ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143318 topics in this forum
-
ஐக்கியதேசியக் கட்சி தனித்து ஆட்சி அமைக்கிறதா? ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சி அமைக்கக்கூடிய சாத்தியம் உருவாகியுள்ளது. உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் அதிருப்தி அடைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் அரசாங்கத்தை விட்டு விலகிச் செல்ல ஜனாதிபதி அனுமதி வழங்க உள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நல்லாட்சி அரசாங்கத்தில் தொடர்ந்தும் அங்கம் வகிக்கக் கூடாது என சுதந்திரக் கட்சியின் பத்து சிரேஸ்ட அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் அறிவித்துள்ளனர். அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்டமையே கட்சி மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்படக் காரணமேயாகும் என குறிப்பிட்டுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்க்கட்சியில் அமர வேண்டுமென தெரிவி…
-
- 1 reply
- 392 views
-
-
கட்சித் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுமாறு ஜனாதிபதிக்கு அழுத்தம்? குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நடைபெற்று முடிந்த உள்ளூட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெறும் 13 வீதமாக வாக்குகளையே பெற்றுக்கொண்டுள்ளது. சுதந்திரக் கட்சியில் அங்கம் வகித்து ஆளும் கட்சிக்கு ஆதரவளித்து வந்த ஒரு தரப்பினர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்ளவும், மற்றுமொரு தரப்பினர் மஹிந்தவுடன் இணைந்து கொள்ளவும் தீர்மானித்துள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ச…
-
- 0 replies
- 203 views
-
-
மஹிந்தவின் வெற்றி குறித்து சம்பந்தன் வெளியிட்டுள்ள தகவல் எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கு தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியம் என எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களுக்கும், கட்சியினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் எதிர்க்கட்சி தலைவரின் இல்லத்தில் இன்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போதே சம்பந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வெற்றி, எந்தவகையிலும் கூட்டு அரசாங்கத்தை பாதிக்காது. எதிர்கால நடவடிக்கைகளை…
-
- 1 reply
- 366 views
-
-
சிறிலங்காவுக்குள் நடப்பதை அமெரிக்கா வெளிக்கொணர வேண்டும் பெப்ரவரி 4 அன்று சிறிலங்கா தனது 70வது சுதந்திர தினத்தைக் கொண்டாடியது. பெப்ரவரி 01 அன்று கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் ‘அமெரிக்க-சிறிலங்கா உறவு கடந்த 70 ஆண்டுகளாகத் தொடரப்படுவதாகவும் இனி வருங்காலங்களில் இரு நாடுகளின் உறவையும் மேலும் மேம்படுத்துவதற்கான புதிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்’ எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. சிறிலங்கா இராணுவத்துடனான உறவை அமெரிக்கா மேலும் பலப்படுத்தவுள்ளதாகவும் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. ‘சிறிலங்காவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் இணைந்து மேற்கொள்ளப்படவுள்ள புதிய நடவட…
-
- 0 replies
- 311 views
-
-
பரபரப்பான சூழலில் இன்று நாடு திரும்புகிறார் கோத்தா – கைது செய்யப்படுவாரா? சிறிலங்காவில் நேற்று முன்தினம் நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் சிறிலங்கா பொதுஜன முன்னணி எதிர்பாராத வெற்றியைப் பெற்றுள்ள சூழலில், அமெரிக்கா சென்றிருந்த முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச இன்று நாடு திரும்பவுள்ளார். ஊழல் வழக்குகளில் கைது செய்யப்படக் கூடிய சூழல் ஏற்பட்டிருந்த நிலையில் கோத்தாபய ராஜபக்ச அமெரிக்காவுக்குச் சென்றிருந்தார். அவரை சிறிலங்கா அதிபரே காப்பாற்றியதாக ஐதேகவினர் குற்றம்சாட்டியிருந்தனர். நாடு திரும்பும் கோத்தாபய ராஜபக்ச உடனடியாக கைது செய்யப்படுவார் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியிருந்தார். இந்த நிலையில் கோத்தாபய ராஜபக்ச …
