ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143299 topics in this forum
-
பதவி பறிபோனாலும் -மவுசு குறையாத விஜயகலா!! சர்சைகளுக்குள் சிக்கி, ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையினாலேயே பதவி பிடுங்கப்பட்ட, நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரனுக்கு, தலைமை அமைச்சர் வடக்கில் நேற்றுப் பங்கேற்ற நிகழ்வுகளில் முதன்மை ஆசனம் வழங்கப்பட்டது. உள்நாட்டலுவல்கள் அமைச்சர் மற்றும் அயலுறவுத்துறை அமைச்சர் உள்ளிட்டோர் யாழ்ப்பாணத்தில் பங்கேற்ற நிகழ்வில் உரையாற்றிய திருமதி விஜயகலா மகேஸ்வரன், தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக்கப்படவேண்டும் என்று சாரப்பட கருத்…
-
- 0 replies
- 380 views
-
-
எத்தகைய எதிர்ப்புகள் வரினும் மரண தண்டனை அமுலாக்கப்படும் முன்வைத்த காலை பின்வைக்கப்போவதில்லை என்கிறார் ஜனாதிபதி போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட மரண தண்டனையை அமுல்படுத்துவது தொடர்பாக எடுத்த தீர்மானத்தில் எவ்வித மாற்றமுமில்லை. திட்டமிட்டபடி மரண தண்டனை நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்நறுவையில் சீன-இலங்கை நட்புறவு தேசிய சிறுநீரக விசேட வைத்தியசாலை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில், நாட்டில் அ…
-
- 0 replies
- 380 views
-
-
பண மோசடியில் ஈடுபட்ட இராணுவ வீரர் கைது வவுனியாவில் உள்ள அரச வங்கியொன்றின் தன்னியக்க இயந்திரத்தில் பிறிதொருவருடைய ஏ.ரி.எம். அட்டையை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்ட இராணுவ வீரர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவமானது நேற்றிரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு பகுதியிலுள்ள இராணுவ முகாமொன்றில் கடமையாற்றும் 41 என்ற இராணுவ வீரரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில், குறித்த இராணுவ வீரர் வவுனியா நகரிலுள்ள பழைய பேருந்து தரப்பிடத்தில் நின்று அங்கு வந்த பெண்ணொருவிடம் ஏ.டி.எம். அட்டையை கொடுத்து பணம் பெற்றுத் தருமாறு கோரியுள்ளார். இ…
-
- 0 replies
- 432 views
-
-
பதிலளிக்காவிட்டால் நம்பிக்கையில்லாப் பிரேரணை வரும் (லியோ நிரோஷ தர்ஷன்) சீனாவிடம் நிதி பெற்றமை தொடர்பான குற்றச்சாட்டிற்கு மஹிந்த ராஜபக்ஷ பதிலளிக்கத் தவறும் பட்சத்தில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வரவும், அடுத்த கட்ட சட்ட நடவடிக்கையை முன்னெடுக்கவும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர். இந்த விடயங்களை வலியுறுத்தி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விற்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நடவடிக்கைளை தேசிய அரசாங்கம் அனுமதிக்காது. எனவே தனக்கெதிரான குற்றச்சாட்டுகள் குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ பாராளுமன்றத்த…
-
- 0 replies
- 253 views
-
-
