ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142769 topics in this forum
-
இசைப்பிரியாவுக்கும் , கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் பெண்களுக்கும் நீதி கிடைக்காதா? – சாணக்கியன் சாடல். அனுராதபுரம் வைத்தியசாலையில் பெண் வைத்தியருக்கு நிகழ்ந்த வன் கொடுமைக்கு நீதி வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், இந்த நாட்டிலே இராணுவத்தினரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட இசைப்பிரியாவுக்கு நீதி வழங்க ஏன் அரசாங்கம் முன்வரவில்லை என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் இன்றைய தினம் (15) உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்த நாட்டிலே ஆயிரக்கணக்கான தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டார்கள். அதற்கு ஏன் இந்த அரசாங்கமும் நாட்டு மக்களும் நடவடிக்கை எட…
-
- 1 reply
- 157 views
- 1 follower
-
-
ஏப்ரல் முதல் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு. வரவு செலவுத் திட்டத்தில் அதிகரிக்கப்பட்ட சம்பள உயர்வுகளை ஏப்ரல் முதல் அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சிங்கள புத்தாண்டை கொண்டாடும் வகையில், மாத சம்பளம் வழங்குவதற்கான வழக்கமான திகதிக்கு முன்னதாக ஏப்ரல் 10 ஆம் திகதி அவற்றை வழங்கவும் அரசாங்கம் தயாராகி வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 21 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட பின்னர், ஒரு வார காலப்பகுதியில் அதிகரிக்கப்பட்ட சம்பளம் மற்றும் ஊக்கத்தொகைகள் தொடர்பான சுற்றறிக்கையை வெளியிட அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அரச ஊழியர்களின் குறைந்தபட்ச மாதாந்த அடிப்படை சம்பளத்தை 24250 ரூபாயிலிருந்து 40000 ரூபாவாக 1575…
-
- 0 replies
- 223 views
-
-
Published By: VISHNU 15 MAR, 2025 | 02:46 AM (எம்.மனோசித்ரா) தேசிய அபிவிருத்தியில் பெண்கள் வகிக்கும் முக்கிய பங்கை உணர்ந்து, பொருளாதாரத்தில் பெண்கள் முழுமையாகப் பங்கேற்பதைக் கட்டுப்படுத்தும் தடைகளை உடைப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியில் பெண்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அவர்களின் மகத்தான பங்களிப்பு இருந்தபோதிலும், கட்டமைப்பு தடைகள் பொருளாதாரத்தில் அவர்களின் முழு பங்களிப்பையும் மட்டுப்படுத்தியுள்ளன. பெண்கள் வணிகத் தலைவர்கள், தொழில்முனைவோர் மற்றும் …
-
- 1 reply
- 121 views
- 1 follower
-
-
14 MAR, 2025 | 04:32 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) தோட்ட பகுதிகளில் வாழும் மக்கள் தமது வீடுகளுக்கு புதிதாக மின்னிணைப்பை பெற்றுக்கொள்வதாயின் அதற்கு அந்த தோட்ட முகாமையாளரின் சிபாரிசு கடிதத்தை பெற வேண்டும். இலங்கை மின்சார சபைக்கு தோட்ட முகாமையாளர் ஏன் கடிதம் வழங்க வேண்டும். இந்த முறைமையை மாற்றுங்களெனன மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வி. இராதாகிருஸ்ணன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (14) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, பெருந்…
-
- 0 replies
- 76 views
- 1 follower
-
-
14 MAR, 2025 | 04:43 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) வடக்கு மாகாணத்தில் 16 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் தெங்கு முக்கோண வலயம் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு 5500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இலவசமாக தென்னங்கன்றுகள் மற்றும் உரம் வழங்குவதற்காக 819 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதோடு நீர் விநியோகித்துக்கும் நிலப்பரப்புக்கு அமைய நிவாரணம் வழங்கப்படுமென பெருந்தோட்டத்துறை மற்றும் சமூக உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (14) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டத்தின் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பி…
-
- 2 replies