-
- 2 replies
- 512 views
-
-
வெற்றி பெற்றாலும் கவலைப்பட வேண்டிய விடயமும் உண்டு தமக்கு வாக்களிக்க இருந்தவர்கள் திசை திருப்பப்பட்டதாக கிழக்கு மாகாணசபையின் முன்னாள் அமைச்சர் கி.துரைராஜசிங்கம் குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பு - நல்லையா வீதியில் உள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் கூறுகையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவடைந்திருக்கின்றது. வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பொருத்தவரையில் ஆரம்பத்தில் இருந்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல்வேறு பொய்ப்பிரச்சாரங்களுக்கு முகங்கொடுத்திருந்தது. அதனை நாங்கள் மக்களுக்கு தெளிவுபடுத்தியிருந்தோம். இருப்பின…
-
- 1 reply
- 395 views
-
-
தமிழ் கட்சிகளை ஒன்றிணையுமாறு சுமந்திரன் அழைப்பு உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வடக்கு கிழக்கில் 40 சபைகளை இலங்கை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். அத்துடன் யாழ் மாவட்டத்தில் 13 சபைகளை இலங்கை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். உள்ளுராட்சி சபைத் தேர்தல் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற நிலையில் தேர்தல் பெறுபேறுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதற்கமைய இலங்கை தமிழரசுக் கட்சி 56 சபைகளில் போட்டியிட்டதாகவும் அதில் 40 சபைகளை கைப்பற்றியுள்ளதாகவும் யாழ்ப்பாணத்தில் இன்று ஞாய…
-
- 9 replies
- 844 views
-
-
மகிந்த ராஜபக்ஸவின் மீள்வருகையை வரவேற்று, சு.சுவாமி மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்… மகிந்த ராஜபக்ஸ இலங்கையில் மீண்டும் ஜனாதிபதியாக வேண்டும் என பாரதீய ஜனதாகட்சியின் ராஜ்யசபா உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இலங்கை உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பான்மையினர் வாழும் பகுதிகளில் ராஜபக்சவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இது தொடர்பாக பாரதீய ஜனதாகட்சியின் ராஜ்யசபா உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி தனது ருவீட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். இலங்கை அரசியலில் ராஜபக்சஸ மீண்டு வந்துள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது. ராஜபக்ஸ விரைவில் இலங்கையின் ஜனாதிபதியாக வேண்டும். என சுப்பிரமணியன் சுவாமி பதிவிட்டுள்ளார். …
-
- 1 reply
- 328 views
-
-
தமிழ் அரசியல் கட்சிகளிடம் யாழ்.ஆயர் விடுத்துள்ள கோரிக்கை தமிழ் மக்களின் இன்றைய நிலையை உணர்ந்து இணைந்து செயலாற்றுமாறு தமிழ் மக்கள் பெயரால் கேட்டுக்கொள்வதாக யாழ்.ஆயர் மேதகு கலாநிதி யஸ்ரீன் பேணாட் ஞானப்பிரகாசம் அரசியல் கட்சிகளிடம் வலியுறுத்தியுள்ளார். உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பின்னர் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கையின் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்குமான தேர்தல் மிக நீண்ட காலத்தின் பின்னர் ஒரே நாளில் வன்முறைகள் அற்ற நிலையில் அமைதியாக நடைபெற்று முடிந்துள்ளது. தொகுதி வாரித் தேர்தல் முறை 49 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒழிக்கப்பட்டு விகிதாசார கலப்பு முறை தே…
-
- 1 reply
- 280 views
-
-
