Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. நாம் தமிழர் இயக்க தலைவர் டைரக்டர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- வர்த்தக நிறுவனங்கள் இடையேயான 6 வீரர்கள் பங்கேற்கும் சூப்பர் சிக்ஸ் கிரிக்கெட் போட்டி, சென்னையில் தற்போது பிரசிடென்சி கல்லூரியில் நடந்து கொண்டிருக்கிறது. இறுதிப் போட்டி மாயா ஜால் மைதானத்தில் நடை பெறுகிறது. இதில் சர்வதேச கிரிக்கெட் வீரர்களான ஜெயசூர்யா, அரவிந்த் டிசில்வா, மோங்கியா, சஞ்சய்பாங்கர், ராபின்சிங், குளுஸ்னர், வினோத் காம்ப்ளி, சுனில்ஜோஷி ஆகியோர் ஆடுகிறார்கள். இதில் இனவெறி மகிந்த ராஜபக்சேவின் தீவிர ஆதரவாளரும், இலங்கை எம்.பி. தேர்தலில் இனவெறி மகிந்தா ராஜபக்சே தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் சார்பில் மாத்தறை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவருமான ச…

    • 0 replies
    • 687 views
  2. பா.ஜனதா கட்சியின் இளைஞர் அணி கொல்கத்தாவில் இருந்து காஷ்மீர் மாநிலம் லால்சவுக் நோக்கி யாத்திரையை கடந்த ஜனவரி 12-ஆம் தேதி தொடங்கியது. யாத்திரை ஜனவரி 26ம் தேதி லால்சவுக்கில் முடிகிறது. குடியரசு தினமான அன்று லால்சவுக்கில் தேசிய கொடியை ஏற்றப்போவதாக பா.ஜனதா அறிவித்தது. இதனால் காஷ்மீர் மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பிரதமர் மன்மோகன்சிங் தேசிய கொடி ஏற்றும் திட்டத்தை கைவிடுமாறு பா.ஜனதாவிற்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால் பா.ஜனதா அதனை ஏற்கவில்லை. திட்டமிட்டபடி ஜனவரி 26ம் தேதி தேசிய கொடியை ஏற்றப்போவதாக அறிவித்தது. காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா யாத்திரை காஷ்மீர் மாநில எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்படும். மேலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்ப…

    • 0 replies
    • 398 views
  3. அண்மையில் வெளியான விஜய் - அசின் நடிப்பிலான காவலன் படத்தின் இடைவேளைக்கு முன்னான ஒரு காட்சியில் விஜன் சண்டை போட்டு எதிரிகளை அடித்து விழுத்த அசின் வசனம் பேசுவாராம்.. 'காட்டில் உள்ளவைக்குத்தான் வன்முறை.. நாட்டில் உள்ளவையோடு சமாதானம்"...என்று இதை பார்த்தவர்கள் சிலர் சொல்லிக் கொண்டார்கள். காட்டில் உள்ளவைக்குத்தான் வன்முறை.. நாட்டில் உள்ளவையோடு சமாதானம் என்றால்... இதன் தொனிப் பொருள் என்ன.. ராஜபக்சவோடு விருந்துண்டு வந்தததன் தத்துவமா..??!

  4. காவலனுக்கு நெருக்கடி ? விஜய் அதிரடி பேட்டி இதுவரை எத்தனையோ படங்களுக்கு சி்க்கல்கள் வந்திருக்கிறது. ஆனால் காவலனுக்கு கொடுக்கப்பட்டு வரும் பிரச்னைகள் புதிய அனுபவமாக இருக்கிறது. அந்த பிரச்னைகளுக்கு காரணம் யார்? அது எங்கிருந்து வருகிறது? யார் தூண்டி விடுகிறார்கள்? எதனால் நெருக்கடி கொடுத்தார்கள்? என்பது எனக்கு தெரியவில்லை என்று நடிகர் விஜய் கூறியுள்ளார். காவலன் படம் எதிர்பார்த்தபடியே வெற்றிக்கனியை சுவைத்து விட்ட மகிழ்ச்சியுடன், அடுத்த படமான வேலாயுதத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய். காவலனுக்கு கொடுக்கப்பட்டு வரும் இடையூறுகள் மற்றும் எதிர்கால திட்டம் குறித்து சூட்டிங் ஸ்பாட்டிலேயே அவர் பேட்டியளித்தார். அப்போது கூறியதாவது: காவலன் படத்தை ரிலீ…

