Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வயம்ப தேசிய கல்வியியல் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை (23) மாலை தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வயம்ப தேசிய கல்வியியல் கல்லூரியின் விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்று வந்த களுத்துறை - வெலிகெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த மாணவி தனது கல்லூரி விடுதியினுள் தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக பிங்கிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். மன உளைச்சலுக்குள்ளாகி மாணவி உயிரை மாய்த்துக்கொண்டிருக்கலாம் என மாணவியின் பெற்றோர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். மாணவி உயிரை மாய்த்துக்கொண்டமைக்கான காரணத்தை கண்டறிய கல்வி அமைச்சினால் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு…

  2. அறுகம் குடாவில் ‘பிகினி ஆடைக்கு தடை’ – பொலிஸார் மறுப்பு May 26, 2025 2:57 pm இலங்கையின் பிரபல கடலோர சுற்றுலா தலமான அறுகம் குடாவில் பொது இடங்களில் பிகினி (நீச்சல் உடை) அணிய தடை விதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை பொலிஸார் மறுத்துள்ளனர். “அறுகம் குடாவில் உள்ள உள்ளூர் சமூக மக்கள்” என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஒரு குழுவால் வெளியிடப்பட்ட ஒரு பதிவைத் தொடர்ந்து வார இறுதியில் சர்ச்சை ஏற்பட்டிருந்தது. சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்ட இந்தப் பதிவு, “உள்ளூர் கலாச்சாரத்தை மதிக்க” பொது இடங்களில் பிகினி அணிவதைத் தவிர்க்குமாறு சுற்றுலா பயணிகளிடம் வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு சுற்றுலாப் பயணிகள் மத்தியில் குழப்பத்தையும் ஏற்படுத்தியது. “அறுகம் குடாவிற்…

  3. இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுப்பதற்கும், மீன்பிடி என்ற போர்வையில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தல்களை முறியடிப்பதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கடற்படையினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சுக்கும், பாதுகாப்பு அமைச்சுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று நாடாளுமன்ற வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே, இரு அமைச்சுகளினதும் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் கடற்படை தளபதி உள்ளிட்டோரும் பங்கேற்றிருந…

  4. 26 May, 2025 | 06:53 PM யாழ். வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் பெண் ஒருவரிடம் 27 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாவை கனடா வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறி மோசடி செய்த மற்றொரு பெண் நேற்று கைது செய்யப்பட்டார். 2023ஆம் ஆண்டு, கட்டைக்காடு பகுதியில் வசிக்கும் பெண் ஒருவரிடம், அவரது கணவரை கனடாவிற்கு அனுப்புவதாக கூறி சந்தேகநபர் பணத்தை பெற்றுக்கொண்டார். பின்னர் தொடர்பை துண்டித்ததையடுத்து தாம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக உணர்ந்த பாதிக்கப்பட்ட பெண், பண பரிமாற்றம் செய்யப்பட்டமைக்கான அனைத்து ஆதாரங்களுடன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர், 2024ஆம் ஆண்டு சந்தேக நபருக்கு கிளிநொச்சி நீதிமன்றத்தால் பயணத்தடை விதிக்கப்பட்டதுடன் பிடிய…

  5. உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் நியமனத்தில் குளறுபடி கட்சிக்குள் சஜித்துக்கு எதிராக போர்க் கொடி!; தொகுதி அமைப்பாளர்கள் பலரும் தொடர்ச்சியாக இராஜினாமா உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர் நியமனத்தில் ஏற்பட்ட குளறுபடிகளால், ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர்கள் தொடர்ச்சியாக தங்களது பதவிகளை இராஜினாமா செய்து வரும் நிலையில் கட்சியின் தலைமைக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, பண்டாரவளை தொகுதி அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, ஹொரவபொத்தானை தொகுதி அமைப்பாளர் அனுர புத்திக, தம்புள்ள தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி சம்பக விஜேரத்ன, இறத்தொட்டை தொகுதி அமைப்பாளர் மற்றும் பிரதி தேசிய அமைப்பாளர் ரஞ்சித் அலுவிஹார, நுவரெலியா மாவட்ட இணை அமைப்ப…