விக்கியே குழப்ப நிலைக்கு காரணம் - சுமந்திரன் (ரி.விரூஷன்) வடக்கு மாகாண சபையில் தற்போது ஏற்பட்டுள்ள அமைச்சரவை தொடர்பான பிரச்சனைக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அப்படியே அமுல்படுத்தினால் தீர்வுகாண முடியும் என தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், முதலமைச்சர் விக்னேஸ்வரன் வேண்டுமென்றே விளங்கவில்லை என்பது போல பாசாங்கு செய்வது தான் குழப்ப நிலைக்கு காரணம் எனவும் தெரிவித்தார். மேலும் மாகாண சபையில் பேசப்படும் விடயங்கள் தொடர்பாக எவரும் விமர்சிக்கவோ அல்லது விசாரணை செய்யவோ அதிகாரம் கிடையாது எனவும் அவர் தெரிவித்தார். …
-
- 0 replies
- 713 views
-
-
போராட்டத்தில் ஈடுபட்டு வந்த யுவதி உயிரிழப்பு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த யுவதி ஒருவர் வவுனியாவில் நேற்று மாலை உயிரிழந்துள்ளார். வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி 500 நாட்களையும் தாண்டி சுழற்சி முறையிலான போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்தப் போராட்டத்தில் தனது சகோதரனை காணவில்லை எனத் தெரிவித்து போராட்ட களத்தில் சுழற்சி முறையில் போராடி வந்த இராசநாயகம் நிலா (வயது 24) என்ற யுவதி உயிரிழந்துள்ளார். உடல் நலக் குறைவு காரணமாக குறித்த யுவதி மரணமடைந்துள்ள போதும், தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததனால் மன அழுத்தம் மற்றும் உடல் நலக்குறைவு என்பவற்றால் பாதிப்படைந்திருந்தார். இந்ந…
-
- 0 replies
- 474 views
-
-
நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனிடம் 50 மில்லியன் ரூபா பேரம் தமக்கு 50 மில்லியன் ரூபா தருவதாக பேரம் பேசப்பட்டதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் உரையாற்றிய போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார். மட்டக்களப்பு- கும்புறுமூலைப் பகுதியில் அமைக்கப்படும் எத்தனோல் தொழிற்சாலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல், அமைதியாக இருப்பதற்கே, 50 மில்லியன் ரூபா தரப்படும் என்று பேரம் பேசப்பட்டுள்ளது. அர்ஜூன் அலோசியசினால் கட்டப்படும் இந்த எத்தனோல் தொழிற்சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்ததாலேயே, நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனிடம் இந்த பேரம் பேசப்பட்டுள்ளத…
-
- 0 replies
- 208 views
-
-
2014 இற்குப் பின் முதல் முறையாக புதுடெல்லி செல்கிறார் மகிந்த ஆட்சியை இழந்த பின்னர் முதல் முறையாக சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச இந்தியத் தலைநகர் புதுடெல்லிக்கு வரும் செப்ரெம்பர் மாதம் 12ஆம் நாள் பயணம் மேற்கொள்ளவுள்ளார். பாஜகவின் முக்கிய பிரமுகரான நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமியின் அழைப்பின் பேரிலேயே, மகிந்த ராஜபக்ச இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். புதுடெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டம் ஒன்றில் இந்திய- சிறிலங்கா உறவுகள் மற்றும் தெற்காசியாவில் அமைதி மற்றும் பாதுகாப்பு பற்றி மகிந்த ராஜபக்ச உரையாற்றவுள்ளார். மகிந்த ராஜபக்சவின் பயணத்துக்கான திட்டத்தை இறுதி செய்வதற்காக, குழுவொன்றை சுப்ரமணியன் சுவாமி விரைவில் கொழ…
-
- 0 replies
- 274 views
-
-
