வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5554 topics in this forum
-
இடைக்காலத்தில் கமல் - ஸ்ரீதேவி ஜோடி பல படங்களில் ஒன்று சேர்ந்தார்கள். "மீண்டும் கோகிலா" பாடல் காட்சியில் அவர்களின் நடிப்பைப் பாருங்கள். கமலின் அந்த mannerism - கண் சிமிட்டுதல் அழகாக செய்வார். "அன்பே சிவம்" படத்திலும் இப்படி ஒரு mannerism படம் முழுக்கச் செய்வார். இந்தக் காட்சியில் மற்றப் படங்களில் வருவது போல இருவரும் திடீரென்று எகிப்து, அவுஸ்திரேலியா என்று பாடி ஆடுவதாக கனவு காணாமல் வீட்டுக்கூடத்திலேயே காட்சி நகைச்சுவையாக செல்கிறது.
-
- 17 replies
- 4.4k views
-
-
இதோ வர்றார்... இன்னொரு சிவாஜி! ரகளை அறிமுகம்! நடிகர் திலகம் சிவாஜி, சூப்பர் ஸ்டாரின் ‘சிவாஜி’யைத் தொடர்ந்து இன்னொரு ‘சிவாஜி’ ரகளையாக தமிழ் சினிமாவுக்குள் நுழைந்திருக் கிறார். படத்தின் பெயர் ‘சிங்கக்குட்டி’. ஹீரோ, ஸ்ரீப்ரியாவின் சகோதரி மீனாவின் மகன் சிவாஜி. ‘‘இந்த சிவாஜி யார் தெரியும்ல... சிவாஜியின் மூத்த மகன் ராம்குமாரின் மகன்!’’ என்று இண்டஸ்ட்ரியில் புது ஹீரோ பற்றி ஷாக் சர்ப்ரைஸ் தருகிறார்கள். சுவாரஸ்யம் தொற்றிக்கொள்ள ‘சிங்கக்குட்டி’ பட அலுவலகத்துக்குப் போனோம். நம்மை வரவேற்றவர் நடிகை ஸ்ரீப்ரியாவின் தாயார் கிரிஜா ஸ்வாமி. ‘‘ஆமா! இப்ப ஃபீல்டுக்குப் புதுசா வந்திருக்கிறது என் பேரன்தான். என் பொண்ணு மீனாவோட பையன். சிவாஜியின் பேரன். ‘சி…
-
- 26 replies
- 5.1k views
-
-
'இரண்டு பெண்களும் ஒரு ஆணும் உங்கள் இரவுகளை ரணமாக்க வருகிறார்கள்' இப்படி மிரட்டுவது நாமல்ல. திக் திக் பட அழைப்பிதழ்தான் அக்கா புருஷன் மீது தங்கை ஆசைப்படுவதாக கதை சொன்ன 'கலாபக் காதலன்' படத்தை எடுத்து பரபரப்பூட்டிய இகோர் அடுத்து பயமுறுத்தும் படம்தான் 'திக்..திக்..' தலைப்பிலேயே திரில்லர் சஸ்பென்ஸ் தெரியும்போது கதைக்கருவைப்பற்றி சொல்லவேண்டியதில்லை. பாக்யராஜின் மகள் சரண்யாவும், மும்தாஜும்தான் நாயகிகள். நாயகனாக புதுமுகம் ஒருவர் அறிமுகமாகிறார். குரு.முனீஸ்வரன் தயாரிப்பில் உருவாகவுள்ள 'திக்திக்'ல் இமான் இசையமைக்க, சண்டோனியோ ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் பூஜை ஏவிஎம் ஸ்டுடியோவில் உள்ள பழைய பிள்ளையார் கோவிலில் இன்று காலை நடந்தது. பிலிம்சேம்பர் தலைவர் கே.ஆர்.ஜி, த…
-
- 0 replies
- 833 views
-
-
