ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142759 topics in this forum
-
துப்பாக்கி பிரயோகத்தில் டான் பிரியசாத் மரணம்! வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் சமூக ஆர்வலரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினருமான டான் பிரியசாத் (Dan Priyasad) உயிரிழந்துள்ளார். வெல்லம்பிட்டி, சாலமுல்ல பகுதியில் அமைந்துள்ள லக்சந்த செவன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் மேல் தளத்தில் நேற்று (22) இரவு 9:10 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். துப்பாக்கிச் சூடு பிஸ்டல் ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி நடத்தப்பட்டதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயம…
-
-
- 23 replies
- 1.1k views
-
-
அடுத்த 4 மாதங்களுக்கு போதுமான இன்சுலின் இருப்பு உள்ளது! அடுத்த நான்கு மாதங்களுக்கு தேவையான இன்சுலின் இருப்பு ஏற்கனவே விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும், அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (22) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அமைச்சர் இவ்வாறு கூறினார். இதன்போது இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை நாட்டில் தேவையான அளவு இன்சுலின் இருப்பு உள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், மருந்து தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, நான்கு முதல் ஆறு மாதங்களுக்கு தேவையான மருந்து இருப்பை பராமரிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும் கட…
-
- 0 replies
- 91 views
-
-
என்பிபி ஆட்சியில் இது தான் நடக்கிறது! வடமராட்சி கிழக்கில் பொலிசாரின் கூட்டத்தில் கலந்து கொள்ளாத பெண் வேட்பாளரின் மகனை பொலிசார், அவரது சாரத்தைப் பிடித்து இழுத்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் முகநூலில் பதிவிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள வடமராட்சி கிழக்கு பகுதிக்கான தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அமைப்பாளராக ஜெகதேஸ்வரன் சற்குணாதேவி உள்ளார். அவர் பருத்தித்துறை பிரதேச சபைத் தேர்தலுக்கான வேட்பாளராகவும் இருந்தார். ஆனால் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மருதங்கேணி பொலிசாரால் இன்று காலை ஏற்பாடு செய்யப்பட்ட வேட்பாளர்களுக்கான கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு சில நாட்களுக்கு முன்பு அவருக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் வேட்ப…
-
-
- 2 replies
- 268 views
-
-
ஜனநாயகத்தை விரும்புவோர் ஜே.வி.பியினரை காலூன்ற விடாது துரத்தி அடிக்க வேண்டும்! ஜே.பி.வி ஆட்சியாளர்கள் தேர்தல்களை இல்லாமல் செய்யும் நடவடிக்கைகளை கூட பாராளுமன்றில் சட்டங்களை இயற்றி செய்ய கூடியவர்கள். எனவே ஜனநாயகத்தை விரும்புவோர் ஜே.வி.பியினரை மண்ணில் காலூன்ற விடாது துரத்தி அடிக்க வேண்டும் என சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் செவ்வாய்க்கிழமை (21) நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டணி மான் சின்னத்தில் போட்டியிடுகின்றது. அதில் யாழ், மாநகர சபை உள்ளிட்ட நான்கு உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. பெண் வேட்பாளர் ஒருவரின் சத்திய பிரமாணத்தில், சத்தியப்பிரமான ஆ…
-
- 0 replies
- 157 views
-
-
வல்வெட்டித்துறையை கைப்பற்ற தீவிரமாக உள்ளது ஜேவிபி! பாராளுமன்றத் தேர்தலில் ஜே.வி.பியை நம்பித் தமிழ் மக்களில் கணிசமானோர் வாக்களித்திருக்கிறார்கள். அந்த நம்பிக்கையில் ஊரும் நமதே என்று சகல உள்ளூராட்சி மன்றங்களையும் கைப்பற்றிவிட வேண்டும் என்று ஜே.வி.பி கடுமையாக முயற்சித்து வருகிறது. உலகில் ஈழத்தமிழினத்தின் முகவரியாக விளங்கும் வல்வெட்டித்துறையைக் கைப்பற்றிவிட வேண்டும் என்பதில் மிகத்தீவிரமாக உள்ளது என தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்தார். ஜே.வி.பியினர் வல்வை மண்ணில் முகாமிட்டுத் தங்களை நம்புங்கள் கரை சேர்ப்போம் என்று முழங்குகிறார்கள். கப்பலோட்டிய நாங்கள் காகிதக் கப்பல்களில் பயணிக்க மாட்டோம் என்ற பதிலை வல்வெட்டித்துறை மக்கள் இந்தத் தேர்தலில் ஜ…
