Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. மோகன்லால், ஜீவா நடித்த ‘அரண்’ படத்தை இயக்கிய மேஜர் ரவி, தற்போது மலையாளப் படம் இயக்கி வருகிறார். இதையடுத்து தமிழில் அவர் இயக்கும் படத்துக்கு, பிரபலமான பழைய படத்தின் பெயர் வைக்கப்படுகிறது. இதில் அர்ஜுன் ஹீரோ. சுந்தர்.சி பாபு இசையமைக்கிறார். ‘சரித்திரம்’ படத்தை தயாரிக்கும் ஐ.டி.ஏ பிலிம்ஸ் எஸ்.என்.ராஜா, இதை தயாரிக்கிறார். பிப்ரவரியில் ஷ¨ட்டிங். -தினகரன் http://cinemaseithi.com/index.php?mod=arti...amp;article=473

    • 0 replies
    • 1.1k views
  2. 3 ஒஸ்கார் விருதுகளை அள்ளிய ’ நோ மேட்லாண்ட்’ க்ரோய் சாவ் எனும் சீனப் பெண்ணின் இயக்கத்தில் உருவான நோ மேட்லாண்ட் எனும் திரைப்படத்துக்கு 93ஆவது ஒஸ்கார் விழாவில் 3 விருதுகள் கிடைத்துள்ளன. அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று நடைபெறும் ஒஸ்கார் விருது விழாவிலேயே இந்த விருதுககள் வழங்கப்பட்டுள்ளன. http://static2.tamilmirror.lk/assets/uploads/image_0914993212.jpg அதற்கமைய, சிறந்த படத்துக்கான விருதை சுவீகரித்த இந்த திரைப்படம், சிறந்த நாயகிக்கான விருதையும் சிறந்த இயக்குனருக்குமான விருதையும் சுவிகரித்துள்ளது. ஒஸ்கார் 2021: விருதுகள் விபரம் உலகளாவிய ரீதியில் திரைப்படத்துறையினரால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 93 ஆவது ஒஸ்கார் விருதுக…

    • 0 replies
    • 360 views
  3. 'நம்புங்க... எனக்கு நிச்சயதார்த்தம் ஆகலை. அந்த பொண்ணு...!" - 'பிக்பாஸ்' ஆரவ் பிக் பாஸ்' வீடு, அந்த வீட்டில் வசித்தவர்களுக்கு மட்டுமன்றி, நமக்கும் பல்வேறு பாடங்களைக் கற்பித்து, நூறு நாள்களைத் தற்போது நிறைவு செய்துள்ளது. 'பிக் பாஸ்' டைட்டில் வின்னரான ஆரவ், அந்த 100 நாள் அனுபவம் குறித்துப் பேசினார். என் சொந்த ஊர் திருச்சி. படிச்சு முடிச்சு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துட்டிருந்தேன். ஆனால், எனக்கு சின்ன வயசிலிருந்து நடிப்பு மேல ஆர்வம். அதனால், வேலையை விட்டுட்டு மாடலிங் பண்ண ஆரம்பிச்சேன். சினிமாவில் நடிக்க கிடைச்ச வாய்ப்புகள் சொல்லிக்கிற மாதிரி இல்லைன்னாலும், எனக்குப் பிடிச்ச தொழிலில் இருக்கும் தி…

