Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ்ப்பாணம் 1 நாள் முன் குருநகர் கடலில் சிறுவன் சடலமாக மீட்பு! யாழ்ப்பாணம் - குருநகர் கடற்பரப்பில் இன்று 22ஆம் திகதி காலை சிறுவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் குருநகர் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய ஜோர்ஜ் ஸ்ரிபன் மதிவாணன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த சிறுவன் நேற்று இரவு, அப்பகுதியில் உள்ள கடலட்டைப் பண்ணையைப் பார்வையிடுவதற்காக கடலுக்குச் சென்றிருந்த நிலையில் காணாமல் போயிருந்தார். இதனைத் தொடர்ந்து, அப்பகுதி மக்களால் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இன்று காலை சிறுவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிறுவன் படகிலிருந்து தவறி கடலில் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் சந்தேகிக்கப்படுகிறது. குறித்த தொடர்பான மேலதிக…

  2. பருத்தித்துறை மருத்துவமனையில் அம்புலன்ஸ் சாரதி, பொலிஸார் மீது தாக்குதல்! பருத்தித்துறை ஆதார மருத்துவமனைக்குள் கத்தியுடன் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர், அம்புலன்ஸ் சாரதி மீதும், மருத்துவமனை பாதுகாப்புக் கடமையில் இருந்த பொலிஸார் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார். இதனால், அங்கு பெரும் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, உயிர்மாய்ப்பதற்கு முயற்சித்த 21 வயதுடைய இளைஞர் ஒருவர் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இரவு மருத்துவமனைக்குள் வந்த நபர் ஒருவர், மேற்படி இளைஞரின் விவரத்தைக் கூறி அந்த இளைஞரைப் பார்ப்பதற்கு வழிகாட்டுமாறு அம்புலன்ஸ் சாரதி ஒருவரைக…

  3. யாழ்ப்பாணம் 3 மணி நேரம் முன் "கார்த்திகை மலரே" இசைப்பாடல் வெளியீடு! நல்லூர் கிட்டு பூங்காவில் வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டுத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் ஏற்பாடு செய்துள்ள 'கார்த்திகை வாசம்' மலர்க் கண்காட்சியில் நேற்றய தினம் 'கார்த்திகை மலரே!' என்ற இசைப்பாடல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் இசைப்பாடலை வெளியீடு செய்ய சிரேஷ்ட இசையமைப்பாளர் க.சத்தியன் பெற்றுக்கொண்டார். தமிழகத்தின் பாடலாசிரியர் யுகபாரதி எழுதிய "கார்த்திகை மலரே! மலர்வாயா? எங்கள் காத்திருப்பை நீ அறிவாயா?, கல்லறை சேர்ந்த ஈகியர்கள் கண்ட கனவினைக் கண்ணில் தருவாயா?" என்று தொடங்கும் பாடலை ஈழத்தின் பாடகி ஜெயபாரதி பாடியுள்ளார். பூவன் மதீசன் இசையில் உருவான இப்பாடலின…

  4. 24 Nov, 2025 | 02:53 AM மாவீரர் தினத்தினை முன்னிட்டு மாவீரர் பெற்றோர்கள் உரித்துடையோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு பிரதேசங்கள் ரீதியாக நடைபெற்று வருகின்றது. அந்தவகையில் ஞாயிற்றுக்கிழமை (23.11.2025) முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவமடு புத்தடி விநாயகர் ஆலயத்திற்கு அருகாமை பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் விசுவமடு மேற்கு, கிழக்கு பகுதிகளை சேர்ந்த மாவீரர் பெற்றோர்கள் உரித்துடையவர்கள் மதிப்பளிக்கப்பட்டுள்ளார்கள். விசுவமடு பிரதேசத்தினை சேர்ந்த மாவீரர் பெற்றோர்கள் மாலை அணிவிக்கப்பட்டு மங்கள வாத்திய இசையுடன் பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்திற்கு அழைத்து வரப்பட்டு பொதுச்சுடரினை மூன்று மாவீரர்களின் சகோதரி புஷ்பராணி ஏற்றி வைத்ததனை தொடர்ந்து மாவீரர்களின் பொது படத்திற்கு …