"கட்சிகளுடனும் கூட்டுச் சேர வேண்டும் என்ற நிலைப்பாடு எமக்கு இல்லை" "நாங்கள் இது வரைக்கும் யாருக்கும் ஆதரவு கொடுப்பதாக முடி வெடுக்கவில்லை, ஆதரவு வழங்குகின்ற நிலைப்பாடும் எமக்கு இல்லை, எனவே நாங்கள் தனித்து சுயாதீனமாக அனைத்து சபைகளிலும் இயங்குவோம்" என தமிழர் விடுதலைக்கூட்டனியின் அங்கத்துவக்கட்சிகளின் ஒன்றான ஜனநாயக தமிழரசுக்கட்சியின் செயலாளர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்தார். மன்னாரில் இன்று மதியம் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், "எங்களுடைய கட்சிக்கு விழுந்த வாக்குகள் அனைத்தும் கொள்கைகளுக்காக விழுந்த வாக்குகள்…
-
- 1 reply
- 257 views
-
-
ஆட்சியமைப்பது தொடர்பில் த.தே.கூட்டமைப்புக்கும் தமிழ் கட்சிகளுக்கும் இடையில் இணக்கம்? ஒற்றையாட்சிக்கு ஒத்துக்கொண்ட தலைமைகள் கூட்டமைப்பில் இருந்து அகற்றப்பட்டு, தனிப்பட்ட கட்சி வளர்க்கும் நோக்கமில்லாது தமிழ்த் தேசியத்தை வளர்க்கும் முகமான ஒரு தூய அரசியல் கலாச்சாரத்தை எதிர்காலத்தில் கட்டியெழுப்ப சம்மதிக்கும் வரை கூட்டமைப்புடன் எந்த இணக்கப்பாட்டுக்கும் வரமாட்டோம், கூட்டமைப்பில் இணையவும் மாட்டோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். யாழில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில், வடக்கு கிழக்கில் உள்ளூராட்சி சபைகளில் ஆகக்கூடிய ஆசனங்களைப் பெற்ற கட்சிகள் அ…
-
- 0 replies
- 246 views
-
-
லண்டனில் பைத்தியம் விளையாடுவதற்கு காரணம் மஹிந்த இல்லாமையே - கோத்தா நாட்டில் ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ இல்லாமையே லண்டனில் பைத்தியம் விளையாடுவற்கு காரணமென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார். இன்று காலை அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிடம் லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகரின் செயற்பாடு தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக நாட்டில் இல்லாமையே லண்டன் போன்ற சர்வதேச நாடுகளில் பைத்தியம் ஆடுவதற்கு காரணம். வலியுள்ள எந்த இலங்கையனுக்கும் அவ்வாறு செயற்படத்…
-
- 0 replies
- 306 views
-
-
வர்த்தகர் படு கொலை வழக்கில் வாஸ் குனவர்தனவுக்கு 5 வருட கடூழிய சிறை!!! வர்த்தகர் மொஹம்மட் ஷியாம் படு கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குனவர்தனவுக்கு நேற்று கொழும்பு மேல் நீதிமன்றம் 5 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. ஷியாம் கொலை வழக்கின் விசாரணை அதிகாரியான அப்போதைய உதவி பொலிஸ் அத்தியட்சரும் தற்போதைய குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளருமான ஷானி அபேசேகரவை அசுறுத்தியமை தொடர்பில் குற்றவாளியாக கண்ட நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி 5 வருட கடூழிய சிறைக்கு மேலதிகமாக 25000 ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளித…
-
- 0 replies
- 167 views
-
-
"எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் எதுவித தீர்மானங்களோ, இணக்கப்பாடோ எட்டப்படவில்லை" உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்களை பெற்றுக்கொள்ளல் அல்லது அரசாங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் அத்தகைய எதுவித தீர்மானங்களோ அல்லது இணக்கப்பாடோ எட்டப்படவில்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது. உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின்னர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கிடையே எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்ற நிலையிலேயே அதில் எது வித உண்மையும் இல்லையென குறிப்பிட்டே ஜனாதிபதி ஊடகப் பிரிவு செய்தி வெளியிட…
-
- 0 replies
- 200 views
-
-
ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு எதிராக முறைப்பாடு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்துள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , ஐக்கிய தேசிய கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் 1000 பௌத்த விகாரைகள் அமைப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்காக 50 கோடி ரூபா ஒதுக்கப்பட்டு உள்ளதாவும் குறிப்பிட்டு உள்ளது, நாட்டில் முரண்பாடுகளை ஏற்படுத்தும…