கேரளாவின் காசர்கோடுக்கு வந்த கன்னட நடிகையை துரத்தியடித்துள்ளார்கள் அப்பகுதி மக்கள். அந்த நடிகை ஜெயமாலா! அய்யப்பனை தொட்டேன் என்று கூறி ஆண்டவனையே ஆடம் டீஸிங் செய்த அதே ஜெயமாலா! சபரிமலை அய்யப்பன் சன்னிதியில் இளம் பெண்களுக்கு அனுமதியில்லை. குழந்தைகளும் வயதான பெண்களுமே அனுமதிக்கப்படுவர். மகளிர் மறைவுப் பிரதேசமான அய்யப்பன் சன்னிதியில், அய்யப்பன் சிலையை தொட்டு வணங்கியதாக பேட்டியளித்தார் ஜெயமாலா. இந்த சின்ன வெடி கேரள அரசியலில் யானை வெடியாக வெடித்தது. ஜெயமாலாவை கைது செய்ய போராட்டம் நடந்தது. தீட்டுக்கு பரிகார பூஜைகள் நடத்தப்பட்டன. ஜெயமாலா சொன்ன அய்யப்பன் டச்சிங் வெறும் அல்வா என்பது விரைவில் வெட்ட வெளிச்சமானது. ஆனாலும், கேரள போலீஸ் ஏனோ அவர்மீது நடவடிக்கை எடுக்கவில…
-
- 0 replies
- 1.1k views
-
-
கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் மேலுமொரு தமிழ்படம் திரையிடப்படுகிறது. பிரகாஷ்ராஜின் டூயட் மூவிஸ் தயாரித்த படம் 'மொழி'. காது கேட்காத வாய் பேச முடியாத இளம் பெண்ணின் உலகை, அவளது தன்னம்பிக்கையை, சுய கெளரவத்தை இப்படத்தில் ரசிக்கும்படி வெளிப்படுத்தியிருந்தார் இயக்குனர் ராதாமோகன். மெல்லிய நகைச்சுவை இழையோட ஒரு சீரியஸ படத்தை தரமுடியும என்பதற்கு இன்று உதாரணமாக விளங்குகிறது 'மொழி'. இப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது. கேன்ஸ் படவிழாவுக்கு ஏற்கனவே 'வெயில்' தேர்வாகியுள்ளது. 19-ம் தேதி திரையிடப்படும் 'வெயில்' திரைக்காட்சியில் பங்கேற்க அப்படத்தின் தயாரிப்பாளர் ஷங்கரும் இயக்குனர் வசந்தபாலனும் கேன்ஸ் செல்கின்றனர். இம்மாதம் 22-ம் தேதி கேன்ஸ் படவிழாவில் 'ம…
-
- 0 replies
- 977 views
-
-
கறை படிந்த நீதி பருத்திவீரன் வரையிலான வட்டாரப் படங்களின் சாதியச் சித்தரிப்புகள் குறித்து "மனிதர்களே நாம் உங்களை ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக்கொள்ளும் பொருட்டு உங்களைச் சமூகங்களாகவும் கோத்திரங்களாகவும் அமைத்தோம்" (திருமறை 49:13) என்னும் நபிகளின் வாசகத்தோடு பருத்திவீரன் படம் தொடங்குகிறது. தொழில் பகைமை மற்றும் 'கீழான' சாதி காரணமாக, தேவர் சமூகத்தவரால் கொலை செய்யப்படும் குறத்தியின் மகளை விசுவாசத்தின் பொருட்டுத் தேவர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரே மணந்துகொள்ளும்போது சொந்தச் சாதியினர் ஏற்க மறுக்கின்றனர். விபத்தொன்றில் இறந்தபோதும் அத்தம்பதியினரின் மகன்மீதும் (பருத்திவீரன்) 'ஈனச் சாதி' பிறப்புக் காரணமாகப் பேதம் பே…
-
- 0 replies
- 2.8k views
-
-