  5. இப்போதே உரிமையாக, காதலரின் வீட்டில் இருக்கிறார் கீதாஞ்சலி. தமிழ்நாடு அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமனின் மகள். செல்வராகவனின் வருங்கால மனைவி. பேட்டியா... வெரிகுட்!'' - சிநேகிதியிடம் சிரிக்கிறார் செல்வா. கீதாஞ்சலி பேசியது எல்லாமே செல்வா மீதான காதல்... காதல்... காதல்! காதல் ஆரம்பமான கதை? ''நான் சென்னைப் பொண்ணுதான். பிரிட்டனில் புரொடெக்ஷன் மேனேஜ் மென்ட் படிச்சுட்டு வந்தேன். அந்தச் சமயம் செல்வா கம்பெனிக்கு இணைத் தயாரிப்பாளர் வேணும்னு கூப்பிட்டாங்க. செல்வாவைச் சந்திக்கிறதுக்கு முன்னாடி நிறையப் பயமுறுத்தினாங்க. 'அவர் ரொம்ப ரிசர்வ்டு டைப்’, 'அவர்கிட்டே வேலை செய்யுறது ரொம்பக் கஷ்டம்’னு சொன்னாங்க. ஆனால், முதல் சந்திப்பிலேயே அது எதுவும் நிஜம் இல்லைன்னு புரிஞ்சுக்கிட்டேன். …

    • 0 replies
    • 996 views
  6. ஞானவேல்ராஜா தயாரிப்பில், நடிகர் கார்த்தி நடித்த `சிறுத்தை' சினிமா படம் கடந்த பொங்கல் தினத்தன்று தியேட்டர்களில் வெளியானது. படம் வந்த வேகத்தில் அதன் திருட்டு டி.வி.டி.களும் வெளியாகிவிட்டன. இதுகுறித்து புகார் கொடுப்பதற்காக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு நடிகர் கார்த்தி மற்றும் படத்தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஆகியோர் நேற்று பிற்பகலில் வந்திருந்தனர். அங்கு நிருபர்களுக்கு, கார்த்தி அளித்த பேட்டி வருமாறு:- `சிறுத்தை' படம் வெளியாகி 4 நாட்கள் கூட ஆகவில்லை. தற்போது அதன் திருட்டி டி.வி.டி.களை வெளியிட்டுள்ளனர். கல்லூரி வாசல், கோவில் வாயில் என எல்லா இடங்களிலும் இந்த டி.வி.டி.கள் விற்பனை செய்யப்படுகின்றன. அதன் ஆதாரமாக நாங்களும் அந்த டி.வி.டி.களை வாங்கிக் கொண்டு வந்திருக்கிறோம…

    • 0 replies
    • 860 views
  7. இளம் பின்னணிப் பாடகிகள் சிலரை சந்தித்தோம். ஜானகி ஐயர்: இசைக் குடும்ப வாரிசு நான். சின்ன வயசுலயே நிறைய ஆல்பம் பாடியிருக்கேன். அதன் மூலமாக் கிடைச்சது சினிமா சான்ஸ். நான் மும்பைப் பொண்ணு. இப்போ சினிமாவுக்காக சென்னையில் இருக்கேன். ஐ மிஸ் மை ஃபேமிலி!'' ''பெங்களூரு என் பூர்வீகம். பாடகி ஆசையோடு சென்னை வந்து அஞ்சு வருஷமாச்சு. என் தாய்மொழி, தெலுங்கு. அதனால், தமிழ் ஆரம்பத்தில் பயங்கரத் தகராறு. 'சிலந்தி’ படத்தில் முதல் வாய்ப்பு கிடைச்சுது. ரெண்டாவதா 'சரோஜா’வில் பாடிய 'கோடானு கோடி’ செம ஹிட். தனியா இருந்த என்கூட இப்ப அம்மாவும் வந்துட்டாங்க. அப்பாதான் பாவம்... பெங்களூருக்கும் சென்னைக்கும் ட்ரிப் அடிச்சுட்டே இருக்காரு!'' வினைத்தா: ''ஸ்கூல் படிக்கும் போதே, 'நோட் புக்’னு …

