள்ளு பாட்டு / முதல் முயற்சி] "பாரிஸ் பையா பாரிஸ் பையா பாய்ந்து வாடா பாய்ந்து வாடா பைசா கோபுரம் கொஞ்சம் சரியுது தோள் கொடுடா தோள் கொடுடா" "படிப்பு பாதி தியாகம் பாதி பல்லக்கில் வருவாள் உந்தன் பாதி எண்ணம் பாதி கனவு பாதி மஞ்சத்தில் சாய்வாள் உந்தன் பாதி" "பாரிஸ் பையா பாரிஸ் பையா பச்சை கிளி எட்டி பார்க்குது பஞ்சு மெத்தை காத்து இருக்குது தோள் கொடுடா தோள் கொடுடா" "ஆண்மை கொண்ட அழகு சிங்கமே ஆசை நிறைந்த அழகு வாலிபனே ஆலாத்தி எடுக்க மாமி நிற்கிறா கழுத்…
-
- 3 replies
- 389 views
-
-
"பிள்ளையார் கோவிலில் ஒரு திருவிழா" "பிள்ளையார் கோவிலில் ஒரு திருவிழா பிள்ளையை அணைத்து போறாள் ஒருநிலா வள்ளி தெய்வானை திருமண விழா துள்ளி குதித்து கொண்டாடினம் தம்பதியர்." "குட்டி எலியில் தொந்தி பிள்ளையார் முட்டி உடையுமோ ஏங்குது குழந்தை? கொட்டி மேளத்துடன் இரு மனவியரை தட்டி வாழ்த்துறாள் ஒரு கண்ணகி ?" "மஞ்சு விரட்டு ஒரு மிருகவதை அஞ்சி நசுங்கும் எலி தெய்வவாகனம்? பஞ்ச பாண்டவருக்கு ஒரு திரெளபதி நெஞ்சு வலிக்குது ஒரு சீதைக்கு ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 146 views
-
-
"நாளைய உலகம்" / "Tomorrow's World" "பொத்தானை அழுத்தி, மறு கரையில் காதலிப்போம் ஜன்னளை திறந்து, புதியவானம் காண்போம் கண்ணே? உலகம் சுருங்குதோ, எண்ணம் அப்படி தோன்றுதோ தொழில் நுட்பம், அப்படி மாற்றுதோ கண்ணே?" "நாளாந்த வாழ்வில், பல பல மாற்றங்கள் ஒன்றாய் அனுபவிப்போம், ஆனால் எந்த இழப்பில் கண்ணே? ஆண்டாண்டு மாசுபடுத்தி, சூழலை கெடுத்து விட்டோம் நெருக்கடி வந்தபின்பே, மாற்றுவழி தேடுகிறோம் கண்ணே?" "மதிநுட்ப சிந்தனையாளனா, நாம் மரத்துப்போனவனா இன்றைய நிலையை எப்போது சிந்திப்போம் கண்ணே? கண்மூடித்தனமாக அழிவை நோக்கி பயணிக்கிறோமா [அல்லது] தொழில்நுட்பம் எம்மை அடக்கி ஆள்கி…
-
- 0 replies
- 202 views
-
-
"விண்ணில் வாழும் வீரன் இவன்!" "மொழியில் ஒரு பற்று கொண்டு விழியில் ஒரு ஏக்கம் கவ்வ வழியில் வந்த தடை உடைத்து சுழியில் மூழ்கிய வீரன் இவன்!" "ஒன்று இரண்டு ஆயிரம் கொலை இன்று நேற்று கண்டு துடித்து வென்று ஒரு முடிவு காண சென்று மாண்ட வீரன் இவன்!" "தாயின் தங்கையின் கற்பு காக்க சேயின் சேர்ந்தோரின் நலம் நாடி நாயின் வாலை நிமித்த எண்ணி பேயில் சிக்கிய வீரன் இவன்!" "உண்மை வெல்ல களத்தில் போராடி கண்ணை இழந்து கையை முறித்து மண்ணை மீட்க மரணம் தழுவி விண்ணில் வாழும் வீரன் இவன்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ…
-
- 0 replies
- 133 views
-
-
"இது இனப் படுகொலை ..... !!!" "மனதில் உறுதி கொண்ட மக்களை சினந்து குருதி கொள்ள நினைப்பதும் ஈனமாய் எள்ளி நகை ஆடுவதும் மானமாய் வாழ விடாது தடுப்பதும் தானமாய் பிச்சை போட்டு அடைப்பதும் வனமாய் பசும் நிலத்தை மாற்றுவதும் ஊனமாய் அவனை அடித்து முறிப்பதும் இனப் படுகொலை! இனப் படுகொலை!" "விடுதலை வேண்டி வீறுகொண்ட இனத்தை படுகொலை செய்து குழியில் புதைப்பதும் நடுநிலை அற்று அடிமை ஆக்குவதும் ஏடுகளை எரித்து சரித்திரத்தை சிதைப்பதும் வீடுகளை இடித்து அகதி ஆக்குவதும் மேடுகளை போட்டு தடுத்து வைப்பதும் கூடுகளை உடைத்து குஞ்சுகளை பறிப்பதும் படுகொலை!அது இனப் படுகொலை!!" …
-
- 0 replies
- 206 views
-
-
"என் மனக் கோயிலின் ஊஞ்சலிலே" / "In my heart" [என் அம்மாவிற்கு / For my mother [05/10/1917-14/08/2009]] "என் மனக் கோயிலின் ஊஞ்சலிலே .... நான் வணங்கும் தெய்வமும் தாயம்மா - என் கண்கண்ட தெய்வமும் நீயம்மா" "என் வாய்மையும் நேர்மையும் நீயம்மா .... நான் வாழ்ந்திடும் வாழ்க்கையும் உனதம்மா - என் தாய்மையிற் பூத்திட்ட பூங்கொடி நீயம்மா" "என் உழைப்பும் உயர்வும் உன் கனவேயம்மா ... உன் வாசனைப் பூக்களும் என் உயிர்ப்பேயம்மா .... நான் மீண்டும் வேண்டுவது உன் கருவறையம்மா" "வேரோடி முளைத்தலும் விளாத்தி விளாத்தியினமே பாரோடி பறந்தாலும் நான் உன் சிறகே அம்மா - என் …
-
- 0 replies
- 87 views
-
-
"முட்டி மோதி போகும் பெண்ணே!" "ஒட்டி உடையில் பெண்மை காட்டி எட்டி நடையில் வேகம் காட்டி சுட்டி விடையில் புத்தி காட்டி வெட்டி பேச்சில் வெகுளி காட்டி தட்டி கழித்து நாணம் காட்டி முட்டி மோதி போகலாம் பெண்ணே! " "பட்டி தொட்டி எங்கும் சொல்லி கட்டி தங்கம் வெட்டி எடுத்து செட்டி செய்த மோதிரம் மாற்றி மெட்டி காலில் கண் சிமிட்ட தட்டி கேட்க துணை சேர ஒட்டி உரசி போகலாம் பெண்ணே!" "மூட்டி அடுப்பில் சமைக்க வேண்டும் கூட்டி பெருக்கி துடைக்க வேண்டும் ஊட்டி பிள்ளை வளர்க்க வேண்டும் லூட்டி அடித்து குழப்ப வேண்டும் போட்டி போட்டு கொஞ்ச வேண்டும் சீ…
-
- 0 replies
- 128 views
-