தமிழ் சினிமாவின் மேலுமொரு மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர் சம்சார சாகரத்தில் இணைகிறார். 'ரோஜாக்கூட்டம்' படத்தில் அறிமுகமான ஸ்ரீகாந்துக்கு அவரது பெற்றோர் பெண் தேடி வந்தனர். வழக்கம்போல, எனக்கு இப்போதைக்கு திருமணம் வேண்டாம் என டபாய்த்து வந்தார் ஸ்ரீகாந்த். இவரது நழுவலுக்கு நங்கூரம் பாய்ச்சியிருக்கிறார் வந்தனா. அண்ணாநகரை சேர்ந்த துபாய் தொழிலதிபர் சாரங்கபாணி. இவரது மகள் வந்தனா. எம்.பி.ஏ. பட்டதாரி. இவர்கள் குடும்பமும் ஸ்ரீகாந்த் குடும்பமும் ஏற்கனவே அறிமுகமானவர்கள். இரு குடும்பத்தினரும் இணைந்து ஸ்ரீகாந்த், வந்தனா திருமணத்தை நிச்சயித்துள்ளனர். "இது காதல் கல்யாணம் இல்லை. பெற்றோர்கள் பார்த்து நிச்சயித்த திருமணம். வந்தனாவை ஏற்கனவே எனக்கு தெரியும். படித்தவர், அழகானவர், குடு…
-
- 3 replies
- 1.3k views
-
-
திரிஷா கோடீஸ்வரியாகி விட்டார். அதாவது அவரது சம்பளம் 1 கோடியைத் தொட்டு விட்டதாம். தென்னிந்திய திரையுலகின் அசைக்க முடியாத நம்பர் ஒன் நாயகியாக இருக்கிறார் திரிஷா. அவருடை இடத்தைப் பிடிக்க பல நடிகைகளும் பிரம்மப் பிரயத்தனம் செய்த போதிலும் இதுவரை அவரது இடை அசைவுக்குப் பக்கத்தில் கூட போக முடியவில்லை. இந்தியாவின் பண வீக்கம் நாளுக்கு நாள் உயர்வதைப் போல படத்துக்குப் படம் திரிஷாவின் சம்பளமும் எகிறிக் கொண்டுள்ளது. தெலுங்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் நடித்த ஸ்டாலின் வெற்றி பெற்றவுடன் 50 லட்சமாக தனது சம்பளத்தை உயர்த்தினார் திரிஷா. உனக்கும் எனக்கும் சூப்பர்ஹிட் ஆனவுடன் அவரது சம்பளம் 60 லட்சமாக உயர்ந்தது. இப்போது செல்வராகவன் இயக்கத்தில் திரிஷா நடித்துள்ள அடவரி மட…
-
- 0 replies
- 925 views
-
-
கட்டாய திருமணத்துக்காக டி.வி.நடிகை கடத்தல் சென்னை, மே.10- சென்னை வியாசர்பாடி சர்மா நகர் எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் வசித்து வருபவர் செல்வராஜ். கொரட்டூரில் இரும்பு பட்டறை வைத்துள்ளார். இவரது மகள் தீபா (வயது16). சிறுவயதிலேயே சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இவருக்கு இருந்து வந்தது. இதனால் எஸ்.எஸ்.எல்.சி.யுடன் படிப்புக்கு முழுக்கு போட்ட தீபா. பின்னர் சினிமாவில் நடிப் பதற்காக வாய்ப்பு தேடினர். இதன் மூலம் வசந்தம் வந்தாச்சு, வம்பு சண்டை, சிறு கதை போன்ற படங்களில் 2-வது கதாநாயகியாக நடித்தார். அதே நேரத்தில் டி.வி. தொடர்களில் நடிப்பதற்கும். தீபாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. மலர்கள், கிரிஜா எம்.ஏ. ஆகிய டி.வி. தொடர்களில் நடித்துள்ள இவர் ஒரு சில சினிமாக்…
-
- 9 replies
- 2.2k views
-
-
