Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கிளிநொச்சியில் மீண்டும் ஆயுதம் தேடும் பணிகள். கிளிநொச்சி இரணைமடு கனகாம்பிகை குளம் பகுதியில் ஆயுதங்கள் இருக்கலாம் எனும் சந்தேகத்தின் பேரில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.. கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற பதிவாளர் முன்னிலையில் இந்த அகழ்வுப் பணிகள் இடம் இடம்பெற்று வருகிறது. பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி இந்த அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகிறது http://www.virakesari.lk/article/35595

  2. ரெலோவினால் பயன்படுத்தப்பட்டுவந்த ஆயுதக்குவியல் ராமேஸ்வரத்தில் கண்டெடுப்பு தமிழீழ விடுதலைப் இயக்கத்தினால் (ரெலோ) பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஆயுதக் குவியலொன்று ராமேஸ்வரத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் கிணறு தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, அங்கிருந்து துப்பாக்கி தோட்டாக்கள், ரொக்கெட் லோஞ்சர், கண்ணிவெடிகள் போன்ற ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வெடிகுண்டுகளை செயலிழக்க செய்யும் தனிப்படை மற்றும் பொலிஸாரின் பாதுகாப்பு மத்தியில் அப்பகுதியில் அகழ்வுப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறித்த பகுதியிலிருந்து நேற்று (திங்கட்கிழமை) இரவுவரை 10 ஆயிரம் துப்பா…

    • 3 replies
    • 813 views
  3. யாழ். பல்கலை மாணவர்கள் படுகொலை: சந்தேகநபர்கள் அரச சாட்சியாக மாற்றம் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் அரச சாட்சிகளாக மாற்றப்பட்டுள்ளனர். குறித்த வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ். நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது, வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட மூவரும் அரச சாட்சிகளாக மாற்றப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் மன்றில் அறிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து வழக்கு விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அடுத்துவரும் தவணைகளில் விசாரணை யாழ். நீதவான் நீதிமன்றில் முடிவுறுத்தப்பட்டு வழக்கு ஆவணங்கள் மேல் நீதிமன்ற நடவடிக்கைக்க…

  4. 30 மனித எலும்புக்கூடுகள் மன்னாரில் இதுவரை கண்டுபிடிப்பு மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புகள் அகழ்வு பணிகளின் போது இது வரை சுமார் 30 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக விசேட சட்ட வைத்தியநிபுணர் டபில்யூ. ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தெரிவித்தார். மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் இடம்பெற்று வந்த அகழ்வு பணிகள் கடந்த வெள்ளிக்கிழமை மதியம் இடை நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் இன்று திங்கட்கிழமை காலை 7.30 மணியளவில் 20 ஆவது தடவையாக அகழ்வு பணிகள் ஆரம்பமானது. விசேட சட்டவைத்திய நிபுணர் டபல்யூ. ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமையில் ஆரம்பமான அகழ்வுப் பணிகளின் போது அவருடன…

  5. திலீ­ப­னின் குறி­க்கோளை -கொச்­சைப்­ப­டுத்­தா­தீர்கள்- மாநக சபை உறுப்பினர் ரெமீ­டி­யஸ்!! தியாகி திலீ­ப­னின் குறிக்­கோ­ளைக் கொச்­சைப்­ப­டுத்­தும் செயல்­களை இங்­குள்ள சில அர­சி­யல்­வா­தி­கள் கைவிட வேண்­டும் என்று தெரி­வித்­தார் ஈழ­மக்­கள் ஜன­நா­ய­கக் கட்­சி­யின் உறுப்­பி­ன­ரான ரெமீ­டி­யஸ். யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யின் 5ஆவது அமர்வு நேற்று நடந்­தது. அதில் தியாகி திலீ­ப­னுக்­குச் சிலை வைக்க வேண்­டும் என்ற பிரே­ர­ணை­யைத் தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி உறுப்­பி­னர் வி.மணி­வண்­ணன் கொண்­டு­வந்தார். அந்­தப் பிரே­ரணை மீ…

