ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143279 topics in this forum
-
3 தலைமை நீதியரசர்கள் கொண்ட இரண்டாவது மேல் நீதிமன்றத்தை அமைக்க நடவடிக்கை – நீதி அமைச்சர்! மூன்று தலைமை நீதியரசர்கள் கொண்ட இரண்டாவது மேல் நீதிமன்றத்தை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரலை தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். அத்தோடு ஏற்கனவே இருக்கும் மேல் நீதிமன்றத்தில் போதிய வசதிகள் இல்லாதமையாலேயே இதன் நிர்மாணப் பணிகளில் மேலும் காலதாமதம் ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். கத்தோடு இரண்டாவது நீதிமன்றத்திற்கான நீதியரசர்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். ஐக்க…
-
- 0 replies
- 304 views
-
-
பேருந்து கட்டண குறைப்பு இன்று முதல் அமுலில் பேருந்து கட்டணங்களின் விலை நேற்று (புதன்கிழமை) நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளன. எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டதற்கு அமைய நுாற்றுக்கு 4.2 வீதத்தால் பேருந்து கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன. அரச மற்றும் தனியார் பேருந்து பயணக்கட்டணங்களும், சொகுசு மற்றும் அதிவேக நெடுஞ்சாலை பேருந்து பயணக் கட்டணங்களும் குறைக்கப்பட்டுள்ளன. அதற்கமைய 12 ரூபாய் என்ற ஆகக்குறைந்த பேருந்து பயணக் கட்டணம் அவ்வாறே அறவிடப்படவுள்ளதுடன், 15 ரூபாய் முதல் 29 ரூபாய் வரையில் காணப்பட்ட கட்டணங்கள் ஒரு ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளன. அத்துடன் 41 முதல் 52 ரூபாய் வரையிலான கட்டணங்கள் 2 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ள அதேநேரம், 206 ரூபாயாக இருந்த பே…
-
- 0 replies
- 334 views
-
-
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பிரதமர் நாளை பார்வையிடவுள்ளார் வடக்கின் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாட்டங்களின் வெள்ள அனர்த்த நிலைமைகளை பார்வையிட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அப்பகுதிக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கபட்பட்டுள்ளது. இதனை அமைச்சர் ரஞ்சித் மதுத்துமபண்டார தெரிவித்துள்ளார். கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களின் நிலை தொடர்பாக அவசர கலந்துரையாடல் ஒன்று பிரதமர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலில் மக்களின் இடர்பாடுகள், உணவுத்தேவைகள், வாழ்விடங்களின் நிலை தொடர்பாகவும், சுகாதார தேவைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது. இந்நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கிளிந…
-
- 0 replies
- 308 views
-
-
எதிர்க்கட்சி தலைவர் பதவியை வழங்கிப்பாருங்கள் – மக்கள் விடுதலை முன்னணி “எதிர்க்கட்சி தலைவர் பதவியை மக்கள் விடுதலை முன்னணிக்கு வழங்கிப் பாருங்கள் நாங்கள் உரிய கடமையை செய்து காட்டுகின்றோம்” என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார். நிகழ்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “இன்று இந்த நாட்டில் பொறுப்புக்கூறக்கூடிய தலைமைத்துவம் ஒன்று இல்லாது போய்விட்டது. ஜனாதிபதி – பிரதமருக்கு இடையில் முரண்பாடுகள் நிலவுகின்றன. ஜனாதிபதி சொல்வது ஒன்று செய்வது வேறொன்று. பிரதமர் நாட்டின் குற்றவாளிகளை காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் ஆட்சி நடத்தி வருகின்றார். …
-
- 0 replies
- 340 views
-
-
நாடு திரும்பும் வரை சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தை மூடுமாறு ஜனாதிபதி உத்தரவு! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின் பிரகாரம் கொழும்பில் அமைந்துள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகம் மூடப்பட்டுள்ளது. தாய்லாந்திற்கு தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டு செல்லும் ஜனாதிபதி, அங்கு ஒருவார காலம் தங்கியிருப்பார். இந்நிலையில் அவர் மீண்டும் வரும்வரை சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தை மூடுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்த ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் ரோகண லக்ஷ்மன் பியதாச, “கட்சி தலைமையகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஆண்டின் இறுதியில் வழங்கப்படும் விடுமுறை காரணமாகவே இந்நடவடிக்கை இட…
