Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் திரு. த சுதாகரன் தற்காலிகமாக இடைநிறுத்தம்..! Vhg ஜூன் 12, 2025 கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் சார்பில் படகு சின்னத்தில் கோட்டைக்கல்லாறு (09 ஆம் வட்டாரத்தில்) வெற்றி பெற்று உள்ளூராட்சி மன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்த திரு த. சுதாகரன் கட்சியின் கொள்கை விதிகளுக்கு முரணாகவும், கட்சியினால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராகவும் இன்று (12) மண்முனை தென் எருவில் பற்று பிரதேச தவிசாளர், மற்றும் பிரதி தவிசாளர் தெரிவுகளின் போது செயல்பட்டதன் காரணமாக கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள்…

  2. நாகப்பட்டினம் - காங்கேசன்துறை கப்பல் சேவையை மேம்படுத்த இந்தியா மீண்டும் உதவி General13 June 2025 நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையே மேற்கொள்ளப்பட்டு வரும் பயணிகள் கப்பல் சேவையை, மேம்படுத்துவதற்காக, இந்திய அரசு மேலும் ஒரு வருடத்திற்கு நிதி உதவியை நீடித்துள்ளது. இது பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதற்கும் இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்துவதற்கும், இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்று இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. உயர்ஸ்தானிகராலய தகவல்படி, இந்திய செயல்திறன் இடைவெளி நிதியளிப்பு பொறிமுறையின் கீழ், இலங்கைக்கு ஆண்டுதோறும் 300 மில்லியன் இந்திய ரூபாய்க்கும் அதிகமான தொகை வழங்கப்பட்டு வருகிறது. இது, கடந்த ஆண்டைப் போலவே, முக்கிய செயற்பாட்டு…

  3. Published By: DIGITAL DESK 2 13 JUN, 2025 | 11:07 AM நாட்டில் கடந்த சில வாரங்களில் சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற சுவாச நோய்கள் அதிகரித்து வந்தாலும், கொவிட்-19 நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளதாக சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இது தொடர்பாக தொற்றுநோயியலின் விஞ்ஞானப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் அதுல லியனபத்திரண கருத்து தெரிவிக்கையில், “கொவிட்-19 இப்போது பல்வேறு சுவாச நோய்களில் ஒன்றாகவே கண்காணிக்கப்படுகிறது. தற்போதைய நிலவரத்தின்படி, கொவிட் நோயாளிகள் தொடர்பான தனித் தரவுகள் சேகரிக்கப்படுவதில்லை. எனினும், நிலைமையின் மீது எங்களது தீவிர கண்காணிப்பு தொடர்ந்தும் காணப்படுகிறது” என்றார். மேலும், இந்நேரத்தில் இன்புளுவென்சா மற்றும் பிற சுவாச நோய்களின் பரவல் அதிகரி…

  4. சாவகச்சேரி நகரசபையில் வீடா... சைக்கிளா...இன்று கடும்போட்டி சாவகச்சேரி நகரசபையில் ஆட்சியைக் கைப்பற்றப் போவது யார்? என்பது தொடர்பில் தமிழ் மக்கள் பேரவைக்கும்.இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் இடையில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. சாவகச்சேரி நகரசபையின் அமர்வு உள்ளூராட்சி ஆணையாளரின் தலைமையில் இன்று மாலை இடம்பெறவுள்ளது. இதில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக தமிழரசுக் கட்சிக்கும். தமிழ் மக்கள் பேரவைக்கும் இடையில் பலப்பரீட்சை நடைபெறவுள்ளது. இருதரப்பினரும், தமக்கு ஆதரவைக் கோரி நேற்று இரவிரவாக பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தனர். https://newuthayan.com/article/சாவகச்சேரி_நகரசபையில்_வீடா..._சைக்கிளா...இன்று_கடும்போட்டி

    • 2 replies
    • 230 views
  5. யாழ் மாநகர சபையின் முதல்வராக மதிவதனி விவேகானந்தராஜா தெரிவு : துணை முதல்வரானார் தயாளன் 13 JUN, 2025 | 09:58 AM யாழ் மாநகர சபையின் முதல்வராக மதிவதனி விவேகானந்தராஜா 19 வாக்குகளை பெற்று முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். யாழ் மாநகர சபையின் முதல்வரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (13) காலை யாழ் மாநகர சபை சபா மண்டபத்தில் நடைபெற்றது. யாழ் மாநகர சபை 45 உறுப்பினர்களை கொண்ட சபையாகும். இலங்கை தமிழ் அரசுக் கட்சி 13 ஆசனங்களையும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 12 ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி 10 ஆசனங்களையும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகியன தலா 4 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன தலா ஒரு ஆசனங…