யாழ்ப்பாணத்தில் கோட்டைவிடப்பட்ட 1500 மில்லியன் ரூபா திட்டம்: நடந்தது என்ன? July 21, 2018 யாழில் முன்மொழியப்பட்ட 1,500 மில்லியன் ரூபா பெறுமதியான அபிவிருத்தி திட்டங்களை அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் கோட்டைவிட்ட தகவல்களை தமிழ்பக்கம் ஆதாரபூர்வமாக பெற்றுள்ளது. வடக்கு அபிவிருத்தியில் தமிழ் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் எவ்வளவு வினைத்திறனாக செயற்படுகிறார்கள் என்பதை, நாம் வெளியிடும் தகவல்கள் வாசகர்களிற்கு புரிய வைக்கும். 2016 டிசம்பரில் The Asia Foundation நிறுவனம் 517 மில்லியன் பெறுமதியான நவீன கடைத்தொகுதியொன்றிற்கான விரைபை யாழ் மாநகரசபை ஆணையாளரிடம் கையளித்திருந்தது. அப்பொழுது ஆணையாளர் நிர்வாகத்தின் கீழ் மாநகரசபை செயற்பட்டிருந்தது. இந்த திட்டத்திற்க…
-
- 1 reply
- 670 views
-
-
"தமிழர்கள் ஆழக்கூடிய வட மாகாண சபையை யாரும் ஆண்டுவிடலாம் என்று எண்ண கூடாது" "தேசியத்தை நினைக்கின்ற கட்சிகள் ஒன்றிணைந்து எங்களினுடைய மாகாண சபையில் நல்லதொரு ஆட்சியை நடத்தக்கூடிய ஒரு இலக்கை கொண்டு வரவேண்டும்" என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். 1983ஆம் ஆண்டு ஜீலை கலவரத்தில் கொலைசெய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கமான ரெலோவின் ஸ்தாபகர் தங்கத்துரை, தளபதி குட்டிமணி மற்றும் முன்னணி போராளிகளான ஜெகன், தேவன், நடேசுதன், குமார் உள்ளிட்ட கலவரத்தில் கொல்லப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்களின் 35 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று நினைவு கூறப்படுகின்றது. இதனை …
-
- 1 reply
- 757 views
-
-
தெற்காசிய குடும்பத்தில் நம்பிக்கையான நாடே இலங்கை ; மோடி புகழாரம் இலங்கையானது வெறுமனே ஓர் அயல் நாடாக அன்றி தெற்காசியா மற்றும் இந்து சமுத்திரக் குடும்பத்தில் மிகவும் விசேடமான மற்றும் நம்பகரமான ஒரு பங்காளர் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்திய அரசின் நிதியுதவியுடன் வடக்கு மாகாணத்துக்கு 1990 ‘சுவசெரிய’ இலவச அம்பியூலன்ஸ் சேவையை நாடு முழுவதும் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று மாலை யாழ்ப்பாணம் மாநகர சபை மைதானத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வின் போதே இந்திய பிரதமர் நரேந்திர மோடி புதுடில்லியிலிருந்து நேரடிக் காணொளி அழைப்பினூடாக இந்த அறிவிப்பை விடுத்தார். குறித்த காணொளி அழைப்பில் இந்தியப் பிரதமர் ம…
-
- 2 replies
- 422 views
-
-
அதிகாரப் பகிர்வே வடக்கின் வன்முறைகளுக்கு தீர்வாக அமையும்: சுமந்திரன் வடக்கில் அதிகரித்துவரும் வன்முறைகளுக்கு முடிவுகட்ட சட்டம் ஒழுங்கு அதிகாரங்கள் முறையாக மாகாண சபைக்கு பகிரப்பட வேண்டும் என, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, சட்டம் ஒழுங்கு அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரின் வடக்கு விஜயத்தை தொடர்ந்தும் யாழில் வன்முறைகள் தொடர்கின்றமை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”வன்முறைகளை கட்டுப்படுத்த வேண்டுமாயின் இந்த பிரதேசத்த…
-
- 2 replies
- 565 views
-
-
