Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முத்தையன்கட்டு சம்பவம் - ஹர்த்தாலிற்கு அவசியமில்லை . அனைத்து மாவட்டங்களிலும் இவ்வாறான சம்பவங்கள் நிகழ்கின்றன - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் Published By: Rajeeban 15 Aug, 2025 | 10:37 AM முத்தையன்கட்டு சம்பவம் தொடர்பில் ஹர்த்தாலிற்கான தேவையில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால மோர்னிங்கிற்கு தெரிவித்துள்ளார். முத்தையன்கட்டு சம்பவம் தொடர்பில் ஹர்த்தாலை முன்னெடுக்கவுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்,ஆனால் அதற்கான தேவையில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார். அந்த சம்பவத்துடன் தொடர்புடைய தனிநபர்கள் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்,ஹர்த்தால் என்றாலும் சரி இல்லாவிட்டாலும் எங்களால் வேறு எதனையும் செய்ய முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவ…

  2. ஓரினச்சேர்க்கை ஊக்குவிப்பு - கர்தினால் கவலை தெரிவிப்பு நாட்டில் ஓரினச்சேர்க்கையை ஊக்குவிப்பதற்காக வெளிநாட்டு அமைப்புகளுடன் இணைந்து ஒரு குழுவினர் செயல்பட்டு வருவதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். சில அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களும் இதில் ஈடுபட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். கொழும்பில் நேற்று (14) நடைபெற்ற ருஹுணு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தர்ம கீர்த்தி ஸ்ரீ கலாநிதி அகுரெட்டியே நந்த நாயக்க தேரருக்கு மியன்மார் அரசாங்கத்தால் 'அக்கமஹா பண்டிதர்' கௌரவப் பட்டம் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட கர்தினால் இவ்வாறு கூறினார். இந்நிகழ்வில் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அரசியலமைப்புத் திருத்தத்தில் மனித உரிமைகளுக்கு சிறப…

  3. மன்னார் காற்றாலை மின் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தை தொடர்ந்து நடத்துவதா? அல்லது தற்காலிகமாக கைவிடுவதா? என்பது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபடுவோருடன் கலந்துரையாடி முடிவு எடுக்கப்படும் என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மார்க்கஸ் அடிகளார் தெரிவித்துள்ளார். 2ஆம் கட்ட காற்றாலை அபிவிருத்தி் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மன்னாரில் மக்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த போராட்டத்தை கைவிடுமாறு அரசாங்க அதிபர் முன்வைத்துள்ள கோரிக்கைக்கு பதில் வழங்கும் வகையில் அருட்தந்தை மார்க்கஸ் அடிகளார் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மன்னாரில் இரண்டாம் கட்ட காற்றாலை அமைத்தல் மற்றும் கனிய மண்…

  4. 13 ஆண்டுகளாக தேடப்பட்ட இலங்கை கடத்தல் தலைவன் கைது சென்னை - மத்திய போதை தடுப்பு பிரிவு பொலிஸான என் சி பி அதிகாரிகள், கடந்த 2012 ஆம் ஆண்டு, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் திடீர் சோதனை நடத்தி, மதுரைக்கு செல்ல இருந்த ரவிக்குமார், மாலினி தம்பதியினரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் பைகளில்33 கோடி ரூபாய் மதிப்புடைய 3.3 கிலோ ஹெராயின் போதை பொருள் இருந்ததை கண்டுபிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இலங்கையைச்சேர்ந்த முகமது முனாவர் என்பவர் தான், இந்த போதைப் பொருளை தங்களிடம் கொடுத்து, மதுரையில் உள்ள மற்றொரு, இலங்கை நபரிடம் கொடுக்கப்படி கூறினார். அதற்காக முகமது முனாவர் எங்களுக்கு, ரூ.10,000 கொடுத்தார் என்றும் கூறினர். இதை அடுத்து மத்திய போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள், …

  5. யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இந்திய சுதந்திர தின நிகழ்வுகள் முன்னெடுப்பு! இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் (15) காலை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இந்திய தேசியக்கொடி ஏற்றப்பட்டு, சுதந்திர தின நிகழ்வுகள் கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாணம் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் காலை 9மணியளவில் இந்தியாவின் தேசியக் கொடியை துணைத் தூதர் சாய் முரளி ஏற்றிவைத்தார். அதனை தொடர்ந்து, சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய குடியரசுத் தலைவரின் வாழ்த்துச் செய்தியை துணைத் தூதர் வாசித்தார். இதேவேளை, இந்த நிகழ்வில் இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகள், உத்தியோகஸ்தர்கள் , அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட…