    • 0 replies
    • 1.4k views
  8. மணிரத்னத்துடன் பேட்டி என்றவுடன், 'சிரமமான வேலை ஆயிற்றே... ரொம்ப 'மூடி’ டைப். பதிலே வராது!’ என்றனர் சிலர். 'ஆம்/இல்லை’ என்கிறரீதியில் கேள்வித்தாள் எடுத்துக்கொண்டு போனால், மகிழ்ச்சியாக  செய்து அனுப்பிவிடுவார்’ என்றும் ஒரு யோசனை. மொத்தத்தில், கவலை பிடித்துக்கொண்டுவிட்டது. ஒரேயடியாக ஐந்து நிமிஷத்தில் பேட்டி முடிந்துவிட்டால்? நல்ல காலமாக மணிரத்னம் ஒன்றரை மணி நேரம் நம்மோடு ரிலாக்ஸ்டாகப் பேசினார். அவராக ரொம்பப் பேசுகிறவர் இல்லை தான். அதற்கு ரொம்பப் பழக வேண்டும்போல! ''டைரக்டர் என்கிற முறையிலே உங்க அணுகுமுறை எப்படி? ஆர்ட்டிஸ்ட்டுக்கு நடிச்சுக் காட்டி வேலை வாங்குவீங்களா? அவங்களை நடிக்கச் சொல்லிட்டு 'பாலீஷ்’ பண்ணுவீங்களா?'' ''சில பேருக்குச் சூழ்நிலை என்னன்னு சொல்லிட்…

    • 0 replies
    • 1.1k views
  9. குளிர் பிரேதசங்கள் தெரிய குட்டியூண்டு ஷார்ட்ஸ் போட்டு புலி வேஷத்துக்காக ஏரியாவையே சில்லிட வைத்துக் கொண்டிருந்தார் சதா. டான்ஸ் ஆடி களைத்துப் போயிருந்த அவரிடம் குட்டி குட்டி கேள்வியாக கேட்டு வைத்தோம். கோடம்பாக்கம் முழுக்க தேடிட்டோம், எங்க போனீங்க...? ‘‘எல்லாம் ஹிந்திப் படத்துக்காக கால்ஷீட் கொடுத்து மாட்டிகிட்ட நேரம் சார். எப்பவுமே தென்னிந்திய நடிகர், நடிகைகள் அங்க போயி சைன் பண்றது சிரமம்.ஏன்னா அங்க ஒர்க்கிங் ஸ்டைலே வேற.அதை புரிஞ்சு கிட்டு நடிக்கப் போனாதான்.இல்லனா இப்படி டைம் வேஸ்ட், கால்ஷீட் வேஸ்ட்ன்னு ஆகும்.அங்க நடந்த குளறுபடியில் ‘ஆப்த ரஷ்கா’, ‘சந்திரமுகி’, ‘ரெண்டு’ பட வாய்ப்பையே இழந்துட்டேன்னா பாருங்களேன்...’’ (அச்சச்சோ...) தமிழ்ல விட்ட இடத்தைப் பிடிச்சி…

    • 0 replies
    • 928 views
  10. அந்த’ சம்பவத்துக்குப் பிறகு... இத்தனை நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் ரஞ்சிதா! ''நல்லா இருக்கீங்களா?'' ''ரொம்ப! ரொம்ப நல்லா இருக்கேன். இப்பத்தான் 'சந்தோஷம்’னா என்னன்னு புரியுது. ஒவ்வொரு நிமிஷத்தையும் ரசிச்சு வாழறேன்!'' ''இந்தக் கேள்வி கேட்க சங்கடமாகத்தான் இருக்கு. ஆனாலும், அது இல்லாமல் இந்தப் பேட்டியை ஆரம்பிக்க முடியாது. சாமியார் நித்யானந்தாவுடன் அந்த சர்ச்சைக்குரிய சி.டி-யில் இருந்தது நீங்கதானே?'' ''இந்தக் கேள்விக்கு இதுதான் கடைசியாப் பதில் சொல்றதா இருக்கட்டும். நான் ஆரம்பத்தில் சொன்னதைத்தான் இப்பவும் சொல்றேன்... அந்த சி.டி-யே பொய். அதில் இருப்பது நான் இல்லை. இதை எங்கேயும் எப்பவும் சொல்வேன்!'' ''ஆனா, ஹைதராபாத், டெல்லியில் இருக்கும் புகழ் பெற்ற…