-
- 1 reply
- 467 views
-
-
கூட்டமைப்பில் நிழல் அமைச்சர்களாக எவரும் செயற்படவில்லை – சிவாஜிலிங்கம் விளக்கம்! பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் யாரும் நிழல் அமைச்சர்களாக செயற்படவில்லை என ரெலோ அமைப்பின் அரசியல் தலைவரும், வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார். வடமராட்சி கிழக்கில் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்து அங்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். குறித்த செய்தியாளர் சந்திப்பில், சுமந்திரன் உள்ளிட்ட சிலர், ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தில் நிழல் அமைச்சர்களாக செயற்படுவதாக குற்றம் சுமத்தப்படுவது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்…
-
- 0 replies
- 557 views
-
-
வடக்கில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலை தொடர்பாக பிரதமர் அலுவலகத்தில் கலந்துரையாடல் வடக்கின் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களின் நிலை தொடர்பாக அவசர கலந்துரையாடல் ஒன்று பிரதமர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் மக்களின் இடர்பாடுகள் உணவுத்தேவைகள் வாழ்விடங்களின் நிலை தொடர்பாகவும், சுகாதார தேவைகள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அமைச்சர்களுக்கு தெளிவு படுத்தினார். குறித்த கலந்துரையாடலில் அமைச்சர்களான வஜிர அபே குணவர்த்தன அகில விராஜ் காரியவசம் ரஞ்சித் மத்தும பண்டார பிரதமரின் செயலாளர் அமைச்சுக்களின் செயலாளர்கள் அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் ஆகியோ…
-
- 0 replies
- 352 views
-
-
கௌரவமான ஓய்வுக்குத் தயாராகும் ஜனாதிபதி சிறிசேன ? ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது தற்போதைய ஐந்து ஆண்டு பதவிக்காலத்தையும் முழுமையாகப் பூர்த்திசெய்துவிட்டு இரண்டாவது பதவிக்காலத்துக்கு மக்களின் ஆணையைக்கேட்பதற்கு தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றுதீர்மானித்திருப்பதாக அவரது குடும்ப வட்டாரங்கள் கூறியதாக லங்கா இணையத்தள செய்திச்சேவையொன்று தெரிவித்திருக்கிறது. விடுமுறையில் தற்போது குடும்பத்தினருடன் தாய்லாந்து சென்றிருக்கும் ஜனாதிபதி சிறிசேன அங்கு அவர்களுடன் தனது அரசியல் எதிர்காலம் குறித்து ஆராய்ந்ததாகவும் இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைவரம் குறித்து கடுமையான கவலையை அவர் வெளிப்படுத்தியதாகவும் அந்த வட்டாரங்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஜனாதிபத…
-
- 0 replies
- 398 views
-
-
தென்பகுதியில் எடுக்கப்பட்ட துரித நடவடிக்கை வடக்கிலும் எடுக்கப்பட வேண்டும் - சிவசக்தி ஆனந்தன் முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், தங்களது கிணறுகளில் மழைவெள்ளம் புகுந்துள்ளதால் அந்த நீரை பயன்படுத்த முடியவில்லை என தெரிவிக்கின்றனர். அண்மையில் பெய்த பெருமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் தங்களது கிணறுகளில் மழைநீருடன் சேறும் சேர்ந்துள்ளதால், அந்த நீரை பயன்படுத்த முடியாத நிலை தோன்றியுள்ளதாகவும், இதனால் தங்களது நீர்த்தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர். அண்மைய வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட மக்கள் தங்கியிருந்த இடைத்தங்கல் முகாம்களை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பின…
-
- 0 replies
- 745 views
-
-
"உரிமையை கோரும் வட, கிழக்கு தலைமைகள் வெள்ளத்தின் போது தலைகாட்டவில்லை" (நா.தனுஜா) வடகிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களின் உரிமைகளை பெற்றுத் தருமாறு கூறிவரும் சம்பந்தனோ, ஹக்கீமோ தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட வரவில்லை எனக் கூறிய இராணுவ ஊடகப் பேச்சாளர் சுமித் அத்தபத்து, இராணுவத்தினரே அந்த மக்களை தோள்களில் தூக்கி சுமந்து காப்பாற்றியுள்ளனர் எனவும் குறிப்பிட்டார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட சேதங்கள் அதிகம் என்பதுடன், அங்குள்ள நீர்நிலைகள் உடைப்பெடுத்தமையின் காரணமாக விரைவான மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியமும் ஏற்பட…
