ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142678 topics in this forum
-
ஜனாதிபதி நிதியம் வடக்கிற்கு பிரதேச செயலகங்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் செயல்பாடுகள் விரிவாக்கப்பட்டதன் மூலம், அதில் கோரப்படும் மருத்துவ உதவிக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன. அதே நேரத்தில், புதிய கணினி அடிப்படையிலான (Online System) குறித்து பிரதேச செயலகங்களின் உரிய விடயத்துடன் தொடர்புடைய ஊழியர்களுக்கு தெளிவூட்டுவதும் பயிற்சி அளிப்பதும் அவசியமாகியுள்ளது. அதன் ஒரு அங்கமாக, வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களின் பிரதேச செயலாளர்கள் மற்றும் ஜனாதிபதி நிதியம் தொடர்பாக செயலாற்றும் அதிகாரிகளுக்கு எதிர்வரும் 21ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் பயிற்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு…
-
- 1 reply
- 241 views
- 1 follower
-
-
கோவிந்தன் கருணாகரத்துக்கு எதிராக நடவடிக்கை - ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி அறிவிப்பு Published By: VISHNU 14 JUN, 2025 | 02:06 AM (நா.தனுஜா) ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றான ரெலோவின் செயலாளர் நாயகம் கோவிந்தன் கருணாகரத்துக்கு (ஜனா) எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அக்கூட்டணி அறிவித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தெற்கு எருவில் பற்று பிரதேச சபைக்கான தவிசாளர் தெரிவின்போது தேசிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி என்பன இணைந்து களமிறக்கிய வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு மாவட்டக்கிளைத் தலைவர் என்ற அடிப்படையில் உறுப்பினர்களுக்கு வழிகாட்டலை வழங்கியமை தொடர்பிலேயே அவருக்கு எதிராக மேற்குறிப்பிட்டவாறு நடவடிக்க…
-
- 1 reply
- 204 views
-
-
யாழில். வாள் வெட்டு தாக்குதல் ; இளைஞன் பலி! 14 JUN, 2025 | 10:15 AM யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பலினால் இளைஞன் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவம் வெள்ளிக்கிழமை (13) இரவு இடம்பெற்றுள்ளது. இருபாலை மடத்தடி பகுதியை சேர்ந்த இளைஞனே கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் துரித விசாரணைகளை முன்னெடுத்து வாள் வெட்டு தாக்குதல் நடத்திய இருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/217421
-
- 0 replies
- 229 views
-
-
தமிழர்கள் மீதான அட்டூழியக் குற்றங்களின் வடுக்களை மறைக்க அடுத்தடுத்த இலங்கை அரசாங்கங்கள் முயற்சிக்கின்றன - பிரித்தானிய தமிழர் பேரவை 14 June 2025 இலங்கைக்கான பயணத்தின் போது, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் வோல்கர் டர்க், 2009 ஆம் ஆண்டு இனப்படுகொலை நடந்த இடமான முள்ளிவாய்க்காலுக்கும், புதைகுழிகள் தோண்டப்பட்ட செம்மணிக்கும், செல்லவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. BTF என்ற பிரித்தானியத் தமிழர் பேரவை, இந்த கோரிக்கையை, விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் வோல்கர் டர்க், இந்த மாதத்தில் இலங்கை வருவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இன்னும் திகதி நிர்ணயிக்கப்படவில்லை. இந்த நிலையில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின…
-
- 0 replies
- 105 views
-
-
சாவகச்சேரி நகரசபையில் வீடா... சைக்கிளா...இன்று கடும்போட்டி சாவகச்சேரி நகரசபையில் ஆட்சியைக் கைப்பற்றப் போவது யார்? என்பது தொடர்பில் தமிழ் மக்கள் பேரவைக்கும்.இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் இடையில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. சாவகச்சேரி நகரசபையின் அமர்வு உள்ளூராட்சி ஆணையாளரின் தலைமையில் இன்று மாலை இடம்பெறவுள்ளது. இதில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக தமிழரசுக் கட்சிக்கும். தமிழ் மக்கள் பேரவைக்கும் இடையில் பலப்பரீட்சை நடைபெறவுள்ளது. இருதரப்பினரும், தமக்கு ஆதரவைக் கோரி நேற்று இரவிரவாக பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தனர். https://newuthayan.com/article/சாவகச்சேரி_நகரசபையில்_வீடா..._சைக்கிளா...இன்று_கடும்போட்டி
-
- 2 replies
- 212 views
-
-
