கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
-
- 14 replies
- 2.1k views
-
-
குருதிப்பெருவழியே வந்த என்னின் பெருகும் உதிரத்திரை விலக்கி - எனக்கு உவந்த முதல் முத்தம் என் கூடல்களின் உச்சங்களை விட இனிது. என் சிரிப்பில்,முறைப்பில்,களிப்ப
-
- 7 replies
- 2.6k views
-
-
என் முறை வரும்போது... கருவுக்குள் என்னைச் சுமந்து கருச்சிதையாமல் என்னைக் காத்து பத்திரமாய் இப்புவிதனில் பூக்கவைத்து ஆடும் தொட்டிலுக்குள் ஆடவிட்டாயே அம்மா காலில் சக்கரத்தை கட்டினாற் போன்று வேலை வேலை என்றே நிதம் நீங்கள் இருக்க பால் போத்தலுடன் நான் இங்கே... பால் மணம் மாறா மலர் படுக்கைமீதினிலே அழத்துடிக்கும் என் வாய்க்குள் சூப்பியே பூட்டுகளாக நானும் காப்பகத்தின் கைகளில் அழுதபடியே நிழல்களாய் தொடர்ந்த காட்சிதனைக் காண அழும் எந்தன் கண்ணீரும் திரையாகிப்போனது என் முறை எனக்கும் வரும்போது அங்கே என் நிலையில் நீங்களும் அங்கே காப்பகத்தில் வருவேன் நானும் பால்போச்சியுடன் அல்ல வாசம் பரப்பிய மலர்ச்செண்டுடன்
-
- 11 replies
- 2.2k views
-
-
பைந்தமிழ் இனம் காக்க பணி நன்றே செய்திடுக! போர் பெய்த மழையினிலே ஊர் விட்டுப்போனவரே! பாரெங்கும் பரந்திருக்கும் பாசப் பிணைப்புகளே! ஆரெவரோ என்றுங்கள் அகம் மூடி நடிக்காமல் பைந்தமிழ் இனம் காக்க பணி நன்றே செய்திடுக! முண்டமாய் உடலும் - சதைப் பிண்டமாய் உறுப்புகளும் கண்ட கண்ட இடமெல்லாம் அழுகிய பிணங்களாக ஆர் பெற்ற பிள்ளைகளோ? அண்டை அயலொடு அவனியிலே பேர் பெற்ற அமைதிப் பெருநாடுகளும் கண்டாரோ? கருத்தில் கொண்டாரோ? ஈழத் தமிழினத்தின் இன்னல் நிலை. செப்ப ஒரு நாவிருந்தும் செப்பாத செந்தமிழா! உற்றாரும், உறவுகளும் ஊரோடு எரிகையிலே ஒப்பாரிப் பாட்டுக்கூட உனக்கெடுக்கத் தெரியலையோ? முத்துமணி ரத்தினமும் மெத்தையொடு மெல்லிடையும் சுத்திவரும் சுகம் தரவா சொந்தத…
-
- 2 replies
- 1.6k views
-
-
நண்பி..... நண்பி......... நட்பு.... சாதாரணமாகத்தான் இருந்தது எனக்கு உன்னை காணும் வரை ஏதேனும் எதிர்பார்ப்புக்களுடனே அன்பு காட்டும் உலகில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்-உன் அன்பை எண்ணி வியந்து போகிறேன்.... நண்பி......... மொழிகளோ.... தூரங்களோ........ வயதோ....... மற்ற எதுவுமே - நட்பை எதிர் பார்ப்பதில்லை... உன்னாலே புரிந்து கொண்டேன்.. என் வாழ்க்கைத் தோட்டத்தில் எத்தனையோ 'நட்பு" மலர்கள் - ஆனால் உன் நட்பைப்போல் எதுவும் மலர்ந்து மணம் வீசவில்லை கால வெள்ளத்தில் சிதறுண்டு போகும் உறவுகளில் நண்பி.............தொடர்வாயா உன் நட்பை இறுதி வரை..........?