-
- 0 replies
- 402 views
-
-
யாழில் கையூட்டல் பெற்ற கிராம சேவகர் இடைநீக்கம்! யாழ்.மாவட்டத்தில் கையூட்டு பெற்ற கிராம சேவகரை உடன் அமுலுக்கு வரும் வகையில் மாவட்ட செயலர் நா.வேதநாயகன் தற்காலிகமாக பதவி நீக்கம் செய்துள்ளார். யாழ். சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் பணியாற்றும் கிராம சேவகர் ஒருவரே அவ்வாறு பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். குறித்த கிராம சேவையாளர் பிரிவின் கீழ் வசிக்கும் பெண் தலைமைத்துவ குடும்பத்தை சேர்ந்த குடும்ப பெண் ஒருவருக்கு வீட்டு திட்ட பணிக்காக ஒரு இலட்ச ரூபாய் பணம் வழங்கப்பட்டுள்ளது. அதில் தனக்கு 25 ஆயிரம் ரூபாய் பணத்தினை வழங்க வேண்டும் என கிராம சேவையாளர் குறித்த பெண்ணிடம் வற்புறுத்தி உள்ளார். அதனால் குறித்த பெண் 15 ஆயிரம் ரூபாயினை வழங்கியுள்ளார். இருந்த…
-
- 0 replies
- 583 views
-
-
காங்கேசன்துறையில் கடற்படை சிப்பாய் கைது! கஞ்சா போதை பொருளை உடமையில் வைத்திருந்த குற்றசாட்டில் கடற்படை சிப்பாய் ஒருவர் காங்கேசன்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். காங்கேசன்துறை கடற்படை முகாமில் கடமையாற்றும் காலியை சேர்ந்த 23 வயதுடைய கடற்படை சிப்பாயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடம் இருந்து 27 கிராம் 7 மில்லிகிராம் கஞ்சா போதை பொருளை மீட்டதாகவும், அவரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்தனர். http://athavannews.com/காங்கேசன்துறையில்-கடற்-2/
-
- 0 replies
- 294 views
-
-
வடக்கு, கிழக்கு உட்பட பல பகுதிகளுக்கு எச்சரிக்கை! வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் குறிப்பாக இன்றுபிற்பகலில் இருந்து மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. அத்தோடு மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 50 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் காரணமாக குறித்த பகுதி மக்கள் இட…
-
- 0 replies
- 454 views
-
-
யாழில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி 14 பேர் காயம். யாழ்ப்பாணம், அளவெட்டி பகுதியில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி 14 பேர் காயமடைந்ததுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். அளவெட்டி, அம்பானை பகுதியில் இச்சம்பவம் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் காயமடைந்த 14 பேரும் தெல்லிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். குறித்த பகுதியிலுள்ள வெற்றுக்காணியில் துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்த சிலர் அங்கிருந்த பற்றைகளை வெட்டியுள்ளனர். இதன்போது அதிலிருந்த குளவிக் கூடொன்று கலைந்து, துப்பரவு பணியில் ஈடுபட்டு இருந்தவர்கள் மற்றும் வீதியால் சென்றவர்களை துரத்தி கொட்டியதில் 14 பேர் காயமடைந்துள்ளனர். இந்…
-
- 0 replies
- 390 views
-
-
கர்த்தர் சொரூபம் விசமிகளினால் உடைப்பு: மன்னாரில் பரபரப்பு மன்னாரில் 40 வருடங்கள் பழமைவாய்ந்ததும் முக்கியத்துவம் வாய்ந்ததுமான புனித கர்த்தர் சொரூபம் இனந்தெரியாத சந்தேகநபர்களினால் உடைக்கப்பட்டுள்ளமையால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட ஆட்காட்டி வெளிபங்கு, ஆட்காட்டி வெளி- பருப்புக்கடந்தான் பிரதான வீதியில் அமைக்கப்பட்டிருந்த புனித கர்த்தர் சொரூபமே நேற்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு இனந்தெரியாத சந்தேகபர்களினால் அடித்து உடைக்கப்பட்டுள்ளது. குறித்த வீதியூடாக கறோல் நிகழ்வில் கலந்து கொண்டு, மீண்டும் அவ்வீதியூடாக பங்கு மக்கள் சென்று கொண்டிருந்த போதே குறித்த சொரூபம் உடைக்கப்பட்டதை அவர்கள் …
-
- 0 replies
- 328 views
-
-
