ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143491 topics in this forum
-
உயிர்த்தஞாயிறு தாக்குதலில் மறைப்பதற்கு எதுவுமில்லை; பொறுப்புக்கூற வேண்டிய அதிகாரிகள் எமது அரசாங்கத்திலிருந்தாலும் நடவடிக்கை என்கிறார் பிரதமர் ஹரிணி அமரசூரிய 25 JUL, 2025 | 03:38 PM (எம்.ஆர்.எம்.வசீம்) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணையை நாங்கள் முன்னெடுத்துச்செல்வோம். அதில் மறைப்பதற்கு எங்களுக்கு ஒன்றும் இல்லை. அனைத்து விடயங்களையும் முன்வைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுப்போம். அதேநேரம் தாக்குதலுக்கு பொறுப்புக்கூற வேண்டிய அதிகாரிகள் எமது அரசாங்கத்துக்கு கீழ் இருக்குமானால், அவர்களுக்கும் சட்டத்தை ஒரேமாதிரி யாக செயற்படுத்த நடவடிக்கை எடுப்போமென பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (25) வாய்மூல விடைக்…
-
- 0 replies
- 146 views
- 1 follower
-
-
பால் போத்தலுடன் காணப்பட்ட குழந்தையின் எலும்புக் கூடு அகழ்ந்தெடுப்பு : இதுவரை செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் 81 மனித எலும்புக்கூடுகள் மீட்பு! Published By: VISHNU 25 JUL, 2025 | 08:03 PM செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இதுவரை 81 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழி அகழ்வு தொடர்பாக வெள்ளிக்கிழமை (25) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி மனித புதைகுழியில் வெள்ளிக்கிழமை இரண்டு மனித எலும்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டன. அத்துடன் ஏற்கனவே 76 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெக்கப்பட்டிருந்தன. வெள்ளிக்கிழமை (25) புதிதாக ஐந்து மனித எலும்ப…
-
- 2 replies
- 194 views
- 1 follower
-
-
ஆகஸ்ட் 2 - வீரவணக்க நாள்! விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த போராளிகள் சிலர், ஐரோப்பிய நாடுகளிலிருந்து இரண்டு நாள்களுக்கு முன்னால் என்னிடம் தொலைபேசியில் உரையாடினர்! தமிழ் ஈழத்திற்காகவும், அந்த மண்ணின் விடுதலைக்காகவும், தொடர்ந்து பல ஆண்டுகள் களத்தில் நின்று, பெரும்படை திரட்டிப் போராடி, உலக வரலாற்றில் ஒரு புதிய சரித்திரத்தைப் படைத்த தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் வீரச் சாவிற்கு வரும் ஆகஸ்ட் 2 அன்று, சுவிட்விசர்லாந்தில் மிகப்பெரும் அளவில் வீரவணக்க நாள் கூட்டம் நடத்த இருப்பதாகவும், அதற்கு உலகத் தமிழர்கள் அனைவரின் ஆதரவும் வேண்டும் என்றும் கூறினார்கள்! மாவீரர்களுக்கும் மரணம் உண்டு! ஆனால் அது மற்றவர்களின் மரணத்தைப் போன்றதன்று! தன் நாட்டிற்காகவும், மக்களுக்காகவும் த…
-
- 0 replies
- 152 views
-
-
புதிய அரசியலமைப்புக்கான முதற்கட்ட பணிகள் ஆரம்பம் - பிரதமர் Published By: Vishnu 26 Jul, 2025 | 02:24 AM (எம்.ஆர்.எம்.வசீ்ம்) புதிய அரசியலமைப்புக்கான ஆரம்பகட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எமது ஆட்சி காலத்துக்குள் புதிய அரசியலமைப்பு திருத்தங்களை மேற்கொள்வோமென பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (25) வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில், புதிய அரசிலமைப்பு திருத்தம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் அஜித் பி பெரேரா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், புதிய அரசியலமைப்பு ஒன்று நாட்டுக்கு தேவையாகும். அது இந்த நாட்டின் அடிப்படை சட்டமாகும். அதனால் அதில் திருத்தம் ம…
-
- 0 replies
- 149 views
-
-
