Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Editorial / 2025 டிசெம்பர் 10 , பி.ப. 12:03 - 0 - 56 மு.தமிழ்ச்செல்வன் கிளிநொச்சியில் திருவையாறு பகுதியில் இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிராக செயற்பட்டு வந்தவர் இன்று (10) மணலுடன் வந்த ரிப்பர் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். இச் சம்பவத்தில் திருவையாறு பகுதியைச் சேர்ந்த செல்வரத்தினம் சோபனாத் வயது 35 என்பவரே பலியாகியுள்ளார். கிளிநொச்சி நகரிலிருந்து இரணைமடு நோக்கி தனது மனைவியுடன் உந்துருளியில் பயணித்தவர் வில்சன் வீதி மொட்டை பாலத்திற்கு அருகில் வீதியின் ஓரமாக உந்துருளியை நிறுத்த முற்பட்ட போது அவரை பின் தொடர்ந்து மணலுடன் வந்த ரிப்பர் உந்துருளியை நோக்கி நெருங்கி வருவதனை அவதானித்த மனைவி உந்துருளியிலிருந்து வேகமாக இறங்கி வீதியின் ம…

  2. Janu / 2025 டிசெம்பர் 10 , பி.ப. 02:10 - 0 - 40 பதுளு ஓயா பெருக்கெடுத்ததால் வெள்ளத்தில் மூழ்கிய பதுளை ஓயா தோட்டம் கிராமத்தில் உள்ள வீடுகள் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன. இந் நிலையில் எல்ல பகுதிக்கு வருகை தந்த சுவீடன், ஜெர்மனி, நோர்வே மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் இரண்டு நாட்களாக மக்களுடன் இணைந்து வீடு சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சுமனசிறி குணதிலக்க Tamilmirror Online || வீடுகள் சுத்தம் செய்யும் பணியில் இணைந்த வெளிநாட்டவர்

  3. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது எதிர்கொள்ளும் கொலை மிரட்டல்கள் குறித்து 2026 பபெப்ரவரி 6, ஆம் திகதிக்கு முன்னர் பிரமாணப் பத்திரம் சமர்ப்பிக்க வேண்டும் என்று யாழ்ப்பாண நீதவான் உத்தரவிட்டார். மரண மிரட்டல்கள் காரணமாக நீதிமன்றங்களில் ஆஜராக முடியவில்லை என்று கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் தெரிவித்ததால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. முன்னணி சோசலிசக் கட்சியின் (FSP) செயற்பாட்டாளர்களான லலித் குமார் மற்றும் குகன் வீரராஜு ஆகியோர் 14 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட வழக்கு தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டிருந்தர். இருவரும்2011 டிசம்பர் 10 ஆம் திகதியன்கடத்தப்பட்டதாக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் ப…

  4. 10 Dec, 2025 | 01:30 PM நாட்டின் சுமார் 12,000 கிலோமீட்டர் நீளமுள்ள வீதி வலையமைப்பு தொடர்பான தகவல்களை கூகுள் மெப் புதுப்பித்திருப்பதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அதன்படி, A மற்றும் B தரத்திலான பிரதான வீதிகள் தொடர்பான தகவல்களை இணைத்து Google Map அதன் பாதை வரைபடங்களை புதுப்பித்துள்ளது. வீதி மூடல்கள், பாதை புனரமைப்பு நடவடிக்கைகள் போன்ற 6 குறிப்பிட்ட முன்னெச்சரிக்கை தகவல்களுடன் இந்த புதிய பாதை வரைபட அம்சம் செயற்படுத்தப்பட்டுள்ளது. இது, பயணங்களை சிறப்பாக திட்டமிடவும், நேரத்தை மீதப்படுத்தவும், எதிர்பாராத போக்குவரத்து நெரிசல்களை தவிர்க்கவும் மிகப் பெரும் உதவியாக அமையும் என தெரிவிக்கப்படுகிறது. டிசம்பர் 31ஆம் திகதி வரை…