-
- 14 replies
- 3.5k views
-
-
-
- 14 replies
- 2.4k views
-
-
என் அன்பான உறவே அழகான சிரிப்பே உனக்கு அன்பான கதையே உனக்கு இரக்கமான மனசு உனக்கு ஒரு கொடியில் புூத்த புூ இல்லை நீ உன் கோவம் எனக்கு பிடிச்சு இருக்கு உன் திறமை எனக்கு பிடிச்சு இருக்கு ஆனால் நான் உன்னுடன் கதைக்கும் போதெல்லாம் சண்டைதான் செய்வேன் ஆனால் நீ என் சொந்த அண்ணாவாக இல்லாட்டியும் -- எனக்கு நீ ஒரு நல்ல நண்பனாக இருக்கிறாயே அதுவே எனக்கு போதும் நண்பனே ----------ஆக்கம் --? கீதா :P
-
- 9 replies
- 1.7k views
-
-
உரிமைக்கு ஒரு குரல் ஞாலத்தில் பரந்து நாற்றிசை வாழும் ஈழத்துத் தமிழா! நில்!! வாழத் துடிக்கின்ற ஈழத்தமிழினத்தின் காலச் சுவடுகளைச் சொல்! மத்துக்குள் சிக்கிய தயிரடா - இன்றெங்கள் தமிழரின் நிலையெங்கும் கடைபவர் கடைகிறார், காடையர் என்கிறார் தடைகளும் போடுறார் பார்! எத்தர்கள் சாட்சியும், ஏவலர் சூழ்ச்சியும் நித்தமும் சூழுது பார்! - இந்த நித்திலத்தில் வாழும் வித்தகத்தமிழரே! விரைந்து நீர் எழுந்து வாரீர்! மற்றவர் . தப்புக்கணக்கோடு எம் தாய்மண் மீட்பை தர்க்கித்துத் தாக்குகையில் உப்பரிகை சுகத்தோடு உல்லாசப் போக்கிருந்தால் உடனேயே செத்துவிடு! - இல்லை செப்புகிற நல்லுணர் நாவிருந்தால் அதை செகத்திற்கு உணர்த்திவிடு! …
-
- 6 replies
- 1.5k views
-
-
செத்துப்போ! ஆட்லறியின் அடியில் - தூங்கினாலும் மூதூரில் உன் அண்ணன் இறக்கிறான் பேசாமல் இருக்கிறாய் - ஏன் இனி எமக்கு? நீ செத்துப்போ! ஜோசப் இறந்த போதும் பேசாமல் இருந்தாய்! உரிமை உலையில்- உயிர்- எரித்துப்போன ...... விக்னேஸ்வரன் மாண்ட போதும்... வீணே என்று நீ கிடந்தாய்! அன்று தர்சினி எரிந்தபோது........ அவள் தாவணி எடுத்து முகம் மறைத்தாய்..... இன்று தமிழர் நிலமெல்லாம் - மீண்டும் குண்டு சத்தம் - இன்றும் பேசாமல் கிடக்கிறாய் ..... இனியும் எமக்கு ஏன் நீ ? செத்துப்போ ....... மானமே! 8)
-
- 4 replies
- 1.3k views
-
-
விடிவு தோன்றுமா? சண்டைகள் சாய்ந்து சச்சர வோய்ந்து சமத்துவம் என்றுவரும் - வெடிக் குண்டுகள் ஓசை, கொலை வெறிப் பேச்சு கேளா நாள்வருமா? சிரிப்பினை மறந்து இருந்திடும் சனங்கள் சிரித்திட வழிவருமா - உடல் தெருநடு வீதி தனில்விழும் அந்த ஓருநிலை மாறிடுமா? மக்களை மக்கள் மதித்திடும் நிலைதான் மண்ணில் வந்திடுமா? - மொழிச் சிக்கல்கள் ஓய்ந்து செம்மைகள் காணச் செகத்தில் நாள் வருமா? அடக்கு முறையும் அசுரத் தனமும் அடியோடு ஓடிடுமா? - இனி நடக்கும் காலம் தனிலே தானும் நன்மை கூடிடுமா? அடிமை விலங்கு அனைத்தும் தகர்ந்து அகிம்சை நிலை பெறுமா? - புவி விடிவு என்று புலரும் பொழுதை விரைவில் ஏற்றிடுமா?