பட்டிப்பளை பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு மட்டக்களப்பு, பட்டிப்பளை பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியுடன் இணைந்து சுயேட்சை குழு கைப்பற்றியுள்ளது. பட்டிப்பளை பிரதேச சபையின் தவிசாளராக திரேஸ குமாரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பட்டிப்பளை பிரதேச தவிசாளர் தேர்வுக்காக இலங்கை தமிழ் அரசு கட்சி சார்பில் கோபாலபிள்ளை சுரேந்திரன் (பட்டிப்பளை வட்டாரம்) முன்மொழியப்பட்டார். சுயேட்சை குழு (பந்து) சார்பில் இளையதம்பி திரேஸ குமாரன் (அரசடித்தீவு வட்டாரம்) முன்மொழியப்பட்டார். வாக்கெடுப்பில் சுயேட்சை குழுவின் இளையதம்பி திரேஸ குமாரன் 9 வாக்குகளை பெற்றுக் கொண்ட நிலையில், தமிழ் அரசு கட்சியின் கோபாலபிள்ளை சுரேஷ்குமார் 6 வாக்குகளை பெற்றார். தேசிய மக்கள் ச…
-
- 0 replies
- 106 views
-
-
13 Jun, 2025 | 05:02 PM நல்லூர் பிரதேச சபை தவிசாளராக தெரிவாகியுள்ள ப. மயூரன், தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி ஆசிர்வாதம் பெற்றார். நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு வெள்ளிக்கிழமை (13) பிரதேச சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது. அதன்போது, மயூரன் தவிசாளராக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். தவிசாளராக தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, நல்லூர் ஆலய பின்வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்துக்குச் சென்று, தியாக தீபத்தின் திருவுருவப்படத்திற்கு தீபமேற்றி, மலர் தூபி அஞ்சலி செலுத்தியதுடன், ஆசிர்வாதமும் பெற்றுக்கொண்டார். திலீபனின் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் | Virakesari.lk
-
- 0 replies
- 125 views
-
-
யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் இன்று (13) மீனவர்களிடையே வன்முறை வெடித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனை மீறி அங்கு சிலர் உழவு இயந்திரத்தை பயன்படுத்தி கரைவலை தொழில் செய்து வந்தனர். இந்நிலையில், இன்று நண்பகல் 12 மணியளவில் செம்பியன்பற்று சென் பிலிப் நேரியார் கடற்றொழிலாளர் சங்க உறுப்பினர்கள் என தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு மதுபோதையில் தடிகளுடன் கரைவலை வாடிகளுக்குச் சென்ற கும்பலொன்று அங்கிருந்த மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த மீனவர் ஒருவர் மருதங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, …
-
- 0 replies
- 110 views
-
-
12 JUN, 2025 | 03:20 PM தையிட்டி விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளுக்கு நஷ்ட ஈடு அல்லது மாற்றுக் காணிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். வலிகாமம் வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்றைய தினம் வியாழக்கிழமை (12) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை தவிர்த்து, அதனை சூழவுள்ள ஏனைய காணிகளை மாவட்ட செயலரிடம் கையளிக்க பணிக்கப்பட்டுள்ளது. மாவட்ட செயலர் பிரதேச செயலர் ஊடாக காணி உரிமையாளர்களுக்கு காணிகளை கையளிப்பார். அதேவேளை தனியார் காணிக்குள் விகாரை அமைக்கப்பட்டிருந்தால், அந…
-
- 2 replies
- 197 views
- 2 followers
-
-
13 JUN, 2025 | 12:00 PM ஆனையிறவு உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பிற்கு ஆனையிறவு உப்பு என மீண்டும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. குறித்த உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பிற்கு அண்மையில் ரஜ உப்பு என பெயர் சூட்டியமை தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் மீண்டும் அந்த உப்பிற்கு ஆனையிறவு உப்பு என பெயர் சூட்டப்பட்டது. குறித்த உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பானது வடக்கு மாகாணத்தில் முதற்கட்டமாக விநியோகம் செய்யப்படும் என அறியமுடிகிறது. https://www.virakesari.lk/article/217343
-
- 0 replies
- 237 views
- 1 follower
-
-
தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முற்றாக முடங்கும் அபாயத்தில் தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையும், அதன் சேவைகளும் முற்றாக முடங்கும் அபாயத்தில் உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், புற்றுநோய் நிபுணர் வைத்தியர் கிருஷாந்தியின் பாதுகாப்பும், பணிச் சுதந்திரமும் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளது. தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தின் முக்கிய புற்றுநோய் சிகிச்சை மையமாக விளங்கும் தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலைக்கு எதிரான திட்டமிட்ட முயற்சிகள், தற்போது அதன் இயங்கு திறனை முற்றாக பாதிக்கும் நிலையினை நோக்கி நகர்ந்துள்ளன. …
-
-
- 9 replies
- 515 views
- 1 follower
-
-
கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் திரு. த சுதாகரன் தற்காலிகமாக இடைநிறுத்தம்..! Vhg ஜூன் 12, 2025 கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் சார்பில் படகு சின்னத்தில் கோட்டைக்கல்லாறு (09 ஆம் வட்டாரத்தில்) வெற்றி பெற்று உள்ளூராட்சி மன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்த திரு த. சுதாகரன் கட்சியின் கொள்கை விதிகளுக்கு முரணாகவும், கட்சியினால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராகவும் இன்று (12) மண்முனை தென் எருவில் பற்று பிரதேச தவிசாளர், மற்றும் பிரதி தவிசாளர் தெரிவுகளின் போது செயல்பட்டதன் காரணமாக கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள்…
-
- 0 replies
- 211 views
-
-
Published By: DIGITAL DESK 2 13 JUN, 2025 | 11:07 AM நாட்டில் கடந்த சில வாரங்களில் சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற சுவாச நோய்கள் அதிகரித்து வந்தாலும், கொவிட்-19 நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளதாக சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இது தொடர்பாக தொற்றுநோயியலின் விஞ்ஞானப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் அதுல லியனபத்திரண கருத்து தெரிவிக்கையில், “கொவிட்-19 இப்போது பல்வேறு சுவாச நோய்களில் ஒன்றாகவே கண்காணிக்கப்படுகிறது. தற்போதைய நிலவரத்தின்படி, கொவிட் நோயாளிகள் தொடர்பான தனித் தரவுகள் சேகரிக்கப்படுவதில்லை. எனினும், நிலைமையின் மீது எங்களது தீவிர கண்காணிப்பு தொடர்ந்தும் காணப்படுகிறது” என்றார். மேலும், இந்நேரத்தில் இன்புளுவென்சா மற்றும் பிற சுவாச நோய்களின் பரவல் அதிகரி…
-
- 0 replies
- 84 views
- 1 follower
-
-
யாழ் மாநகர சபையின் முதல்வராக மதிவதனி விவேகானந்தராஜா தெரிவு : துணை முதல்வரானார் தயாளன் 13 JUN, 2025 | 09:58 AM யாழ் மாநகர சபையின் முதல்வராக மதிவதனி விவேகானந்தராஜா 19 வாக்குகளை பெற்று முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். யாழ் மாநகர சபையின் முதல்வரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (13) காலை யாழ் மாநகர சபை சபா மண்டபத்தில் நடைபெற்றது. யாழ் மாநகர சபை 45 உறுப்பினர்களை கொண்ட சபையாகும். இலங்கை தமிழ் அரசுக் கட்சி 13 ஆசனங்களையும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 12 ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி 10 ஆசனங்களையும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகியன தலா 4 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன தலா ஒரு ஆசனங…
-
- 0 replies
- 129 views
-
-
எல்லை தாண்டும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது உறுதி செய்திகள் இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய வருகையைத் தடுக்க இலங்கை அரசும், மீன்பிடி அமைச்சும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. கடற்படையும் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் இலங்கை கடல் எல்லையை கடற்படை மூலம் தீவிரமாகக் கண்காணிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதோடு, அத்துமீறி வரும் இந்திய மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மீன்பிடி அமைச்சர் உறுதியளித்துள்ளதாக வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்தார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (12) மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் …
-
- 0 replies
- 124 views
-
-
