ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142757 topics in this forum
-
வடக்கில் அதிகரித்துள்ள சிறுவர் துஷ்பிரயோகமும் இளவயது கர்ப்பமும்! சிறுவர் இல்லங்களில் சேர்ப்பதற்காக அனுமதி கோரும் சிறுவர்களின் எண்ணிக்கை வடக்கில் அதிகரித்துச் செல்வதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் யுனிசெப் பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டினார். வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்து கள நிலைமைகளை ஆய்வு செய்யும் யுனிசெப் அமைப்பின் பிரதிநிதிகள் குழு வடக்கு மாகாண ஆளுநரை, ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை சந்தித்துக் கலந்துரையாடினர். இதன்போது ஆளுநரிடம், யுனிசெப் அமைப்பு முன்னெடுத்துள்ள திட்டங்கள் தொடர்பாகவும் தமது கள நிலைமை ஆய்வு தொடர்பாகவும் விளக்கமளித்தனர். இதன் பின்னர் கருத்துத் தெரிவித்த ஆளுநர், 1991ஆம் ஆண்டு உதவி அரசாங்க அதிபராக தான் பதவியேற்ற காலத்திலிருந்து யுனிசெப்…
-
- 0 replies
- 100 views
-
-
பட்டலந்த போன்று வெலிக்கடை படுகொலையையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்! அரசாங்கம் நியாயமாக செயற்படுமாக இருந்தால் பட்டலந்த போன்று வெலிக்கடை படுகொலையையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், பட்டலந்த அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அது இவ்வளவு காலமும் தூசு தட்டாமல் இருந்து ஜேவிபி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின் பாராளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. உண்மையில்…
-
- 0 replies
- 148 views
-
-
செம்மணிப் புதைகுழிக்கு நிதியொதுக்கவில்லை! [Wednesday 2025-04-02 16:00] யாழ்ப்பாணம் - செம்மணி சித்துப்பாத்தி மயானத்தில் மனித என்புச் சிதிலங்கள் மீட்கப்பட்ட பகுதியில் மேலதிக அகழ்வாய்பை மேற்கொள்வதற்கு நிதி விடுவிக்கப்படவில்லை என்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நேற்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்கான நிதிமூலம் தொடர்பில் உறுதியான தகவல்கள் நீதிமன்றுக்குத் தெரிவிக்கப்படவில்லை. அத்துடன், அகழ்வுகளுக்காக துறைசார் நிபுணர் பேராசிரியர் ராஜ் சோமதேவாவை அழைப்பது தொடர்பில் சட்ட மருத்துவ அதிகாரி செல்லையா பிரணவன் மன்றின் கவனத்துக்குக…
-
- 1 reply
- 192 views
-
-
அசல் பிறப்பு சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை ஏற்க உத்தரவு! உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களில் இருந்து பிறப்புச் சான்றிதழ்களின் அசல் நகல்களைக் கொண்ட வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று (02) மீண்டும் பரிசீலிக்கப்பட்டபோது, மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் மொஹமட் லாஃபர் தாஹிர் மற்றும் கே.பி. பெர்னாண்டோ ஆகிய நீதியரசர்களால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிறப்புச் சான்றிதழ்களின் அசல் நகல்களுடன் வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்வது தொடர்பாக நீதிமன்றத்தில் இணக்கம் எ…
-
- 0 replies
- 175 views
-
-
02 APR, 2025 | 05:20 PM (இராஜதுரை ஹஷான்) தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களை தவிர்த்து ஏனைய வேட்பாளர்களை எவ்விதமான அடிப்படைகளுமில்லாமல் ஊழல்வாதிகள் என்று ஜனாதிபதி குறிப்பிடுவது பிரதிவாதிகளுக்கு இழைக்கும் அநீதியாகும். தேசிய மக்கள் சக்தியின் தலைவர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிடுவது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு தமது சுயாதீன அதிகாரத்துக்கமைய உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஐக்கிய குடியரசு முன்னணி தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் காரியாலயத்தில் புதன்கிழமை (02) முறைப்பாடளித்ததன் பின்னர் ஐக்கிய குடியரசு முன்னணியின் உப தலைவரான தீக்ஷன கம்மன்பில குறிப்பிடுகையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த மார்ச் மாதம் 31 ஆம் தி…
