வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
இது படமாக கடந்தவருடம் வெளியிடப்பட்ட விபரணம். இதன் முக்கிய பங்கை வகித்த அல் கோர் இற்கு இந்தக் கிழமை நோபல் பரிசும் ஜநாவின் சுற்றுச்சூழல் மாற்றங்கள் பற்றிய குழுவோடு இணைத்து வழங்கப்பட்டிருந்தது. http://en.wikipedia.org/wiki/An_Inconvenient_Truth இதில் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை ஒவ்வொரு நிமிடமும் பலனுள்ள தகவல்களை சாதாரணமானவர்களிற்கு உறைக்கக் கூடி முறையில் அதே நேரம் சுவாரசியமாகவும் வழங்கப்படுகிறது. அல் கோர் உலகம் வெப்பமாதலை நிராகரிக்கும் தரப்பினரின் இன்றை பிரச்சார யுக்திகளை புகையிலை புற்றுநோயை உருவாக்கும் என்பதை நிராகரித்துக் கொண்டிருந்து சிக்கெரெட் கொம்பனிகளின் முயற்சிகளோடு ஒப்பிட்டுள்ளார். அடுத்து நாம் உலகம் வெப்பமாதல் சடுதியாக நிகழாது மெதுவாக நிகழ்வதா…
-
- 2 replies
- 1.5k views
-
-
சினிமாவை மக்களுக்கான ஊடகமா மாத்தணும்: சீமான் நேர்காணல்: மினர்வா & நந்தன் மண்ணுக்காக, மக்களுக்காக சினிமாவில் இருந்து எழும் ஒரு கலகக் குரல் இயக்குநர் சீமானுடையது. அதிர வைக்கும் வசனங்கள், கோபாவேசமான காட்சிகள் என இவர் இயக்கிய தம்பி படம், பார்க்க வந்தவர்களை முறுக்கேற்றி அனுப்பியது. அனல் கக்கும் மேடைப் பேச்சினால் பெரியாரிய கொள்கைகளை நாடெங்கும் பரப்பி வருகிறார். ஒரு ஞாயிற்றுக் கிழமை பிற்பகலில் சாலிகிராமத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் கீற்றுவின் நேர்காணல் பகுதிக்காக சந்தித்தோம். கேள்விகளை முடிக்குமுன்னே பதில்கள் அவரிடமிருந்து சீறி வந்தன. சாதி, மதம், மொழி குறித்துப் பேசும்போதெல்லாம் அவரது குரல் கோபத்தின் உச்சத்தில் ஒலித்தது. இனி பேட்டியிலிருந்து... …
-
- 0 replies
- 1.1k views
-
-
முன்னணி ஹீரோக்கள் கூட ஆச்சர்யமாக பார்க்கிறார்கள் ஜீவாவை. காரணம் அவர் தேர்தெடுக்கும் கதைகள். ராம் படத்தில் தொடங்கி ஈ, பொறி, கற்றது தமிழ், ராமேஸ்வரம் என்று அவர் கைவைக்கிற கதைகள் எல்லாமே, தொட்டால் சுடுகிற ரகம். தியேட்டரில் ஓடிக் கொண்டிருக்கும் கற்றது தமிழ் இருவேறு அபிப்ராயங்களை கொண்டிருக்கிறது என்றாலும் ஜீவாவை பொறுத்தவரை வா..வா.. என்கிறார்கள் ரசிகர்கள். சமுதாயத்தின் ஏற்றதாழ்வுகளை சற்று காரமாகவே விமர்சிக்கிறது கற்றது தமிழ். இரண்டாயிரம் ரூபாய் வாடகைக்கு சென்னையில் வீடு கிடைப்பதில்லை என்ற விஷயத்தை வெறும் வசனமாக உச்சரிக்காமல் வாழ்ந்தது போல் உச்சரிக்கிறார் ஜீவா. தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தயாரிப்பாளரின் மகன் இவர். எப்படி வாய்த்தது இந்த ஏழைகளின் அனுபவம்? ஜீவாவை கேட்டோம். …
-
- 0 replies
- 1.2k views
-
-