-
- 2 replies
- 287 views
-
-
22 APR, 2025 | 05:23 PM (எம்.மனோசித்ரா) உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கான ஒத்துழைப்புக்களை மாத்திரமே அரசாங்கம் வழங்குகிறது. மாறாக அரசாங்கத்தால் விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை. இந்த தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி தொடர்பில் அறிவிக்கும் பொறுப்பு குற்றப்புலனாய்வு பிரிவினருடையதாகும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். செவ்வாய்கிழமை (22) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், தற்போது எதிர்க்கட்சியிலிருப்பவர்களது ஆட்சியிலேயே உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. அந்த வகையில் இந்த விவகாரத்தில் அவர்கள் எதற்காக இந்தளவுக்கு கலவரமடைகின்றனர் என்பத…
-
-
- 3 replies
- 224 views
- 1 follower
-
-
வவுனியா பூவரசங்குளம் பகுதியில் மக்களின் சொந்த காணிகளை எல்லையிட வந்த வனவள அதிகாரி ஒருவர் துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரதேச தேர்தல் காரியாலயம் வவுனியா மகாறம்பைக்குளம் பிரதான வீதியில் திறந்துவைக்கப்பட்டது. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், வவுனியாவில் உள்ள நான்கு உள்ளூராட்சி சபைகளிலும் இலங்கை தமிழரசுக்கட்சி ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. இது ஒரு எல்லைப்புற மாவட்டம். இதன் இனப்பரம்பல் கணிசமான அளவு மாற்றப்பட்டிருக்கிறது. எந்த அரசாங்கம் வந்தாலும் இந்த செயற்திட்டம் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. தற்போது இ…
-
- 0 replies
- 131 views
- 1 follower
-
-
Published By: VISHNU 22 APR, 2025 | 08:39 PM இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா 22ஆம் திகதி செவ்வாய்க்கிழைமை மாலை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார். குறித்த சந்திப்பானது கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மரியாதை நிமித்தமாக சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. https://www.virakesari.lk/article/212682
-
- 0 replies
- 121 views
- 1 follower
-
-
22 Apr, 2025 | 01:09 PM மக்கள் விடுதலை முன்னணியின் ( ஜே.வி.பி. ) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவை இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு பத்தரமுல்லை, பெலவத்தையில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (22) நடைபெற்றுள்ளது. இந்திய உயர்ஸ்தானிகர் - ஜே.வி.பி. செயலாளர் ரில்வின் சந்திப்பு | Virakesari.lk
-
- 0 replies
- 122 views
-
-
22 Apr, 2025 | 04:39 PM தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு அமைப்பாளர் ஜெகதீஸ்வரன் சற்குணதேவியின் வீட்டிற்கு சென்ற மருதங்கேணி பொலிஸார் எந்த வித காரணமும் இன்றி அவரது இளைய மகனை கைதுசெய்துள்ளனர் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளார் சற்குணதேவி தனது உறுதியான ஊழல் அற்ற செயற்பாட்டிற்காக பொலிஸாரின் துன்புறுத்தல்களை பல முறை எதிர்கொண்டுள்ளார் என குறிப்பிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு அமைப்பாளர் ஜெகதீஸ்வரன் சற்குணதேவி. பருத்திதுறை பிரதேச சபைக்கான தேர்தலில் அவர் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தார் எனினும் அது நிராகரிக்கப்…
-
- 0 replies
- 129 views
-
-