-
- 0 replies
- 226 views
- 1 follower
-
-
02 APR, 2025 | 04:09 PM காலம் சென்ற மன்னார் மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் 4 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று புதன்கிழமை (02) காலை 10 மணியளவில் மன்னாரில் நடை பெற்றது. மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மன்னார் நகர பகுதியில் அமைந்துள்ள அன்னாரது உருவச் சிலைக்கு முன் நடை பெற்றது. மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் முன்னை நாள் ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் உருவச் சிலைக்கு அருட்தந்தை எஸ்.ஜெயபாலன் அடிகளார் உள்ளடங்களாக அருட்சகோதரி, பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் இணைந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். மன்னார் மறை மாவட்டத்தின் ம…
-
- 0 replies
- 142 views
- 1 follower
-
-
Published By: VISHNU 02 APR, 2025 | 07:03 PM நாட்டில் ஒடிசம் தொடர்பான ஆய்வுகள் ஏதும் சமீபகாலமாக மேற்கொள்ளப்படவில்லை எனினும், நாளாந்தம் வைத்திய சிகிச்சைக்காக வருகைத் தருபவர்கள் அவதானிக்கும் போது 50 சிறுவர்களில் ஒருவர் ஒடிசம் நிலையால் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டுவதாக குடும்ப நல சுகாதார பணியகத்தின் சமூக வைத்திய நிபுணர் ஆசிரி ஹேமமாலா தெரிவித்தார். சர்வதேச ஒடிசம் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு புதன்கிழமை (2) சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில், வருடாந்தம் ஏப்ரல் 2 ஆம் திகதி சர்வதேச ஒடிசம் விழிப்புணர்வு தினம் அனுஷ்டிக்கப்படுகி…
-
- 0 replies
- 135 views
- 1 follower
-
-
கொழும்பு காசல் மகப்பேற்று மருத்துவமனையில் புதிதாக நிறுவப்பட்ட விந்தணு வங்கி ஏற்கெனவே ஆறு பெண்களுக்கு உதவியுள்ளதாகவும் விந்தணு தானம் குறித்து தேவையான தகவல்களை நாங்கள் வழங்குகிறோம் என்றும் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் அஜித் குமார தண்டநாராயணா தெரிவித்துள்ளார். டெய்லி மிரருக்கு அளித்துள்ள செவ்வியின்போதே அவர் அதனை குறிப்பிட்டள்ளார். மேலும் அவர் கூறியுள்ளதாவது, இலங்கையில் மலட்டுத்தன்மையுடன் இருக்கும் தம்பதிகளுக்கு உதவுவதில் இது ஒரு பெரிய படியாகும். சமீபத்தில் திறக்கப்பட்ட விந்தணு வங்கி, ஏற்கெனவே விந்தணு தானத்திற்கு சுமார் 50க்கும் மேற்பட்ட ஆண்களை பதிவு செய்துள்ளனர். இந்த முயற்சியின் மூலம் சுமார் 200 மலட்டுத்தன்மை கொண்ட பெண்கள் உள்ளனர் குழந்தை பெற பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். …
-
-
- 7 replies
- 338 views
-
-
இலங்கையில் அதிகளவான மாவட்டங்களைக் கொண்டுள்ள வடமாகாணத்தில் தற்போது வவுனியா மாவட்டத்தில் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம் தாபிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வாழ்கின்ற மக்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு விடயஞ்சார் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு வவுனியா பிராந்திய அலுவலகத்திற்குப்பயணம் செய்வதற்கு அதிக நேரத்தை செலவிட வேண்டியுள்ளது. வடமாகாண மக்கள் அதிகளவில் கடவுச்சீட்டு விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளமையால், அவர்களுக்கான துரித சேவைகளை வழங்குவதற்காக குடிவரவுமற்றும் குடியகல்வுதிணைக்களத்தின் பிராந்திய அலுவலகத்தை யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆரம்பிப்பது பொருத்தமானதென, 2025.01.31 அன்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற யாழ்ப்பாண ம…