  5. 24 Nov, 2025 | 03:40 AM நீண்ட காலம் பராமரிப்பின்றி கைவிடப்பட்ட யாழ் மத்திய கல்லூரி நீச்சல் தடாக புனரமைப்பு பணிகளை எவ்வாறு முன்னெடுப்பது என்ற குழப்பம் காரணமாக ஆரம்ப கட்ட நிகழ்வில் வைக்கப்பட்ட நினைவுக்கல்லை திரை நீக்கம் செய்ய மறுத்து விளையாட்டு துறை அமைச்சர் வெளியேறினார். யாழ் மத்திய கல்லூரி நீச்சல் தடாக புனரமைப்பு பணிகளின் ஆரம்ப கட்ட வேலைகளை முன்னெடுக்க விளையாட்டு துறை அமைச்சர் சுனில் குமார கமகே ஞாயிற்றுக்கிழமை (23) கல்லூரிக்கு விஜயம் செய்த நிலையிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் 2012ம் ஆண்டு ஆழம் கூடிய டைவிங் நீச்சல் தடாகம் யாழ் மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. சில வருடங்களிலேயே குறித்த நீச்சல் தடாகம் பர…

  6. கொழும்பு துறைமுக வளாகத்தில் மனித புதைகுழிகள் : சில கேள்விகளை உள்ளடக்கி மக்கள் போராட்ட முன்னணி நீதி அமைச்சுக்கு கடிதம் ( இணையத்தள செய்திப் பிரிவு ) கொழும்பு துறைமுக வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிகள் தொடர்பில் மேலும் விபரமறிய பல்வேறு கேள்விகளை உள்ளடக்கி நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் செயலாளருக்கு மக்கள் போராட்ட முன்னணி கடிதமொன்றை இன்று திங்கட்கிழமை (24) அனுப்பியுள்ளது. மக்கள் போராட்ட முன்னணி அனுப்பியுள்ள கடிதத்தில், இதுவரை எத்தனை மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன ? புதைகுழிகள் தொடர்பாக தடயவியல் பரிசோதனைகள் நடத்தப்பட்டதா? அப்படியானால் அந்த அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் என்னென்ன? போன்ற பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டுள்ள அ…

  7. 24 Nov, 2025 | 03:29 PM மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மீனவர்கள் தங்களின் கடல் எல்லைகளை தனியார் நிறுவனங்களுக்கு விற்றதைக் கண்டித்தும் அவற்றை மீட்டுத் தருமாறு கோரியும் இன்று (24) காலை 10.30 மணிக்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் ஒன்றுகூடி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பல தலைமுறைகளாக தாங்கள் தொழில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்ததாகவும் பாரம்பரிய கடல் எல்லைகளை தனியார் (குளோபல் சீ பூட்) நிறுவனங்களுக்கு விற்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டி, கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர். மூதூர் தக்வா நகர் கடற்கரை பள்ளிவாசலிலிருந்து தொடங்கிய இந்தப் ஆர்ப்பாட்டப் பேரணி, பிரதான வீதி ஊடாக சென்று மூதூர் பிரதேச சபையில் முடிவடைந்தது…

  8. (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) பாடசாலை வேன்களுக்கு சி.சி.டி.வி கெமரா அமைப்புகளை கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் பாடசாலை போக்குவரத்து சேவைகள் மற்றும் அலுவலக போக்குவரத்து சேவைகளுக்கான வழிகாட்டல் நெறிமுறைகளை ஜனவரி மாதம் முதல் அறிமுகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (24) நடைபெற்ற 2026 வரவு செலவுத் திட்டத்தின் போக்குவரத்து,நெடுஞ்சாலைகள்,துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு, நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.…

  9. தொல்பொருள் திணைக்களத்தினால் நடப்பட்ட பெயர்ப் பலகைகளை அகற்றியவர்களை கைது செய்ய நடவடிக்கை! கோறளைப்பற்று பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட கிராமங்களில் தொல்பொருள் திணைக்களத்தினால் நடப்பட்ட பெயர்ப்பலகைகளை அகற்றியவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று சபையில் அறிவித்துள்ளார். மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேசத்தில், கடந்த 21ஆம் திகதி தொல்பொருள் திணைக்களம் பெயர்ப் பலகை ஒன்றை நாட்டியிருந்தது. மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசத்தில் உள்ள 35ஆம் கிராமம் கண்ணபுரத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது. எனினும் பிரதேசசபை தவிசாளர் உப தவிசாளர் உறுப்பினர்கள், மற்றும் கிராம பொதுமக்களின் தலையீட்டினால் நிறுத்தப்பட்டிருந்தது. …