22 Apr, 2025 | 05:15 PM உலகளாவிய ரீதியில் நிலவும் வர்த்தக குழப்பங்களுக்கு மத்தியில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, இன்று செவ்வாய்க்கிழமை (22) நிலவரப்படி, உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,500 அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில், இன்றையதினம் ஒரு பவுண் 22 காரட் தங்கத்தின் விலை 255,000 ரூபாவாகும். ஒரு பவுண் 24 காரட் தங்கத்தின் விலை 277,000 ரூபாவாகும். நேற்று திங்கட்கிழமை (21) ஒரு பவுண் 22 காரட் தங்கத்தின் விலை 246,600 ரூபாவாகும். ஒரு பவுண் 24 காரட் தங்கத்தின் விலை 268,000 ரூபாவாகும். வரலாற்றில் முதல் தடவையாக இலங்கையில் தங்கத்தின் விலை அதிரடியாக அதிகரிப்பு | Virakesari.lk
-
- 0 replies
- 183 views
-
-
குரங்குகள் தொடர்பாக மீண்டும் கணக்கெடுப்பு! குரங்குகள் தொடர்பாக மீண்டும் கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயத்துறை பிரதி அமைச்சர் நாமல் கருணாரட்ன இந்த விடயத்தை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். நாட்டில் இரண்டாம் கட்டமாக மீண்டும், குரங்குகள் உள்ளிட்ட விவசாய நிலங்களுக்கு பாதிப்பினை ஏற்டுத்தக் கூடிய வனவிலங்குகள் தொடர்பில் கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக விவசாயத்துறை பிரதி அமைச்சர் நாமல் கருணாரட்ன தெரிவித்துள்ளார். விலங்குகள் கணக்கெடுப்பு தொடர்பாக அமைச்சின் குழுவொன்று நிறுவப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை எனவும் எதிர்வரும் நாட்களில் இக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ம…
-
-
- 14 replies
- 675 views
- 2 followers
-
-
“கிளீன் ஸ்ரீ லங்கா” திட்டம் விடுத்துள்ள வேண்டுகோள்! புனித தலதா மாளிகைக்கு வழிபாட்டிற்காக வரும் பக்தர்கள், பொலிதீன் உள்ளிட்ட உக்காத பொருட்களை கொண்டு வருவதைத் தவிர்க்குமாறும், தலதா மாளிகையைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழலின் தூய்மையைப் பராமரிப்பதில் அதிகபட்ச கவனம் செலுத்துமாறும், குப்பைகூழங்களை உரிய இடங்களில் மாத்திரம் கொட்டுவது தொடர்பில் கூட்டாக தலையீடு செய்து பிரஜைகள் என்ற வகையில் தமது பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என “கிளீன் ஸ்ரீ லங்கா ” திட்டம் நினைவுகூர்ந்துள்ளது. நாட்டில் சமூக, சுற்றுச்சூழல் மற்றும் நெறிமுறைசார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் சமூகத்தை உயர்ந்த நிலைக்கு உயர்த்தும் நோக்கத்துடன் அரசாங்கத்தின் பிரதான திட்டமாக “கிளீன் ஸ்ரீ லங்கா” திட்டம் செயல்படுத்தப்பட்டுள…
-
- 0 replies
- 103 views
-
-
கஜேந்திரகுமாருடன் இணைந்தார் சரவணபவன் April 22, 2025 12:10 pm நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். சில விடயங்களுக்காக நான் காத்திருந்தேன். நான் ஏற்கனவே ஒரு கட்சியின் இருந்தேன், அங்கு ஏதாவது மாற்றம் ஏற்படுமா என்று எதிர்ப்பார்த்திருந்தேன். அவர்கள் என்னை தொடர்புகொள்வார்கள் என்று பார்த்தேன், ஆனால் அது நடக்கவில்லை. இந்நிலையில், எனது எதிர்கால அரசியல் பயணம் குறித்து பல்வேறு தரப்பினர்கள் தன்னுடன் பேசியிருந்தனர். மிகத் தெளிவாக அவர்களி…
-
- 1 reply
- 455 views
-
-
”சஹ்ரானின் மறு தோற்றம் சூப்பர் முஸ்லிம் அமைப்பாக உருவாக்கம்” கனகராசா சரவணன் இலங்கையில் சஹ்ரானின் மத பயங்கரவாதம் இப்போது சூப்பர் முஸ்லிம் பயங்கரவாத அமைப்பாக உருவாகி உள்ளதுடன் கிழக்கில் மத ரீதியான குட்டி பாகிஸ்தான் போல உருவாக்க பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். ஹிஸ்புல்லா முயற்சிக்கின்றாரா? இந்த மாகாணம் மூவின மக்களும் வாழுகின்ற சமத்துவமான ஒரு மாகாணம் ஆகவே மத ரீதியான ஒரு மாகாணத்தைப் பிரிக்க ஒரு போதும் விடமாட்டோம் என அகில இலங்கை கிறிஸ்தவ காங்கிரஸ் அமைப்பின் தலைவர் சிவதர்சன் தெரிவித்தார். மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 6ம் ஆண்டு நினைவேந்தல் குண்டு வெடித்த இடத்தில் உயிர் நீத்தவர்களுக்கு ஆத்மசாந்தி வேண்டி மெழுகுவர்த்தி…
-
- 1 reply
- 527 views
-
-