  6. ACTC – ITAK பெரும்பான்மை பெற்ற இடங்களில் அக்கட்சிகளுக்கு DTNA ஆதரவு! adminMay 26, 2025 அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழரசுக் கட்சிகள் பெரும்பான்மை பெற்ற இடங்களில் அக்கட்சிகள் ஆட்சி அமைக்கவே ஆதரவு என ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் வவுனியாவில் நேற்று (25.05.25) இடம்பெற்ற பின்னர் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் இடம்பெற்றது. அடுத்த மாதம் நடைபெறவுள்ள சபைகள் தொடர்பாக ஆராய்நதோம். வடக்கு – கிழக்கு மாகாணங்களில் தமிழ் தேசியப் பரப்பில் இருக்கும் கட்சிகள் ஆட்சியமைக்க வேண்டும் என்று…

  7. Published By: DIGITAL DESK 2 25 MAY, 2025 | 10:08 AM (நா.தனுஜா) காணி உரிமையாளர்கள் அவற்றுக்கு உரிமைகோருவதற்கு என்ன செய்யவேண்டும் என்பது குறித்து இலவச சட்ட ஆலோசனை வழங்கும் நோக்கிலான கூட்டமொன்று இன்றைய தினம் காலை 9மணிக்கு வெற்றிலைக்கேணியில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், அக்கூட்டத்தில் கலந்துகொண்டு காணி உரிமைகோரல் தொடர்பில் அவசியமான சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுமாறும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அழைப்புவிடுத்துள்ளார். அரசாங்கத்தினால் காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் 4 ஆம் பிரிவின்கீழ் 28.03.2025 ஆம் திகதியிடப்பட்டு, 2430 இலக்கமிடப்பட்டு பிரசுரிக்கப்பட்டிருக்கும் வர்த்தமானி அறிவித்தலில் வடக்கு மாகாணத்தில் மொத்…

  8. Published By: DIGITAL DESK 2 24 MAY, 2025 | 11:33 AM மட்டக்களப்பு, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள ஆலையடிவேம்பு பிரதேசத்தில் ஆசிரியர் மற்றும் அதிபர் ஆகியோர் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஆலையடிவேம்பு பிரதேசத்தில் விசேட பயிற்சி செயலமர்வு தொடர்பாக பாடசாலை மாணவி ஒருவருக்கு அறிவிப்பதற்காக அவரது வீட்டுக்குச் சென்ற ஆசிரியர் மற்றும் அதிபரே இவ்வாறு வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளனர். வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்ட நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் வெள்ளிக்கிழமை (23) மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஆலையடிவேம்ப…

  9. பிரபல சிங்கள நடிகை மாலினி பொன்சேகா காலமானார்! இலங்கை சினிமாவின் ராணி என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற நடிகை மாலினி பொன்சேகா இன்று (24) காலை காலமானார். அவர் கொழும்பில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (24) உயிழந்துள்ளார். ஏழு தசாப்தங்களாக நடித்து வந்த மூத்த நடிகையான இவர், 1968 இல் திஸ்ஸ லியன்சூரியவின் “புஞ்சி பபா” என்ற திரைப்படத்துடன் இலங்கைத் திரைப்படத்துறையில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். தொடர்ந்து பல்வேறு விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளதுடன் ஏப்ரல் 2010 இல், மாலினி பொன்சேகா ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நாடாளுமன்றத்திற்கும் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://at…

  10. யாழில் பெருந்தொகை பணம் மோசடி! யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் குடும்ப பெண்ணிடம் வெளிநாடு அனுப்புவதாக கூறி 27 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாவை மோசடி செய்த பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், வடமராட்சி கிழக்கு கட்டைக்காடை சேர்ந்த ரமேஷ் பிரேமா என்னும் குடும்ப பெண்ணிடம் அவரது கணவரை கனடா அனுப்புவதாக கூறி பெண் ஒருவர் 27 இலட்சத்தி 80 ஆயிரம் ரூபாவை 2023ம் ஆண்டு பெற்றுள்ளார். அதன் பின் அவரது தொடர்பு துண்டிக்கப்பட்டதுடன் தாம் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த குடும்ப பெண் காசு பரிமாற்றம் செய்யப்பட்டமைக்கான அனைத்து ஆதாரங்களுடன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்ததன் பிரகாரம், 2024ஆம் ஆண்டு சந்தேக நபருக்கு கிளிநொச்சி நீதிமன்றம் பயணத்தடை வித…