-
- 0 replies
- 140 views
-
-
வடக்கின் பிரதான ரயில் சேவைகளுள் ஒன்றான யாழ் ராணியின், ஒழுங்கற்றதும் பலவீனமானதுமான சேவைகள் காரணமாக தாம் பாதிக்கப்படுவதாக பயணிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். யாழ்ப்பாணம் - காங்கேசன்துறையிலிருந்து காலை 6 மணிக்கு சேவைகளை ஆரம்பிக்கும் யாழ் ராணி, அனுராதபுரத்தை காலை 10:30 மணியளவில் சென்றடையும். அதன் பின்னர் மாலை 2:30 மணியளவில் அனுராதபுரத்தில் இருந்து புறப்படும் சேவையானது மாலை 6:30 மணிக்கு காங்கேசன்துறையை வந்தடையும். அரச அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலரின் நேர அட்டவணையுடன் தொடர்புடைய ரயில் சேவையாக இருப்பதால், அவர்களில் பலர் இந்த ரயில் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், கடந்த ஒரு மாதமாக முன்னறிப்புகள் இல்லாமல் ரயில் சேவைகள் ரத்துச் செய்யப்படுவதால் பெரும் சிரமத்தை எதிர்கொள்ள வ…
-
-
- 1 reply
- 157 views
-
-
02 Apr, 2025 | 04:18 PM பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியன்மாருக்கு நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக நிதி உதவி வழங்குவதற்கு இலங்கை தீர்மானித்துள்ளது. அதன்படி, மியன்மாரில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களுக்காக 10 இலட்சம் டொலர்களை நிதியுதவியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று புதன்கிழமை (02) தெரிவித்துள்ளார். பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியன்மாருக்கு இலங்கை நிதியுதவி | Virakesari.lk
-
- 0 replies
- 111 views
-
-
மாற்றுத்திறனாளர்களுக்கான தேசிய விளையாட்டு போட்டி: யாழில் இருந்து 17 வீரர்கள் பங்கேற்பு. மாற்றுத்திறனாளர்களுக்கான தேசிய விளையாட்டு போட்டியில், யாழ்ப்பாணத்தில் இருந்து 17 வீரர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். கொழும்பு ஹோகாஹம விளையாட்டு மைதானத்தில் நாளைய தினம் வியாழக்கிழமை குறித்த விளையாட்டு போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டியில், யாழ்ப்பாணத்தில் இருந்து 17 வீரர்கள் 20 விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றுவதற்காக இன்றைய தினம் புதன்கிழமை கொழும்பு நோக்கி புறப்படுகிறனர். அதன் போது, யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் கலந்துகொண்டு வீரர்களை வாழ்த்தி வழியனுப்பி வைத்தார். இந் நிகழ்வில், பிரதம கணக்காளர் எஸ். கிருபாகரன், திட்டமிடல் பணிப்பாளர்,சுரேந்திரநாதன் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் பங்க…
-
- 4 replies
- 177 views
- 1 follower
-
-
இந்தியாவிலிருந்து விசேட பாதுகாப்பு குழுவொன்று கொழும்பை வந்தடைந்தது! இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 4ஆம் திகதி இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இந்தியாவிலிருந்து விசேட பாதுகாப்புக் குழுவொன்று கொழும்பை வந்தடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு முன்னதாக இலங்கை பாதுகாப்பு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்றும் நோக்கில் இந்தியாவிலிருந்து விசேட பாதுகாப்பு குழுவொன்று கொழும்பை வந்தடைந்துள்ளதாக புதுடில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் மோடி எதிர்வரும் 4ஆம் திகதி தொடக்கம் 6ஆம் திகதி வரை இலங்கைக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். மோடியின் வருகையின் போது கொழும்பு மற்றும் அனுராதபுரத்தி…