இலங்கையில் பிரிட்டனின் கூலிப்படையான கினிமினியின் போர்க்குற்றங்கள்! – முக்கிய ஆவணங்களை பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சு ஆறு வருடங்களாக வெளியிடாமல் வைத்திருந்தது ஏன்? April 22, 2025 இலங்கையில் 1980களில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பிரிட்டனின் கூலிப்படை நிறுவனமான கினிமினி பற்றிய ஆவணங்கள் பொதுமக்கள் பார்வைக்காக அனுமதிக்கப்பட்ட போதிலும், பல வருடங்களாக பிரிட்டிஸ் அரசாங்கம் அவற்றை வெளியிடுவதை தடுத்துவைத்திருந்தது என முன்னாள் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இந்தமாத ஆரம்பத்தில் லண்டனில் இடம்பெற்ற தகவல்தீர்ப்பாய விசாரணையில் பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய அபிவிருத்தி அலுவலகத்தின் முன்னாள் தலைமை தணிக்கையாளர் கிரஹாம் ஹேண்ட் கினிமினி குறித்த முக்கிய ஆவணங்களை…
-
- 0 replies
- 113 views
-
-
எழுதுமட்டுவாழ், ஆனையிறவுச் சோதனைச் சாவடிகள் மீளவும் அகற்றம் யாழ்ப்பாணம் - எழுதுமட்டுவாழ் மற்றும் ஆனையிறவு பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த சோதனைச் சாவடிகள் மீண்டும் அகற்றப்பட்டுள்ளன. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த ஜனவரி மாதம் வடக்குக்கு வந்து திரும்பியபோது, அந்தச் சோதனைச் சாவடிகளை அகற்றும் உத்தரவைப் பிறப்பித்திருந்தார். அதையடுத்து அவை அகற்றப்பட்டிருந்தன. எனினும், பின்னர் அந்த சோதனைச் சாவடிகள் மீண்டும் போடப்பட்டன. இவ்வாறான நிலையிலேயே, தற்போது யாழ்ப்பாணத்துக்கு அநுர மீண்டும் வந்து சென்றுள்ள நிலையில் அந்தச் சோதனைச் சாவடிகள் நேற்றுமுன்தினம் முதல் மீளவும் அகற்றப்பட்டுள்ளன என்று தகவல் வெளியாகியுள்ளது. https://newuthayan.com/article/எழுதுமட்டுவாழ்,_ஆனையிறவுச்_சோதனைச்_சாவட…
-
- 1 reply
- 142 views
-
-
தேர்தலுக்கு முன் யாழ் , கிளிநொச்சியில் காணிகளை விடுவிக்க கூடிய சாத்தியம் adminApril 22, 2025 நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலுக்கு முன்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பாதுகாப்பு தரப்பின் வசமுள்ள சில காணிகளை விடுவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிடம் கேட்ட போது, மக்களின் காணிகள் மக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதில் எமது அரசாங்கம் மிக உறுதியாக உள்ளது. படிப்படியாக காணிகளை விடுவிப்போம். யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்துடன் தொடர்புடைய காணிகள் தவிர மீதமுள்ள காணிகளை விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தார். அதேவேளை யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் …
-
- 0 replies
- 114 views
-
-
யாழில் மிக விரைவில் கடவுச்சீட்டு அலுவலகம் adminApril 22, 2025 யாழ்ப்பாணத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம் ஒரு சில வாரங்களில் ஆரம்பிக்கப்பட ஏதுவாக யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகத்துக்கான பணிகள் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன. யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகம் அமைக்கப்படும் என்ற அறிவித்தலை விடுத்திருந்தார். அதன்போது, கடவுச்சீட்டு அலுவலகத்துக்காக மாவட்டச் செயலகத்தில் ஒதுக்கப்பட்ட இடத்தையும் அவர் பார்வையிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் அடிப்படையிலேயே, கடவுச்சீட்டு அலுவலக…
-
- 0 replies
- 118 views
-
-
அடுத்த போப் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட பெயர்களில் கார்டினல் மெல்கம் ரஞ்சித்! போப் பிரான்சிஸின் மரணம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அவரது திடீர் மறைவு, வத்திக்கானின் அடுத்த பிரதிநிதி யார் என்பது குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த நிலையில், திங்கட்கிழமை (21) காலமான போப் பிரான்சிஸுக்குப் பின்னர், இலங்கையின் கொழும்பு பேராயர் கார்டினல் மால்கம் ரஞ்சித்தை அடுத்த போப்பாக தேர்வு செய்ய பல சர்வதேச ஊடகங்கள் பெயரிட்டுள்ளன. சாத்தியமான வாரிசுகளின் தொகுப்பில், வொஷிங்டன் எக்ஸாமினர், பிலிப்பைன்ஸின் கார்டினல் லூயிஸ் டேகிள், பிரான்சின் கார்டினல் ஜீன்-மார்க் அவெலின் மற்றும் இத்தாலியின் கார்டினல் பியட்ரோ பரோலின் போன்ற பிற முக்கிய நபர்களுடன் கார்டினல் மெல்கம் ரஞ்சித்தும் பெய…