  11. இலங்கையில் சிக்குன்குனியா – பிரித்தானியா பயண எச்சரிக்கை இலங்கையில் சிக்குன்குனியா நோய் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், பிரித்தானியா அரசாங்கம் தமது நாட்டு பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, இலங்கை செல்லும் பிரித்தானிய பிரஜைகள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அந்நாட்டு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. மே 23ஆம் திகதி தனது பயண எச்சரிக்கையை புதுப்பித்துள்ள பிரித்தானியா அரசாங்கம் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளது. இதேவேளை, நாட்டில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, கடந்த 20 ஆண்டுகளில் பதிவாகாத அளவில் இலங்கையில் தற்போது குறிப்பிடத்தக்க அளவில் சிக்குன்குனியா நோய் பரவல் அதிகரி…

  12. தமிழ் இன அழிப்பு போன்ற கருத்துகள் பகிரப்பட்டால் இனி சட்டம் பாயும் , அரசாங்கம் எச்சரிக்கை. இலங்கையில் தமிழ் இன அழிப்பு இடம்பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரிப்பதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். கனடாவில் பிரிம்டன் நகர சபைக்கு உட்பட்ட பகுதியொன்றில் தமிழின அழிப்பு தொடர்பாக அமைக்கப்பட்ட நினைவுத் தூபி தொடர்பில் நேற்று செவ்வாய்க்கிழமை தனியார் தொலைக்காட்சியொன்றில் கருத்து வெளியிட்ட அவர், ”இலங்கையில் தமிழ் இன அழிப்பு இடம்பெற்றதாக கூறும் குற்றச்சாட்டுகளை அரசாங்கம் முற்றாக நிராகரிக்கிறது. கனடாவின் பிரிம்டன் நகர சபையின் அனுசரணையுடன் அமைக்கப்பட்டுள்ள குறித்த நினைவுத் தூபிக்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்துகிறோம். முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிய…

  13. தேர்தல் செலவு அறிக்கைகளை சமர்பிக்காதவர்கள் மீது சட்ட நடவடிக்கை! உள்ளூராட்சித் தேர்தலுக்கான செலவு அறிக்கைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி நள்ளிரவுக்குள் சமர்ப்பிக்காத வேட்பாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்காத வேட்பாளர்களின் விபரங்கள் குறித்த திகதிக்குப் பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பொலிஸ் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்று வேட்பாளர்கள் மீது வழக்குத் தொடரப்படும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1433137

  14. 18 APR, 2025 | 01:59 PM டெங்கு காய்ச்சல் காரணமாக இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 5 பேர் உயிரிழந்ததோடு, 14,678 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதில், அதிகளவான டெங்கு நோயாளர்கள் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலேயே பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது நாட்டில் டெங்கு நோய்ப் பரவல் அதிகரித்து வருவதனால் இவ்வார இறுதியில் பிராந்திய மட்டத்தில் டெங்கு ஒழிப்புத் திட்ட செயற்பாடுகளை பாடசாலைகளில் முன்னெடுக்கவுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் 2024ஆம் ஆண்டில் மொத்தமாக 49,870 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/…

  15. 24 MAY, 2025 | 01:05 PM கிளிநொச்சி, பூநகரி பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோத கடைகளை அகற்ற சென்ற பூநகரி பிரதேச சபை செயலாளர் உள்ளிட்ட அரச உத்தியோகஸ்தர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் - மன்னார் பிரதான வீதியில் நாச்சிக்குடா சந்திக்கு அருகாமையில் உள்ள அரச காணிகளுக்குள் வியாழக்கிழமை (22) இரவு அனுமதியற்ற முறையில் தற்காலிக கடைகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் சில இரும்பினால் ஒட்டப்பட்ட கடைகளாகவும் காணப்பட்டுள்ளன. இது தொடர்பில் தகவல் அறிந்த பிரதேச சபை செயலாளர், வருமான வரி பரிசோதகர் உள்ளிட்ட அரச உத்தியோகஸ்தர்கள் குறித்த இடத்திற்கு சென்று அனுமதியற்ற கட…

  16. Published By: DIGITAL DESK 2 25 MAY, 2025 | 09:57 AM (இராஜதுரை ஹஷான்) இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மதம், அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக நிலைகளிலான இருதரப்பு தொடர்புகள் மேலும் பலமடைய வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன். பழைய நண்பரின் வருகை கடந்த காலங்களை நினைவுபடுத்தியுள்ளமை மகிழ்ச்சிக்குரியது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரால் (ஓய்வுநிலை)பஹீம் உல் அசீஸிடம் நன்றி தெரிவித்தார். இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரால் (ஓய்வுநிலை)பஹீம் உல் அசீஸ் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சிநேகபூர்வமான சந்திப்பு அண்மையில் கொழும்பில் உள்ள விஜேராம மாவத்தை உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்…

