ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143318 topics in this forum
-
லசந்த படுகொலை ; முன்னாள் பொலிஸ்மா அதிபர் கைது ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கல்கிஸை பிரதேசத்திற்கு பொறுப்பாகவிருந்த முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் பிரசன்ன நாணயக்கார கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்றிரவு குற்றத் தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். உடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08 ஆம் திகதி கல்கிஸை பிரதேசத்தில் வைத்து இனந்தெரியாத ஆயுததாரிகளால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்தார். இந்நிலையில் குறித்த கொலை தொடர்பான சாட்சியங்களை மறைத்தமை தொடர்பான சந்தேகத்தின் பேரிலேயே கல்கிஸை பிரதேசத்திற்கு பொறுப்பாக…
-
- 0 replies
- 282 views
-
-
அனைத்து சபைகளிலும் ஆட்சி அமைப்பதற்கு ஈ.பி.டி.பி ஆதரவு நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிட்ட ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினுடைய பெறுபேறுகளில் தனக்கு திருப்தி இல்லா விட்டாலும் வாக்களித்த மக்களுக்கு எனது நன்றிகள் என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவாநந்தா தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி சபை தேர்தலில் தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், இந்த நிலையில் சில சபைகைளை தவிர்ந்து ஏனைய சபைகளில் தொங்கு நிலைமை காணப்படுவதால் எந்த கட்சி மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை முன்னெடுக்கப்படுகின்றதோ அந்த கட்சிக்கு நாங்கள் வெளியிலிருந்து ஆதரவு அளிப்பதற்கு தயாராக உள்ளோம். …
-
- 2 replies
- 508 views
-
-
மஹிந்த கனவு கண்டாலும் நடக்காது ; ராஜித்த சேனாரத்ன Weiterempfehlen நல்லாட்சி அரசாங்கத்துக்கு 2015 ஜனவரி 8 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலின்போது கிடைக்கப்பெற்ற மக்கள் ஆணை உள்ளூராட்சிமன்ற தேர்தலில் மேலும் உறுதியாகியுள்ளது. அத்துடன் பிரதமரை மாற்றவோ அல்லது அரசாங்கம் ராஜினாமாசெய்யவோ எந்ததேவையும் வெளிப்படவில்லை என சுகாதார அமைச்சரும் அமைச்சரவை இணைப்பேச்சாளருமான ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். உள்ளூராட்சிமன்ற தேர்தல் பெறுபேறுகள் தொடர்பாக ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது, நடந்து முட…
-
- 4 replies
- 584 views
-
-
நல்லாட்சி அரசைத் தொடர்ந்து கொண்டு செல்வதற்கு ஒரு விசேட குழு அமைக்கப்படவேண்டும் என, ஜனாதிபதி - பிரதமர் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு காணப்பட்டுள்ளது. உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளையடுத்து இலங்கை அரசியலில் ஒரு குழப்ப நிலை தோன்றியுள்ளது. இந்திய - அமெரிக்க தூதர்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் இருந்து, இந்தத் தேர்தல் முடிவுகள் உள்நாட்டு ரீதியாக மட்டுமன்றி சர்வதேச ரீதியாகவும் சிறு தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை உணர முடியும். தேர்தல் முடிவுகள் வெளியானதை அடுத்து இன்று (13) காலை முதல் ஐதேக மற்றும் ஸ்ரீலசுக ஆகிய கட்சிக…
-
- 0 replies
- 416 views
-
-
படிப்பினைகளை வாரி வழங்கிய உள்ளூராட்சித் தேர்தல் !! படிப்பினைகளை வாரி வழங்கிய உள்ளூராட்சித் தேர்தல் !! இடம் பெற்று முடிந்த உள்ளூராட்சிச் சபைத் தேர்தல் அரசியல் தலைவர்களுக்கும், மக்களுக்கும் பல்வேறு படிப்பினைகளை எடுத்துக் கூறி யுள்ளது. தெற்கில் மகிந்த ராஜபக்ச மீள் எழுச்சி பெற்றுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாவது இடத்தைப் பிடித்த அதேவேளை மைத்திரி தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சி மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 466 views