-
- 0 replies
- 262 views
-
-
"மீண்டும் எழுந்து வந்த மஹிந்த ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் கடும் சிவப்பு எச்சரிக்கை" தேர்தல் வெற்றியின் மூலம் மஹிந்த மீண்டும் எழுந்து வந்து ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் கடும் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளார் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் கூறினார். கொழும்பு இந்து கல்லூரியில் இன்று காலை நடைபெற்ற கல்லூரி ஸ்தாபகர் விழாவில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். மேலும், "2015ஆம் ஆண்டு கிடைத்த மக்கள் ஆணையை புரிந்துக்கொண்டு நடைமுறைப்படுத்த தவறிவிட்டு, ஜனாதிபதியும், பிரதமரும் ஒருவருக்கு எதிராக இன்னொருவர…
-
- 0 replies
- 308 views
-
-
ஈபிடிபியிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்ட கூட்டமைப்பு!! நடைபெற்று முடிந்த உள்ளூராட்சிசபைத் தேர்தல் முடிவுகள் பெரிய அளவில் அறுதிப்பெரும்பான்மையை பெற்றுக் கொடுக்காததால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நெருக்கடியை எதிர்கொண்டுவருவதாக தெரியவருகிறது. கூடுதல் ஆசனங்களைப் பெற்றாலும் அறுதிப்பெரும்பான்மையை பெற்றுக்கொள்ளதாத சபைகளுக்கு எதிர்தரப்பில் போட்டியிட்ட கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்கவேண்டிய நிலையில் பல்வேறு முயற்சிகளில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஈடுபட்டுவருவதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதன் ஒரு கட்டமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர் சுமந்திரன் ஈபிடிபியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுடன் பேச்சில் ஈடுபட்டிருப்பதாக அந்தவட்டா…
-
- 1 reply
- 605 views
-
-
திருக்கோவில் பிரதேச சபை ஆட்சி அமைப்பதில் த.தே.கூட்டமைப்பு திண்டாட்டம் திருக்கோவில் பிரதேச சபை ஆட்சி அமைப்பதில் த.தே.கூட்டமைப்பு திண்டாட்டம் ஏனைய கட்சிகள் கூட்டணிக்கு முஸ்தீவு செய்துள்ளன. நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தல் முடிவுகளின் பிரகாரம் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது பலத்தினை இழந்திருக்கும் நிலையில் ஏனை கட்சிகளின் ஆதரவுடனே தமிழ் பிரதேச சபையின் ஆட்சியினை அமைக்க வேண்டிய கட்டாய சூழ்நிலைகள் ஏற்பட்டுள்ளது. இந் நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கோட்டையாக கருதப்படும் திருக்கோவில் பிரதேச சபையின் ஆட்சியை தனித்து அமைக்க முடியாத நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு திண்டாடிக…
-
- 0 replies
- 429 views
-
-
வடக்கு,கிழக்கில் பெரும்பான்மை சபைகள் தமிழ் கூட்டமைப்பு வசம் வடக்கு, கிழக்கில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு பெரும்பான்மையான சபைகளை வெற்றிகொண்டுள்ள போதிலும் யாழ்.மாவட்டத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி இரு சபைகளை கைப்பற்றியுள்ளதுடன் பெருமளவான சபைகளில் கணிசமான உறுப்பினர்களை தன்வசப்படுத்தியுள்ளது. வடக்கில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் பெரும்பான்மையான சபைகளை தமிழ் தேசியக்கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. யாழ். மாநகர சபையில் 16 உறுப்பினர்களை பெற்று அதிகூடிய ஆசனங்களை கைப்பற்…
-
- 0 replies
- 282 views
-
-