  6. எல்லை தாண்டும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது உறுதி செய்திகள் இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய வருகையைத் தடுக்க இலங்கை அரசும், மீன்பிடி அமைச்சும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. கடற்படையும் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் இலங்கை கடல் எல்லையை கடற்படை மூலம் தீவிரமாகக் கண்காணிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதோடு, அத்துமீறி வரும் இந்திய மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மீன்பிடி அமைச்சர் உறுதியளித்துள்ளதாக வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்தார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (12) மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் …

  7. Published By: DIGITAL DESK 2 12 JUN, 2025 | 09:16 PM யாழ்ப்பாணம் , பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மல்லாகம் நீதவான் நீதிமன்றை தவறாக வழிநடத்துவதாக மன்றில் சட்டத்தரணிகள் தமது சமர்ப்பணங்களில் தெரிவித்துள்ளனர். நீதிமன்ற கட்டளையை மீறி, தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக பலாலி பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்திருந்தனர். குறித்த வழக்கு இன்றைய தினம் வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, போராட்டம் நடத்தியவர் சார்பாக மன்றில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா, நா.காண்டீபன் ஆகியோர் சமர்ப்பனங்களை முன்வைத்தனர். குறித்த வழக்கு தொடர்பில் சட்டத்தரணிகள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், தையிட்டி விகாரைக்கு எதிரான போ…

  8. 12 JUN, 2025 | 03:20 PM தையிட்டி விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளுக்கு நஷ்ட ஈடு அல்லது மாற்றுக் காணிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். வலிகாமம் வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்றைய தினம் வியாழக்கிழமை (12) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை தவிர்த்து, அதனை சூழவுள்ள ஏனைய காணிகளை மாவட்ட செயலரிடம் கையளிக்க பணிக்கப்பட்டுள்ளது. மாவட்ட செயலர் பிரதேச செயலர் ஊடாக காணி உரிமையாளர்களுக்கு காணிகளை கையளிப்பார். அதேவேளை தனியார் காணிக்குள் விகாரை அமைக்கப்பட்டிருந்தால், அந…

  9. Published By: VISHNU 12 JUN, 2025 | 06:12 PM (நா.தனுஜா) இலங்கையில் நடைபெறவிருக்கும் 'மீட்சிக்கான இலங்கையின் பாதை: படுகடன் மற்றும் ஆளுகை' மாநாட்டில் கலந்துகொள்ளவிருக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் துணை முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி கீதா கோபிநாத், இது இலங்கையின் அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்களில் கவனம்செலுத்துவதற்கான சிறந்த வாய்ப்பாக அமையும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (15) நாட்டுக்கு வருகைதரவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் துணை முகாமைத்துவப் பணிப்பாளர் கீதா கோபிநாத், எதிர்வரும் திங்கட்கிழமை (16) நடைபெறவிருக்கும் 'மீட்சிக்கான இலங்கையின் பாதை; படுகடன் மற்றும் ஆளுகை' மாநாட்டில் கௌ…

  10. அனுரகுமார அரசாங்கம் அதன் முன்னைய அரசாங்கங்களில் இருந்து வேறுபட்டதாக தெரியவில்லை - பொறுப்புக்கூறுவதற்கான அர்த்தபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என ஜேர்மனி அழுத்தம் கொடுக்கவேண்டும் - சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் Published By: RAJEEBAN 12 JUN, 2025 | 11:52 AM இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல்கள் மற்றும் பாரிய அட்டுழியங்களிற்கு பொறுப்புக்கூறுவதற்கான அர்த்தபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என ஜேர்மனி அழுத்தம் கொடுக்கவேண்டும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கை ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க ஜேர்மனிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சூழ்நிலையிலேயே சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. இலங்கை குறித்த நீண்டகால கரிசனைகளை ப…