  17. 25 MAY, 2025 | 12:26 PM (நா.தனுஜா) அண்மையில் நடைபெற்றுமுடிந்த உள்ளுராட்சிமன்றத்தேர்தல்களின் அடைந்த பின்னடைவை அடுத்து, வெகுவிரைவில் மாகாணசபைத்தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் விரும்பாது எனவும், ஆகவே அதனைத் தொடர்ந்து இழுத்தடிப்புச்செய்து காலதாமதப்படுத்துவதற்கே முற்படும் எனவும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும், வடமாகாண முன்னாள் முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனால் தனிநபர் சட்டமூலமொன்றை சமர்ப்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டு கடந்த வியாழக்கிழமை (22) வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை மாகாணசபைத்தேர்தலை நடத்துவதற்கு அமைச்சு மட்…

  18. Published By: DIGITAL DESK 2 25 MAY, 2025 | 12:27 PM யாழ்ப்பாண பல்கலைக்கழக பட்டப்பின் படிப்புகள் பீடத்தின் வெள்ளி விழாவை ஒட்டிய நடைபவனி ஞாயிற்றுக்கிழமை (25) நடைபெற்றது. இந்த நடைபவணியானது, திருநெல்வேலியில் அமைந்துள்ள பட்டப்பின் படிப்புகள் பீட முன்றிலில் ஆரம்பமாகி யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான நுழைவாயில் பிறவுன் வீதி மருத்துவ பீடம் ஊடாக மீண்டும் பல்கலைக்கழகத்தை அடைந்தது. நிகழ்வில் முக்கிய இடங்களில் மரம் நடுகையும் மேற்கொள்ளப்பட்டது. யாழ்ப்பாண பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் ஸ்ரீ சற்குணராஜா பட்டப்பின் படிப்புகள் பீட பீடாதிபதி பேராசிரியர் தி.வேல்நம்பி முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் கண்ணதாசன் மற்றும் பீடாதிபதிகள் துறைத்தலைவர்கள் பேராசிரியர்கள் அலுவலர்கள் பழைய மாணவர்கள்…

  19. 25 MAY, 2025 | 03:36 PM எனது தம்பி வெளிநாடு செல்ல வேண்டும் என்பது எமது அம்மாவின் ஆசை. அம்மாவின் ஆசையை நிறைவேற்றி, அம்மாவின் ஆத்மா ஈடேற வேண்டும் என்பதற்காகவும், எமது வீட்டுச் சுமைகளையும் பொறுப்பேற்றுக் கொண்டுதான் எனது தம்பி தொழில் வாய்ப்புக்காக சென்றிருந்தார். பெலாரஸ் நாட்டிற்கு தொழில் வாய்ப்புக்காக சென்ற எனது தம்பியான விநாயகமூர்த்தி பகிரதனுக்கு என்ன நடந்தது என்பது இதுவரை தெரியவில்லை என அவரது சகோதரன் விநாயகமூர்த்தி சசிகரன் தெரிவித்துள்ளார். அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், எனது தம்பி விநாயகமூர்த்தி பகிரதன் என்பவர் எனது வீட்டில் இருந்து கடந்த 2025.01.07 ஆம் திகதி …

  20. 25 MAY, 2025 | 09:57 AM நியூசிலாந்தின் துணைப் பிரதமரும் வெளியுறவுத்துறை அமைச்சருமான வின்சென்ட் பீட்டர்ஸ் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சனிக்கிழமை (24 ) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். நியூசிலாந்தின் துணைப் பிரதமரும் வெளியுறவுத்துறை அமைச்சருமான வின்சென்ட் பீட்டர்ஸுடன் 4 பேர் அடங்கிய குழுவினரும் வருகை தந்துள்ளனர். அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சனிக்கிழமை (24) இரவு 11 மணியளவில் குறித்த குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். அவர்கள் இலங்கைக்கான விஜயத்தை நிறைவு செய்துகொண்டு எதிர்வரும் 28 ஆம் திகதி மீண்டும் நியூசிலாந்து திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/…