  6. இலங்கையின் மனித உரிமை தொடர்பில் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் நிலைப்பாடு! அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்ட 2024 ஆம் ஆண்டுக்கான உலக மனித உரிமை அறிக்கையில், இலங்கையில் மனித உரிமைகள் நிலைமைகள் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றன என்றும், அவற்றால் வருந்தத்தக்க சூழ்நிலை உருவாகியுள்ளது என்றும் தெரிவித்துள்ளது. அத்துடன் குறித்த அறிக்கையில், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட அதிகாரிகளை அடையாளம் காண்பதிலும், அவர்களைப் பொறுப்பேற்க வைப்பதிலும் இலங்கை அரசாங்கம் மிகக் குறைவான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாது இலங்கையில் நடைபெறும் தனிநபர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள், விளக்கமறியலில் இருக்கும் வேளை இடம்பெறும் மரணங்கள் , ஊடகவியலாளர்கள…

  7. தமிழர் பகுதியில் விடுவிக்கப்படும் முக்கிய மாவீரர் துயிலுமில்லம்.! Vhg ஆகஸ்ட் 14, 2025 மட்டக்களப்பு வவுணதீவு - தாண்டியடி மாவீரர் துயிலுமில்லம் உள்ள காணியின் ஒரு பகுதியை விடுவிப்பதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் (Ananda Wijepala) பங்குபற்றுதலுடன் நேற்று (13.08.205) இடம்பெற்ற மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வவுணதீவு - தாண்டியடி மாவீரர் துயிலுமில்ல காணியில் விசேட அதிரடிப்படை முகாம் அமைந்திருக்கிறது என்றும், அந்த காணியினை விடுவித்து மக்கள், அஞ்சலி செலுத்துவதற்கு ஏற்றவகையில் மாற்றியமைத்து வழங்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் இதன்போது கோரியி…

  8. 14 AUG, 2025 | 05:15 PM (இராஜதுரை ஹஷான்) மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்று ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றமை வரவேற்கத்தக்கது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார். மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, மாகாண சபை தேர்தல் விரைவாக நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளோம். நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றான தேர்தல் உரிமையை பாதுகாக்க வேண்டிய கடப்பாடு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உண்டு. நீதியானதும், சுதந்திரமானதுமான வகையில் தேர்தலை நடத்து…

  9. கடந்த காலங்களில் இருந்து விடுபடுவதற்கு இலங்கைக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்தர்ப்பம்-ஐநா மனித உரிமை ஆணையாளர். இலங்கை அரசாங்கம் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச குற்றங்களில் பாதுகாப்பு படையினர் மற்றும் அரசாங்கத்திற்கு தொடர்புள்ளதை பல வருடங்களாக ஏற்க மறுத்து வந்துள்ளது என தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்க்கெர் டேர்;க் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் சட்டத்தை ஏற்றுக்கொள்வதன் மூலம் இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட நிலங்களை விடுவித்தல் புதிய நிலக் கையகப்படுத்துதல்களை நிறுத்துதல் மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து நபர்களையும் விடுவித்தல் பாதிக்கப்பட்டவர்களின் நினைவு முயற்சி…

  10. வவுனியா பொருளாதார மத்திய நிலையம் செப்ரெம்பர் முற்பகுதியில் திறப்பு August 14, 2025 11:35 am வவுனியா மதவுவைத்தகுளத்தில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையத்தை வரும் செப்ரெம்பர் முற்பகுதிக்குள் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான திருத்தப்பணிகள் இம்மாத இறுதிக்குள் நிறைவுறுத்தப்படும் என்று வர்த்தக வாணிப அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தை வர்த்தக அமைச்சர் நேற்று பார்வையிட்டார். அதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைத் தெரிவித்தார். ‘ கடந்த 8வருடங்களுக்கு முன்பு வவுனியாவில் 200 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான முதலீட்டில் அமைக்கப்பட்ட குறித்த பொருளாதார மத்திய நிலையம் இதுவரை இயங்காமலுள்ளது. எனவே இம்மாத இறு…