- 244 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 2 14 MAR, 2025 | 04:50 PM வீதிகளைப் புனரமைப்புச் செய்யாமல் எந்தவொரு அபிவிருத்தியும் சாத்தியமில்லை. வீதி அபிவிருத்தி மிக மிக முக்கியமானது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். பருத்தித்துறை – பொன்னாலை வீதியில், தொண்டைமனாறு அரசடி முதல் பருதித்தித்துறை துறைமுகம் வரையிலான வீதியின் புனரமைப்பு அங்குரார்ப்பண நிகழ்வு வல்வெட்டித்துறை சந்தியில் வியாழக்கிழமை (14) நடைபெற்றது. இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே வடக்கு மாகாண ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடற்கரையோரமாகச் செல்லும் இந்த வீதியின் பாதுகாப்புச் சுவர்கள் கூட கடந்த காலத்தில் விழுந்துள்ளன. மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட இந்த வீதி புனரமைக்கப்படுவது ம…
-
- 0 replies
- 115 views
- 1 follower
-
-
வடக்கு, கிழக்கில் உள்ளூராட்சி சபை தேர்தல் நிலைவரங்கள் என்ன?; அறிந்துகொள்வதில் அமெரிக்கா ஆர்வம் தமிழ் பகுதிகளில் நிலவும் அரசியல் முன்னேற்றங்கள் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நிலைவரங்கள், வடக்கு, கிழக்கில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளரான எம்.ஏ.சுமந்திரனிடம் அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் கேட்டறிந்தார் இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங்கை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.நேற்று வியாழக்கிழமை பிற்பகல் கொழும்பில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது, வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் கரிசனை உள்ளிட்ட தற்போதைய …
-
- 2 replies
- 201 views
-
-
தமிழர் பகுதியில் இரு பெண்கள் - வெட்டுக்காயங்களுக்கு உள்ளான நிலையில் சடலங்களாக மீட்பு! Vhg மார்ச் 14, 2025 திருகோணமலை - மூதூர், தஹாநகரில் பெண்கள் இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று (14-03-2025) அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலங்கள் வெட்டுக்காயங்களுக்கு உள்ளான நிலையில் மீட்கப்பட்டுள்ளன. மூதூர் தாஹா நகர் பகுதியில் சிறிதரன் தர்ஷினி என்பவருடைய வீட்டிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. விசாரணை முன்னெடுப்பு சிறிதரன் ராஜேஸ்வரி (68வயது) மற்றும் சக்திவேல் ராஜகுமாரி (74வயது) ஆகிய இருவர் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன் உயிரிழந்த சிறிதரன் ராஜேஸ்வரி என்பவரின் மகள் வெட்டு காயங்களுடன்…
-
- 4 replies
- 300 views
-
-
தமிழரசுக் கட்சியை இல்லாமல் செய்ய சதி! தமிழரசுக் கட்சிக்கு எதிராக பல்வேறு சதி வலைகள் பின்னப்படுகிறது. அதிலும் தமிழரசுக்கட்சியை எப்படியாது சிதைத்து அதனை உடைத்து கட்சியை பிளவுபடுத்தி விட வேண்டுமென சிலர் செயற்படுகின்றனர் என தமிழரசுக் கட்சியின் பதில் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்தார். யாழிலுள்ள அவரது அலுவலகத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, இந்த அடிப்படையில் புதிய தமிழரசுக் கட்சி உருவாக்கம் குறித்து பேசப்படுகிறது. உண்மையில் அப்படியாக கட்சிக்குள் இருப்பவர்கள் யாரும் கருதவில்லை. அப்படியான எண்ணங்கள் கூட அவர்களிடத்தே இல்லை. ஏனெனில் கட்சியில் பலருடனும் இது தெடர்பில் பேசியிருந்…
-
-
- 13 replies
- 518 views
-
-
14 MAR, 2025 | 10:55 AM பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கைகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவும் அமைச்சரவையும் கொள்கை தீர்மானமொன்றை எடுத்துள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். சபையில் பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்த ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து ஆராய்வதற்கு விசேட குழுவொன்றை நியமிப்பது எனவும் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெறுவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/209156