10 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் - 62 வயது முதியவர் கைது செய்திகள் யாழ்ப்பாணம், வேலணை, துறையூர் பகுதியில் 10 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்திய சந்தேகத்தின் பேரில் 62 வயது கடை உரிமையாளர் ஒருவர் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை (19) அன்று, துறையூர் கடற்றொழில் சங்கத்திற்கு அருகிலுள்ள கடைக்கு சிறுமி ஜூஸ் வாங்கச் சென்றபோது, கடை உரிமையாளர் சிறுமியை குளிரூட்டிக்குள் ஜூஸ் எடுக்குமாறு கூறி, அவர் ஜூஸ் எடுக்க முற்பட்டபோது பின்புறமாக கட்டியணைத்து பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். பதற்றத்துடன் வீடு திரும்பிய சிறுமி, இச்சம்பவத்தை தனது தாயாருக்கு தெரிவித்தார். ஆனால், சமூகம் மற்றும் அயலவருக்கு அஞ்சிய தாயார், முதலில் பொலிஸ் முறைப்பாடு செய்…
-
- 0 replies
- 101 views
-
-
வடக்கு கிழக்கில் ஆரம்பமாகும் பாரிய போராடடம்! சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள 8 மாவட்டங்களிலும் இன்றைய தினம் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் எட்டு மாவட்டங்களிலும் காலை 10 மணிக்கு இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது. இலங்கையில் மனித குலத்திற்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பாக எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் எடுக்கப்படும் இலங்கை தொடர்பான தீர்மானத்தை வலுப்படுத்தும் வகையில் இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடம்பெறவுள்ள …
-
- 0 replies
- 77 views
-
-
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 400 மில்லியன் ரூபா மதிப்புள்ள போதைப்பொருட்களுடன் 52 வயது கனடா பிரஜை ஒருவர் இன்று (25) காலை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். குறித்த சந்தேகநபர், கனடாவின் ஒன்ராறியோவைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. சந்தேகநபர் கனடாவிலிருந்து கட்டாரின் தோஹா வழியாக கட்டுநாயக்கவிற்கு வந்திருந்தார். சந்தேகநபரின் பயணப் பொதிகளை சோதனையிட்டபோது, அதில் 12 கிலோ 196 கிராம் ஹஷீஷ் மற்றும் 5 கிலோ 298 கிராம் கொக்கேய்ன் ஆகிய போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு மேற்கொண்டு வருகிறது. https://adaderanatamil.lk/news/cmdi5df…
-
-
- 2 replies
- 280 views
- 1 follower
-
-
98 பாடசாலைகளில் ஒரு மாணவனும் இல்லை: புட்டு புட்டு வைத்தார் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் தற்போது உரையாற்றிக் கொண்டிருக்கும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பாடசாலைகளின் தற்போதைய நிலவரம் தொடர்பில் புள்ளி விபரங்களுடன் புட்டு புட்டு வைத்தார். 98 பாடசாலைகளில் ஒரு மாணவனும் இல்லை. 115 பாடசாலைகளில் 10 மாணவர்களுக்கு குறைவு, 20 மாணவர்களுக்கு குறைவான பாடசாலை 406 உள்ளன. 30 மாணவர்களுக்கு குறைவான பாடசாலை 752 உம் உள்ளன. அத்துடன், 40 மாணவர்களுக்கு குறைவான உள்ள பாடசாலைகளின் எண்ணிக்கை 1141 என்னும், 50 மாணவர்களுக்கு குறைவான பாடசாலைகளின் எண்ணிக்கை 1506 ஆகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். நாட்டின் மொத்த பாடசாலைகளின் 15 சதவீதமான பாடசாலைகளில் 50 மாணவர்களுக்கு குறைவாக உள்ளனர். 100 மாணவர்களுக்…
-
- 1 reply
- 179 views
- 1 follower
-
-