-
- 2 replies
- 1.2k views
-
-
நஞ்சு! கோடாரி பிடரியில் இறங்குது இருந்தும் என்ன கொண்டாடி மகிழ்கிறோம்! லக்கி என்றும் வாறார் ராஜாதிராஜானும் வாறார் வேர்கள் வெறுத்த மரம்- சுயம்பு இல்லைதான்! ஆனால் - வசம்பு என்று வரும் - இங்கே!!! கட்டியணைத்து உச்சி மோந்து -கடுக்க இடுப்பில் சுமந்த தாயை - கழுத்தில் கொழுக்கி போட்டு - குரல் வளை அறுத்து கொல்ல நினைப்பது - கொடூரம்! நாய் கூட தன் குட்டிக்காய் போராடும்! இனத்துக்காய் போராடி இறந்தவன் மேல் காறியுமிழ்கிறாய் ! நீ அதுவும் இல்லை - அப்போ எதுதான் நீ? கவனி - நிலைக்கண்ணாடி இருக்கா?-வீட்டில் ? உன் முகம் பார் மறுபடியும் .......... தெரிவது உன் முகமல்ல...... முற்றிலும் - துரோகம்! 8)
-
- 5 replies
- 1.4k views
-
-
-
- 7 replies
- 1.9k views
-
-
புத்தொளி வீசும் தமிழ்ப்புத்தாண்டு சித்திரை மாதத் தமிழ்ப்புத்தாண்டு சிந்தைக்கு இனிய தமிழ்ப்புத்தாண்டு பழையன மறந்து மன்னித்து மகிழ ஒரு தமிழ்ப்புத்தாண்டு இனிய இப்புத்தாண்டில் புதிய நற்கனவுகளுடன் புதிய நற்கொள்கையுடன் பிறக்கும் இத்தமிழ் ஆண்டாவது இனிய தமிழ் உள்ளங்களுக்கும் எமது தேச உறவுகளுக்கும் நற் செய்தி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் ........ இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்தைத் தெரிவிக்கிறேன்.
-
- 2 replies
- 1.3k views
-
-
-
- 27 replies
- 4.3k views
-
-
என் உயிரே அன்பே உன் Üட பழகிய நாட்களை வைத்து -எனை மறந்து ஊமை போல் மனசுக்குள் பேசினேன் உன்னிடம் சொல்ல காத்திருந்த -பல வாத்தைகளை சொல்லாமல் என் மனசுக்குள் புூட்டி வைத்து உள்ளே அழுதேன்- என் உயிரே ஆனால் நீ என்னிடம் பழகிய நாட்கள் சில எனக்குத் தெரியும் -நீ விரும்புவது என்னை அல்ல என் இசைகளைத்தான் என்று ஆக்கம் ...... கீதா :P
-
- 11 replies
- 2.5k views
-
-
உறவுகளே தொடர்கதை போல் தொடர் கவிதையை இங்கு படைப்போமா? நான் தொடக்கி வைக்கின்றேன். என்னை தொடர்ந்து வருபவர் நான் எழுதும் கருவுக்கு ஏற்றதாகவோ அதன் கடைசி வரிகளை தெரிவு செய்து அதிலிருந்து தொடங்க வேண்டும். முதல் கவிதையை நமது தாயக நினைவுகளுடன் தொடங்குவோமா? எமது பழைய நினைவுகள் எல்லாம் கவிதை வரிகளில் வலம் வரட்டும் இங்கு. என்ன நீங்கள் தயரா? அந்த நாள் எந்த நாளோ? சூரிய கதிர்கள் ஊர் எல்லாம் பரவுமுன்னே மாசிப்பனியில் பற்கள் நடுநடுங்க கூணல் கிழவிகள் போல குறுகிக் கொண்டு புத்தகப்பையை அனணத்தபடி சென்றுவிடுவோம் பிரத்தியோக வகுப்புக்கு :arrow:
-
- 54 replies
- 8.1k views
-
-