புத்தர் சிலைகள் உடைத்து சேதமாக்கப்பட்ட விவகாரம் – அரசாங்கம் கண்டனம்! மாவனெல்லை பகுதியில் நேற்று முன்தினம் புத்தர் சிலைகள் உடைத்து சேதமாக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் அரசாங்கம் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. அத்தோடு சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டதாக அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சி தலைவருமான கபீர் ஹசிம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “மாவனெல்லவில் வணக்க வழிபாடுகளுக்கு எதிரான வன்முறைகளை நான் கண்டிக்கிறேன். சமீபத்தைய தாக்குதல்களுக்கு நான் கேள்விப்பட்டதைப் பொறுத்தவரை, சம்பந்தப்பட்டவர்களை விசாரிக்கவும் கைது செய்யவும் பொலிஸாருக்கு கட்டளையிட்டுள்ளேன். மேலும் இந்த சம்பவத்தில் இந்த இரண்டு சந்தேக நபர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட…
-
- 0 replies
- 696 views
-
-
தமிழர்களின் பூர்வீக நிலங்களை அபகரிக்கும் நோக்கில் திணைக்களங்கள் செயற்படுகின்றன ; சீ.வி.கே Share தமிழ் மக்களின் வரலாற்றை கண்டுகொள்ளாமல் அவர்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமிக்கும் நோக்கில் செயற்படும் திணைக்களங்கள் தமது நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டுமென வட.மாகாணசபை முன்னாள் அவைத்தலைவர் சீ.வி.கே. சிவஞானம் குறிப்பிட்டுள்ளார். தொல்லியல் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம் மற்றும் வனவள திணைக்களம் ஆகியன வடக்கில் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. இவற்றினை உடனடியாகத் தடுத்து நிறுத்துமாறு கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 14 பேருக்கும் கடந்த திங்கட்கிழமை கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார். …
-
- 1 reply
- 629 views
-
-
நிபந்தனைகளின் அடிப்படையிலேயே கூட்டமைப்பு ஆதரவை வழங்கியது - சிறிநேசன் நாட்டில் அண்மையில் ஏற்பட்ட அரசியல் சூழ்ச்சியின்போது பணநாயகத்தின் பிடியிலிருந்து ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் சில நிபந்தனையின் அடிப்படையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது ஆதரவை வழங்கியதாக அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிநேசன் தெரிவித்தார். ஒளிவிழா மற்றும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு - ஏறாவூர் எல்லை நகரில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார். கிராம அபிவிருத்திச்சங்கச் செயலாளர் சுப்ரமணியம் ரகுபரன் தலைமையில் இந்நிகழ்வில் பிரதேச சுகாதார வைத்தியதிகாரி இளயதம்பி …
-
- 0 replies
- 473 views
-
-
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்தும் நிவாரணம் வழங்கி வைப்பு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இறுதியுத்தம் இடம்பெற்ற முல்லைத்தீவு ஆனந்தபுரம் கிராமமக்களுக்கு அரியாலை சமூகத்தினரால் உலர் உணவு பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் என்பன நேற்று வழங்கிவைக்கப்பட்டது. அரியாலை சுதேசிய நூற்றாண்டு விழா சமூகத்தினரால் கிளிநொச்சி,முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்சியான நிவாரணபணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்தவகையில் முதற்கட்டமாக கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட புளியம்பொக்கணை,பெரியகுளம்,தரம்புரம்,வட்டக்கச்சி ஆகிய பிரதேச மக்களுக்கு கடந்த 23.12.18ஆம் திகதி உலர் உணவு பொருட்கள் மற்றும் ஆடைகள் வ…
-
- 0 replies
- 405 views
-
-
மறக்கமுடியாத வடுவான சுனாமி பேரழிவு – 14 ஆண்டுகள் ஆகியும் மறையாத சுவடுகள்! 2004 ஆம் ஆண்டு 12 ஆம் மாதம் 26 ஆம் திகதி அன்று இந்தோனேசியாவின் சுமத்ரா யாவா தீவுகளில் கடலுக்கடியில் ஏற்பட்ட பாரிய நில அதிர்வைத் தொடர்ந்து உருவாகிய ஆழிப்பேரலையானது இந்து சமுத்திரத்தின் கரையோர நாடுகளை தாக்கிய பேரனர்த்தத்தின் 14 ஆம் ஆண்டு நினைவு நாள் நாளை ஆகும். உலகையே உலுக்கிய சுனாமி என்ற ஆழிப்பேரலையின் கோரத்தாண்டவத்தால் ஏற்பட்ட பேரழிவின் சுவடுகள் 14 ஆண்டுகள் ஆன பின்பும் மறையவில்லை. இந்தோனேசியாவின் சுமத்ராவில் ஏற்பட்ட பூகம்பத்தினால் உருவான சுனாமிப் பேரலை, இந்தோனேசியாவை மாத்திரமல்லாது இலங்கை, இந்தியா, தாய்லாந்து, மாலைதீவு, பங்களாதேஷ் என ஏறக்குறைய 12 நாடுகளின் கரையோரப் பகுதிகளை அழித்தத…
-
- 5 replies
- 1.6k views
-
-