  6. முதலமைச்சா் வேட்பாளா் யார் ? இப்போது பேசவேண்டிய அவசியமில்லை – சம்பந்தன் வடமாகாணசபைக்கு அடுத்த முதலமைச்சா் வேட்பாளராக தமிழ்தேசிய கூட்டமைப்பு யாரை நியமிக்கப்போகிறது? என்பது தொடா்பில் இப்போது தீா்மானிக்க வேண்டிய அவசியம் இல்லை. என கூறியிருக்கும் எதிா்கட்சி தலைவரும், தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், உாிய நேரத்தில் ஒற்றுமையாக கூடி ஒரு தீா்மானத்தை எடுப்போம் எனவும் கூறியுள்ளாா். வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்கினேஸ்வரனின் நீதியரசர் பேசுகிறார் எனும் நூல் வெளியீட்டு நிகழ்வு யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா ச…

  7. சிறிலங்கா முப்படையினரை குடும்பத்துடன் கயாவுக்கு அழைத்துச் சென்ற இந்திய விமானப்படை விமானம் சிறிலங்காவின் முப்படையினர் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் 160 பேர் இந்திய விமானப்படையின் சிறப்பு விமானம் ஒன்றின் மூலம், நேற்று புத்தகயாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இவர்களில் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த 82 பேர் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் உள்ளடங்கியுள்ளனர். இந்திய விமானப்படையின சி- 17 போக்குவரத்து விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து நேற்று இவர்களை ஏற்றிச் சென்றது, இன்று புத்தகயா மற்றும் கயாவில் உள்ள இந்திய இராணுவ அதிகாரிகள் பயிற்சி அகடமிக்குச் செல்லும் இவர்கள், நாளை, அதே விமானத்தில் கொழும்பு திரும்புவார்கள். …

    • 1 reply
    • 434 views
  8. ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் கடுமையான விவாதத்தில் ஈடுபட்ட றிசாட் - சத்தியலிங்கம் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் வர்த்தக கைத்தொழில் அமைச்சரும், மாவட்ட இணைத்தலைவருமான றிசாட் பதியுத்தீன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் ஆகிய இருவருக்கும் இடையில் கடுமையான விவாதம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் அமைச்சர் றிசாட் பதியுதீன், வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன், பிரதி அமைச்சர் கே.கே.மஸ்தான் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரின் இணைத் தலைமையில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இதன்போதே குறித்த விவாதம் ஏற்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர்…

  9. ஹிட்­லரின் மூத்த சகோ­தரர் மேல­திக கடன் பெறு­வ­தி­லி­ருந்து தப்­பித்தோம் (எம்.எம்.மின்ஹாஜ்) டொலர் பெறு­மதி அதி­க­ரிப்­ப­தனை கட்­டுப்­ப­டுத்த முடி­யாது என்­கிறார் பிர­தமர் ஆட்­சியில் தான் தொடர்ந்து இருந்­தி­ருந்தால் மாகம்­புர, மத்­தள போன்று துறை­முகம், விமான நிலை­யங்கள் பல அமைத்­தி­ருப்பேன் என ஹிட்­லரின் மூத்த சகோ­தரர் கூறி­யுள்ளார். எனினும் அவ்­வாறு அதி­க­ள­வான துறை­முகம், விமான நிலை­யங்­களை நிர்­மா­ணிக்க அதி­க­ளவு கடன்­களை எடுக்க நேரிட்­டி­ருக்கும். ஆனால் அந்த கடனில் இருந்து நாம் இல­கு­வாக தப்­பித்­துக்­கொண்டோம் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார். டொலரின் பெறு­மதி அதி­க­ரிப்­ப­தனை கட்­…