20 JUL, 2025 | 09:12 AM நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா ஜுலை 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையி, மஹோற்சவ ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடலொன்று நேற்று சனிக்கிழமை (19) யாழ். மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இடம்பெற்றது. யாழ். மாநகர முதல்வர், யாழ் மாநகர சபை ஆணையாளர் ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் பல்வேறு தீர்மானங்கள் எட்டப்பட்டது. குறித்த தீர்மானங்களின் படி, ஜுலை 27 ஆம் திகதி நள்ளிரவில் இருந்து நல்லூர் ஆலய சுற்றுவீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு ஓகஸ்ட் 24 ஆம் திகதி வைரவர் சாந்தி நிறைவடைந்த பின்னர் நள்ளிரவே திறந்து விடப்படும். வீதி மூடப்பட்டிருக்கும் சமயங்களில் பருத்தித்துறை வீதி வழியாக…
-
- 2 replies
- 184 views
- 1 follower
-
-
வடகிழக்கில் நாளை இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரி போராட்டம் - கொழும்பில் ஐநா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் 25 JUL, 2025 | 01:23 PM நீண்டகாலமாக தமிழ் மக்கள் மீது திட்டமிடப்பட்டவகையில் நடாத்தப்பட்டு வரும் இன அழிப்பிற்கு சர்வதேசநீதி கோரிய போராட்டமானது வடக்குகிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் வடக்குகிழக்கின் 8 மாவட்டங்களிலும் எதிர்வரும் 26ம் திகதி சனிக்கிழமை காலை பத்து மணிக்கு நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மட்டக்களப்பு காந்தி பூங்கா, அம்பாறை திருக்கோயில், திருகோணமலை சிவன் கோயிலடி , முல்லைத்தீவில் மாவட்ட செயலகம், கிளிநொச்சி கந்தசாமி கோயில், மன்னார் நகரப்பகுதி வவுனியா புதிய பேருந்து நிலையம் யாழ்ப்பாணம் செம்மணியிலும் நடைபெறவுள்ளது. உண்மைக்கும் நீத…
-
- 2 replies
- 192 views
- 1 follower
-
-
கன்னியா வெந்நீர் ஊற்று ஆலயத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய பிக்கு; காலக்கெடு விதித்தும் மிரட்டல் திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று சிவன் ஆலயத்தில் நேற்று வியாழக்கிழமை,ஆடி அமாவாசை பிதிர்க்கடன் தீர்க்கும் கடமைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு பௌத்த பிக்கு ஒருவர் காலக்கெடு விதித்ததுடன்,அங்கு பெரும் குழப்பத்தையும் ஏற்படுத்தினார். கன்னியா வெந்நீர் ஊற்று சிவன் ஆலயத்தில் நேற்று வியாழக்கிழமை ஆடி அமாவாசை தீர்த்தமும், பிதிர் தர்பண நிகழ்வும் இடம்பெற்றது. இதில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு பிதிர் தர்ப்பண வழிபாட்டிலும் தீர்த்த உற்சவத்திலும் ஈடுபட்டு தமது முன்னோர்களுக்கான கடமையை நிறைவேற்றியிருந்தார்கள். இந்த நிகழ்வானது நிறைவு பெறும் தறுவாயிலில் அங்கு இருந்த பூசைப் பொருட்கள் மற்…
-
- 1 reply
- 197 views
-
-
வவுனியா வடக்கு, கரப்புக்குத்தி பகுதியில் இரண்டு யானைகள் கிணற்றில் வீழ்ந்த நிலையில் ஒரு யானை உயிருடன் மீட்கப்பட்டுள்ளதுடன் மற்றைய யானை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. குறித்த பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற விவசாய கிணறு ஒன்றில் யானைகள் தவறி வீழ்ந்துள்ளதாக அந்த பகுதியை சேர்ந்த கிராம அலுவலருக்கு இன்று (25) காலை தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கிராம அலுவலர், வனஜீவராசிகள் திணைக்களத்திற்கும், பொலிசாருக்கும் உடனடியாக தெரியப்படுத்தியிருந்தார். சம்பவ இடத்திற்கு சென்ற வனஜீவராசிகள் திணைக்களத்தினர் பெரும் சிரமத்திற்கு மத்தியில் ஒரு யானையினை மீட்டுள்ளனர். மற்றைய யானை நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் அதன் சடலம் மீட்கப்பட்டது. குறித்த இரு யானைகளும் ஒன்றன் பின் ஒன்றாக கிணற்றுக்கள்…
-
- 0 replies
- 117 views
- 1 follower
-
-