  11. விஜய் நடிக்கும் 'காவலன்' பொங்கலுக்கு ரிலீஸ். படாடோப விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. ரோமேஷ் பாபுஎன்பவர்தான் தயாரிப்பாளர். சுமார் 380 தியேட்டர்களில் 'காவலன்’ ரிலீஸ் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், புதிய தலைவலி வந்து சேர்ந்தது. இந்தப் படத்துக்கான வெளிநாட்டு உரிமையை சிங்கப்பூர் சரவணன் என்பவர் வாங்குவதாகக் கையெழுத்துப் போட்டார். ஆனால், 'இதோ வர்றேன்’ என்று போனவர்... போனவர்தான். ஆளையே காணோம். 'படத்தை நீங்கள் வாங்க வேண்டாம்’ என்று அவரை யாரோ மிரட்டியதாக விஜய் தரப்பு சந்தேகப்பட்ட நிலையில்... படத்தை வெளியிடுவதற்கான தடைகள் நாலா பக்கமும் எழுந்து வர ஆரம்பித்தன.'' விஜய் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர், போயஸ் கார்டனுக்குச் சென்று ஜெயலலிதாவைச் சந்தித்து பொக்கே கொடுத்து வந்த…

  12. தமிழில் ஏற்கெனவே சில படங்களில் நடித்திருந்தாலும், 'இளைஞன்’ படத்தில் இருந்துதான் என் கணக்கு ஆரம்பம்னு சொல்லலாம். அந்த அளவுக்கு பவர் ஃபுல் கேரக்டர் எனக்கு. நிச்சயம் 'இளைஞன்’ இன்னிங்ஸ் என் சினிமா கேரியரில் முக்கியமான படம்!''- கொஞ்சு தமிழில் கதைக் கிறார் சோட்டாணிக்கரை சேச்சி ரம்யா நம்பீசன்! ''அப்பப்ப வந்துட்டுப் போறீங்க... தமிழ்ல ஹீரோயின் பஞ்சம் இருக்குற நேரத்தைப் பயன்படுத்திக்க மாட்டேங்குறீங்களே?'' '' 'ராமன் தேடிய சீதை’யில் நல்ல கேரக்டர்தான் எனக்கு. ஆனா, அடுத்தடுத்து வந்த எல்லா வாய்ப்புகளும் அதே டிட்டோ அழுமூஞ்சி கேரக்டர்கள்தான். அதுல நடிச்சு பேரைக் கெடுத்துக் கறதுக்குச் சும்மாவே இருக்கலாம்னுதான் இருந்தேன். அப்படிக் காத்திருந்து கவர்ந்தது 'இளைஞன்’ வாய்ப்பு. நிச்சய…

    • 0 replies
    • 873 views
  13. Started by easyjobs,

    பல்வேறு விதமான தடைகள் ,எதிர்ப்புகளை தாண்டி பொங்கல் வெளியாகி அனைத்து தியேட்டர்களிலும் ஹவுஸ் புல்லாக ஒடி கொண்டிருக்கிறது இளையதளபதியின் காவலன் திரைப்படம். விஜயின் முந்தைய படங்களிலிருந்து சற்று வித்தியாசமான பாணியில் காவலன் திரைப்படத்தை இயக்கியுள்ளார் சித்திக். ஓவர் பந்தாவாக லொஜிக்கை மீறிய விஜயின் அறிமுகம் இல்லாமல் சாதாரண அறிமுகத்துடன் காவல் வேட்டையை ஆரம்பிக்கிறார் விஜய்.அறிமுக பாடலான விண்ணை காப்பான் ஒருவன் பாடல் கூட 30 நிமிடங்களின் பின்புதான் என்றால் பாருங்களன்.. ராஜ்கிரண் ஊரில் ரொம்ப பெரிய மனிதர், அவரை பாதுகாக்க வரும் விஜய் ஒரு கட்டத்தில் அவரின் மகளுக்கு பாடிகார்டாக காலேஜ்க்கு அவர்களுடன் ஸ்டுடண்டாக செல்கிறார். அவரிடம் இருந்து தப்பிக்க அவரை காதலிப்பதாக சொல்லி போன் …

