Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Published By: DIGITAL DESK 2 13 APR, 2025 | 02:28 PM சித்திரை புத்தாண்டு காலத்தில் ஏற்படும் விபத்துக்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ளுமாறு சுகாதாரத்துறையினர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். புத்தாண்டுக் கொண்டாட்டங்களின்போது பட்டாசு மற்றும் வாண வேடிக்கைகளை வெடிக்கும் போது அவதானத்துடன் செயற்படுமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். புத்தாண்டு காலங்களில் விபத்துக்கள் அதிகரிக்கும் சந்தர்ப்பங்கள் உள்ளதால் பெரும்பாலும் சிறுவர்கள் பாதிக்கப்படக்கூடிய நிலைமைகளை தவிர்ப்பதற்கு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா வேண்டுகோள் விடுத்துள்ளார்…

  2. 13 APR, 2025 | 07:36 PM கிளிநொச்சியில் 16 சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள விளையாட்டு பயிற்றுநர் ஞாயிற்றுக்கிழமை (13) பகல் கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்து வந்து குறித்த நபர் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக விரைந்து செயற்பட்ட கிளிநொச்சி குற்றத்தடுப்பு பொலிஸார் சந்தேக நபரை கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் தற்போது கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றார். மேலதிக சட்டநடவடிக்கைக்காக சந்தேகநபர் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார். https://www.virakesari.lk/article/211965

  3. 44% பரஸ்பர வரி; இலங்கையின் கோரிக்கைக்கு அமெரிக்காவின் பதில்! 44% பரஸ்பர வரிகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக பற்றாக்குறையைக் குறைப்பதற்கான வழிகளை முன்மொழியுமாறு அமெரிக்க அரசாங்கம் இலங்கையிடம் கேட்டுள்ளதாக பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ தெரிவித்தார். இலங்கையின் மீதான தாக்கம் குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளித்த பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த, ஏப்ரல் 09 முதல் நடைமுறைக்கு வரும் வரிகள், இலங்கையின் தயாரிப்புகளின் போட்டித்தன்மையைக் குறைக்கும் என்றும் கூறினார். இது குறித்து நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், அவர்களுடனான எங்கள் வர்த்தக பற்றாக்குறையைக் குறைப்பதற்கான வழிகளை முன…

  4. வெளிநாட்டில் இருந்து அனுப்பப்படும் பணம் தொடர்பில் விசேட அறிவிப்பு! வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் பணம் தொடர்பில் விசேட அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. அதன்படி இலங்கை வரலாற்றில் வெளிநாட்டுத் தொழிலாளர்களிடமிருந்து பெறப்பட்ட இரண்டாவது அதிகளவு பணம் 2025 மார்ச் மாதத்தில் பதிவாகியுள்ளது. இந்தப் பணப் பரிமாற்றத்தின் பெறுமதி 693.3 மில்லியன் அமெரிக்க டொலராகும். இதேவேளை 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கை பெற்ற மொத்த வெளிநாட்டுப் பணம் அனுப்புதல்கள் 1,814.4 மில்லியனாக அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது 2024 ஆம் ஆண்டின் முதல் 3 மாதங்களில் பெறப்பட்ட 1,536.1 மில்லியன் டொலர் மதிப்போடு ஒப்பிடும்போது 18.1% அதிகமாகும். https://athavannews.com/2025/1428407

  5. பயங்கரவாத தடைச்சட்ட விடயத்தில் அநுர அரசும் பல்டி - இலங்கை வரும் ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்புக்குழுவிடம் தமிழ்த் தலைவர்கள் கோரிக்கை 12 APR, 2025 | 12:52 PM - ஆர்.ராம் பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்கும் விடயத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கமும் தேர்தல்கள் வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்கி நிலைப்பாட்டையும் மாற்றியுள்ளது என்று தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆகவே, இலங்கைக்கு வருகை தரும் ஐரோப்பிய ஒன்றியக் கண்காணிப்புக் குழுவானது, பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக அரசாங்கம் நீக்கும் வரையில் ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகையை உடன் நிறுத்துவதற்கான பரிந்துரைகளை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றி…