மொட்டென முகம் மூடியிருந்தேன்............. கிளி - கொத்தாதவொரு கொவ்வை பழமாய்......... என் பாட்டில் நானிருந்தேன்! சட்டென்று கடந்தது ஒரு -மைனா..... பட்டென்று முழைத்தது - காதல்! எழுத்துகூட்டி தமிழ் படித்தவன் ஒரே இரவில் கவிஞன் என்றானேன்! இதயத்தின் அடியிலொரு நீர் வீழ்ச்சி..... இனி என் இயங்கு திசை எங்கும் .......... அவள் ஆட்சி! ஆயுள் ரேகை உண்டென்று.......... உலகம் ஆயிரம் சொல்லும்...... ஆளவந்தாள் என்னை - இனி அவளே என் ஆயுளுக்கு நீதிபதி! பாடல் கேட்க பிடிக்குது...... சித்ரா பாடியது அதுவென்று தெரிந்தும்........ என் சித்திரம் பாடுதென்று ........ திருட்டு கனவு வருது! போச்சு போச்சு................ இனி என்ன செய்ய நான்? ஊர் உறங்கும…
-
- 17 replies
- 3.1k views
-
-
தமிழீழம் ஓர் தனியரசு இதைத் தடுப்பவன் தலைதெறிக்கும் இதைத்தாண்ட முனைந்தவை புலிகளின் குண்டுக்கு மண்ணாய் மாறிவிடும்,,,,,,,,,,,,,,,, போராளி ந. சுதன் 1994 பின்குறிப்பு:நன்றி இக்கவிதையை எனக்கு அனுப்பியவருக்கு :P
-
- 2 replies
- 1.4k views
-
-
எமது தாயகப்பாடலான 'ஒர் இரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள்" பாடலினுடைய வரிகள் யாருக்காவது தெரியுமா? அந்த பாடலை இணையத்தில் எங்கு கேட்கலாம் என்று கூறமுடியுமா?
-
- 9 replies
- 1.7k views
-
-
எதிரலை எங்கோ ஒர் கரையின் மடியில் - நமக்கான நாற்காலிகள் காத்திருக்கின்றன எதோ ஒர் கடலின் அலைகள் - நம் வருகை எதிர் நோக்கி நிலம் தொடுகிறது தனக்கான வேக விளிம்பைத்தாண்டி- நம் சந்திப்பின் காலம் நோக்கி - விரைகின்றன கடிகார முட்கள் இனி எப்போதுமே நாம் சந்திக்க - போவதில்லையெனும் உண்மையறியாமல்
-
- 7 replies
- 1.7k views
-
-
-
-
நிழல் சொல்லும் நிஜங்கள்!! கண்ணுக்குள் இமையாக காதல் உணர்வையே இசையாக நெஞ்சுக்குள் முள்ளாய்......... காற்றே நீ மூசு, பின்.......கண்களாய் மோதிப் பார்க்க வந்தாயா--!! வெளிச்சத்தைக் கொண்டு ....... விழிகளில் கரைந்து மடலில் வரைந்தது _சுவிற்மிச்சி(MCgaL)
-
- 2 replies
- 1.2k views
-
-
காதல் நினைவினிலே காதலி உன்னை பிரிகையிலே கவிதை ஒன்று எழுதிவிட்டு கன்னி உன் கண்படவே காகிதத்தில் மறைத்துவிட்டு காத்திருந்தேன் உன் பதில்க்காய் :? கண்டு விட்ட கவிதையினை கடைசிவரை படிக்கு முன்னே கன்னியவள் என்னிடத்தில் கேள்வி ஒன்றை கேட்டு விட்டாள் "கவி படைத்தாய் நம் காதலுக்கா?? - ஏன் காட்டவில்லை என்னிடத்தில்??" :oops: உயிர் கலந்த காதலியே உண்மையினை உரைத்திடுவேன் உனக்காய் இக்கவி படைத்தேன் - நம் உறவில் உறுதி ஊட்டுதற்காய் படித்து அவள் முடிக்கும்வரை பார்த்திருந்தேன் பாவி இவன் :? பாவை என்ன பறைவாளென்று ! ! ! பார்வை ஒன்று பார்த்துவிட்டு பிடித்திருக்கு என்று சொன்னாள் பாதியிலே முடித்துவிட்டாள் பகல் பொழு…
-
- 18 replies
- 3.2k views
-
-