  10. இன்று முதல் வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பேருந்து டிக்கெட்டுகளை பெறலாம்! இன்று முதல் பயணிகள் பேருந்துகளுக்கான டிக்கெட்டுகளை வாங்குவதற்கு வங்கி அட்டை மூலம் பணம் செலுத்த முடியும் என்று போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் தொடக்க நிகழ்வு, இன்று (24) காலை கொட்டாவ, மகும்புர பல்நோக்கு போக்குவரத்து நிலையத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. பேருந்துக் கட்டணத்தைச் செலுத்திய பின்னர், மீதமுள்ள பணம் திரும்ப வராதது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வாக வங்கி அட்டைகள் மூலம் கட்டணத்தைச் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டிஜிட்டல் அமைச்சும், போக்குவரத்து அமைச்சகமும் இணைந்து இந்த புதிய முறையை செயல்படுத்தும். மேலும், முதல் கட்டமாக சுமார் 20 வழித்தடங்களில் இதை செயல்படுத்த திட்டமிட…

  11. 24 Nov, 2025 | 10:02 AM (நமது நிருபர்) சீனா புதிய நீண்டகால வளர்ச்சிக்கான பாதை வரைபடத்தை முன்வைத்துள்ள நிலையில் அதில் குறிப்பிடப்படும் 15ஆவது சீனாவின் ஐந்தாண்டுத் திட்டத்துடன் இலங்கையின் தேசிய முயற்சிகள் ஒத்துப்போகின்றன என்று இலங்கைக்கான சீனத்தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்தார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது மத்திய குழுவினுடைய நான்காவது முழு அமரவு கடந்த ஒக்டோபர் 23ஆம் திகதி பீஜிங்கில் நடைபெற்றிருந்தது. அந்தக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட 'சீனாவின் புதிய வளர்ச்சி உலகிற்கு புதிய வாய்ப்பு' எனும் தலைப்பிலான முடிவுகள் குறித்த விளக்கக்காட்சிகளை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ளும் நிகழ்வ கொழும்பு ஷங்கிரில்லா ஹொட்டலில் நடைபெற்றது. வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட அதிகாரிகள் பங…

  12. Published By: Vishnu 23 Nov, 2025 | 08:11 PM யாழ்ப்பாண மாவட்டத்தில் முதல் உள்ளக விளையாட்டரங்கின் கட்டுமானப் பணிகள் இளைஞர் அலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே அவர்களின் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 23) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் மற்றும் பாராளுமன்ற சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் கே. இளங்குமரன், விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வி.பிரேமச்சந்திரன், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் கலந்துகொண்டனர். இந்தச் செய்தியை உங்கள் ஊடகங்கள் மூலம் ஒளிபரப்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். உங்க…

  13. Published By: Vishnu 23 Nov, 2025 | 06:47 PM வடக்கில் பாதுகாப்பு தரப்பினரின் கட்டுப்பாட்டுக்குள் காணப்படுகின்ற சில மாவீரர் துயிலும் இல்லங்களை இம்மாத இறுதிக்குள் விடுவிப்பதற்கான சாத்திய கூறுகள் தென்படுவதாக யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரும் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டை குட்டிச் சுவராக்கிய வாங்குரோத்து அரசியல்வாதிகள் இணைந்து ஆட்சியைக் கலைக்கப்போவதாக கூக்குரல் இட்டு வருகின்றனர். நாட்டை 70 வருட காலத்துக்கு மேலாக சீரழித்த வரலாற்றை எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மாற்றி அனைத்து இன மத மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய ஒரு தாய் நாட்டைக் கட்டி எழுப்பி வருகிறோம். கடந்த காலங்களில் குடும்பமாக நாட்டை சூறைய…

  14. நுண்நிதி, கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை பற்றிய வரைபு ஆவணம் : அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உப குழு, பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் இணைந்து கலந்துரையாடல் 23 Nov, 2025 | 05:10 PM (நமது நிருபர்) அமைச்சரவையின் அனுமதியை அடுத்து பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்படவுள்ள நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை பற்றிய வரைபு ஆவணம் தொடர்பில் பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, நுண்நிதிக் கடன் வழங்கல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான எதிர் கால நடவடிக்கைகள் தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உப குழு மற்றும் பாராளுமன்ற பெண்…

  15. 23 Nov, 2025 | 04:43 PM (எம்.நியூட்டன்) யாழ். புகையிரத நிலையத்தில் இருந்து காரைநகருக்கு இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் போக்குவரத்து சேவை திங்கட்கிழமை (24) முதல் நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் அதிகாலை 5.00 மணிக்கும் மாலை 7:00 மணிக்கும் ஆகிய இரண்டு நேரம் இ.போ.ச பஸ் சேவை நடைபெறவுள்ளது. பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் இபோச முகாமையாளர் ,வடக்கு மாகாண ஆளுநர் , புகையிரத நிலைய அதிபர் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடலுக்கு அமைவாக இந்த சேவை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/231226