-
- 14 replies
- 556 views
- 1 follower
-
-
Published By: VISHNU 14 MAR, 2025 | 03:37 AM (ஆர்.ராம்) இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனுக்கும், அமெரிக்க தூதுவர் ஜுலி சங் மற்றும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் வெஸ்லி ஸ்டீபன்ஸ் ஆகியோருக்கும் இடையில் இருவேறு சந்திப்புக்கள் இடம்பெற்றுள்ளன. கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரகத்தில் வியாழக்கிழமை (13) நண்பகல் நடைபெற்ற சந்திப்பின்போது, சமகால நிலைமைகள் சம்பந்தமாக உரையாடப்பட்டதாக சுமந்திரன் குறிப்பிட்டார். குறிப்பாக, அரசியல் ரீதியாக தமிழ் மக்களின் நிலைப்பாடுகள், மத்திய அரசாங்கத்தின் செயற்பாடுகள் சம்பந்தமாக உயர்ஸ்தானிகர் மற்றும் அதிகாரிகள் கேட்டறிந்துகொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இதனையடுத்து நேற்று மாலை, அ…
-
-
- 30 replies
- 1.1k views
- 1 follower
-
-
ஊழியர் சேமலாப நிதியத்தை (EPF) உரிய வகையில் வழங்காத 22,450 அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சு தெரிவிக்கின்றது. இது குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்களுடன் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/316023
-
- 0 replies
- 100 views
- 1 follower
-
-
Published By: VISHNU 14 MAR, 2025 | 03:34 AM பெண் கிராம உத்தியோகத்தர்களின் பாதுகாப்பு தொடர்பான சிக்கல்களுக்கு தீர்வினை வழங்குமாறு கோரி வெள்ளிக்கிழமை (14) நள்ளிரவு 12 மணி முதல் நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமை இரவு நேரங்களில் ஏற்படும் பேரிடர்கள் மற்றும் உயிரிழப்பு தொடர்பான அனைத்து பணியிலிருந்தும் விலகுவதாகத் தெரிவித்துள்ளதுடன், அரச பொது நிர்வாக அமைச்சின் செயலாளருக்கும் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் வியாழக்கிழமை (13) கடிதம் ஒன்றை வழங்கியுள்ளது. பாதுகாப்பற்ற மற்றும் மக்கள் வசிக்காத பகுதிகளில் உள்ள அலுவலகங்களை மூடுதல், ஒருவரின…
-
- 0 replies
- 89 views
- 1 follower
-
-
மட்டக்களப்பு (Batticaloa) களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் உள்ள பாலர் பாடசாலை ஒன்றில் அராஜகத்தில் ஈடுபட்டு ஆசிரியரை தாக்க முற்பட்ட குற்றச்சாட்டில், தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பின் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது, மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் உள்ள பாலர் பாடசாலை கட்டடத்தை மாற்ற வேண்டும் என கோரி தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் அலெக்ஸ் என்பவர் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளார். இதன்போது பாலர் பாடசாலை ஆசிரியை தாக்க முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டில் குறித்த அமைப்பாளரை களுவாஞ்சிக்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோது …
-
-
- 2 replies
- 314 views
-
-
13 MAR, 2025 | 08:20 PM (நமது நிருபர்) இலங்கை 2025 ஆம் ஆண்டுக்கான உலகின் மிகவும் குடும்ப நட்பு நாடாக காண்டே நாஸ்ட் டிராவலர் பெயரிட்டுள்ளது. 2025ஆம் ஆண்டில் குடும்ப நட்பு நாடுகள் பட்டியல் இலங்கை, சுவீடன், நோர்வே, நியூசிலாந்து, ஐஸ்லாந்து, ஜேர்மனி, பின்லாந்து, டென்மார்க், அவுஸ்திரேலியா, அமெரிக்கா என அமைந்துள்ளது. உலகளாவிய ரீதியில் பயனாளர்களுக்கு பணம் அனுப்ப உதவும் அமெரிக்காவின் ரெமிட்லி மீள்குடியேற விரும்புபவர்களுக்கு தெரிவிக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட புதிய குடிவரவு சுட்டெண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. 2025 மார்ச் மாதத்தில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை சுகாதாரத் தரம், பொருளாதார வலிமையிலிருந்து பாதுகாப்பு அளவீடுகள் மற்றும் டிஜிட்டல் இணைப்பு வரையான 24 காரணிகளில் 82 நாடுக…
-
- 2 replies
- 178 views
- 1 follower
-
-