Published By: DIGITAL DESK 2 12 JUN, 2025 | 09:16 PM யாழ்ப்பாணம் , பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மல்லாகம் நீதவான் நீதிமன்றை தவறாக வழிநடத்துவதாக மன்றில் சட்டத்தரணிகள் தமது சமர்ப்பணங்களில் தெரிவித்துள்ளனர். நீதிமன்ற கட்டளையை மீறி, தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக பலாலி பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்திருந்தனர். குறித்த வழக்கு இன்றைய தினம் வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, போராட்டம் நடத்தியவர் சார்பாக மன்றில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா, நா.காண்டீபன் ஆகியோர் சமர்ப்பனங்களை முன்வைத்தனர். குறித்த வழக்கு தொடர்பில் சட்டத்தரணிகள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், தையிட்டி விகாரைக்கு எதிரான போ…
-
- 0 replies
- 124 views
- 1 follower
-
-
வீட்டு திட்டத்தை விரைந்து கட்டி முடியுங்கள் – பயனாளிகளுக்கு ஆளுநர் அறிவித்தல்! இலங்கையிலையே வடமாகாணத்தில் மாத்திரமே வீட்டு திட்டத்திற்கு தலா 18 இலட்சம் வழங்கப்படுகிறது! adminJune 12, 2025 மாரி மழைக்கு முன்னர் வீடுகளை கட்டி நீங்கள் குடியமரவேண்டும். உங்கள் கட்டுமானத்தின் முன்னேற்றத்தை எவ்வளவு விரைவாகச் செய்ய முடியுமோ அவ்வளவு விரைவாகச் செய்து அடுத்தடுத்த கட்டக் கொடுப்பனவுகளையும் பெற்றுக்கொள்ளுங்கள் என வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகன் வீட்டு திட்ட பயணிகளுக்கு தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் ஊடாக மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் மூலம் வீட்டு திட்டத்திற்கு தெரிவான பயனாளிகளுக்கு முதல் கட்ட கொடுப்பனவு வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போ…
-
- 1 reply
- 114 views
- 1 follower
-
-
12 JUN, 2024 | 11:24 AM ஈச்சிலம்பற்று முகாம்களில் தஞ்சமடைந்திருந்த மக்களுக்கான உலர் உணவுப் பொதிகளை கொண்டுசென்ற அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டு 38 வருடங்களாகியும் நீதி கிடைக்கவில்லையென படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றார்கள். திருகோணமலை மாவட்டத்தின் ஈச்சிலம்பற்று பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அகதி முகாம்களில் தஞ்சமடைந்திருந்த மக்களுக்கான உலர் உணவுப்பொருட்களை சேருவில பகுதியில் இருந்து ஈச்சிலம்பற்று நோக்கி கொண்டுசென்ற போது மகிந்தபுர பகுதியில் வைத்து மூன்று அரச அதிகாரிகள் உட்பட 21பேர் படுகொலை செய்யப்பட்ட வெருகல் படுகொலையின் 38வது நினைவுதினம் இன்று புதன்கிழமை (12) அனுஷ்டிக்கப்படுகின்றது. அன்று நாட்டில் நி…
-
- 1 reply
- 402 views
- 1 follower
-
-
Published By: VISHNU 12 JUN, 2025 | 06:12 PM (நா.தனுஜா) இலங்கையில் நடைபெறவிருக்கும் 'மீட்சிக்கான இலங்கையின் பாதை: படுகடன் மற்றும் ஆளுகை' மாநாட்டில் கலந்துகொள்ளவிருக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் துணை முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி கீதா கோபிநாத், இது இலங்கையின் அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்களில் கவனம்செலுத்துவதற்கான சிறந்த வாய்ப்பாக அமையும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (15) நாட்டுக்கு வருகைதரவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் துணை முகாமைத்துவப் பணிப்பாளர் கீதா கோபிநாத், எதிர்வரும் திங்கட்கிழமை (16) நடைபெறவிருக்கும் 'மீட்சிக்கான இலங்கையின் பாதை; படுகடன் மற்றும் ஆளுகை' மாநாட்டில் கௌ…
-
- 0 replies
- 165 views
- 1 follower
-
-
அனுரகுமார அரசாங்கம் அதன் முன்னைய அரசாங்கங்களில் இருந்து வேறுபட்டதாக தெரியவில்லை - பொறுப்புக்கூறுவதற்கான அர்த்தபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என ஜேர்மனி அழுத்தம் கொடுக்கவேண்டும் - சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் Published By: RAJEEBAN 12 JUN, 2025 | 11:52 AM இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல்கள் மற்றும் பாரிய அட்டுழியங்களிற்கு பொறுப்புக்கூறுவதற்கான அர்த்தபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என ஜேர்மனி அழுத்தம் கொடுக்கவேண்டும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கை ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க ஜேர்மனிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சூழ்நிலையிலேயே சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. இலங்கை குறித்த நீண்டகால கரிசனைகளை ப…
-
- 0 replies
- 129 views
- 1 follower
-
-