  5. 10 Dec, 2025 | 06:09 PM நாட்டில் ஏற்பட்ட பேரிடரின்போது மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் மரணமான விமானிக்கும், சுண்டிக்குளம் பகுதியில் முகத்துவாரம் வெட்டச் சென்ற நிலையில் உயிரிழந்த 5 கடற்படையினருக்கும் அஞ்சலி செலுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் பதாதை கட்டப்பட்டுள்ளது. வென்னப்புவ, லுணுவில பிரதேசத்தில் மீட்புப் பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்தபோது கடந்த 30ஆம் திகதி ஹெலிகொப்டர் ஒன்று கிங் ஓயாவில் வீழ்ந்துள்ளது. அதன்போது, விமானியான விங் கமாண்டர் நிர்மல் சியம்பலாபிட்டிய (வயது 41) என்பவர் உயிரிழந்தார். அதேவேளை சுண்டிக்குளம் பிரதேசத்தில் கடந்த 30ஆம் திகதி களப்பு முகத்துவாரத்தை அகலப்படுத்தும் கடமையில் ஈடுபட்டிருந்தபோது 5 கடற்படையினர் உயிரிழந்தனர். …

  6. கயிறு தடக்கி கடலில் வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு! Dec 10, 2025 - 02:36 PM 'நெடுந்தாரகை' பயணிகள் படகில் ஏற முயன்ற போது படகு கட்டும் கயிற்றில் தடக்கி கடலுக்குள் வீழ்ந்த ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று (10) காலை 6.10 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், நெடுந்தீவு மாவலித் துறைமுகத்தில் தேங்காய் மூட்டையுடன் 'நெடுந்தாரகை' பயணிகள் படகில் ஏறுவதற்கு பரராசசிங்கம் பிறேமகுமார் என்பவர் முயற்சித்துள்ளார். இதன்போது அவர் படகு கட்டும் கயிற்றில் தடக்கி கடலுக்குள் வீழ்ந்துள்ளார். அவரை மீட்க அருகில் நின்றவர்கள் முயற்சியை மேற்கொண்டபோதும் அவரை உயிருடன் மீட்க முடியமல் போயுள்ளது. உயிரிழந்தவர் நெடுந்தீவு கிழக்கு, 15 ஆம் வட்டாரம், தொட்டாரம் பகுதியை…

  7. வவுனியா வடக்கை அத்திப்பட்டியாக்க போகின்றீர்களா?; து.ரவிகரன் எம்பி! பூர்வீக மக்களை வெளியேற்றி விட்டு வவுனியா வடக்கை அத்திப்பட்டியாக்கவா போகின்றீர்கள். எம்மை சுட்டாலும் அதற்கு இடமளிக்கப் போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியா வடக்கில் பெரும்பாண்மை இனத்தை சேர்ந்த சிலரால் இயந்திரங்களின் மூலம் பெரிய மரங்கள் அறுக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்படுகின்றது. திரிவைச்ச குளம் பகுதியில் நான் நேரடியாக இதனை அவதானித்தேன். இதனை ஏன் இந்த திணைக்களங்களால் தடுக…

  8. 05 Mar, 2025 | 05:26 PM யோஷித ராஜபக்ஷவின் பாட்டியான “டெய்சி ஆச்சி” என அழைக்கப்படும் டெய்சி பொரஸ்ட் கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், பிணையில் விடுவிக்கப்பட்டார். யோஷித ராஜபக்‌ஷவின் பாட்டியான டெய்சி ஆச்சி, பணத் தூய்மையாக்கல், தொடர்பில் இன்று (5) புதன்கிழமை குற்றப்புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியதைத் தொடர்ந்து கைதுசெய்யப்பட்டார். கைதுசெய்யப்பட்ட டெய்சி ஆச்சி, கடுவெல நீதவான் நீதிமன்றத்தில ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து தலா ரூ. 5 மில்லியன் பெறுமதியான 2 சொந்தப் பிணைகளில் அவரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. யோஷித ராஜபக்ஷவின் டெய்சி பாட்டி பிணையில் விடுதலை ! | Virakesari.lk