  10. நாளை சிறிலங்கா வருகிறார் பாகிஸ்தான் கூட்டுப் படைத் தளபதி பாகிஸ்தானின் கூட்டுப்படைத் தலைமை அதிகாரிகள் குழுவின் தலைவரான ஜெனரல் சுபைர் மஹ்மூட் ஹயட், நான்கு நாட்கள் பயணமாக, நாளை சிறிலங்கா வரவுள்ளார். சிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவின் அழைப்பின் பேரில் இவர் இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். ஜெனரல் ஹயட், பாகிஸ்தானின், கூட்டுப்படைத் தலைமை அதிகாரிகள் குழுவின் 17 ஆவது தலைவர் என்பதுடன், பாகிஸ்தான் படைகளில் உள்ள நான்கு நட்சத்திர ஜெனரல்களில் மூத்தவராவார். இவர் சிறிலங்கா பயணத்தின் போது, அதிபர் மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்புச் செயலர், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி, முப்படைகளின் தளபதிகளைச் சந்தித்துப் ப…

  11. ஐ.நா அமைதிப்படையில் பணியாற்ற சிறிலங்கா படையினருக்கு அனுமதி அளிப்பதில் இழுபறி சிறிலங்கா மனித உரிமை ஆணைக்குழுவின் அனுமதி கிடைக்காததால், ஐ.நா அமைதிப்படையில் பங்கேற்பதற்காக சிறிலங்கா இராணுவத்தின் மற்றொரு அணி புறப்படுவதில் தொடர்ந்தும் இழுபறி நீடிக்கிறது. முன்னர், ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனித உரிமை ஆணைக்குழு அதிகாரிகளின் அனுமதியுடன் சிறிலங்கா படையினர் ஐ.நா அமைதிப்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டனர். எனினும், இந்த ஆண்டில் இருந்து சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அனுமதியைப் பெற்ற பின்னரே, சிறிலங்கா படையினரை அனுப்ப வேண்டும் என்று, அமைதிப்படை நடவடிக்கைகளுக்கான ஐ.நா பணியகம் அறிவித்திருந்தது. இதற்கமைய, இந்த ஆண்டு மார்ச் மாதம் புதிய விதிமுறைகள் அறிமுகப்…

  12. ஹிட்லராட்சி – முட்டாள்தனமான அறிவுரை என்கிறார் ஜேர்மனி தூதுவர் ஹிட்லரைப் போன்ற ஆட்சியை அமைக்க வேண்டும் என்று கோத்தாபய ராஜபக்சவுக்கு, அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்கர் வெண்டருவே உபாலி தேரர், அளித்த அறிவுரை பொறுப்பற்ற – முட்டாள்தனமானது என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவுக்கான ஜேர்மனி தூதுவர் ஜோன் ரொட். சிறிலங்காவுக்கு ஒரு ஹிட்லர் தேவை என்று உபாலி தேரர் வெளியிட்டுள்ள மூர்க்கத்தனமான கருத்துக்கு, சிறிலங்கா அதிபர், பிரதமர் வெளியிட்ட கண்டனங்களுடன் தாம் முற்றிலும் இணங்கிப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ‘காவி உடை அணிந்து கொள்வது, பொறுப்பற்ற முட்டாள்தனமான கருத்துக்களை வெளியிடுவதைத் தடுக்காது என்பதையே இது நிரூபிக்கிறது. எமக்கு இன்னும் அதிகமான ஜனநாயக…

  13. அமெரிக்க கடற்படைக் குழு சிறிலங்கா கடற்படைத் தளபதியுடன் பேச்சு அமெரிக்க கடற்படையின் அனைத்துலக திட்டங்களுக்கான பிரதி உதவி செயலர் றியர் அட்மிரல், பிரான்சிஸ் டி மோர்லி தலைமையிலான குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது. பரஸ்பர நலன்கள் மற்றும் இருதரப்பு ஒத்துழைப்புகளை விரிவுபடுத்துவது தொடர்பான பேச்சுக்களை நடத்துவதற்கே அமெரிக்க கடற்படையின், அனைத்துலக திட்டங்களுக்கான குழு சிறிலங்கா வந்துள்ளது. இந்தக் குழுவினருக்கு கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரின் இல்லத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதேவேளை, சிறிலங்கா கடற்படைத் தலைமையகத்தில், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க, சிறிலங்கா கடற்படையின் நடவடிக்கைப் பணிப்பாளர் பியால் டி சில்வா ஆ…