  11. முள்ளியவளை பகுதியில் திடீரென உருவாக்கப்பட்ட பௌத்த விகாரை வடிவிலான உருவம் June 12, 2025 10:49 am முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் திடீரென தனியார் காணி ஒன்றில் உருவாக்கப்பட்ட பௌத்த விகாரை வடிவிலான உருவம் இனம்தெரியாத நபர்களினால் அகற்றப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரிக்கு அருகில் தனியார் காணி ஒன்றில் இரு நாட்களுக்கு முன்னர் இரவோடு இரவாக பௌத்த சமயத்தை போதிக்கும் வகையில் மகிந்த தேரரின் இலங்கை வருகையும், பௌத்த மதத்தினை ஸ்தாபித்தலும் என தலைப்பிடப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், நேற்று புதன் கிழமை (11.06.2025) இரவு இனம் தெரியாதோரால் காட்சிப்படுத்தப்பட்ட பதாதை கிழித்தெறியப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. https://oruvan.com/…

  12. படுகொலை செய்யப்பட்ட பொலிஸாரின் ஞாபகார்த்த நிகழ்வு தமிழீழ விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த சுமார் 600 பொலிஸார் படுகொலை செய்யப்பட்டு 35 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு ஞாபகார்த்த நிகழ்வு நேற்று (11) அம்பாறை பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் அமைந்துள்ள ரணவிரு ஞாபகார்த்த நினைவு தூபியில் இடம்பெற்றது. 1990 ஜூன் 11 அன்று தமிழீழ விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட 600 பொலிஸ் அதிகாரிகளின் நினைவாக அமைதி என்ற பெயரில் இம்மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. குறித்த நிகழ்வின் போது கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தர உள்ளிட்ட பொலிஸ் உயரதிகாரிகள், பொலிஸார் ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். https://adaderanatamil.lk/news/c…

  13. அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு எதிராக மனுத் தாக்கல் வடக்கு சாவகச்சேரி நகர சபை மற்றும் பிரதேச சபைக்கு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு உறுப்பினர்களாகத் தேர்வான இருவர் அந்தந்த உள்ளூராட்சி சபைகளில் உறுப்பினர்களாகப் பதவியேற்பதற்கு எதிராகத் தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்தச் சபைகளில் ஒன்று தவிசாளரைத் தெரிவு செய்வதற்காக நாளை கூடவிருக்கும் நிலையில், இன்று இந்த மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவிருக்கின்றது. 2025 ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் திகதி இடம்பெற்ற உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலின்போது சாவகச்சேரி நகர சபை மற்றும் சாவகச்சேரி பிரதேச சபையில் போட்டிய…

  14. தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் நிர்வாக முறைகேட்டைக் கண்டித்து மருத்துவர்கள் நாளை போராட்டம்! யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் நிலவும் நிர்வாக முறைகேட்டைக் கண்டித்தும், புற்றுநோய்ப் பிரிவை வினைத்திறனாக இயங்குவதற்கு வழிவகைகளை ஏற்படுத்துமாறு கோரியும் நாளை கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித் துள்ளது. இது தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் உள்ளதாவது:- தெல்லிப்பழை மண்ணின் புகழ்பூத்த தெல்லிப்பழை மருத்துவமனை போர் மற்றும் இடம்பெயர்வுகளைக் கண்டபோதிலும், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு அடுத்ததாக வடக்கு மாகாண மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் மருத்துவமனையாகக் காணப்படுகின்றது. அத்துடன், விசே…

  15. 12 JUN, 2025 | 09:58 AM நாடளாவிய ரீதியில் பரவிவரும் கொவிட் -19 திரிபினால் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட மருத்துவப் பேராசிரியர் துஷாந்த மெதகெதர தெரிவித்தார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட, வயம்ப மருத்துவ பீடத்தின் முதன்மை மருத்துவப் பேராசிரியர் துஷாந்த மெதகெதர மேலும் கூறுகையில், “இலங்கை தொற்று நோயியல் பிரிவு தகவலின்படி, சுவாச நோயாளிகளில் 9% முதல் 13% வரை தற்போது புதிய கொவிட் திரிபினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொவிட் தொற்று மிகக் குறைந்த தீவிரத்தன்மை கொண்டது. இதனால் ஏற்படும் தாக்கம் மிகக் குறைவு. ஆனால் 65 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகள…