-
-
அரசமைப்புத் தொடர்பில் ஆராய்வது மிக அவசியம்!! நடைபெற்று முடிந்துள்ள உள்ளூராட்சித் தேர்தல், உருவாக்கப்பட்டுவரும் புதிய அரசமைப்புத் தொடர் பாக வெளிவந்திருந்த இடைக்கால அறிக்கையின் மீதான கருத்துக்கணிப்பாக அமையும் என்று ஏற்கனவே கணிக்கப்பட்டிருந்தது. இவ்வாறிருக்க, அரசமைப்பின் உருவாக்கமும், அது தொடர்பிலான கோரிக்கைகள் மற்றும் நிபந்தனைகளும் மீண்டும் பரிசீலிக்கப்பட வேண்டிய தேவையும் கட்டாயமும் உள்ளது என்பதை தமிழர் தாயகத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள் ளன. அரசமைப்பில், வடக்கு – கிழக்கு இணைந்த ஒன்றுபட்ட இலங்கைக்குள் கூட்டாட்சி அடிப்படையில…
-
- 0 replies
- 377 views
-
-
இந்துக்களின் வணக்க சிலைகள் உடைப்பு !!! Weiterempfehlen2 மன்னாரில் மூன்று இடங்களில் இந்துக்களின் வணக்க சிலைகள் நேற்று இரவு உடைக்கப்பட்டுள்ளமை இந்து மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் 1988ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்திய இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட 'லிங்கேஸ்வரர்' தேவஸ்தானத்தில் காணப்பட்ட மூன்று சிலைகள் அங்கிருந்து திருடிச் செல்லப்பட்டுள்ளது. குறித்த ஆலயத்தினுள் கடந்த 30 வருடங்களாக காணப்பட்ட சிவலிங்கம், புத்தர் , பிள்ளையார் ஆகிய மூன்று சிலைகள் அங்கிருந்து திருடிச் செல்லப்பட்டுள்ளது. மன்னார்-தாழ்வுபாடு பிரதன வீதி கீரி சந்தியில் கடந்த 18 வருடங்க…
-
- 4 replies
- 1k views
-
-
தமிழர் பகுதிகளில் எவரும் ஆட்சியமைக்க முடியாத நிலையை ஏற்படுத்திய தேர்தல் முறை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைGETTY IMAGES இலங்கையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடத்தப்பட்ட முறைமையானது குறிப்பாக தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஆட்சியமைப்பதில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக பல தரப்பின…
-
- 0 replies
- 521 views
-
-
நாங்கள் தமிழீழம் கேட்கவில்லை: யாழில் சம்பந்தன் தீர்வு வழங்கப்படாவிட்டால் நாம் வெளியக சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான தீர்வை கோருவோம் என கூறியிருக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன், தமிழ் மக்களை நாம் ஒருபோதும் ஏமாற்ற மாட்டோம், தமிழ் அங்கீகரிக்காத தீர்வினை தமிழ்தேசிய கூட்டமைப்பு அங்கீகரிக்காது எனவும் கூறியுள்ளார். நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை ஆதரித்து யாழ்.சங்கிலியன் பூங்கா வளாகத்தில் இன்று மாலை நடைபெற்ற பி ரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், முன்…
-
- 13 replies
- 1.2k views
- 1 follower
-
-
ஜனாதிபதி வாசஸ்தலம் நோக்கி படையெடுத்துள்ள ஐ.தே.க. அமைச்சர்கள் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியையடுத்து பிரதமர் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களுக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையையடுத்து எடுக்கப்பட்ட முடிவுகளுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வாசஸ்தலம் நோக்கிப் படையெடுத்துள்ளது. இந்நிலையில் குறித்த பேச்சுவார்த்தையில் ஐக்கிய தேசியக் கட்சி தனியாட்சி அமைக்க வேண்டுமென தீர்மானம் எடுக்கப்பட்டுள்ள நிலையில், அது குறித்து ஜனாதிபதியிடம் அனுமதி கோர ஐ.தே.க அமைச்சர்கள் குழு ஐனாதிபதி வாசஸ்தலத்திற்கு படையெடுத்துள்ளது. தற்போது ஐ.தே.க. வின் அமைச்சர்கள் …
-
- 0 replies
- 585 views
-
-