பத்து வருடங்களுக்கு முன், வருடத்துக்கு ஒரு திரைப்படவிழாவையே சென்னையில் கனவு காண முடியாது. இன்று தடுக்கி விழுந்தால், திரைப்பட விழாக்கள். இந்த ஆரோக்கியமான சூழலை உருவாக்கியதற்காக சென்னையிலுள்ள பிரெஞ்ச் கலாசாக மையமான அல்லையன் பிரான்ஸியசையும், ICAF- யையும் எத்தனை பாராட்டினாலும் தகும். அல்லையன்ஸ் பிரான்சியசும், ICAF-யும் இணைந்து தமிழ், பிரெஞ்ச் வரலாற்று திரைப்பட விழாவை சென்னையில் நடத்துகிறது. இதில் வரலாற்றை பின்புலமாகக் கொண்ட தமிழ், பிரெஞ்ச் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. சென்னை அல்லையன்ஸ் பிரான்சியஸ் அரங்கில் இன்று மாலை 6-30 மணிக்கு திரைப்பட விழா தொடங்கப்படுகிறது. முதல் திரையிடலாக ரிட்லி ஸ்காட்(Ridley Scott) இயக்கிய '1492 Christoph Colomb' திரையிடப்படுகிறது. இ…
-
- 2 replies
- 1.3k views
-
-
ஆர். பி. செளத்ரி வீட்டில் இன்னொரு முறை டும் டும் டும் கொட்டப்படவுள்ளது. அண்ணன் ரமேஷை தொடர்ந்து ஜீவாவும் இல்லற வாழ்வில் இணைகிறார். தயாரிப்பாளர் ஆர். பி. செளத்ரியின் கடைக்குட்டி மகன் ஜீவா. ரவிமரியா இயக்கிய 'ஆசை ஆசையாய்' படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அவரைத் தொடர்ந்து அவரது அண்ணன் ரமேசும் 'ஜித்தன்' படம் மூலம் அறிமுகமானார். அண்ணனுக்கு முன்பாகவே படத்தில் அறிமுகமான ஜீவா அவருக்கு முன்பாகவே வெற்றி நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 'ராம்', 'டிஷ்யூம்', 'ஈ', 'கற்றது தமிழ்' என படத்துக்கு படம் வித்தியாசமான வேடங்களை ஏற்று கலக்கி வரும் ஜீவா தற்போது 'தெனாவட்டு', 'ராமேஸ்வரம்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இளம் நடிகர்களில் பிஸியாக திகழும் ஜீவாவுக்கு விரைவில் க…
-
- 0 replies
- 1.2k views
-
-
அடுத்தடுத்து வெற்றி பெற்று வரும் நயன்தாரா, தென்னிந்தியா வின் கனவுக் கன்னியாகத் திகழ்கிறார். வல்லவன் படப்பிடிப்புத் தளத்தில் அவரைச் சந்தித்த போது: கோலிவுட்டின் கவர்ச்சிக் கன்னியாக இருக்கிறீர்கள். இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? (சிரித்தபடி) கவர்ச்சிக்கான வரையறை, இலக்கணம் எதுவும் எனக்குத் தெரியாது. செக்ஸ் அடையாளத்தை விட, நல்ல நடிகை என்று பெயர் எடுப்பதையே விரும்புகிறேன். ஆனால், மலையாளப் படங்களில் நீங்கள் நடித்ததற்கும் தமிழ்ப் படங்களில் கவர்ச்சியாக நடிப்பதற்கும் பெரிய வித்தியாசம் உ ள்ளதே? ஆமாம். என் மேக்-அப் தான் அதற்குக் காரணம் என்று நினைக் கிறேன். என் மேக்-அப், சிகையலங்காரம், அலங்காரப் பொ ருட்கள் ஆகியவற்றுக்கு நான் அதிக முக்கியத்துவம் கொடுக்கி றேன். எ…
-
- 1 reply
- 2.6k views
-
-
தமிழ்த்திரைக்கண் வழங்கும் முழு நீளத் திரைப்படம் 'விடுதலை மூச்சு"