-
- 0 replies
- 69 views
-
-
கித்துள், தென்னை மற்றும் பனை கைத்தொழில்களில் ஈடுபடுபவர்களுக்கு காப்புறுதித் திட்டம்! கித்துள், தென்னை மற்றும் பனை தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் புதுப்பிக்கக்கூடிய வகையில் திடீர் விபத்து உயிர் காப்புறுதி திட்டத்தை அமுல்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது. இந்த முன்மொழியப்பட்ட திட்டத்தின் கீழ், 5 இலட்சம், 10 இலட்சம் மற்றும் 20 இலட்சம் ரூபாய் என்ற காப்புறுதி தொகைகள் மரணம் அல்லது முழுமையான ஊனமுற்ற நிலை ஏற்படும் போது வழங்கப்படும் என கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது. மேலும், தற்காலிக ஊனமுற்ற நிலைகளிலும், திடீர் விபத்துகளால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போதும் இந்த காப…
-
- 2 replies
- 104 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 02 APR, 2025 | 12:07 PM மன்னாரில் பாரிய அளவிலான காற்றாலை மின்திட்டத்தினால் சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து சுற்றுசூழல் பாதுகாப்பு அமைப்புகள் மீண்டும் கரிசனை வெளியிட்டுள்ளன. வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கம்,சுற்றுச்சூழல் நீதிமையம்,சுற்றுசூழல் அறக்கட்டளை லிமிடெட் உட்பட் சூழல் பாதுகாப்பு அமைப்புகளே மன்னாரில் பாரிய அளவிலான காற்றாலை மின்திட்டத்தினால் சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து சுற்றுசூழல் பாதுகாப்பு அமைப்புகள் மீண்டும் கரிசனை வெளியிட்டுள்ளன. தனித்துவமான மற்றும் உணர்திறன் வாய்ந்த சுற்றுசூழல் அமைப்பை கொண்ட மன்னார் தீவு தொழில்துறை திட்டங்களால் கடுமையான பாதுகாப்பை எதிர்கொள்கின்றது என தெரிவித்து வரும் சூழல் பாதுகா…
-
- 0 replies
- 89 views
- 1 follower
-
-
02 APR, 2025 | 09:54 AM மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் மற்றும் குறைந்த விலையில் போசாக்கான உணவைப் பெறுவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட வேலைத்திட்டம் நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள தேசிய உணவு ஊக்குவிப்புச் சபையின் "பெலெஸ்ஸ" உணவகத்தில் செவ்வாய்க்கிழமை (01) ஆரம்பித்து வைக்கப்பட்டது. தேசிய உணவு ஊக்குவிப்பு சபை, சுகாதார அமைச்சு மற்றும் விவசாய அமைச்சு ஆகியன இணைந்து வர்த்தகர்களின் ஆதரவுடன் நடத்திவரும் இந்த உணவகத் திட்டம் "Clean Sri Lanka" திட்டத்துடன் இணைந்து நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதனால் 200 ரூபாய் என்ற குறைந்த விலையில் போசாக்கு நிறைந்த உணவை உண்டு மகிழும் வாய்ப்பு மக்களுக்கு கிடைக்கும். இந்த போசாக்கான சமச்சீர் உ…
-
- 3 replies
- 200 views
- 1 follower
-
-
02 APR, 2025 | 09:03 AM (செ.சுபதர்ஷனி) இலங்கையில் வருடாந்தம் 33 ஆயிரம் புதிய புற்றுநோய் நோயாளர்கள் சுகாதாரத் துறையால் அடையாளம் காணப்படுவதுடன், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 19 ஆயிரம் பேர் புற்று நோயால் உயிரிழப்பதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். நாட்டில் புற்றுநோய் பரவுவதை கட்டுப்படுத்தவும் தடுக்கவும் செயல்படுத்தப்பட்டுள்ள தேசிய கொள்கை மற்றும் மூலோபாயத் திட்டத்தை மீளாய்வு செய்வதற்காக உலக சுகாதார ஸ்தாபனத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவினர் மற்றும் சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோருக்கிடையில் சமீபத்தில் சுகாதார அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். புற்றுநோய் பரவுவதை கட்டுப்படுத்தவும் தடுக்கவும் …