தையிட்டி திஸ்ஸ விகாரையில் ஆயிரக்கணக்கில் சிங்கள மக்களை களமிறக்குவதற்குத் தீவிர முயற்சி! யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையில் வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவருவதற்கு தெற்கில் முயற்சிகள் இடம்பெற்றுவருவதாக நம்பகரமாக அறியமுடிகின்றது. எதிர்வரும் 10ஆம் திகதி பௌர்ணமி தினத்தன்று திஸ்ஸ விகாரையில் வழிபாடுகள் இடம்பெறவுள்ளன. அந்த வழிபாடுகளுக்காகவே, ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் தளங்கள் மூலம் தகவல்களை வழங்கி ஆட்களைத் திரட்டும் பணியில் சில சிங்கள கடும்போக்குச் செயற்பாட்டாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரியவருகின்றது. திஸ்ஸ விகாரைக் காணிகள் தொட…
-
- 4 replies
- 399 views
- 1 follower
-
-
படுகொலை செய்யப்பட்ட பொலிஸாரின் ஞாபகார்த்த நிகழ்வு தமிழீழ விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த சுமார் 600 பொலிஸார் படுகொலை செய்யப்பட்டு 35 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு ஞாபகார்த்த நிகழ்வு நேற்று (11) அம்பாறை பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் அமைந்துள்ள ரணவிரு ஞாபகார்த்த நினைவு தூபியில் இடம்பெற்றது. 1990 ஜூன் 11 அன்று தமிழீழ விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட 600 பொலிஸ் அதிகாரிகளின் நினைவாக அமைதி என்ற பெயரில் இம்மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. குறித்த நிகழ்வின் போது கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தர உள்ளிட்ட பொலிஸ் உயரதிகாரிகள், பொலிஸார் ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். https://adaderanatamil.lk/news/c…
-
- 0 replies
- 228 views
-
-
அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு எதிராக மனுத் தாக்கல் வடக்கு சாவகச்சேரி நகர சபை மற்றும் பிரதேச சபைக்கு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு உறுப்பினர்களாகத் தேர்வான இருவர் அந்தந்த உள்ளூராட்சி சபைகளில் உறுப்பினர்களாகப் பதவியேற்பதற்கு எதிராகத் தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்தச் சபைகளில் ஒன்று தவிசாளரைத் தெரிவு செய்வதற்காக நாளை கூடவிருக்கும் நிலையில், இன்று இந்த மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவிருக்கின்றது. 2025 ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் திகதி இடம்பெற்ற உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலின்போது சாவகச்சேரி நகர சபை மற்றும் சாவகச்சேரி பிரதேச சபையில் போட்டிய…
-
- 0 replies
- 248 views
-
-
தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் நிர்வாக முறைகேட்டைக் கண்டித்து மருத்துவர்கள் நாளை போராட்டம்! யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் நிலவும் நிர்வாக முறைகேட்டைக் கண்டித்தும், புற்றுநோய்ப் பிரிவை வினைத்திறனாக இயங்குவதற்கு வழிவகைகளை ஏற்படுத்துமாறு கோரியும் நாளை கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித் துள்ளது. இது தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் உள்ளதாவது:- தெல்லிப்பழை மண்ணின் புகழ்பூத்த தெல்லிப்பழை மருத்துவமனை போர் மற்றும் இடம்பெயர்வுகளைக் கண்டபோதிலும், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு அடுத்ததாக வடக்கு மாகாண மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் மருத்துவமனையாகக் காணப்படுகின்றது. அத்துடன், விசே…
-
- 0 replies
- 170 views
-
-
12 JUN, 2025 | 09:58 AM நாடளாவிய ரீதியில் பரவிவரும் கொவிட் -19 திரிபினால் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட மருத்துவப் பேராசிரியர் துஷாந்த மெதகெதர தெரிவித்தார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட, வயம்ப மருத்துவ பீடத்தின் முதன்மை மருத்துவப் பேராசிரியர் துஷாந்த மெதகெதர மேலும் கூறுகையில், “இலங்கை தொற்று நோயியல் பிரிவு தகவலின்படி, சுவாச நோயாளிகளில் 9% முதல் 13% வரை தற்போது புதிய கொவிட் திரிபினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொவிட் தொற்று மிகக் குறைந்த தீவிரத்தன்மை கொண்டது. இதனால் ஏற்படும் தாக்கம் மிகக் குறைவு. ஆனால் 65 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகள…
-
- 0 replies
- 133 views
- 1 follower
-