-
- 2 replies
- 1.8k views
-
-
ரஜினி கதை எஸ்.விஜயன் ரஜினி சினிமாவில் சம்பாதித்து சொந்தமாக வீடு கட்டிக் கொண்டது முதலில் சென்னையில்தான். இங்குள்ள தமிழ்ப் பெண் லதாவை கலப்புமணம் புரிந்து தானும் ஒரு தமிழராக குடும்பத்தோடு ரஜினி இங்கு வசித்து வருகிறார். தமிழகம் வந்து இருபது வருடங்களுக்குப் பின்பு இப்போதுதான் இவர் பெங்களூரில் பிளாட் ஒன்று வாங்கியிருக்கிறார். "சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும். உங்க பேரை ஒரு தரம் சொன்னா நிமிர்ந்து எழுந்திடும், துள்ளும்" என்று "ராஜா சின்ன ரோஜா" படத்தில் ரஜினியைப் பற்றி பாடல் வரிகள் உண்டு. அதில் எள்ளளவும் மிகையில்லை என்பதற்கு நமது வீட்டுக் குழந்தைகளே சாட்சி. அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு இன்று ரஜினியின் பெயரைச் சொன்னால் போதும். சோறு ஊட்டுவதற…
-
- 2 replies
- 1.8k views
-
-
இந்தப்படத்தின் பெயரையும் முகப்புப் படத்தையும் பார்த்தவுடன் நான் நினைத்தது அமொரிக்கா தனது புகழ்பாடும் வழமையான விளம்பரப்படமாக இருக்கும் என்று. ஆனால் இது உண்மைச்சம்பவத்தைப் பற்றி எழுதப்பட்ட Flags of Our Fathers என்ற புத்தகத்தைத் தழுவி எடுக்கப்பட்டது. புத்தகத்தை எழுதியவர் James Bradley. புத்தகத்தை எழுதியவரின் தந்தையான கடற்படையின் களமுனை வைத்தியரும் 2 அமெரிக்க ஈரூடகப் படையினரும் 2 ஆம் உலகமா யுத்த காலப்பகுதியில் அமெரிக்க அரசு தனது மக்களிடம் போர்க்கால கடன் அடிப்படையிலான நிதிதிரட்டல் (war bonds) முயற்சியில் முக்கிய கதாநாயகர்கள் ஆனார்கள். அமெரிக்கப்படைகள் யப்பானை ஆக்கிரமிப்பதற்கு முன்னோடியாக Iwo Jima என்ற தீவை கைப்பற்ற முடிவெடுத்தது. அதுவே அமெரிக்கா யப்பானியர்களை அவர்களத…
-
- 2 replies
- 1.5k views
-
-
உடம்பு எப்படி இருக்கு? - விமர்சனம் ஞாயிறு, 30 செப்டம்பர் 2007( 14:44 IST ) Webdunia .com டாக்டர் ராஜசேகர், ஷம்விருதா, ரகுவரன், கலாபவன் மணி, பானுசந்தர், முமைத்கான் நடிப்பில் மதுவின் ஒளிப்பதிவில் சின்னாவின் இசையில் செல்வாவின் வசனத்தில் ஜீவிதா ராஜசேகர் இயக்கியுள்ள படம். தயாரிப்பு ஆண்டாள் ஆர்ட்ஸ். ராணுவத்தில் மேஜராக இருக்கும் டாக்டர் ராஜசேகர் விடுமுறையில் ஊருக்கு வருகிறார். அவரது தந்தை ரகுவரன் மாநில அமைச்சர். ரகுவரன் பல தாதாக்கள் உதவியுடன் பல அதிகாரத் துஷ்பிரயோகங்கள் செய்கிறார். இதை அறிந்த மகன் அப்பாவை எதிர்த்து அரசியல் களம் இறங்குகிறார். சுயேச்சையாக நின்று அப்பாவை தோற்கடிக்கிறார். எம்.எல்.ஏ.க்கள் பலமின்றி ஆட்சியமைக்க சுயேச்சைகள் உதவியை நாடவேண்…
-
- 3 replies
- 1.6k views
-
-
http://sinnakuddy1.blogspot.com/2007/10/mgr.html
-
- 3 replies
- 2.2k views
-
-