-
- 0 replies
- 81 views
- 1 follower
-
-
வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். குமாருக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை! இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்ட வடமத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளர் சாந்தி சந்திரசேன ஆகியோருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் தலா 16 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்ததுள்ளது . மேலும், பிரதிவாதிகளுக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டதுள்ளது இவர்கள் மீது லஞ்ச ஒழிப்பு ஆணையம் இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்ததுடன் அவர்கள் சட்டவிரோதமாக ரூ. 100,000 பணத்தைப் பெற்று ஊழல் குற்றத்தைச் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/202…
-
- 8 replies
- 434 views
- 1 follower
-
-
ஜப்பான் தற்காப்புப் படைக்கு சொந்தமான கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரம்! ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான BUNGO (MST-464) மற்றும் ETAJIMA (MSO-306) என்ற கப்பல்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றிற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான BUNGO மற்றும் ETAJIMA என்ற கப்பல்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றிற்காக (2025 ஏப்ரல் 01) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், இலங்கை கடற்படையினர் கப்பலை கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர். இவ்வாறாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த Uraga-Class Minesweeper Tender வகைக்கு சொந்தமான ‘BUNGO’ என்ற கப்பலானது 141 மீற்றர் நீளமும், மொத்தம் 125 அங்கத்தவர்களை கொண்டதாகும், கப்பலின் கட்டளை அதிகாரியா…
-
- 1 reply
- 133 views
- 1 follower
-
-
இஷாரா செவ்வந்தியை கண்டுபிடிக்க அனுராதபுரத்தில் தேடல்! அனுராதபுரம் பகுதியில் திட்டமிட்ட குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவ கொலையில் ஈடுபட்டு தற்போது தலைமறைவாகியுள்ள இஷாரா செவ்வந்தியை தேடும் நடவடிக்கை நேற்று (01)மேற்கொள்ளப்பட்டது. அந்த பகுதியில் உள்ள ஒரு விடுதியில் அவர் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. அங்கு அவரைப் போல தோற்றமளித்த ஒரு பெண்ணையும் மற்றொரு ஆணையும் பொலிஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போதைப்பொருள் மற்றும் இரண்டு சொகுசு கார்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். எனினும் கணேமுல்ல சஞ்சீவ கொலையின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியை பொலிஸாரால் கைது செய்ய முடியவில்லை. இதேவேளை, கம்பஹா – உக்கல்பொட பகுதியில், பொலிஸ் துப்பாக்கிச் சூ…
-
-
- 7 replies
- 315 views
- 1 follower
-
-
1,557 ஆரம்ப பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை! அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், குறைந்த மாணவர் சேர்க்கை கொண்ட 1,557 ஆரம்ப பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில் அரசின் குறித்த நடவடிக்கைகளினால் ”தற்போது சுமார் 3 சதவீதமாக இருக்கும் ஆரம்பக் கல்வியை விட்டு வெளியேறும் மாணவர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன் இது தொலைதூர மற்றும் கடினமான பகுதிகளில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு பெரும் அநீதி என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், இந்த நடவடிக்கையின் காரணமாக கிராமப்புறங்களில் உள்ள சுமார் பத்தாயிரம் …