இந்தியாவில் தயாரான முதல் படம் இந்தியாவில் தயாரான முதல் படம் "அரிச்சந்திரா" 1913_ல் வெளிவந்தது. மேல் நாட்டில் தயாரான ஊமைப்படங்கள், இந்தியாவிலும் திரையிடப்பட்டன. இந்தியாவில் ரிலீஸ் செய்யப்பட்ட முதல் திரைப்படத்தின் பெயர் "ஏசுவின் வாழ்க்கை". இந்த ஊமைப்படம், 1896_ம் ஆண்டு பம்பாயில் (இன்றைய மும்பை) திரையிடப்பட்டது. பால்கே வேறு புதுப்படம் வராததால், இந்தப்படம் தொடர்ந்து "ஏசுவின் வாழ்க்கை" படத்தை இந்தியாவுக்குக் கொண்டு வந்தவர் டுபான்ட் என்ற பிரெஞ்சுக்காரர். அவர், இந்தியாவின் ஒவ்வொரு நகரமாக அந்த பிலிம் பிரதியைக் கொண்டு வந்து திரையிட்டார். திரையில் மனிதர்கள் ஓடுவதையும், ஆடுவதையும் கண்டு மக்கள் பிரமித்தனர். டுபான்ட், திருச்சிக்கு வந்து அப்படத்தை …
-
- 0 replies
- 930 views
-
-
நடிகை தொடையை கடித்த பாம்பு சூட்டிங் ஸ்பாட்டில் ஆடை மாற்றிக் கொண்டிருந்த நடிகையின் தொடையில் பாம்பு கடித்து விட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். புதுமுகம் ஆஷா, குரு ஆகியோர் இணையில் உருவாகி வரும் படம் ஆறுபடை. கோவை அருகே திருமூர்த்தி மலை பகுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. நேற்று ஒரு பாடலைப் படமாக்கினர். பாடல் காட்சியின்போது உடை மாற்றுவதற்காக ஒதுக்குப்புறமாக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக அறைக்குச் சென்றார் நடிகை ஆஷா. அவர் டிரஸ் மாற்றிக் கொண்டிருந்தபோது மரத்தில் இருந்த ஒரு பாம்பு கீழே விழுந்தது. அதைப் பார்த்து ஆஷா அலறவே, அவரது தொடையைக் குறி வைத்து கொத்தியது. தொடையில் பாம்பு கடித்ததால் நடுங்…
-
- 29 replies
- 5.9k views
-
-
தமிழ்ப்பட உலகின் தந்தை கே.சுப்பிரமணியம் பாகவதர், எம்.எஸ்.சுப்புலட்சுமி, டி.ஆர்.ராஜகுமாரியை அறிமுகப்படுத்தியவர். கே.சுப்பிரமணியம் "காளிதாஸ்" படம் வெளிவந்தபின், வரிசையாகப் படங்கள் வரத்தொடங்கின. தமிழ்நாடு முழுவதும் சினிமா தியேட்டர்கள் கட்டப்பட்டன. புகழ் பெற்ற நாடகங்களையெல்லாம் சினிமாவாகத் தயாரிக்கத் தொடங்கினார்கள். அவை பெரும்பாலும் புராணக் கதைகள். சினிமா என்பது சக்தி வாய்ந்த சாதனம். புகழும், பணமும் ஒருங்கே வரக்கூடிய துறை. எனவே, படத்தயாரிப்பில் ஈடுபடவேண்டும் என்ற எண்ணம், படித்த இளைஞர்கள் சிலருக்கும் ஏற்பட்டது. அப்படி படத்தொழில் மீது ஆர்வம் கொண்டவர்களில் கே.சுப்பிரமணியமும் ஒருவர். தஞ்சை மாவட்டத்தில், கும்பகோணம் அருகில் உள்ள பாபநாசத்தில் 1904_ம் ஆண்டு …
-
- 4 replies
- 2.3k views
-
-
கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன்பு கமல்ஹாசனின் லீலாகரமான நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற கே.பாலச்சந்தரின் மன்மத லீலை ரீமேக் ஆகிறது. அதே பாலச்சந்தரே ரீமேக் படத்தையும் இயக்குகிறார். இளைய மன்மதனாக சிம்பு நடிக்கவுள்ளார். பாலச்சந்தரின் முத்திரைப் படைப்புகளில் மன்மத லீலையும் ஒன்று. கமல்ஹாசனுக்கு காதல் இளவரசன் என்ற பட்டம் கிடைக்க உதவிய படங்களில் இதுவும் முக்கியமான ஒன்று. சேலையைக் கண்டாலே போதும், மோகம் கொண்டு அவர்களை தனது மாய வலையில் சிக்க வைக்கும் காதல் நாயகனாக கமல்ஹாசன் அப்படத்தில் கலக்கியிருப்பார். படம் முழுக்க இளமைக் கொண்டாட்டமாக இருக்கும். பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற இப்படத்தை மீண்டும் பாலச்சந்தரே தமிழில் ரீமேக் செய்ய…
-
- 0 replies
- 1.1k views
-
-
விஷாலின் 'சத்யம்' படத்திலிருந்தும் விலகியிருக்கிறார் த்ரிஷா. அவருக்கு பதில் நயன்தாரா அப்படத்தில் நடிக்கிறார். தாமிரபரணி படத்துக்குப் பிறகு விஷால் 'சத்யம்' படத்தில் நடிப்பதாக இருந்தது. அறிமுக இயக்குனர் ராஜசேகர் இயக்கும் இந்தப் படத்தில் விஷாலுக்கு அசிஸ்டெண்ட் கமிஷனர் வேடம். முடியை ஒட்ட வெட்டி போலீஸ் கமிஷனர் வேடத்துக்கு தயாரானார் விஷால். அவருக்கு ஜோடியாக த்ரிஷா ஒப்பந்தமானார். சில நடைமுறை சிக்கல்கள்.... 'சத்யம்' படம் தள்ளிப் போனது. இந்த இடைவெளியில் ஜி. பூபதிபாண்டியன் சொன்ன 'மலைக்கோட்டை' கதை பிடிக்க, அதற்காக தயாராகி வருகிறார் விஷால். 'மலைக்கோட்டை' தயாரான பிறகே 'சத்யம்'. இந்த திடீர் மாற்றத்தால் 'சத்யம்' படத்திற்கு த்ரிஷா கால்ஷீட் கொடுக்க முடியாத சூழ்நிலை. இதனா…
-
- 1 reply
- 971 views
-
-
நான் கடவுள் படப்பிடிப்பின் போது நடிகர் ஆர்யாவை தீவிரவாதி என நினைத்து வாரணாசி போலீஸார் கைது செய்தனர். பாலாவின் இயக்கத்தில் உருவாகி வரும் நான் கடவுள் படப்படிப்பு தற்போது காசியில் நடந்து வருகிறது. இந்த படத்திற்காக ஆர்யா நீண்ட தலைமுடி, தாடி வளர்த்துள்ளார். தற்போது காசியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. வாராணசியில் வெளியே சென்ற ஆர்யாவை பார்த்த போலீஸார் அவர் மீது சந்தேகமடைந்து அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று சிறை வைத்தனர். அவரிடம் உயர் அதிகாரிகள் ஆர்யாவிடம் விசாரணை நடத்தினர். அவர்களிடம் ஆர்யா, தான் ஒரு தமிழ் நடிகர் என்றும் படப்பிடிப்புக்காக வாரணாசி வந்ததையும் விளக்கினார். ஆனால் இதை போலீசார் நம்பவில்லை. இதுகுறித்து நான் கடவுள் படக்குழுவினர் தகவல் அறி…
-
- 0 replies
- 747 views
-
-