நட்சத்திர ஓட்டலில் நள்ளிரவு பார்ட்டி : போதையில் நடிகைகள் குடுமிப்பிடி சண்டை சென்னை: போதையில் நள்ளிரவு சூடிஸ்கோத்தே' நடனத்தில் நடிகைகள் இருவர் குடிமிப்பிடி சண்டை போட்ட விவகாரம் குறித்து விசாரணை நடக்கிறது. சூதுணை நடிகை அடியாட்களுடன் எனது வீட்டிற்கு வந்து கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளார்' என நடிகை ஐஸ்வர்யா போலீசில் புகார் கொடுத்தார். நடிகை லட்சுமியின் மகள் ஐஸ்வர்யா. சூஎஜமான், ராசுக்குட்டி' உட்பட பல படங்களில் நடித்தவர். சென்னை அண்ணாநகர் சாந்தி காலனியைச் சேர்ந்த துணை நடிகை ப்ரீத்தி உன்னி. இவர்கள் இருவரும் கோலிவுட்டில் நுழைவதற்கு முன் இருந்தே தோழிகளாக பழகினர். சினிமாவிற்கு நடிப்பதற்கு முன் சூடான்ஸ் கிளப்' உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக சுற்றினர். இடையில…
-
- 10 replies
- 35.8k views
-
-
கமர்ஷியல் கெட்ட வார்த்தையல்ல - விக்ரம் வெள்ளி, 28 செப்டம்பர் 2007( 16:58 IST ) Webdunia இப்போது விக்ரமுக்குள் வியாபித்திருக்கும் பாத்திரம் கந்தசாமி. 'பீமா'-வில் இருந்து மெல்ல விடுதலையாகி 'கந்தசாமி'க்குள் நுழைந்திருக்கிறார். இனி கந்தசாமியையும் விக்ரமையும் பிரிக்க முடியாது. பீமாவுக்காக உடல் கனத்து முறுக்கேற்றியவர் இப்போது கந்தசாமிக்காக இளைத்து இளமைக் களை கட்டியிருக்கிறார். இனி கந்தசாமி alias விக்ரமுடன்...! 'பீமா'விலிருந்து 'கந்தசாமி' எவ்விதத்தில் வேறுபடுகிறான்...? இரண்டு படங்களும் வேறுவேறு ரகம். இரண்டு நிறம், மணம், குணம் கொண்டது. இரு படங்களையும் ஒப்பிட முடியாது. ஒப்பிடவும் கூடாது. அந்த அளவுக்கு கதைக்களம் காட்சிக்கான தளம் எல்லாவற்றிலும் வே…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஜம்மு பேபி ஒவ்வொருகிழமையும் படம் பார்கிறது ஆனா படம் காமெடியா இல்லாட்டி அரைவாசியில "ஓவ்" பண்னி போட்டு போடுவேன்!!இறுதியாக கடைக்கு போய் "அம்முவாகிய நான்" என்ற படத்தை பார்தவுடன் என்ன ஜம்மு மாதிரி அம்மு என்று இருக்கு நம்ம பெயர் அவ்வளவு பேமஸ் ஆகிட்டோ என்று படத்தை எடுத்து கொண்டு வந்தேன் :P வந்து பார்த்தா தான் தெரியும் படம் வந்து பார்தீபனின் என்று நான் நினைத்தேன் படம் அரைவாசியில நிற்பாட்டவேண்டும் போல என்று ஆனா பேபிக்கு படம் நல்லா பிடித்து கொண்டது!!இறுதிவரை பார்தேன் அந்த திரைபடத்தை!!சோ நம்ம யாழ்கள மெம்பர்சிற்காக ஜம்மு பேபி +குமுதத்தில் இருந்தும் எடுத்து விமர்சனம் இதோ உங்களுக்காக!!!! ஜம்மு பேபி திரைவிமர்சனம் இன்று "அம்முவாகிய நான்" அம்பு என்ற விலை மாதுவை மனைவியாக்கிக் …
-
- 31 replies
- 6.4k views
-
-