  6. வெருகல் படுகொலையின் 21 ஆவது ஆண்டு நினைவு rep104April 11, 2025 ருத்திரன் வெருகல் படுகொலையின் 21 ஆவது ஆண்டு நினைவு நாள் ‘சிவப்பு சித்திரை’ வாகரை பிரதேசத்தின் கதிரவெளி மலைப் பூங்காவில் நேற்று வியாழக் கிழைமை மாலை(10) நினைவு கூறப்பட்டது. நிகழ்வானது தமிழ் மொழி வாழ்த்து பாடலுடன் ஆரம்பிக்கப்பட்டு உயிர் நீத்தவர்களுக்கான மலர் அஞ்சலியுடன் மௌன வீர அஞ்சலி செலுத்தப்பட்டு பொதுச் சுடர் ஏற்றல் நிகழ்வு இடம்பெற்றது. இம்முறை கடந்த 21 ஆண்டுகளுக்கு பின்பு முன்னாள் அமைச்சர் கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் முதன் முதலாக நிகழ்வில் பங்கு கொண்டு பொதுச் சுடரினை ஏற்றி வைத்தார். வழமையாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் நிகழ்வில் ப…

  7. சட்டவிரோதமாக வாகனங்களைப் பயன்படுத்தியவர்களின் பெயர் பட்டியல் விரைவில் வெளியாகும் - ஜனாதிபதி வாகனங்களை இறக்குமதி செய்து அவற்றைப் பதிவுசெய்யாமல் பயன்படுத்திய முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களது பட்டியலொன்றை விரைவில் வெளியிடவுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கந்தளாய் நகரில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மாகாண சபைக்குச் சொந்தமான வங்கிக்கணக்கிலிருந்து அநாவசியமாகப் பணத்தை பெற்று அரசாங்கத்துக்கு நட்டம் ஏற்படுத்தியமைக்காக ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் கைதுசெய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அந்த வங்கிக் கணக்கை நிறைவுறுத்தி பணம் பெறுமாறு தாமே அவருக்கு அறிவுறுத்தல் வழ…

  8. 13 APR, 2025 | 10:36 AM சுமார் 75 ஆண்டுகளாக போராடிவரும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை, உரிமைகளை தர மறுக்கும் பேரினவாத கட்சிகள் வாக்குகளுக்காக இன்று வீட்டு திண்ணையில் வந்து நின்று கதவுகளை தட்டுகின்றனர். அவர்களை மட்டக்களப்பு தமிழர்கள் தோற்கடித்து தன்மானத் தமிழர்கள் என்பதை நிரூபித்துக்காட்ட வேண்டும் என மட்டக்களப்பு செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச சபையின் ஆறாம் வட்டார வேட்பாளர் செ.நிலாந்தன் தெரிவித்தார். செங்கலடி ஐயன்கேணி கிராமத்தில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் பொதுச் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், தமிழரசுக் கட்சிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என சிலர் கேட்கின்றனர். தமிழரசுக் கட்சி இந்த ஐயன்கேணி மண்ணுக்கு என்…

  9. 13 APR, 2025 | 10:24 AM உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளோம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். கிண்ணியா நகர சபை மைதானத்தில் சனிக்கிழமை (12) மாலை இடம்பெற்ற பொதுக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் தொடர்ந்தும் கூறுகையில் , தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவே எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் செயற்படுகிறது. கடந்த காலங்களில் திகன, மாவனல்லை என பல பிரச்சினைகள் உருவாகியது. ஆனால், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிபீடமேறி ஆறு மாதங்களே.. அவ்வாறான பிரச்சினைகள் இல்லாமல் வாழ்கிறீர்கள். இதற்காக அனைவரும் நாட்டை கட்டியெழுப்ப ஒற்றுமையாக பயணிக்க வேண்டியுள்ளது. எனவே தான் இம் முறை தேர்தலில் கிண்ணியா நகர சபை மற்…