தலைவர் தங்கத்துரை, தளபதி குட்டிமணி உள்ளிட்டோர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வெலிக்கடை படுகொலை சம்பவம் தொடர்பில் அரசாங்கம் விசாரணை நடத்த வேண்டும் என்று ரெலோவின் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். ”வெலிக்கடை சிறைச்சாலையில் கண்கள் பிடுங்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டே தோழர்கள் கொலை செய்யப்பட்டார்கள். அவர்கள் எங்கே புதைக்கப்பட்டார்கள் என்பதை அறியமுடியாமல் உள்ளது. எனவே, கடந்தகால கொலைகள் பற்றி விசாரிக்கும் இந்த அரசாங்கம், வெலிக்கடை படுகொலை பற்றியும் விசாரிக்க வேண்டும். ஜே.ஆர். ஜயவர்தன ஆட்சிக்காலத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றது.” – எனவும் …
-
- 0 replies
- 102 views
- 1 follower
-
-
புலிகள் இயக்கத்தை மீளுருவாக்கம் செய்ய முயற்சித்ததாக குற்றச்சாட்டு: 16 தமிழ் இளைஞர்கள் விடுதலை! July 25, 2025 தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை மீளுருவாக்கம் செய்ய முயற்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட 16 தமிழ் இளைஞர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த உத்தரவை நேற்று (24) கொழும்பு மேல் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. 2017 முதல் 2020 வரை யாழ்ப்பாணம், பூநகரி மற்றும் பருத்தித்துறை பகுதிகளில் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை மீளுருவாக்கவும் 2018 முதல் 2020 வரை ஆயுதங்களும் வெடிப்பொருட்களும் சேகரித்ததற்கும் 16 தமிழ் இளைஞர்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இது தொடர்பாக, சட்ட மா அதிபர் அவர்களுக்கெதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்திருந்தார். கொழும்பு …
-
- 0 replies
- 170 views
-
-
வெருகல் பிரதேசத்தில் தொல்லியல் சின்னங்களை அடையாளப்படுத்தும் நடவடிக்கை; வெற்றுக் காணிகள் விடுவிக்கப்படும் Published By: VISHNU 25 JUL, 2025 | 04:21 AM வெருகல் வட்டவன் பகுதியில் விவசாயிகளின் நெற் செய்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தொல்லியல் சின்னம் பாதுகாக்கப்படும் எனவும், கல்லடியில் வெற்றுக் காணிகளாக இருக்கின்ற பகுதி எல்லைக் கற்கள் அகற்றப்பட்டு விடுவிக்கப்படும் எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளரினால் பிரதேச பிரதி அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வெருகல் பிரதேசத்தின் வட்டவன் மற்றும் கல்லடி பகுதிகளில் தொல்பொருளியல் திணைக்களத்தினால் தொல்லியல் சின்னங்களை அடையாளப்படுத்தும் நடவடிக்கை வியாழக்கிழமை (24) முன்னெடுக்கப்பட்டி…
-
- 0 replies
- 130 views
-
-
யாழ். பல்கலைக்கழக முன்புற நடைபாதை வியாபார நிலையங்களை அகற்ற நடவடிக்கை! யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்புறமாகவுள்ள நடைபாதையில் தற்காலிக வியாபார நிலையங்களை அமைத்து வியாபாரத்தில் ஈடுபடுகின்ற அத்தனை வியாபார நிலையங்களையும் அகற்றுவதற்குரிய நடவடிக்கைகளை நல்லூர் பிரதேச சபை மேற்கொண்டுள்ளது. மக்கள் போக்குவரத்துக்கு இடையூறாக காணப்படும் தற்காலிக வியாபார நிலையங்களை அகற்றும் செயற்றிட்டத்தின் கீழ் முதற்கட்டமாக குறித்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பத்மநாதன் மயூரன் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், குறித்த நடைபாதையில் வியாபாரத்தில் ஈடுபடுகின்ற அத்தனை வியாபார நிலையங்களையும் எதிர்வரும் ஜூலை 30 ஆம் திகதி புதன்கிழமைக்கு முன…
-
- 0 replies
- 95 views
-
-