  4. 'எனக்கு அப்போ பதினாலு வயசு தெரியுமா?’ வா.மணிகண்டன் பெங்களூர் வந்த பிறகு சில சினிமா நடிகைகளிடம் பேச்சுவார்த்தை உண்டு. வெறும் பேச்சுவார்த்தைதான். வேறு எதுவும் இல்லை. அதுவும் நடிகைகள் என்றால் இப்பொழுது மார்க்கெட்டில் கோலோச்சிக் கொண்டிருப்பவர்கள் இல்லை. ஏதாவதொரு சமயத்தில் பிரபலமாக இருந்தவர்கள். நான்கைந்து பேர்களுடனாவது தொடர்பில் இருக்கிறேன். இந்த ஊருக்கு வந்த புதிதில் சில இணைய இதழ்களுக்காக நேர்காணல் செய்து கொடுக்கும் பொறுப்பு வந்து சேர்ந்தது. திரையில் பார்ப்பவர்களை நேரில் பார்த்து பேசுவதில் ஒரு ஆசை இருக்கத்தானே செய்யும்? இரட்டைச் சந்தோஷத்துடன் ஒத்துக் கொண்டேன். அந்த இதழ்களுக்கு சினிமா பி.ஆர்.ஓக்களோடு தொடர்பு இருக்கும் என்பதால் முகவரி, தொலைபேசி எண் என எல்லாவற்றையும் கொடுத…

  5. முன்பு இவரது பெயர் வெள்ளி விழா நாயகன்! மோகன் நடித்தால் அந்தப்படம் வெள்ளி விழாதான் என்பதால் இந்தப் பெயர். காலம் உருட்டிய சோழியில் இப்போது மோகன் இருக்கும் இடம் தெரியவில்லை. ஹீரோவாகதான் நடிப்பேன் என்பதில் உறுதியாக இருக்கிறார் மோகன். இதனாலேயே 'உனக்கும் எனக்கும்' படத்தில் ஜெயம் ரவியின் அப்பாவாக நடிக்க வந்த வாய்ப்பை உதறினார். மோகனின் ஆசைப்படி அவரை ஹீரோவாக வைத்து படம் இயக்குகிறார் ஒரு துணிச்சல்கார இயக்குனர். தாதா வீரமணியின் கதையை 'பெருசு' என்ற பெயரில் படமாக்கிய ஜி. காமராஜ்தான் அந்த துணிச்சல்காரர். மோகன் படம் என்றாலே காதல் படம் தான். ஐம்பது வயதுக்கு மேல் மோகன் கையில் மைக் கொடுத்து நிலாவே வா... என்று காதலிக்காக உருகி பாட வைக்க முடியுமா? புத்திசாலித்தனமாக காதலை தவிர்…

    • 0 replies
    • 1.2k views
  6. இந்த வருடம் வெளியாகும் ஏ.ஆர்.ரஹ்மானின் முதல் தமிழ் ஆல்பம் இந்த வருடம் வெளியாகும் ஏ.ஆர்.ரஹ்மானின் முதல் தமிழ் ஆல்பம் என்ற பெருமையை, மணிரத்னத்தின் ‘செக்கச்சிவந்த வானம்’ தட்டிச்செல்ல இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் கடந்த வருடம் ‘காற்று வெளியிடை’ மற்றும் ‘மெர்சல்’ என இரண்டு தமிழ்ப் படங்கள் வெளியாகின. இரண்டு படங்களின் ஆல்பமும் சூப்பர் ஹிட்டான நிலையில், சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதை ‘காற்று வெளியிடை’ படத்துக்காகப் பெற்றார் ஏ.ஆர்.ரஹ்மான். மேலும், அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘வான் வருவான்’ பாடலுக்காக சாஷா திருப்பதிக்கு சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதும் கிடைத்தது. இந்த வர…

  7. சுதந்திரம் தித்திக்கும்பழம் தின்னக் கொடுப்பார்; மதுரப் பருப்பு வழங்குவார் உனக்கு; பொன்னே. மணியே, என்றுனைப் புகழ்வார்; ஆயினும் பச்சைக் கிளியே அதோபார்! உன்னுடன் பிறந்த சின்ன அக்கா, வான வீதியில் வந்து திரிந்து தென்னங் கீற்றுப் பொன்னூசல் ஆடிச் சோலை பயின்று சாலையில் மேய்ந்து வானும் மண்ணுந்தன் வசத்திற் கொண்டாள்! தச்சன் கூடுதான் உனக்குச் சதமோ? அக்கா அக்கா என்றுநீ அழைத்தாய். அக்கா வந்து கொடுக்கச் சுக்கா மிளகா சுதந்திரம் கிளியே? http://www.paraparapu.com/