  11. ரோம் சட்டத்தை ஏற்றுக்கொள்வதன் மூலம் நிலைமாறுகால நீதிக்கான சூழலை உருவாக்கவேண்டும் - கடந்த காலங்களில் இருந்து விடுபடுவதற்கு இலங்கைக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்தர்ப்பம் - ஐநா மனித உரிமை ஆணையாளர் 14 AUG, 2025 | 07:57 AM இலங்கை அரசாங்கம் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச குற்றங்களில் பாதுகாப்பு படையினர் மற்றும் அரசாங்கத்திற்கு தொடர்புள்ளதை பல வருடங்களாக ஏற்க மறுத்துவந்துள்ளது என தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர்வோல்க்கெர் டேர்க் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் சட்டத்தை ஏற்றுக்கொள்வதன் மூலம் இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட நிலங்களை விடுவித்தல் புதிய நிலக் கையகப்படுத்துதல்களை நிறுத்துதல் மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் க…

  12. இராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள மயிலிட்டி வரசித்தி விநாயகருக்கு 35 ஆண்டுகளின் பின்னர் பொங்கல் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு, இடித்தழிக்கப்பட்டு தற்போதுவரை விடுவிக்கப்படாதுள்ள மயிலிட்டி அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு, இராணுவ முடகம்பி வேலிக்கு முன்பாக 35 ஆண்டுகளின் பின்னர் பொங்கல் பொங்கி படையலிடப்பட்டு விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன. வலிகாமம் வடக்குப் பிரதேசத்தின் மீது 1990ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை காரணமாக மயிலிட்டி கிராமம் உள்ளிட்ட பல கிராம மக்கள் இரவோடு இரவாக தமது பூர்வீக இடத்தை விட்டு அகதிகளாக துரத்தியடிக்கப்பட்டனர். இதன்போது வீடுகள், பாடசாலைகள், ஆலயங்கள், வர்த்தக நிலையங்கள், தொழிற்சாலைகள் என கோடான கோடி ரூபா பெறுமதியாக சொத்துகளை விட்டது விட்டவாறே மக்க…

  13. மயிலிட்டித் துறைமுகத்தில் தென்னிலங்கை மீனவர்களால் வடக்கு மீனவர்கள் அந்தரிப்பு ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் சரமாரிக் குற்றச்சாட்டு மயிலிட்டித் துறைமுகத்தில் தென்னிலங்கை மீனவர்களின் அதீத ஆக்கிரமிப்புக் காரணமாகவும், நீண்ட காலமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள இந்திய றோலர்களாலும் தாம் பெரும் துன்பங்களை எதிர்கொள்வதாக வடமாகாண மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். வலிகாமம் வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் தெல்லிப்பழை பிரதேசசெயலகத்தில் நேற்று இடம்பெற்றது. இதன்போதே, மயிலிட்டித் துறைமுகம் தம்மிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளதாகவும், அதைத் தம்மால் பயன்படுத்த முடியாதுள்ளதாகவும் வடக்கு மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இது தொடர்பில் மீனவர்கள் மேலும் தெரிவித்ததாவது:- மயிலிட்டித் துறைமுகத்தை…

  14. பிள்ளையானின் துப்பாக்கி நண்பர் காத்தான்குடியில் கைது! adminAugust 14, 2025 பிள்ளையான் என்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தனால் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கொலைகளில் முக்கிய துப்பாக்கி சூடு நடாத்திய பிள்ளையானின் சகாவான முகமட் ஷாகித் என்பவரை காத்தான்குடியில் வைத்து குற்றப் புலனாய்வு துறையினர் கைது செய்துள்ளனர். நேற்று புதன்கிழமை (13.08.25) மாலை சந்தேகநபர் அவரின் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்படு காணாமல் போன சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சி.சந்திரகாந்தனை கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினர் மட்டக்…

  15. Published By: VISHNU 13 AUG, 2025 | 07:03 PM முல்லைத்தீவு முத்தையன்கட்டு இராணுவ முகாமில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக நீதியான விசாரணை இடம்பெற்றுவருகின்றது தவறு செய்தால் யார் என்றாலும் அவர்களை நீதியின் முன் நிறுத்துவது எமது பொறுப்பாகும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேயபால தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் புதன்கிழமை (13) பழைய கச்சேரி மண்டபத்தில் அபிவிருத்திகுழு தலைவர் அமைச்சர் சுனில் ஹந்தி நெத்தி தலைமையில் இடம்பெற்றது இதில் கலந்துகொண்ட பின்னர் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேயபால ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இல்வாறு தெரிவித்தார். முல்லைத்தீவு முத்தையன்கட்டு இராணுவ முகாமில் இளைஞர்கள் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஊடகவியலாளர் …