நயன்தாரா படத்தில் ஸ்ரேயா முன்னணி நடிகைகளின் நட்புக்கும், இந்தியா - பாகிஸ்தான் உறவுக்கும் அதிக வித்தியாசமில்லை. அவ்வப்போது பேச்சுவார்த்தை நடந்தாலும், அண்டர்கிரவுண்டில் போர் நடந்து கொண்டேயிருக்கும். இவர்களை ஒரே படத்தில் நடிக்க வைப்பதென்பது யானையை கட்டி மாரடிப்பது போல. ஆனாலும், இந்திய கிரிக்கெட் அணியின் உலககோப்பை வெற்றி மாதிரி அவ்வப்போது அதிசயங்கள் நிகழும். 'துளசி' என்றொரு படம். வெங்கடேஷ் ஹீரோ. ஹீரோயின் நயன்தாரா. இதே பெயரை வேறொருவர் ஏற்கனவே பதிவு செய்திருந்தது தெரியவர, 'துளசிராம்' என பெயரை மாற்றினர். பிறகு பேச்சுவார்த்தை நடத்தி ராமை எடுத்துவிட்டு மீண்டும் 'துளசி'யாக்கியிருக்கிறார்கள். பெயரிலேயே பெரும் குழப்பத்தை ஏற்படுத்திய இந்தப் படத்தில் குத்து பாட…
-
- 1 reply
- 944 views
-
-
`உதிரிப்பூக்கள்' `ரன்' படங்களில் நடித்த நடிகர் விஜயன் திடீர் மரணம் கிழக்கே போகும் ரெயில் என்ற படம் மூலம் தமிழ் பட உலகில் அறிமுகமாகி 1980- களில் கொடி கட்டி பறந்தவர் விஜயன் உதிரிப்பூக்கள் படம் அவரை உச்சியில் ஏற்றியது. பசி, ஒரு விடுகதை ஒரு தொடர்கதை, நாயகன், பாலைவன ரோஜாக்கள் என பல படங்களில் நடித்தார். மலையாள படங்களிலும் நடித்துள்ளார். இளம் நடிகர்கள் மாதவனுடன் ரன் படத்திலும் அஜீத்துடன் வரலாறு படத்திலும் நடித்தார். அதன் பிறகு சொந்த ஊரான கேரள மாநிலம் கோழிக்கோடு சென்று விட்டார். சுந்தர் சி. யின் ஆயுதம் செய்வோம் படத்தில் மீண்டும் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்தது. இதையடுத்து சென்னை வந்து கடந்த சில நாட்களாக இந்த படத்தில் நடித்து வந்தார். நேற்று இரவு 12 மணிக்க…
-
- 1 reply
- 2.1k views
-
-
http://video.google.com/videoplay?docid=81...08422&hl=en இத்திரைபடத்தை பற்றிய டிசே தமிழனின் விமர்சன பதிவு கீழே இவ்வழியால் வாருங்கள் (A9 Highway) படத்தை முன்வைத்து-சக மனிதரை நேசிப்பதென்பதைப் போன்று இவ்வுலகில் அழகானது எதுவேமேயில்லை. இனங்களை, மொழிகளை, நிறங்களை மீறி மனிதாபிமானம் என்ற புள்ளி நம் எல்லோரையும் ஒரு புள்ளியில் இணைத்துவிடக்கூடும். எங்கோ ஒரு நாட்டில் தன் சொந்த ஊரை இழந்துகொண்டிருப்பவனின் துயரம்…, ஒடுக்கப்படும் மக்களின் இருப்பிற்காய் இரத்தம் சிந்திக்கொண்டிருக்கும் போராளியின் மனவுறுதி…, உயிர்களை, உடலுறுபுக்களை இழந்துகொண்டிருக்கின்ற மக்களின் அவலம்… இவையெல்லாம் போர் நடந்துகொண்டிருக்கும் எந்தப்பகுதியிற்கும் பொதுவானது. அதேபோல் அதிகாரமும் ஆயுதமும் வைத்திருப்பவ…
-
- 5 replies
- 2.2k views
-
-