    • 0 replies
    • 778 views
  8. http://www.bharatmovies.com/tamil/news-gossips/rajnikanth-back-to-chennai.htm

    • 0 replies
    • 1.2k views
  9. மீண்டும் கோபிகாவை நாடியுள்ளாராம் சேரன். சேரன், சமீபத்தில் மாயக்கண்ணாடி மூலம் பெரும் சரிவைச் சந்தித்தார். இதையடுத்து தனது திறமையை மீண்டும் நிரூபிக்க ஆட்டோகிராப் படத்தின் 2ம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளார். முதல் பாகத்தில் மொத்தம் நான்கு நாயகிகள் இருந்தனர். மல்லிகா, கோபிகா, சினேகா, கெஸ்ட் ரோலில் கனிகா என நான்கு பேருடன் நடித்திருந்தார் சேரன். ஆனால் 2ம் பாகத்தில் 2 பேர் மட்டுமே இருப்பார்களாம். கோபிகாவும், கனிகாவும் வருவது போல கதையை உருவாக்கியுள்ளாராம் சேரன். 2ம் பாகத்தில் நடிக்க வேண்டும் என கோபிகாவை அணுகியுள்ளாராம். ஆனால் கோபிகா தரப்பிலிருந்து இன்னும் பதில் வரவில்லையாம். வரும் என்ற நம்பிக்கை சேரனுக்கு உள்ளதாம். கோபிகா இப்போது வீராப்பு படத…

  10. முன்னொரு காலத்தில் மனிதர்களும், விலங்குகளும் ஒருவரோடு மற்றவர் இணைந்து இணக்கமாக வாழ்ந்தார்கள். ஒருவரையொருவர் பார்த்து பயம் கொள்ளவில்லை. ஒருவரையொருவர் பகை கொள்ளவில்லை. இரண்டும் ஒரே உயிர் இயக்கம் என்ற புரிதலோடு ஒன்றுகலந்திருந்தனர். அதை நினைவுபடுத்துவதே எனது படத்தின் பிரதான நோக்கம் என்று கூறும் கிரிகோரி கோல்பெர்ட் (Gregory Colbert) மனிதனும் விலங்கும் ஒன்று கலந்த ஒரு மாயவெளியை தன்னுடைய Ashes and Snow என்ற படத்தின் மூலம் உருவாக்கி காட்டியிருக்கிறார். இது ஒரு ஆவணப்படம். இன்று வரை முப்பது லட்சத்திற்கும் மேலான பிரதிகள் விற்பனையாகி இருக்கிறது. ஒரு திரையிடலின் போது இந்த ஆவணப்படத்தினை ஒரு லட்சம் பேர் திரண்டு வந்து பார்த்திருக்கிறார்கள். பதினாறு ஆண்டுகள் இந்தப் படத்தை எடுத்திருக்…

  11. விரைவில் ரிலீஸாகும் ‘வில்லு’, ‘நான் கடவுள்’ படங்களை தொடர்ந்து ‘படிக்காதவன்’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது, சென்ஸார் போர்டு. கதை, திரைக்கதை, வசனம் எழுதி சுராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் தனுஷ், தமன்னா ஜோடி. காமெடிக்கு விவேக். வில்லனாக சுமன். உதவாக்கரை என்று குடும்பத்தினரால் ஒதுக்கப்பட்ட ஒரு இளைஞன், எப்படி வாழ்க்கையில் உயர்ந்த இடத்துக்கு வருகிறான் என்ற கருவை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் வெளியிடுகிறது. -தினகரன் http://cinemaseithi.com/index.php?mod=arti...amp;article=472