  16. 23 Nov, 2025 | 11:55 AM (நா.தனுஜா) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பிறிதொரு முறைமையின் ஊடாக மாகாணசபை முறைமையைப் பதிலீடு செய்வது குறித்து ஆலோசித்துவருவதாகவும், வெகுவிரைவில் இடம்பெறவுள்ள டில்வின் சில்வாவின் இந்திய விஜயத்தின்போது இதுகுறித்து கலந்துரையாடப்படும் சாத்தியம் காணப்படுவதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியமுடிகின்றது. நீண்டகாலமாக நடாத்தப்படாமல் நிலுவையில் இருக்கும் மாகாணசபைத்தேர்தல்கள் ஒரு வருடகாலத்துக்குள் நடாத்தப்படும் என தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்த போதிலும், அவ்வாக்குறுதி இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. தமிழரசுக்கட்சியுடன் கடந்த வாரம் இடம்பெற்ற சந்திப்பிலும் இது…

  17. Published By: Digital Desk 3 23 Nov, 2025 | 11:12 AM (லியோ நிரோஷ தர்ஷன்) இலங்கைக்கு மின்சாரப் பேருந்துகளை வழங்குவதற்கான உதவித் திட்டத்தை சீனா பரிசீலித்து வருவதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் கி ஷென்ஹோங்(Qi Zhenhong) தெரிவித்தார். இந்தத் திட்டம் குறித்த செய்தி, இரு நாடுகளின் ஒத்துழைப்பில் ஒரு புதிய சகாப்தத்தை குறிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் இறக்குமதிக்காக வெளிநாட்டுச் செலாவணியை நம்பியிருக்கும் இலங்கை, கடந்த காலத்தில் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி, பெட்ரோல் மற்றும் டீசலுக்கான தட்டுப்பாட்டை சந்தித்தது. இதனால் பொதுப் போக்குவரத்து மற்றும் மக்களின் தினசரி வாழ்க்கை வெகுவாகப் பாதித்தது. மின்சாரப் பேருந்துகளுக்கு மாறுவது, எரிபொருள் இறக்குமதியைக் குறைப்பதுடன்,…

  18. கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள மின்னணு நுழைவாயில் (E-Gate) வசதியால் நன்மை ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டிலிருந்து வரும் இலங்கை கடவுச்சீட்டை கொண்டுள்ள பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இந்த வசதி மூலம் குடிவரவுப் பணிகளுக்காக நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். விமானத்தில் இருந்து இறங்கி, நேரடியாக விமான நிலையத்தை விட்டு வெளியேறும் வாய்ப்பு மின்னணு நுழைவாயில்கள் காரணமாக கிடைத்துள்ளது. சுயமாக குடிவரவு பணி வெளிநாடுகளில் இருந்து இலங்கை செல்வோர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து விரைவாக வெளியேறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில நிமிடங்களில் சுயமாக குடிவரவு பணிகளை நிறைவு செய்து கொண்டு வெளியேற முடி…

  19. அஸ்வெசும நலன்புரி உதவித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்குத் தகுதி பெற்று, இன்னும் வங்கிக் கணக்கைத் திறக்காத பயனாளிகள் வங்கிக் கணக்குகளை விரைவில் திறக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வங்கிக் கணக்குகள் இல்லாததால், முந்தைய ஆண்டில் (2024) 43,703 அஸ்வெசும பயனாளிகள் தங்கள் உரிமை பலன்களைப் பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக, தகுதியான பயனாளிகள் தங்கள் பலன்களைப் பெற முடியாமல் போகலாம் அல்லது இழக்க நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரச்சினையை தீர்க்க பொருத்தமான வழிமுற ஜூன் 2025 இறுதிக்குள் இந்த பிரச்சினையைத் தீர்க்க பொருத்தமான வழிமுறையை நிறுவி செயல்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அஸ்வெசும திட்டத்தின்படி தகுதியான நபர்களுக்கு சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்…

  20. இந்த நாட்டில் அனைவரும் சமன் என ஜனாதிபதி சொல்வது உண்மையாக இருக்குமாக இருந்தால் உங்கள் சகாக்களை வணங்குவது போல் எமது மாவீரர்களது கனவையும் நனவாக்குகின்ற வகையில் அரசியல் தீர்வை வழங்க வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சி யின் பதில பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்தார். முல்லைத்தீவு வள்ளிபுனத்தில் நடைபெற்ற மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் மதிப்பளித்தல் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நவம்பர் மாதம் என்பது உலகலாவிய ரீதியில் தங்கள் தேசங்களுக்காகப் போரிட்டு மடிந்தவர்களை நினைவு கூருகின்ற மாதம். போராடி மடிந்தவர்களை நினைவு அதனால்தான் உலகெங்கும் இராணுவத்தினராக இருக்கலாம் போராடியவர்களாக இருக்கலாம் அவர்களைப் பொப்பி மல…