கவர்ச்சியில் கொடி கட்டிப் பறந்த இரண்டு கதாநாயகிகள் தொலைக்காட்சியில் தோன்றுகிறார்கள். திருமணத்திற்குப் பிறகும் 'கட்டு விரியன்' படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் மாளவிகா. ஒரு பாடலுக்கு ஆட மாட்டேன் என்ற தனது கொள்கையையும் அவர் வாபஸ் வாங்கியுள்ளார். மாளவிகாவை சின்னத்திரையில் நடிக்க வைக்க பெரிய நிறுவனம் ஒன்று முயன்று வருகிறது. தங்கவேட்டை மாதிரியான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வேலை. மாளவிகா இதற்கு ஒப்புக் கொண்டுள்ளார். விரைவில் எந்த நிகழ்ச்சி எந்த சேனல் என்ற விவரங்கள் முறைப்படி அறிவிக்கப்படும். கதாநாயகியாக மட்டுமே நடிப்பேன் என்று அடம்பிடித்து வந்த சிம்ரன் கொஞ்சம் இறங்கி வந்துள்ளார். பாக்யராஜின் சீடர் கவி.காளிதாஸ் இயக்கும் படத்தில் பாக்யராஜ் ஜோடியாக நட…
-
- 0 replies
- 852 views
-
-
2007 - ம் ஆண்டில் இதுவரை வெளியான தமிழ் திரைப்படங்களில் அதிக வசூல் செய்து முதலிடத்தை பிடித்துள்ளது விஜய்யின் 'போக்கிரி.' 'ஆதி' ப்ளாப்பான பிறகு விஜய் அதிக சிரத்தை எடுத்து நடித்த படம் 'போக்கிரி.' பிரபுதேவாவுக்கு இயக்குனராக தமிழில் முதல் படம். தெலுங்கு ரீ-மேக்கான இதன் பாடல்கள் தமிழகம் மட்டுமின்று கேரளாவிலும் சூப்பர் ஹிட்டாயின. பல நேரடி மலையாளப் படங்களின் வசூலை 'போக்கிரி' முறியடித்து கேரளாவில் சாதனைப் படைத்தது. பதினைந்து கோடியில் தயாரான இப்படம் ஏறக்குறைய பத்துகோடி ரூபாய் லாபம் சம்பாதித்துள்ளது. 2007-ம் வருடத்தில் இதுவரை வெளியான படங்களில் இதுவே அதிகபட்சம். இரண்டாவதாக வருவது ஹரியின் 'தாமிரபரணி.' விஷால் நடித்த இப்படம் ஏழுகோடியில் தயாராகி அதே ஏழுகோடியை லாபமாகஈட்டிய…
-
- 0 replies
- 881 views
-
-
இலங்கை அகதியின் காதல் கதை! -ராமேஸ்வரத்தில் ஒரு ஜோடி புறா! Monday, 07 May 2007 இலங்கை அகதிகளின் கண்ணீர் கதையை எந்த படமும் தீர்க்கமாக சொன்னதில்லை. அந்த குறையை போக்க வந்திருக்கிறார் செல்வம். பாரதிராஜா, பவித்ரன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக இருந்த இவர், ஜீவா-பாவனா நடிக்க ராமேஸ்வரம் என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். யாழ்பாணத்தில் இருந்து அகதிகளாக ராமேஸ்வரம் வரும் ஆயிரக்கணக்கான இலங்கை அகதிகளில் ஒரு அகதியாக ஜீவா நடிக்கிறார். யதார்த்தமும், புதுமையும் கலந்த பாத்திரமாக இவரை உருவாக்கியிருக்கிறார் செல்வம். இந்த படத்தை பார்க்கும் உலக தமிழர்கள் ஜீவாவை தங்கள் வீட்டு பிள்ளையாகவே கருதுவார்கள் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் செல்வம். ஜீவாவின் கா…
-
- 0 replies
- 1.2k views
-
-
வெகுவிரைவில் வெண்திரையில் இன்றைய இளம் கதாநாயகனின் நடிப்பில் நான் அவன் இல்லை
-
- 18 replies
- 4.9k views
-
-