    • 0 replies
    • 1.2k views
  14. தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் கதை, திரைக்கதை, வசனத்தில் வெளிவந்திருக்கும் 75வது கலை படைப்பு, இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவின் 50வது திரைப்படம் என எண்ணற்ற அருமை, பெருமைகளுடன் தைப்பொங்கலுக்கு வெளிவந்திருக்கும் தமிழ்படம் தான் இளைஞன்! 50வது ஆண்டுகளுக்கு முந்தைய கால கட்டத்தில் நடக்கும் கதை! கதைப்படி ராஜநாயகம் கப்பல் கட்டும் தொழிற்சாலையில் தொழிலாளர்களை அடிமையாக நடத்துகிறார் அந்த கம்பெனியின் சிட்டிங் முதலாளியும், சீட்டிங் முதலாளியுமான ராஜநாயகம் எனும் வில்லன் சுமன். அவரது அயோக்கியதனத்தை எதிர்க்கும் தொழிலாளிகள் எல்லோருக்கும் தண்டனை, அதுவும் மரண தண்டனை என்னும் அளவிற்கு கொடூரமான வில்லன் சுமன். அப்படிப்பட்டவரை ஒருநாள் தன் மகன் ஒரு வார்த்தை கேட்டுவிட்டான் என்பதற்காக போதையை ஏற…

    • 0 replies
    • 1.2k views
  15. விகடன் விருதுகள் - 2010 அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த வில்லன் ரஜினிகாந்த். சிறந்த வில்லி ரிமா சென். செய்தியே படங்களாக இருப்பதால் மேலும் விவரம் அறிய தயவுசெய்து வாருங்கள்.... http://www.thedipaar.com/cinema/cinema.php?id=5977 நன்றி. விகடன்.காம்.

  16. சில ஆச்சரியங்கள்,சில அதிர்வுகளைக் கொடுத்துவிட்டு தமிழ் சினிமாவிற்கு ‘குட் பை’ சொல்லியிருக்கிறது 2010. இந்த வருடம் மட்டும் நூற்றிமுப்பத்தியாறு படங்கள் வெளி வந்திருக்கின்றன.அதில் டாப் 10 படங்கள் எவை? சினிமா விமர்சகர்கள், சினிமா துறைகளில் அனுபவம் அதிகமுள்ளவர்களிடம் கேட்டுத் தயாரித்த, பட்டியல் இது. 2010-இல் ரஜினி, கமல், அஜீத், விஜய், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ், ஆர்யா, விஷால், ஜெயம் ரவி, கார்த்தி, பரத் என தமிழ் சினிமாவின் ‘ஆல் ஏஜ் குரூப்’ முன்னணி ஹீரோக்கள் அனைவரது படங்களும் வெளிவந்தது ஒரு கலர்ஃபுல் கமர்ஷியல் கலாட்டா.இதில் கதையை நம்பிய நாயகர்களே கமர்ஷியல் கதாநாயகர்களாக பந்தயத்தில் முந்தியிருக்கிறார்கள். இயல்பான வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கதை, கதாபாத்திரங்களுக்கு பொ…

    • 0 replies
    • 932 views
  17. மைக்கேல் டக்ளஸ்... இரண்டு முறை ஆஸ்கர் வென்ற இந்த நடிகர் கேன்சர் நோயையும் வென்றிருக்கிறார். மைக்கேல் டக்ளசுக்கு தொண்டையில் புற்று நோ‌ய் இருப்பது மிக தாமதமாகதான் கண்டுபிடிக்கப்பட்டது. நோய் அப்போது இருந்தது நான்காவது நிலையில். ரேடியோதெரபி மற்றும் கீமோதெரபி சிகி‌ச்சை மைக்கேலுக்கு அளிக்கப்பட்டது. இந்த சிகி‌ச்சைக்குப் பின் சமீபத்தில் அவர் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அதில் புற்று நோயிலிருந்து தான் பூரணமாக குணமடைந்துவிட்டதாகவும், நோயை வென்றுவிட்டதாகவும் தெ‌ரிவித்தார். மைக்கேலின் மூத்த மகன் போதைப் பொருள் வைத்திருந்ததாக ஜெயிலுக்கு அனுப்பப்பட்ட நேரத்தில்தான் மைக்கேலுக்கு கேன்சர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ட்ராஃபிக், வால் ஸ்ட்‌ரீட், பேசிக் இன்ஸ்டிங்க்ட் போன்ற …