  9. தரம் 6 இற்கு விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கால எல்லை நீடிப்பு Dec 10, 2025 - 12:40 PM 05 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் பரிசீலனைப் பெறுபேறுகளின் அடிப்படையில், பாடசாலைகளில் 06 ஆம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்களை அதிபர்கள் இணையவழி (Online) முறைமை ஊடாக சமர்ப்பிப்பதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. இணையவழியாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் வசதி டிசம்பர் 05 ஆம் திகதிக்குப் பின்னர் செயலிழக்கச் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், நிலவும் அனர்த்த நிலைமையைக் கருத்திற் கொண்டு அந்தத் திகதி டிசம்பர் 12 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை, 2025 ஆம் ஆண்டு 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப…

  10. யாழ்., பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவு; பேராசிரியர் வேல்நம்பி முன்னிலையில்! யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்குப் புதிய துணைவேந்தர் தெரிவில் உயர் பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர் தி. வேல்நம்பி முன்னிலை வகித்துள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்குப் புதிய துணைவேந்தரை ஜனாதிபதி தெரிவு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் புதிய துணைவேந்தர் பதவிக்கு உயர் பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர் தி. வேல்நம்பி, மருத்துவபீடப் பீடாதிபதி பேராசிரியர் ஆர்.சுரேந்ததிரகுமாரன், கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி. ரகுராம், விஞ்ஞான பீடப் பீடாதிபதி பேராசிரியர் பு.ரவிராஜன், விவசாய பீட முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் கு.மிகுந்தன், விஞ்ஞானபீட முன்னாள…

  11. யாழ். பல்கலையில் போதனைசாராப் பணியாளர் வெற்றிடங்களை நிரப்புமாறு கோரி தொழிற்சங்க சம்மேளனம் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக எச்சரிக்கை 10 Dec, 2025 | 11:26 AM (எம்.நியூட்டன்) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நிலவும் போதனைசாராப் பணியாளர் வெற்றிடங்களை உடனடியாக நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், தவறின் தொழிற்சங்க நடவடிக்கைக்குத் தள்ளப்படுவோம் என்றும் அனைத்துப் பல்கலைக்கழக ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் எச்சரித்துள்ளது. இதுதொடர்பில், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனைத்துப் பல்கலைக்கழக ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது. அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 355 போதனைசாராப் பணியாளர் வெற்றிடங்கள் நிலவுக…

  12. இலங்கை கடற்படையின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு தலதா மாளிகையில் மத நிகழ்வு! 10 Dec, 2025 | 10:28 AM இலங்கை கடற்படையின் பெருமைமிகு 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடற்படைக்கு ஆசிர்வாதம் பெறுவதற்காக பல்வேறு சர்வ மத நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்த மத நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகைக்கான கிலன்பச புத்த பூஜை திங்கட்கிழமை (08) அன்று நடைபெற்றது. மேலும் தலதா தாதுக்கான அன்னதானம் செவ்வாய்க்கிழமை (09) நடைபெற்றது. அதன்படி, மேற்படி மத நிகழ்ச்சிகளின் கீழ், கடற்படைத் தளபதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி, கடற்படையின் தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவினால், மல்வத்த மற்றும் அஸ்கிரி பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித…

  13. மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மக்களுக்கு எச்சரிக்கை! மன்னார், யாழ்ப்பாணம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் தாழ்நிலப் பகுதியில் உள்ள மக்கள் வெள்ள அபாயம் தொடர்பாக அவதானமாக இருப்பது அவசியம் எனவும் குறிப்பாக குளங்களின் கீழப்பகுதிகளில் உள்ள மக்கள் மிக அவதானமாக இருப்பது அவசியம் என்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எதிர்வு கூறியுள்ளார். 10.12.2025 புதன்கிழமை காலை 7.00 மணிக்கு சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா வானிலை குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கையின் தென்கிழக்கே நிலவும் காற்றுச் சுழற்சி மற்றும் தென்மேற்கு பகுதியில் நிலவும் வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக தற்போது …