  16. 13 AUG, 2025 | 05:08 PM வலி வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணிகளை விடுவித்து, அக்காணிகளில் மக்கள் சுதந்திரமாக விவசாய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் காணி உரிமையாளர்கள் கோரிக்கை விடுவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் புதன்கிழமை (13) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர். மேலும் தெரிவிக்கையில், யுத்தம் முடிந்து 16 வருடகாலமாக பாதுகாப்பு காரணங்களுக்காக என கூறி தனியார் காணிகளை கையகப்படுத்தி வைத்துள்ள இராணுவத்தினர் அதில் விவசாயம் செய்கின்றனர். காணி உரிமையாளர்கள் விவசாயம் செய்ய முடியாது வறுமையில் வாடுகின்றனர். தனியார் காணிகளை அடாத்தாக பிடித்து விவசாயம் செய்வது சட்டவிரோதமானது. அது மாத்திரமின்றி மக்களின் வரிப்பணத்தில் ச…

  17. 13 AUG, 2025 | 05:02 PM ஊழியர்களின் நலனில் அக்கறை எடுக்காமை, போனஸ் குறைப்புக்கு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வைக் கோரியும் அதற்கான முயற்சிகளில் அரசின் அசமந்தப் போக்குக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இன்று புதன்கிழமை (13) மதியம் 12.30 மணியளவில் யாழ் மாவட்டத்தில் உள்ள இலங்கை வங்கி கிளை வலையமைப்புக்களை மூடி, அனைத்து பரிவர்த்தனைகளிலிருந்தும் விலக இலங்கை வங்கி ஊழியர் சங்கம் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தது. அத்துடன் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், எதிர்வரும் காலத்தில் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாகவும் இலங்கை வங்கி ஊழியர் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து இலங்கை வங்கி ஊழியர் சங்க உறுப்பினர் கருத்து தெரிவிக்கையில், "கடந்த 2024 ஆம் ஆண்டு வரலாற்ற…

  18. Published By: RAJEEBAN 13 AUG, 2025 | 02:56 PM செம்மணியில் சிலர் உயிருடன் புதைக்கப்பட்டிருக்கலாம் என கருதுவதாக சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்துள்ளார். ஜேர்மனியின் ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். சிலர் உயிருடன் புதைக்கப்பட்டிருக்கலாம் என கருதுகின்றோம், என தெரிவித்துள்ள அவர் ஏற்கனவே இறந்தநிலையில் அவர்கள் புதைக்கப்பட்டிருந்தால் அவர்களின் உடல்கள் வளையாது என தெரிவித்துள்ளார்.("if they were already dead, the bodies wouldn't be bent," with some of them displaying twisted limbs.) சிலரின் கைகால்கள் வளைக்கப்பட்டதாக தோன்றுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கங்களை நம்பமுடியாது என்பதை வரலாறு எங்களிற்கு தெரிவித்துள்ளது. அவர்கள் சர்வதேச கண்காணிப்பை எத…

  19. Published By: VISHNU 13 AUG, 2025 | 08:05 PM 12ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 35 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் பனையால் விழுந்ததாக கூறி மயக்க நிலையில் அவரை வைத்தியசாலைக்கு கொண்டுவந்து சேர்ப்பித்துவிட்டு வைத்தியசாலைக்கு அழைத்து வந்தவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருகையில், பண்டத்தரிப்பு - சாந்தை பகுதியை சேர்ந்த குடும்பஸ்தரே இவ்வாறு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார். பின்னர் அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவருக்கு தலையில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் மயக்க நிலையில் இருந்து அவர் மீளவில்லை. குறித்த குடும்பஸ்தரின் தலை மற…

  20. Published By: RAJEEBAN 13 AUG, 2025 | 11:10 AM முத்தையன்கட்டு குளத்தில் கபில்ராஜ் என்ற இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளமைக்கும் இராணுவத்திற்கும் தொடர்புள்ளதாக தெரிவிக்கப்படுவதை இராணுவ பேச்சாளர் வருணகமகே நிராகரித்துள்ளார். ஐலண்ட் நாளிதழிற்கு இதனை அவர் தெரிவித்துள்ளார். ஒட்டிசுட்டான் முத்தையன்கட்டு வீதியில் உள்ள முகாமில் உள்ள படையினர் ஆகஸ்ட் ஏழாம் திகதி இரவு நபர்கள் சிலர் முகாமிற்குள் நுழைய முற்பட்டதை தடுத்து நிறுத்தினார்கள் என இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார். படையினர் அவர்களில் ஒருவரை கைதுசெய்தனர், ஏனையவர்கள் தப்பியோடிவிட்டனர். நாங்கள் அவர்களை துரத்திச்செல்லவில்லை என இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார். இராணுவ தலைமையகத்தின் உத்தரவின் பேரில் குறிப்பிட்ட இராணுவ முகா…