13 Mar, 2025 | 02:19 PM யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளிலும் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். உள்ளூர் அதிகார சபை தேர்தலுக்காக யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்குமான அங்கிகரிக்கப்பட்ட முகவர்களை நியமிக்கும் நடவடிக்கைகளுக்காக புதன்கிழமை (13) காலை யாழ்ப்பாணத்தில் உள்ள தேர்தல்கள் அலுவலகத்திற்கு வருகைதந்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன், சண்முகநாதன் ஸ்ரீபவனந்தராஜா, தொகுதி அமைப்பாளர்கள், கட்சி உறுப்பினர்கள் உள்ளிட சிலரும் வருகை தந்திருந்தனர். யாழில் 17 உள்ளூராட்சி…
-
-
- 1 reply
- 223 views
-
-
13 Mar, 2025 | 05:31 PM (எம்.மனோசித்ரா) அரசாங்கத்தின் அவசர கோரிக்கையை ஏற்று மருத்துவமனைகளில் நிலவும் பற்றாக்குறையை பூர்த்தி செய்வதற்காக, இந்திய அரசாங்கம் 50,000 புரோஸ்மைட் ஊசி மருந்துகளை அன்பளிப்பாக வழங்கியுள்ளது. இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா வியாழக்கிழமை (13) சுகாதார அமைச்சில் நடைபெற்ற நிகழ்வில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் அவற்றை ஒப்படைத்தார். சுகாதாரத்துறை உட்பட பல்வேறு துறைகளில் நெருக்கடிகள் ஏற்பட்ட காலங்களில் இந்தியா இலங்கைக்கு நம்பகமான நண்பராகவும் முதலில் பதிலளிப்பவராகவும் இருந்து வருகிறது. கொவிட்-19 தொற்றுநோய் காலத்தில், 2020 மே மாதத்தில் சிறப்பு விமானம் மூலம் இந்தியா 25 தொன்களுக்கும் அதிகமான மருந்துகளை இலங்கைக்கு வழங்கியது. 20…
-
- 1 reply
- 154 views
-
-
13 Mar, 2025 | 05:38 PM வல்லமை சமூக மாற்றத்திற்கான போராட்ட இயக்கத்தின் பௌர்ணமி நாள் செயற்பாட்டுத் தொடர்ச்சியில், பெண்களுக்கு எதிரான அனைத்துச் சுரண்டல்களையும் முடிவுக்கு கொண்டுவர “மௌனத்தைக் கலைப்போம்” எனும் தொனிப்பொருளில் இன்று வியாழக்கிழமை (13) கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. யாழ் மத்திய பேருந்து நிலையம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்ட பேரணியானது தந்தை செல்வா கலையரங்கு வரை சென்று நிறைவடைந்தது. பெண்களுக்கு எதிரான சுரண்டல்களை முடிவுக்கு கொண்டுவருமாறு கோரி யாழில் கவனயீர்ப்பு போராட்டம் | Virakesari.lk
-
- 0 replies
- 130 views
-
-
அண்மையில் இடம்பெற்ற அல்ஜசீரா நேர்காணலிற்கு பின்னர், படலந்த வதைமுகாம் தொடர்பான விடயங்கள் சூடு பிடித்திருக்கின்றன. அந்தவகையில், குறித்த வதைமுகாமுடன் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு இருந்த தொடர்புகள் குறித்த பல்வேறு உண்மைகளும் சாட்சியங்களும், வெளிவந்து கொண்டிருக்கின்றன. இது ரணில் விக்ரமசிங்கவிற்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ள நிலையில், படலந்த வதைமுகாம் தொடர்பான விசாரணைகள் மீண்டும் முன்னெடுக்கப்படுமா என்ற கேள்வியும் பலதரப்புகளில் இருந்து எழுந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், படலந்த விவகாரத்தில் ரணில் விக்ரமசிங்கவிற்கு துணையாக நின்று, நடவடிக்கைகளை முன்னெடுத்த முன்னாள் உதவி பொலிஸ் அத்தியட்சகர் டக்ளஸ் பீரிஸ் வழங்கியுள்ள சத்தியக்கடதாசி தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ள…
-
- 0 replies
- 350 views
-
-
13 MAR, 2025 | 02:19 PM யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளிலும் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். உள்ளூர் அதிகார சபை தேர்தலுக்காக யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்குமான அங்கிகரிக்கப்பட்ட முகவர்களை நியமிக்கும் நடவடிக்கைகளுக்காக புதன்கிழமை (13) காலை யாழ்ப்பாணத்தில் உள்ள தேர்தல்கள் அலுவலகத்திற்கு வருகைதந்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன், சண்முகநாதன் ஸ்ரீபவனந்தராஜா, தொகுதி அமைப்பாளர்கள், கட்சி உறுப்பினர்கள் உள்ளிட சிலரும் வருகை தந்திருந்தனர். https://www.virakesari.…
-
-
- 7 replies
- 303 views
- 1 follower
-
-