  21. பாடசாலை மாணவர்களை தாக்கிய பாடசாலை முதல்வருக்கு பிணை! 11 மாணவர்களை பிரம்பால் தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பாடசாலை முதல்வரான பௌத்த துறவியை தலா ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல அம்பாறை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார். அம்பாறை நகர பாடசாலை ஒன்றில் கடந்த மே 16 ஆந் திகதி மாலை தரம் 5 மாணவர்கள் 11 பேரின் பெற்றோர்கள் பாடசாலை அதிபரான பௌத்த துறவி தமது பிள்ளைகளை கொடூரமாகத் தாக்கியதாக குற்றச்சாட்டினை முன்வைத்திருந்தனர். இதற்கமைய அம்பாறை வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் குறித்த மாணவர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மெற்கொண்டதுடன் தாக்குதலினால் பாதிக்கப்பட்…

  22. 2 வருடமாகியும் புனரமைக்காத மகிழவெட்டுவான் பாலம்; அரசியல்வாதிகள் வந்தால் கட்டிப்போடுவோம் என பொதுமக்கள் சீற்றம் கனகராசா சரவணன் வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மகிழவெட்டுவான் பாலம் உடைந்து வீழ்ந்துள்ளது. இதனால் 2 வருடமாக மட்டக்களப்புக்கும் மகிழவெட்டுவான் பிரதேசத்துக்கும் இடையிலான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதையடுத்து பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் பிரயாணம் செய்ய முடியாது பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோகி வருவதாகவும் இதுவரை அரசியல்வாதிகள் அரச அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை என பொதுமக்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர். மகிழவெட்டுவான் நரிப்புதோட்டம், கல்குடா, நெல்லூர் பிரதேசங்களில் இருந்து மட்டக்களப்பு நகருக்கு செல்லும் பிரதான வீதியிலுள்ள மகிழவெட்டுவான் பாலம் க…

  23. நோர்வே ஆய்வுக் கப்பலுக்கு அனுமதி மறுப்பு ; தடைக்காலம் தொடர்வதாக அரசாங்கம் விளக்கம் 25 May, 2025 | 09:55 AM (லியோ நிரோஷ தர்ஷன்) நோர்வே நாட்டு ஆய்வுக் கப்பலான டாக்டர் ப்ரிட்ஜோப் நான்சன் என்ற ஆய்வுக்கப்பல் இலங்கை விஜயத்திற்கு அனுமதி கோரிய நிலையில், அந்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது. உலக நாடுகளின் ஆய்வுக் கப்பல்கள் இலங்கைக்கு வருவதை மையப்படுத்தி ஏற்பட்ட புவிசார் அரசியல் நெருக்கடி மற்றும் இராஜதந்திர அழுத்தங்கள் என்பவற்றின் அடிப்படையில் குறுகிய காலத்திற்கு ஆய்வுக் கப்பல்களுக்ககு தடைக்காலம் விதிக்கப்பட்டுள்ளது. அந்த தடைக்காலத்தை மேற்கோள்காட்டியே நோர்வே ஆய்வுக் கப்பலுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். டாக்டர் ப்ரிட்ஜோப் நான்சன் …

  24. வடக்கு, கிழக்கு மக்களின் காணிகளை கையகப்படுத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை! adminMay 24, 2025 வடக்கு, கிழக்கு மக்களின் காணிகளை கையகப்படுத்தும் எந்த எண்ணமும் அரசாங்கத்திற்கு இல்லை என்றும், காணிகளின் உரிமைகளைக் கொண்டுள்ள மக்களுக்கு உடனடியாக காணிகளை கையளிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் காணி உரிமைப் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பாக பாராளுமன்றத்தின் குழு அறை 1 இல் நேற்று (23.05.25) நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இவ்வாறு தெரிவித்தார். இதுவரை காலமும் வடக்கு மற்றும் கிழக்கில் நில உரிமைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு …

  25. புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலய நிர்வாக சபையினருக்கு எதிராக கவனயீர்ப்புப் போராட்டம்! புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலய நிர்வாக சபையினருக்கு எதிராக இன்று பொது மக்கள் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். இன்று முற்பகல் வேலணை பிரதேச செயலகத்திற்கு முன்பாக புங்குடுதீவு மக்களால் இந்த போராடம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள், தற்போதய நிருவாகம் உடன் கலைக்கப்பட்டு புதிய நிருவாகம் அமைக்கப்பட வேண்டும் எனவும் எனத் தெரிவித்திருந்ததோடு, கோவில் ஆன்மீக தலமா வியாபார நிலையமா? எனவும் கேள்வி எழுப்பியிருந்தனர். அத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களால் பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது கருத்து தெரிவித்த பிரத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.