சிறுவர், சிறுமியருக்கு செக்ஸ் கல்வியை அவசியம் அறிமுகப்படுத்த வேண்டும். எது சரி, எது தவறு என்று அவர்களுக்கு விளக்கிக் சொல்ல வேண்டியது அவசியம் எனறு நடிகை குஷ்பு கூறியுள்ளார். கல்யாணத்துக்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்வதில் தவறில்லை, ஆனால் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம் என்று கூறப் போய் பெரும் சர்ச்சையில் சிக்கினார் குஷ்பு. செருப்பு, விளக்குமாறுகளுடன் பெண்கள் போராட்டம் நடத்தினர். பின்னர் தான் பேசியதற்காக மன்னித்து விடுமாறு கண்ணீர் விட்டு மன்னிப்பு கேட்டார் குஷ்பு. அந்த சர்ச்சை அத்தோடு ஓய்ந்தது. இப்போதெல்லாம் தமிழகத்திற்குள் எங்காவது பேச நேரிடும்போது படு ஜாக்கிரதையாக பேசி வருகிறார் குஷ்பு. ஆனால் பெங்களூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் செக்ஸ் கல்வி குறித்த…
-
- 2 replies
- 1.5k views
-
-
சிம்புவுடன் நடிப்பதால் ஒரு பிரச்சினையும் இல்லை. அவருடன் நடிப்பதற்காகப் பெருமைப்படுகிறேன் என்று கூறியுள்ளார் 'டன்லப்' நமீதா. சிம்புவுடன் ஜோடி சேர ஒரு பக்கம் முன்னணி நடிகைகள் பயந்து, பின்னங்கால் பிடறியில் பட தெறித்து ஓடுகிறார்கள். ஆனால் இன்னொரு பக்கம் சிம்புவுடன் நடிப்பதில் ெபருமை என்று கூறி மாறி மாறி புகழாரம் சூட்டும் நடிகைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். சிம்புவுடன் இணைந்து நடிக்க புக் ஆகியுள்ள வேதிகாவும், நமீதாவும் மாறி மாறி சிம்புவைப் பற்றி சிலாகிக்கிறார்கள். முதலில் வேதிகா, சிம்புவைப் பற்றி வியர்க்க விறுவிறுக்கப் பாராட்டினார். இப்போது நமீதாவின் டர்ன், அவரும் சிம்பு அபாரம், அற்புதம் என அசத்தலாக பாராட்டியுள்ளார். நமீதா உள்ளிட்ட ஐந்து நாயகிகளுன…
-
- 0 replies
- 811 views
-
-
Pray for me, brother - ஏ.ஆர். ரஹ்மானின் சமீபத்திய இசை ஆல்பம். இதன் ஒவ்வொரு ப்ரெமிலும் ஏழ்மையின் துயரத்தையும், பிரமாண்டங்களின் வசீகரத்தையும் நீங்கள் காணலாம். இந்த ஆல்பத்தை உருவாக்கியதற்கு பின்னால் ஏ.ஆர். ரஹ்மான் என்ற இசை மேதையின் இளகிய மனம் இருப்பது பலருக்கு தெரியாது. பிரமாண்டமான கட்டிடங்கள், அதற்கு கீழே ஏழ்மையின் சுருக்கம் விழுந்த வயோதிக பெண்மணி, ஏக்கத்துடன் பார்க்கும் எத்தியோப்பிய சிறுமி அல்லது போரில் பாதிக்கப்பட்ட ஏதேனும் ஓர் இளைஞன்.... Pray for me, brother - பாடலில் இந்தக் காட்சிகளே திரும்பத் திரும்ப வருகிறது. இதன் பின்னணியில் பிராத்தனையின் ஓர்மையோடு ஒலிக்கும் ப்ரே ஃபார் மி பிரதர், ப்ரே ஃபார் மி சிஸ்டர் என்ற குரல் உள்ளத்தை சில்லிட வைக்கிறது. வெர்ட்டி…
-
- 2 replies
- 2k views
-
-