யாழ்ப்பாணம் வருகை தரும் ரணில்- 9 நிகழ்வுகளில் பங்கேற்பார் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரம சிங்க இன்று வடக்குக்கு வருகின்றார். யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் நடக்கும் 9 நிகழ்வுகளில் அவர் பங்கேற்க உள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் பி.ப. 1.30 மணிக்கு இரணைமடுவில் அமைக்கப்பட்டுள்ள நெற்களஞ்சியசாலையை அவர் திறந்து வைப்பார், கிராம எழுச்சித் திட்டமும் ஆரம்பித்து வைக்கப்படும். மாலையில் யாழ்ப்பாணம் மாநகர சபை மைதானத்தில் நடக்கும் நோயாளர் காவு வண்டிச் சேவையின் தொடக்க நிகழ்வில் பங்கேற்…
-
- 4 replies
- 790 views
-
-
யுத்த காலத்திலும் கூட, வடக்கின் வர்த்தக நடவடிக்கைகள் சிறப்புற்றிருந்தன, யுத்தம் முடிந்த பின் பூச்சியமாகின… இன்றைய நிகழ்வின் தலைவர் அவர்களே, இந் நிகழ்வை சிறப்பிப்பதற்காக வருகைதந்திருக்கும் அதி கௌரவத்திற்குரிய பிரதமர்ரணில் விக்கிரமசிங்க அவர்களே, கௌரவ நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்களே, வர்த்தக மற்றும் வணிக அமைச்சர் கௌரவ ரிசாட் பதியுதீன் அவர்களே,மற்றும் இந்த நிகழ்வைச் சிறப்பிப்பதற்காக வருகை தந்திருக்கும் கௌரவ அதிதிகளே, விசேட அதிதிகளே,யாழ்ப்பாணம் வர்த்தகத் தொழிற்துறை மன்றத்தின் உறுப்பினர்களே, தேசிய வர்த்தக அபிவிருத்தி அதிகாரசபையின் உயர் அதிகாரிகளே, வர்த்தகப் பெருந்தகைகளே, புதிய தொழில் முனைவோரே, சகோதர சகோதரிகளே! இன்றைய தினம்…
-
- 0 replies
- 566 views
-
-
பெண் தலைமைத்துவ குடும்பங்களின் கடனை அரசாங்கம் பொறுப்பேற்கும்: மங்கள சமரவீர பெண் தலைமைத்துவ குடும்பங்களின் கடன் தொகையை அரசாங்கம் பொறுப்பேற்கவுள்ளதாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று(சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர், ‘யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட நீங்கள் பெற்றுக்கொண்ட கடனை மீண்டும் செலுத்த முடியாத நிலையில் உள்ளீர்கள் என்பது தொடர்பில் ஊடகங்கள் மூலம் அறிந்து கொண்டோம். கடனை பெற்று மீள செலுத்த முடியாதுள்ள பெண் தலைமைத்துவ குடும்பங்களின் கடன் தொகையை அரசாங்கம் பொறுப்பேற்கவுள்ளது. அதற்கான நிகழ…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஆசியாவின் சிறந்த சுற்றுலா இடங்களில் ஒன்றான இலங்கையின் அறுகம்பே இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க ஆசியாவிலுள்ள சிறந்த 10 சுற்றுலா இடங்களில் ஒன்றாக இலங்கையிலுள்ள அறுகம்பே தேர்வு செய்யப்பட்டுள்ளது. உலகில் பிரபலமானதும் மிகப் பெரிய பயண வழிகாட்டி புத்தகமுமான "த லோன்லி பிளானட்" இதனை அறிவித்துள்ளது. ஆசியாவின் சிறந்த சுற்றுலாத் தலங்கள் என, லோன்லி பிளானட் வெளியிட்டுள்ள 10…
-
- 0 replies
- 413 views
-
-
இலங்கையில் 30க்கும் மேற்பட்ட துப்பாக்கி குண்டுகள் உடலில் பாய்ந்த நிலையில் மனித உதவி தேடி வந்த யானை துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் இலங்கை யானை. இலங்கையின் ஹம்பந்தோட்டா வனப்பகுதயில் 30க்கும் மேற்பட்ட துப்பாக்கி குண்டுகளுடன் வலியால் அவதிப்பட்ட யானை ஒன்று வனத்தை விட்டு மக்கள் வசிக்கும் பகுதிக்கு மருத்துவ உதவிக்காக மனிதர்களைத் தேடி வந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மூன்று வகையான ஆசிய யானைகளில் இலங்கை யானையும் ஒன்று. 1986-ம் ஆண்டிலிருந்து இலங்கை யானை அருகி வரும் இனமாக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் பட்டியலிடப்பட்டுள்ளது. இதனால் இலங்கையில் யானைகளைக் கொல்வது தண்டனைக்குரிய குற்றமாகும். குற்றம…