    • 0 replies
    • 470 views
  18. ஆஸ்கர் விருது பெற்ற இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இம்முறை கோல்டன் குளோப் விருதை வெல்லும் வாய்ப்பை இழந்தார். டானி பாயிலின் இயக்கத்தில் உருவான '127 ஹவர்ஸ்' படத்துக்காக சிறந்த பின்னணி இசைக்கான பிரிவில் கோல்டன் குளோப் விருதுக்கு ரஹ்மான் பரிந்துரைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இப்பிரிவுக்கான விருதை 'தி சோஷியல் நெட்வொர்க்' படத்துக்காக இசையமைப்பாளர்கள் டிரெண்ட் ரெஸ்னர் - ஆட்டிகஸ் ரோஸ் வென்றனர். இதனால், ரஹ்மானுக்கு கோல்டன் குளோப் விருது கிடைக்கும் என்ற இந்திய ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு இம்முறை நிறைவேறவில்லை. முன்னதாக, டானி பாய்லின் 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்துக்காக 2009-க்கான கோல்டன் குளோப் விருதை ரஹ்மான் பெற்றார். அதே படத்துக்காக அவர் இரண்டு ஆஸ்கர்களை அள…

    • 0 replies
    • 335 views
  19. அறிவு' படத்தை அடுத்து கே.வி.ஆனந்த இயக்கும் 'மாற்றான் உருவாகிறான்' படத்தில் நடிக்க இருக்கிறார் சூர்யா. தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஏழாம் அறிவு படத்தில் நடித்து வரும் அவர், அதையடுத்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் 'மாற்றான் உருவாகிறான்' எனும் படத்தில் நடிக்க இருக்கிறார். அயன் படத்தை போலவே இப்படத்துக்கும் சுபா கதை எழுத, ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கவிருக்கிறார். கதாநாயகி யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. எனிடும் அஞ்சலி அல்லது அமலா பால் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் முதல் தொடங்க உள்ளது. இதனிடையே தமிழ் '3 இடியட்ஸ்' படத்திலும் சூர்யா நடிப்பது உறுதி செய்யப்பட்டாலும், அப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி 23ம் தேதி முத…

    • 0 replies
    • 418 views
  20. இதில் மூன்று கோடியை தருவதாக ஒப்புக் கொண்டாராம் விஜய். ஆனால் கடைசி நேரத்தில் அதற்கும் பிரச்சனை. சொந்த வீட்டிலிருந்தே அதற்கும் எதிர்ப்பு எழுந்ததாக கூறப்படுகிறது. விஜய்யின் தனிக்கட்சி மூட், எஸ்.ஏ.சியின் ஜெயலலிதா சந்திப்பு இவ்விரண்டும்தான் அவரது படத்திற்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறதோ என்ற எண்ணம் அழுத்தமாக விதைக்கப்பட்டிருக்கிறது சினிமா வட்டாரத்தில். “இந்த பிரச்சனையில் நான் உதவட்டுமா?” என்று, தானே முன்வந்து விஜய்யிடம் பேசினாராம் கேப்டன் விஜயகாந்த். அது மேலும் பல அரசியல் சிக்கல்களை ஏற்படுத்தக் கூடும் என்பதால் இப்போதைக்கு அதை நிறுத்தி வைத்திருக்கிறார் விஜய் என்றும் கிசுகிசுக்கிறார்கள் கோடம்பாக்கத்தில். இறுதி நேரம் வரைக்கும் நம்பிக்கையை விடாமல் போராடிக் கொண்டிருக்கிறா…

    • 0 replies
    • 600 views
  21. நடிகை ரம்பாவுக்கு பெண் குழந்தை கனடாவில் பிறந்தது புதன், 19 ஜனவரி 2011 10:40 நடிகை ரம்பாவுக்கும், கனடாவை சேர்ந்த தொழில் அதிபர் இந்திரகுமாருக்கும் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. ரம்பா கர்ப்பம் ஆனார். நிறைமாத கர்ப்பமாக இருந்த அவருக்கு பிரசவ வேதனை ஏற்பட்டது. உடனடியாக டொரான்டோ நகரில் உள்ள மவுன்ட் சினை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும், குழந்தையும் நலமாக இருப்பதாக, ரம்பாவின் கணவர் இந்திரகுமார் தெரிவித்தார். tamilcnn.com