    • 0 replies
    • 1.1k views
  12. பழம்பெரும் நடிகை கே.ஆர்.இந்திரா காலமானார் பழம்பெரும் நடிகையான கே.ஆர்.இந்திரா இன்று சென்னையில் காலமானார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம். பிரபல டப்பிங் ஆர்டிஸ்ட் அனுராதாவின் அக்காவும், டப்பிங் ஆர்டிஸ்ட் ஜெய கீதாவின் தாயாரும் கலைமாமணி பட்டம் பெற்ற பழம்பெரும் நடிகையுமான கே.ஆர்.இந்திரா இன்று காலமானார். அவருக்கு வயது 65. இவர் ‘கொஞ்சும் குமாரி’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இதே படத்தில் தான் பழம்பெரும் நடிகையான மனோரமாவும் அறிமுகமானார். புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் நடித்த ‘பெற்றால் தான் பிள்ளையா’ படத்தில் நடிகர் நம்பியாருக்கு ஜோடியாக நடித்தார். ‘ஹலோ Mr.ஜமீ…

  13. வெள்ளை நிற காலனித்துவ குற்ற உணர்வின் வெளிப்பாடு- AVATAR: நாவி ரைரானிக் படம் வெளிவந்து சுமார் 12 வருடங்கள் கழித்து அதே இயக்குனரின் படம் வெளிவருகின்றது. இதற்கு முன்பு இவர் இயக்கிய குறிப்பிடத்தக்க படங்கள் True Lies. Terminator, Terminator 2: Judgment Day போன்றவை. ரைரானிக்குப் பின் சில விவரணத் திரைப்படங்களை இயக்கியுள்ளார். 12 வருடங்கள் என்பது நீண்ட காலமே. கனடாவின் ஒன்ராரியோ மாகாணத்தில் 1954ம் ஆண்டில் ஜேம்ஸ் கமரோன் பிறந்தார். இவர் இயக்கிய அனைத்து படங்களும் தொழில்நுட்பரீதியாக பிரசித்தி பெற்றவை. அவற்றார் 2-D, 3-D- RealD 3D, Dolby 3D, IMAX 3D ஆகிய அமைப்பு முறைகளில் வெளியிடப்பட்டது. படத்தின் தயாரிப்புச் செலவான சுமார் 310 மில்லியனின் அரைவாசி அதாவது 150 மில்லியன் வி…

  14. தமிழ் சினிமாவில் பெண்கள் பிரபஞ்சன் நான் அண்மையில் படித்த முக்கியமான புத்தகம், கே. பாரதி எழுதிய ‘தமிழ் சினிமாவில் பெண்கள்’ (விகடன் பிரசுரம்). பாதி வானத்தைத் தாங்குபவர்கள் என்றும் பாதி பூமியை நிரப்புபவர்கள் என்றும் நீட்டி முழக்கி ஆடம்பரமாகச் சொல்லப்படும் பெண்கள், நம் தமிழ் சினிமாவில் என்ன மாதிரி சித்தரிக்கப்படுகிறார்கள் என்கிற ஆய்வே இந்தப் புத்தகம். பெண்கள் பற்றி எழுதுவது என்பதும் சினிமாவில் சித்தரிப்பது என்பதும் பெண்கள் பற்றியது மட்டுமல்லாமல் மானுடம், மனிதகுலம் பற்றியது என்பதே உண்மையாகும். சினிமா பேசத் தொடங்கிய இருபதாம் நூற்றாண்டின் முப்பதுகளிலிருந்து அண்மைக்கால, இன்றைய தமிழ் சினிமா பெண் பாத்திரங்களுக்குக் கொடுத்த இடம், பாத்திரங்களாகச் சித்தரித்த முறை, பெண்களின் …