-
- 1 reply
- 645 views
-
-
மன்னார் புதைகுழியில் பால் பற்களுடன் 3 சிறுவர்களின் மண்டையோடுகள் மன்னாரில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனிதப் புதைகுழி அகழ்வின் போது கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகளில் சிறுவர்களின் எலும்புக்கூடுகளும் இருப்பதாக, சட்ட மருத்துவ அதிகாரி டி.சமிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். மன்னர் நகர நுழைவாயிலில், சதொச கட்டடப் பகுதியில் மனித எலும்பு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அந்தப் பகுதியில், கடந்த மே மாதம் தொடக்கம் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்போது, இதுவரை 40 வரையான எலும்புக்கூடுகள், கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எனினும், இந்தப் புதைகுழியில் 50 இற்கும் மேற்பட்டவர்களின் எலும்புக்கூடுகள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத…
-
- 2 replies
- 494 views
-
-
மு. சிவசிதம்பரத்தின் பிறந்த தினம் கடைப்பிடிப்பு!! உடுப்பிட்டி மற்றும் நல்லூர் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதிச் சபாநாயகருமான மு. சிவசிதம்பரத்தின் 95ஆவது பிறந்த நாள் நினைவு நாள் நேற்றுக் கடைப்பிடிக்கப்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் நாச்சிமார் கோவிலடியிலுள்ள தலைமைக் காரியாலத்தில் நிகழ்வு நடைபெற்றது. http://newuthayan.com/story/14/மு-சிவசிதம்பரத்தின்-பிந்த-தினம்-கடைப்பிடிப்பு.html
-
- 0 replies
- 494 views
-
-
விசாரணைகளை எதிர்கொள்ள மஹிந்த ராஜபக் ஷ தயார்: கூட்டு எதிர்க்கட்சி அறிவிப்பு (எம்.சி.நஜிமுதீன்) “நியூயோர்க் டைம்ஸ்” பத்திரிகைச் செய்தி யின் மூலம் அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிற்கு எதிராக முன்னெ டுத்த வீண்பழியை கூட்டு எதிர்க்கட்சி தோல்வியடையச் செய்துள்ளது. எனினும் அக்குற்றச்சாட்டு தொடர்பிலான எந்தவொரு விசாரணையையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட கூட்டு எதிர்க்கட்சி எதிர்கொள்ள தயாராக உள்ளது. மேலும் ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்த தலைவராக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் நியமிக்கப்படவுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாட…
-
- 0 replies
- 287 views
-
-
விஜயகலா எம்.பி.விவகாரம் குறித்து 40 பேரிடம் வாக்குமூலம் நீதிமன்றில் திட்டமிட்ட குற்றங்கள் தடுப்பு பிரிவு அறிக்கை (எம்.எப்.எம்.பஸீர்) விடுதலைப்புலிகள் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத் தைத் தெரிவித்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரனின் உரை தொடர்பில் அவ ரிடம் வாக்கு மூலம் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்குமாறு சபாநாயகரிடம் திட்டமிட்ட குற்றங்கள் தடுப் புப் பிரிவு எழுத்து மூலம் கோரியுள்ளது. அத்துடன் விஜயகலா மகேஸ்வரன் உரையாற்றும் போது குறித்த நிகழ்வில் பங்கேற்றிருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களிடமும் விசாரணை செய்யவும் அனுமதி வழங்குமாறு சபாநா…