  10. யாழில் தமிழில் உரையாற்றிய அமைச்சர் விஜித! நாங்கள் சந்தர்ப்பவாதிகள் இல்லை. எந்த வித பேதங்களும் இல்லாத ஒரு தாய் பிள்ளைகளே என வெளிநாட்டலுவல்கள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் யாழ்ப்பாணத்தில் தமிழில் உரையாற்றினார். யாழ்ப்பாணத்திற்கு விஐயம் செய்திருந்த அமைச்சர் விஜித ஹேரத் வர்த்தகர்களுடனான சந்திப்பிலும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களிலும் நேற்று கலந்து கொண்டிருந்தார். இதன் போது தனக்கும் கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரியும் எனக் கூறி பல இடங்களிலும் சிறிது நேரம் தமிழ் மொழியில் உரையாற்றியிருந்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ள நான் இங்கு தமிழில் பேசவே விரும்புகிறேன். எனக்கும் கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரியும். அதனால் தமிழில் கொஞ்சம் உரையாற்றிவிட்டு தொ…

  11. வவுனியாவில் தமிழ் மொழியில் தண்டப்பத்திரம் கோரிய சாரதி : பிடித்து இழுத்து முச்சக்கர வண்டியில் ஏற்றிய போக்குவரத்து பொலிஸார் 13 APR, 2025 | 10:08 AM வவுனியா, குருமண்காட்டு சந்தியில் வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் தமிழ் மொழியில் தண்டப்பத்திரம் கோரிய சாரதியினை பிடித்து இழுத்து முச்சக்கர வண்டியில் ஏற்ற முற்பட்டமையினால் அவ்விடத்தில் பதற்ற நிலமை காணப்பட்டது. சனிக்கிழமை (12) இடம்பெற்ற இவ் விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வாகன சாரதி ஒருவர் வர்த்தக நோக்கத்திற்காக குருமண்காடு சந்தியில் வாகனத்தினை நிறுத்தியுள்ளார். இதன்போது வாகனத்தினை அவ்விடத்திலிருந்து அகற்றுமாறு போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும், வர்த்தக நிலையத்திற்கு பொருட்களை இற…

  12. சஹஸ்தனவி மின்சார உற்பத்தி நிலையத்திற்கான மின் உற்பத்தி ஒப்பந்தத்தில் மின்சார சபை கைச்சாத்து! சஹஸ்தனவி மின்சார உற்பத்தி நிலையத்திற்கான மின் உற்பத்தி ஒப்பந்தத்தில் இலங்கை மின்சார சபை கைச்சாத்திட்டுள்ளது. சஹஸ்தனவி மின்சார உற்பத்தி நிலையமானது சஹஸ்தனவி நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டு, இயக்கப்பட்டு வருகின்றது. இந்த சஹஸ்தனவி மின்சார உற்பத்தி நிலையத்தின் உரிமமானது 25 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கை மின்சார சபைக்கு பரிமாறப்படும் என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறைந்த கட்டணத்தில் மின்சாரத்தை வழங்குவதை நோக்கமாக கொண்டு இலங்கை மின்சார சபை இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது. 350 மெகாவாட் திறனுடைய சஹஸ்தனவி மின் உற்பத்தி நிலையமானது இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் அங்கீக…

  13. மின்சார சபையின் அறிவிப்பால் அதிருப்தியில் பயனாளர்கள் நாட்டில் உருவான மின்சார தட்டுப்பாட்டைத் தொடர்ந்து இலங்கை அரசாங்கம் இலங்கை மின்சார சபையுடன் இணைந்து சூரிய மின்கல திட்டத்தை (Solar Panel) நாடு முழுவதும் உருவாக்கி உள்ளது. இதில் சூரிய மின்கல திட்டத்தை பயன்படுத்தும் பாவனையாளர்கள் தாங்கள் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு மேலதிகமாக வரும் மின்சாரத்தை இலங்கை மின்சார சபைக்கு வழங்கி வருகின்றனர். இந்நிலையில், ஏப்ரல் பண்டிகைக் காலத்தில் தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதிசெய்ய, ஏப்ரல் 10 முதல் ஏப்ரல் 21வரை, அனைத்து சோலார் உற்பத்தியாளர்களையும் துண்டிக்குமாறு இலங்கை அரசாங்கம் கண்டிப்பான உத்தரவை வெளியிட்டுள்ளது. அறிவிப்பானது பாரிய நெருக்கடிக்கு.. ஏப்ரல் புத்தாண்டுக் காலத்தில் நாட்டிற்கு…