நாடாளுமன்ற கலைப்பு – மகிந்தவுக்கு சட்டம் தெரியாதா? நாடாளுமன்றம் தெரிவு செய்யப்பட்டு நான்கரை ஆண்டுகள் நிறைவடைவதற்கு முன்னர், அதனைக் கலைக்கும் அதிகாரம் சிறிலங்கா அதிபருக்கு இல்லை என்பதை, முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிந்து கொள்ள வேண்டும் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளரான இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தை உடனடியாக கலைத்து, தேர்தலை நடத்த வேண்டும் என்று மகிந்த ராஜபக்ச நேற்று அழைப்பு விடுத்திருந்தார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள டிலான் பெரேரா, “நாடாளுமன்றத்தை இப்போது கலைக்க முடியாது என்பதை, மகிந்த ராஜபக்ச தனது சட்ட அறிவின் மூலம் உணர்ந்து கொள்ள வேண்டும். அரசியலமைப்பின் 70(1) பிரிவின் கீழ்…
-
- 0 replies
- 541 views
-
-
மகிந்த -– மைத்திரி இணைவுக்கான இரகசியப் பேச்சுக்கள் ஆரம்பம் மகிந்த -– மைத்திரி இணைவுக்கான இரகசியப் பேச்சுக்கள் ஆரம்பம் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் அமோக வெற்றியீட்டிய முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுமக்கள் முன்னணி மற்றும் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன இணைந்து செயற்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான இரகசியப் ப…
-
- 0 replies
- 430 views
-
-
அரசியலுக்குள் கால் பதித்தார் ஆதிவாசிப் பெண் இலங்கையின் வரலாற்றில் முதற் தடவையாக ஆதிவாசிப் பெண் ஒருவர் அரசியலுக்குள் உள்நுழைந்துள்ளார் கடந்த 10ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் தெஹியத்தக்கண்டிய- ஹேனாநிகல தெற்கு மற்றும் வடக்கில் போட்டியிட்ட 37 வயதான டபிள்யு. எம். ஷிரோமாலா என்றப் பெண்ணே வெற்றிப்பெற்று உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். கல்வி பொதுதராதர சாதாரணதரம் வரை கல்வி பயின்றுள்ள இவர், 1369 வாக்குகளைப் பெற்று வெற்றிப்பெற்றுள்ளார். தான் பெற்ற வெற்றிப் பெற்றமைத் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், ” தன்னுடைய மக்களுக்காகவும், அழிந்து செல்லும் …
-
- 0 replies
- 482 views
-
-
பொதுத்தேர்தலை உடன் நடத்துங்கள் பிரதமராகும் எண்ணமில்லை; தேர்தலை நடத்துங்கள் என்கிறார் மஹிந்த (எம்.சி.நஜிமுதீன்) உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மூலம் பொதுத் தேர்தலை நடத்துமாறு மக்கள் செய்தியொன்றை வழங்கியுள்ளனர். ஆகவே அரசாங்கம் உடனடியாக பொதுத்தேர்தலை நடத்த வேண்டும். அப்பொதுத் தேர்தல் முடிவுகளை அடிப்படையாகக்கொண்டே நாம் ஆட்சியமைப்போம். மாறாக ஐக்கிய தேசியக் கட்சியையோ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையோ இணைத்து புதிய ஆட்சி தொடர்வதற்கு நாம் தயாரில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை ஜனாதிபதி மைத்திபால சிறிசேன ஒருப…
-
- 0 replies
- 280 views
-
-
தமிழர்களின் வாக்கைப்பெற்று சகோதர இனத்தை பலப்படுத்துகிறது த.தே.கூ. ; கருணா தமிழ் தேசிய கூட்டமைப்பானது தமிழர்களின் வாக்குபெற்றுக்கொண்டு சகோதர இனத்தினை பலப்படுத்துவதில் அக்கறையாக உள்ளது. எதிர்காலத்தில் த.தே.கூ.வுக்கு நல்லதொரு பாடம் புகட்ட வேண்டுமென முன்னாள் பிரதி அமைச்சரும் தமிழர் ஐக்கிய முன்னணியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்தார். தற்போது இருக்கும் மைத்திரி - ரணில் நல்லாட்சி அரசாங்கம் உடனடியாக பதவி விலகி மக்களின் ஆணையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பொதுஜன பெரமுன, அதிக உள்ளுராட்சி ம…
-
- 0 replies
- 462 views
-
-