THE GOOD GERMAN இயக்கம்: Steven Soderbergh எழுத்து: Joseph Kanon(நாவல்), Paul Attanasio (திரைக்கதை) நடிப்பு: George Clooney, Cate Blanchett, Tobey Maguire இசை: Thomas Newman ஒளிப்பதிவு: Steven Soderbergh as Peter Andrews விநியோகம்: Warner Bros. வெளியீடு: December 8, 2006 நாடு: USA மொழி: English செலவு: $ 32,000,000 (கிட்டத்தட்ட) இந்தக் கிழமை திரைவெளியில் நாங்கள் பார்க்கப் போவது THE GOOD GERMAN என்ற திரைப்படம். நாற்பதுகளில் நடைபெறுகிற கதை தான் இது. JOSEP KANON என்ற எழுத்தாளரின் நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் இது. அமெரிக்காவின் போர் சம்பந்தப்பட்ட விடயங்களுக்கான செய்தித்தொடர்பாளர் JAKE என்பவர் POTSDAM மாநாட்டை பற்றி எழ…
-
- 5 replies
- 1.7k views
-
-
நண்பன் தங்கருக்கு... சென்ற வார விகடன் இதழில், உங்கள் நேர்காணலைப் பார்த்தேன். ஒவ்வொருத்தருக்கும் எதிரி ஒருத்தன் உள்ளுக்குள்ளேயே இருப்பான். சிலருக்கு அவங்க நேர்மையே எதிரி! இன்னும் சிலருக்கு அவங்க திறமையே எதிரியாகும். ஆனா, உங்களுக்கு உங்க வாய்தான் எதிரி. என்னை நன்றி மறந்தவனாகச் சித்திரிச்சிருக்கீங்க. ஆனா, உண்மை என்ன தங்கர்? ‘பள்ளிக்கூடம்’ கதையை நீங்க என்னிடம் விவரிச்சப்போ, அது ‘அழகி’யையும் ‘ஆட்டோகிராஃப்’பையும் நினைவுபடுத்துதுன்னு சொன்னேன். இதில் நீங்களும் நானும் நடிச்சா, இவங்களுக்கு வேற வேலையே இல்லையான்னு மக்கள் நினைச்சிடுவாங்கன்னு மட்டும்-தான் சொன்னேன். வேறு நடிகர்கள் நடிச்சா, அது தெரியாதுன்னும் சொன்-னேன். ஆனா, பிடிவாதமா நின்னீங்க. இப்போ, அதை மறந்துட்டு என…
-
- 1 reply
- 1.6k views
-
-
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் மாயா இப்பதிவில் இலங்கையிலிருந்து வெளிவந்த திரைப்படங்களையும் சில திரைப்படங்களின் விபரங்களையும் உள்ளடக்க முனைகிறேன் நான் சிறியவன் ? ? சில திரைப்படங்கள் விடுபட்டிருக்கலாம். தெரிந்தவர்கள் பின்னூட்டம் மூலம் தெரியப்படுத்தினால் மிகவும் உதவியாயிருக்கும் நூலகமொன்றில் நேரம்போகாமல் ? ? புத்தகமொன்றைப்புரட்டிக்கெ
-
- 2 replies
- 1.2k views
-
-
BLOOD DIAMOND இயக்கம்: Edward Zwick தயாரிப்பு: Gillian Gorfil, Marshall Herskovitz, Graham King, Paula Weinstein, Edward Zwick எழுத்து: Charles Leavitt நடிப்பு: Leonardo DiCaprio, Jennifer Connelly, Djimon Hounsou, Michael Sheen, Arnold Vosloo இசை: James Newton Howard ஒளிப்பதிவு: Eduardo Serra படத்தொகுப்பு: Steven Rosenblum விநியோகம்: Warner Bros. Pictures வெளியீடு: United States December 8, 2006 நாடு: USA மொழி: English, Mende, Krio அடுத்த நாம் பார்க்க இருக்கிற படம் BLOOD DIAMOND. 1990களில் ஆபிரிக்காவில் உள்ள SIERRA LEONE என்ற இடத்தில் நடக்கிற போர்ச்சூழலை பின்னணியாக வைத்து இந்தக் கதை பின்னப்பட்டிருக்கிறது. சிம்பாவே முன்னாள் இராணுவ வ…
-
- 9 replies
- 3.3k views
-
-