-
- 1 reply
- 132 views
-
-
பலஸ்தீன சார்பு ஸ்டிக்கர் - ACJU விடுத்துள்ள அறிவித்தல் Tuesday, April 01, 2025 செய்திகள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எந்தவொரு நபரும் சட்டப்பூர்வமான வழியில், ஜனநாயக முறையில் தமது கவலைகளையும் கரிசனைகளையும் வெளிப்படுத்துவதற்காக கைது செய்யப்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறது. இலங்கை எப்போதும் அனைத்து விதமான அடக்குமுறைகளுக்கும் எதிரான நிலைப்பாட்டைக் கொண்ட ஒரு நாடாகும்; குறிப்பாக பாலஸ்தீன மக்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள தொடர்ந்தேர்ச்சியான வன்முறைக்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டைக் கொண்ட ஒரு நாடாகும். இந்த வகையில் நாம் தன்னாதிக்கம் கொண்ட சுதந்திர பாலஸ்தீன நாடொன்றின் உருவாக்கத்தை மீண்டும் இங்கு வலியுறுத்துகின்றோம். அண்மையில் பலஸ்தீனத்தில் நடைபெறும் அத்துமீறல்களை…
-
- 1 reply
- 283 views
-
-
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்புமனுக்கள் நிராகரிப்பு : நீதிமன்றில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் தேர்தல் நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு உத்தரவு! Published By: DIGITAL DESK 2 01 APR, 2025 | 03:37 PM (டானியல் மாக்ரட் மேரி ) உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் தேர்தல் நடவடிக்கைகளை புதன்கிழமை (02) வரை இடைநிறுத்துமாறு தொடர்புடைய தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றில் செவ்வாய்க்கிழமை (1) இந்த மனுக்களை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் ம…
-
- 1 reply
- 204 views
- 1 follower
-
-
01 APR, 2025 | 03:27 PM மாகாண சபை தேர்தல் இந்த வருடம் இடம்பெறாது என அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி தேர்தல் இடம்பெற்றால் ஆறுமாதத்திற்குள் இலங்கை மூன்று தேர்தல்களை சந்தித்திருக்கும் என தெரிவித்துள்ள அவர் இதன் காரணமாக மற்றுமொரு தேர்தல் சாத்தியமில்லை என குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் தொடர்ந்து தேர்தல்களை நடத்திக்கொண்டிருக்க முடியாது, அபிவிருத்தி திட்டங்களையும் முன்னெடுக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி தேர்தலுடன் பிரதானமான தேர்தல்கள் முடிவிற்கு வரும், மாகாணசபை தேர்தல்களை மாத்திரம் நடத்தவேண்டும், சட்டங்களை மாற்றவேண்டியுள்ளதாலும், நாட்டின் அபிவிருத்திக்கு பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாலும் மாகாண சபை தேர்தல்களை இந்த வருடம் நடத்த முடியாது…
-
-
- 2 replies
- 289 views
- 1 follower
-
-
01 APR, 2025 | 01:20 PM கிளிநொச்சி மாவட்டத்தில் 1209.22 ஏக்கர் மக்களின் காணிகளை முப்படையினரும் கையகப்படுத்தி வைத்திருக்கின்றார்கள் என வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் தலைவர் இரத்தினசிங்கம் முரளிதரன் தெரிவித்துள்ளார். இராணுவத்தினர் வசமுள்ள காணி தொடர்பில் கேட்ட போதே அவர் செவ்வாய்க்கிழமை (01) இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவக்கையில், கிளிநொச்சி மாவட்டத்தில் மக்களது காணிகள் பல விடுவிக்கப்படாது இராணுவத்தினர் வசம் காணப்படுகின்றது. அந்தவகையில், கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் 653.65 ஏக்கரும், கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் 180.38 ஏக்கரும், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் 116.61ஏக்கரும், பூநகரி பிரதேசசெயலர் பிரிவில் 248.18 ஏக்கரும் என 1209.22 ஏக்கர் காணி …
-
- 3 replies
- 239 views
- 1 follower
-