ஈ.பி.டி.பியோடு சேர யாரும் தயாரில்லை!! ஈ.பி.டி.பியோடு சேர யாரும் தயாரில்லை!! உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் வடக்கில் ஆட்சி அமைப்பதில் தொங்கு நிலமை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சபைகளைக் கைப்பற்றியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோ ஈ.பி.டி.பியுடன் கூட்டுச் சேருவதில்லை என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளன என்று அறிய முடிகின்றது. ஈ.பி.டி.பியுடன் கூட்டுச் சேருவதன் ஊடாக சில சபைகள…
-
- 3 replies
- 629 views
-
-
நல்லிணக்கத்தின் பெயரில் வெறும் கண்துடைப்பு: சீ.வீ. விசனம்! நாட்டில் உண்மையான நல்லிணக்கத்திற்கு வித்திடப்படவில்லையென வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்தோடு, நல்லிணக்கத்தின் பெயரில் வெறும் கண்துடைப்பே இடம்பெறுகின்றதென அவர் மேலும் தெரிவித்தார். முதலமைச்சரால் வழங்கப்பட்டு வரும் வாரம் ஒரு கேள்விக்கு பதில் பகுதியில், நாட்டின் நல்லிணக்கம் தொடர்பில் வினவப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மேற்குறித்தவாறு குறிப்பிட்டார். முதலமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்- ”நல்லிணக்கத்திற்கு புரிந்துணர்வு ஏற்படுவது முக்கியம். நாம் மேன்மையானவர்கள், தமிழர்கள் கீழானவர்கள், கள்ளத்தோணிகள் என்ற எண்ணம் சிங்களவர்…
-
- 0 replies
- 535 views
-
-
முல்லைத்தீவில் வெடிப்புச் சம்பவம் – பல வீடுகள் சேதம்!! முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் சில வீடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வெடிப்புச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது என்று முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர். முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் குவிக்கப்பட்டிருந்த குப்பைக்குப் பிரதேச நபர் ஒருவர் தீ வைத்தபோது அதற்குள் இருந்த ஆர்.பி.ஜி ரக வெடிபொருள் வெடித்ததால் குப்பை மேட்டிலிருந்த சில கழிவுப் பொருள்கள் அருகிலுள்ள வீ…
-
- 0 replies
- 442 views
-
-
வவுனியாவில் இராணுவத்தினரின் நல்லிணக்க பொங்கல்!!! இந்துக்களின் விசேட தினமான சிவராத்திரியை முன்னிட்டு வன்னி படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் இராணுவத்தினரால் வவுனியா கந்தசாமி ஆலயத்தில் இன்று காலை விசேட பொங்கல் இடம்பெற்று பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றன. இப் பூஜை வழிப்பாட்டின் போது வன்னிப் படைத் தலைமையகத்தைச் சேர்ந்த இராணுவ அதிகாரிகள், இராணுவத்தினர் எனப் பலரும் சீருடையுடன் கலந்து கொண்டு நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் வழிபாடுகளை மேற்கொண்டுள்ளனர். http://www.virakesari.lk/article/30574
-
- 0 replies
- 497 views
-
-
வன்னியில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பெருவெற்றி; மஸ்தான் எம்.பி. பெருமிதம்! வன்னியில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வரலாறு கானாத பெருவெற்றி என மஸ்தான் எம்.பி. தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தல்களில் வன்னி மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வரலாறு காணாத மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. வன்னி தேர்தல் மாவட்டத்தில் தாமரை மொட்டு பிரிந்து தனியாக போட்டியிட்ட பின்னரும் 24 275 வாக்குளைப் பெற்று 31 ஆசனங்களை சுதந்திர கட்சி கைப்பற்றியுள்ளது என மஸ்தான் எம்.பி. தெரிவித்துள்ளார். மேலும் இதுவே இப்பகுதியில் முதன் முதலாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி பெறும் அதிக பட்ச ஆசனங்களாகும். வவுனியா மாவட்டத்தில் மாத்திரம் …
-
- 0 replies
- 281 views
-
-