  22. Started by வீணா,

    நேற்று தான் மகிழ்ச்சி திரைப்படம் காண வாய்ப்பு கிடைத்தது. நீண்ட நாட்களுக்கு பின்னர் ஒரு நல்ல திரைப்படம் பார்த்த நிறைவை அது அளித்தது, இதை ஏன் சினிமா ஆர்வலர்கள் அதிக அளவில் மக்களிடம் கொண்டு சேர்க்க தவறிவிட்டார்கள்? என்னும் கேள்வியும் தொக்கி நின்றது.தலைமுறைகள் என்னும் எழுத்தாளர் நீல.பதமநாபனின் நாவலை நண்பர் செ.சரவணகுமாரின் அறிமுகம் மூலமே அறிவேன், அதன் கதையையும் அவரின் பதிவின் மூலமே அறிந்திருந்த எனக்கு அதை உடனே பார்க்க ஆவல் எழுந்தது. சென்னையில் எங்கு தேடியும் இந்த படத்தை பற்றிய தகவலே இல்லை.யாரும் இவ்வளவு நல்ல படத்தை வாங்கி திரையிடுவதில் ஆர்வம் காட்டாதது வியப்பையும் வேதனையையுமே தந்தது. மக்கள் ஆர்வம் டிவி சீரியல்கள் மீது அதீதமாக பாய்ந்துவிட்டதால் இன்றைய இயக்குனர்கள் யாரும் …

  23. ஐஃபாவில் இருந்து அமிதாப் பச்சன் விலகினார் இந்தியா சர்வதேச திரைப்பட விழாவின் (ஐஃபா) தூதராக கடந்த 10 ஆண்டுகளாக இருந்த இந்தி நடிகர் அமிதாப் பச்சன், அப்பொறுப்பில் இருந்து விலகியுள்ளதாக அறவித்துள்ளார். இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற்ற ஐஃபா விழாவினை தமிழர்கள் கடுமையாக எதிர்த்ததையடுத்து, அவ்விழாவில் கலந்து கொள்ளாமல் அமிதாப் பச்சன் புறக்கணித்தார். அவருக்கு பதிலாக இந்தி நடிகர் சல்மான் கான் ஐஃபா தூதராக பொறுப்பேற்றார். ஆயினும் கொழும்பு ஐஃபா விழா படுதோல்வியில் முடிந்தது. இந்த நிலையில், டிவிட்டர் இணையத் தளத்தில், “ஐஃபாவிற்கு நாங்கள் வரவில்லை. எங்களுடைய சேவை ஐஃபாவிற்குத் தேவைப்படவில்லை” என்று அமிதாப் கூறியுள்ளார். “இந்த முடிவை நான் எடுக்கவில்லை... ஐஃபாவின் அடு…

    • 0 replies
    • 895 views
  24. Started by வீணா,

    இந்தாண்டின் துவக்கமே தனுஷுக்கு மட்டுமல்ல நமக்கும் ஒரு நல்லதொரு சினிமாவைக் கொடுத்திருக்கிறது சேவற்கட்டு என்னும் சேவற்சண்டை தென் மாவட்டங்களில் காளை பிடிக்கும் வீர விளையாட்டைப் போலவே பன்னெடுங்காலமாக நடைபெற்று வருவதுதான்.. எப்போது ஆரம்பித்தது என்று தெரியவில்லை. ஆனால் சண்டைகளுக்காகவே சேவல்கள் வளர்க்கப்படுவதும், அந்தச் சண்டைக் காட்சிகள் ஆங்காங்கே நடப்பதும் நினைவு தெரிந்த நாளில் இருந்து பார்த்து வந்ததுதான். ஆனால் அதனையே ஒரு கதைக்களமாக்கி நான் பார்க்கும் முதல் திரைப்படம் இதுதான். சேவற்சண்டை பற்றிய ஒரு ஆவணப் படம் என்று சொல்லுகின்ற அளவுக்கு படத்தின் முற்பாதி முழுக்க சேவல்களின் ஆக்கிரமிப்பு அதிகம். எந்த அளவுக்கு சேவலுக்கு முக்கியத்துவம் கொடுத்து வளர்க்க வேண்டும்..? த…

    • 1 reply
    • 1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.