  14. பொலிஸ் காவலின் கீழான உயிரிழப்புக்கள் தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் கலாசாரத்துக்கு வழிகோலுகின்றன - சுயாதீன விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் வலியுறுத்தல் Published By: DIGITAL DESK 2 12 APR, 2025 | 12:21 PM (நா.தனுஜா) பொலிஸ்காவலின் கீழான உயிரிழப்புக்கள் தன்னிச்சையான கைதுகள் மற்றும் தடுத்துவைத்தல் என்பவற்றுடன் நெருங்கிய தொடர்புடையவை எனவும், அவை தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் கலாசாரம் உருவாவதற்கு வழிவகுக்கிறது எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார். அதுமாத்திரமன்றி பொலிஸ் நிலையத்திலோ அல்லது சிறைச்சாலையிலோ இடம்பெறும் காவலின் கீழான உயிரிழப்புக்கள் தொடர்பில் சுயாதீன அதிகாரிகளால் உடனடியாக விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று…

  15. 12 Apr, 2025 | 10:57 AM (நா.தனுஜா) இலங்கையின் இவ்வாண்டு பொருளாதாரம் 3.9 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்யும் என ஆசிய அபிவிருத்தி வங்கி எதிர்வுகூறியுள்ளது. அதேவேளை அமெரிக்காவினால் விதிக்கப்பட்டிருக்கும் தீர்வை வரிகள் தொடர்பில் கருத்துவெளியிட்டிருக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான சிரேஷ்டபொருளியலாளர் லிலியா அலெக்சன்யன், அமெரிக்காவினால் விதிக்கப்பட்டிருக்கும் தீர்வைகளுக்கு விலக்களிக்கப்படக்கூடும். அல்லது பேச்சுவார்த்தைகள் ஊடாக அவ்வரி அறவீட்டு வீதத்தைக் குறைத்துக்கொள்ளமுடியும். அதன்மூலம் சகலரும் குறைந்தளவிலான தாக்கங்களுக்கே முகங்கொடுக்கநேரும் எனச் சுட்டிக்காட்டியுள்ளார். அதேபோன்று இலங்கையின் நிதியியல் மற்றும் நாணயக்கொள்கை முகாமைத்துவம் சிறப்பானதாகக் காணப்படுவதாகவும்,…

  16. Published By: VISHNU 12 APR, 2025 | 01:37 AM மாகாணசபைத் தேர்தலை வெகுவிரைவில் நடத்துவதற்கு முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். வடக்கு மண் பல பிரச்சினைகளையும் இரத்தத்தையும் கண்டுள்ளது. அவற்றை ஆற்றுப்படுத்துவதற்கான பொறுப்பு எமக்குள்ளது. அதற்கான நடவடிக்கைகளை சிறந்த முறையில் வெளிப்படையான தன்மையுடன் மேற்கொள்வோம். வடக்கு மக்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கையை நிச்சயமாக பாதுகாப்போம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உறுதியளித்தார். காரைநகரில் வெள்ளிக்கிழமை (11) நடைபெற்ற தேர்தல் பிராசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு பிரதமர் மேலும் உரையாற்றியதாவது, காரைநகர் மண்ணிற்கு வருகை தந்தமையையிட்டு மகிழ்ச்சிடைகிறேன். இந்த மண் பல பண்பாட்டு கல…

  17. யாழில். 35 ஆண்டுகளின் பின் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்ட வீதி! யாழ்.வசாவிளான் சந்தி முதல் பொன்னாலை – பருத்தித்துறை வீதி வரையிலான பலாலி வீதி நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் 35 ஆண்டுகளுக்கு பின்னர் மக்கள் போக்குவரத்துக்காக திறந்து விடப்பட்டுள்ளது. இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தின் ஊடாக செல்லும் சுமார் 2.5 கிலோ மீற்றர் நீளமான குறித்த வீதியானது கடந்த 1990ஆம் ஆண்டு முதல் மக்கள் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டிருந்தது. அதனால் யாழ்ப்பாணத்தில் இருந்து பலாலி வடக்கு பிரதேசத்திற்கு செல்லும் மக்கள் காங்கேசன்துறை சென்று அங்கிருந்தே பலாலி வடக்கிற்கு செல்லும் நிலைமை காணப்பட்டு வந்த நிலையில் குறித்த வீதியின் ஊடாக போக்குவரத்திற்கு அனுமதிக்குமாறு யுத்தம் நிறைவடைந்த காலம் முதல் சுமார்…