யாழ்.புதிய பேருந்து நிலையத்திலிருந்தே இ.போ.ச., தனியார்; நெடுந்தூர சேவை - ஓகஸ்ட் முதல் நடைமுறை எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதியிலிருந்து இலங்கைப் போக்குவரத்துசபை மற்றும் தனியாரின் நெடுந்தூர சேவைகள் நெடுந்தூரப் பேருந்து நிலையத்திலிருந்தும், இலங்கைப் போக்குவரத்துசபை மற்றும் தனியாரின் உள்ளூர் சேவைகள் தற்போது இலங்கைப் போக்குவரத்துசபை செயற்படும் மத்தியபேருந்து நிலையத்திலிருந்தும் மேற்கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வடக்குமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். நெடுந்தூரப் பேருந்து நிலையத்தைச் செயற்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் அண்மையில் நடைபெற்றது. இதன்போது கருத்துத் தெரிவித்த வடக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் க.மகே…
-
- 0 replies
- 95 views
-
-
இந்த ஆண்டில் 36,000 புற்றுநோயாளர்கள் மஹரகம அபேக்ஷா மருத்துவமனையில் அனுமதி! இந்த வருடத்தின் ஜூன் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மஹரகம அபேக்ஷா மருத்துவமனையில் 36,000 புற்றுநோயாளர்கள் அனுமதிக்கப்பட்டதாக சுகாதார துணை அமைச்சர் டாக்டர் ஹங்சக விஜேமுனி நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இதேவேளை, இலங்கையில் தற்போது 3,300 வாய் புற்றுநோயாளர்கள் பதிவாகியுள்ளதாக பல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் பிரசன்ன ஜயசேகர தெரிவித்துள்ளார். புகைபிடித்தல், வெற்றிலை மெல்லுதல் மற்றும் மது அருந்துதல் போன்ற பழக்கங்களால் வாய் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே வாய் புற்றுநோய் நோய்கள் அதிகரித்து…
-
- 0 replies
- 65 views
-
-
கிணற்றிலிருந்து தாய் – இரு குழந்தைகளின் சடலங்கள் மீட்பு adminJuly 24, 2025 முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் அமைந்திருக்கும் அரச வீட்டுத்திட்ட பயனாளி ஒருவரின் கிணற்றிலிருந்து தாயும் இரண்டு பிள்ளைகளும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராமத்தில் இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வந்த தாய் ஒருவரும் அவரது இரண்டு பிள்ளைகளும் அவர்கள் வசித்து வந்த வீட்டிலிருந்து சுமார் 500 மீற்றருக்கு அப்பால் உள்ள கிணற்றிலிருந்தே சடலமாக இன்று வியாழக்கிழமை(24) மீட்கப்பட்டுள்ளனர் தாய் உசாகரன் மாலினி( வயது 38) மகள்களான உசாகரன் மிக்சா ( வயது 11) உசாகரன் சதுசா …
-
- 0 replies
- 203 views
-
-
மட்டக்களப்பில் குரங்குகள் கடித்து ஆறு பெண்களுக்கு படுகாயம்! Vhg ஜூலை 23, 2025 மட்டக்களப்பு வந்தாறுமூலை பிரதேச குடிமனை பகுதிக்குள் உள்நுழைந்த குரங்கு கூட்டம் பெண்கள் மீது கடித்ததில் இதுவரை 6 பேர் படுகாய மடைந்துள்ளதுடன் குரங்குகளின் அட்டகாசத்தினால் அப்பகுதியில் உள்ள வீடுகளின் கூரை ஓடுகள் மற்றும் பயிர்களை அழித்து சேதமாக்கி வருவதுடன் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாது பீதியில் அச்சத்துடன் இருப்பதாக மக்கள் கடும் விஷனம் தெரிவிக்கின்றனர். வந்தாறுமூலை பேக் வீதியில் வீட்டை விட்டு வெளியில் வந்த வயதான பெண் ஒருவர் மீது குரங்கு கடித்ததை அடுத்து அவர் படுகாயமடைந்துள்ளார் அவரின் காலில் பாரிய தசைபகுதி இல்லாமல் போயுள்ள நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இவ்…
-
- 1 reply
- 256 views
-
-
எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் விபத்து; இழப்பீடாக 1 பில்லியன் டொலர் வழங்க உத்தரவு! 021 மே மாதம் கொழும்பு கடற்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் பொருளாதார இழப்புகளுக்கு எக்ஸ்-பிரஸ் பேர்ல் சரக்குக் கப்பலின் உரிமையாளருக்கான இழப்பீடு உத்தரவினை உயர் நீதிமன்றம் இன்று (24) பிறப்பித்தது. அதன்படி, குறித்த கப்பலின் உரிமையாளர்கள் இலங்கைக்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சிங்கப்பூர் கொடியுடன் வந்த எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் 2021 மே 20 அன்று தீப்பிடித்து, சில நாட்களின் பின்னர் கடலில் மூழ்கியது. இதனால் இலங்கையின் மேற்குக் கடற்கரையில் பில்லியன் கணக்கான பிளாஸ்டிக் துகள்கள் மற்றும் நச்சு இரசா…