  14. 16 பேர் அணியில் பிளவு – 10 பேர் கூட்டு எதிரணியில் இணைகின்றனர் கூட்டு அரசாங்கத்தில் இருந்து வெளியேறி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணி பிளவுபடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அணியில் உள்ள 16 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 10 பேர் எதிர்வரும் ஜூலை 3ஆம் நாள் நடைபெறும் நாடாளுமன்ற அமர்வில், கூட்டு எதிரணியுடன் இணைந்து கொள்ளவுள்ளனர் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இவர்கள் அடுத்த வாரம் நடக்கும் கூட்டு எதிரணியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திலும் பங்கேற்பர் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஏனைய ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கூட்டு எதிரணிக்கு அழைத்து வரும் முயற்சிகளிலும், இந்த 1…

  15. மகிந்தவுடன் பேசத் தயார்- சம்பந்தன் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுடன் பேசுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக இருப்பதாக கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் தெரிவித்துள்ளார். யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற “நீதியரசர் பேசுகிறார்” என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு வெளியில் சென்ற போது ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மகிந்த ராஜபக்ஸ ஆட்சிக்காலத்தில் அவருடன் பேசி, பிரச்சினைகளை தீர்ப்பதற்கு கூட்டமைப்பினால் இயன்ற அளவு முயற்சிகள் மேற்கொண்டிருந்தது. எனினும் மஹிந்த அதை உதாசீனம் செய்துவிட்டார். அப்போது அவர…

  16. உதயங்க இலங்கை வருகின்றார் மிக் விமானக் கொள்வனவு மோசடியில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ரஸ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க விரைவில் இலங்கைக்கு வரவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. உதயங்கவீரதுங்க இலங்கை திரும்பும்போது கைதுசெய்யப்படுவதை தடுப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி சார்பான அமைப்பொன்று நீதிமன்றத்தின் உதவியை நாளை நாடவுள்ளது உதயங்க கைதுசெய்யப்படுவதை தடுப்பதற்கான நீதிமன்றத்தின் உத்தரைவை பெறுவதற்கு குறிப்பிட்ட அமைப்பு தீர்மானித்துள்ளது. உதயங்கவீரதுங்கவின் சார்பில் தமது அமைப்பின் சட்டத்தரணிகள் நீதிமன்றில் ஆஜராகவுள்ளனர் என நலின் நிசங்க என்பவர் தெரிவித்துள்ளார். மிக்விமானக்கொள்வனவு மோசடி தொடர்பில் உதயங்கவிற்க…

  17. ’அமெ. பிரஜாவுரிமையை 2 மாதங்களில் இரத்துசெய்ய முடியும்’ இரண்டு அல்லது மூன்று மாதங்களில், அமெரிக்கப் பிரஜாவுரிமையைத் தன்னால் இரத்து செய்துகொள்ள முடியுமென, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, இன்று (25) தெரிவித்தார். டீ.ஏ.ராஜபக்ஷ அருங்காட்சியக நிர்மாணத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடிகள் குறித்த, பொலிஸ் நிதிப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைகளுக்காக, வாக்குமூலமொன்றைப் பெற்றுக்கொடுக்கச் சென்ற கோட்டாபய, சுமார் 3 மணித்தியாலங்களாக வாக்குமூலமளித்த பின்னர், சற்று முன்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவிலிருந்து வெளியேறிய அவரிடம், அமெரிக்…