  18. 12 APR, 2025 | 08:51 AM (லியோ நிரோஷ தர்ஷன்) சர்வதேச வெசாக் தினத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதி திங்கட்கிழமை வியட்நாம் செல்கின்றார். 'உலக அமைதி மற்றும் நிலையான வளர்ச்சிக்கான பௌத்த நுண்ணறிவு' என்ற தொணிப்பொருளில் 2025 சர்வதேச வெசாக் தினம் இம்முறை கொண்டாடப்படுகின்றது. சுமார் 80 நாடுகளின் பிரதிநிதிகள் சர்வதேச வெசாக் தினத்தில் பங்கேற்க உள்ளனர். ஹோ சி மின் நகரில் அமைந்துள்ள வியட்நாம் பௌத்த நிலையத்தில் நடைபெறவுள்ள சர்வதேச வெசாக் தினம் மற்றும் சர்வதேச அறிவியல் மாநாட்டில் சுமார் 1,000 சர்வதேச பிரதிநிதிகள் உட்பட 2,000 பேர் வரை பங்கேற்க உள்ளனர். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சில நாடுகளின் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழ…

  19. 11 Apr, 2025 | 03:40 AM 2024 உடன் ஒப்பிடும்போது 2025 ஆம் ஆண்டில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கான பாரம்பரிய “பலகாரங்கள் அடங்கிய மேசையைத்” தயார் செய்வதற்கான செலவினம் 7% ஆல் அதிகரித்துள்ளதோடு இது 2019ஆம் ஆண்டை விட இரு மடங்கு அதிகமாகும். இது, வெரிட்டே ரிசர்ச் நிறுவனத்தால் நடைமுறைப்படுத்தப்படும் இலங்கையின் முதன்மையான பொருளாதார தகவல் தளமான PublicFinance.lk ஆல் மேற்கொள்ளப்படும் வருடாந்த ‘புத்தாண்டு பலகார மேசையைத்’ தயார் செய்வதற்கான பகுப்பாய்வில் தெரியவந்துள்ளது. 2024 மார்ச் மாதம் முதல் 2025 மார்ச் மாதத்திற்கு இடைப்பட்ட காலகட்டத்தில் மூலப்பொருட்களின் விலைகளில் 7% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதை இப் பகுப்பாய்வு கண்டறிந்துள்ளது. இதற்கு முதன்மையாக, தேங்காய் விலை மற்றும் தேங்காய் எண…

  20. 11 Apr, 2025 | 12:37 PM இலங்கையில் முதல் முறையாக திருகோணமலைக்கு கடற்படை தளத்தில் ஆழ்கடலில் சிங்கள - தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. இலங்கை கடற்படையின் சுழியோடி பிரிவினரின் ஒத்துழைப்புடன் கடற்படையின் மலிமா ஹொஸ்பிடாலிட்டி சர்வீசஸ் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தது. சிங்கள மற்றும் தமிழ் சமூகங்களின் வளமான பாரம்பரியத்தை வெளிப்படுத்தவும் இலங்கையின் அழகிய நீரின் ஆற்றலை எடுத்துக்காட்டும் வகையிலும் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் சுழியோடும் வீரர்கள் பாரம்பரிய கலாசார நிகழ்வுகளை நடத்தி, விளையாட்டுக்களில் ஈடுபட்டதாக இலங்கை கடற்படை அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. இலங்கையில் முதல் முறையாக ஆழ்கடலில் புத்தாண்டு கொண்டாட்டம் | Virakesari.lk