-
- 0 replies
- 157 views
-
-
புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு ஆசிரியர் அதிபர்கள் சங்கங்கள் எதிர்ப்பு! திய கல்வி சீர்திருத்தங்களுக்கு ஆசிரியர் அதிபர்கள் சங்கங்கள் இன்றும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளன. 2026 முதல் செயல்படுத்தப்பட உள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களின்படி, வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் அதிபர்கள் உட்பட பல தரப்பினர் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளதை அடுத்து கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பாக நேற்று (17) நடைபெற்ற நிகழ்ச்சியில், புதிய பாடத்திட்டங்கள் தொடர்பில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு விளக்கமளித்தது. குறித்த விளக்கத்தின்படி, 10 மற்றும் 11 ஆம் தரங்களில் ஐந்து பாடங்கள் கட்டாய பாடங்களாக பட்டியலிடப்பட்டுள்ளதுடன் தேர்வுப் பாட…
-
- 5 replies
- 351 views
-
-
24 JUL, 2025 | 08:45 PM அப்பாவை விடுதலை செய்யுமாறு இலங்கையின் எல்லா அரசாங்கங்களையும் கேட்டுக்கொண்டதாகவும் எனினும் எவரும் விடுதலை செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ள தமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் இந்த அரசாங்கமாவது தங்கள் அப்பாவை விடுதலை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். யாழ்ப்பாணம் கிட்டு பூங்காவில் இன்று இடம்பெற்ற தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர். ஆனந்தசுதாகரனின் மகள் தெரிவித்துள்ளதாவது, நான் எட்டுமாசம் வயிற்றில் இருக்கும்போதே அப்பாவை கொண்டுபோய்விட்டார்கள். நாங்களும் எவ்வளவோ அரசாங்கத்தை போய் கேட்டுக்கொண்டிருந்தோம் அப்பாவை விடச்சொல்லி, யாருமே முன்வரவில்லை.…
-
- 1 reply
- 228 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 2 24 JUL, 2025 | 04:30 PM கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் ஏற்பாட்டில் அமைதியாக வியாழக்கிழமை (24) அனுஷ்டிக்கப்பட்டது. பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், 1983ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற இனவாதப் படுகொலை புகைப்படக் காட்சிகள் காட்சிப்படுத்தப்பட்டன. நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களை நினைவுகூரி மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வு முழுவதும் அமைதியான மற்றும் மரியாதையான சூழலில் நடைபெற்றது. https://www.virakesari.lk/article/220836
-
- 0 replies
- 115 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 2 24 JUL, 2025 | 03:55 PM திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேசத்தில் உள்ள வீரஞ்சோலை கிராமத்தில், வன ஜீவராசிகள் திணைக்களம் நாட்டியுள்ள எல்லைக்கற்கள் காரணமாக, அப்பகுதியில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன என்று தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் திருகோணமலை மாவட்டச் செயலாளர் தோழர் சின்ன மோகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, வியாழக்கிழமை (24) வெளியிட்ட ஊடக அறிக்கையில் அவர் கூறியதாவது: "குச்சவெளி பிரதேசத்தின் வீரஞ்சோலை பகுதியில், பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வந்த மக்களின் நிலங்களில் வன ஜீவராசிகள் திணைக்களம் தன்னிச்சையாக எல்லைக்கற்களை நாட்டியுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் தங்களது வாழ்வாதாரமான விவசாய நடவடி…
-
- 0 replies
- 82 views
- 1 follower
-