தேவாவின் இசையில், குகநாதனின் இயக்கத்தில் "தமிழ்ப் பாசறை" நவம்பர் 26இல் வெளிவருகிறதாம். மேலதிக செய்திகளுக்கு
-
- 3 replies
- 1.2k views
-
-
தமிழக அரசு விருது அறிவிப்பு: சிறந்த நடிகர்களாக ரஜினி, கமல் தேர்வு சிறந்த படம் சந்திரமுகி, கஜினி, வெயில் சென்னை, செப். 6- தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாடு அரசின் திரைப் பட விருதுகள் வழங்கும் திட்டத் தின்படி சிறந்த முழு நீள தமிழ் திரைப்படங்களுக்கும், நடிகர், நடிகையர், தொழில் நுட்பக் கலைஞர்கள் ஆகியோ ருக்கும் பரிசுகளும் தமிழ்த் திரையுலகில் சாதனை புரிந்த வர்களுக்கு கலைத்துறை வித்தகர் விருதுகளும், திரைப்படம் மற்றும் தொலைக் காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கு விருதுகளும் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகின்றன. 2005 மற்றும் 2006 ஆகிய 2 ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் மற் றும், 2004-05, 2005-06 ஆகிய 2 கல்வி ஆண்டுகளுக்…
-
- 4 replies
- 2.2k views
-
-
பிரகாஷ்ராஜின் பெரிய மனசு நடிப்பில் மட்டுமின்றி நடத்தையிலும் புல்லரிக்க வைக்கிறார் பிரகாஷ்ராஜ். வில்லனாக நான்கு மொழிகளில் கலக்கிக் கொண்டிருக்கும் இவரொரு நிஜ ஹீரோ. இப்படி சொன்னதும், ஹீரோயினை எந்த வில்லனிடமிருந்து காப்பாற்றினார் என கேட்காதீர்கள். இவர் காப்பாற்றுவது நல்ல சினிமாவை. 'தயா' தொடங்கி 'மொழி' வரை பிரகாஷ்ராஜ் தயாரித்த அனைத்துப் படங்களும் ஓரளவு நேர்மையானவை. பணத்துக்காக அவர் மேற்கொண்ட சூதாட்டமல்ல இப்படங்கள். தயாரித்துக்கொண்டிருக்கும் 'வெள்ளித்திரை'யும் தயாரிக்கப் போகும் 'அபியும் நானும்' படங்களும் இதே ரகம்தான்! சம்பாதிக்கிற பணத்தை நல்ல சினிமாவுக்கு செலவிடும் இவர், பணம் வாங்காமலே ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இயக்குனர் ப்ரியதர்ஷன…
-
- 5 replies
- 3k views
-
-
நான் பார்த்த தமிழல்லாத ஏனைய மொழித் திரைப்படங்கள் (குறிப்பாக Hollywood திரைப்படங்கள்) பற்றி ஒவ்வொரு கிழமையும் எழுதலாம் என்று எண்ணியிருக்கிறேன். அந்தத் திரைப்படங்களை நீங்களும் பார்த்திருந்தால் உங்கள் பார்வையையும் எழுதலாம். நான் எழுதுவது திரைப்படம் பற்றிய விமர்சனமாக இருக்காது. மேலோட்டமாக படத்தின் கதைச் சுருக்கம் பற்றியும், படத்தின் சூழல் பற்றியும் எழுதுவேன். அத் திரைப்படத்தைப் பார்த்தவர்கள் அதுபற்றிக் கருத்தாடலாம். அல்லது அதில் நடித்த நடிகர்கள் பற்றிய மேலதிக தகவல்களை இணைக்கலாம். தகவட் பிழைகள் இருந்தால் சுட்டிக்காட்டலாம். The Holiday (தமிழில்: விடுமுறை) இயக்கம்: Nancy Meyers தயாரிப்பு: Bruce A. Block, Nancy Meyers எழுத்து: Nancy Meyers ந…
-
- 0 replies
- 856 views
-