  21. 11 Apr, 2025 | 11:27 AM யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு மற்றும் சுண்டிக்குளம் கடற்பகுதிகளில் ஒளி பாய்ச்சி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 6 பேர் 5 படகுகளுடன் வியாழக்கிழமை (10) காலை கைது செய்யப்பட்டனர். கடந்த புதன்கிழமை (09) இரவு தொடக்கம் வியாழக்கிழமை காலை வரை வடமராட்சி கிழக்கு உடுத்துறை, ஆழியவளை, வெற்றிலைக்கேணி, சுண்டிக்குளம் ஆகிய பகுதிகளும் அங்குள்ள கடற்பரப்பு பகுதிகளும் சமநேரத்தில் வெற்றிலைக்கேணி கடற்படையினரால் திடீரென சுற்றிவளைக்கப்பட்டன. கட்டைக்காடு தொடக்கம் சுண்டிக்குளம் வரையான கடல் பகுதிகளில் பல படகுகள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலுக்கமைய, குறித்த கடற்பரப்புக்கு கடற்படையின் படகுகள் அனுப்பப்பட்டு, காங்கேசன்துறையில் இருந்து அதிவிரைவு டோரா படகும் …

  22. 11 Apr, 2025 | 06:32 PM முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் வடக்கு கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள, புலிபாய்ந்த கல் பகுதியில் தமிழ் மக்களின் பூர்வீக மீனவ வாடிகளை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் அனுமதிகள் எவற்றையும் பெறாது அத்துமீறி பெரும்பான்மை இனத்தவர்களால் அமைக்கப்பட்ட வாடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியநிலையில், கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் மஞ்சுளாதேவி சதீசன் குறித்த பகுியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள வாடிகளை அகற்றுமாறு குறித்தபகுதியில் வெள்ளிக்கிழமை (11) அறிவித்தலைக் காட்சிப்படுத்தியுள்ளார். அத்தோடு அப்பகுதியில் அத்துமீறி வாடி அமைத்த சந்தேகநபராக இனங்காணப்பட்ட W.L.நிசாந்த என்னும் பெரும்பான்மை இனத்தவருக்க…

  23. 11 Apr, 2025 | 04:16 PM யாழ்ப்பாணம், மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை (11) காலை இடம்பெற்ற நிலையில், பிரதமர் ஹரிணி அமரசூரிய பகல் வேளையில் ஆலயத்துக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டார். பிரதமர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போதே ஆலய வழிபாட்டிலும் கலந்துகொண்டார். பிரதமரின் வருகையை முன்னிட்டு ஆலய வளாகத்துக்குள் விசேட அதிரடிப் படையினர், பொலிஸார் மற்றும் பிரதமர் பாதுகாப்பு பிரிவினர் அனைவரும் குவிக்கப்பட்டனர். பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட நிலையில் ஆலயத்துக்கு வருகை தந்த பக்தர்கள் சோதனையிடப்பட்டு கெடுபிடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்ததால் பக்தர்கள் விசனம் தெரிவித்ததையடுத்து ஆலய தர்மகர்த்தா முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடி பாதுகாப்பு கெடுபி…

  24. மனித புதைகுழிகளை தோண்டுவதற்கு இதுவரை இலங்கையின் எந்த அரசாங்கமும் 100 வீத ஆதரவை வழங்கவில்லை ; அரசாங்கங்களிடம் இதற்கான அரசியல் உறுதிப்பாடு இல்லை ; சதொச மனித புதைகுழி அகழ்வு சட்டமா அதிபரின் தலையீட்டால் பாதிக்கப்பட்டது - சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரத்னவேல் Published By: RAJEEBAN 11 APR, 2025 | 05:26 PM ரஜீவன் மனித புதைகுழிகளை தோண்டும் நடவடிக்கைகளுக்கு இலங்கையில் எந்த அரசாங்கமும் இதுவரை நூறு வீத ஆதரவை வழங்கவில்லை என தெரிவித்துள்ள சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ். ரத்னவேல், அரசாங்கங்களிடம் இது தொடர்பாக அரசியல் உறுதிப்பாடு இல்லை என தெரிவித்துள்ளார். கொழும்பில் காணாமல்போனோரை தேடியறியும் குழுவினர் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இதனை அவர் தெர…

  25. முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பு! முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் ஏப்ரல் 17 ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் (CIABOC) ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதிய ஜனநாயக முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இலஞ்ச வழக்கு விசாரணைக்காகவே அவருக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாகாண சபை நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டது தொடர்பாக ரணில் விக்கிரமசிங்கே வெளியிட்ட சிறப்பு அறிக்கையில் அவர் தெரிவித்த கருத்துக்கள் க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.