இந்திய ஆசிரியர் யோசனை இன அழிப்பின் மற்றுமொரு அங்கம் – அருட்தந்தை மா.சத்திவேல் ‘இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை வரவழைத்து அவர்களுக்கு ஆசிரிய நியமனம் கொடுக்க வேண்டும் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணனின் கோரிக்கைக்கு பின்னால் மலையக கல்வி வளர்ச்சிக்கு அப்பாற்பட்ட மர்ம அரசியல் காய்நகர்த்தல் உள்ளதாகவே சந்தேகம் கொள்ளத் தோன்றுகின்றது.” – என்று சமூக செயற்பாட்டாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு, ” மலையகத்தில் படித்த பட்டதாரிகள் உட்பட நூற்றுக்கணக்கான வேலையற்ற தமிழ்மொழியிலான பட்டதாரிகள், வேலையின்மை காரணமாக வீதியில் இறங்கி போராட்டம் நடத்திவருகின்றனர். இந்நிலையில் மலையக கல்வித் துறை சார்ந்து அவர்களை …
-
-
- 4 replies
- 464 views
- 1 follower
-
-
13 MAR, 2025 | 11:15 AM தங்களுடைய தனித்துவத்தை இல்லாமலாக்கும் முயற்சியில் பிற கட்சிகள் செயற்பட்டமையினாலேயே இம் முறை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தங்களது கட்சி தனித்துப் போட்டியிடுவதற்குத் தமிழ் மக்கள் கூட்டணி தீர்மானித்துள்ளதாக அதன் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் புதன்கிழமை (12) செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், தேர்தல் முடிவடைந்ததன் பின்னர் எந்தக் கட்சியுடன் இணைவது என்பது தொடர்பில் ஆராய்ந்து தீர்மானம் எடுக்கப்படும் எனவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/209068
-
- 0 replies
- 198 views
- 1 follower
-
-
13 MAR, 2025 | 11:27 AM உலக குளுக்கோமா வாரத்தை முன்னிட்டு இன்றைய தினம் (13) யாழ்ப்பாணத்தில் மாபெரும் விழிப்புணர்வு நடைபவனி நடைபெற்றது. இதன்போது விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன. யாழ்ப்பாணம் சிவன் கோவிலுக்கு முன்பாக ஆரம்பமான நடைபவனி காங்கேசன்துறை வீதியூடாக சென்று, பின்னர் வைத்தியசாலை வீதியூடாக எஸ்.ரி.எஸ் வைத்தியசாலையை அடைந்தது. பின்னர் வைத்தியசாலையில் விழிப்புணர்வு செயலமர்வும் நடைபெற்றது. குளுக்கோமா என்பது கண்ணில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு நோயாகும். இந்த நோயினை ஆரம்பத்தில் இனங்கண்டு சிகிச்சை பெற்றுக்கொள்வதன் மூலம் நோயிலிருந்து குணமடைய முடியும். எனவே, இந்த நோய் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த நடைபவனி அமைந்திருந்தது. …
-
- 1 reply
- 310 views
- 1 follower
-
-
யாழ். தையிட்டியில் திஸ்ஸ விகாரைக்கு எதிராகப் போராட்டம் முன்னெடுப்பு! யாழ். தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக,மக்களது காணிகளை அபகரித்து அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்களால் போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. திஸ்ஸ விகாரைக்கு எதிராக ஒவ்வொரு பௌர்ணமி தினத்திற்கும் முதல்நாள் அப்பகுதி மக்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு பௌர்ணமி தினத்தன்று மாலை நிறைவடைகின்றது. அந்த வகையில் பௌர்ணமி தினமான இன்றும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1424997
-
- 0 replies
- 143 views
-
-
சிறுநீரக தினத்தை முன்னிட்டு வெளியான அதிர்ச்சி தகவல்! இலங்கையில் தினசரி சிறுநீரக நோயாளிகள் ஐவர் உயிரிழப்பதாகத் தேசிய சிறுநீரக நோய்த் தடுப்பு மற்றும் ஆய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டின் தரவுகளின் படி நாட்டில் நாள்பட்ட சிறுநீரக நோய்க்குள்ளானவர்கள் 213,448 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதே ஆண்டில் 1,626 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும் தேசிய சிறுநீரக நோய்த் தடுப்பு மற்றும் ஆய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. 2023 – 2024 ஆம் ஆண்டில் டயாலிசிஸ் எனப்படும் கூழ்மப்பிரிப்பு சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 6,582 ஆக காணப்பட்டுள்ளது. மேலும் சிறுநீரக மாற்று சிகிச்சை நோயாளிகளின் எண்ணிக்கை சுமார் 300 ஆக இருப்பதாகவும் வடமத்திய மாகாணத்திலேயே அதிக எண்ணிக்கை…
-
- 0 replies
- 131 views
-