மன்னாரில் சுனாமி நினைவேந்தல் நிகழ்வு.. December 26, 2018 சுனாமிப் பேரலை ஏற்பட்டு 14 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று புதன் கிழமை நாட்டின் பல பாகங்களிலும் நினைவு கூறப்பட்டுள்ளது. சுனாமி பேரலையில் உயிர் நீத்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மன்னார் மாவட்ட அனார்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் மன்னார் பள்ளிமுனை லூசியா ம.வி பாடசாலையில் இன்று புதன் கிழமை காலை 9.25 மணியளவில் தேசிய பாதுகாப்பு தினத்தின் நினைவேந்தல் நிகழ்வு இடம் பெற்றது. இதன் போது ஆழிப்பேரலையின் போது உயிர் நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு நினைவு கூறப்பட்டதுடன், ஆழிப்பேரலையினால் உயிர் நீத்த மக்களுக்காக சர்வமத பிரார்த்தனைகளும் இடம் பெற்றன. குறித்த…
-
- 0 replies
- 389 views
-
-
த.தே.கூவின் கோரிக்கைகளை நிறைவேற்றி வை்ப்போம்:எம்.எச்.அப்துல் ஹலீம் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உடன்படிக்கைகள் எதுவும் செய்துகொள்ளாவிட்டாலும் அவர்களது நியாயமான வேண்டுதல்களை நிறைவேற்றி வைப்போம் என்று முஸ்லிம் சமய விவகார தபால்துறை அமைச்சர் எம்.எச்.அப்துல் ஹலீம் தெரிவித்தார். அவர் புதிதாக அமைச்சுக் கடமைகளைப் பொறுப்பேற்றபின் மல்வத்தை மாகாநாயக்க திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள சித்தார்த்த தேரர் மற்றும் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க வரகாகொட ஞானரத்ன தேரர் ஆகியோர்களை சந்தித்து நல்லுபதேசம் பெற்ற பின் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சு வாரத்ததைகள் நடத்தினாலும் எந்தவித உடன்படிக்கைக்கும் முற்படவில்லை என்றும் க…
-
- 2 replies
- 764 views
-
-
எந்நேரத்திலும் மஹிந்த மீண்டும் பிரதமராகலாம்: வாசுதேவ நாணயக்கார தற்போதைய அரசாங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் நீண்ட தூரம் பயணத்தை மேற்கொள்வதற்கு வாய்ப்பில்லை. ஆகையால் எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கும் பிரேரணையையொன்று எந்நேரத்திலும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் நிலைமை காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பாக நேற்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில், “கூட்டமைப்புடன் இணைந்து அரசாங்கம் பயணிப்பதை ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த சிலரே விரும்பவில்லை. ஆகையால் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த உறுப்பி…
-
- 0 replies
- 431 views
-
-
மைத்திரிக்கு வேட்டு வைக்கும் மொட்டு கட்சி எதிர்காலத் தேர்தல்களில் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக, சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன், இதுவரை எந்த உடன்பாடும் செய்து கொள்ளப்படவில்லை என்று, சிறிலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது. சிறிலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்து போட்டியிட சிறிலங்கா சுதந்திரக் கட்சி முடிவு செய்திருப்பதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கூறியிருந்த நிலையிலேயே, சிறிலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலர் சாகர காரியவசம் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். “அரசியல் கூட்டணியை அமைப்பதற்கான கதவை நாங்கள் திறந்தே வைத்துள்ளோம். ஆனால் இன்னமும் எவருடனும் உடன்பாடு ஏதும் எட்டப்படவில்லை. தேர்தல் அறிவிக்கப்பட்டதும், கூட்டணிய…
-
- 0 replies
- 351 views
-
-
புதிய அமைச்சர்களின் பொறுப்புகள் – அரசிதழ் அறிவிப்பு தாமதம் புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்ட போதும், அவர்களுக்கான அமைச்சுக்கள், பொறுப்புகள் தொடர்பான அரசிதழ் அறிவிப்பு வெளியிடப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்க சிறிலங்கா அதிபரால் நியமிக்கப்பட்டதை அடுத்து, 28 அமைச்சர்களும், நியமிக்கப்பட்டனர். அதன் பின்னர், அமைச்சரவையில் இடம்பெறாத அமைச்சர்கள், இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களும் நியமிக்கப்பட்டனர். எனினும், புதிய அமைச்சர்களுக்கான பொறுப்புகள், துறைகளை உள்ளடக்கிய அரசிதழ் அறிவிப்பு இன்னமும் வெளியிடப்படவில்லை. இந்தவாரம் இதுபற்றிய அறிவிப்பு வெளியிடப்படும் எ…
-
- 0 replies
- 275 views
-