  21. சிறைச்சாலை வைத்தியசாலையின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் கைது! சிறைச்சாலை வைத்தியசாலையின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் ஹேமந்த ரணசிங்க இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டில், கைதி ஒருவர் உடல்நலக்குறைவு காரணமாக வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிறைச்சாலை வைத்தியசாலையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்ற பின்னர், அவர் தொடர்ந்தும் அங்கு தங்கி சிகிச்சைப் பெறுவதற்காக இலஞ்சமாக, 1,500,000 ரூபா கோரப்பட்டதோடு, அதில் 300,000 ரூபாவை அவர் இலஞ்சமாகப் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (13) காலை ப…

  22. “இதயபூர்வமாக யாழ்ப்பாணத்திற்கு” யாழ்தேவி ரயில் கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து யாழ் நோக்கி பயணம். கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தின் ஒரு அங்கமாக “இதயபூர்வமாக யாழ்ப்பாணத்திற்கு – ஒற்றுமையின் தூய்மையான பயணம்”எனும் தொனிப்பொருளில் யாழ்தேவி ரயில் இன்று காலை கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து பயணத்தினை ஆரம்பித்துள்ளது. யாழ்ப்பாண மாவட்ட மக்களிடையே கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தினை ஊக்குவிக்கும் வகையில் க்ளீன் ஸ்ரீலங்கா செயலக அலுவலகத்தினால் “இதயபூர்வமாக யாழ்ப்பாணத்திற்கு – ஒற்றுமையின் தூய்மையான பயணம்”எனும் தொனிப்பொருளில் இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இந்த திட்டமானது இன்று முதல் ஒருவார காலத்திற்கு செயற்படுத்தப்படவுள்ளதுடன் இதன் ஆரம்ப நிகழ்வு கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்ட…

      • Thanks
    • 2 replies
    • 248 views
  23. தொண்டைமானாறு கடல் நீர் ஏரியிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு! தொண்டைமானாறு கடல் நீர் ஏரியிலிருந்து நேற்று மாலை (12) பெண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். மீன்படி நடவடிக்கைக்கு வந்த மீனவர்கள் சடலம் ஒன்று மிதந்து இருப்பதைக் கண்டு அவசர தொலைபேசி இலக்கத்துக்கு தகவல் வழங்கியிருந்த நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவந்தனர். இந்நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் தொடர்பான தகவல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ராஜலிங்கம் சுபாஷினி எனும் 40 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வந்துள்ள அவர் நேற்று 12காலை செல்வச் சன்னதி ஆலயத்திற…

  24. காதலுக்காக இலங்கையில் இருந்து சென்ற பெண் – அகதி முகாமில் தடுத்து வைப்பு August 13, 2025 9:59 am தனது காதலனை கரம் பிடிக்கும் நோக்கில் இலங்கையில் இருந்து சட்ட விரோதமாக இந்தியா சென்ற இளம் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், குறித்த பெண் தற்போது மண்டபம் அகதிகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு நேற்று அதிகாலையில் இளம்பெண் ஒருவர் அகதியாக வந்திருப்பதாக கடலோர பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் குறித்தப் பெண்ணை கைது செய்துள்ளனர். தொடர்ந்து மத்திய, மாநில உளவு பிரிவு பொலிஸார் அவரிடம் தீவர விசாரணைகளை முன்னெடுத்த…

  25. செம்மணி மனித புதைகுழி தொடர்பிலான வழக்கு விசாரணை நாளை! செம்மணி மனித புதைகுழி தொடர்பிலான வழக்கு நாளைய தினம் (14) யாழ் . நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. குறித்த வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படும் போது, அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட பகுதிகளுக்கு மேலதிகமாக புதைகுழிகள் காணப்படுகின்றனவா என்பதை கண்டறியும் நோக்குடன் கடந்த வாரம் முன்னெடுக்கப்பட்ட ஸ்கேன் நடவடிக்கையின் அறிக்கை , மண் பரிசோதனை அறிக்கை உள்ளிட்ட சில முக்கிய அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் கடந்த 07ஆம் திகதியுடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் அடுத்த கட்ட அகழ்வு பணிகள் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறும் என …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.