  16. 12 JUN, 2025 | 09:26 AM (நமது நிருபர்) ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட தொடர்பில் மேல்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இராணுவப் புலனாய்வுப்பிரிவின் ஓய்வுபெற்ற பிரிகேடியர் ஷம்மி குமாரரத்ன, முக்கிய சாட்சிகளை அச்சுறுத்தினார் எனும் குற்றச்சாட்டின்கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளார். திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தில் புதன்கிழமை (11) முன்னிலைப்படுத்தப்பட்ட அவரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் திகதி காணாமலாக்கப்பட்டார். அதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் அவர் கடத்தப்பட்டு, கொல்லப்பட்டிருக்க…

  17. இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணம் திரும்பியவர்களுக்கு 90 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை! adminJune 12, 2025 இந்தியாவிலிருந்து மீளத் திரும்பியவர்களின் சுமூகமான மீள் ஒருங்கிணைப்பிற்கான உதவித் தொகையானது யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனால் நேற்றைய தினம் புதன்கிழமை (11.06.25) மாவட்ட செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் மேலதிக செயலர் (காணி) க.ஸ்ரீமோகனன், OfERR (Ceylon) இணைப்பாளர் இ. பிரபாகர் ஆகியோர் கலந்து கொண்டனர். UNHCR நிறுவனத்தால் OfERR (Ceylon) நிறுவனம் தெரிவு செய்யப்பட்டு – அந் நிறுவனத்தால் இதற்கான உதவித்தொகை தலா 90 ஆயிரம் ரூபாய் வீதம் வேலணை மற்றும் சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் மீளத் திரும்பிய ஆறு பேருக்கு கொடுப்பனவு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.…

  18. சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டிக்கு யாழ் இந்து மாணவர்கள் தெரிவு! adminJune 12, 2025 சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டிக்கு யாழ் இந்து மாணவர்கள் நால்வர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். வியட்நாம் நாட்டில் எதிர்வரும் ஆகஸ்ட் 14 தொடக்கம் 19 வரை நடைபெறவுள்ள சர்வதேச ஒலிம்பியாட் போட்டிக்கு பிரிவு 3ல் தெரிவு செய்யப்பட்ட நான்கு மாணவர்களும் யாழ் இந்து மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையின் அனைத்து மாகாணங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட 500 மாணவர்களிடையே இவ்நான்கு மாணவர்களும் தெரிவாகியுள்ளனர். https://globaltamilnews.net/2025/216681/

  19. வீட்டு திட்டத்தை விரைந்து கட்டி முடியுங்கள் – பயனாளிகளுக்கு ஆளுநர் அறிவித்தல்! இலங்கையிலையே வடமாகாணத்தில் மாத்திரமே வீட்டு திட்டத்திற்கு தலா 18 இலட்சம் வழங்கப்படுகிறது! adminJune 12, 2025 மாரி மழைக்கு முன்னர் வீடுகளை கட்டி நீங்கள் குடியமரவேண்டும். உங்கள் கட்டுமானத்தின் முன்னேற்றத்தை எவ்வளவு விரைவாகச் செய்ய முடியுமோ அவ்வளவு விரைவாகச் செய்து அடுத்தடுத்த கட்டக் கொடுப்பனவுகளையும் பெற்றுக்கொள்ளுங்கள் என வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகன் வீட்டு திட்ட பயணிகளுக்கு தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் ஊடாக மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் மூலம் வீட்டு திட்டத்திற்கு தெரிவான பயனாளிகளுக்கு முதல் கட்ட கொடுப்பனவு வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போ…

  20. 11 JUN, 2025 | 07:40 PM (நா.தனுஜா) 'இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு, தாமே இந்நாட்டின் பூர்வகுடிகள்' எனும் சிங்கள பௌத்தர்களின் நம்பிக்கையே 'நாட்டிலுள்ள நிலங்கள் தமக்குச் சொந்தமானவை, சமூக கலாசார விடயங்களில் தாமே மேலாதிக்கம் உடையவர்கள்' எனும் மனநிலையை அவர்கள் மத்தியில் தோற்றுவித்திருப்பதாகவும், அது மத அடிப்படையிலான ஒடுக்குமுறைகள் மற்றும் பொருளாதார ரீதியிலான பிரிவினைகளுக்கு வழிகோலியிருப்பதாகவும் மத ரீதியிலான ஒடுக்குமுறைகள் தொடர்பில் இலங்கை தேசிய கிறிஸ்தவ சுவிசேஷ கூட்டிணைவினால் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 'அச்சத்திலிருந்து வன்முறைக்கு: இலங்கையில் இடம்பெற்ற மத அடிப்படையிலான தாக்குதல்கள்' எனும் தலைப்பில் இலங்கை தேசிய கிறிஸ்தவ சுவிசேஷ (எவாஞ்சலிக்கல்)…