-
- 0 replies
- 984 views
-
-
சுதந்திரபுரத்தில் தேடுதல் – மூன்றாவது நாளில் சிக்கின -பெருமளவு ஆயுதங்கள்!! கடந்த மூன்று நாள்களாக பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்ட ஆயுத வேட்டையில் நேற்று 3ஆவது நாள் பெருமளவான ஆயுதங்களை அவர்கள் மீட்டனர். முல்லைத்தீவு சுதந்திரபுரத்தில் நேற்று மூன்றாவது நாளாக மண்ணைத் தோண்டி ஆயுதங்களை அவர்கள் தேடினர். விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்டதாக நம்பப்படும் பெரும்தொகை ஆயுதங்கள் அப்போது சிக்கின. சுதந்திரபுரம் மத்திப் பகுதியில் அமைந்துள்ள தனி நபர் ஒருவ…
-
- 4 replies
- 868 views
-
-
யாழில் பரபரப்பு : குடிநீர் திட்டத்திற்காக வெட்டப்பட்ட குழியிலும் மனித எச்சங்கள்!!! யாழ்ப்பாணம் - நாயன்மார்காடு, கல்வியங்காடு பகுதியில் குடிநீர் திட்டத்திற்காக வெட்டப்பட்ட குழியில் இருந்து நேற்று மனித எச்சங்கள் வெளியாகியுள்ளமை அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட பகுதியில் இரணைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்திற்காக குடிநீர் விநியோகத்தினை மேற்கொள்வதற்காக நிலக்கீழ் நீர்த்தாங்கிகளை மேற்கொள்ளும் பணியை இந்திய நிறுவனமொன்று மேற்கொண்டு வருகின்றது. குறிப்பிட்ட பணிகளிற்காக சுமார் 3 அடி ஆழத்திற்கு குழிகள் தோண்டப்பட்டவேளையே நிலத்தின் கீழ் இருந்து மனித எச்சங்கள் வெளிப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து நீர்வழங்கல் மற்…
-
- 1 reply
- 787 views
-
-
முன்னாள் போராளி (ஏழை) பெண்ணின் பசுவையும், இதயமற்ற திருடர்கள் இறைச்சியாக்கினர்… கிளிநொச்சியில் ஒரு ஏழை பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றுக்கு வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்ட பசுமாட்டினை இரவோடு இரவாக திருடிச் சென்று இறைச்சிக்காக வெட்டியுள்ளனர் நேற்று முன்தினம் (19.07.18) இரவு ஜெயந்திநகரில் அமைந்துள்ள அவரது தற்காலிக வீட்டு வளவில் கட்டியிருந்த பசுவினை திருடிச் சென்று ஜெயந்திநகர் மீனாட்சிஅம்மன் கோவிலருகில் வைத்து வெட்டி இறைச்சியினை எடுத்துவிட்டு எச்சங்களை விட்டுச்சென்றுள்ளனர் மூன்று மாவீரர்களின் சகோதரியும், காணாமல் ஆக்கப்பட்ட முன்னாள் போராளியின் மனைவியும் முன்னாள் போராளியுமான இரண்டு பிள்ளைகளின் தா…
-
- 0 replies
- 307 views
-
-
டி.ஏ.ராஜபக் ஷ ஞாபகார்த்த கோபுரம், நூதனசாலை நிர்மாண விவகாரம்: கோத்தபாய உட்பட ஏழு பேரை மன்றில் ஆஜராகுமாறு உத்தரவு (எம்.எப்.எம்.பஸீர்) இலங்கை காணி மீட்டல் மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான 4.8 கோடி ரூபா (48,563929.06 ரூபா) பணத்தை நம்பிக்கை மோசடி செய்தமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ உள்ளிட்ட 7 பேரை நேற்று நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு சந்தேக நபர்களாக நீதிமன்றில் பெயரிட்டது. தனது தந்தையான டி.ஏ.ராஜபக்ஷவுக்கு ஞாபகார்த்த கோபுரம், நூதனசாலை ஆகியவற்றை நிர்மாணிக்கும் போது இடம்பெற்றதாக கூறப்படும் நிதி முறைக்கேடு தொடர்பிலான விசாரணைகளிலேயே, சட்ட மா அதிபர் கடந்த ஜூன் 19 ஆம் திகதி வழங்கிய…
-
- 0 replies
- 691 views
-