  15. பாலிவுட் வாய்ப்பு கேட்டால் படுக்கைக்கு அழைப்பதா? - மனம் திறக்கும் நடிகைகள் பகிர்க பாலிவுட்டில் நடித்து திரை நட்சத்திரமாக வேண்டும் என்ற கனவுடன் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் இந்திய சினிமாவின் தலைநகரம் என்றழைக்கப்படும் மும்பை நோக்கி செல்கின்றனர். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionநடிகை உஷா ஜாதவ் ஆனால் கனவை எட்ட அவர்கள் படும்பாடு ஒரு கெட்ட கனவாக மாறுகிறது. இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக கூறும் பல நடிகைகளிடம் பேசியது பிபிசி. ஆறு ஆண்டுகளுக்கு முன், தன் பெற்றோரை சம்மதிக்க வைத்து சிறு கிராமத்தில் இருந்து பாலிவுட் கனவு…

  16. விருந்து சாப்பாடு... இப்போதெல்லாம் பெரும்பாலான பேர் விருந்து என்றால் கன்னாபின்னா என்று சாப்பிட்டு மூச்சு விடக்கூட திணறுவதை காண முடிகிறது. இப்படிப்பட்டவர்கள் வயிறு முட்ட சாப்பிட்ட பிறகும் கூட ஸ்வீட், பாயாசத்தையும், ஆசை ஆசையாக உள்ளே தள்ளி விடுகிறார்கள். அவர்கள் சாப்பிட்ட ஒரு லட்டு அதில் உள்ள நெய் அல்லது எண்ணை, சர்க்கரை, பாயாசத்தில் உள்ள வெல்லம் அல்லது சர்க்கரை, தேங்காய், முந்திரி என்று ஒட்டு மொத்தமாக ஜ“ரணமாக 6 மணி நேரம் எடுத்துக்கொள்கிறது. கொலஸ்ட்ரால், நீரிழிவு பிரச்சினை, போன்றவற்றால் உணவுக் கட்டுப்பாட்டுடன் இருப்பவர்கள் ஒரு வாக் சென்று வந்தால் உடம்பு சிறிது லேசானது போல் இருக்கும். ஆகவே பெரும்பாலும் மாலை 6 மணிக்கு மேல் இனிப்பு சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.…

    • 0 replies
    • 1k views
  17. கமல் இயக்கத்தில் வெளியாக இருந்த 'விஸ்வரூபம்' திரைப்படம் ஜனவரி 2013க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகிற்கு 'குருதிப்புனல்' படத்தின் மூலம் Dolby தொழில்நுட்பத்தினை அறிமுகப்படுத்தினார். இந்திய திரையுலகில் உருவாகி இருக்கும் பிரம்மாண்ட தயாரிப்பு 'விஸ்வரூபம்'. இப்படத்தினை PVP சினிமாஸ் வெளியிட இருக்கிறது. அக்டோபர் 12ம் தேதி 'விஸ்வரூபம்' வெளியீடு என்று செய்திகள் வெளிவந்தன. இப்படத்துடன் சூர்யாவின் 'மாற்றான்' மோத இருக்கிறது என்று செய்திகள் களைகட்டின. இந்நிலையில் 'விஸ்வரூபம்' படத்தை 2013-ற்கு ஒத்தி வைத்து இருக்கிறார்கள். 'விஸ்வரூபம்' படத்தின் ஒலியை Auro 3D என்ற தொழில்நுட்பத்தில் உருவாக்கி வருகிறார் கமல். Wilfried Van Baelen என்பவர் இப்பணியில் உதவி செய்வ…

  18. லிங்குசாமி படத்தில் நயன்தாரா நடிக்க மறுத்தது தெரியாது என்றார் தமன்னா. லிங்குசாமியின் பையா படத்தில் கார்த்தி ஜோடியாக நயன்தாரா நடிக்க இருந்தார். அதற்காக ரூ.1 கோடிக்கும் அதிகமாக சம்பளம் பேசப்பட்டது. திடீரென்று சம்பளத்தை குறைக்கச் சொல்லி லிங்குசாமி தரப்பில் கேட்கப்பட்டது. அதை ஏற்காமல் படத்திலிருந்து விலகினார் நயன்தாரா. இதையடுத்து தமன்னா ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதுபற்றி தமன்னாவிடம் கேட்டபோது, இதுவரை இப்படத்தில் என்ன நடந்தது என்பது தெரியாது. படத்திலிருந்து ஹீரோயின் விலகுகிறார் என்றால் அதற்கு பல காரணங்கள் இருக்கும். எனக்கு மற்றவர்களுடன் போட்டி போட வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. ஏற்ற வேடங்களில் சிறப்பாக நடிக்க வேண்டும் என்று எனக்கு நானே போட்டி போடுகிறேன் என்…