  14. இலங்கையின் வீதி வலையமைப்பை புதுப்பிக்கத் தொடங்கும் கூகுள் மேப்ஸ்! இலங்கையின் பிரதான வீதி வலையமைப்பு இப்போது கூகுள் வரைபடத்தில் நிகழ்நேர நிலை எச்சரிக்கைகளால் ஆதரிக்கப்படுகிறது என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இந்தப் புதுப்பிப்பு 12,000 கிலோமீட்டர் பிரதான வீதிகளை உள்ளடக்கியது. மேலும், வீதி மூடல்கள் மற்றும் கட்டுமானப் பணிகள் உட்பட ஆறு வகையான எச்சரிக்கைகளை வழங்குகிறது. பயணிகள் பாதைகளை மிகவும் திறமையாக திட்டமிடவும், எதிர்பாராத தாமதங்களைத் தவிர்க்கவும், வீதிப் பாதுகாப்பை மேம்படுத்தவும் இந்த முன்னோடித் திட்டம் உதவும் என்று அமைச்சர் கூறினார். இது குறித்து எக்ஸில் பதிவிட்ட அமைச்சர். “உங்கள் பயணங்களை சிறப்பாக திட்டமிடவும், நேரத்தை மிச்சப்படுத்தவும், எதிர்பாரா…

  15. பதுளை மாவட்டத்தில் இன்று (09) காலை முதல் மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளதால், மாவட்ட மக்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு பதுளை மாவட்டச் செயலாளர் பண்டுக ஸ்ரீ பிரபாத் அபேவர்தன அறிவுறுத்தியுள்ளார். அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்லாமல், தற்போது தங்கியுள்ள தங்குமிடங்கள் அல்லது தற்காலிக தங்குமிடங்களில் தங்குமாறு மாவட்டச் செயலாளர் மேலும் மக்களுக்கு அறிவுறுத்துகிறார். பதுளை மாவட்டத்தில் சமீபத்திய நாட்களில் ஏற்பட்ட பேரழிவுகளால் சேதமடைந்த வீடுகள் மற்றும் சொத்துக்களின் இடிபாடுகளை மக்கள் இன்னும் தேடி வருவதாகவும், மாவட்டத்தில் மீண்டும் பெய்த கனமழை காரணமாக மண்சரிவு, பாறைகள் மற்றும் மரங்கள் இடிந்து விழும் அபாயம் உள்ளதாகவும், எனவே மக்கள் பாதுகாப்பான…

  16. 02 Dec, 2025 | 09:58 AM இலங்கை முகங்கொடுத்துள்ள பேரிடர் அனர்த்த நிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக, ஐக்கிய அரபு இராஜ்ஜியம் அனுப்பிய முதல் நிவாரண உதவி விமானம் செவ்வாய்க்கிழமை (02) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தை நிலையத்தை வந்தடைந்துள்ளது. குறித்த விமானத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் 48 தற்காலிக கூடாரங்கள், ஒரு குடும்பத்திற்குப் 14 நாட்களுக்கு போதுமான 2,592 உணவு பொதிகள், கூடாரங்கள், மீட்பு படையினருக்கான உபகரணங்கள், கடினமான பாதைகளில் செலுத்தக்கூடிய மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட பெருமளவு நிவாரணப் பொருட்கள் அடங்கியிருந்தன. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் விமானப்படைக்கு சொந்தமான, உலகின் மிகப் பெரிய சரக்கு கொண்டு செல்லும் விமானங்களில் ஒன…