  18. பதவியால் தப்பிக்கும் அட்மிரல் விஜேகுணரத்ன – விரைவில் கைதாவார்? அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை கைது செய்வதற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் திட்டமிட்டுள்ளதாகவும், எனினும், அவரது பதவி நிலை அதற்குத் தடையாக இருப்பதாகவும் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக பதவி வகிக்கும் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, இவர் சிறிலங்கா கடற்படைத் தளபதியாக இருந்த போது, நேவி சம்பத் என்ற குற்றவியல் சந்தேக நபருக்கு, அடைக்கலம் கொடுத்து உதவினார் என்றும், நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல உடந்தையாக இருந்தார் என்றும், குற்றத்தை மறைத்தார் என்றும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு…

  19. மன்னார் கடற்பரப்பில் போதைப்பொருள் : கடற்படை அதிரடி சோதனை மன்னார், பேசாலை கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டிருந்த இழுவைப்படகுகளில் கடற்படையினர் சல்லடைத் தேடுதலில் ஈடுபட்டனர். இந்தியாவிலிருந்து கடத்தி வரப்படும் போதைவஸ்துக்கள் இதற்குள் ஒழித்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்திலேயே குறித்த தேடுதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் நேற்று சோலை கடற்பரப்பில் இடம்பெற்றது.மன்னார் பேசாலை கடலில் சுமார் எண்பது இழுவைப்படகுகள் தொழிலுக்கு சென்று வந்தபின் இப் பகுதியில் நங்குரமிடப்பட்டு வருவது வழமையாகும். இந்த இழுவைப்படகுகளிலேயே கடற்படையினர் சோதனையிடும் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.இந்தியாவில் இருந்து எடுத்து வரப்படும் போதைப்பொருட்களை பதுக்…

  20. ஆயுத முனையில் காணிகளை பறித்தார்களாம்: 75 தமிழர்களின் காணிகளை குறிவைக்கும் முஸ்லிம்கள்! June 25, 2018 மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள முஸ்லீம்களின் வயல்காணிகளை விடுதலைப் புலிகளின் காலத்தில் ஆயுத முனையில் பறித்தார்கள் என கோரி 75 தமிழர்கள் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது- மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள முஸ்லீம்களின் வயல்காணிகளை விடுதலைப் புலிகளின் காலத்தில் ஆயுத முனையில் பறித்தார்கள் என கூறி செங்கலடி பதுளை வீதியில் உள்ள சுமார் 500 ஏக்கர் காணிகளை மீள பெற்றுத்தருமாறு கோரி 75 தமிழர்கள் மீது செங்கலடி காணி மத்தியஸ்த சபையில் முறைப்பாடு செய்ய…

  21. ஒட்டுசுட்டான் சம்பவம் புலிகளின் மீள் வருகையா? வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வெளியேறியவரும் கைது – கைதுகள் தொடரும் – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பகுதியில் விடுதலைப்புலிகளின் புலிக்கொடி மற்றும் 20 கிலோ கிளைமோர் குண்டு என்பவற்றுடன், முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் கடந்த 22 ஆம் திகதி காலை கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று வரை ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் மேலும் கைதுகள் தொடரும் எனவும் காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று ஞாயிற்று கிழமை (24.06.18) கிளிநொச்சி திருவையாறு பகுதியை சேர்ந்த 24 வயதுடைய கேதீஸ்வரன் எனும் இளைஞர் வைத்தியசாலையில்…