பில்லா ரஜினிக்கு காணிக்கை-அஜீத் நான் நடித்து பில்லா படத்தின் ரீமேக்கை சூப்பர் ஸ்டார் ரஜினிக்குக் காணிக்கையாக்குகிறேன் என்று அஜீத் கூறியுள்ளார். தல அஜீத்துக்கு இன்று பிறந்த நாள். இதையொட்டி நேற்று பத்திரிக்கையாளர்களை அழைத்து விருந்து வைத்து சிறப்புப் பேட்டி கொடுத்தார் அஜீத். இதுவரை இல்லாத அளவுக்கு மனம் திறந்து படு ரிலாக்ஸ்டாக பேசினார் அஜீத். அவர் இப்படிப் பேசிய ரொம்ப நாட்களாகி விட்டதால் பத்திரிக்கையாளர்களும் படு ஜாலியாக பல கேள்விகளைக் கேட்டனர். அத்தனைக்கும் படு நிதானமாக பதிலளித்தார் அஜீத். பில்லா ரீமேக் குறித்துத்தான் அனைவரும் ஆவலோடு கேட்டார்கள். இன்னும் பில்லா படத்தின் பிரமிப்பே ரசிகர்களிடம் உளள நிலையில் அந்தப் படத்தை ரீமேக் செய்ய வேண்டிய…
-
- 5 replies
- 1.9k views
-
-
அமெரிக்க நடிகருடன் கட்டிப் பிடித்து முத்தம்: நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக ரசிகர்கள் போராட்டம் போபால், ஏப்.17- லண்டனில் சேனல் 4 என்ற தொலைக் காட்சி நிறுவனம் நடத்திய `பிக்பிரதர்' நிகழ்ச்சியில் பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி கலந்து கொண்டார். அப்போது அவரை போட்டியில் கலந்து கொண்ட ஆங்கில நடிகைகள் நிறவெறி பாகுபாட்டுடன் நடத்தியது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இந்த பரபரப்பு ஷில்பா ஷெட்டிக்கு சாதகமாக அமைந்தது. அவர் போட்டியில் வெற்றி பெற்று கோடிக்கணக்கான பரிசினை வென்றார். உலகம் முழுவதும் புகழ் பெற்றார். இப்போதும் அவர் ஒரு பிரச்சினையில் சிக்கிக் கொண்டுள்ளார். ஆனால் இந்த பிரச்சினை அவருக்கு எதிராக கிளம்பி, போராட்டத்தை தூண்டி உள்ளது. டெல்லிய…
-
- 53 replies
- 8k views
-
-
நடிப்பில் சின்னதாக ரவுண்டு கட்டி விட்ட எஸ்.ஜே.சூர்யா மீண்டும் இயக்குநராக அவதாரம் எடுக்கிறார். வாலி மூலம் அத்தனை பேரையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் எஸ்.ஜே.சூர்யா. அஜீத்துக்கும் அந்தப் படம்தான் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. தொடர்ந்து குஷி மூலம் விஜய்க்கு பிரேக் கொடுத்தார். அதற்கு முன்பு வரை தொடர்ந்து தோல்விப் படங்களைக் கொடுத்து வந்த விஜய், குஷிக்குப் பிறகுதான் மார்க்கெட் குஷியேறி பெரிய நடிகராக அவதாரம் எடுத்தார். இதையடுத்து எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளியான படம் நியூ. இப்படத்தில் அஜீத்தான் முதலில் நடிப்பதாக இருந்தது. ஆனால் திடீரென சூர்யாவுக்கே நடிக்கும் ஆசை வந்ததால், அஜீத்திடம் சொல்லி விட்டு அவரே ஹீரோவாக நடித்தார். படம் வெள…
-
- 25 replies
- 3.5k views
-