  17. இலங்கையில் உயிர் தப்பிய மாற்றுத்திறனாளி - தற்போது நிலைகுலைந்து போய் உள்ளது ஏன்? படக்குறிப்பு,ரமேஷ் கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் திட்வா புயலின் தாக்கம், இலங்கையில் ஒவ்வொரு நபரையும் ஒவ்வொரு விதமாக பாதித்துள்ளது இவ்வாறு பாதிப்புக்குள்ளானவர்களின் பட்டியலில் ரமேஷ், நவமணிதேவி தம்பதிகளும் அடங்குகின்றனர். கண்டி - போபிட்டிய - பௌலான தோட்டத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் கூலித் தொழிலை தனது வாழ்வாதார தொழிலாக கொண்டிருந்தார். ஒரு நாள் மரமொன்றை வெட்டுவதற்காக சென்ற போது, அவர் வெட்டிய மரமே அவர் மீது வீழ்ந்துள்ளது. இதனால் ரமேஷ் மாற்றுத்திறனாளியானார். மரம் வீழ்ந்தமையினால் முதுகெலும்பு பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், அவரால் எழுந்து நடக்க முடி…

  18. இந்தியா ஓபரேஷன் சாகர் பந்துவின் கீழ், நிவாரணப் பொருட்கள் மற்றும் முக்கியமான பேரிடர் மீட்பு (HADR) ஆதரவை அவசரமாக இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சூறாவளி பேரனர்த்தத்திற்கு உதவுமாறு இலங்கை அரசாங்கம் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், இலங்கையில் வெள்ள நிவாரணப் பணிகளுக்கு இந்தியாவின் ஐஎன்எஸ் விக்ராந்த் ஹெலிகாப்டர்களை அனுப்ப உள்ளது. நிவாரண நடவடிக்கைகள் மேலும், இது தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் இட்டுள்ள பதிவில், "டிட்வா சூறாவளியால் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த இலங்கை மக்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களின் பாது…

  19. 09 Dec, 2025 | 05:21 PM இந்திய இராணுவத்தினரின் உதவியுடன் புனரமைக்கப்பட்டு வரும் பாலத்தினை யாழ் இந்தியத் துணைத்தூதுவர் சாய் முரளி பார்வையிட்டார். பரந்தன் முல்லைத்தீவு A-35வீதியின் பதினோராவது கிலோமீற்றரிலுள்ள பாலமானது கிளிநொச்சி மாவட்டத்தின் வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இந்திய இராணுவத்தினரின் பங்களிப்புடன் இலங்கை இராணுவம் ,வீதி அபிவிருத்தி அதிகார சபை இணைந்து புனரமைப்பு பணியில் இரண்டாவது நாளாக ஈடுபட்டுவருகின்ற நிலையில் யாழ் இந்தியத்துணைத்தூதுவர் சாய் முரளி உள்ளிட்ட குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (09) பார்வையிட்டனர். இதன்போது யாழ் இந்தியத்துணைத்தூதுவர் சாய் முரளி அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், ஒப்ரேஷன் சாகர் பந்து நடவடிக்கைய…

  20. 09 Dec, 2025 | 05:35 PM பறங்கி, பாலி ஆறு வெள்ளம் தொடர்பான முன்னெச்சரிக்கை ஒன்றை மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு சற்றுமுன் விடுத்துள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக வவுனியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினால் பேராறு குளத்தின் பாதுகாப்பு கருதி வான் கதவு ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை (9) திறக்கப்பட்டுள்ளது. இதனால் மன்னார் மாவட்ட மாந்தை மேற்கு பிரதேசத்தினுடாக செல்லும் பறங்கி ஆறு, சிப்பி ஆறு மற்றும் பாலி ஆறு ஆகியவற்றின் நீர்மட்டம் குறிப்பிட்ட அளவு உயர்வதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே ஆற்றின் தாழ்நில பிரதேசங்களான சீது விநாயகர், கூராய், தேவன்பிட்டி, ஆத்திமோட்டை, அந்தோணியார்புரம், பாலி ஆறு ஆகிய பகுதிகளில் வாழும் மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்கவும். கால்நட…