புதிய அரசமைப்புக்கு சாவுப் பீதியை கிளப்பிவிட்டுள்ளது தேர்தல் பெறுபேறு!! 340 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான சிறிலங்கா பொதுஜன பெரமுன பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் பன்னாட்டுச் சமூகத்தின் கழுகுப்பார்வை மீண்டும் இலங்கை பக்கம் திரும்பியுள்ளது. 2015 ஆம் ஆண்டு ஆட்சிமாற்றத்தின் பின்னர் ஏற்படுத்தப்பட்டுவரும் அரசமைப்பு மறுசீரமைப்பு மற்றும் நல்லிணக்க முயற்சிகள், பொறுப்புக்கூறல் ஆகியவற்றை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்த முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. பொருளாதார ரீதியில் நாட்டை வலுப்படுத்தும் நோக்க…
-
- 0 replies
- 221 views
-
-
ஜனாதிபதியினால் சு.க அமைச்சர்கள் அவசரமாக கொழும்புக்கு அழைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்களை அவசரமாக கொழும்புக்கு அழைத்துள்ளார். உள்ளூராட்சி சபைகள் தேர்தல் முடிவுகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கே அவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நாடு பூராகவும் பாரிய பின்னடைவை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. -(3) http://www.samakalam.com/செய்திகள்/ஜனாதிபதியினால்-சு-க-அமைச/
-
- 4 replies
- 516 views
-
-
பிச்சையிட வேண்டாம் தேர்தலை நடத்துங்கள்!! பிச்சையிட வேண்டாம் தேர்தலை நடத்துங்கள்!! நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலமையைச் சீர்செய்ய தலைமை அமைச்சர் பதவியையும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியையும் ஏற்கப் போவதில்லை. அரச உயர் மட்டத்திலிருந்து விடுக்கப்பட்ட அழைப்பை நான் ஏற்கப்போவதில்லை. நாடாளுமன்றத் தேர்தலொன்று விரைவில் நடத்தப்படவேண்டும். அதனடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றிப் பார்க்கலாம். மக்கள் …
-
- 0 replies
- 195 views
-
-
கூட்டமைப்பு- காங்கிரஸ் இணைந்தாலே ஆட்சி!! கூட்டமைப்பு- காங்கிரஸ் இணைந்தாலே ஆட்சி!! வடக்கின் பெரும்பாலான உள்ளூராட்சி மன்றங்களின் நிலமை இதுவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியும் இணையாமல் உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புக்கள் வெகு குறைவாகவே உள்ளன. வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகள் இதைத் தெட்டத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப…
-
- 0 replies
- 282 views
-
-
மஹிந்த அணி அமோக வெற்றி : தேர்தல் குறித்து ஒரு பார்வை ! நடந்து முடிந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் நேற்று இரவுவரை வெளியான முடிவுகளின்படி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மொத்தமாக 4621652 வாக்குகளை பெற்று 225 உள்ளூராட்சிமன்றங்களை கைப்பற்றி அமோகவெற்றியீட்டியுள்ளது. அத்துடன் அனைத்து உள்ளூராட்சிமன்றங்களிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 3210 உறுப்பினர்களை பெற்றுள்ளது. அதாவது நேற்று இரவுவரை வெளியான முடிவுகள் பிரகாரம் 45.01 வீதமான வாக்குகளை இக்கட்சி பெற்றுக்கொண்டுள்ளது. அத்துடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலா…
-
- 0 replies
- 263 views
-
-
யாழில் TNPFன் எழுச்சியும் TNAயின் சரிவும், EPDPயின் பாச்சலும், SLFP – UNP ஆகிய தேசியக் கட்சிகளின் காலூன்றலும் சுரேஸ் பிறேமச்சந்திரனின் வீழ்ச்சியும்… குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர்.. யாழ் மாவட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கூட்டான தமிழ்த் தேசிய பேரவை எதிர்கட்சியாக விஸவரூபம் எடுத்துள்ளது. நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் மொத்தமாக இருந்த 416 ஆசனங்களில் 84 ஆசனங்களை பெற்று இரண்டாவது கட்சியாக தன்னை அடையாளப்படுத்தி உள்ளது. ஆசன விகிதத்தில் கூட்டமைப்பு 36% த்தினையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 20%த்தினையும் பெற்றது வாக்குகளின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மொத்தமாக 104513 வாக்குகளையும், தமிழ்த் தேசி…
-
- 4 replies
- 607 views
-