-
- 0 replies
- 196 views
-
-
கெஹெலியவுக்கு எதிரான வழக்கு – சட்டமா அதிபரின் கோரிக்கை! தரமற்ற இம்யூன் குளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்தமை தொடர்பாக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒன்றை அமைக்குமாறு சட்டமா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார். தலைமை நீதிபதியிடம் எழுத்துப்பூர்வ கடிதம் மூலம் சட்டமா அதிபர் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக கெஹெலிய ரம்புக்வெல்ல 07 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். அதன் பின்னர் அவருக்கு 2024 செப்டெம்பரில் பிணை வழங்கப்பட்டது. இரண்டு மூத்த அரச அதிகாரிகளின் உதவியுடன் போலி ஆவணங்களை உருவாக்கி 22,500 தரமற்ற இம்யூன் குளோபுலின் தடுப்பூசி குப்பிகளை ஒரு மருந்து நிறுவனம் இறக்குமத…
-
- 0 replies
- 122 views
-
-
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அழைப்பு! முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 25 ஆம் திகதி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக இந்த அழைப்பானை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் 25 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அறிவித்துள்ளது. அத்துடன் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அடுத்த மாதம் 05 ஆம் திகதி வரை சாமர சம்பத் த…
-
- 3 replies
- 220 views
- 1 follower
-
-
21 APR, 2025 | 05:35 PM 2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக தபால் மூலம் வாக்களிக்கவுள்ள வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு முக்கிய அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவித்தலில் குறிப்பிடப்படுவதாவது, தபால் மூலம் வாக்களிக்கவுள்ள வாக்காளர்கள் தங்களது ஆளடையாளத்தை உறுதி செய்துக்கொள்வதற்கு பின்வரும் அடையாள அட்டைகளை பயன்படுத்த முடியும். 1. தேசிய அடையாள அட்டை 2. செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் 3. செல்லுபடியாகும் கடவுச்சீட்டு 4. தேர்தல் ஆணைக்குழுவால் வழங்கப்படும் அடையாள அட்டை 5. ஆட்பதிவு திணைக்களத்தினால் விநியோகிக்கப்படும் தகவல்கள் உறுதிசெய்யும் கடிதம் https://www.virakesari.lk/article/212570
-
- 0 replies
- 121 views
- 1 follower
-
-
ருத்தித்துறை, தும்பளையில் பட்டப்பகலில் மூதாட்டி ஒருவர் நேற்று அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் ஒருவர் பருத்தித்துறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தும்பளையில் சகோதரியுடன் வசித்து வந்த செம்பியன்பற்றைச் சேர்ந்த சின்னத்தம்பி குணதேவி (வயது-69) என்பவரே அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். தலையில் பலமுறை தாக்கப்பட்டமையாலேயே அவர் உயிரிழந்துள்ளார் என்று உடற்கூற்றுப் பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வுநிலை ஆசிரியையான சகோதரியுடன் குணதேவி ஒரே வீட்டில் வசிந்து வந்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தினமான நேற்றுக் காலை 7 மணியளவில் சகோதரி அருகில் உள்ள தேவாலயத்துக்குச் சென்றுள்ளார். உடல்நலக் குறைவு காரணமாக குணதேவி தேவாலயத்துக்குச் செல்ல…
-
- 0 replies
- 209 views
-
-
வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் சில இடங்களில் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வெளிப்புறங்களில் வேலையின்போது அதிகளவு தண்ணீர் குடிப்பதும், நிழலான பகுதிகளில் முடிந்தவரை ஓய்வெடுப்பதும் அவசியம் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிடப்பட்டுள்ளது. வெப்பத்தில் தகிக்கும் வடக்கு - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
-
- 1 reply
- 197 views
- 1 follower
-