  21. 27 Nov, 2025 | 05:14 PM இலங்கைக்குக் அருகில் வங்காள விரிகுடாவில் உருவான ஆழ்ந்த தாழ் காற்றழுத்தம், இன்று (27) சில நேரங்களுக்கு முன் வலுவடைந்து சூறாவளியாக மாறியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த புதிய சூறாவளிக்கு "டித்வா"(Ditwah) என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் பெயர் யேமன் நாட்டினால் பரிந்துரைக்கப்பட்டது. யேமனில் உள்ள சொகோத்ரா தீவின் பிரசித்தி பெற்ற டிட்வா லகூனை குறிக்கும் இந்தப் பெயர், அப்பகுதியின் தனித்துவமான கடல்சார் மற்றும் கரையோர சுற்றுச்சூழலை வெளிப்படுத்துகிறது. உலக வானிலை அமைப்பு (WMO) மற்றும் ஐ.நா. ESCAP ‘புயல்கள் தொடர்பான குழு’ முன்பே அங்கீகரித்துள்ள நாடுகளின் பெயர் பட்டியலிலிருந்து சூறாவளிகளுக்கான பெயர்கள் தேர்வு செய்யப்படுகின்றன. இந்தப் பட்டியலி…

  22. உயர் தரப்பரீட்சையின் இரண்டாம் கட்டம் ஜனவரியில் Dec 9, 2025 - 04:35 PM கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் நடத்தப்படாது எஞ்சியுள்ள பாடங்களுக்கான பரீட்சைகளை எதிர்வரும் ஜனவரி 12 ஆம் திகதி முதல் மீண்டும் நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமையினால் உயர் தரப் பரீட்சை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது. அதேநேரம் ஏனைய வகுப்புகளுக்கான மூன்றாம் தவணை பரீட்சை நடத்தப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் கல்வி பொது தராதர சாதாரண தர மாணவர்களுக்காக மாத்திரம் மூன்றாம் தவணை பரீட்சை இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmiyh4l2e02k9o29ngoalfbok

  23. அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை! 09 Dec, 2025 | 11:52 AM நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். நுவரெலியாவில் அனர்த்தத்தினால் ஏற்பட்ட சேதங்களையும் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களையும் பார்வையிட சென்றிருந்த போதே இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ஊடகங்களுக்கு மேலும் தெரிவிக்கையில், அனர்த்தத்தினால் பல ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்ற…

  24. “டித்வா” சூறாவளியால் காணாமல் போனோர் மற்றும் உயிரிழந்தோரின் இறப்புப் பதிவு ஆரம்பம் “டித்வா” சூறாவளி நிலைமை காரணமாக ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்த அல்லது காணாமல் போன நபர்களின் இறப்பைப் பதிவு செய்வதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவிக்கிறது. அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்தத் திணைக்களம், இந்த அனர்த்தத்தினால் எவரேனும் ஒரு நபரின் உறவினர் அல்லது நண்பர்கள் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருப்பின், அத்தகைய காணாமல் போன நபர்களின் இறப்பைப் பதிவு செய்வதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டுகிறது. தேசிய அனர்த்தப் பகுதிகள், நிர்வாக மாவட்டங்கள் அடிப்படையில் இறப…

  25. வெளிநாட்டு உதவிகளை ஒருங்கிணைக்க தேசியக் குழு நியமனம் Dec 8, 2025 - 03:52 PM பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கிடைக்கும் வெளிநாட்டு உதவிகளை முறையாக ஒருங்கிணைத்து, உரிய நபர்களுக்கு வழங்குவதற்காக தேசிய அளவிலான குழு ஒன்றை ஜனாதிபதி நியமித்துள்ளார். இன்று (08) இடம்பெற்ற அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் விசேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பாதுகாப்பு பிரதி அமைச்சர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர இதனை தெரிவித்தார். வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் உதவிகள் மற்றும் உபகரணங்கள் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சரியாகக் கிடைப்பதை இந்தக் குழு உறுதி செய்யும் எனவும் அவர் தெரிவித்தார். இந்தக் குழுவின் தலைவராக பாதுகாப்பு பிரதி அமைச்சர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜெ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.