  19. ரஜினி-கமல்-ஸ்ரீதேவி மூவரையும் ஒரே மேடையில் ஏற்றிவிட வேண்டும் என்று ஆசைப்பட்ட பாரதிராஜாவுக்கு அது சாத்தியமில்லாமலே போய்விட்டது. தனது அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை மதுரையில் நடத்திய பாரதிராஜா, தனது உயிர் நண்பன் இளையராஜாவை அந்த மேடைக்கு வரவழைத்ததுதான் ஹைலைட். இந்த ஒரு காரணத்திற்காகவே பாரதிராஜாவின் 'பாதி' ராஜாவான கவிப்பேரரசு வைரமுத்து அழைக்கப்படவே இல்லை அங்கு. இருந்தாலும் சென்னையிலிருந்து ஒவ்வொரு நிமிடமும் தனக்கு நெருக்கமான ஒருவரிடம் விழா குறித்து போனில் விசாரித்துக் கொண்டேயிருந்தாராம் வைரமுத்து. அதுவும் இரவு பதினொரு மணி வரைக்கும். வழக்கம்போலவே இளையராஜாவை 'வாடா போடா' என உரிமையோடு அழைத்த பாரதிராஜா உருக்கமாக பேசிய சில விஷயங்கள் கால காலத்திற…

    • 0 replies
    • 1.2k views
  20. சொன்னதை செய்த சூர்யா.... சினிமா சங்கங்களுக்கு ரூ.1.5 கோடி நிதியுதவி சூர்யாவின் நடிப்பில் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியிருக்கும் 2டி என்டர்டைன்மென்டின் 'சூரரைப் போற்று' திரைப்படம் வருகிற அக்டோபர் 30ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகிறது. 'சூரரைப்போற்று' திரைப்பட வெளியீட்டுத் தொகையிலிருந்து தேவையுள்ளவர்களுக்கு 5 கோடி ரூபாய் பகிர்ந்தளிக்க உள்ளதாக சூர்யா அறிவித்திருந்தார். 'பொதுமக்களுக்கும் திரையுலகைச் சார்ந்தவர்களுக்கும், தன்னலம் பாராமல் முன்னின்று பணியாற்றிய கொரோனா முன்கள பணியாளர்களுக்கும் இந்த 5 கோடி ரூபாய் பகிர்ந்தளிக்கப்படும்' என்று சூர்யா தெரிவித்திருந்தார். தற்போது அதை செயல்படுத்தவும் தொடங்கியிருக்கிறார். முதல்கட்டமாக 1.5 கோடி ரூபாய் இன்று …

  21. அஜித் நடித்து வரும் ‘ஆரம்பம்’ படத்திலுள்ள ஒரு காட்சி நேற்று இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பில்லா படத்திற்கு பின்பு விஷ்ணுவர்தன் கூட்டணியில் அஜித் இணைந்துள்ள படம் என்றவுடனையே ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருந்தனர். பின்பு சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர், ஸ்டில்ஸ் ஆகியவை ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துத்துள்ளது. இறுதியாக இப்படத்திற்கு சூட்டப்பட்ட தலைப்பிற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் இப்படத்தில் அஜித் சம்மந்தப்பட்ட ஒரு காட்சி நேற்று இணையத்தில் வெளியாகி படக்குழுவினரையும், அஜித் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது குறித்து விஷ்ணுவர்தன் கூறுகையில், இந்த சம்பவம் எனக்கு பெரும் ஏமாற்றத்த…

    • 0 replies
    • 873 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.