  21. யுத்தத்தில் உயிர் இழந்தவர்களை நினைவுகூற எவ்வித தடையும் இல்லை- அமைச்சர் பிமல் ரத்நாயக்க! நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தில் உயிர் இழந்தவர்களை நினைவு கூறுவதற்கு அரசாங்கம் எந்த தடையினையும் விதிக்கவில்லை என்றும் நினைவுகூறும் நிகழ்வுகளை இராணுவத்தினர் தடுக்கமாட்டார்கள் என்றும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க கிளிநொச்சியில் தெரிவித்துள்ளார். எனினும் அண்மையில் கொழும்பில் கருத்து தெரிவித்திருந்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க விடுதலைப் புலிகளை நினைவு கூருவதற்கு அனுமதி இல்லை என குறிப்பிட்டிருந்தார். இது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்துவது அவர்களின் ஜனநாயக உரிமை எமது அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பிருந்தே தமிழ் மக்…

  22. திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார் ஜீவன் தொண்டமான்! இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், இன்றைய தினம் (23) திருமண பந்தத்தில் இனைந்துக்கொண்டார். இந்தியா, தமிழ்நாடு மாநிலம் திருப்பத்தூரைச் சேர்ந்த சீதை ஸ்ரீ நாச்சியார் என்ற மணமகளை கரம்பிடித்து திருமண பந்தத்தில் இனைந்துக்கொண்டார். திருப்பத்தூர் ஆறுமுகம்பிள்ளை சீதை அம்மாள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இன்றைய திருமண நிகழ்வில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உட்பட பல இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்தியாவின் அரசியல், சினிமா மற்றும் வர்த்தகத் துறையைச் சேர்ந்த பிரமுகர்கள் ஆகியோர்களுடன் இ.தொ.கா பிரதிநிதிகளும் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். https://athavannews.com/2…

  23. சீரற்ற காலநிலையினால் நாடு முழுவதும் 9 பேர் உயிரிழப்பு! நாடுமுழுவதும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. தொடரும் மழையுடனான வானிலை காரணமாக பல பிரதேசங்களில் வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாகவும், சில இடங்களில் வீதிகளில் கற்பாறைகள் சரிந்து வீழ்ந்த சம்பவங்களும் பதிவாகியுள்ளதாகக் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவைத்துள்ளார். இதனிடையே 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. கண்டி, பதுளை, கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, கேகாலை, மாத்தறை, நுவ…

  24. 23 Nov, 2025 | 11:24 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) வளரும் காலத்தில் தாயையும் இழந்து பின்னர் வளர்த்த பாட்டியையும் இழந்து தற்போது தனித்திருக்கும் பல ஆண்டுகாலமாக சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதி ஆனந்தசுதாகரின் பிள்ளைகளின் ஆரோக்கியத்துக்கு அரசாங்கத்தின் வரவு , செலவுத்திட்டம் என்ன ஆற்றுப்படுத்தலை வழங்கப்போகிறதென தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (23) நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சுக்கான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, இத் தீவிலே ஆயுதங்க…

  25. Published By: Digital Desk 1 23 Nov, 2025 | 10:37 AM ஆர்.ராம் ஜனாதிபதி அநுரகுமாரதிசாநாயக்க புத்தசாசன அமைச்சினால் காண்பிக்கப்பட்ட அறிக்கையொன்றில் தமிழ் மொழி காணப்படாமை தொடர்பில் அதிருப்தியடைந்து அதுதொடர்பில் அதிகரிகளிடத்தில் கேள்விகளை எழுப்பியதோடு தமிழ் மொழியில் குறிப்பிடுமாறும் வலியுறுத்தியுள்ளார். இன நல்லிணக்கத்தை அடிப்படையாக்கொண்டு இலங்கையர் தினம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 12, 13, 14 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. இந்நிலையில் குறித்த நிகழ்வு பற்றி சிறுபான்மை கட்சி தலைவர்களுக்கும் ஜனாதிபதிக்குமிடையிலான சந்திப்பு நேற்றையதினம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றிருந்தது. இதன்போது, புத்தசாசன அமைச்சினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள நிகழ்ச்சிகள் தொடர்பிலான அறிக்கையொன்ற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.