டுபாய் சென்ற அதிகாரிகள் வெறும் கையுடன் நாடு திரும்புவர்… ரஸ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை கைது செய்யும் நோக்கில் டுபாய் சென்ற அதிகாரிகள் வெறும் கையுடன் நாடு திரும்ப உள்ளனர். மேலதிக சொலிசுட்டர் ஜெனரல் யசந்த கோதாகொட, நிதி மோசடி விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் ரவி வைத்தியலங்கார உள்ளிட்ட அதிகாரிகள் டுபாய்க்கு விஜயம் செய்திருந்தனர். உதயங்கவை கைது செய்து நாட்டுக்கு அழைத்து வரும் நோக்கில் இந்த அதிகாரிகள் டுபாய் சென்றிருந்தனர். உதயங்கவை ஒப்படைப்பதற்கு டுபாய் அதிகாரிகள் விரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் பிரச்சினையானது ராஜதந்திர முரண்பாட்டு நிலைமை வரையில் தற்பொழுது விரிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உதயங்கவை கைது ச…
-
- 0 replies
- 242 views
-
-
அத்தனகல்லவை பறிகொடுத்த சந்திரிக்கா பிரித்தானியா பறந்தார்… முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவசரமாக வெளிநாட்டுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். சந்திரிக்கா இங்கிலாந்திற்கு அவசரமாக பயணம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் போது அத்தனகல்ல தேர்தல் தொகுதியில் அடைந்த படு தோல்வி, சந்திரிக்காவை மன உலைச்சளுக்கு ஆளாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அத்தனகல்ல தேர்தல் தொகுதியில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வெற்றியீட்டியதுடன் இரண்டாம் இடம் ஐக்கிய தேசியக் கட்சியினால் கைப்பற்றிக்கொள்ள்பட்டுள்ளது. http://globaltamilnews.net/2018/66668/
-
- 0 replies
- 260 views
-
-
இலங்கை அரசியலில் பரபரப்பு ! நிலைப்பாட்டை வெளியிட்டது த.தே.கூ. Weiterempfehlen ஐக்கிய தேசிய கட்சியுடனே வேறு எந்த கட்சியுடனுமோ இணைந்து ஆட்சியமைக்க இதுவரை எமது கட்சிக்கு எவ்வித அழைப்பும் விடுக்கப்படவில்லை. அரசாங்கம் இது தொடர்பில் அழைப்பு விடுக்கும் பட்சத்தில் நாம் சிறந்த தீர்மானமொன்றை எடுக்கவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கையின் அரசியல்நிலைப்பாட்டில் தற்போது நிலவிவரும் அரசியல் நிலைவரங்களின் அடிப்படியில் ஐக்கிய தேசியக்கட்சியின் தனி அரசாங்கம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தனி அரசாங்கம் அமைப்பது தொடர்பில் பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டனவா …
-
- 1 reply
- 383 views
-
-
விமான நிலையம் சென்றிருந்த ஊடகவியலாளர்களிடம் சி.ஐ.டியினர் வந்துள்ளனரா எனக்கேட்ட கோட்டாபய (எம்.எப்.எம்.பஸீர்) ‘நான் ஓர் அமெரிக்க பிரஜை. என்னால் பிரதமராக பதவி வகிக்க முடியாது. தற்போதைக்கு பகிரங்க அரசியலில் குதிக்கும் எண்ணமும் கிடையாது’ என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்க்ஷ தெரிவித்தார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் தலைமையில் களமிறங்கிய பொது ஜன பெரமுன கட்சி விசேட வெற்றியை பதிவு செய்த நிலையில் நேற்றுக் காலை அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பிய கோட்டாபய ராஜபக்க்ஷ, விமான நிலையத்தில் வைத்து ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார். ஊடக…
-
- 1 reply
- 322 views
-
-
தீவிரமடையும் அரசியல் பரபரப்பு ! இன்று மாலை ஜனாதிபதியுடன் பலதரப்பு பேச்சு ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் விசேட சந்திப்பொன்றை நடத்தவுள்ளனர். இதன் பிரகாரம் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மனோகணேசன் உட்பட பலர் இன்று மாலை 6 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து தனி அரசாங்கம் அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று மாலை 7 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளமை குறிப்ப…
-
- 0 replies
- 258 views
-