  22. வவுனியாவில் பதற்றம் ; இனத்தை இழிவுபடுத்தி துண்டுப்பிரசுரம் வெளியிட்ட நபர் கைது வவுனியாவில் பல்லாண்டு காலமாக வாழ்ந்து வரும் மலையக உறவுகளை அல்லது இந்திய வம்சாவளி மக்களை இழிவுபடுத்தியும் உணர்வுகளைத்தூண்டும் விதத்திலும் துண்டுப்பிரசுரம் வெளியிட்டுள்ள இளைஞன் ஒருவரை இன்று காலை வவுனியா பிரதேச செயலகத்திற்குள் வைத்து மடக்கி ஒன்று திரண்டு குரலெழுப்பிய மக்கள் அவரை பொலிசாரிடம் இனங்காட்டி பிடித்துக்கொடுத்துள்ள சம்பவம் வவுனியா பிரதேச செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. இதனால் பிரதேச செயலகத்தில் சற்று பதட்ட நிலை தோன்றியிருந்ததுடன் பொலிசார் பாதுகாப்பினை மேற்கொண்டனர். இன்று காலை வவுனியா சிந்தாமணி ஆலயத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய வடக்கு, கிழக்கு வாழ…

  23. வடக்கு- கிழக்கில் வீடுகளை அமைக்கும் சீனா – சிறிலங்காவிடம் இந்தியா கவலை வடக்கு, கிழக்கில் 40 ஆயிரம் வீடுகளை அமைக்கும் ஒப்பந்தம், சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளமை தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்திடம் இந்தியா கவலை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்னர் சிறிலங்காவில் வீடுகளை அமைத்திராத சீன நிறுவனதுடன்,, கேள்விப் பத்திரம் எதுவும் கோரப்படாமல், ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளமை குறித்து சிறிலங்காவின் உயர் மட்டத்துக்கு இந்தியா கவலையை வெளிப்படுத்தியுள்ளது. சீன ரயில்வே பெய்ஜிங் பொறியியல் குழும நிறுவனத்தின் சிறிலங்கா பிரதிநிதியான, யப்கா கட்டுமான நிறுவனத்துக்கு, 40 ஆயிரம் வீடுகளை வடக்கு, கிழக்கில் அமைக்கும் திட்டத்தை செயற்படுத்தும் பொறுப்பை ஒப்படைக்கும், அமைச்சர் டி.எம்.…

  24. கோத்தபாய ராஜபக்ஷ என்றால் பயமும் ஹிட்லரின் ஞாபகமும் பலருக்கு வருகிறது… பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர், கோத்தபாய ராஜபக்ஸ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என்கிற அச்சம், நாட்டிலுள்ள சில அரசியல் வாதிகளுக்கு ஏற்பட்டுள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். எனினும் ஒன்றிணைந்த எதிரணியினரின் சார்பில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாரை களமிறக்குவது என்பது இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவின் பிறந்தநாள் நிகழ்வில் கலந்துகொண்டிருந்த, அஸ்கிரிய பீடத்தின் துணை மகாநாயக்கர் வெண்டருவே உபாலி தேரர், ஹிட்…

    • 1 reply
    • 623 views
  25. அனு­நா­யக்க தேர­ரின் உரைக்கு- மைத்­திரி, ரணில் கடும் கண்­ட­னம்!! ஹிட்­ல­ரின் கொள்­கைக்­கும், பௌத்த தர்­மத்­துக்­கு­மி­டை­யி­லான தொடர்­பு­தான் என்ன? ஹிட்­லர் வழி நடப்­ப­தா­னது பௌத்த தர்­மத்­துக்கு எதி­ரான செய­லா­கும் என்று தெரி­வித்­துள்­ளார் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க. ஹிட்­ல­ராக மாறி, இரா­ணுவ ஆட்­சி­யை­யே­னும் ஏற்­ப­டுத்தி நாட்டை முன்­னேற்­று­வ­தற்கு கோத்­த­பாய ராஜ­பக்ச முன்­வ­ர­வேண்­டு­மென அழைப்பு விடுத்­துள்ள அஸ்­கி­ரிய பீடத்­தின் அனு­நா­யக்க தேர­ரான வென்­ட­ருவே ஸ்ரீ உபாலி தேர­ரின் கருத்தை வன்­மை­யா­கக் கண்­டிக்­கும் வகை­யி­ல…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.