  21. 11 JUN, 2025 | 07:24 PM ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவுக்கும் உலகளாவிய மாற்றத்துக்கான டோனி பிளேயர் நிறுவனத்தின் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (11) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. புதிய அரசாங்கத்தினது திட்டங்களின் முன்னுரிமைகளை இனங்கண்டு அதற்கு ஆதரவளிப்பதே இந்த சந்திப்பின் நோக்கமாகும். டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, கமத்தொழில் அமைச்சு, ஏற்றுமதி அபிவிருத்தி சபை மற்றும் முதலீட்டு சபை ஆகியவற்றால் செயற்படுத்தப்படும் திட்டங்களை ஆய்வு செய்து, அவற்றின் முன்னுரிமைகளை அடையாளம் கண்டு, அவற்றுக்கான நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வழங்குவது குறித்து, இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது. டோனி பிளேயர் நிறுவனத்தின் அதிகாரிகளினால் மேற்கொள்ள…

  22. தற்போதைய சிறுவர்கள் காய்கறிகள், பழங்களை உட்கொள்வதை தவிர்த்து வருகின்றனர்; பெற்றோர்களும் சமூகமும் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ 11 JUN, 2025 | 06:07 PM தற்போதைய இளைய தலைமுறையினர் காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்வதை வேகமாக தவிர்த்து வருகின்றனர். சுற்றுச்சூழலில் சத்தான மற்றும் சிறந்த பொருட்கள் காணப்பட்டாலும், பள்ளிகளில் அவை குறித்து எவ்வளவு தூரம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டாலும், சிறுவர்கள் காய்கறிகள் மற்றும் பழங்களை விரும்புவதில்லை. பெற்றோர்களும் சமூகமும் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். 2025ஆம் ஆண்டுக்கான தேசிய ஊட்டச்சத்து மாதத்துக்காக இன்று (11) காலை…

  23. 11 JUN, 2025 | 06:23 PM வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட தமிழர்களின் பூர்வீக கல்மடுக்குளத்தையும், அதன் கீழான வயல்நிலங்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வவுனியா மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்கவிடம் வன்னி மாவட்டநாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். அத்தோடு தமிழ் மக்கள் நீண்டகால இடப்பெயர்வைச் சந்தித்த இடங்கள், தற்போது பயன்பாடின்றி பற்றைக்காடுகளாகக் காணப்படுகின்றபோது, அந்த இடங்களை வனப்பகுதியாகக் கருதி, வனவளத் திணைக்களம் ஆக்கிரமிக்கும் செயற்பாட்டிற்கும் ரவிகரன் வன்மையாக கண்டனம் தெரிவித்தார். இவ்வருடத்திற்கான இரண்டாவது வவுனியா வடக்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இ…

  24. 11 JUN, 2025 | 04:01 PM பாடசாலை மாணவி ஒருவர் தலை வலி, வாந்தி, மயக்கம் போன்ற உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் இன்றைய தினம் (11) அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவரை, மேலதிக சிகிச்சைக்காக மாஞ்சோலை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல நோயாளர் காவு வண்டியின்றி வைத்தியசாலை நிர்வாகம் காணப்பட்டதால் உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவியும் அவரது பெற்றோரும் பெரும் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டி பற்றாக்குறையால் இதுபோன்ற பல பிரச்சினைகள் தொடர்ந்து காணப்பட்டு வருவதோடு, நோயாளர்களும் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். மாணவியின் நிலை தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, இன்று காலை உடையார் கட்டில் உள்ள பாடசாலைக…

  25. ஜனாதிபதி ஜேர்மனியை சென்றடைந்தார் - ஜேர்மனி ஜனாதிபதியை பிற்பகல் சந்திக்கவுள்ளார் 11 JUN, 2025 | 03:06 PM ஜேர்மனியக் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (11) முற்பகல் பெர்லினின் பிராண்டன்பேர்க் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார். ஜனாதிபதியை வரவேற்கும் உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வு, ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியரின் (Frank-Walter Steinmeier) தலைமையில் இன்று பிற்பகல் பெர்லினில் உள்ள பெல்வீவ் மாளிகையில் (Bellevue Palace) நடைபெறும். இதைத் தொடர்ந்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியருக்கும் (Frank-Walter Steinmeier) இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.